வெள்ளி, ஜூன் 12, 2015

நாகர்கோவில், நாற்காலி நாகரத்தினம்

உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள், இந்த கோடிகளில் சிறு துரும்பளவு எனச்சொல்லப்படும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது எங்கள் மதம் எனமனிதன் பீற்றிக்கொள்கிறானே ! அதேநேரம் இவன் விஞ்ஞானத்தையும் நம்புகிறான், இது எப்படி சாத்தியமாகும் ? அப்படியானால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் எந்த மதம் ? அவனும் வாழ்ந்து இறந்துதானே போயிருக்கிறான், (விஞ்ஞானம் இல்லாத காரணத்தால் கூடுதல் காலம் வாழ்ந்து இருக்கிறான், அவ்வளவுதான்) ஆக மதம் என்பது மனிதன் பேசப்பழகி மொழி அமைத்து பிறகு உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு என்பது உண்மை ஆகிறது இதற்கெல்லாம் மூலகாரணம் என்ன

தலைமை பீடத்தில் அமர்வது, இந்த பாழாப்போன மனிதனுக்கு, ''நாற்காலி ஆசை'' அன்றே தொடங்கி விட்டது ஆசையின் விரிவாக்கம் (EXTENSION) மதங்கள் பிரிக்கப்பட்டு, அதிலிருந்து உறிக்கப்பட்டு, அதிலிருந்தும் பறிக்கப்பட்டு, அதனுள்வர, கம்பளம் விரிக்கப்பட்டது, விரிப்பது சரித்திரம் படைக்க எனநினைத்தார்கள் தரித்தினியம் பிடித்தவர்கள், ஒருசில மனிதர்களின் சுயநல நல்வாழ்வுக்காக... பல மனிதர்களின் வாழ்வு பறிக்கப்பட்டது, பறித்து விட்டான் என்பதின் அர்த்தமென்ன ? தன்கையிலிருந்து அடுத்தவன் அபகறித்து கொண்டான் என்பதாகும் பறித்தவன் யார் ? ஒரு சிலர், பறி கொடுத்தவன் யார் ? பலர்.
(ஆக சிலர் என்பது சிறு பான்மை, பலர் என்பது பெரும்பான்மை)

கொஞ்சம் சிந்தித்தித்துப்பார் மானிடா வெட்கமாக இல்லை பெரும்பான்மையினரிடம் இருந்து சிறுபான்மையினர் பறித்துக் கொண்டது, ஆக அறிவீணர்களாக இருந்தது பெரும்பான்மை என்பது நமக்கு இப்பொழுது தெளிவாகுமே, ஆச்சர்யமாக இருக்கிறதா ? இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை, காரணம் அறிவீணர்கள் அன்று மட்டுமல்ல ! இன்று வரை தொடர்கிறது....

ஆம் மானிடா அந்த பாரம்பரியத்தில் வந்த நாம் இன்றும் ஆட்சி பீடத்திலிருக்கும் ஒரு சிலரின் நல்வாழ்வுக்காக பெரும்பாலானோர் அறிவீணர்களாகவே இருக்கிறோம் ஹூம், இந்த லட்சணத்துல சொல்றாங்கே இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியாம்.

சாம்பசிவம்-
என்னய்யா நீரு, மொட்டைத் தலையிலே ஆரம்பிச்சு மொழங்காலுல கொண்டு வந்து முடிச்சுப் போடுறீரு.

CHIVAS REGAL சிவசம்போ-
ஒருவேளை, 110 கோடி ஆக்குனதுல மும்முரமாகி விட்டதால, யோசிக்க நேரமில்லையோ ?

62 கருத்துகள்:

 1. தூங்காத கண்ணிற்கு இரண்டு.

  நா நா நா.

  நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 2. நண்பரே...

  ஆட்சி பீடத்திலிருப்பவர்களுக்காக பெரும்பாலானோர் அறிவீனர்கள் போல நடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை...

  குரங்கு குட்டிக்கரணம் போடுவதை பார்க்க கூத்தாடிக்கு ஆசை... குட்டிக்கரணம் போட்டால் பலன் கிடைக்கும் என்பதால் குரங்கு குட்டிக்கரணம் போடுகிறது ! ( ஹூம் !.... காரியம் ஆகிறதுக்காக என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு பாரு... ? - இது அந்த அறிவீனர்கள் தங்களுக்கு உத்தமமானவர்களிடம் புலம்பும் புலம்பல் !!! )

  ஆக, பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் !

  புரிகிறதா ஜீ ?!!!

  உங்களுக்கு புரிந்துவிட்டது என்பது 80 எனக்கு புரிந்து விட்டது !!!!....................

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆக மொத்தம் குறலி வித்தைதான் நடக்கிறது கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 3. #கொஞ்சம் சிந்தித்தித்துப்பார் மானிடா வெட்கமாக இல்லை பெரும்பான்மையினரிடம் இருந்து சிறுபான்மையினர் பறித்துக்கொண்டது,#

  என்னதான் கத்திக் கூவினாலும் 110 செவிசாய்க்க மறுக்கிறது,மறுத்தாலும் விடுவதாக இல்லை,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனக்கு அரசியல்வாதிகளைவிட அவர்களின் அல்லக்கைகள் மீதே கோபம் வருகிறது நன்றி நண்பரே...

   நீக்கு
 4. ஆதி மனிதனை அனைத்து மதங்களும் சொந்தம் கொண்டாடுகின்றன. அதிலும் தவறில்லை. எல்லா மதங்களிலும் பொதுவான அம்சங்கள் நிறைய உண்டு. ஆதாம் என்று கிறித்துவத்திலும், ஆதம் என்று முஸ்லீம் மதத்திலும் குறிப்பிடப்படுவது ஒருவரே ஆக இருக்கலாம்.

  எல்லா மதங்களும் காட்டுவது, போதிப்பது நல வாழ்வை, நற்கதியை அமைதியை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே மதங்கள் போதிப்பது நன்மைக்கே...
   மனிதன் புரிந்து கொண்டது வன்முறைக்கே...

   நீக்கு
 5. வணக்கம்
  ஜி
  எல்லலாம் பதவி மோகம்...... என்ன செய்வது..நல்ல தலைப்பை எடுத்து அசத்தி விட்டீர்கள்.. 110 கோடி என்பது நல்ல விடயம் ஜி... பகிர்வுக்கு நன்றி த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. பதிவு போட்ட கொஞ்ச நேரத்துலே மக்கள்தொகை 120 கோடி ஆயிருச்சு!

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் நாற்காலியில் அமர்ந்து பார்த்தால் அதன் அருமை புரியும். நாற்காலியின் அருமை பெருமை தெரியால் நாற்காலியைக் குறை கூறுகின்றீர்கள். உங்களுக்கு யாராவது சாபம் கொடுத்துவிடப் போகின்றார்கள், ஜாக்கிரதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே சாபம் கொடுக்க வேண்டியது நான்தான் என் நாட்டை சீரழிப்பவர்களை.... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 8. கொடுமை என்னவென்றால் ,இப்படிப்பட்ட அறிவீணர்கள் பெரியார் சொல்லியும் திருந்தவில்லை !

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. வருக நண்பரே கருத்துரையுடன் வாக்கும் அளித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 10. யார் சொல்லியும் திருந்த மாட்டார்கள் காரணம் வேறு
  தம +

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. ஆம் ஜி கருங்காலி’’கள் என்றும் சொல்லலாமோ....

   நீக்கு
 12. நாற்காலியில் இருப்பவர்களுக்கும் சரி, நாற்காலிக்கு கீழே இருக்கும் மக்களுக்கும் சரி, சமூகத்தைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ எந்த கவலையும் இல்லை. தான் நல்லாஇருந்தா போதும் என்ற மனநிலைதான் தொடர்கிறது.
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே... உண்மையை அழகாக விவரித்தீர்கள் நன்றி.

   நீக்கு
 13. நாற்காலி ஆசைதான் இன்று நாட்டையே நாசமாக்கிக் கொண்டிரு!க்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா புத்தரின் போதனைகள் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கே முதலில் புகட்டப்பட வேண்டும் வருகைக்கு நன்றி
   சிறிய இடைவெளி ஏன் ஐயா..

   நீக்கு
 14. நாற்காலி கனவுகளை நனவாக்க சில பல நாடுகளே நாற்காலியை சுற்றி நடனமாடி வரும்போது? என்ன செய்வது முக்காலிகளால் முனகத்தான் முடியும்?
  நாமோ இரு கால்களை உடையவர்கள் அல்லவா? (இருகால்) அதனால்தான் நாற்க்காலியால் நாட்டை ஆள்கிறார்கள்!

  யாருக்கய்யா வேணும் உங்க படத்தில் உள்ள பிளாஸ்ட்டிக் நாற்காலி?
  யாரங்கே கொண்டுவரச் சொல்லுங்கள் அழகு அரியணையை!
  த ம 12
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக்காலாவது நமக்கு மிஞ்சினால் சரிதான்.
   என்னால் முடிந்தது இந்த நாற்காலிதான் நண்பரே இதுவே காலியாகத்தானே.... இருக்கு...

   நீக்கு
 15. இன்றைக்கு வெள்ளிக்கிழமை!..

  ஆகவே - மௌன விரதம் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்!..

  என்ன சொல்றீங்க.. ஜி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மௌனத்தை கலைத்து வாயைத் திறந்து கேள்வி கேட்டு பதில் சொல்ல வைத்து எனது மௌனத்தை கலைத்து விட்டீர்களே.... ஜி

   நீக்கு
 16. அடேங்கப்பா அங்கால இங்கால நகர முடியாது போல இருக்கே ஹா ஹா ... நாட்டில இல்ல ஜி அதான் சும்மா எட்டிப் பார்ப்பேன் இடையில்.அவ்வளவு கருத்து போட நேரம் கிடைப்பதில்லை. வந்தவுடன் தொடர்ந்து போடுகிறேன் ok வாம்..ம்..ம் ஆமா முனைவர் ஐயா சொன்னது மாதிரி நாற்காலியை முதல்ல உங்களுக்கு தந்து பார்க்கணும் அப்ப என்ன சொல்கிறீர்கள் என்று நாங்கெல்லாம் கேட்கணும். ஆத்தாடி வலையுலகையே ஒழித்துக் கட்டவேண்டும் என்று சட்டம் கொண்டு வராவிட்டால் சரி தான் ஜி . ஹா ஹா ....

  இல்லாதவர்கள் துறவறம் போவது வேறு இருப்பவன் அதாவது புத்தர் எல்லாம் இருந்தும் விட்டு விட்டு போனாரே அது துறவறம். அது போல நாற்காலியை தந்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா ஜி எனக்கு தெரியும் நீங்கள் வேண்டாம் என்று தான் சொல்வீர்கள். நன்றி நன்றி பதிவுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கவிஞரே.... தற்போது எனது தகுதிக்கு மீறிய நாற்காலியே கிடைத்து இருக்கிறது எனக்கு நாற்காலி ஆசையில்லை நாற்காலியில் இருப்பவர்களுக்கு பேராசை கூடாது 80தே எமது வாதம்.
   வாங்க சகோ அருமையான கருத்துரை பதிந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 17. // ஒரு சில மனிதர்களின் சுயநல நல்வாழ்வுக்காக, பல மனிதர்களின் வாழ்வு பறிக்கப்பட்டது.// மிக உண்மை. பேராசையால் நாட்டை சீரழிக்கின்றார்கள். சுயநலவாதிகள்தான் அதிகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அருமையான கருத்துரை பதிந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 18. 2 கால்களை வைத்துக்கொண்டு நான்கு கால்களுக்கு தாவ ஆசை வரத்தானே செய்யும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோ மனிதன் தாவும் இனத்தில் இருந்து வந்தவன்தானே...

   நீக்கு
 19. மொட்டத் தலையில..ஆரம்பித்து முழங்கலில் வந்து முடிச்சு போடுவதே..தெரியாதபோது..மொட்டைத்தலையிலேயே முடிச்சு புரியாவா போவுது..

  பதிலளிநீக்கு
 20. நாற்காலிஆசை யாரைவிட்டது. சிலருக்கு அடிர்ஷ்டம் வாய்க்கிறது சிலருக்கு இல்லை. அது சரி. நீங்கள் நாற்காலியில் அமர்வதில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலி எனது தகுதிக்கு மிஞ்சியதே...

   நீக்கு
 21. கடைசியில் பத்துக்கால் என்பது மறந்து போகிறது
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களின் கருத்துரை
   எட்டுக்கால் நடந்து வர
   ரெண்டுகால் நீண்டிருக்க
   பத்துக்கால் மனிதனுக்கு
   பார்வையோ கிடையாது
   என்ற பாடல் நினைவு வருகிறது

   நீக்கு
 22. நாற்காலி கண்டுபிடிக்கும் முன்பிருந்தே நாற்காலி ஆசை தோன்றி இருக்கவேண்டும் அவ்வளவு வெறி பிடித்து அலைகிறார்கள் பதவிக்காக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வெறியில் சமூகம் பலியாகி கொண்டு இருக்கிறதே...

   நீக்கு
 23. நாற்காலியில் அமர்ந்ததும் முதல் வேலை
  அதை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக
  மாற்றுவதுதானே
  ஆதி மனிதன் எந்த மதம்
  நல்ல கேள்விதான் நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

   நீக்கு
 24. நாகர்கோவில் நாற்காலி நாகரத்தினம்???? !!! இதுதான் புரியல ஜி....இவர்தான் இந்த இடுகைல பேசுறாரோ?

  சரி இப்படிக் கூவி என்ன உபயோகம் ஜி? நாம் பதிவர்கள் எல்லோரும் தான் இதில் ....ஒன்றை மக்கள் புரிந்து கொண்டால் போதும்......மதங்கள் தோன்றி விட்டன...இனி அதை மாற்ற இயலாது.....நாற்காலிகளும் பல முளைத்து விட்டன. சரி நாற்காலிகளைக் களை எடுப்பது என்பது மக்களால் மட்டுமே முடியும் ஒரு புரட்சி வர வேண்டும்...அதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தாலும் இல்லை என்பது போலத்தான் இருக்கின்றன ஏனென்றால் மக்களும் அந்த நாற்காலியை ராக் அண்ட் ரோல் என்பது போல் விளையாடிக் கொண்டிருப்பதால். அதை அப்புறமாக வைத்து விட்டு, மதம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால், மதங்கள் எல்லாமே நல்லதைத்தான் சொல்லுகின்றன. மக்களை வழிமுறைப் படுத்துகின்றன. அவை எல்லாமே இறுதியில் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றன. மக்கள் அதைப் புரிந்து கொண்டு அதை சரிவரக் கையாண்டால், நாற்காலிகளை ராக் அண்ட் ரோல் விளையாடாமல் இருந்தால் நல்லது நடக்கும். நடக்கும் என்று நம்புகின்றீர்கள்?!!! நெவர்! இதற்குத்தான் அன்பே கடவுள் என்ற ஒரு அரிய தத்துவத்தை அன்றே போதித்தனர்.....

  என்ன குழப்பி விட்டோமா? அதானே இந்த வில்லங்கத்தாரின் வேலையே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இடுகையில் பேசுபவர் அவர்தான் நானில்லை.

   புரட்சி வரவேண்டும் என்பதற்காகத்தானே நாமெல்லாம் இந்த வகையான பதிவுகளை போடுகின்றோம்
   ஆம் மனிதனுமே கடைசியில் இறந்து ஒருவனிடமே போய் ஆகவேண்டபம் இந்த உண்மை புரிந்து விட்டால் பிரட்சினைகள் இல்லைதான்
   வழக்கமான வில்லங்க கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 25. நாற்காலி ஆசை தான் பாடாய் படுத்துகிறது....நாடும் வீடும் பாடாய் படுகிறது....

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ இதனால் மற்றவர்களும் பாடாகிறார்களே... அதுதானே கவலை.

   நீக்கு
 26. மதம் எப்ப தோன்றியது?
  என்பதற்கு முன்
  கடவுள் எப்ப தோன்றினர் என்பதே
  எனது கேள்வி?

  மனிதன் பிறந்து
  சூழலில் உலாவும் வேளை
  அச்சம் (பயம்) - அவனை
  வாட்டி வதைத்தது - ஆகையால்
  நாய் என்றால் பைரவர்
  பாம்பு என்றால் முருகன்
  எலி என்றால் பிள்ளையார்
  பேய் என்றால் சிவன்
  என்று தான் வணங்கினான்
  இது தான் இந்து மதம்
  இதற்குள்ளே
  சைவம், வைணவம் என
  நாலு மதங்கள்...
  இதனையும் கடந்து
  ஆயிரக்கணக்கான மதங்கள் உலாவுகிறதாம்
  எல்லோரையும் எல்லாவற்றையும்
  படைத்தவர் ஒருவரே - அவரே
  கடவுள் - அவருக்கு
  மதம் இருந்திருக்காதே
  அப்ப - தங்கள்
  நாற்காலி யாருக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கவிதை வடிவில் விரிவான அழகான கருத்துரை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 27. மதம் என்று தோன்றியது, தங்கள் கேள்வி ,,,,,,,,,,,
  என்று மனிதன் தனக்கு கீழ் ஒரு அடிமைகூட்டம் இருக்கனும் என்று ஆசைப்பட்டானோ அன்றில் இருந்து தான், மதமும், நாற்காலியும்,,,,,,,,,,,,,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க டீச்சர் ரத்தினச்சுருக்கமாக உண்மையை சொன்னீர்கள்.

   நீக்கு
 28. வணக்கம் சகோதரரே.

  நல்ல பதிவு. உண்மை.! ஆசைகள்தாம் ஒவ்வொரு மனிதனை நிலை குலையச் செய்கிறது. 2 கால் தயவுடன் பிறக்கும் மனிதன், 4 கால் ஆசையில் வாழ்க்கையோடு மதம் பிடித்த விலங்குகளாய் போராடி, எப்போதேனும், என்றேனும் 1 கால் தடுமாறி விழும்போது, 3 காலின் உதவியுடன் வாழ்க்கையின் மிச்சத்தை கழித்து ௬ட்டிப் பெருக்கி வகுத்து, சுமைகளை ஓரம் தள்ளி குப்பையாகி போனதும், மரணமென்ற ஒன்று வலிய அணைத்துக் கொண்ட பின்பு விலங்குகளும், ஆசைகளும் அவனை சிறிது சீண்டினாலும் அவனால் உணர இயலுமா,என்ன. ? ஆக மரணம் ஒன்றுதானே பிறக்கும் அனைவரையும் ஒன்றாக்கும் மதம். அது அவனுக்கு புரியாத வரை மதங்களின் பற்றும், ஆசைகளும் மனிதனை விட்டு மரித்துப்போக தயாராவதில்லை.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் விரிவான கருத்துரைக்கு மநமார்ந்த நன்றி.

   நீக்கு
 29. பெயரில்லா6/16/2015 2:14 பிற்பகல்

  நாற்காலி, அரசியல் எதுவும் வேண்டாம்
  ஆளை விடுங்க சார்.

  பதிலளிநீக்கு
 30. பெயரில்லா6/16/2015 4:00 பிற்பகல்

  க.க.போ. சரியான மங்குனி அமைச்சராகவே இருக்கிறாய போ!

  63-ம் புலிகேசி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நகைச்சுவை பதிவல்ல நண்பரே... Google Plus கணக்குடன் வருவது நலம்.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...