தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 11, 2017

சிறகொடிந்த பறவைகள்


நண்பர்களே.. மனித வாழ்வுக்கு முக்கியமானது உடல் ஆரோக்கியமா ? இல்லை பணமா ? பணமிருந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்றால் ? அது விதண்டவாதமே...

ஞாயிறு, ஜூலை 09, 2017

சாலை விதிகளை மறப்போம் ?

(தேவகோட்டை தியாகிகள் ரோடு சிக்னலில் நிற்கும் போது எடுத்தது)

சாலை விதிகளை மதிப்போம் விபத்தினை தடுப்போம்

இது எனக்கு நீங்களோ உங்களுக்கு நானோ சொல்லும் வார்த்தை அல்ல

வெள்ளி, ஜூலை 07, 2017

வாழ்க வளமுடன்


பேருந்தில் வாசலில் நிற்பது யார் தெரியுமா ? சரியாக விடை சொல்பவர்களை அடுத்த பதிவில் அறிவிக்கப்படும்

கடந்த முறை ஊருக்கு வந்தபோது திருச்சியிலிருந்து... தேவகோட்டைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன் என்னையும், ஓட்டுனரையும், நடத்துனரையும் சேர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமாரான பயணிகளே இருந்தனர் எனது மூன்று இருக்கைக்கு முன்புறமும் இரண்டு பெண்கள் சுமார் முப்பத்தைந்து வயதிருக்கலாம் இருவருமே திருமணம் ஆனவர்களே... பக்கவாட்டில் இரண்டு இருக்கையில் ஒரு புதிதாக திருமணம் முடிந்த ஜோடிகள் அனைவரது கண்ணும் இந்த ஜோடிகள் மீதுதான் காரணம் அவர்களின் செய்கைகளும், குலாவல்களும், அப்படி இருந்தது நம்மைச்சுற்றியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என்ற சிந்தையே இருவருக்கும் இல்லை நான் எனக்கு முன்புறமிருந்த பெண்கள் பேசிக்கொண்டு வருவதையே கவனித்தேன்.

இந்த மூதேவிங்க இங்கேயே இப்படி இருக்குகளே... வீட்டுக்குள்ளே.. எப்படி ?
புதுசா என்னத்தை எல்லாரையும் போலத்தான்.

இப்படிக் குழையிறானே... பய...
ஒனக்கு ஏத்தா பொறாமை எல்லாரையும் போலத்தான் இவனும் இருக்கான்.

அதுக்காக பொது எடத்துலயா அவ அவனுக்கு மேலே இருக்காளே... வீட்டுக்கு போயி வச்சிக்கிற வேண்டியதுதானே
வீட்டுல மாமியா தொந்தரவு இருக்குமோ... என்னமோ அதான் இங்கேயாவது சந்தோஷமா இருப்போம்னு நினைச்சிட்டா..

புதுசாக் கல்யாணம் ஆனவளை மாமியா என்ன... செய்யப்போறா
நீ வேற ய்யேன் மாமியாளோட சேந்தவளா இருந்தாலும் இருப்பா.

வ்வோன் மாமியா என்ன... செஞ்சுச்சு
ஒனக்குத்தான் தெரியுமே எம்புருசன் நல்லா சிரிக்க சிரிக்க பேசுவாரு, எனக்குத்தான் பட்டுனு சிரிப்பு வந்துருமே சத்தமில்லாம செய்கையிலே சிரிக்க வச்சுப்புட்டு போயிடுவாரு நான் சிரிச்சுடுவேனா நீ லூசானு கேட்கும் கெழட்டு முண்டம்.

அங்கே பாரு.... அவனை இப்படிக் குழையிறானே.... பாவி.
விட்டுத்தொலை எல்லாம் மூணு மாசத்துக்குத்தான் அப்புறம் ச்சீ தள்ளி நில்லு மூதேவினு சொல்லுவான் தெரியாது இந்த ஆம்பளைங்களைப்பத்தி...


சொன்னவுடன் சடக்கென திரும்பிப் பார்க்க நான் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் அந்தப் பெண்களுக்கு என்னைப் பார்க்கவும் வெட்கமாக போய் விட்டது பிறகு அவர்கள் பேசவே இல்லை திருமயம் வந்தது இறங்கும்போது என்னை திரும்பி திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டு போனார்கள் அவர்கள் மறையும்வரை நானும் அவர்களை பார்த்துக் கொண்டே வந்தவன் மீண்டும் அந்த ஜோடிகளை கவனிக்கத் தொடங்கினேன் அவர்களிடம் போய் வீட்டில் போய் வைத்துக் கொண்டால் என்ன என்று கேட்போமா ? என்னுள் மனசாட்சி கேட்டது உனக்கு இந்த மாதிரி வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற பொறாமையா உடன் அந்த எண்ணத்தை கை விட்டேன் காரைக்குடி வந்தது இறங்கி விட்டார்கள் அந்த இளம் ஜோடிகள்.

(அவர்கள் செயலைத்தான் வெறுத்தேனே தவிர அவர்களை அல்ல) 

நான் கேட்காமல் விட்டதற்கு முக்கிய காரணம் எப்பொழுமே என்னிடம் 1991 முதல் ஒரு பழக்கம் உண்டு இது நல்ல பழக்கம் என்றே என் மனதுக்கு படுவதால் இன்றுவரை தொடர்கிறேன் ஆம் சாலையில் போகும்போது யாராவது முகமறியாதவர்களாக இருந்தாலும் சந்தோஷமாக பேசிக்கொண்டு கொண்டு போனால் எனது கை ஆசீர்வதிப்பது போல் எழும் மனதுள் நினைப்பேன் இவர்கள் கடைசிவரை இப்படி சந்தோஷமாக வாழட்டும் என்று இப்படி நான் நினைப்பதால் அவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று நான் சொன்னால் அது எனது முட்டாள்த்தனம் நமக்குத்தான் இப்படியெல்லாம் வாழ்க்கை கிடைக்கவில்லை இவர்களுக்காவது கிடைத்ததே என்ற அற்ப சந்தோஷம் எனக்கு உண்டு எனது ஆத்ம திருப்திக்காக இப்படி நினைக்கின்ற பொழுது நாளை எனது ஆத்மாவுக்கும் திருப்தி ஏற்படும் என்பதை நம்புகின்றேன் வாழட்டும் அந்த இளம் ஜோடிகள் என்றென்றும் நலமுடன் வாழ்க வளமுடன்.

வியாழன், ஜூலை 06, 2017

ஈ கவித நினக்கல்ல - ഈ കവിത നിനക്കല്ല

உனக்காக உருகிய உலகநாதன்.

உன்னை கண்ணே என்றேன் ஆதலால்
என்னை கண்ணீர் வடிக்க விட்டாய்

உன்னை கனியே என்றேன் ஆதலால்
என்னை சனியனை பிடிக்க விட்டாய்

உன்னை முத்தே என்றேன் ஆதலால்
அண்ணனை விட்டு என்னை மொத்த விட்டாய்

உன்னை மணியே என்றேன் ஆதலால்
என்னை பணியை இழக்க விட்டாய்

உன்னை அருகே வா என்றேன் ஆதலால்
என்னை கல்லறையருகே தூக்கி போக விட்டாய்

எனது வார்த்தைகளின் அர்த்தங்களை
புரிந்து கொள்ளாத நீ தமிழச்சியே அல்ல

நீ நலமுடன் வாழ் நீண்ட காலம் ஏனெனில்
நான் மேலேயாவது நிம்மதியாய் வாழ்கிறேன்

ஈ கவித நினக்கல்ல மோளே நின்டே அச்சன் திரு. நாராயண நம்பூதிரிக்கு.
ഈ കവിത നിനക്കല്ല മോളേ നിൻറ അഛഹൻ ശ്രീ. നാരായണ നംബുതിരിക്കു
This Poem not for you dear, it’s for your father Mr.  Narayana Namboothiri

CHIVAS REGAL சிவசம்போ-
அப்போ நீ மலையாளியவா காதலிச்சே ?

சாம்பசிவம்-
யாரையோ... தாக்குறது மாதிரி இருக்கு ஆனா, சரியாத் தெரியலயே.

காணொளி

செவ்வாய், ஜூலை 04, 2017

ராஜா, राजा, రాజా, രാജാ, Raja, راجا

இடம் பேரையூர் பேருந்து நிலையம். 
02.35 am Police catch 3 People

இங்கே வாங்கடா இந்த நேரத்திலே இங்கே என்ன வேலை ?
சினிமாவுக்கு போனோம் ஸார் சிட்டி பஸ்ஸுக்காக நிற்கிறோம்.
உன் பேரென்ன ?
ராஜா
உன் பேரென்ன ?
ராஜா
உன் பேரென்னடா ?
ராஜா
? ? ? ஏட்டு இவங்களை வண்டியிலே ஏத்து.

போலீஸ் ஸ்டேஷன்.

ஏண்டா... பேரைக்கேட்டா ஒன்னு சொன்னாப்பலே ராஜானு சொல்லுவியலோ எந்த நாட்டுக்குடா ராஜா நீங்களெல்லாம் ?
ஸார் யேன்பேரு ராஜாதான் முழுப்பேரு ராஜாராம்.
உங்க அப்பா பேரு ?
ராஜாமணி ஸார்.

நீ வாடா சொல்லு.
எம்பேரு ராஜா உசேன் ஸார்.
உங்க அப்பா பேரு ?
ராஜா முஹம்மது ஸார்.

? ? ? நீ சொல்றா.
ஸார் எம்பேரு அந்தோனி ராஜா
அப்பன் பேரென்ன... ஆரோக்கியராஜாவா ?
ஆமா ஸார்.
சரிதான் படிக்கிறீங்களாடா ?
ஆமா ஸார்.
எந்த காலேஜ் ?
ராஜா தேசிங்கு காலேஜ்.
எல்லாரும் காலேஜ் ஐ.டி. எடுங்கடா,.

மூன்று பேரும் தங்களது ஐடியை எடுத்துக் கொடுக்க இன்ஸ் பார்த்து விட்டு...
யோவ் ஏட்டு இவங்கெளை முதல்ல வெளியே அனுப்பு விட்டா மதப்பிரச்சனையை கிளப்பி காலேஜை இங்கே கொண்டு வந்துருவாங்கே போங்கடா தொலைஞ்சு போங்கடா...