100-ஐ சுற்றி மூன்று வலம்,
இடம் தாயும், மகனும் வீட்டில்....
அம்மா
நான் சினிமாவுக்கு போகணும், நூறுரூபா கொடு.
அப்படி
என்ன சினிமா பார்க்கப் போறே கண்ணா ?
நூறாவது
நாள்.
அந்த
மாதிரி சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது நீ கெட்டுப் போயிருவே நான் பணம்
தரமாட்டேன்.
அப்படினா
அவசர போலீஸ் நூறு சினிமாவுக்கு போறேன்.
ஆங்...
உங்க அப்பா போலீஸ்ல வேலை பார்த்து கிழிச்சட்டுட்டாரு நீ வேற அவசர போலீஸாம்
அதெல்லாம் பார்க்க கூடாது.
அப்படினா
நாகேஷ் நடிச்ச நூற்றுக்கு நூறு சினிமாவுக்கு போறேன்.
முதல்ல
நூற்றுக்கு நூறு மார்க் எடுத்துட்டு வா ! அப்புறமா நூறென்ன ? நூற்றெண்பது சினிமாவுக்கு
நான் கூட்டிட்டுப் போறேன்.
அதுக்கு
நான் இன்னும் நூறு மாசம் படிக்கணுமே.
இடம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரும், மாணவனும்....
இன்னைக்கு
நாம சோசியல் பாடம் நடத்தப் போறோம். எத்திராஜ் நீ எந்திரி உனக்கிட்ட ஒரு கேள்வி
கேட்கப் போறேன் இதுக்கு நீ சரியான பதில் சொன்னால் உனக்கு நூறு மார்க் தருவேன்
சரியா சொல்லலைனா, உன் தலையில நூறு கொட்டு தருவேன் இது ரெண்டுல நீ எதை விரும்புறே ?
இது
ரெண்டையுமே நான் விரும்பலை ஸார்.
வேற
எதை விரும்புறே ?
உங்ககிட்டருந்து
ஒரு நூறு ரூபா செலவுக்கு வாங்குறதை விரும்புறேன் ஸார்.
நான்
ஏன் உனக்கு பணம் கொடுக்கணும் ?
ஏன் ஸார்
கோபப்படுறீங்க ? நூறு ரூபா கூடஇல்லாம எதுக்கு
ஸார் வாத்தியார் வேலைக்கு வர்றீங்க ?
உட்கார்டா
நீ பதிலே சொல்ல வேண்டாம்.
Place – Noor Islamic Bank Coimbatore
வணக்கம்
ஸார்.
வாங்க
வணக்கம் என்ன விசயம் ?
எனக்கு
உங்க பேங்க்ல லோன் வேணும்
உட்காருங்க
உங்க பேர் ?
நூர்
முஹம்மது.
எங்கே
வேலை செய்றீங்க ?
நூரா
ஹாஸ்பிட்டல்ல,
கல்யாணம்
ஆயிடுச்சா ?
ஆயிடுச்சு
ஸார்.
மனைவி
பேர் என்ன ?
நூர்ஜஹான்.
கல்யாணம்
ஆகி எவ்வளவு காலமாச்சு ?
இன்னையோட
நூறு நாள்தான் ஆகுது ஸார்.
சொந்த
ஊரு இதுதானா ?
ஆமா
ஸார்.
சொந்த
வீடு இருக்கா ?
இருக்கு
ஸார்.
வீடு
யாரு... பேருல இருக்கு ?
எங்க
வாப்பா, நூருல்அமீன் பேருல இருக்கு ஸார்.
வீட்ல
எத்தனை பேருக்கு பங்கு இருக்கு ?
எனக்கும்,
எங்க அண்ணன் நூருல்ஹக் ரெண்டு பேருக்கு மட்டும் ஸார்.
புது
வீடா ?
பழைய
வீடுதான் கட்டி நூறு வருசம் இருக்கும் ஸார்.
வீடு
எங்கே இருக்கு ?
நூறடி
ரோட்ல.
எத்தனை
செண்டு இருக்கும் ?
பெரிய
வீடு பின்னால காலி இடத்தையும் சேர்த்தா நூறு செண்ட் இருக்கும் ஸார்.
எவ்வளவு
லோன் எதிர் பார்க்கிறீங்க ?
ஒரு
நூறு கோடி ரூபாய்.
எவ்வளவு
நாள்ல கட்டி முடிக்கலாம் ?
ஒரு நூறு
வருசத்துல கட்டிடலாம் ஸார்.
எந்திரிய்யா
இந்த ஏரியாவ விட்டு நூறு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் போய் நிற்கணும் ஓடுயா...
இஸ்லாமிய நட்பூக்களுக்கு இனிய ரமதான் வாழ்த்துகள்.
காணொளி