தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 11, 2017

சிறகொடிந்த பறவைகள்


நண்பர்களே.. மனித வாழ்வுக்கு முக்கியமானது உடல் ஆரோக்கியமா ? இல்லை பணமா ? பணமிருந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்றால் ? அது விதண்டவாதமே...

அரபு தேசங்களில் பலரும் தனது மனைவி மக்களுக்காக, குடும்ப சந்தோஷங்களை மறந்து விட்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் அதில் நானும் ஒருவனே... என்பதை வெட்கத்தை விட்டு ஒத்துக்கொள்கிறேன் ஒவ்வொருவருக்கும் வேலையும் சரி ஊதியமும் சரி படித்தவரோ, படிக்காதவரோ, அவரவர் முயற்சிக்குத் தகுந்தாற்போல் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது சில நிறுவனங்களில் 3 வருடத்துக்குப் பிறகு 2 மாதம் விடுமுறை கொடுப்பார்கள். அது எவ்வகை நிறுவனம் என்பதை மற்றொரு பதிவில் காண்போம் ஊரில் இருக்கும் அந்த 2 மாதங்கள் மட்டுமே அவர்களது வாழ்வின் பொன்நாளாக இருக்கும் அதிலும் சிலருக்கு குடும்ப உறவுகள் பிரச்சனையைக் கொடுத்து அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் செய்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.

இதில் சில இடங்களில் மாமியார், மருமகளை சந்தோஷப்பட விடாமல் தடுப்பவர்களும் உண்டு மருமகள் சந்தோஷப் படவில்லை என்றால் ? தனது மகனும் சந்தோஷப் படவில்லை என்றே பொருள், இது சிலருக்கு விளங்குவதில்லை ஆனால் இப்பொழுது அப்படி இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும் காரணம் இப்பொழுது கூட்டுக் குடும்பங்கள் அரிது மேலும் அப்படியிருந்தாலும் இன்று மருமகள் மாமியாருக்கு பயப்படுவதும் இல்லை மாமியார்தான் மருமகளைப் பார்த்து பயப்படுகின்றார் காரணம் என்று மகனிடம் தலையணை மந்திரம் ஓதி நம்மை முதியோர் இல்லதுக்கு அனுப்ப போகிறாளோ ? என்ற பயம் ஏற்கனவே நாமும்தான் ஓதினோம் ஆனால் இப்பொழுது மறந்து விடுவார்கள் காரணம் வயதாகி விட்டதே.

சரி அது கிடக்கட்டும் நமது வழி மாறுகிறதே... வந்த வேலையைச் செய்வோம் அதாவது மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா ? இது கடலுக்கு நடுவில் பெட்ரோல் மற்றும் கேஸ் எடுக்கும் அரசு நிறுவனங்கள் இதில் வேலை செய்பவர்களுக்கு தொடர்ந்து 3 மாதங்கள் உறங்கும், உணவருந்தும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் வேலை பிறகு 2 மாதம் விடுமுறை வீடுவரையிலான பிரயாண சீட்டும் சம்பளமும் கண்டிப்பாக ஊர் சென்றே வரவேண்டும் சம்பளமும் சராசரி வேலையில் கிடைப்பதைவிட மிகவும் கூடுதல் கிடைக்கும் கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது வருடத்தில் 3 முறையாவது மனைவி மக்களை காணலாம் ஊரில் இருப்பது போல்தானே வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் ? இந்த வாழ்க்கை ஆஹா நாமும் உடனே இந்த வேலைக்கு முயற்சித்தாலென்ன ? யாராவது உதவுவார்களா ? என்று மனம் ஏங்குகின்றதா ? நண்பர்களே....

இந்த வேலைக்கு செல்லும் ஊழியர்கள் விமான நிலையத்தில் இறங்கியவுடன் தொடர்ந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லவேண்டும் அங்கிருந்து நேராக மேலேயுள்ள இடத்துக்கு கொண்டு வந்து இறக்கி விடுவார்கள் மீண்டும் தொடர்ந்து 3 மாதங்கள் இந்த இடத்தை விட்டு நகரமுடியாது எப்போது நகரலாம் அடுத்த விடுமுறைக்கு நாட்டுக்கு போகும் பொழுது ஒருநாள் முன்னதாகவே புறப்பட்டு நகருக்குள் வந்து மனைவி, மக்களுக்கு பிடித்தமானவைகளை வாங்கி கொள்ள வரும் பொழுது அழகான கட்டடங்களை, அழகான இடங்களை, அழகான பெண்களை, அழகான பொருட்களை காணலாம் அதுவரை உணவு, உறக்கம், காலைக்கடன்கள், வேலை அனைத்தும் இங்கேயே நடைபாதையில் செல்லும் பொழுது கவனம் கவனம் கவனம் தேவை தவறினால் ? நான் சொல்லவும் வேண்டுமா ? தவறி விழுந்தாலும் உடன் மற்றவர்கள் ஏதாவது ரீதியில் காப்பாற்றலாம் ஒருவேளை இரவு நேரமாக இருந்தால் ? சரி நாம்தான் கவனமுடனே வேலை செய்வோம் பிறகென்ன பிரச்சனை ? பார்ப்போம்.

இங்கு பெட்ரோல் அல்லது கேஸ் இந்த வாசனையிலேயே நாம் சுவாசிக்க வேண்டும் ஒரு மாதிரியாக இருக்கிறது அந்தப்பக்கமாக போய் வருவோம் என்று நினைத்தால் எங்கு போவது ? எப்படிப்போவது ? இருப்பது இதே வளையத்துக்குள் எங்கு போனாலும் மேலதிகாரி பார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள் மிகப்பெரிய அதிகாரிகளாக இருந்தால் (அவர்கள் அதிக பட்சம் அமெரிக்கர்களே) தினம் ஹெலிகாப்டரில் வந்து 1 மணி நேரத்துக்குள் பார்வையிட்டு விட்டு மீண்டும் பறந்து விடுவார்கள் நாம் சிறைப்பறவை அதுவும் சிறகொடிந்த பறவையல்லவா ? வேறு வழி வேலை செய்துதான் ஆகவேண்டும் அதுதானே உறுதிமொழியில் உள்ளது.

பிரச்சனைகள் இவ்வளவுதானா ? இயற்கையின் சீற்றத்தால் கடல் கொந்தளித்து தண்ணீர் உயர்ந்து மேலெழும்பினால் ? கண்டிப்பாக வந்து விடுவார்கள் மீட்பதற்கு நமது உடலை. இவ்வளவுதானா ? காற்று பலமாக வீசி கேபின் சாய்ந்து விட்டால் ? கடலுக்குள்தான் விழும் நாம் எங்கு போவது நீச்சலடித்து வெளியேறி விடலாம் என்கின்றீர்களா ? ஒருவேளை கேபினுக்குள் உறங்கும் நேரம் சம்பவித்தால் ? இவ்வளவுதானா ? காலம் முழுவதும் இதே காற்றை சுவாசித்தால் நமது நுரையீரல் என்னாகும் ? 3 மாதங்களுக்கு ஒரு முறை நிறுவனம் நம்மை மருத்துவ சோதனை செய்து மருந்து, மாத்திரைகள் கொடுக்கிறது உண்மைதான் ஆனால் நாம் மரணகாலத்தை நெருங்குகின்றோம் என்பதை மறைத்து திரையிடுகிறதே.

இது நமக்கு தெரியாதா ? இவர்களின் மனைவியர்களுக்கு தெரியாதா ? பிறகும் இந்த வேலையில் தொடர்ந்தால் ? அர்த்தமென்ன ? மேலும் இந்த வேலையில் கூடுதல் காலம் நம்மை வைத்து இருக்க மாட்டார்கள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் விசா ரத்து செய்து கணக்கு வழக்கு முடித்து நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள் அவர்கள் தொடக்கம் முதல் கூடுதல் சம்பளம் கொடுப்பது இதனால்தான் எல்லாம் முடிந்து சாறு பிழிந்த சக்கையாக நாட்டுக்கு வந்தவுடன் நமது உடல் அதனுடைய வேலையை ஆரம்பிக்கும் மனைவி பாசத்தை பொழிபவராக இல்லாவிட்டால் உடன் வேலைகள் முடிந்து விடும் .

ஒரு வகையில் இதுவும் சரிதான் அல்லது பாசமான மனைவியானால் முதலில் நமது குடும்ப மருத்துவர் தனது கட்டடத்தை கொஞ்சம் விரிவு படுத்துவார் பிறகு அவரின் தயவால் மிகப்பெரிய நகரங்களில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனைகள் Extension என்று சொல்வார்களே அதை செய்து கொண்டேடேடேடேடேடேடேடேடே இருப்பார்கள் ஆமா இவ்வளவுக்கும் பணம் ஏது ? என்பதுதானே உங்களது கேள்வி. இவரு ஹெலிகாப்டரில் பறந்து போய் பெட்ரோல் மற்றும் கேஸ் போன்றவற்றை சுவாசித்து சம்பாரித்தாரே அந்தப் பணம்தான்.

எல்லாம் சரி கடலில்தான் பெட்ரோல் எடுக்கின்றார்களா ? பாலைவன மணல் பரப்பில் எடுக்க முடியாதா ? என்று கேட்கின்றீர்களா ?
அதை மற்றொரு பதிவில் காண்போமே...

குறிப்பு எனது பணிவான வேண்டுகோள் அடிக்கடி நாட்டுக்கு வந்து போகின்றவர்களைப் பார்த்து தயவு செய்து பொறாமைப்படாதீர்கள் அவர்கள் இப்படி வேலை செய்யும் சகோதரர்களாகவும் இருக்கலாம்.

மதிப்பிற்குறிய ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தப்பதிவை எழுதினேன், இன்னும் எழுதுவேன்... – கில்லர்ஜி

சிவாதாமஸ்அலி-

கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதைதான்.

42 கருத்துகள்:


 1. ​படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் வயிற்றுக்காக கயிற்றில் ஆடுவது என்று பாடுவார்கள். மரணக்கயிறு அருகிலேயே காத்திருக்கிறது என்று தெரிந்தும் இரு வழியின்றி வேலை பார்ப்பவர்கள். பாவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம் ஜி உண்மைதான் என்ன செய்வது ? வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. உண்மையிலேயே வேதனையான வாழ்க்கைதான் நண்பரே
  இவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து,வீட்டிற்குத் திரும்பும்போது, வீட்டில் நிம்மதி இல்லை என்றால், அவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே மனம கலங்குகிறது

  பதிலளிநீக்கு
 3. இதையெல்லாம் யாருங்க உணர்ந்து பார்க்கிறது?..

  அரபிக்குத் தேவை வற்றாத ஊற்று.. பளபளக்கும் டாலர்..
  அப்பாவுக்குத் தேவை பக்கத்து பிளாட்டை வாங்குறதுக்கு பணம்..
  அம்மாவுக்குத் தேவை மக வீட்டுக்குக் கொடுக்க காசு மாலை..

  சொந்தங்களுக்குத் தேவை கோடாலி தைலம் கோழிக்கறி குழம்பு..
  கூட்டாளிகளுக்குத் தேவை குடித்து விட்டு குப்புறக் கிடக்க பாட்டில்.

  புள்ளைகுட்டிகளுக்குத் தேவை சைனாக்காரன் பொம்மை..
  அன்பான மனைவிக்குத் தேவை ....... ஆதரவான அரவணைப்பு..

  ஆனால்,
  காலம் முழுதும் கஷ்டப்படும் சிறைப் பறவைக்குத் தேவை!?..

  யாருக்கும் தெரியாது!..

  கையில் மிச்சப்படுவது கண்ணீர்த் துளிகளும் திரும்பிச் செல்வதற்கான பயணச்சீட்டும்!..

  பதிலளிநீக்கு
 4. இந்தத் தொழிலின் அவலம் குறித்து இப்போதுதான் தெரிந்துகொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எனது சகலை பல வருடங்கள் கழித்து, இப்போது தான் இங்கு வாழ்வை (வாழ்வையே) தொடங்கி உள்ளார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இனிமேலாவது வாழட்டும் சந்தோஷம்

   நீக்கு
 6. முன்பு எட்க்கு மடக்கு என்ற வலைத்தளம் வைத்து இருந்த ஆர். கோபி, கருவேலம் மரம் என்று நினைக்கிறேன் வலைத்தளம் வைத்து இருந்த ராஜாராம் அவர்கள் எல்லாம் அரபு நாட்டில் வேலை பார்ப்பவர்களின் கஷ்டங்க்களை கட்டுரை, கவிதையில் சொல்லி இருபார்கள். படித்து வேதனை அடைந்து இருக்கிறேன்.

  ராஜாராம் அவர்கள் குடும்பத்தை பிரிந்து வாடுவதை கவிதை ஆக்கி இருப்பார்.

  அது போல உங்கள் பதிவின் தலைப்பு, மற்றும் பகிர்ந்து கொண்ட செய்திகள் எல்லாம் மனதை வருந்த செய்கிறது.

  விடுமுறையில் வருபவர்கள் நிலமை மிகவும் மோசம், ஒரு மாத விடுமுறையில் உறவுகள், சொந்தங்களை திருப்தி செய்வதில் காலம் ஒடி விடும் விடுமுறை முடிந்து விடும் மீண்டும் பயணம்.

  பணி ஓய்வு பெற்று வந்தால் நோய் பிடித்துக் கொள்வதை கேட்டால் இன்னும் மனம் கனத்து போகிறது.

  நீங்கள் பகிர்ந்த படம் வேலைப்பார்பவர்களின் சிறை போல் தோன்றுகிறது.  பதிலளிநீக்கு
 7. வருகைப் பதிவேட்டில் (த ம) பதிந்தாச்சு....வரோம். மீண்டும்

  பதிலளிநீக்கு
 8. வேதனை தரும் வாழ்க்கை..அறிவோம் ஜி.இப்படியான வேலையில் இருப்பவர்களை......பணம் பிணமாக்கும் இது போன்ற தொழில் அவசியமா என்று குடும்வத்தினர் பேசி முடிவு எடுத்து...மம்ம்ம்ம் இதெல்லாம் நடக்குமா என்ன....பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்...வேறு என்ன சொல்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கணவனும், மனைவியும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும் ஆனால் பெரும்பாலும் அப்படி இல்லையே...

   நீக்கு
 9. படிக்க படிக்க மனம் வருந்துகிறது......இந்த சிறகுடைந்த பறவைகளாக வாழும் நம் சொந்தங்களை எண்ணி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ என்ன செய்வது ? வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. எல்லாவற்றுக்கும் பணம்தான் தேவைப்படுகிறது... குறிப்பாக மனிதன் செத்தப்பிறகும் அவரை அடக்கம் செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது.. பணம் என்று ஒன்று இல்லாமல் பெரும்பாலன மக்கள் கஷ்டஜிவிகளாகவே வாழ்ந்து மடிகிறார்கள்.ஒரு வித்தியாசம் பணம் இருப்பவர் செலவழித்து மடிவார். பணம் இல்லாதவர் செலவழிக்க மடியாமல் மடிவார். இதுதான் சாவிலும் மனிதனுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வு......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான கருத்துரை சொன்னீர்கள் நண்பரே

   நீக்கு
 11. த.ம போட்டாச்சு.

  ஒவ்வொரு வேலையும் அதற்கேற்ற பணத்தையும் குணத்தையும் தரும். அது எங்க வேலைபார்த்தாலும். நம்ம ஊர்ல (சென்னை, பெங்களூர்ல) கணிணி சம்பந்தமான வேலைனா, பொதுவா பணத்தை அள்றாங்க என்ற எண்ணம் உண்டு. அது ஒரு வகையில் உண்மைதான். ஆனால், குடும்பத்துடன் 6 மணிக்கு வீட்டுல இருந்தோமா, சனி, ஞாயிறு குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தோமா என்று இருக்கமுடியாது. வேலை, வேலை என்று பிழிந்துவிடுவார்கள். ஓரளவு வயதானபின், அதாவது 40+, வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிடும். இரவு வேலை பார்ப்பவர்களும் உண்டு. அவங்க உடல் நலமும் மோசம்தான். நம்ம ஊர்லயும் கழிவு நீர் வாய்க்கால்கள் சம்பந்தமாக வேலைபார்ப்பவர்களும் அதிகம், அவர்களுக்கும் உடம்பு சம்பந்தமான வியாதிகளும் அதிகம். நம்ம ஊர்ல பொல்யூஷன்ல சாதாரண மக்களோட உடம்பு கெடாமல் எப்படி இருக்கும்? அதுனால, பிரச்சனை எங்கேயும்தான் இருக்கு.

  இங்கு, அரபு நாடுகளில் மூன்று வகையான வேலைகள் உண்டு. ஓரளவு நல்ல சம்பாத்தியம், குடும்பத்தோடு தங்குவதற்கான சௌகரியம், கார் போன்றவையோடு வாழ்பவர்கள் 10-20%பேர் இருப்பார்கள். (இவர்களில் பெரும்பான்மையினருடைய சம்பளத்தை மற்றொரு அரபியுடைய சம்பளத்தோடோ, அல்லது மேற்கத்திய நாட்டினருடைய சம்பளத்தோடோ ஒப்பிடமுடியாது, அவர்கள் பல மடங்கு அதிக சம்பளம், அதே வேலைக்கு வாங்குவார்கள்). இரண்டாவது மத்திய தர வர்க்கம். இவர்கள் ஓரளவு சௌகரியமாக, இந்தியாவில் இருப்பதைவிட சந்தோஷமாகவும், அங்குள்ள பிரச்சனைகள் எதுவும், அதாவது தண்ணீர், கரண்ட், நல்ல உணவு போன்ற வாழ்க்கைக்கு முக்கியமான எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார்கள். இவர்கள் ஒரு 35-50% பேர் உண்டு. ரொம்ப சாதாரண வேலையிலும், கைக்கும் வாய்க்கும் எட்டும்படியாகவும், கொஞ்சப் பணம் தான் வாங்கிய கடனுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அனுப்பும் நிலையிலும், சேர்த்தோம் என்று சொல்லத்தக்கதான சேமிப்பு அவ்வளவு இல்லாமலும் நிறையபேர், அதாவது 30%பேர் இருப்பார்கள். இதில் கொஞ்சம் சாமர்த்தியம் உள்ளவர்கள், காசை வீணாக்காமல் சேர்ப்பார்கள். இதிலும் 10%பேர், ஊரில் வேலை கிடைக்கும் திறமை இல்லாதவர்களாக இருப்பார்கள், ரொம்ப கஷ்டப்படுவார்கள். இவர்கள் என்ன என்ன வேலை பார்க்கிறார்கள், அதன் சம்பளம் என்ன என்றெல்லாம் ஓரளவு அறிவேன்.

  நம்ம ஊர்ல, ஃப்ளைட்ல ஏறி ஃபாரின் போறவங்க எல்லாருமே, இங்க தெருவுல இருக்கற தங்கத்தை தினமும் வெட்டி, பையில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள் (சாதாரண ஜனம், மற்றும் உறவினர்கள்). அதுக்கேத்தபடி, இந்த 30% பணத்தின்படி கீழ் நிலையில் இருப்பவர்கள், ஊருக்கு வரும்போது நல்ல நல்ல டிரெஸ் போட்டுக்கொண்டு, ஷூவுடன், ஒரு மைனர் செயினுடன் வருவார்கள் (பார்வைக்கு). இங்கு கஷ்டப்படுவது அவனுக்கு மட்டும்தான் தெரியும். தற்பெருமைக்காக, ஊருக்கு வரும்போது சில பல பாட்டில்களையும், சென்டையும் எடுத்துக்கொண்டு பெருமையடிப்பதன்மூலமாக, உறவினர்கள், இவன் பெரிய காசுக்காரன் என்று நினைத்துக்கொள்வார்கள். அந்த விடுமுறைக்கப்பறம் திரும்பவர வாய்ப்பில்லாமல் போய்விட்டால், அவர்களது கதை கந்தல்தான். இந்த வர்கத்தினரும், பெரும்பான்மை மத்தியதர வர்கத்தினரும், தம் குடும்பத்தை ஊரில்தான் விட்டுவிட்டு இங்கே தனியாக இருப்பார்கள்.

  அப்போ வெளி'நாட்டில் வேலைக்குப் போகிறவர்கள் சௌகரியமாக இல்லையா? உங்களுக்கு இருக்கும் மின்சாரம், தண்ணீர், சமையல் GAS, Accessories, சுத்தமான உணவு போன்ற அத்தியாவசியப் பிரச்சனைகள் இவர்களுக்குக் கிடையவே கிடையாது.

  கில்லர்ஜி எழுதுவது, வெளி நாட்டில் வேலைபார்ப்பவர்கள் மீதான நம்முடைய பார்வையை மாற்ற உதவும்.

  கில்லர்ஜி எழுதுவதற்கு முன்னால் நான் எழுதக்கூடாது. அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நிறைய விடயங்கள் சொன்னீர்கள் இதில் நல்ல வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு

   நான் ஆரம்ப காலத்தில் நாய் பட்டபாடு பிறகு எனது முயற்சியால் ராஜவாழ்க்கைதான் வாழ்ந்தேன்

   ஊருக்கு வரும் சில சில்லுண்டிகள் மைனர் செயின் போட்டுக்கொண்டு பந்தா பண்ணுவார்கள் கடைசியில் விடுமுறை முடிந்து அதை அடகு வைத்துதான் டிக்கெட் எடுப்பார்கள்

   நான் கடைசிவரை இந்த வெட்டி பந்தா செய்யவே இல்லை
   பலதரப்பட்ட வாழ்க்கை இன்னும் இருக்கிறதே எழுதுவேன் நன்றி நண்பரே

   நீக்கு
 12. அரபு வேலை தேவைதானா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கடைசி நேரத்தில் நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்தேன் ஐயா

   நீக்கு
 13. சிவதமாஸ்அலி சொல்வது போல் கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதை தான் இது போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு.
  திரைகடலோடி திரவியம் இவ்வாறு தேடவேண்டியதில்லை.

  பதிலளிநீக்கு
 14. வேதனையான வாழ்கை

  பதிலளிநீக்கு
 15. வேதனை தான். என்றாலும் உண்மை நிலைமை இங்கே உள்ளவர்கள் புரிந்து கொள்வதில்லை. பணம் ஒன்றே குறியாக மீண்டும் மீண்டும் அங்கேயே போகச் சொல்லி வற்புறுத்தும் உறவினர்களும் உண்டு. அவனுக்கென்ன! சம்பாதிக்கிறான் என்றும் பேசுவார்கள். இதைப்படிக்கையில் கண்ணீரே வருகிறது! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்ன செய்வது ?

   நீக்கு
 16. உங்களுடைய பதிவுகள் மூலமாக வெளிநாட்டில் நம்மவர்களின் நிலையை நன்கு உணர முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 17. இது முதலாளிகளின் உலகம் ,எங்கு ,எந்த வேலைக்குப் போனாலும் சிரமம்தான் ! பிழிந்து எடுத்து விடுவார்கள் , படித்தவர்கள் பாடு பரவாயில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 18. கடைநிலை ஊழியர்களின் பாடு பெரும்பாடு. அது எந்த ஊராய் இருந்தாலும் இதே நிலைதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இது கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை அல்ல! அவர்களைப்பற்றியும் பிறகு எழுதுவேன்.

   இதுவும் ஓரளவு படித்தவர்களின் வேலைதான் இருப்பினும் இங்கும் கழிவறை கழுவும் கடைநிலை ஊழியர்களும் உண்டு.

   நீக்கு
 19. நான் துபாய் சென்றிருந்தபோது அங்கு பணியில் இருக்கும் நம்மவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே இங்கிருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது புரிந்தது சில நாட்கள் அங்கிருந்து பார்த்ததை நான் எழுதுவதை விட அங்கே யே இருந்த கில்லர் ஜி எழுதுவதே சரியாக இருக்கும் என்று தோன்றியதால் கில்லர் ஜீயிடம் வேண்டினேன் நன்றி கில்லர் ஜி துபாயிலும் ஷார்ஜாவிலும் பணியில் இருக்கும் தோட்ட வேலை மற்றும் அடிமட்டத்தொழிலாளிகளையும் பார்த்திருக்கிறேன் வசதிப்பட்டபோது கில்லர்ஜி அவர்கள் பற்றியும் எழுதுவார் என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நிச்சயமாக அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையைப்பற்றி எழுதுவேன்.

   நீக்கு
 20. சிலரின் பாடுகள் கானல் நீராய்த் தெரியும் இந்தப் புறம் இருப்பவர்களுக்கு...நல்லதோர் பகிர்வு...!

  பதிலளிநீக்கு