தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 08, 2016

என் நூல் அகம் 7


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் புதுக்கோட்டை பதிவர்களை கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்களின் வீட்டில் சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா ! அப்பொழுது அன்புப் பரிசாக 2 நூல்கள் தந்தார் அதில் ஒன்றுதான் ’’கம்பன் தமிழும் கணினித் தமிழும்’’

தமிழின் வளர்ச்சி மரபுக் கவிதையிலிருந்து ஹைக்கூ கவிதை மாறியதின் வழிகள் எப்படி ? அதை நமக்கு அழகாக காட்சியாக விவரித்து இருக்கின்றார் இதற்கு சான்றாக பல பெண் கவிஞர்களின் கவிதைகள் சிலவற்றையும் தொகுத்து தந்து இருக்கின்றார் இந்நூலில் இவர் தரும் ஆதாரங்களுக்காக பல அறிஞர்களின் நூல்களை படித்து இருக்கின்றார் என்பதை ஒவ்வொரு வரிகளும் நிரூபிக்கின்றது நான் அவர் இல்லத்துக்கு சென்ற அன்றே என் மனதில் தோன்றியதுதான் செங்கல் வாங்கினால் செலவாகும் என்று வரவேற்பறையின் மூன்று புறங்களையும் நூல்களாலேயே தடுத்து இருந்தது நினைவுக்கு வந்தது இந்நூலில் நான் பல அரிய விடயங்களை அறிந்து கொண்டேன் ஒலியின் வழியாக மொழி உருவாகியது முதல், உணவு தேடி கற்கால மனிதர்கள் கூட்டமாக திரிந்தது ஆயுதங்களாக கல், வில், அம்புகளை உபயோகித்தது பின்பு அதுவே கத்தி, கூர்வாள், கோடரியாக பரிமாண வளர்ச்சி பெற்று வந்தது போன்ற நிறைய விடயங்கள் வரை.

கோடரி வரலாற்றில் ஏற்படுத்திய மாறுதல் மகத்தானது என்கிறார் - ஏங்கல்ஸ்
(ஐ.... நம்ம அயிட்டம் கில்லர்ஜிக்கு பிடித்தமானது என்பதை அன்றே அறிந்து வைத்திருந்த ஏங்கல்ஸ் இன்று இல்லையே என்று நினைத்து ஏங்கினேன்)

விழப்போகும் சுவர், வண்ண மேல் பூச்சால் நிலைக்காது !
அழப்போகும் பசிக்குழந்தை, அம்புலியைச் சுவைக்காது
தொழப்போகும் வேலையினைத் தூக்கி எறிந்து விட்டு
எழப்போகும் புதுஉலகம் எவன் தடுத்தும் நிற்காது !
- நா.முத்து நிலவன்

என்ற கவிஞரின் சிந்தனைக்குறிய வரிகளை மிகவும் ரசித்தேன் மனிதர்களுக்குள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு தோன்றியது, இருப்பவர் உயந்தவர், இல்லாதவர் தாழ்ந்தவர் இதன் காரணம் உயந்தவர்களிடம் என்ன இருந்தது யூ.எஸ் டாலரா ? இல்லை வில், வாள், அம்பு போன்ற ஆயுதங்கள் மட்டுமே இதனால் இல்லாதவர்கள் அடிமை என்ற கோட்பாடு அன்று தொடங்கியது இன்று ஒபாமாவுக்கும், கில்லர்ஜிக்கும் உள்ள வேறுபாட்டுக்கு வழி வகுத்து இருக்கின்றது ஏவுகணைகளும், பீரங்கிகளும் வைத்துள்ள ஒபாமா உயந்தவர் என்றும், கோடரி மட்டுமே வைத்திருக்கும் கில்லர்ஜி தாழ்ந்தவர் என்ற நிலையானதற்கு அஸ்திவாரம் அன்றே போடப்பட்டு இருக்கின்றது சங்ககாலம் பொற்காலம் என்றே சொல்லிப் பழகியவர்களுக்கு இந்தச் சமுதாய நிலையை ஏற்பதில் சங்கடம்தானே ? ஆனால் இதிலொன்றும் சங்கடமில்லை. உலகம் முழுவதும் பரிணமித்த சமுதாயக் கூறுகளிலிருந்து தமிழகம் மட்டும் தனித்து நின்றிருக்க முடியுமா என்ன ? என்று சொல்லியதிலிருந்து எமது கருத்து.

உண்மைதான் பரிமாண வளர்ச்சியில் போட்டி போட்டு வளர்ந்த தமிழகம் மட்டும் மாறுபட்டு இருக்கின்றது உலகிலேயே மிகவும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள் தமிழ் நாட்டில்தான் என்ற கணக்கெடுப்பு சொல்கிறதே இந்த அவலத்தை நினைக்கும் பொழுது சங்ககாலமே பொற்காலம் என்பதும் எமது தாழ்மையான கருத்து கவிஞரே இருப்பினும் அதனை நோக்கி நாம் மட்டுமல்ல ! யாருமே திரும்பி விடவும் முடியாது என்பதையும் அறிந்தவனே இந்த இழிநிலையின் காரணமாகவே நிகழ்கால சமூக மானி(ட்)டர்களை வெறுத்து நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்ற ஆவல் அவ்வப்பொழுது என்னுள் விளைகிறது.

பல எழுத்தாளர்களின் நூல்களையும், விமர்சனங்களையும் விமர்சித்து இருக்கின்றார் அதனுள் மூக்கை நுழைத்து குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு எமக்கு அறிவு வளர்ச்சி போறா... ஆகவே அவை அனைத்தையும் படித்து அறியா அரிய பல நூல்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்து கொண்டேன் என்பதே உண்மை.
கம்பனைக் குறித்த விடயங்களும் கம்பன் ஜால்ரா கவிஞன் அல்ல என்பதையும் அறிந்தேன் ஓரிடத்தில் இரண்டாம் சந்திரகுப்தன் எனும் விக்கிரமாதித்த மாமன்னனை, ஆண்டவனின் அவதாரமாக உருவகித்துக் குமார சம்பவம் பாடிய காளிதாசனைப் பார்த்து, ‘’சாதாரண மனிதனை சகல பலவீனங்களும் உள்ள மன்னனை ஆண்டவனின் அவதாரமாக்கி எழுதுவது நியாயம்தானா’’ என்பது போலக் கேட்பான் பிரகஸ்தி. அதற்குக் காளிதாசன் சொல்வான் - அவன்தானே எனக்கு மது, மங்கை, மாளிகைகளைத் தருகிறான் ? அவனைப் புகழ்ந்து பாடுவதால்தானே தருகிறான் ?

(இதே போல்தான் படிப்பறிவில்லாத நடிகனைகூட, படித்த ரசிகன் என்ற பாமரன் நினைக்கின்றான் என்றெல்லாம் நான் சொல்ல வருவதாக நீங்களாகவே நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)
ஆக ஆதாயத்துக்காக பாடிய கவிஞர்கள் அன்றைய காலம் தொட்டே நமக்கு முன்னோடியாக வாழ்ந்து காண்பித்து இருக்கின்றார்கள் இதை இன்றைய காலத்திலும் காண்கிறேன் தமிழை வைத்தே பிழைப்பு நடத்தும் இன்றைய வைரமுத்துவும் இதில் விதிவிலக்கல்ல தமிழனே இல்லாதவனைக் குறித்து
‘’நீ நடந்தால் நடையழகு நீ பேசும் தமிழ் அழகு‘’

என்று பொய்யுரைத்து எழுதிப் பிழைக்கும் ஜால்ரா கிராக்கிதான் இந்த வைரமுத்து இவர் சிறந்த கவிஞர் என்பதில் எனக்கு எள் முனையளவும் ஐயமில்லை இன்றைய கவிஞர்களும், எழுத்தாளர்களும் நாளைய சரித்திரத்தில் இடம் பெறும் மகான்கள் என்பதை நினைவில் நிறுத்தியே வாழ வேண்டும் (இதற்குள் வலைப்பதிவர்களும் அடக்கமே) அதற்கு உணவும் வேண்டும் என்பதை அறிந்தவன் நான். அன்றைய காளிதாசனுக்கும், இன்றைய வைரமுத்துவுக்கும் முரண்பாடு தெரியவில்லை எனக்கு. வைரமுத்து எனக்கு எதிரியும் அல்ல, நண்பரும் அல்ல ! உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கும் கண்ணாடி நான் இன்றும், என்றும் அவருடைய கவிதைகளை, கருத்துகளை, மேடைப் பேவீச்சுகளை தமிழ் உச்சரிப்புகளை ரசிப்பவனே நான் அதேநேரம் குற்றத்தை எதிர்க்கும் நிலையிலிருந்து விலக மாட்டேன் இந்த எண்ணங்கள் எல்லா அரசியல் கட்சித் தொண்டர்களிடம் இருந்தால் தமிழகத்தில் ஊழல்கள் பெறுகி இருக்காது உருகிப்போய் இருக்கும் திருமதி. குஷ்பு காங்கிரஸ் தியாகி ஆகியிருக்கவும் முடியாது நாளை இவருக்கும் பென்ஷன் பணமும் வரலாம் மெரினாவில் சிலையும் வரலாம் இவையெல்லாம் அறிவாளிகளின் அழிவை சொல்லும் ஆருடமே வாலிபக்கவிஞர் என்று சொல்லப்பட்ட வாலி அன்றிலிருந்து தனது கடைசி காலம்வரை தமிழன் இல்லாதவனையே புகழ்ந்து எழுதியே முன்னுக்கு வந்தவர் இதோ இந்த வரிகளை கேளுங்கள்
‘’உங்களைத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
எஜமான் காலடி மண் எடுத்து நெற்றியிலே பொட்டு வச்சோம்‘’

யாருக்கு யாரு ? எஜமான் இதெல்லாம் தமிழர்களுக்கு தமிழர்களால் அடிக்கப்பட்ட சாவுமணி மேலோட்டமாக ரசித்து விட்டு போனால் ஒன்றும் தெரியாது தமிழன் என்ற உணர்வுடன் உள்ளே நுழைந்து மொழியின் வலிமையை பார்க்க வேண்டும் பலரும் நினைக்கலாம் வாலி மறைந்து விட்டவர் பெரிய மனிதர் என்று தவறு செய்தவர் யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே இவையெல்லாம் இனத்துரோக வகையைச் சேர்ந்தது.

வள்ளுவப் பெருமானின் திருக்குறளைப்பற்றிய அலசலும் இருக்கின்றது இப்பகுதியின் வாயிலாக நான் எனது செல்லில் திருக்குறள் பதிவிறக்கம் செய்து தினம் ஒரு திருக்குறள் தமிழ் விளக்கத்துடன் படிக்கத் தொடங்கி இருக்கிறேன் யானை ஏற ஆசையுண்டு உந்தி ஏற ஜீவனில்லை என்பதுபோல் எனக்கும் இனியேனும் உந்தி ஏறும் ஜீவன் (மூளைத்திறன்) கிடைக்குமா ?  

மகாகவி பாரதியின் பாடலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததின் காரணத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது பாடல் பலரும் அறிந்ததே...
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே !

இந்தப்பாடல் இரண்டாம் பரிசு பெற்றதற்கான காரணம் அறிந்து வியந்தேன் அது பாயுது பிறக்குது என்ற சொற்கள் கொச்சையாம் மரபுக்கவிதையின் தன்மையை மீறி விட்டதாம் மகாகவியின் பாடலையே ஆய்வு செய்தவர்கள் எவ்வளவு பெரிய அறிவாற்றல் உள்ளவர்களாக இருந்திருப்பார்கள் நண்பர்களே சமீபத்தில் ஒரு தலை ராகத்தின் தறுதலை பாடிய இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தேன் இதையும் ஏற்கும் கூமுட்டைகளை தமிழ் பேசாத தேசத்துக்கு அனுப்பினால் என்ன ?

மரபுக்கவிதைகள் எழுதும் கவிஞர்கள் குறைந்து வருவதைக்கண்டு நூலின் ஆசிரியர் பொதுநலக் கவலை கொள்கிறார் கணினியில் இன்று தமிழ் எவ்வளவு தூரம் கில்லர்ஜியைப் போன்ற படிக்காத பாமரர்களுக்கும் பயனளிக்கின்றது என்பதை அழகாக, விரிவாக தெளிவு படுத்தியிருக்கிறார் இதில் நானும்கூட இணையத்தில் என்னாலான பதிவு என்ற பெயரில் பதிய வைக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் இதில் மரபுக்கவிதையை என்னால் வரவு வைக்க முடியாது அது மலடியை புள்ளப்பெக்க சொன்ன கதையாகி விடும் முடிவில் மெல்லத் தமிழினி வளரும் என்று புதிய பாரதிகள் பாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று குதூகலிக்கின்றார் இவரது வாக்கு பலிக்கும் நாளும் நெருங்கி விட்டது என்று நானும் குதூகலமாய் முடிக்கின்றேன்.

எனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...


நூலில் நிறைய குறிப்புகள் எடுத்தேன் பதிவின் நீளம் கருதி சுருக்கி விட்டேன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

57 கருத்துகள்:

  1. அன்பின் ஜி..

    நீ வடக்கே போய்ட்டா - நாங்க எங்கே போறது..ன்னு பிலாக்கனம் எழுதியவரும் அவுருதானே..

    >>> வாழ்வை நீ தேடி வடக்கே போனால்
    நாங்கள் போவதெங்கே?..<<<

    ஏன்!.. வேறு ஏதும் திசைகள் உனக்கில்லையா?..

    இதுக்குள்ள என்ன உள்குத்து இருக்கு?..

    >>> கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்
    இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்?..<<<

    விஷயம் இப்போது புரிகிறதா..

    பாரதியின் பாடல் ஏன் தேர்வாகவில்லை என்று!..

    பதிலளிநீக்கு
  2. >> அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு
    என்னை வாழ வைத்தது தமிழ்ப்பாலு..<<

    ஆந்திர கர்நாடகாவுல .. என்ன பாலு?..

    ஊருக்கு ஒரு பாலு நாட்டுக்கு ஒரு பாலு வாழ வெச்சிருக்கும் போல!..

    ஜி.. நீங்க சொல்றது தான் சரி!..

    இதெல்லாம் இனத்துரோக வகையைச் சேர்ந்தவை..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி தங்களின் முதல் வருகைக்கு நன்றி
    இதைப்போல பல இருக்கின்றது ஜி நான் நூலைக் குறித்த விமர்சனம் எழுதியதால் அடக்கி வாசித்தேன் மீண்டும் இந்த இனத்துரோகிகளை அடையளம் காட்ட விரிவாக எழுதுவேன்

    தமிழ் நம்மை வாழ வைக்கும் என்று நம்புபவன் உண்மையான தமிழன்
    தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவன் இனத்துரோகியே

    பதிலளிநீக்கு
  4. கில்லர்ஜி நூல் அறிமுகம் அருமை. ஆனால், விமர்சனப்பாதையிலிருந்து, உணர்ச்சிவசப்பட்டு உங்கள் சமூகக் கோபம் தலைதூக்க, கொஞ்சம் சுற்றுப் பாதையில் நடந்துவிட்டு மீண்டும் பாதையைப் பிடித்திருக்கின்றீர்கள் என்று தோன்றியது...(இடையில் வந்த அரசியல், சமூகக் கருத்துகள் எல்லாம் சரி என்று ஏற்றுக் கொண்டாலும்....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களின் மிகச்சரியான புரிதலுக்கு எமது முதற்கண் நன்றிகள்.
      பொருத்தமான இடத்தில் அவைகளைப் பற்றிய எனது கருத்தை நான் எழுதாமல் கடக்க முடியவில்லை சமூக கோபம் என்பது எனது குருதியுடன் கலந்து விட்டது இருப்பினும் தங்களின் கருத்தை ஏற்று இனி மாற்ற முயல்கிறேன் நன்றி

      நீக்கு
  5. நூலைப் பற்றிய அழகான குறிப்புகளோடு உங்கள் கருத்துகளும், ரசித்தேன் சகோ.
    ஒவ்வொரு படத்திலும் இப்படி வலிய திணித்தப் பாடல் வரிகள் உண்டு.. சிந்திக்காதத் தமிழன் இருக்கும்வரை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தமிழனின் உறக்கம் இன்னும் கலையவில்லை சகோ வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. விமர்சனம் திசை மாறினாலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. செந்தமிழ் நாடென்னும் போதினிலே எனும் பாரதியின் பாடலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருக்கலாம். ஆனால் அப்போது முதல் பரிசு பெற்ற பாடல் எதுவென்று கூட யாரும் சொல்ல முடியாது. அது வரலாற்றில் நிற்கவில்லை. பரிசுகளும், பணங்களும் நிலையானவை அல்ல என்பதற்கு ஒரு உதாரணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்து அருமையானது உண்மையானதே வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. எனது நூலில் சொல்லியிருக்கிறேன் நண்பரே! கில்லர்ஜிக்கு வந்த சமூகக் கோபத்தில் திசைமாறியதில் அதுவிட்டுப் போச்சு போல.. நன்றி

      நீக்கு
    3. கவிஞரே நான் படித்து குறிப்பெடுத்து முடிவில் சொன்னதைப்போல் பதிவின் நீளம் கருதி அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதையே தாங்கள் சொல்லி இருக்கின்றீர்கள் நான் தினத்தந்தி படித்தாலும் சிந்துபாத் கதை முதல் வரி விளம்பரங்கள் வரை பிரித்து மேய்பவன்.

      நீக்கு
  7. விமர்சனம் எழுதுவதில் உங்க பாணியே தனிதான் கில்லர்ஜி :)

    பதிலளிநீக்கு
  8. நூலை பற்றிய பதிவும் கருத்துக்களும் மிக அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஜி
    நிலவன் ஐயாவின் புத்தகத்தை நான் படித்திருக்கேன் மிக அருமையான புத்தகம் இந்த புத்தகம் பற்றி எழுதிய விமர்சனம் சிறப்பு வாழ்த்துக்கள் த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. நூல் விமர்சனத்தில் ஆரம்பித்து அப்படியே தாய்ப்பாலு தமிழ்ப்பாலுக்குப் போயி... எங்களுக்கு நல்லவழி காட்டச்சொல்லி முள்ளிவாய்க்காலில் முத்தெடுத்தேன் என்று கேமரா முன்னர் நடித்த வைரமுத்துவைச் சாடி எல்லாப் பக்கமும் பயணித்து நிறைவாய் நூல் அறிமுகத்தை முடித்திருக்கிறீர்கள்....

    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையை சொல்வதில் தயக்கம் கூடாது வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. விமர்சனத்துடன் சவுக்கையும் எடுத்து விளாசி விட்டீர்கள், விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே காய்கறி வாங்கும் பொழுது கருவேப்பிள்ளை ஓசி வாங்குவதில்லையா ? அதைப்போல்தான்.

      நீக்கு
  12. குட்டி, குட்டி (தலையில் குட்டி) எழுதிட்டீங்க...
    மறுக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதார்த்த உண்மை நிலையை சொன்னேன் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. விமர்சனமும் சாட்டையடியும் பலமாக இருக்கின்றன....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் வலிப்போக்கரே... வலிக்க வேண்டியவர்களுக்கு வலித்தால் நாடு நலம் பெறும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. மெல்ல தமிழ் இனி வளரும்....
    சொல்ல தமிழ் இனி மலரும்
    வெல்ல வழி சொன்னமைக்கு நன்றி நண்பா
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா ‘’மெல்ல தமிழ் இனி வளரும்’’ என்று சொன்ன கவிஞருடன் கை கோர்ப்போம்.

      நீக்கு
  15. வணக்கம் ஜி !

    நல்லதோர் கருத்தை இங்கே
    .....நயம்படச் சொன்னீர் ! உங்கள்
    வெல்லுமோர் தமிழின் ஆற்றல்
    .....மிகைப்படும் இடங்கள் கண்டேன்
    சொல்லவோர் வார்த்தை கோடி
    .....சுடர்விட நெஞ்சின் உள்ளே
    வல்லவன் உங்கள் வாழ்வை
    .....வளமிட வேண்டி நின்றேன் !


    மிக நல்ல பதிவு ஜி தங்கள் மொழியின் ஆளுமை ஆங்காங்கே மின்ன வார்த்தைக் கோர்வைகள் அழகாகின்றன தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே தங்களின் வாழ்த்துப்’’பா’’ கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  16. அன்புள்ள ஜி,

    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழியவே!
    வானமளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழிய வே
    ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
    இசை கொண்டு வாழியவே!
    எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
    என்றென்றும் வாழிய வே!

    மெல்லத் தமிழ் இனி வளரும்...என்பதில் எள்ளவும் அய்யமில்லை.

    நன்றி.

    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் கவிதை வரிகளுக்கு நன்றி

      நீக்கு
    2. அய்யா சாமீ அவை பாரதியின் வரிகளய்யா! (மணவையாரே உங்களையும் சொல்லத்தான் வேண்டு்ம். அடுத்தவர் கவிதையை எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டாமா?)

      நீக்கு
    3. கவிஞருக்கு எனக்கு யாருடைய கவிதை என்பது தெரியாது உண்மை ஆனால் மணவையாரின் கருத்து என்பதற்கு பதிலாக கவிதையாக என்று எழுதியது தவறே மன்னிக்க.

      நீக்கு
  17. மெல்ல தமிழ் இன வளரும்
    மலரும்
    அருமை நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  18. வழக்கம்போல் உங்கள் பாணியில் விமர்சனம் செய்து அசத்திவிட்டீர்கள். அதிலும் முத்து நிலவன் அய்யாவின் அந்த கவிதை மிக அற்புதம்.
    300 வருடங்களுக்கு முன் இந்த சமூகம் எப்படி இருந்தது என்று ஒரு பதிவு போடுங்கள் ஜி! அடிக்கடி 300 வருடத்திற்கு முன்பே பிறந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொன்னால் அதிலோர் அர்த்தம் இருக்கும். அதனால் அன்றைய சமூகத்தை உங்கள் மூலம் பார்க்க விளைகிறேன்.
    த ம 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்தை ஏற்று முயல்கிறேன் வருகைக்கு நன்றி
      (வர்றவங்க எல்லோருமே எனது மூளையை கிளறி விட்டு சந்தோசப்படுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்)

      நீக்கு
  19. முந்தயை விமர்சனத்தை விட இது வித்தியாசம்.
    உங்க விமர்சனம் வாசித்தால் புத்தகம் வாங்கும் ஆவலை தூண்டுவீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வித்தியாசம்தானே எமது தளத்தின் அடித்தளம்

      நீக்கு
  20. சகோ, தங்கள் சமூக கோபம் சரி,, ஆனால் ஒவரின் நூல் விமர்சனத்தில் வரக்கூடாது என்பது போல்,,

    சரி சரி இது என்ன சட்டமா? தங்கள் கோபம் நியாயம் தானே,,

    ஆனாலும் இறுதியில் தாங்கள் சொன்ன மெல்ல தமிழ் அனி வளரும்,,,,

    அருமை சகோ, தொடருங்கள்,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்தை ஏற்கிறேன் எனக்கே இது கூடுதலாக தோன்றியது உண்மையே
      இதை மற்றொரு பதிவாக சொல்லி இருக்கலாம் என்று நினைத்தேன்

      நீக்கு
  21. தங்கள் பாணியிலான விமர்சனத்தை ரசித்தேன் நண்பரே! நன்றிகள் பல. “கவிதையின் கதை” பெருநூலுக்கான படிப்பு-எழுத்தில் நாள்கள் கழிகின்றன... விரைவில் முடித்து வெளியிடுவேன். நீங்கள் அடுத்த முறை வரும்போது தரலாம் என்று இருக்கிறேன். இப்படி ரசிக்கும்படி விமர்சனம் எழுதுவதற்காகவே இன்னும் பல நூல்களை எழுத விரும்புகிறேன் நண்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரே எனது விமர்சனத்துக்காகவே இன்னும் பல நூல்கள் எழுத விரும்புவது டூமச் என்று சொல்ல முடியாது மேலும் நீட்டி டூட்டு டூட்டு மச் என்று சொல்லலாம்
      மேலும் உங்களது நூலுக்கு நான் விமர்சனம் எழுதுவது ஒரு விசயமில்லை நாளை எனது நூலுக்கு தாங்கள் விமர்சனம் எழுதினால் ? அதுவே மிகப்பெரியது

      நீக்கு
  22. எனது நூலைப்பற்றி இவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.. வாக்களிக்காமல் போனால் நன்றிகெட்டவனாவேன்...த.ம.13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும், வாக்கிற்க்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. செங்க்ல் வாங்கினால் செலவாகும் என்று நூல்களால் மூன்றுப்பக்கச் சுவ்ர் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் சகோதரரே...அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுதுவதில் உண்மையைத் தவிற வேறில்லை வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  24. விழப்போகும் சுவர், வண்ண மேல் பூச்சால் நிலைக்காது !

    அழப்போகும் பசிக்குழந்தை, அம்புலியைச் சுவைக்காது

    தொழப்போகும் வேலையினைத் தூக்கி எறிந்து விட்டு

    எழப்போகும் புதுஉலகம் எவன் தடுத்தும் நிற்காது !


    ஐயா இந்த வரிகள் மிகவும் அருமை...
    இந்த பதிவு அருமையாக சில கருத்தை
    சொல்லியிருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அந்தக்கவி வரிகள் கவிஞர் திரு. நா.முத்து நிலவன் அவர்களின் சிந்தனை முத்து
      வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. நா.முத்து நிலவன் அவர்களின் கவிதை என்று தெரியும் நண்பரே
      அதான் பதிவில் அவரது பெயரை பதித்துள்ளீரே
      அதிலே தெரிந்து கொண்டேன்....

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பா.

      நீக்கு
  25. உங்கள் பாணியில் கம்பன் தமிழும் கணினித்தமிழும் நூலுக்கான விமர்சனமும் அதைத்தொடர்ந்த விபரங்களும் அருமை!

    த,ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிட்டவுடன் உடன் வந்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. இதுக்கு பேரு சுண்டலா? எப்படி வந்தாலும் எப்போது வந்தாலும் வராமல் இருப்பதை விட வந்திட்டோம்ல! அது தான் பெஸ்ட்டாக்கும். லேட்டு லேட்டஸ் என சொல்லியா தெரிய வேண்டும். ஹாஹா!

      நீக்கு
    3. நான் சொன்னது லா.லொ.லோ பதிவுக்கு எப்பூடி சமாளிச்சுட்டோம்ல....

      நீக்கு
    4. நினைத்தேன்!பாதை மாறிய பதில் என புரிந்தும் போனதே!சமாளிப்பெல்லாம் இல்லை,நிஜம் அது தான்.

      நீக்கு
    5. ஹாஹாஹா புரிஞ்சுக்கிட்டீங்களே....

      நீக்கு