நட்பூக்களே... கனவு நனவானது ஆம் எனது கனவு நனவானதே... பல நண்பர்களும் பலமுறை சொல்லி என்னுள்ளும் இந்த மோகத்தீயை வளர்த்து விட்டார்கள் அதுவே நூல் வெளியீடு இதோ... எனது முதல் பிரசவம் தேவகோட்டை, தேவதை தேவகி என்ற நூலை எழுதி எனக்குத் தெரிந்தவரை உங்களை சிரிக்க வைக்க முயன்று இருக்கின்றேன் இன்னும் வெளியீட்டு வைபவம் வைக்கவில்லை இந்தியா வந்ததும் வைக்க வேண்டும்.
இந்நூல் அச்சடித்தது நமது நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களது அச்சகத்தில்தான். அட்டைப்படம் எனது வடிவமைப்பு எனது விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்தார்கள் இந்த நூல் அச்சடித்ததற்கான பணவிசயத்தில் எனக்கும், நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களுக்கும் மனவருத்தமும் உண்டானது அதாவது அச்சடித்து முடித்தவுடன் பணத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்புகிறேன் என்று செல்லில் செய்தி சொல்லி அனுப்பினேன் அதற்கு, அவர் நேரடியாக கொடுப்பதே சாலச்சிறந்தது என்று சொல்லி விட்டார் இதற்காகவே நான் மீண்டும் மதுரைக்கு அலைய வேண்டி வந்தது அலைந்தால் என்ன ? அதனால் அங்கு இரண்டு வலையுலக மலைகளை சந்தித்தேன். இதோ கீழே மலைகளுடன்...
திரு. பகவான்ஜி மற்றும் திரு. S.P. செந்தில் குமார் அவர்களுடன்...
பிறரின் வலிகளை போக்கும் திரு. வலிப்போக்கன் அவர்களுடன்...
கோவையில் மாமலை முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுடன்...
சென்னையில் புலவர் ஐயா திரு. சா. இராமநுசம் அவர்களுக்கு நான் எழுதிய 'தேவகோட்டை, தேவதை தேவகி' நூலை வழங்கினேன்.
சென்னையில் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நான் எழுதிய 'தேவகோட்டை, தேவதை தேவகி' நூலை வழங்கினேன்.
மதுரையில் புத்தகத் திருவிழா தமுக்கம் திடலில்...
புகைப்படத்தை பெரிதாக காண மையத்தில் சொடுக்குக...
மணமக்களுக்கு தாலி கட்டியதும் மேடையிலேயே முதலில் ஆசி வழங்கியது முனைவர் ஐயா திரு. பழனி கந்தசாமி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலவர் ஐயா எழுதிய 'வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்' நூலை எனக்கு தந்தபோது...
நண்பரின் பெயர்த்தி செல்வி. சாய் கீர்த்திகாவுடன்...
எனது அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் திருமணம்.
கோவையில் எனது அழைப்பை ஏற்று வருகை தந்த முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்.
திரைப்பட நடிகனின் புகைப்படம், ஆச்சாரி என்ற ஜாதிப்பெயர், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி இல்லாத எங்கள் இல்ல திருமண பதாகை.
பதாகையில் மணமக்களுடன் ம. ரித்திஷ் சென்னை.
கடந்த வருட திருமணத்தின் எங்கள் குடும்ப புதுவரவு மு. விஷாலி கோவை.
மாலையில் சொந்த குடும்ப கோயிலைக் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞானி ஸ்ரீபூவுவின் இன்றைய நிலையில் 10 பெயரன்களில் 7 பெயரன்கள்.
சென்னை சிவானந்தா குருகுலம் சென்றேன். இனி எனக்கு கடிதங்கள், தீபாவளி, பொங்கல் வாழ்த்துகள் அனுப்ப வேண்டாம் பணவிரயம் என்பதை சொல்லி வைத்தேன்.
எனக்கு நேரமின்மை காரணமாக நிறுவனர் டாக்டர். திரு. ராஜாராம் அவர்களை சந்திக்க முடியாமல் போனது.
தேவகோட்டை பேருந்து நிலைய புத்தக கடையில் எனது நூல். கண்டதும் மனதில் ஒருநொடி பட்டாம்பூச்சி பறந்தது..
சென்னையில் வில்லங்கத்தார் மன்னிக்கவும் தில்லை அகத்தார் திருமதி. கீதா அவர்களையும் சந்தித்தேன். கோடம்பாக்கத்தில் அவர்களது பழங்கால வீடு அது இன்னும் எனது விழிகளில் ஆச்சர்யத்தோடு நிற்கின்றது காரணம் எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் பழங்கால வீடு போலவே இருக்கின்றது வீட்டைக் கண்டதும் பதிவுக்கு தலைப்பு கிடைத்தது ''கதவுகளுக்கு பஞ்சமில்லை''
செல்பேசியில் மட்டுமே தொடர்பு கொண்ட பதிவர்கள்.
முனைவர். திரு. B. ஜம்புலிங்கம் அவர்கள், திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள், திரு. துளசிதரன் அவர்கள், திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள், கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்கள், கவிஞர். திருமதி. மு. கீதா அவர்கள், திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், திரு. டி. என். முரளிதரன் அவர்கள், திரு. இ. பு. ஞானபிரகாசன் அவர்கள், திரு. தளிர் சுரேஷ் அவர்கள்.
செல்பேசியில் முயன்று இணைப்பில் பிடிக்க முடியாதவர்கள்.
ஐயா திரு. ஜியெம்பி அவர்கள், திரு. ஸ்ரீராம் அவர்கள், திரு. மது அவர்கள், மற்றும் ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள்.
விசாரிக்கப்பட்ட பதிவர்கள்.
கவிஞர் திரு. ரமணி S அவர்கள், திருமதி. R. உமையாள் காயத்ரி அவர்கள், ஐயா திரு. வை.கோ அவர்கள், திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள், அன்பேசிவம் திரு. சக்தி அவர்கள், கவிஞர் திருமதி. சசிகலா மற்றும் நான் இந்தியா வரும் பொழுது அபுதாபி வருவதாக சொன்ன நண்பர் திரு. நெல்லைத் தமிழன் அவர்கள்.
எனது நூலை வாங்கிப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன் இதில் சில பதிவர்கள் இரண்டு, மூன்று வாங்கி கொண்டாலும் நான் தவறாக நினைக்க மாட்டேன். நூல் வாங்க தொடர்பு கொள்ள வேண்டுமெனில்...
திரு. குணசேகரன் - கோவை
செல்பேசி – 80 56 57 51 81
திரு. தமிழ்வாணன் - தேவகோட்டை
செல்பேசி – 85 26 52 52 55
திரு. விவேக் - மதுரை
செல்பேசி – 96 00 68 87 26
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபதிவராக இருந்து எழுத்தாளராக மாறிய கில்ல்ர்ஜிக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநண்பர் மதுரைத்தமிழனின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குதம்பிக்கு
பதிலளிநீக்குஎனது பாராட்டுகள் - தங்கள்
அடையாளம் நூல் வடிவில்
வெளிவந்தமைக்கு - எனது
வாழ்த்துகளும் கூட...
இலங்கை வேந்தரின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குசென்னை வந்து சென்றீர்களா! என்னுடைய அலைபேசி எண் தில்லையகத்து கீதாவிடம் இருந்திருக்குமே.. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநண்பருக்கு விமான நிலையம் செல்லும் அவசர கதியின் வேலையே இது ஊரிலிருந்து செல்பேசியில் முயன்று தோற்றேன்.
நீக்குமேலும் சென்னையில் இருக்கும் வில்லங்கத்தாருக்கு அபுதாபியில் இருந்து உங்களது நம்பர் கொடுத்ததே இந்த கில்லர்ஜிதான் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே
வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
நூலினை அவசியம் வாங்குவேன்
தங்களின் எழுத்துக்கள் அனைத்தும் நூலாக மாறட்டும்
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே வந்து சந்திப்பேன்
நீக்குVaazhthukal...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஒரு பதிவு! எத்தனை படங்கள்!! எத்தனை தகவல்கள்!!! தங்களின் படைப்பின் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துகள்! தங்களுடைய பணிகளுக்களுக்கிடையே எனது இல்லத்திற்கும் வந்து சிறப்பித்தமைக்கு நன்றிகள் பல.
பதிலளிநீக்குவருக நண்பரே சந்தித்ததில் மகிழ்ச்சி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்குநனவானதில் எனக்கும் மகிழ்ச்சி !அடுத்த பதிவர் சந்திப்பின் போது இலவசமாய் தருவீர்கள் என்றாலும் இப்போது வாங்கிப் படிக்கிறேன் :)
பதிலளிநீக்குவாங்க ஜி விமானம் ஏறும் கடைசி இரண்டு தினங்களுக்கு முன்புதான் நூல்கள் எனக்கு கிடைத்தது ஆகவே மீண்டும் உங்களை சந்திக்க இயலவில்லை வருந்துகிறேன்
நீக்குமனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ஜி. மேலும் உங்களின் பல புத்தகங்கள் வெளிவரட்டும்.
பதிலளிநீக்குஜியின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
தாத்தாவின் வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி வந்து சந்திக்கிறேன் தாத்தா
நீக்குதங்களின் படைப்புகள் நூலாக மலர்ந்தது கண்டு மகிழ்ச்சி. மேலும் பல நூல்கள் வெளிவர வாழ்த்துக்கள், நண்பரே!
பதிலளிநீக்குத ம 6
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே விமானம் ஏறும் கடைசி இரண்டு தினங்களுக்கு முன்புதான் நூல்கள் எனக்கு கிடைத்தது ஆகவே மீண்டும் உங்களை சந்திக்க இயலவில்லை வருந்துகிறேன்
நீக்குபதிவராக இருந்து எழுத்தாளராக மாறிய சகோவுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வாழ்த்துகளுக்கு நன்றி சகோ
நீக்குதங்கள் ஊருக்கு வந்தும், எங்கள் ஊருக்கு வராததற்கு எனது அன்பான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் தாங்கள் செல்பேசியில் பேசியபோது கூட, நூல் வெளிவந்ததைத் தெரியப்படுத்தாதது “நெற்றிக்கண் திறப்பினும்” குற்றம் குற்றமே! என்ன எங்கள் ஊரில் கணினித் தமிழ்ச்சங்கம் மற்றும் “வீதி” கலைஇலக்கியக் களம் வழியாக ஒரு சிறு நூல்அறிமுகக் கூட்டத்தை வைத்திருப்போம். அந்த மகிழ்ச்சியைக் கெடுத்தது ஏன்? இது தகுமா? தருமம்தானா?
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் வலைஎழுத்தாளர் புத்தக ஆசிரியராகப் பரிணாம வளர்ச்சி பெற்றதற்கு என் இனிய வாழ்த்துகள். (அப்படியே ஒர் அன்பு வேண்டுகோள் -அடுத்த புத்தகத்திலாவது, நூலாசிரியர் பெயரைத் தமிழில் போட வேண்டுகிறேன்) த.ம.7
கவிஞரின் வரவு கண்டு மகிழ்ச்சி
நீக்குமன்னிக்கவும் நூல்கள் கடைசி இரண்டு தினங்களுக்கு முன்பே கிடைத்தது இன்னும் வெளியீடு இல்லையே...
தேவகோட்டை புத்தக கடையில் சிறிது கொடுத்து விட்டு விமானம் ஏற சென்னை புறப்பட்டு விட்டேன்
விரைவில் சந்திப்போம் வெளியிடுவோம் தமிழில்தான் பெயரிட விருப்பம் ஆங்கிலத்தில் KILLERGEE இதை KILLERJI இப்படி எழுதி விடுவதால் தெய்வகுற்றம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சமே காரணம் மேலும் பின்புற அட்டையில் தாங்கள் சொன்னது இருக்கின்றதே...
இருப்பினும் அடுத்த நூலில் தங்களது அவா நிறைவேறும் நன்றி
மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி வாழ்த்துகளுக்கு
நீக்குமுதல் நூலைக் கண்ணால் பார்த்து, கையால் வருடி, அதனை மற்றவர் படிக்கக் கண்டு ரசிப்பது என்பது பேரானந்த அனுபவம். உமக்கும் அது வாய்த்துவிட்டதில் பெருமகிழ்ச்சி எனக்கு. நிற்க. நானும் சென்னை என்கிற ஊரில் வசிக்கும் ஒரு முன்னாள் பதிவர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டு.....
பதிலளிநீக்குவருக வாத்தியாரே மன்னிக்கவும் விமான நிலையம் செல்லும்போது அவசர வேலையிது கண்டிப்பாக விரைவில் வந்து சந்திப்பேன்.
நீக்குஆம் அந்த அனுபவம் புதுமையானதே
நினைவில் கொள்க தாங்கள் என்நாளும் பதிவரே...
அடாடா... வாட்ஸப்புலயே பணத்தை அனுப்பிட முடியுமா..? இத்தனை நாள்ல இந்தச் சின்ன விஷயம் எனக்குத் தெரியாமப் போச்சே... வாவ்....
பதிலளிநீக்குஆம் வாத்தியாரே மேலும் விபரமறிய 2016 செப்டம்பர் மாதபதிவு (செல்லில், சொல்லிய வார்த்தை) சொடுக்கி படிக்க...
நீக்குவாழ்த்துகள் ஜி...
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜி
நீக்குதமிழ் இளங்கோ அவர்களைக் காணத் திருச்சி வந்திருந்தீர்களா? முன்னாலேயே தெரிவித்திருந்தால் எங்கள் வீட்டுக்கே வரச் சொல்லி இருப்பேன். ஒரு மெயில் கொடுத்திருக்கலாம்! என் அலைபேசி எண்ணைக் கொடுத்திருப்பேன்! :( என்னையும் விசாரித்தமைக்கு மிக்க நன்றி. என்னால் வந்து சந்திக்க இயலாவிட்டாலும் வீட்டில் வரவேற்றிருப்பேன். :( ஆனால் நாங்களும் எங்கள் சொந்தப் பிரச்னைகளில் மூழ்கி இருந்தபடியால் வெளி உலகில் நடப்பதே தெரியாமல் போனது! :(
பதிலளிநீக்குவருக சகோ திருச்சி வரவில்லை அவரிடம் பேசினேன் விரைவில் வருவேன் வருகைக்கு நன்றி
நீக்குபதிவர்களுக்கு புத்தக வெளியீடு செய்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாங்க ஐயா உண்மைதான் தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குபுத்தகம் வெளியிடுவது கூட பெற்றெடுத்த குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுவதைப்போல... தாங்கள் பெற்றெடுத்த புத்தகக் குழந்தைக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....பதினாறாயிரம் பெற்று புத்தகக் கடலாக பெருகிட வாழ்த்துக்கள் ... தங்களின் முதல் புத்தகத்தின் அட்டைப்படம் உங்களின் பிடிவாதமான மனநிலையை தெரியப்படுத்துகிறது. நேரம் கிடைக்கும்போது ஒரு புத்தகத்த்தின் அட்டைப்படம் என்கிற தலைப்பில் ஒரு சிறு ஆராய்ச்சியை செய்யுங்கள். நிறைய அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் பல் அழகான புத்தகங்களை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதே-கி-ஜி ஐயா அவர்களே (முழு பெயரையும் எழுதினால் தெய்வக்குத்தம் ஆகிடுச்சினா) புத்தகத்தை வாங்கும் விவரம் பற்றி தெரிவியுங்கள்....
புத்தகத்தின் பெயர் "தேவக்கோட்டை, தேவதை தேவகி", புத்தகத்த்தின் பக்கங்கள்= ?
புத்தகத்தின் விலை ரூ ? + கூரியர் செலவு ரூ ? ஆக மொத்தம் ரூ ? ஐ அனுப்பி வையுங்கள்.
உங்கள் வங்கியின் மூலம் NEFT ல் அனுப்பலாம்.
அல்லது காசோலை, பண ஓலை மூலம் அனுப்பலாம் அல்லது தபாலில் vpp மூலம் பெற்றுக் கொள்ளலாம். தபால்காரர் உங்கள் இடத்திற்கு வரும்போது பணத்தைக் கொடுத்துப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். வெளி நாடுகளில் இருப்பவர்களுக்கும் அஞ்சல் மூலம் கிடைக்கும். பிரதிக்கு எழுதுங்கள்..
இப்படியெல்லாம் விவரமா எழுதவேண்டாமா???
நன்றிகளுடன் ..கோகி-ரேடியோ மார்கோனி- புது தில்லியிலிருந்து.
வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி உண்மைதான் இருப்பினும் நான் விரைவில் இந்தியா வருவேன் நூல் வெளியீடு செய்வேன்.
நீக்குதாங்கள் நான் கீழே கொடுத்துள்ள செல்பேசியில் திரு. விவேக் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
மொத்த பக்கங்களின் எண்ணம் 180
விலை 125/ ரூபாய்
வாழ்த்துகள். அடுத்தது கவிதை தொகுப்பாக இருக்கட்டும்.
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க மகிழ்ச்சி வருகைக்கு.
நீக்குவாழ்த்துக்கள் சகோதரமே.!
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மையிலேயே உங்களை நினைத்தேன்.
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி
நண்பர் கேட்ட நாளுக்குள் புத்தகம் தயாராகிவிட்டது. நண்பரை அலை பேசியில் தகவலை தெரிவித்தபோது... சனிக்கிழமை வேண்டாம் நான் ஊரில் இருக்கிறேன்.. திங்கள் கிழமை நல்ல நாள்
பதிலளிநீக்குஅன்று பெற்றுக் கொள்கிறேன் என்பதால்... நண்பர் இரண்டு நாளுக்கு முன்புதான் பெற்றேன் என்கிறார். நான் வாட்ஸ்-அப்பில பெற மறுத்த காரணத்தால்தான்..இரண்டு மலை சிகரங்களை சந்திக்கும் வழியை ஏற்ப்படுத்தி உள்ளேன்...நண்பரின் எல்லா கனவுகளும் நனவாக வாழ்த்துகள்...
வருக நண்பரே தாங்கள் சொல்வதும் உண்மைதான் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குவாழ்த்துக்கள். உலகத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தன் குழந்தை என்பது சிறப்பல்லவா? உங்கள் முதல் புத்தகத்தைப் பார்த்த மகிழ்ச்சி உங்களுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் உண்டு. நீங்கள் அபுதாபியிலிருந்துக் கிளம்பிவிட்டீர்களா?
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி உண்மையான விடயம்.
நீக்குஎனது விசா இன்னும் கேன்சல் செய்யவில்லை தீபாவளிக்கு வரமுயல்கிறேன்.
நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதமிழ் கூறும் நல்லுலகிற்கு - இன்னும் பற்பல புத்தகங்களைத் தாங்கள் வழங்கிட வேண்டும்..
வாழ்க நலம்!..
வாங்க ஜி தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்சசி
நீக்குஎழுதஆரம்பித்தது தொடங்கி ஒவ்வொரு படிநிலையிலும் உங்களது பதிவுகளைப் படித்துவருபவன் நான். என்னைப்போல பலரும் படிக்கின்றார்கள். தங்களின் முன்னேற்றம் எங்களுக்குப் பெருமையைத் தருகிறது. ஒவ்வொரு நண்பரையும் நினைவுகூர்ந்த விதம் அருமையாக உள்ளது. நூலட்டையைப் பார்த்ததும் மகிழ்ச்சி. இன்னும் பல நூல்களை எழுத இந்நூல் ஓர் ஆரம்பமாக இருக்கட்டும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது நிச்சயமாக நிறைய நூல்கள் எழுதுவதே எனது நோக்கம் தங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு தொடர்ந்து எழுதுவேன்.
நீக்குஓ மனம் நிறைந்த வாழ்த்துகள்..நான் தான் தாமதமாகப்பார்த்துள்ளேன் போல....அவசியம் புத்தகம் வீதியில் அறிமுகம் செய்ய வேண்டும் சகோ.
பதிலளிநீக்குவருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றி நிச்சயம் வருகிறேன் அறிமுகப்படுத்துவோம் மீண்டும் நன்றி
நீக்குமுதலில் வாழ்த்துகள் கில்லர்ஜி!! மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா: நானும் எனது எஜமானி அம்மாவும் என்று தலைப்பிட்டு நீங்கள் கண்ட வீட்டின் நிலைமையைப் பற்றித்தான் பதிவு எழுதியிருந்தேன் ஜி! அற்புதமான வீடு இல்லையா ஜி!!! அதை இடிக்க மனசு வருமா சொல்லுங்க....வேறு கை மாறுவதற்கும் மனசு வருமா சொல்லுங்க..
உங்களைச் சந்தித்ததில் மிக்க சந்தோஷம் ஜி. வில்லங்கத்தார்னு சொல்லுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை!!!!
வாழ்த்துகள் ஜி!
ஆம் அருமையான வீடு அந்த அமைப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமே...
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி
கில்லர்ஜி ஸ்ரீராம் நம்பர் நீங்கள் கொடுத்தது அல்ல.....அந்தநம்பரல்ல..அப்போது எனது மொபைல் ..தொலைந்திருந்ததால் நம்பர் விட்டுப் போச்சு....இப்போது என்னிடம் அவரது நம்பர் உள்ளது. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இல்லை என்றால் அழைத்துக் கொடுத்திருப்பேன் உங்கள் கையில். பரவாயில்லை விடுங்க....நீங்கதான் இங்க வரப்போறீங்க இல்லையா.
பதிலளிநீக்குகீதா
நன்று வந்து வாங்கி கொள்கிறேன் அதைப்போல வெங்கட்ஜியின் நம்பர் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன் மறந்து விட்டேன்.
நீக்குகனவு மெய்ப்பட்டமை அறிய மகிழ்வு நண்பரே!
பதிலளிநீக்குதமிழ் இளங்கோ ஐயாவிடம் இருந்து தங்கள் புத்தகத்தைப் பெற்றுக் கொள்கிறேன்.
மென்மேலும் எழுதுங்கள்.
நன்றி.
வருக கவிஞரே திரு தமிழ் இளங்கோ அவர்களை நான் இன்னும் சந்திக்கவில்லை விரைவில் வந்து சந்திப்பேன்
நீக்குவருகைக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்கு