நட்பூக்களே... கனவு நனவானது ஆம் எனது கனவு நனவானதே... பல நண்பர்களும் பலமுறை சொல்லி என்னுள்ளும் இந்த மோகத்தீயை வளர்த்து விட்டார்கள் அதுவே நூல் வெளியீடு இதோ... எனது முதல் பிரசவம் தேவகோட்டை, தேவதை தேவகி என்ற நூலை எழுதி எனக்குத் தெரிந்தவரை உங்களை சிரிக்க வைக்க முயன்று இருக்கின்றேன் இன்னும் வெளியீட்டு வைபவம் வைக்கவில்லை இந்தியா வந்ததும் வைக்க வேண்டும்.
இந்நூல் அச்சடித்தது நமது நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களது அச்சகத்தில்தான். அட்டைப்படம் எனது வடிவமைப்பு எனது விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்தார்கள் இந்த நூல் அச்சடித்ததற்கான பணவிசயத்தில் எனக்கும், நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களுக்கும் மனவருத்தமும் உண்டானது அதாவது அச்சடித்து முடித்தவுடன் பணத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்புகிறேன் என்று செல்லில் செய்தி சொல்லி அனுப்பினேன் அதற்கு, அவர் நேரடியாக கொடுப்பதே சாலச்சிறந்தது என்று சொல்லி விட்டார் இதற்காகவே நான் மீண்டும் மதுரைக்கு அலைய வேண்டி வந்தது அலைந்தால் என்ன ? அதனால் அங்கு இரண்டு வலையுலக மலைகளை சந்தித்தேன். இதோ கீழே மலைகளுடன்...
திரு. பகவான்ஜி மற்றும் திரு. S.P. செந்தில் குமார் அவர்களுடன்...
பிறரின் வலிகளை போக்கும் திரு. வலிப்போக்கன் அவர்களுடன்...
கோவையில் மாமலை முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுடன்...
சென்னையில் புலவர் ஐயா திரு. சா. இராமநுசம் அவர்களுக்கு நான் எழுதிய 'தேவகோட்டை, தேவதை தேவகி' நூலை வழங்கினேன்.
சென்னையில் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நான் எழுதிய 'தேவகோட்டை, தேவதை தேவகி' நூலை வழங்கினேன்.
மதுரையில் புத்தகத் திருவிழா தமுக்கம் திடலில்...
புகைப்படத்தை பெரிதாக காண மையத்தில் சொடுக்குக...
மணமக்களுக்கு தாலி கட்டியதும் மேடையிலேயே முதலில் ஆசி வழங்கியது முனைவர் ஐயா திரு. பழனி கந்தசாமி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலவர் ஐயா எழுதிய 'வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்' நூலை எனக்கு தந்தபோது...
நண்பரின் பெயர்த்தி செல்வி. சாய் கீர்த்திகாவுடன்...
எனது அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் திருமணம்.
கோவையில் எனது அழைப்பை ஏற்று வருகை தந்த முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்.
திரைப்பட நடிகனின் புகைப்படம், ஆச்சாரி என்ற ஜாதிப்பெயர், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி இல்லாத எங்கள் இல்ல திருமண பதாகை.
பதாகையில் மணமக்களுடன் ம. ரித்திஷ் சென்னை.
கடந்த வருட திருமணத்தின் எங்கள் குடும்ப புதுவரவு மு. விஷாலி கோவை.
மாலையில் சொந்த குடும்ப கோயிலைக் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞானி ஸ்ரீபூவுவின் இன்றைய நிலையில் 10 பெயரன்களில் 7 பெயரன்கள்.
சென்னை சிவானந்தா குருகுலம் சென்றேன். இனி எனக்கு கடிதங்கள், தீபாவளி, பொங்கல் வாழ்த்துகள் அனுப்ப வேண்டாம் பணவிரயம் என்பதை சொல்லி வைத்தேன்.
எனக்கு நேரமின்மை காரணமாக நிறுவனர் டாக்டர். திரு. ராஜாராம் அவர்களை சந்திக்க முடியாமல் போனது.
தேவகோட்டை பேருந்து நிலைய புத்தக கடையில் எனது நூல். கண்டதும் மனதில் ஒருநொடி பட்டாம்பூச்சி பறந்தது..
சென்னையில் வில்லங்கத்தார் மன்னிக்கவும் தில்லை அகத்தார் திருமதி. கீதா அவர்களையும் சந்தித்தேன். கோடம்பாக்கத்தில் அவர்களது பழங்கால வீடு அது இன்னும் எனது விழிகளில் ஆச்சர்யத்தோடு நிற்கின்றது காரணம் எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் பழங்கால வீடு போலவே இருக்கின்றது வீட்டைக் கண்டதும் பதிவுக்கு தலைப்பு கிடைத்தது ''கதவுகளுக்கு பஞ்சமில்லை''
செல்பேசியில் மட்டுமே தொடர்பு கொண்ட பதிவர்கள்.
முனைவர். திரு. B. ஜம்புலிங்கம் அவர்கள், திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள், திரு. துளசிதரன் அவர்கள், திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள், கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்கள், கவிஞர். திருமதி. மு. கீதா அவர்கள், திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், திரு. டி. என். முரளிதரன் அவர்கள், திரு. இ. பு. ஞானபிரகாசன் அவர்கள், திரு. தளிர் சுரேஷ் அவர்கள்.
செல்பேசியில் முயன்று இணைப்பில் பிடிக்க முடியாதவர்கள்.
ஐயா திரு. ஜியெம்பி அவர்கள், திரு. ஸ்ரீராம் அவர்கள், திரு. மது அவர்கள், மற்றும் ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள்.
விசாரிக்கப்பட்ட பதிவர்கள்.
கவிஞர் திரு. ரமணி S அவர்கள், திருமதி. R. உமையாள் காயத்ரி அவர்கள், ஐயா திரு. வை.கோ அவர்கள், திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள், அன்பேசிவம் திரு. சக்தி அவர்கள், கவிஞர் திருமதி. சசிகலா மற்றும் நான் இந்தியா வரும் பொழுது அபுதாபி வருவதாக சொன்ன நண்பர் திரு. நெல்லைத் தமிழன் அவர்கள்.
எனது நூலை வாங்கிப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன் இதில் சில பதிவர்கள் இரண்டு, மூன்று வாங்கி கொண்டாலும் நான் தவறாக நினைக்க மாட்டேன். நூல் வாங்க தொடர்பு கொள்ள வேண்டுமெனில்...
திரு. குணசேகரன் - கோவை
செல்பேசி – 80 56 57 51 81
திரு. தமிழ்வாணன் - தேவகோட்டை
செல்பேசி – 85 26 52 52 55
திரு. விவேக் - மதுரை
செல்பேசி – 96 00 68 87 26





















