தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 07, 2017

வாழ்க வளமுடன்


பேருந்தில் வாசலில் நிற்பது யார் தெரியுமா ? சரியாக விடை சொல்பவர்களை அடுத்த பதிவில் அறிவிக்கப்படும்

கடந்த முறை ஊருக்கு வந்தபோது திருச்சியிலிருந்து... தேவகோட்டைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன் என்னையும், ஓட்டுனரையும், நடத்துனரையும் சேர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமாரான பயணிகளே இருந்தனர் எனது மூன்று இருக்கைக்கு முன்புறமும் இரண்டு பெண்கள் சுமார் முப்பத்தைந்து வயதிருக்கலாம் இருவருமே திருமணம் ஆனவர்களே... பக்கவாட்டில் இரண்டு இருக்கையில் ஒரு புதிதாக திருமணம் முடிந்த ஜோடிகள் அனைவரது கண்ணும் இந்த ஜோடிகள் மீதுதான் காரணம் அவர்களின் செய்கைகளும், குலாவல்களும், அப்படி இருந்தது நம்மைச்சுற்றியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என்ற சிந்தையே இருவருக்கும் இல்லை நான் எனக்கு முன்புறமிருந்த பெண்கள் பேசிக்கொண்டு வருவதையே கவனித்தேன்.

இந்த மூதேவிங்க இங்கேயே இப்படி இருக்குகளே... வீட்டுக்குள்ளே.. எப்படி ?
புதுசா என்னத்தை எல்லாரையும் போலத்தான்.

இப்படிக் குழையிறானே... பய...
ஒனக்கு ஏத்தா பொறாமை எல்லாரையும் போலத்தான் இவனும் இருக்கான்.

அதுக்காக பொது எடத்துலயா அவ அவனுக்கு மேலே இருக்காளே... வீட்டுக்கு போயி வச்சிக்கிற வேண்டியதுதானே
வீட்டுல மாமியா தொந்தரவு இருக்குமோ... என்னமோ அதான் இங்கேயாவது சந்தோஷமா இருப்போம்னு நினைச்சிட்டா..

புதுசாக் கல்யாணம் ஆனவளை மாமியா என்ன... செய்யப்போறா
நீ வேற ய்யேன் மாமியாளோட சேந்தவளா இருந்தாலும் இருப்பா.

வ்வோன் மாமியா என்ன... செஞ்சுச்சு
ஒனக்குத்தான் தெரியுமே எம்புருசன் நல்லா சிரிக்க சிரிக்க பேசுவாரு, எனக்குத்தான் பட்டுனு சிரிப்பு வந்துருமே சத்தமில்லாம செய்கையிலே சிரிக்க வச்சுப்புட்டு போயிடுவாரு நான் சிரிச்சுடுவேனா நீ லூசானு கேட்கும் கெழட்டு முண்டம்.

அங்கே பாரு.... அவனை இப்படிக் குழையிறானே.... பாவி.
விட்டுத்தொலை எல்லாம் மூணு மாசத்துக்குத்தான் அப்புறம் ச்சீ தள்ளி நில்லு மூதேவினு சொல்லுவான் தெரியாது இந்த ஆம்பளைங்களைப்பத்தி...


சொன்னவுடன் சடக்கென திரும்பிப் பார்க்க நான் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் அந்தப் பெண்களுக்கு என்னைப் பார்க்கவும் வெட்கமாக போய் விட்டது பிறகு அவர்கள் பேசவே இல்லை திருமயம் வந்தது இறங்கும்போது என்னை திரும்பி திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டு போனார்கள் அவர்கள் மறையும்வரை நானும் அவர்களை பார்த்துக் கொண்டே வந்தவன் மீண்டும் அந்த ஜோடிகளை கவனிக்கத் தொடங்கினேன் அவர்களிடம் போய் வீட்டில் போய் வைத்துக் கொண்டால் என்ன என்று கேட்போமா ? என்னுள் மனசாட்சி கேட்டது உனக்கு இந்த மாதிரி வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற பொறாமையா உடன் அந்த எண்ணத்தை கை விட்டேன் காரைக்குடி வந்தது இறங்கி விட்டார்கள் அந்த இளம் ஜோடிகள்.

(அவர்கள் செயலைத்தான் வெறுத்தேனே தவிர அவர்களை அல்ல) 

நான் கேட்காமல் விட்டதற்கு முக்கிய காரணம் எப்பொழுமே என்னிடம் 1991 முதல் ஒரு பழக்கம் உண்டு இது நல்ல பழக்கம் என்றே என் மனதுக்கு படுவதால் இன்றுவரை தொடர்கிறேன் ஆம் சாலையில் போகும்போது யாராவது முகமறியாதவர்களாக இருந்தாலும் சந்தோஷமாக பேசிக்கொண்டு கொண்டு போனால் எனது கை ஆசீர்வதிப்பது போல் எழும் மனதுள் நினைப்பேன் இவர்கள் கடைசிவரை இப்படி சந்தோஷமாக வாழட்டும் என்று இப்படி நான் நினைப்பதால் அவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று நான் சொன்னால் அது எனது முட்டாள்த்தனம் நமக்குத்தான் இப்படியெல்லாம் வாழ்க்கை கிடைக்கவில்லை இவர்களுக்காவது கிடைத்ததே என்ற அற்ப சந்தோஷம் எனக்கு உண்டு எனது ஆத்ம திருப்திக்காக இப்படி நினைக்கின்ற பொழுது நாளை எனது ஆத்மாவுக்கும் திருப்தி ஏற்படும் என்பதை நம்புகின்றேன் வாழட்டும் அந்த இளம் ஜோடிகள் என்றென்றும் நலமுடன் வாழ்க வளமுடன்.

56 கருத்துகள்:

 1. உங்கள் எண்ணம் அற்ப சந்தோசம் இல்லை ஜி... அற்புத சந்தோசம்...

  பதிலளிநீக்கு
 2. சகோதரர் தனபாலன் சொன்னது போல இது அற்ப சந்தோஷம் இல்லை. அடுத்தவர் மகிழ்ச்சியைக்கண்டு மகிழும் அற்புதமான குணம் இது! ஆயிரத்தில் ஒருத்தருக்குத்தான் இந்த மாதிரி மனம் அமையும்! வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 3. வாழட்டும் நீங்களும் நலமுடன்! இந்த எண்ணத்திற்காகவே...

  பதிலளிநீக்கு
 4. மகிழ்ச்சி.....

  கண்டக்டர் தான் பேருந்து வாசலில் நிற்கிறார்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி வருகை கண்டு மகிழ்ச்சி
   விடை அடுத்த பதிவில்.

   நீக்கு
 5. யான் பெற்ற இன்பம்
  இவ்வையம் பெறட்டும்
  என்பதனினும்

  யான் பெறாத இன்பத்தையும்
  இவ்வையம் பெறட்டும் என
  நினைப்பது எத்தனை உயர்வானது

  நல்ல மனம் வாழ்க
  நாடு போற்றவாழ்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் கவித்துவமான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 6. பல இடங்களிலும் எழுத்துக்கள் இடம் மாறி வருகின்றனவே! எனக்கு மட்டுமா?

  "நான் கேட்காமல்" என்று ஆரம்பிக்கும் பத்தி மட்டும் ஒழுங்காக இருக்கிறது. அதுவரை உள்ளவை எழுத்துக்கள் இடம் மாறி வந்துள்ளன. என்றாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சரி செய்து விட்டேன் என்னமோ சரியாக வரமாட்டுது வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருக்கப்போகிறேன் இனியாவது சரியாகும் என்று நம்பி.

   நீக்கு
 7. புதுசாக் கல்யாணம் ஆனவங்க எப்படி வேணா இருப்பாங்க! நாம் அவங்களை வாழ்த்துவோம், சந்தோஷம் நீடிக்கட்டும் என! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அவர்களை வாழ்த்தினால் நாளை நமது சந்ததிகளை பிறர் வாழ்த்தக்கூடும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. வாழ்த்துவோம் அந்த ஜோடிகளை! கில்லர் ஜி!

  கீதா: நானும் மிகவும் ரசிப்பேன் இப்படியான ஜோடிகளைக் கண்டால். ஆனால் அவர்கள் செயல்கள் எல்லைக்குள் இருக்க வேண்டும். பொது இடம் என்றும் பாராமல் அத்து மீறி நடப்பவர்களைக் கண்டால் கண்டு கொள்ளாமல்... ஆனால் ஒரு சில ஜோடிகள் குழந்தைகள் பிறந்த பிறகும் குழந்தைகளுடன் வரும் போதும் கண்களையும், மனதையும் உறுத்தாத, கூச வைக்காத அவர்களது பேச்சு, அன்யோன்யம் உடல் மொழி இவற்றைப் பார்த்து ரசித்து மனதிற்குள் வாழ்த்துவேன் ஜி! அவர்கள் பல்லாண்டு இதே சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்று...

  உங்கள் எண்ணம் நல்ல எண்ணமே!! சிறந்த எண்ணமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் எனக்கு வெகு காலமாக அதாவது 1991-ல் இருந்து இந்த பழக்கம் உண்டு நல்லதை நினைத்தால் நன்மை நடக்கும்.

   நீக்கு
 9. உங்கள் ஓட்டுப் பெட்டி இதுவரை தெரியாமல் இருந்தத்ல்லை. ஆனால் இப்போது மொபைலிலும் தெரியவில்லை, இங்கும் தெரியவில்லை..ஜி ...அதனால் ஓட்டு போட முடியவில்லை. லிங்க் கொடுங்களேன் ஜி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நீங்க நல்ல நாளிலேயே தில்லை நாயகம்.

   அது கிடக்கட்டும் விடுங்க அது இருப்பதால் பல பதிவர்களுக்குள் மன சஞ்சலங்கள் இல்லாமல் போனால் பலரும் வந்து கருத்துரை இடுவார்கள் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு

 10. ​உங்கள் நல்ல மனம் வாழ்க. தவறாக எழுதியிருந்தாலும் படிக்கும்போது வார்த்தைகளை சரியாய் அமைத்துக்கொண்டு நம் மூளை அதைச் சரியாகப் புரிந்து கொள்ளுமாம். அப்படிதான் உங்கள் பதிவில் ஜுனூன் தமிழ் போல வார்த்தைகள் இருந்தாலும் புரிந்துகொள்ள முடிந்தது. டைப் செய்வதை இடமிருந்து வலம் என்று மாற்றிப் பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. எனது கணினியின் தவறால் தாங்கள் ஜூனூன் தமிழ் படிக்கின்றீர்கள் நன்றி

   நீக்கு
 11. பேருந்தில் நிற்பது நடத்துனர்தானே? வெங்கட் பதிலை நானும் வழி(மொழி)கிறேன்! ராதா ரவி தம்பி ஒருவர் இருப்பரே... அவர் ஜாடையில் இருக்கிறார்!

  பதிலளிநீக்கு
 12. 'இன்று போல் என்றும் வாழ்க !' என்று மனதோடு நினைப்பதும் அரியதுதான் ஜி ! வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பிரசாத் ஜி வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 13. ரசித்த பதிவுதான். ரொம்ப இயற்கையா இருந்தது. எங்கம்மா அடிக்கடி சொல்லுவார்கள் "சிரிப்பும் புளிப்பும் சில காலம்"னு. எப்படியும் வாழ்க்கை பொதுவா கஷ்டங்கள் நிறைந்ததுதான்.

  டிரைவருக்குக் காத்திருக்கும் கண்டக்டர். நீங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை நண்பரே பொதுவாக மனிதர்கள் பெரும்பாலும் கவலைகளோடுதான் வாழ்கின்றார்கள் இவைகளைக் குறித்த எனது பார்வையில் நீண்ட கருத்து எம்மிடம் இருக்கின்றது அதை பதிவாக எழுத வேண்டும்.

   விடை அடுத்த பதிவில்

   நீக்கு
 14. நடத்துனர் எங்க ஊர்க்காரர்! கவனிச்சிப் பாருங்க, அது நாமக்கல் பேருந்து!!
  பேருந்து நிகழ்ச்சி மறக்க இயலாதது.
  புத்தம்புது ஜோடி வாழ்க. நல்ல மனம் கொண்ட கில்லர்ஜியும் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணமக்களையும் வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே

   விடை அடுத்த பதிவில்

   நீக்கு
 15. அந்தவயதில் சுற்றுப்புற நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரிவதில்லையோ அவர்களுக்கு இது புரியும்போது என்னை மாதி யாகி விடுவார்கள் நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க. உங்களைச் சொல்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஆம் அனுபவமே வாழ்க்கையின் உண்மையை விளக்குகின்றது வாழ்த்தியமைக்கு நன்றி

   நீக்கு
 16. உலகம் முன்னேறிவிட்டது கில்லர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா முன்னேறுவதாக நினைத்துக் கொண்டு பின்னோக்கி போகிறதோ... என்ற ஐயம் வருகிறது ஐயா வருகைக்கு நன்றி.

   நீக்கு
 17. நல்ல மனம் வாழ்க!..பதிவர்கள் போற்ற வாழ்க!!நண்பரே!!!!

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துக்கள் தேவகோட்டைஜி வாழ்க வளமுடன்.
  நல்லமனம் உடையவர் வாழ்த்தினால் பலிக்கும்.
  உங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சியாக வாழட்டும் அந்த தம்பதியினர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்தும் அந்த தம்பதிகளுக்கு பபலிக்கட்டும சகோ

   நீக்கு
 19. பேருந்து படியில் நிறபவர் நடத்துனர் அல்ல , ஆனால் யார் என்று தெரியவில்லை.
  சீருடை, கையில் தோல்பை, சட்டையில் பெயர் எல்லாம் இருக்கிறது ஆனால் வேறு பேருந்தின் நடத்துனரோ?

  பதிலளிநீக்கு
 20. தமிழ்மண வாக்கு அளித்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 21. உங்களது பெருமனது போற்றத்தக்கது.

  பதிலளிநீக்கு
 22. தங்களின் நல்ல மனதிற்கு ஒரு ‘ஷொட்டு’!

  எங்களை ஏமாற்ற அந்த பேருந்தின் ஓட்டுனரையே நிற்கச் சொல்லி பத்மா எடுத்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி
   விடை அடுத்த பதிவில்

   நீக்கு
 23. அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது வியக்கத்தக்கது. இதே போல் நீங்கள் எப்போதும் இருக்க வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

   நீக்கு
 24. ஒரு முறை ஹோட்டல் ஒன்றில் ஒரு இளம் தம்பதியர் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த பொழுது நானும் உங்களைப்போலவே இவர்கள் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

  இந்த விஷயத்தை கருவாகக் கொண்டு ரிஷபன் ஒரு அருமையான சிறுகதை எழுதியிருக்கிரார்.

  பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருப்பது நடத்துனர்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறருக்கு உதவி செய்வதுதான் தொண்டு என்பது அல்ல!மனதளவில் நல்லதை நினைப்பதும் தொண்டுதான் சகோ உங்களின் உயர்வான எண்ணங்களுக்கு எமது சல்யூட்.

   நாம் எழுதும் எல்லா விடயங்களுக்கும் நமது அனுபவங்களே "கரு" இது திரு. ரிஷபன் ஐயா அவர்களுக்கும் வாய்த்து இருக்கலாம்.

   விடை அடுத்த பதிவில்

   நீக்கு
 25. ஓசியில் படம் பார்த்து விட்டு ,ஆசீர்வாதம் வேற :)

  நான் அரசு போக்குவரத்தில் பணி புரிந்தாலும் நிச்சயம் அது நானில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. உங்கள் கோணம் வேறு மாதிரி போகுதே ஜி

   விடை அடுத்த பதிவில்

   நீக்கு
 26. கூந்தல் இருக்கின்றது .. கொண்டை முடிகின்றார்கள்!..

  ஜீ!..
  இளங்கிளிகள் -
  எங்கிருந்தாலும் இன்புற்று வாழட்டும்..
  எவர்க்கும் இடைஞ்சல் இன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவர்க்கும் இடைஞ்சல் இன்றி... உண்மையான வார்த்தை ஜி

   நீக்கு
 27. சொந்தமாக மகிழும்
  அந்த இணையர்களை
  வாழ்த்துவோம்...
  ஆனால்,
  பேரூந்துகளில் சொந்தமின்றி
  சொறிவோரை விரட்டணும்

  பதிலளிநீக்கு