தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 03, 2017

என் காதல், உன் காதில் சொல்வேன்


என்னை அவளுக்கு பிடித்ததற்கு காரணம்
அவள் நிழலைக்கூட நான் தொடாதது...

அவளை எனக்கு பிடித்ததற்கு காரணம் 
அவள் தன் நிழலைக்கூட தொட விடாதது...

உன்னை எனக்கும், என்னை உனக்கும் பிடித்தென்ன லாபம் ரதியே இது விதி என்னும் சதியனுக்கு பிடிக்கவில்லையே... ? 

உம்மை ஒரு நாள் மறந்திருப்போம் அன்று நிச்சயம் யாம் இறந்திருப்போம்.

சனி, ஜூலை 01, 2017

வாக்காளர்கள்...


சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் மஞ்சுளா என்பவரால் எழுதப்பட்ட சிறு கவிதை இன்னும் என் மனதில் பதிந்து கிடக்கின்றது.

அழியாமைக்கு விரல் நீட்டும் அறியாமைகள்.
              - கே.மஞ்சுளா

நான் காணா சகோதரி மஞ்சுளா இதுவரையிலும் நான் இந்த அறியாமை பட்டியலுக்குள் வரவில்லை என் இறுதிக்காலம் வரையிலும் என உறுதி சொல்ல முடியும்.

வாக்களிக்காமல் இருப்பது முட்டாள்தனமானது என்று சொல்பவர்களுக்கு கடந்த 70 ஆண்டுகளில் 65 ஆண்டு காலமாக வாக்களித்து விட்டு ஏமாந்து நிற்பது மட்டும் முட்டாள்த்தனமாக உன் மனதிற்கு படவில்லையா ?

உனக்கு எப்படித்தெரியும் முதலில் நீ நியாயமான நியாயம் பேசும் மானிடனாக இருப்பதில்லை உண்மையான உண்மை பேசும் மானிடனாக இருப்பதும் இல்லை இரண்டு கைகளை வீசிக்கொண்டு இரண்டு காலில் நடந்து செல்லும் ஜந்துக்கள் எல்லோருமே மானிடர்கள் கிடையாது நூறு ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டுப் போடச் செல்லும் ஜந்து வழியில் மூத்திரச்சந்து ஓரம் இருநூறு ரூபாய் கிடைத்தால் மற்றவனுக்கு ஓட்டுப் போடும் இந்த ஜந்துவை எப்படி அறிவுள்ள மானிடன் என்று சொல்வது ?

பரமக்குடி டீக்கடையில் ஒருநாள் எனது தந்தை வயதிருக்கும் அவர் சிம்புவை என் தலைவன் என்கிறார் இந்த ஜடத்தை எல்லாம் எப்படி மானிடன் என்பது ?

பின்குறிப்பு : என் வாழ்வில் தவறு என்று தெரிந்தே நான் செய்யும் தவறு வாக்களிக்காமை காரணம் ஒரு நன்மைக்கு வேண்டி..... ஒரு உயிரைக் காப்பாற்ற ஒருபொய் சொல்லலாமென அய்யா மஹாத்மா சொல்ல வில்லையா ? அதைப் போலவே இதுவும் இருக்கட்டுமே.... ஒருரூபாய் சம்பளம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்து இன்று பலரும் உரிமை கொண்டாடி சண்டையிடுவதற்கு காரணமானவரை முதலில் கைது செய்யட்டும் இது தவறு என்று அரசு சொன்னால் சட்டப்படி பெட்டி பெரியசாமியை வைத்து பார்த்துக்கொள்ள நான் தயார் - கில்லர்ஜி.

சிவாதாமஸ்அலி-
மேலே போனவரை எப்படி கைது செய்யமுடியும் ? 

வியாழன், ஜூன் 29, 2017

அர்த்தம் அபத்தமானது

 நான் அரபு மொழியில் உருவாக்கிய படம்

இந்தப்பதிவுக்கு வரும் நட்பூக்கள் கடந்த பதிவின் குழறுபடிகளை சரி செய்து விட்டேன் கீழ்காணும் இணைப்பை சொடுக்கி மேலோட்டமாக படித்து விட்டு இதைத்தொடர்ந்தால் தங்களுக்கு விளங்கும் நன்றி – கில்லர்ஜி

அந்த சங்கடம் என்னவென்றால் நவால் என்றொரு பெண் எல்லோருடைய பெயரைப்போல் இவளது பெயரையும் பதிவேட்டில் எழுதி வைத்துக் கொண்டே வந்தேன் மூன்று மாதம் கடந்த பிறகு அமல் என்றொரு பெண்தான் அந்த தவறை கண்டு பிடித்தாள் சத்தமில்லாமல் என்னிடமோ அல்லது நவாலிடமோ சொல்லி இருந்தால் பிரச்சனை சுமூகமாக மூக்கும் மூக்கும் வைத்தாற்போல் முடிந்திருக்கும் இவள் பதிவேட்டை எல்லோரிடமும் எடுத்துக்கொண்டு போய் காண்பித்து கில்லர்ஜி எப்படி எழுதி இருக்கிறான் பாருங்கள் என்று சொல்ல அலுவலகம் மொத்தமே சிரித்தது நவாலுக்கு வெட்கம் எனக்கு சங்கடம் ச்சே இப்படி ஆகிவிட்டதே

நவால்
Nawal
نوال

இப்படித்தான் எழுத வேண்டும் ஆனால் நான் எழுதியது இப்படி

بوال

ஏதும் வித்தியாசம் தெரிகிறதா

அந்தப்புள்ளி மேலே உள்ளது மேலிலும் கீழே உள்ளது கீழிலும் இருக்கிறதா இதுதான் பஞ்சாயத்து எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது அவளிடம் மன்னிப்பு கேட்டேன் அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தாள் உன்னால எல்லோரும் சிரிக்கிறாங்க எத்தனை தடவை இப்படி எழுதினேன் கணக்கு எடுத்தால் சுமார் இருநூறுக்கும் மேல் இந்த தருணத்தை பயன் படுத்த நஜாஹ் ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தாள்
என்ன
இருநூறு அடி வாங்கிக்க
ஏன்
செய்த தவறுக்கு
அப்படினா உன்னைத்தான் அடிக்கணும் நவால் நீ அடி நஜாஹ்தானே சொல்லிக் கொடுத்தது
ஆமா அதுவும் சரிதான் நீ வேணும்னே இப்படி எழுதகச் சொல்லி இருக்கே என அவளுடன் சண்டைக்கு கிளம்பி விட்டாள் நம் வேலை எப்பூடி

அதன் பிறகு அனைத்தையும் உட்கார்ந்து கரெக்சன் பென் வைத்து கீழுள்ள புள்ளியை அழித்து விட்டு மேலே ஒரு புள்ளியை கொடுத்து விட்டேன் வேலை முடிந்து விட்டது இந்த மாதிரி அரபு எழுதும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் சரி ஒரு புள்ளிதானே எலவு மேலே கிடந்தால் என்ன கீழே கிடந்தால் என்ன என்று கேட்கின்றீர்களா அதாவது

மேலே புள்ளி வைத்தால் நவால்
கீழே புள்ளி வைத்தால் புவால்
அதனாலென்ன

நவால் என்றால் ஒரு பெண்ணின் பெயர்
ஓகே
புவால் என்றால் என்றால் என்றால்
மூத்திரம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதன், ஜூன் 28, 2017

வலிச்சா, வலிப்போக்கனிடம் போ !



தொடக்கத்தில் வந்த திரு ஜியெம்பி ஐயா அவர்கள் எழுத்தில் பிழைகள் இருக்கிறது என்று சொல்லிப்போனார் பிறகு செல்லில் வந்த ஸ்ரீராம் ஜி மற்றும் வாட்ஸ்அப்பில் வந்த தில்லை அகத்தாரும் வார்த்தைகள் குழறுபடியாக இருக்கிறது என்று சொன்னதால் மீண்டும் முழுமையாக எழுதினேன் இதில் கேள்விக்குறிகள் புள்ளிகள் அடைப்புக்குறிகள் இல்லை பொருத்தருள்க - கில்லர்ஜி

அபுதாபி வருடம் 2003
எனக்கு அரபு மொழி நன்றாக பேசத்தெரியும் பியூனாக இருந்து ஃபைலிங் கிளர்க்காக நுழைக்கப்பட்டபோது அரபு மொழியை எழுதிப்பழகும் பழகியே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன் எனது அலுவலகத்தில் வேலை செய்யும் அரபிப்பெண்களே கற்றுக்கொடுத்தார்கள் இதில் நஜாஹ் என்ற இளம் அரபிப் பெண்ணொருத்தி அவள்தான் கூடுதல் கற்றுக்கொடுத்தாள் என்று சொல்ல முடியும் அவரவர் வேலை நடந்து கொண்டு இருக்கும் அதன் மத்தியில் வேலையோடு வேலையாக எனக்கும் பயிற்சி நடக்கும் தவறாக எழுதில் விட்டால் அவளிடம் எனது கையில் புறகின் மொளியில் ஸ்கேலால் ஒரு அடி வாங்கி கொள்ளவேண்டும் என்பதும் அவளை நான் ஒஸ்தாத் என்றே அழைக்கவேண்டும் என்பதும் நாங்கள் வகுத்துக்கொண்ட எழுதப்படாத நீதி சரி கழுதை விளையாட்டுக்குத்தானே சொல்கிறாள் என்று நானும் ஒத்துக்கொண்டேன் முதல்நாளே பனிரெண்டு அடி மொளி பெயர்ந்து விட்டது என்னடா இது அரபு மொழி பழகுறதுக்குள்ளே நம் கைமொளியை பேர்த்திடுவாள் போலயே

என்ன நீ வலிக்கிற மாதிரி அடிக்கிறே
வலிச்சா வலிப்போக்கனிடம் போ நான் சொல்லித் தரமாட்டேன் என்றாள் சரி வலிப்போக்கனிடம் அரபி சொல்லித்தர முடியுமா என்று கேட்போம் என்றால் அவருடைய தொலைபேசி இலக்கமும் இல்லை நமது குருந்தன் வாத்தியார்கூட அடிச்சதில்லையே இவள் அடிக்கிறாளே... ஒருவேளை பூர்வஜென்ம பந்தமோ வேறு வழியின்றி சீக்கிரமாக அரபு பழகவேண்டும் இதற்காக சாலையில் நடந்து செல்லும் பொழுது அங்காடிகளில் எழுதியிருக்கும் பெயர்ப்பலகைகளில் அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும் இவைகளை படித்துக்கொண்டே போவேன் இப்படி போகும் வேளையில் பலமுறை சாலையில் நடந்து செல்லும் இளம் பிலிப்பைன்ஸ் பெண்களை தெரியாத்தனமாக இடித்து விட்டு அவர்களது மொழியில் நாக்ஸிஸிஸி என்று சொல்லி மன்னிப்பு கேட்டும் சென்றது உண்டு

ஆறு மாதங்களில் இவளது அடிக்குப்பயந்து அதேநேரம் தொடக்கம் முதலே அழகாக எழுதப்பழகி விட்டேன் இதை பெருமைக்காக சொல்லவில்லை அவர்களே உனது எழுத்து அழகாக இருக்கிறது என்று சொன்னது இருக்கட்டும் எனக்கே தெரியும் காரணம் இவர்களில் பலருக்கும் எழுத்து அழகாக வராது இந்த அலுவலகத்தில் அரேபியர் சூடானியர் பாலஸ்தீனியர் எஜிப்தியர் ஒமானியர் யெமனியர் சிரியர் ஜோர்டானியர் அனைவருக்குமே தாய்மொழி அரபுதான் சுமார் நூற்றி இருபது ஊழியர்கள் வேலை செய்தாலும் இதில் ஆயிஷா என்ற அரபுப்பெண்ணின் எழுத்துதான் மிகவும் அழகாக இருக்கும் நான் சவால் விட்டு சொல்வேன் ஆயிஷாவின் எழுத்துதான் அழகு என்று ஆயிஷா எழுதும் பொழுது நான் அருகில் நின்று கவனித்து ரசிப்பேன் ஆயிஷாவுக்கு திருமணம் ஆனது இப்பொழுது அலுவலகத்தில் இல்லை

சரி விசயத்துக்கு வருவோம் ஆரம்பத்தில் எனக்கு கணினி கொடுக்கவில்லை கோப்புகள் வெளியே போகும் உள்ளே வரும் தேதிகளும் எடுத்தவர்களின் பெயர்களும் பதிவேட்டுகளில்தான் எழுதினேன் நான் நினைத்திருந்தால் ஆங்கிலத்திலேயே தொடர்ந்திருக்கலாம் அந்த தருணத்தில்தான் தேவகோட்டை மூளையின் மூலையோரத்தில் ஒரு மின்னல் வரிகள் ஓடியது நாமும் அரபு மொழியில் எழுதினால் என்ன காரணங்கள் இரண்டு உண்டு முதலாவது நான் விடுமுறை என்றால் அவர்கள் பதிவேட்டை பார்த்துக்கொள்வார்கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது அடுத்தது இதையே காரணமாக வைத்து நாமும் ஓசியில் அரபி படித்து விடலாம் ஒரே கத்தி குத்து ரெண்டு

பிறகு கணினி கொடுத்தார்கள் வாழ்வில் முதல் முறையாக படிக்காத பாமரனுக்கு கணினியில் வேலை பெருமையாக இருந்தது அரபு மொழியில் டைரி டைப்பி பென் டிரைவரில் சேமிக்கும் பழக்கத்தை தொடங்கினேன் பிறகு இணையம் கொடுத்தார்கள் கிளி கையில் கோவைப்பழத்தை கொடுத்தால் என்னாகும் கிளி கிலி கிழிதானே அப்படி இப்படி எப்படியோ வலைப்பூவை கண்டு விட்டேன் விடுவேனா

எனக்கு புதிதாக ஒருவர் ஒரு விடயம் சொல்லிக்கொடுத்தார் என்றால் அதிலிருந்து அவருக்கே தெரியாத மற்றொன்றை தேடிப்பிடித்து விடுவேன் இது எனக்கு இறைவன் கொடுத்த அன்பளிப்பு என்றே பலதருணங்களில் நினைத்து இருக்கினேன் அரபு மொழியில் ஒரு சிறப்பு என்னவென்றால் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் நமது வசதிக்கு எழுதமுடியும் உதாரணத்திற்கு கில்லர்ஜி என்ற எனது இனிமையான கனிவான பெயரைக்கூட ஒரு அழகிய தாமரையைப் போலவோ அல்லது அழகான உங்கள் கில்லர்ஜியின் உருவத்தைப் போலவோ ஒரு விமானத்தைப் போலவோ எழுதலாம் அதேநேரம் ஒரு சிறியபுள்ளி மாறி வந்தாலும் அர்த்தம் அபத்தமாகி விடும் இப்படித்தான் நானும் ஒருநாள் சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன் அது என்ன வென்றால்
தொடரும்

திங்கள், ஜூன் 26, 2017

நூர் இஸ்லாமிய வங்கி

100-ஐ சுற்றி மூன்று வலம்,

இடம் தாயும், மகனும் வீட்டில்....
அம்மா நான் சினிமாவுக்கு போகணும், நூறுரூபா கொடு.
அப்படி என்ன சினிமா பார்க்கப் போறே கண்ணா ?
நூறாவது நாள்.
அந்த மாதிரி சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது நீ கெட்டுப் போயிருவே நான் பணம் தரமாட்டேன்.
அப்படினா அவசர போலீஸ் நூறு சினிமாவுக்கு போறேன்.
ஆங்... உங்க அப்பா போலீஸ்ல வேலை பார்த்து கிழிச்சட்டுட்டாரு நீ வேற அவசர போலீஸாம் அதெல்லாம் பார்க்க கூடாது.
அப்படினா நாகேஷ் நடிச்ச நூற்றுக்கு நூறு சினிமாவுக்கு போறேன்.
முதல்ல நூற்றுக்கு நூறு மார்க் எடுத்துட்டு வா ! அப்புறமா நூறென்ன ? நூற்றெண்பது சினிமாவுக்கு நான் கூட்டிட்டுப் போறேன்.
அதுக்கு நான் இன்னும் நூறு மாசம் படிக்கணுமே.

இடம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரும், மாணவனும்....
இன்னைக்கு நாம சோசியல் பாடம் நடத்தப் போறோம். எத்திராஜ் நீ எந்திரி உனக்கிட்ட ஒரு கேள்வி கேட்கப் போறேன் இதுக்கு நீ சரியான பதில் சொன்னால் உனக்கு நூறு மார்க் தருவேன் சரியா சொல்லலைனா, உன் தலையில நூறு கொட்டு தருவேன் இது ரெண்டுல நீ எதை விரும்புறே ?
இது ரெண்டையுமே நான் விரும்பலை ஸார்.
வேற எதை விரும்புறே ?
உங்ககிட்டருந்து ஒரு நூறு ரூபா செலவுக்கு வாங்குறதை விரும்புறேன் ஸார்.
நான் ஏன் உனக்கு பணம் கொடுக்கணும் ?
ஏன் ஸார் கோபப்படுறீங்க ? நூறு ரூபா கூடஇல்லாம எதுக்கு ஸார் வாத்தியார் வேலைக்கு வர்றீங்க ?
உட்கார்டா நீ பதிலே சொல்ல வேண்டாம்.

Place – Noor Islamic Bank Coimbatore
வணக்கம் ஸார்.
வாங்க வணக்கம் என்ன விசயம் ?
எனக்கு உங்க பேங்க்ல லோன் வேணும்
உட்காருங்க உங்க பேர் ?
நூர் முஹம்மது.
எங்கே வேலை செய்றீங்க ?
நூரா ஹாஸ்பிட்டல்ல,
கல்யாணம் ஆயிடுச்சா ?
ஆயிடுச்சு ஸார்.
மனைவி பேர் என்ன ?
நூர்ஜஹான்.
கல்யாணம் ஆகி எவ்வளவு காலமாச்சு ?
இன்னையோட நூறு நாள்தான் ஆகுது ஸார்.
சொந்த ஊரு இதுதானா ?
ஆமா ஸார்.
சொந்த வீடு இருக்கா ?
இருக்கு ஸார்.
வீடு யாரு... பேருல இருக்கு ?
எங்க வாப்பா, நூருல்அமீன் பேருல இருக்கு ஸார்.
வீட்ல எத்தனை பேருக்கு பங்கு இருக்கு ?
எனக்கும், எங்க அண்ணன் நூருல்ஹக் ரெண்டு பேருக்கு மட்டும் ஸார்.
புது வீடா ?
பழைய வீடுதான் கட்டி நூறு வருசம் இருக்கும் ஸார்.
வீடு எங்கே இருக்கு ?
நூறடி ரோட்ல.
எத்தனை செண்டு இருக்கும் ?
பெரிய வீடு பின்னால காலி இடத்தையும் சேர்த்தா நூறு செண்ட் இருக்கும் ஸார்.
எவ்வளவு லோன் எதிர் பார்க்கிறீங்க ?
ஒரு நூறு கோடி ரூபாய்.
எவ்வளவு நாள்ல கட்டி முடிக்கலாம் ?
ஒரு நூறு வருசத்துல கட்டிடலாம் ஸார்.
எந்திரிய்யா இந்த ஏரியாவ விட்டு நூறு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் போய் நிற்கணும் ஓடுயா...

இஸ்லாமிய நட்பூக்களுக்கு இனிய ரமதான் வாழ்த்துகள்.
காணொளி