தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 29, 2017

அர்த்தம் அபத்தமானது

 நான் அரபு மொழியில் உருவாக்கிய படம்

இந்தப்பதிவுக்கு வரும் நட்பூக்கள் கடந்த பதிவின் குழறுபடிகளை சரி செய்து விட்டேன் கீழ்காணும் இணைப்பை சொடுக்கி மேலோட்டமாக படித்து விட்டு இதைத்தொடர்ந்தால் தங்களுக்கு விளங்கும் நன்றி – கில்லர்ஜி

அந்த சங்கடம் என்னவென்றால் நவால் என்றொரு பெண் எல்லோருடைய பெயரைப்போல் இவளது பெயரையும் பதிவேட்டில் எழுதி வைத்துக் கொண்டே வந்தேன் மூன்று மாதம் கடந்த பிறகு அமல் என்றொரு பெண்தான் அந்த தவறை கண்டு பிடித்தாள் சத்தமில்லாமல் என்னிடமோ அல்லது நவாலிடமோ சொல்லி இருந்தால் பிரச்சனை சுமூகமாக மூக்கும் மூக்கும் வைத்தாற்போல் முடிந்திருக்கும் இவள் பதிவேட்டை எல்லோரிடமும் எடுத்துக்கொண்டு போய் காண்பித்து கில்லர்ஜி எப்படி எழுதி இருக்கிறான் பாருங்கள் என்று சொல்ல அலுவலகம் மொத்தமே சிரித்தது நவாலுக்கு வெட்கம் எனக்கு சங்கடம் ச்சே இப்படி ஆகிவிட்டதே

நவால்
Nawal
نوال

இப்படித்தான் எழுத வேண்டும் ஆனால் நான் எழுதியது இப்படி

بوال

ஏதும் வித்தியாசம் தெரிகிறதா

அந்தப்புள்ளி மேலே உள்ளது மேலிலும் கீழே உள்ளது கீழிலும் இருக்கிறதா இதுதான் பஞ்சாயத்து எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது அவளிடம் மன்னிப்பு கேட்டேன் அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தாள் உன்னால எல்லோரும் சிரிக்கிறாங்க எத்தனை தடவை இப்படி எழுதினேன் கணக்கு எடுத்தால் சுமார் இருநூறுக்கும் மேல் இந்த தருணத்தை பயன் படுத்த நஜாஹ் ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தாள்
என்ன
இருநூறு அடி வாங்கிக்க
ஏன்
செய்த தவறுக்கு
அப்படினா உன்னைத்தான் அடிக்கணும் நவால் நீ அடி நஜாஹ்தானே சொல்லிக் கொடுத்தது
ஆமா அதுவும் சரிதான் நீ வேணும்னே இப்படி எழுதகச் சொல்லி இருக்கே என அவளுடன் சண்டைக்கு கிளம்பி விட்டாள் நம் வேலை எப்பூடி

அதன் பிறகு அனைத்தையும் உட்கார்ந்து கரெக்சன் பென் வைத்து கீழுள்ள புள்ளியை அழித்து விட்டு மேலே ஒரு புள்ளியை கொடுத்து விட்டேன் வேலை முடிந்து விட்டது இந்த மாதிரி அரபு எழுதும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் சரி ஒரு புள்ளிதானே எலவு மேலே கிடந்தால் என்ன கீழே கிடந்தால் என்ன என்று கேட்கின்றீர்களா அதாவது

மேலே புள்ளி வைத்தால் நவால்
கீழே புள்ளி வைத்தால் புவால்
அதனாலென்ன

நவால் என்றால் ஒரு பெண்ணின் பெயர்
ஓகே
புவால் என்றால் என்றால் என்றால்
மூத்திரம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

49 கருத்துகள்:

 1. முதலில் வரும் நண்பருக்கு இந்த பதிவில் வார்த்தைகள் குழறுபடிகள் இருந்தால் உடன் சொல்லவும்

  பதிலளிநீக்கு
 2. கில்லர் ஜீ.

  சுவாரசியமான பதிவு. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்துபிழைப்போலவே,எனக்கு அரபு எண்களால் ஏற்பட்ட நிகழ்வை "மாறியது மாதம் மாற்றியது யாரோ?" என்ற என்னுடைய பதிவில் படித்திருப்பீர்கள்.

  அருமையான நிகழ்வு.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபாஸ்ட் ட்ராக்கில் உடனடி வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே தங்களுடைய பதிவை படித்த ஞாபகம் வருகிறது.

   நீக்கு
 3. குளறுபடி எதுவுமில்லை !
  நவால்.புவால் குளறுபடிதான் ரசிக்கும் படி இருந்தது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி
   இதில் அரபும், தமிழும் எழுதியதால் டேஷ்போர்டு குழப்பி விட்டது காரணம் இடமிருந்து வலம்., வலமிருந்து இடம் பிரச்சனை.

   நீக்கு
 4. பாருங்கோள்!..

  ஒரு புள்ளி ஒரே ஒரு புள்ளி அங்கிட்டும் இங்கிட்டுமாகப் போனதில் என்னென்ன கூத்தெல்லாம் ஆகிப் போச்சு எண்டு!...

  இதுக்குத்தான் கதைக்கிறது - எப்போழ்தும் வேலையில கவனமா இருக்க வேணுமிண்டு!.. என்ன செரிதா..னே!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   ஓம்

   அவள் நல்லவள் என்பதாலும் எமது நடத்தை சரியானதாக இருந்ததாலும் தப்பித்தேன் இல்லையெனில்...... சம்போ மஹாதேவா வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. ஹா... ஹா...

  கற்றுக் கொண்ட சிரமம் புரிகிறது ஜி...

  பதிலளிநீக்கு
 6. தைரியமா ஒரு மொழியைக் கத்துக்கிட்டீங்க. உங்கள் அனுபவம் ரசிக்கும்படி இருந்தது. தெரியாத மொழியில் பேசுவதும் எழுதுவதும் டேஞ்சர்தான்.

  மொழியைத் தவிர்த்து என் வேறொரு கணிணி அனுபவத்தை எழுதலாம், இது சென்னையில் நடந்தது. அப்போது நான் ஒரு அப்பாவி தெற்கத்தித் தமிழன். ஆனால் இப்போது வேண்டாம். உங்கள் அனுபவம் போலத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போதுதான் நீங்கள் அப்பாவி நான் இப்போதும் அப்பாவிதான் நண்பரே வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. ஹஹஹஹஹஹ....நவால்....புவால்.....

  நல்ல சுவாரஸ்யம்..... நல்ல காலம் தர்ம அடியும் கூழ் குடிக்கும் நிலையும் ஏற்படாமல் தப்பித்தீர்களே ஜி.....தலை தப்பியது....அரபு நாடாச்சே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அங்கு கூழ் கிடையாது குப்பூஸ் (சப்பாத்தி போன்ற ரொட்டி) கொடுப்பார்கள்

   நீக்கு

 8. வணக்கம் ஜி !

  புள்ளியொன்று மாறியிங்கு புசுபுசுத்தார் அங்கு -அதை
  எள்ளிநகை ஆடினாலும் எடுக்கவில்லை சங்கு
  தள்ளியவள் இருந்ததனால் தப்பித்தார் கில்லர் - அல்லால்
  உள்ளிருக்கும் உயிர்குடித்து உதைத்திருப்பார் மல்லர்

  நல்ல அனுபவம் ஜி !
  உங்கள் மேல் உள்ள நம்பிக்கை எதையும் இலகுவாய் எடுத்துக்க வைத்தது இல்லையேல் அய்யய்யோ ........?


  தமன்னா +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே மாத்து வாங்குவதைக்கூட கவிதையில் சொல்கிறீர்களே அருமை ரசித்தேன்.

   நீக்கு
 9. மொழியைக் கற்றுக் கொண்ட உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. சின்னப்ப புள்ளியால் எவ்வளவு மாற்றம்! பதிவு சரியாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ஜியின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி

   நீக்கு
 10. ஆகா
  ஒரு புள்ளியால், அர்தத்ம் அனர்த்தனமாகிவிட்டதே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எழுதுவது மட்டுமல்ல பேசும் பொழுதும் உச்சரிப்பில் கவனம் வேண்டும்.

   நீக்கு
 11. தட்டுல உள்ள மிக்சர் சிதறல்கள் (அரபு மொழியில் உருவாக்கிய படம்) என்னன்னு சொல்லலயே? யாரும் கேட்கவும் இல்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரபு மொழியின் மொத்த எழுத்துக்களையும். எண்களையும் எழுதி இருக்கிறேன் இவ்வளவுதான் இவைகள்தான் எழுதும் பொழுது கோர்வையாக வரும்.
   மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 12. கில்லர்ஜீ
  அனைத்து மொழிகளிலும் இது போன்ற தர்மசங்கட நிலை ஏற்படுவது உண்மையே!
  உம்:
  மாளிகை
  மளிகை

  சீதை
  சிதை

  மர்யம்
  மாயம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன்.

   ஆம் நண்பரே உண்மையே நிறைய உள்ளது.பிலிப்பைன்ஸ் மொழியில் "எலைய தலைவிதி" வெசய் நடித்த "போக்கிரி" படத்தை கூட சொல்ல முடியவில்லையே..

   நீக்கு
 13. அரபு எண்கள் , எழுத்துக்கள் படம் பார்த்து தெரிந்து கொண்டேன். ஒரு புள்ளி மாறி போனதால் ஏற்பட்ட சிக்கல் தர்மசங்கட நிலை எல்லாம் மொழியை கவனமாய் படிக்க உங்களுக்கு உதவிஇருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 14. 'கைஃப ஹாலுக்க யா முஅல்லிம்" :)

  அரபி மொழியும் தமிழ் மொழி போல் அற்புதமானது. சிறிய வார்த்தைக்குள் பெரிய கருத்துக்களைச் சொல்ல முடியும்.

  பூமி சுற்றுகிறது என்பதை 'குல்லுன் ஃபீ ஃபலக்' என்று குர்ஆன்
  சொல்லுகிறது. இதில் எழுத்தைக் கவனித்தால் 'ك ل ف ' என்ற மூன்று எழுத்துக்களும் சுற்றி வரும்.

  இன்னொரு இடத்தில் 'இறைத்தூதர்களுக்கு அந் நகர வாசிகள் உணவளிக்க மறுத்தனர். மறுத்தமைக்கு 'அபா' என்றிருக்கும்.

  அவ்வூர்வாசிகள் நபியவர்களிடம் வந்து 'எங்கள் முன்னோர் உணவளிக்காதது எங்களுக்கு அவமானமாய் இருக்கிறது. எனவே
  'ب' ல் உள்ள ஒரு புள்ளிக்கு பதிலாக மேலே இரண்டு புள்ளிகள்
  இட்டால் (ت) 'அதா' என்றாகிறது. 'கொடுத்தார்கள்' என்று பொருள். அதனால் ஒரேயொரு புள்ளியைச் சேர்க்கச் சொல்லி கோரிக்கை வைத்தார்கள். நடந்தது நடந்ததுதான் ; புள்ளியைக்கூட மாற்றமுடியாது என்று நபியவர்கள் சொல்லி விட்டார்கள்.

  பதிவு குவைஸ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல் ஹம்துலில்லாஹ் ஃபத்தல் யா அஹி அரபுத்தமிழன்.
   அழகான விளக்கம் தந்தமைக்கு நன்றி

   ك ل ف க்காஃப், லாம், ஃபா இந்த மூன்றும் சேர்ந்தால் كلف வருகிறது. வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. كل في فلك
   குல்லுன் = ஒவ்வொன்றும்
   ஃபீ ‍ ‍= அதன்
   ஃபலக் = வட்டவரையில் (சுழல்கின்றன‌)

   குல்லுன் ஃபீ = காஃப் லாம் ஃபா
   ஃபலக் = ஃபா லாம் காஃப் :)

   நீக்கு
  3. விளக்கம் நன்று மீள் வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 15. இன்னொரு மொழியை ஆர்வத்துடன் கற்று அதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்! நல்ல அனுபவம். ரசனையோடு எழுதி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. நவால் ....புவால் ...

  ஒரு புள்ளியால் எத்தனை சிரமம்...அடடா...

  நல்அனுபவம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ''நல்'' அனுபவமா ? என்னை ''கொல்''லாமல் விட்டானுங்களே...
   வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
  2. ‘கொல்’ என்று சிரிக்க வைக்கும் அனுபவம் கில்லர்ஜி!

   நீக்கு
  3. வருக நண்பரே கொல்"லக்கூடிய விசயம்தான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 17. ஒரு மொழியைக் கற்றால் மட்டும் போதாது. அதை தவறில்லாமல் பயன்படுத்தவும் தெரியவேண்டும் என்பதை தங்களின் அனுபவம் சொல்கிறது. எனக்கும் இது போன்ற அனுபவம் கன்னட மொழியைக் கற்றுக்கொண்டபோது ஏற்பட்டது.
  பதிவை இரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான விடயம் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 18. அது என்னது மூக்கும் மூக்கும் வைத்தாற்போல்......????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவ்வளவு காலம்தான் நண்பரே காதும், காதும் வச்சதுபோல் என்று சொல்வது ?

   மேலும் அரேபியர் நலம் விசாரிக்கும் பொழுது மூக்கோடு மூக்கு உரசுவார்கள்.

   நீக்கு
 19. தமிழைப்போல அரபுவும் நுணுக்கமான மொழிப்போல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குத் தெரிய எல்லா மொழிகளுமே ஏதாவது ஒருவகையில் சிறப்பம்சமாகவே தெரிகிறது.

   நீக்கு
 20. ஒரு புள்ளிக்கு இத்தனை
  பொருள் வித்தியாசமா ?
  ஆச்சரியமாய் இருக்கிறது
  பதிவு வெகு சுவாரஸ்யம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே இது பல சுவாரஸ்யமான வார்த்தைகள் உண்டு பிறகு எழுதுகிறேன்.

   நீக்கு
 21. ஹா ஹா நவால்... புவால்.. செம காமெடி..! அதுவும் 200 தடவை எழுதி இருக்கீங்க :) :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விட்டிருந்தால் 2000 முறை எழுதியிருப்பேன் றஜீவன்.

   நீக்கு
 22. ஒரு புள்ளியின் இனிடம் நவாலை புவாலாக்கி விடுமா கோலத்துக்குப் புள்ளிகள் முக்கியம் அரபிக்கும் அது முக்கியம் போல் இருக்கிறது உங்களைச் சொல்லிக் குற்றமில்லை அது புள்ளிசெய்த குற்றமையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா சொன்னதற்காக வந்தமைக்கு நன்றி

   நீக்கு
 23. என் டாஷ் போர்டில் உங்கள் பதிவு வந்தபோது நிதானமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் எப்படியோ மிஸ் ஆகி விட்டது அதனால் நீங்கள் சொன்னதற்காக வந்தது போல் ஆயிற்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் முடிவு தெரிவிப்பதற்காக சொன்னேன் ஐயா ஏதோ டேஷ்போர்டு பிரச்சனை என்று நினைத்தேன் மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு