சிலநேரங்களில் சிலமனிதர்கள் புலம்புவதை கேட்டிருப்பீர்கள்,
கண்டிருப்பீர்கள், நான் தினம் உன்னை கும்பிடுறேனே, என்னையேன் சோதிக்கிறாய் ? உன் வாசலுக்கு
வருஷா வருஷம் வர்றேனே, எனக்கு நிம்மதியை தரமாட்டாயா ?எனதெய்வத்திடம்
முறையிடுவார்கள், இதில் எனக்குத் தெரிந்தவர்கள் வணங்கும்போது மட்டும் நான் அவர்களை
கவனித்து அவர்களின் வாழ்க்கை முறையை கணக்கிடுவேன் இதில் பெரும்பாலும் நடைமுறை வாழ்வில்
கெட்ட செயல்களும், அயோக்கியத்தனமும், அநியாயமாக வட்டி வாங்கியவர்களும்
தாய்-தந்தையை அனாதை விடுதியில் சேர்த்தவர்களும்தான்
இருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்த ஒருவர் மனஸ்தாபத்தின் காரணமாய் கோயிலின்
வாசலில் தெய்வத்திடம் கோரிக்கை வைக்கிறார், இந்த வருஷத்துக்குள்ளே அவனைத் தூக்கிடு
இல்லேனே உன் வாசலுக்கு நான் வர்றது இதுதான் கடைசி, என்ன ஆயிற்று ? வருடத்தின்
முடிவுக்குள் அங்கு ஒரு இலவு, இங்கு ஒரு இலவு அதாவது குடும்பத்தலைவிகள் இருவரும் மரணம்.
கஅந்த தெய்வம்தான் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது என நான்
சொல்லவில்லை, அவர்களின் விதி முடிந்து அவர்கள் போய் விட்டார்கள் இருப்பினும், குருவி
உட்கார இளநீர் விழுந்த கதைபோல் ஆகி விட்டதே, அவர் சொன்னது போல் அவரும் கோயிலுக்கு வருவது அன்றே கடைசியாகவும் ஆகி விட்டது.
எனது நண்பரொருவர்,
துபாயிலிருந்து ஊருக்கு போனவர் வீடு வாங்குவதற்க்கு தரகரை நாடினார் வீட்டை
விற்பவர் பெரும்பாலும் நொடையில்தானே இருக்க வேண்டும் வில்லங்கம் பார்க்க வேண்டுமெனில்
வீட்டுவரி கட்டியாக வேண்டும், வில்லங்கம் பார்க்கவும், விட்டுவரி கட்டவும் வீட்டை
வாங்குபவரிடமே பணம் கேட்டார், சரி நாமதானே வாங்க போகிறோம் என பணமும் கொடுத்து விட்டார்
இந்த வகையில் தரகர் சுமார் 5000/ ரூபாய் வாங்கி விட்டார், பத்திரம் போடும் நேரத்தில் யாரோ
கூடுதலாக 5000/ ரூபாய் தருவதாக சொல்ல வீட்டுக்காரர்கள் வாக்கு மாறி விட்டார்கள், காரியங்கள்
முடிந்து விட்டது மறுநாள் தரகர்
நண்பரின் வீட்டில் வந்து என்ன கேட்டார் தெரியுமா ?
எனது
கமிஷன், எங்கே ?
எப்படியிருக்கும்
நண்பருக்கு. வாங்காத வீட்டுக்கு தரகர் கமிஷனா ?
முதலில்
என்னிடம் வாங்கிய 5000/ ரூபாயை கொடு
அது
வில்லங்கம் பார்க்க செலவாகி விட்டது,
அப்படினா
அவுங்கள்ட்ட வாங்கிட்டு வா
அவங்க
பிச்சைக்காரங்கே எப்படி வாங்க முடியும் ?
அப்படினா,
நான் துபாய்லருந்து அள்ளிக்கிட்டு வந்துருக்கேன் நீ தள்ளிக்கிட்டு போகலாம்னு வந்தியா ?
நண்பரும் 5000/ ரூபாயை பெருந்தன்மையாக வேண்டாமென விட்டு விட்டார்,
காரணம் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சொந்த பந்தங்கள், அந்த வீடு வாங்காததும் ஒரு
வகையில் நண்பருக்கு நல்லதாகிப் போனது, வேறொரு தரகர் மூலம் அதே பணத்துக்குள்
வீடும், இடமும் வாங்கி விட்டார், இன்று அதன் மதிப்பு அந்த வீட்டைவிட மூன்று மடங்கு
மதிப்பில் இருக்கிறது, அந்த இருவரையும் விட நல்ல நிலையிலும் இருக்கிறார்
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த தரகர் ஒரு பக்திமான் சாலையில் செல்லும் போதுகூட வழியில் உள்ள கோயில்களில் அரை மணிநேரம் வணங்குவார் இவரை எப்படி இறைவன் ஏற்றுக்கொள்வார் ? பெற்ற தாயை விரட்டி விட்டு தெய்வத்திடம் போய் அம்மா தாயே என்றால் என்ன அர்த்தம் தாயைவிட ஒரு தெய்வம் இருக்க முடியுமா ? அல்லது இதை தெய்வம்தான் ஏற்றுக்கொள்ளுமா ?அ
அந்த வெளிநாட்டு நண்பர் இந்த கில்லர்ஜிதான்.