தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 07, 2016

கனவு நனவானது



நட்பூக்களே... கனவு நனவானது ஆம் எனது கனவு நனவானதே... பல நண்பர்களும் பலமுறை சொல்லி என்னுள்ளும் இந்த மோகத்தீயை வளர்த்து விட்டார்கள் அதுவே நூல் வெளியீடு இதோ... எனது முதல் பிரசவம் தேவகோட்டை, தேவதை தேவகி என்ற நூலை எழுதி எனக்குத் தெரிந்தவரை உங்களை சிரிக்க வைக்க முயன்று இருக்கின்றேன் இன்னும் வெளியீட்டு வைபவம் வைக்கவில்லை இந்தியா வந்ததும் வைக்க வேண்டும்.
இந்நூல் அச்சடித்தது நமது நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களது அச்சகத்தில்தான். அட்டைப்படம் எனது வடிவமைப்பு எனது விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்தார்கள் இந்த நூல் அச்சடித்ததற்கான பணவிசயத்தில் எனக்கும், நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களுக்கும் மனவருத்தமும் உண்டானது அதாவது அச்சடித்து முடித்தவுடன் பணத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்புகிறேன் என்று செல்லில் செய்தி சொல்லி அனுப்பினேன் அதற்கு, அவர் நேரடியாக கொடுப்பதே சாலச்சிறந்தது என்று சொல்லி விட்டார் இதற்காகவே நான் மீண்டும் மதுரைக்கு அலைய வேண்டி வந்தது அலைந்தால் என்ன ? அதனால் அங்கு இரண்டு வலையுலக மலைகளை சந்தித்தேன். இதோ கீழே மலைகளுடன்... 
திரு. பகவான்ஜி மற்றும் திரு. S.P. செந்தில் குமார் அவர்களுடன்...
பிறரின் வலிகளை போக்கும் திரு. வலிப்போக்கன் அவர்களுடன்...
கோவையில் மாமலை முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுடன்...
சென்னையில் புலவர் ஐயா திரு. சா. இராமநுசம் அவர்களுக்கு நான் எழுதிய 'தேவகோட்டை, தேவதை தேவகி' நூலை வழங்கினேன்.
சென்னையில் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நான் எழுதிய 'தேவகோட்டை, தேவதை தேவகி' நூலை வழங்கினேன்.
மதுரையில் புத்தகத் திருவிழா தமுக்கம் திடலில்...
 புகைப்படத்தை பெரிதாக காண மையத்தில் சொடுக்குக...
 
மணமக்களுக்கு தாலி கட்டியதும் மேடையிலேயே முதலில் ஆசி வழங்கியது முனைவர் ஐயா திரு. பழனி கந்தசாமி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலவர் ஐயா எழுதிய 'வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்' நூலை எனக்கு தந்தபோது...
நண்பரின் பெயர்த்தி செல்வி. சாய் கீர்த்திகாவுடன்...
எனது அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் திருமணம்.
கோவையில் எனது அழைப்பை ஏற்று வருகை தந்த முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்.
திரைப்பட நடிகனின் புகைப்படம், ஆச்சாரி என்ற ஜாதிப்பெயர், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி இல்லாத எங்கள் இல்ல திருமண பதாகை.
பதாகையில் மணமக்களுடன் ம. ரித்திஷ் சென்னை.
கடந்த வருட திருமணத்தின் எங்கள் குடும்ப புதுவரவு மு. விஷாலி கோவை.
மாலையில் சொந்த குடும்ப கோயிலைக் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞானி ஸ்ரீபூவுவின் இன்றைய நிலையில் 10 பெயரன்களில் 7 பெயரன்கள்.
சென்னை சிவானந்தா குருகுலம் சென்றேன். இனி எனக்கு கடிதங்கள், தீபாவளி, பொங்கல் வாழ்த்துகள் அனுப்ப வேண்டாம் பணவிரயம் என்பதை சொல்லி வைத்தேன்.
எனக்கு நேரமின்மை காரணமாக நிறுவனர் டாக்டர். திரு. ராஜாராம் அவர்களை சந்திக்க முடியாமல் போனது.
தேவகோட்டை பேருந்து நிலைய புத்தக கடையில் எனது நூல். கண்டதும் மனதில் ஒருநொடி பட்டாம்பூச்சி பறந்தது..

சென்னையில் வில்லங்கத்தார் மன்னிக்கவும் தில்லை அகத்தார் திருமதி. கீதா அவர்களையும் சந்தித்தேன். கோடம்பாக்கத்தில் அவர்களது பழங்கால வீடு அது இன்னும் எனது விழிகளில் ஆச்சர்யத்தோடு நிற்கின்றது காரணம் எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் பழங்கால வீடு போலவே இருக்கின்றது வீட்டைக் கண்டதும் பதிவுக்கு தலைப்பு கிடைத்தது ''கதவுகளுக்கு பஞ்சமில்லை''

செல்பேசியில் மட்டுமே தொடர்பு கொண்ட பதிவர்கள்.
முனைவர். திரு. B. ஜம்புலிங்கம் அவர்கள், திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள், திரு. துளசிதரன் அவர்கள், திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள், கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்கள், கவிஞர். திருமதி. மு. கீதா அவர்கள், திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், திரு. டி. என். முரளிதரன் அவர்கள், திரு. இ. பு. ஞானபிரகாசன் அவர்கள், திரு. தளிர் சுரேஷ் அவர்கள்.

செல்பேசியில் முயன்று இணைப்பில் பிடிக்க முடியாதவர்கள்.
ஐயா திரு. ஜியெம்பி அவர்கள், திரு. ஸ்ரீராம் அவர்கள், திரு. மது அவர்கள், மற்றும் ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள்.

விசாரிக்கப்பட்ட பதிவர்கள்.
கவிஞர் திரு. ரமணி S அவர்கள், திருமதி. R. உமையாள் காயத்ரி அவர்கள், ஐயா திரு. வை.கோ அவர்கள், திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள், அன்பேசிவம் திரு. சக்தி அவர்கள், கவிஞர் திருமதி. சசிகலா மற்றும் நான் இந்தியா வரும் பொழுது அபுதாபி வருவதாக சொன்ன நண்பர் திரு. நெல்லைத் தமிழன் அவர்கள்.  
எனது நூலை வாங்கிப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன் இதில் சில பதிவர்கள் இரண்டு, மூன்று வாங்கி கொண்டாலும் நான் தவறாக நினைக்க மாட்டேன். நூல் வாங்க தொடர்பு கொள்ள வேண்டுமெனில்...

திரு. குணசேகரன் - கோவை
செல்பேசி – 80 56 57 51 81
திரு. தமிழ்வாணன் - தேவகோட்டை
செல்பேசி – 85 26 52 52 55
திரு. விவேக் - மதுரை
செல்பேசி – 96 00 68 87 26

புதன், அக்டோபர் 05, 2016

மனம் பிளந்து பேசுகிறேன்...


வணக்கம் நட்பூக்களே...
இம்முறை இந்தியா வந்து வலைப்பதிவர்களை சந்திக்க முடியாத சூழலில் வீழ்ந்து கிடந்தேன் மன அமைதி இல்லை காரணம் வழக்கத்தைவிட எனது குடும்பமும், சுற்றமும் எனக்கு சந்தோஷத்தை சற்று ''அழுத்தமாக'' கொடுத்து விட்டது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ கொடுத்து விட்டேன் எனது அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை இனியெனும் எனது செல்வங்களுடன் இணைந்து வாழ வேண்டி....

ஒரு மனிதன் மனைவியை இழந்து வாழ்வதே அவன் செய்த பாவமோ... என்னவோ... இறைவன் அவனுக்கு கொடுத்த தண்டனைதான் அதிலும் அதையே காரணமாக சொல்லிக் காண்பித்து அவனை மேலும் வேதனைப்படுத்தும் மனிதர்களை என்ன சொல்வது ? எத்தனை மனிதர்கள் என்னிடம் சர்வ சாதாரணமாக கேட்டு இருக்கின்றார்கள் தெரியுமா ? 
உனக்கென்ன மனைவி இல்லை என்ன செலவு இருக்கப்போகுது... ?
மனைவியவள் இருந்திருந்தால் நிச்சயமாக சோற்றுச் செலவுதான் செய்திருப்பேன் அவள் இல்லாத காரணத்தால் எனக்கு எவ்வளவு சுற்றுச்செலவு என்பது இந்த சமூக மனிதர்களுக்கு தெரியவில்லை.
என்னை புனிதனாக நினைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை சராசரி மனிதனாக நினைத்தால் போதுமே... ஆனால் சுற்றம் என்னை உணர்வுகள் அற்ற நடமாடும் இயந்திரமாக நினைக்கின்றதே....

//இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்//
- கவியரசர் கண்ணதாசன்

நான் இதற்காக மட்டும் சொல்லவில்லை இதைக்கடந்து பல விடயங்கள் இருக்கின்றது என்று சொல்ல வருகின்றேன்.

நாம் பழைய காலங்களில் தினம் தோறும் ஒலிபெருக்கியில் கேட்டு இருந்திருப்போம் திருவிளையாடல் திரைப்படத்தின் வசனத்தை...

//சக்தி இல்லையேல் சிவம் இல்லை
சிவம் இல்லையேல் சக்தி இல்லை
ஆணுக்குப் பெண் அடிமை
அந்த ஆணையும் பெற்றுத்தருவது பெண்மை//

அப்பொழுதெல்லாம் நான் இந்த வார்த்தைகளை நல்ல எதுகை மோனையோடு எழுதி இருக்கின்றார்கள் என்றுதான் நினைத்து இருக்கின்றேன் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தையோ... அர்த்தத்தின் ஆழத்தையோ... ஆழத்தில் ஊருறுவி நீள அகலத்தையோ... சிந்தித்துப் பார்த்ததில்லை. இன்று எனது வாழ்க்கைச் சூழலில் சிக்கிப்பார்க்கும் பொழுது எனது கூற்றுப்படி சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதே உண்மை என்று படுகின்றது நட்பூக்களே... இது பொதுவானது அல்ல ! எனது தனிப்பட்ட, எனக்குள் உட்பட்ட விடயம் ஆகவே இதை யாரும் தவறானது என்று வாதிட வேண்டாம் சக்தி பிரியும் பொழுது சிவன் சக்தியை (பலத்தை) இழந்து விடுகின்றான் ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனையில் மனைவி என்றவள் இல்லையெனில் இச்சமூகம் குடும்பமாக அங்கீகரிக்க மறுக்கின்றது குடிக்க கஞ்சி இல்லாவிட்டாலும் அங்கு ஒரு பெண் இருந்தால் அந்த குடும்பத்தை வழி நடத்தி சமூகத்திற்கு அடையாளம் காட்டிச் செல்கின்றாள்.

//பெண்புத்தி பின்புத்தி// என்ற சொல்லை பலரும் தவறாக அர்த்தம் கொண்டுள்ளார்கள் என்றே நான் கருதுகின்றேன் பெண்ணின் புத்தி ஆணுக்குப் பின்னால் இருந்து கொண்டு அவனது தவறுகளை குத்தி (சுட்டிக்காட்டி) நல்வழி படுத்துபவள் ஆகவே அதை பின்புத்தி என்று சொல்லி வைத்தார்கள் என்பது எமது கணிப்பு என்னவள் இன்று இருந்திருந்தால் எனது உழைப்பில் பகுதிக்கு மேல் நான் இழந்திருக்க மாட்டேனே... இன்றளவும்கூட இந்த இழப்பை நான் ஏமாந்ததாக உணரவில்லை நமது குடும்பத்துக்காகத்தானே.... என்றே நினைக்கிறேன் நான் பல நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு இவ்உலக மக்கள் அனைவரும் நல்ல எண்ணங்களோடு, மனித நேயத்தோடு வாழவேண்டும் என்று. எனது குடும்பத்து, சுற்றத்து மனிதர்களையே என்னால் நல்வழி படுத்தமுடியாதபோது..........? எனது சமூகசிந்தனை அறிவீணமே என்றே தோன்றுகின்றது நட்பூக்களே... துணையை தொடர்ந்து நேசியுங்கள் அந்த நேசிப்பு உங்கள் மனதை வலுப்படுத்தும், வாழ்வாதாரத்தை உயர்த்தும், வாழ்க்கையை வளப்படுத்தும், நாளும் நலமுடன் வாழ வழி வகுக்கும்.

இந்த சுழலிலும் ஒரு வேலை காரணமாக நமது வலைப்பதிவர் திரு. வலிப்போக்கன் அவர்களை நான் சிலமுறை சந்திக்க வேண்டி வந்தது அவர் எனது முகத்தின் ரேகையை படித்தாரோ... என்னவோ... சில விடயங்களை அவராகவே கிண்டிக் கிழங்கெடுத்து கீவா நல்லி வேறெடுத்து ஆறுதலாக பேசி மனவலிகளை போக்கினார். நான் நெடுங்காலமாக நினைத்திருந்த ஒரு கனவை நனவாக்கி வெற்றிகரமாக முடித்து விட்டேன் அதாவது பாதி கிணறு தாண்டி அந்தரத்தில் நிற்கிறேன் மீதியைக் கடப்பதற்கு உங்கள் அனைவரது ஆதரவும் தேவை அதை அடுத்த பதிவில பேசுகிறேன்.

திங்கள், அக்டோபர் 03, 2016

முன்பிறவி உண்டா ?

தனக்கொரு வாரிசு இல்லையே என்று ஏங்கும் பல செல்வந்தர்களும் வாழும் இந்த உலகில் இப்படியும் ஒரு பிறவி இந்தக் குழந்தையும் இறைவன் படைப்புதானே ? சில நேரங்களில் பார்த்து இருப்பீர்கள் குளிரூட்டப்பட்ட சீரூந்தில் நாய்கள் உட்கார்ந்து போகும் இவைகள் இரண்டையும் நான் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதுதான் முன்பிறவியின் பாவபுண்ணிய பலன்கள் எனறு சொல்வார்களே அவைகள் என் மனதுள் வந்து செல்கின்றன.. இறைவனின் கண்ணோட்டத்தில் இவைகள் நியாயம்தானா ? இதற்கும் நியாயமான காரணங்கள் உண்டா ? இவைகளை நாம் அறிந்து கொள்ள மரணம்வரை காத்திருக்கத்தான் வேண்டுமோ ? சில நாய்களுக்கு கிடைத்த வாழ்க்கை சில மனிதர்களுக்கு கிடைக்கவில்லையே... நாய்க்கு உதவும் மனிதன், மனிதனுக்கு உதவுவதில்லையே... அதற்காக நாயை வளர்க்காமல் இந்த மனிதர்களை தத்தெடுத்து வளருங்கள் என்று நான் சொல்ல வருவதாக அர்த்தமல்ல ! அப்படி நடந்தால் உலகில் பட்டினிச்சாவு நடக்க சாத்தியமே இல்லை சில பணக்காரர்களின் வீட்டில் மெத்தையில் படுத்து உறங்குகின்றது நாய், சில இடங்களின் கொசுக்கடிகளுடன் சாக்கடையின் ஓரங்களில் படுத்து கிடக்கின்றான் மனிதன். இந்தக் குழந்தையைப் பார்த்து விட்டு இதற்கு உதவுபவன் மனிதனா ? அல்லது இக்குழந்தை போன ஜென்மத்தில் செய்த பாவத்துக்கு இப்பிறவியில் அதை அனுபவிக்கின்றது என்று இதனை பரிகாசித்து விட்டு செல்பவன் மனிதனா ? ஒருக்கால் இப்படி சொல்லும் மனிதர் இறைவனை வணங்கும் ஆத்திகவாதியாகத்தானே இருக்க முடியும் அப்படிச் சொன்னால் ? ஈவு இரக்கமின்றி செல்லும் நீ என்னை வணங்க உனக்கு அருகதை இல்லை என்று இறைவன் இவனுக்கும் பாவக் கணக்கைத்தானே எழுத முடியும் அப்படியானால் இந்த ஆத்திகனுக்கு அடுத்த ஜென்மத்தில் இந்தக் குழந்தையைப்போல் ஏதோவொரு இழிவான பிறவிதானே கிடைக்ககூடும். ஒரு பெண் நான்கு காமுகர்களால் கற்பழித்து கொல்லப்படுகின்றாள் அவளது ஓலம் இறைவனுக்கு கேட்காதா ? ஏதாவது வழியில் திரைப்படங்களில் வருவதுபோல யாராவது மூலம் இறைவன் அதை தடுக்ககூடாதா ? இப்படி நான் கேட்கவில்லை நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களைப் போன்றவர்கள் கேட்ககூடும், இதுதான் இறைவன் அவளுக்கு விதித்த விதி என்று நான் சொல்லவில்லை சில ஆத்திகவாதிகள் சொல்லக்கூடும், ஒரு பாவமும் அறியாத குழந்தை சர்ப்பம் தீண்டி இறக்கின்றது அதை இறைவன் தடுக்ககூடாதா ? என்று நான் கேட்கவில்லை நண்பர் திரு. பகவான்ஜி அவர்களைப் போன்றவர்கள் கேட்ககூடும், இது ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்பதை மனிதன் உணர்ந்து கொள்ள இறைவன் அந்தக் குழந்தையின் வழியாக நமக்கு போதித்த பாடம் என்று நான் சொல்லவில்லை சில ஆத்திகவாதிகள் சொல்லக்கூடும்,  மனிதனாய் பிறந்தவன் மனித உணர்வுகளை மதிக்கத்தெரியாத ஜடமாக வாழ்ந்தான் என்றால் அவனை மனிதன் என்று சொல்வது சரியாகுமா ? புலால் உண்ணுதல் பாவம் என்று அதை ஒதுக்கி வைத்து வாழும் மனிதர்களையும், மனிதனை மரத்தைப்போல வெட்டிச்சாய்க்கும் மனிதனையும் படைத்தது ஒரே இறைவன்தானே... உலகை படைத்து இயக்குவது நிச்சயமாக ஒரே இறைவனாகத்தான் இருக்க முடியும் மனிதனின் எண்ணப்பாடுகளின் மாற்றமே கடந்தகாலம் நமக்கு இறைவனையும் பெறுக்கி தந்து விட்டு சென்றது. மனித வாழ்வில் ஏற்றத்தாழ்வு இல்லையெனில் அடிமட்ட வேலைகளை செய்வது யார் ? எல்லோரும் செல்வந்தர் எனில் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டர்களே... வேலைகளும் நடக்காதே எல்லோரும் செல்வந்தர் பிறகு கூலி வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை வாழ்க்கையும் ரசிக்கும்படி இருக்காது என்பது நமது அறிவுக்கு புலப்படுவது உண்மையே இருப்பினும் இதற்கான தீர்வு காண மரணம்வரை காத்திருத்தல் அவசியமோ.... ?

ஞாயிறு, அக்டோபர் 02, 2016

காந்’’தீ’’க்கு ஜெயந்தி


இன்று, எனக்கு பிறந்த நாள் என்று கொண்டாடும் அரசியல்வாதிகளுக்கு, என் சிலையை கழுவி இருப்பீர்கள், சிலைக்கு மாலை போட்டு பத்திரிக்கைக்காரர்களுக்கு போட்டோவுக்கும், வீடியோவுக்கும் போஸ் கொடுத்து அழகு பார்த்திருப்பீர்கள். சேனல்காரர்கள் திரைப்பட நடிகைகளை அழைத்து என்னைப்பற்றி கேள்வி கேட்டிருப்பார்கள், அவர்களும் என்னைப் போலவே உடையணிந்து கொண்டு அலகு டமிலிள் என்னைப்பற்றி சொல்லி இருப்பார்கள் நாட்டு மக்களும் ரசித்துப் பார்த்திருப்பீர்கள் அவளை.

 எல்லாம் சரிதான் என் அஹிம்சையை மட்டும் மறந்து விட்டீர்களே... ம்... நான் இருந்தும் பயன், இறந்தும் பயன்.


 ஒரு வேளை நானும் யானை வகைதானோ ?

 

ஒரு வகையில் நண்பன் கோட்ஸேவுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும் இந்த அவலங்களை எல்லாம் பார்க்க வேண்டாமென அனுப்பி வைத்தானே...