தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 13, 2019

பூக்களை ரசிப்போமா ?

பூக்கள் என்றுமே அழகுதான்
இதுவும் வேண்டுமடா எமக்கு
இன்னமும் வேண்டுமடா
குரங்கிலிருந்து வந்தவனே மனிதன்
ஏத்தா சேலையை மாத்திட்டு வரக்கூடாது
செஞ்சோற்று கடன் தீர்க்க செய்யாத செயல் செய்து
தேசத்தை அழித்தாயடா கள்வா வஞ்சகர் மக்களடா

  நூறு பெண்களுக்கு வாழ்வு கொடுக்கலாமடா...
இந்தியாவை இந்துவே ஆளவேண்டும்
பிரியங்கா காந்தி
பெயர் மாற்றி விட்டால்
ஏழை மக்கள் வயிறு நிறைஞ்சுடுமோ...
உங்களுக்குதான்டா வாழ்க்கை
எல்லோரும் ஜட்டியில போடுங்க ஓட்டை
இவ்வளவு கேவலமாக போச்சே...
நெல்லைக்காரர்கள் இதைப் பார்த்துக் கொண்டு
சும்மாதான் இருப்பார்களோ...
பெண்களுக்கு இது எப்போது புரியுமோ...
எவன் சிந்திக்கப் போறான்
நன்றி இல்லாத மாக்கள்
சினிமா கோமாளி எப்படி வாழுறான்...
நீங்க இஷ்டம்போல அவுத்து விடுங்கப்பு
கூமுட்டைகளின் கூட்டம்
திரு. ராமர் பிள்ளையின் நிலைப்பாடு
பின்ணணியில் இவ்வளவு இருக்கிறதே...
ஸ்ரீராம்ஜி ஆட்சிக்கு வந்தால் லைசென்ஸ் இலவசம்

62 கருத்துகள்:

  1. உப்புத் தண்ணியில ஊற வெச்ச சவுக்கால அடிச்சாலும் திருந்த மாட்டாங்க!...

    பதிலளிநீக்கு
  2. கழுத்துல குருசை தொங்குனா இந்து ஆயிடலாம்....

    ஒருவேளை இதுங்க கையில் ஆட்சி கிடைத்து விட்டால் இப்படி ஆக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்....

    நாளொரு வேசம்
    பொழுதொரு நடிப்பு..
    அவங்களோட வசதிக்கு
    இதுவும் ஒரு பொழப்பு!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி இன்றைய நிலையில் ஏமாற்றுபவன் அறிவாளி, ஏமாறுபவன் முட்டாள்

      நீக்கு
  3. "//பூக்களை ரசிப்போமா//" - பூக்கள் படங்கள் நிறைய இருக்க போகுது, நல்லா ரசிக்கலாம் என்று நினைத்தால்? சிந்திக்க வைக்கின்ற பதிவாக அல்லவா இருக்கிறது.
    திருத்திக்கொள்ள வேண்டிய அரசியல்வாதிகள் என்றைக்குமே திருத்திக்கொள்ள மாட்டாரகள்... ஆனால் சிந்திக்க வேண்டிய மக்கள் இனிமேலாவது கண்டிப்பாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மாற்றம் அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை மக்களிடம் வரவேண்டும்.

      நீக்கு
  4. கில்லர்ஜி பல படங்கள் சிரிப்பை வரவழைத்தாலும் கூடவே அதன் பின் வேதனையும் ஒட்டிக் கொண்டுதான் வருகிறது.

    அனைத்திற்கான உங்க கமென்ட்ஸ் சூப்பர்.

    அந்த எல்லை காத்த வீரனின் வீட்டை பார்த்து மனம் ரொம்பவெ வேதனை அடைந்துவிட்டது. இங்கு காட்டப்பட்டிருப்பது ஒரு வீரரின் வீடுதான் இன்னும் பலர் உண்டு...இல்லையா கில்லர்ஜி?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாற்பது இராணுவவீரர்கள் இறந்தார்களே அதற்கு நிதியுதவி செய்யச்சொன்னால் மாட்டார்கள் ஆனால் கிரிக்கெட் காண ஆயிரம் ரூபாய் கொடுக்கும் மடையர்கள் இந்தியாவில் உண்டு.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி. காப்பி பேஸ்ட் பண்ணும் போது அடுத்த கமென்ட் முந்திவிட்டது.

    ஓட்டு விலை மீம்ஸ் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் கில்லர்ஜி.

    சிந்தையைத் தூண்டும் படங்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஓட்டு பற்றிய சந்தையின் மதிப்பு மற்றும் 27 பைசாவிற்கு ஓட்டு - இவையெல்லாம் சிந்திக்க வேண்டியவை... மற்ற அனைத்து படங்களையும் பார்த்து கோபப்படுவதை விட முதல் படம் மனதிற்கு இதம்... குருவி போல் பூக்கள்... ஆகா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி 27 பைசாவுக்கு தன்மானத்தை அடகு வைப்பவன் இந்தியாவில் இருந்தால் என்ன... செத்தால் என்ன... இந்த கூமுட்டைகளால்தான் எல்லோருக்கும் அவமானம்.

      நீக்கு
  8. அனைத்தையும் ரசித்தேன். பிறகு வருகிறேன்.

    இரட்டை இலை சேலை - செட்டப் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

    அரசு பொது மருத்துவமனையை எப்போதும் சரிப்படுத்த மாட்டாங்க. அதற்கு இரண்டு காரணங்கள்தான் உண்டு. தனியாருக்கு இதனைத் தாரைவார்த்துவிட்டார்கள். (இல்லைனா எப்படி தனியார் பொழைப்பாங்க). இரண்டாவது பொதுமக்கள். இவங்க, தன்னோட பணத்துல உள்ள மருத்துவமனை என்று நினைப்பதில்லை. குப்பை, மோசமாக வைத்துக்கொள்வது என்று தங்கள் பங்குக்கு மருத்துவமனையைச் சீரழிக்கறாங்க. இதனையும் மீறி, நியாயமாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புணர்வோடும் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு எங்கள் வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      சுகாதாரத்தை அரசு நினைத்தால் மட்டும் செயல் படுத்தமுடியாது. மக்களின் அடிமனதில் தோன்ற வேண்டும்.

      நீக்கு
  9. சில வகை சிரிக்க ...

    சில வகை சிந்திக்க...

    பதிலளிநீக்கு
  10. //இந்தியாவை இந்துவே ஆளவேண்டும்//-நேரடியாக மதத்தைப் பேசும் பாஜகவை விட, இந்த மாதிரி போலி மதவாதிகள் (அந்த அந்த இடத்துக்குத் தகுந்தமாதிரி வேஷம் போடறவங்க) ரொம்ப ஆபத்தானவங்க.

    பதஞ்சலி படம் - ஐயோ... உண்மையா? - எப்பவுமே அளவுக்கு மிஞ்சி பணம் இருந்தால், மது மாது சூது இதில்தான் செலவழியும். வேற என்ன இருக்கு இந்த உலகத்துல அனுபவிக்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பிஜேபி-காங் இரண்டையுமே விரட்டவேண்டும் சரி மூன்றாவது யார் உத்தமபுத்திரன் ?

      மாலும் நக்ஹி

      பதஞ்சலி ஆம் நண்பரே நான் நேரடியாக எனது கண் கொண்டு கண்டு நானே எடுத்தேன் இணையத்தில்...

      நீக்கு
  11. மோடி பயணச் செலவு - இதில் பெரிய குறை இல்லை கில்லர்ஜி... (அதனால் இந்தியாவுக்கு பயன் உண்டு).

    அமித்ஷா விஷயம் - ரொம்ப பரிதாபமானது இந்தியா நிலைமை. தன்னுடைய ஆட்கள் என்று நீதித்துறையில் வைத்திருந்தால் அதைவிட டேஞ்சர் கிடையாது. (காங்கிரசுக்கும் இது பொருந்தும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியா வல்லரசு நாடாக மாறுவதைவிட மக்கள் மனதில் நல்ல அரசு என்ற பெயர் பெறவேண்டும் என்பதே எமது அவா

      நிதியால்தான் நீதி கிடைக்கிறது இது தேவையில்லாத அரசு.

      நீக்கு
  12. அனைத்து புகைப்படங்களும் பலவிதமான செய்திகளைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிந்திக்கவைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. பொ(று)க்கி எடுத்தவை அருமை. பதஞ்சலி படம் உண்மையா? குரங்கு மடியில்?ஜட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது நகர் மன்ற தேர்தலின் போது.
      Jayakumar

      நீக்கு
    3. வாங்க ஐயா பதஞ்சலியில் க்ராபிக்ஸ் இல்லையே...

      ஜட்டி சின்னம் 25 வது வார்டில் நின்ற சகோதரி இந்து சி.எம் அவர்கள் ஓட்டு கேட்டபோது உள்ள பதாகைதான்.

      பெண் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவதில் சற்று நாகரீகம் கருதி ஒதுக்கி இருக்கலாம் என்பது எமது எண்ணம் ஐயா.

      நீக்கு
  13. பதிவில் உள்ள துணுக்குகள்/தகவல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அந்த தகவல்களுக்கு தாங்கள் தந்திருக்கும் தலைப்பு அற்புதம்.பாராட்டுகள்! ராமர் பிள்ளையிம் மூலிகை பெட்ரோல் இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      ராமர் பிள்ளைக்கு சில நாடுகளே அவருக்கு சான்றிதழ்கள் வழங்கி இருக்கிறதே

      நீக்கு
  14. ராமர் பிள்ளை பாவம்...

    27 பைசாதானா?! இனி ஓட்டுக்கு விலையை அதிகப்படுத்த சொல்லனும்..

    வீல் சேர்?! இதுல போகும்போதே உயிர் போயிடும்போல!
    ஜட்டியெல்லாம் கூடவா சின்னம் கொடுப்பாங்க?!
    சாமியார்களை நம்பக்கூடாதுன்னு நிரூபிக்குறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  15. ஒரு சில வாட்சப்பிலும் முகநூலிலும் வந்தன. நம்ம மக்கள் இதுக்கெல்லாம் மசியற ஆளுங்களே இல்லை. யார் இலவசம் கொடுக்கிறாங்களோ அவங்க கட்சி தான்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இலவசம்தானே தமிழகத்தை இப்படி குழியில் தள்ளி விட்டது.

      நீக்கு
  16. நானும் பூக்களை ரசிக்க வந்தேன். முதல் படம் குருவிகள் போல் பூக்கள் இருந்தது அடுத்து அடுத்து புதுவிதமான பூக்களைப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

    உங்களுக்கு எப்படித்தான் இந்த படங்கள் கண்ணில் அகப்படுது?

    நெல்லை ஆஸ்பத்திரியில் வீல்சேர் நிலமை பார்த்து மனம் நொந்து போனேன்.
    தினம் கோடிகணக்கில் பணம் யார் பணம் என்று தெரியாமல் இருக்கிறது. அதை இப்படி அரசு மருத்துவமனைக்கு திருப்பி விடலாம்.

    நிறைய நல்லவைகளை செய்து மக்களை கவர்ந்து ஓட்டு பெற்றால் என்ன?

    நீங்கள் சொல்வது போல் நல்லரசு வர வேண்டும்.

    எங்கும் பூசல், அடிதடி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இப்படி அடிதடி உண்டா?





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது அலசலான கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  17. ஒரு சின்ன சந்தேகம். கட் அண்ட் பேஸ்ட் செய்ய முடியாத அளவிற்கு தொழில் நுட்பத்தை இறுக்கமாக வைத்திருக்கீங்களே? என்ன காரணம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முன்பு எனது பதிவுகளை ஜெயக்குமார் என்பவர் அப்படியே காப்பி எடுத்து அவரது முகநூலில் தனது சிந்தனை போலவே போட்டு வேறு படங்களையும் இணைத்து தொடர்ந்து இரண்டு வருடங்களாக செய்து வந்தார்.

      நண்பர்கள் சொல்லியே அறிந்தேன் வேறு சிலர் சிறிய, சிறிய கருத்துகளை காப்பி எடுத்து முகநூலில் வெளியிட்டது கண்டு மிகுந்த வேதனையாகி விட்டது.

      அதன் பிறகே காப்பி எடுக்க இயலாத வகையில் மாற்றினேன்.

      இது நடந்தது 2014-ல் இரண்டையும் கண்டவர்கள் யாரின் சிந்தனையில் உதித்தது என்று குழம்பிய காலம்.

      இன்று எனது எழுத்தின் பாணியை நானறிந்த வட்டத்தில் எல்லா பதிவர்களும் புரிந்து கொண்டனர்.

      நீக்கு
  18. கதவையும் திறந்து வைக்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனானிகளின் தொந்தரவு முன்பு இருந்தது இப்போது கிடையாது ஆகவே பார்க்கலாம்.

      நீக்கு
  19. சில ஃபார்வேர்டெட் செய்திகள் நம்பிக்கையை இழந்து விட்டன உங்கள் பதிவின் செய்திகள் நம்பலாமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களில் எனது சித்து வேலைகள் கிடையாது ஐயா
      படங்களுக்கான எனது கருத்தை தந்து இருக்கிறேன் அவ்வளவே...

      நீக்கு
  20. இப்படி உண்மையை போட்டு உடைக்கிறீர்களே
    எப்போது தான் வேண்டியவர்கள் காதில் விழுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஊமையன் சொல்வது செவிடன் காதில் விழுந்திடுமா ?

      நீக்கு
  21. சிந்திக்க மட்டுமல்ல, வருத்தப்படவும் வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  22. அருமையான குருவிப்பூ.
    பதஞ்சலியை நான் என்றும் நம்பியதில்லை.
    அது போல இன்னும் பல குருமார்களையும் தன். ஆட்டு மந்தை போலத் தொடரும் மக்களை எண்ணி வருந்துகிறேன்.

    பெட் ரோல், ராமரை இத்தனை நாட்களுக்குப் பிறகு கையில் எடுத்திருப்பது யாரோ.

    அரசியல் குட்டையில் நாங்கள் நம்பி ஓட்டுப் போட்டு
    ஜெயித்தவரே ஏமாற்றினார்.
    யாரை நம்புவது. நோடா வை நம்பலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வினிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  23. ரசித்தேன் நண்பரே
    ஸ்ரீராம் ஜியே ஆட்சிக்கு வரட்டும்

    பதிலளிநீக்கு
  24. சிரிகவும்,சிந்திக்கவும் வைத்திருக்கு பதிவு. படங்களுக்கு உங்க கமெண்ட் அருமை.முதல் படம் அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  25. அனைத்தும் அருமை. கமெண்ட்ஸில் சாட்டையடி அடிச்சிருக்கீங்க சகோ. சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கவேண்டும் இதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி சகோ.

      நீக்கு
  26. ஒரு துளி விஷம் போல் இருக்கிறது படங்கள்... அருமை நண்பரே!..படத்தைதான் சுட முடியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தை ஸ்க்ரீன் ஷாட்டில் சுடலாமே...

      நீக்கு
  27. இந்தப் பதிவை மிஸ் செய்திருக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்தால் நோ இலவசம்!!!

    பதிலளிநீக்கு
  28. எங்கள் ப்ளாக் சைட் பாரில் இந்தப் பதிவு அப்டேட் ஆகவில்லையே.. ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்க்கட்சிகளின் சதியாக இருக்கலாம் ஜி

      நீக்கு
  29. மிகுந்த பிரயாசையுடன் சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் செய்திகள். ஓரளவு நோக்கம் நிறைவேறி விட்டது போலத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  30. சித்திக்க வைத்த பதிவு...

    பதிலளிநீக்கு