மதம் சொன்னதாம் மறந்து விடு
மனிதா
மனிதம் உண்டே மறக்காதே மனிதா
மெய்ஞானமாம், விஞ்ஞானமாம்
மனிதா
உன் ஞானம் பேச புறப்படுவாய்
மனிதா
ஏசுவோரும், போற்றுவோரும்
மனிதா
ஏதும் செவியில் ஏற்றிடாதே
மனிதா
இனமாம், ஜாதியாம்
கணக்கில்லை மனிதா
அன்பாய், அறமாய் கடந்து
வா மனிதா
துன்பம் வரும் போதெல்லாம்
மனிதா
துவண்டு போய் விடாதே மனிதா
துணிவே துணை என்று மனிதா
துணிச்சலுடன் எதிர் கொள் மனிதா
லட்சங்களை இழந்தாலும் மனிதா
லட்சியங்களை மறக்காதே
மனிதா
கோடிகளை துறந்தாலும்
மனிதா
கொள்கைகளை கடைப்பிடி
மனிதா
நாடு விட்டு பறந்தாலும்
மனிதா
நாகரீகம் மறந்திடாதே மனிதா
கண்டம் விட்டு கடந்தாலும்
மனிதா
கலாச்சாரம் மறவாதே மனிதா
திரைகடல் ஓடினாலும் மனிதா
திரும்பி வந்து விடு
மனிதா
இங்கிலாந்து போனாலும்
மனிதா
இந்தியனாய் வாழ்ந்து வா
மனிதா
தரணியெங்கும் போனாலும் மனிதா
தமிழனாய் நிமிர்ந்து நில்
மனிதா
தலைவனாக ஆனாலும் மனிதா
தலைக்கணம் கொள்ளாதே மனிதா
கற்றவைகளை களையாதே மனிதா
உற்றாரின் உறவு வேண்டும்
மனிதா
பெற்றோர்களை மறவாதே மனிதா
பெற்ற செல்வமும்
பறந்திடுமே மனிதா
பணம் மட்டும் வாழ்க்கையில்லை
மனிதா
பந்த பாசங்களும் வேண்டியதே
மனிதா
இன்பம் மட்டும் இணைந்து
வராது மனிதா
இணைந்தே துன்பமும் கூட வரும்
மனிதா
புதுக்கோட்டை பதிவர்
திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக
எழுதப்பட்டது (வகை 4) கவிதை
பரிசு என அறிவித்து
இருந்தார்கள் எனவே ‘’புதுக்கவிதை’’ என்ற வகையில் நான்
எழுதியிருக்கும் இந்தக் கவிதையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள்
முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக
வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டையான்
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി కిల్లర్ జి Killergee كـــيللرجــــي








