1999 அபுதாபி நான் அன்று அரபி பேசிப்பழகிய காலம் பால் வடியும் குழந்தை முகமாக இருந்ததால் அலுவலக பையனாக வேலை கிடைத்து செய்து கொண்டு இருந்தேன். அரபு எழுதப்படிக்க தெரியாது தெரிந்து இருந்தால்... இந்தப்பதிவும் வந்து இருக்காது. காலையில் காஃபி, டீ, காவா, துர்கீஷ் என்று அரேபியர்களுக்கு போட்டுக் கொடுக்க வேண்டும்.