தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 11, 2015

Robot & Man

புகைப்படத்தின் உள்புறம் அமெரிக்க டோலர்

எனது கையிலிருக்கும் இந்த, American ($) Dollars சுமார் 4 ¾  லட்சம், இது எனது பணமல்ல ! இருப்பினும் இத்தனை பணத்தையும் பார்ப்பதே அரிது அதிலும் நமது கையில் வைத்துப் பார்ப்பது அதனினும் அரிது, இதுவே நமக்கு சொந்தமெனில் அரிதினும் அரிது, இருப்பினும் மூன்றாவது நிலையைத் தொட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை காரணம் எனக்கு இன்னும் உழைப்பு பாக்கி உள்ளது என்றே கருதுகின்றேன், இதுகூட இறைவனின் செயல்தான் என்பதில், எனக்கு(ம்) நம்பிக்கை உண்டு.

சுமார் 2 ½  Million U.A.E. Dhs ஸை, மாற்றி இந்த American ($) Dollars எடுத்து வரும் பொழுது (ஒரு Dirham’s என்பது இந்திய ரூபாய்க்கு 17.00) ஒரு சின்னஆசை ஆகவே Photo எடுத்துக் கொண்டேன், நானும் சராசரி ஆசையுள்ள மனிதன்தானே ! அதனால்தானே ! என் இனிய இந்தியாவை விட்டு U.A.E யில் வாழ்கிறேன், இதை மாற்றும் நேரத்தில் Exchange சில் இருந்தவர்களின் பார்வை இருக்கிறதே அதில் ஒரு சிலரின் பார்வையில் கொலைவெறியே தெரிந்தது.

அற்புதமான விசயங்களை திணித்து இறைவன் மனிதனை படைத்தான், அந்த மனிதன் உருவாக்கிய பேப்பரிலான, இந்த பணத்திற்க்கு எத்தனை மதிப்பு ஆனால் இதை உருவாக்கிய மானிடனுக்கு ? இந்த மனிதர்களால் இன்னும் இதைவிட அழகான பணத்தை உருவாக்க முடியும், ஆனால் இந்த பணத்தால் மனிதர்களை உருவாக்க முடியாது, வேண்டுமானால்

ஆசையற்ற, மூளையற்ற, உணர்ச்சியற்ற, உயிரற்ற ROBOT பொம்மைகளை உருவாக்க முடியும்.

வலைப்பதிவர் மாநாடு முடிந்து விட்டது. தீபாவளியும் முடிந்து விட்டது இனிமேல் வலைப்பதிவர்கள் சுறுசுறுப்பாக வேண்டுமே அதற்கான வழி ?

57 கருத்துகள்:

  1. பணத்தையும் படத்தையும் பார்த்தவுடன் " திடுக்கிட்டாலும் " முடிவை படித்து யோசித்தேன் !

    உண்மைஜீ !... பணம் மனிதனை நிறைய மாற்றிவிட்டது. நேற்று ஒரு பின்னூட்டத்தில் கூட்டாஞ்சோறு செந்தில்குமார் ", என்று மனிதன் மனிதர்களை மறந்து பொருட்களை துரத்த தொடங்கினானோ அன்று எல்லாம் மாறிவிட்டது " என குறிப்பிட்டிருந்தார் !

    சத்தியமான வார்த்தைகள் ! ஆனாலும் உங்களை போன்றவர்களும் இன்னும் இருப்பதே நம்பிக்கை விதைகள்தான் இல்லையா ?!

    நன்றிஜீ
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமோ....
      நண்பர் திரு. செந்தில்குமார் சொன்னது உண்மைதான் இன்று மனிதனைவிட பொருளே முக்கியம் மும்பையில் இன்றும் வெறும் 10 ரூபாய்க்காக கொலைகள் நடக்கின்றதே.... வருகைக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  2. இவ்வளவு பணத்தை எடுத்து வரும்போது அந்த ஊரில் ஒரு வித அசம்பாவிதமும் ஏற்படாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா மற்றும் நண்பர் திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு...
      இங்கும் தவறுகள் நடக்கத்தான் செய்கிறது அதை 5 சதவீதம் என்று சொல்லலாம்
      இங்கு தவறு செய்பவனை நல்லவன் - கெட்டவன் என்ற நிலையில் பார்க்கவேண்டாம் அறிவாளி - முட்டாள் என்ற ரீதியில் கணக்கிடல் அவசியமாகிறது
      ஆம் முட்டாள்கள்தான் அந்த 5 சதவீதம் காரணம் இதே பணத்தை என்னிடமிருந்து பறித்துக்கொண்டோ, வேறு எப்படியோ ஓடினாலும் அதிகபட்சம் 1 மணி நேரத்துக்குள் பிடித்து விடுவார்கள் இது தெரியாத முட்டாள்தான் அந்த 5 சதவீதம்
      எங்கும் ஓடிவிடமுடியாது அபுதாபில் பறித்துக்கொண்டு துபாய் ஓடினாலும் அதுவரையும் அவனை வீடியோ கேமரா காட்டிக்கொடுத்து விடும் அதற்க்கு பிறகு வேறு எங்கு ஓடினாலும் இதே நிலைதான் இங்கு குற்றவாளிக்கு தண்டணைகள் மிகவும் கடுமை ஆகவே குற்றங்கள் குறைவு
      நான் எப்பொழுதும் சொல்வது அரபு நாட்டுச்சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்படவேண்டும்
      சொன்னது என்னவென்று பார்த்தால் நலம் சொன்னது யாரென பார்த்தால் ?

      நீக்கு
  3. நல்ல மனம் வாழ்க
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
  4. எப்படி ஒரு ஆரம்பம்....
    வங்கியில் பணம் எண்ணுவதும்,,திருப்பதியில் உண்டியல் எண்ணுபவர்களையும்,நகைக்கடைகளில் கணக்கு முடிக்கும் போது பார்க்கும் பணமும் எப்போதும் பரவசமாய் இருக்கும் எனக்கு....என் பிள்ளைகளுக்கு ஒரு மிட்டாய் கூட உதவாத அந்த பணம் என்ன பெயரில் இருந்தாலும் அது அற்ப காகிதமே....அதற்காக ஓடும் மனிதர்கள் பரிதாபத்துக்குரியவர்களே.
    என் நண்பர் ஒருவர் திருப்பூரில் இருக்கிறார்....மாட்டுவம்டியில் ஆரம்பித்த வாழ்க்கை பல மாடல் கார்களில் இருக்கிறது...ஆனால் அவர் மனைவி சொல்வார்...மாட்டுவண்டி ஓட்டும் காலங்களில் வியர்வையில் நனைந்து வாங்கிவரும் பிரியாணியின் சுவை இப்போது எங்கேயும் கிடைப்பதில்லையாம்....

    அட....நானும் எத்தனைய தான் பூட்டிவைக்க....முன்னத்தி ஏர்கள் கிளம்பிருச்சு...நாமளும் ஆரம்பிச்சுருவோம்..
    நன்றி...கில்லர்ஜி...
    ஞாபக அடுக்குகளை கிளறியதற்கும்...என் உளறலையும் படித்ததற்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உங்களது உளறல் பல வாழ்வியல் உண்மையைதானே சொல்லி இருக்கின்றது அருமை இதனைக்குறித்து தாங்களும் விரிவாக பதிவு இடுங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  5. பரவால்ல அவ்ளோ பணத்தையும் பார்க்கவாவது வாய்ப்புக்கொடுத்தமைக்கு நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையிலேயே இவ்வளவு பணத்தை எனது மடியில் வைத்துப்பார்த்ததை நான் பாக்கியமாகவே கருதினேன் நன்றி சகோ

      நீக்கு
  6. வலைப் பதிவர்கள் எப்பொழுதுமே சுறுசுறுப்புதான் நண்பரே
    தங்களைப் போல
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்லது நாளைக்கு(ம்) வாருங்கள் நன்றி

      நீக்கு
  7. அன்புள்ள ஜி,

    தீபம் ஆவளி வாழ்த்துகளைத் தொலைவில் இருந்தாலும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகள் சொன்னதற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பல கோடிகளைப் பக்கத்தில் வைத்து பார்ப்பதும் பேரானந்தம் தானே...! இதற்காகத்தானே ஆசைப்பட்டு... அத்தனை மனிதனும் படாதபாடு படுகிறான்; பல கொலைகளும் செய்கிறான்.

    ‘மனிதன் உருவாக்கிய பேப்பர்தானே...!’ உண்மைதான்.

    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே ஆம் பேப்பருக்காக கொலைகளும் உண்மையே..

      நீக்கு
  8. அன்பின் ஜி..

    காலயிலேயே குழப்பம் ஆகி விட்டது..
    என்ன செய்வது என்றே புரியவில்லை..
    பணத்தை உருவாக்கிய மனிதர்களுக்கிடையே
    பணத்தால் உருவாகிய புனிதர்களும் இருக்கின்றார்கள்..
    முரண்பாடு தானே வாழ்க்கை..

    நீங்கள் தான் சொல்ல வேண்டும்..
    உங்களுக்கு - சுட்ட பழம் வேண்டுமா.. சுடாத பழம் வேண்டுமா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி முடிவில் கொக்கி போடுவதே தாங்களுக்கு வாடிக்கையாகி விட்டது. எனக்கு ‘’சுட்ட’’பழம் வேண்டாம் பணம் கொடுத்து வாங்கிய பழமே வேண்டும்.

      நீக்கு

  9. வங்கியில் பணி புரிந்ததால் தினந்தோறும் இந்த பணக்கட்டுக்களை பார்த்து சலித்ததுண்டு. என்னோடு பணியில் சேரும் புதிய நண்பர்களுக்கு நான் சொல்வதுண்டு. ‘நம்மை பொறுத்தவரை இவைகள் வெறும் காக்கிதக் கட்டுக்களே. நமது பையில் இருப்பது மட்டுமே பணத்தாட்கள். எப்போது இவைகளை பணமாக பார்க்கிறோமோ அப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் சிறிதளவும் மனம் சஞ்சலப்பட்டால் அவ்வளவுதான்.’ என்று. தங்களது பதிவு என்னை பழைய நாட்களுக்கு அழைத்து சென்றுவிட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி! தீபாவளி வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்து மிகவும் சரியானதே கடமையைச் செய் உண்மைதானே வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. எதற்கும் கவனமாக இருங்கள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இந்தப் பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ஜி ஆனால் தாங்கள் சொல்வதுபோல புரிதல் தவறாகும் பொழுது அதனால் நமக்கும் பாதிப்புகள் வரத்தான் செய்யும் என்ன செய்வது ? மேலே முனைவர் திரு. கந்தசாமி ஐயா அவர்களுக்கு மறுமொழி கொடுத்திருக்கிறேன் பார்க்கவும் நன்றி ஜி

      நீக்கு
  11. ஆ..காசு,பணம்,துட்டு ,மணி,மணீ... நாங்களும் பார்க்கல இவ்ளோ பணத்தை.இங்கு 500 யூரோ பார்ப்பதே அபூர்வம்.எல்லாமே கார்ட் தான்.
    வங்கி மூலமாகதானே பணமாற்று செய்வார்கள். ஏன் இப்படி.
    எதற்கும் கவனம் அண்ணா ஜி.பணம் பத்தும் செய்யுமா. என்னண்டு எனக்கு தெரியேலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ வேலை நிமித்தமாக செய்ய வேண்டியது இருக்கின்றதே... இதனால் ஆபத்து இருப்பதும் உண்மையே நன்றி

      நீக்கு
  12. பழனி கந்தசாமி ஸார் கேள்விதான் எனக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு மேலே திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு சொன்ன பதிலைப்படிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  13. பணத்துக்குக் கொடுக்கப்படும் மதிப்பு மனித மனங்களுக்கும் உயிர்களுக்கும் கொடுக்கப்படாமை ஒரு பெரும் அவலம். மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  14. தாங்களாவது பார்த்து இருக்கிறீர்கள் எனக்கு அதுவும் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருத்தவர் பூமி ஆள்வார் தாங்களும் ஒருநாள் மதுரையை ஆள்வீர் காரணம் மலையாளி, கன்னடர், தெலுங்கர் தமிழ் நாட்டையே ஆளும் பொழுது மதுரை தமிழன் ஆளும் நாளும் வரும்.

      நீக்கு
  15. கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது ...காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது ,காசு வர ஓடிவிடும் சுற்றம் என்பது :)

    பதிலளிநீக்கு
  16. உங்களைப் போன்ற ஆசை எனக்கும் இருந்ததுண்டு. ஏணிப்படிகள் என்ற திரைப்படத்தில் கதாநாயகனோ, கதாநாயகியோ தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை வரிசையாக வைத்து அழகு பார்ப்பார்கள். இதைப் பார்த்ததும் அந்நினைவு வந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கு நன்றி நானும் அந்த திரைப்படம் பார்த்த நினைவு இருக்கின்றது நான் புகைப்படம் எடுத்த்தற்க்கு காரணம் மீண்டும் இந்நிலை கிடைக்குமா ? என்பது சந்தேகமே.... ஆகவே.

      நீக்கு
  17. பணத்தை கண்ணுல காட்டிய சாமி!
    பனங்கண்டாய் பூமி இனிக்குமா காமி?
    குணம் குன்றிருக்க, பணம் வானேறி
    வைகுண்டம் போவது ஏன்? மீசைஆசாமி?

    "கில்லர்ஜி திறந்த வெளி பல்கலைக் கழகம்"
    த ம+
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா பல்கலைக்கழகமா ? இதெல்லாம் டூட்டுமச் மாதிரி இல்லே... ?

      நீக்கு
  18. சிந்திக்க வைத்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

      நீக்கு
  19. நாம் கூட ஒரு வகையில் இயந்திர மனிதர்கள்தாம் நண்பரே! உங்கள் நம்பிக்கைப்படி கடவுளோ, அறிவியலாளர்கள் கூற்றுப்படி வேற்றுக்கோள் மனிதர்களோ, பகுத்தறிவாளர்கள் நம்பிக்கைப்படி இயற்கையோ உருவாக்கிய இயந்திர மனிதர்கள் நாம். நாம் இன்னும் நமக்கு நிகரான இயந்திர மனிதர்களை உருவாக்கும் அளவு முன்னேறவில்லை. முன்னேறி விட்டால், அதுவும் இப்படித் தன் உலகில் ஒரு வலைப்பூத் தொடங்கி நம்மைக் கடவுள் என்றும் தன்னை மனிதன் என்றும் தான் உருவாக்கியதை இயந்திர மனிதன் என்றும் வருணித்து எழுதிக் கொண்டிருக்குமோ என்னவோ! ஆனால், ஒன்று, கண்டிப்பாக அதற்கு இந்த அளவு மீசை இருக்க வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகான கருத்துரை தந்தமைக்கு நன்றி
      தங்கள் சொல்லும் விடயமும் எனக்கு ரொம்ப நாட்களாகவே சந்தேகமாக இருக்கின்றது ரோபோட்களுக்கு ஏன் ? மீசை முளைப்பதில்லை

      நீக்கு
  20. வணக்கம்
    ஜி
    உண்மையில் பணத்தை சம்பாதிக்கலாம் தாங்கள் சொல்வது மனித மனங்களை சம்பாதிக்க வேண்டும் அழகாக சொல்லியுள்ளீர்கள்...அடுத்து ஜி எல்லாம் முடிந்து விட்டது நமது வலைப்பதிவர் மத்தியில் சுறுசுறுப்பு குறைந்து விட்டது அதில் நானும் ஒரு நபர்தான் இனி தொடர்வோம் ஜி.. த.ம 10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ரூபன் தங்களுக்கு நாளை விளங்கும் ஹி ஹி ஹி..

      நீக்கு
  21. ஜி நானும் உங்க கம்பெனியில வேலைக்கு சேந்துக்கறேன். எம்புட்டு பணம்...!!!
    த ம 11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே எனது ஸ்விஸ் அக்கவுண்ட் நம்பர் அனுப்புகிறேன் தாங்கள் பணத்தை போட்ட பிறகு மின்னஞ்சல் அனுப்புவேன்

      நீக்கு
  22. பார்க்கக்கிடைத்த பணம்,சில நாட்களில் சேர்க்கக்கிடைக்கும்;வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. சில சமயங்களில் நிறைய பணம் எண்ணினால் வெறுப்பு வந்து விடும். வங்கியில் காசாளராக இருப்பவரை கேட்டுப் பாருங்கள்.....

    விரைவில் உங்களிடமும் இத்தனை பணம் சேர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டாம் ஜி இதுவரையில் பணத்தால் பிரட்சினைகள்தான் வளர்கிறதே தவிற சந்தோஷமில்லை வருகைக்கு நன்றி.

      நீக்கு
  24. சொல்லியிருக்கும் இரு கருத்துகளும் அருமை சகோ.

    ஆனால் இவ்ளோ பணம் வேண்டாம், இப்போ இருக்கும் நிம்மதியே போதும் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சரியாக சொன்னீர்கள் இந்த நிம்மதி போதுமானதே...

      நீக்கு
  25. பணம் வைத்து படம் எடுத்துக் கொண்டதற்கு வாழ்த்துகள்!
    (ம்... எதற்குலாம் வாழ்த்து?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா என்ன நண்பரே வாழ்த்தி விட்டு சலிப்பு வேறு....

      நீக்கு
  26. சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே... பணம் எடுக்க இல்லை அண்ணா படம் எடுக்க்.... ஹி... ஹி...

    நாம படுற கஷ்டம் நமக்கு பார்க்கிறவன் பார்வைக்கு என்ன தெரியும்...

    சுறுசுறுப்பா பதிவு போடுங்க... எல்லாரும்....

    வலையுலகம் சுறுசுறுப்பாகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் அழைப்பேன்
      அடுத்த பதிவில் விளங்கும் நண்பரே...

      நீக்கு
  27. நல்ல பதிவு நண்பா , பார்த்து எந்த முட்டாளாவது நம்மை முட்டாளாக்கி விடபோகிறான்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கவனம் கொள்கிறேன் நன்றி

      நீக்கு
  28. நல்ல பதிவு கில்லர்ஜி. நானும் அரபு நாடுகளில் இருப்பவன்தான். அடுத்தவன் காசில் ஆட்டையை போடுவதெல்லாம் இங்கு மிகவும் கம்மி. நீங்கள் சொல்வது சரியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கும்மாச்சியின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு