தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 01, 2016

மலைகளோடு, மடு


வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு கடந்த வருடம் வலைஞர்கள் சங்கம் நடத்திய குலுக்கல் பரிசு மூன்று நபர்களுக்கான இந்தியாவின் சென்னையிலிருந்து U.K. லண்டன் சென்று வருவதற்கான விசா, பயணச்சீட்டு, தங்குமிடம், மற்றும் உணவுச்செலவு ஆகியவை பதிவர்கள் 

திரு. ஜியெம்பி அவர்கள் பெங்களூரு, முனைவர் திரு. பழனி கந்தசாமி அவர்கள் கோயமுத்தூர் மற்றும் திரு. கில்லர்ஜி தேவகோட்டை 

இவர்கள் மூன்று பேருக்கும் பரிசு கிடைத்தது தாங்கள் அனைவரும் அறிந்ததே இதோ அவர்கள் லண்டன் சென்று வந்த பயண அனுபவம் பற்றி எழுதுபவர் தேவகோட்டை திரு. கில்லர்ஜி அபுதாபியிலிருந்து.


இடம் : லண்டன் ப்ளீட்வோண்ட் பார்க் மாலை நேரம் 5:30
பங்களிப்போர் : திரு. ஜியெம்பி ஐயா, முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா மற்றும் கத்துக்குட்டி கில்லர்ஜி

கந்தசாமி சார் பூங்கா எவ்வளவு அழகாக பராமரிக்கிறாங்க.... நம்மூருல இதையேன் ஃபாலோ பண்ண மாட்றாங்க ?
ஜியெம்பி சார் இதற்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லி பயனில்லை மக்கள் முதலில் ஒழுக்கமான பழக்க வழக்கத்துக்கு வரணும் அதோ பாருங்க அந்தப் பெரியவர் எழுந்து போய் குடித்த கூல்ட்ரிங்ஸ் டின்னை குப்பைத் தொட்டியில் போட்டு வர்றாரு... இதுதான் அடிப்படை காரணம்.

பெங்களூருல லால் பார்க், கப்பன் பார்க் அதுவும் ஓரளவு இதே தரத்துக்கு பராமரிக்கத்தான் செய்யிறாங்க... தமிழ் நாட்டுல பேருலதான் பார்க் இருக்கு.
அது தமிழன் வாழுற நாடு அப்படித்தான் இருக்கும் அதோ பாருங்க ஒரு பொடியனை தமிழ்க் குடும்பம் மாதிரித்தான் இருக்கு குப்பையை எத்தி விளையாடுறான் அதை தடுக்கிறாங்களா ? இல்லையே இதுதான் நமது வளர்ப்பு முறை. 

ஐயா நான் போய் ஸ்டாலில் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா ?
நல்லது கில்லர்ஜி எனக்கு இளநீர் டின்ல வச்சு இருந்தாங்கே அதை வாங்கிட்டு வாங்க, ஜியெம்பி உங்களுக்கு ?
கில்லர்ஜி எனக்கு கொக்ககோலா டின் வேண்டாம் அதோ அந்த ஸ்டாலில் ஃப்ரெஸ்சா... கப்’’ல ஸ்ட்ரா போட்டுத் தர்றான் அதை வாங்கிக்கங்க....
சரி ஐயா போயிட்டு வாறேன்.
கில்லர்ஜி இடத்தை காலி செய்ததும்...

என்ன சார் கில்லர்ஜிகிட்டே கொக்ககோலா வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கீங்க ?
ஏன்... கந்தசாமி சார் அதனாலென்ன ?

கில்லர்ஜி கோக்குமாக்கான ஆளு அவரு... கொக்ககோலாவுல எதையாவது போட்டு வாங்கிட்டு வந்துட்டா ? இதுக்குத்தான் நான் டின் வாங்கச் சொன்னேன்.
என்ன சார் நீங்க... நானே வயிற்றுக்கு ஒரு மாதிரியா இருக்கேன்னு கோலா வாங்கச் சொன்னேன் நீங்க மேற்கொண்டு வயிற்றைக் கலக்குறீங்க ?

எனக்கு தோணுச்சு சொன்னேன் ஏன்னா கில்லர்ஜி பதிவு எழுதும் போது நான் வேற மா3 அப்படின்னு தலைப்பு வச்சதிலருந்து நான் இவருக்கிட்டே கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கேன்.
இப்ப என்ன செய்யிறது கொக்ககோலா குடிக்கவா ? வேண்டாமா ?

எதுக்கும் அவர் வரட்டும், அவருக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்காருன்னு... பார்ப்போம் சூழ்நிலையை வச்சு நான் கண்ணைக் காட்டுறேன் நீங்க கோலாவை அவரைக் குடிக்கச் சொல்லுங்க அவருக்கு வாங்கிட்டு வந்ததை நீங்க குடிங்க அவரு தயங்காமல் குடிக்கிறாரான்னு பார்ப்போம்.
நல்லது நீங்க சொல்றபடியே செய்வோம்.

கில்லர்ஜி பெரிய பேப்பர் பேக்கிங்கோடு வந்து கீழே உட்கார்ந்து பிரித்து வைத்து கந்தசாமி ஐயாவுக்கு இளநீர் டின்னும், ஜியெம்பி ஐயாவுக்கு, கொக்ககோலா ஃப்ரெஸ்ஸூம் ஸ்டாராவும் எடுத்துக் கொடுக்க... ஜியெம்பி ஐயா, கந்தசாமி ஐயாவைப் பார்க்க...

என்ன கில்லர்ஜி உங்களுக்கு வாங்கலையா ?
இதோ பாருங்கள் ஸூப்பர் ஐயிட்டம்.

இதென்ன.... இவ்வளவு நீளமா புதுசா இருக்கு ?
ஆமாங்கய்யா... ½ லிட்டரு இதுக்குப்பேரு... மேல்ட்மெல்ட் ஸூப்பரா இருக்கும் மேலுகாலுக்கு நல்லதாம் வயிற்றில் ஏதும் அஜீரணம் ஆகாமல் இருந்தால் உருட்டி வெளியே கொண்டு வந்துடுமாம் நாமலே டூர் வந்ருக்கோம் வந்த இடத்தில் வயிற்றை சுத்தமாக வச்சுக்கிறது நல்லதுதானே கீழே குறிப்பு கொடுத்து இருக்காங்கே... படிச்சுப் பார்த்தேன் அதான் ரெண்டு வாங்கி கிட்டேன்.

ரெண்டா ? இது நல்லாயிருக்கும்னு உங்களுக்கு எப்படித்தெரியும் ?
நேற்று கேம்ஸ் ப்ரிட்ஜ் போனோமே.... அப்ப நீங்க ரெண்டு பேரும் விஞ்ஞான வளர்ச்சியை தடுக்க முடியுமா’’ன்னு பேசிக்கிட்டு இருந்தீங்கள்ல அப்ப அங்கே மிஷின்ல இருந்துச்சு காய்ன்ஸ் போட்டு எடுத்து குடிச்சேன்.

அப்ப எங்களுக்கு வாங்கலையே.... ?
நீங்க பேச்சுல மும்முரமாக இருந்தீங்க... அதனாலதான் விட்டுட்டேன்.

டின்னே எவ்வளவு அழாகாக இருக்கு.
ஆமா ஜியெம்பி கொக்ககோலாவை கில்லர்ஜிக்கு கொடுத்துட்டு நீங்க ஒரு டின் வாங்கிகங்க... கில்லர்ஜி எனக்கு ஒண்ணு கொடுங்க...

என்னங்கய்யா... உங்களுக்குத்தான் இளநீர் இருக்கே ?
இளநீரையும் நீங்களே குடிங்க நேற்று எங்களுக்குத் தெரியாமல் குடிச்சீங்கள்ல அதுக்குத் தண்டனை.

இருவரும் ஆளுக்கு ஒரு மேல்ட்மெல்ட் டின் வாங்கி ஓஃபன் செய்து குடிக்க கில்லர்ஜி கொக்ககோலாவையும், இளநீரையும் மாற்றி மாற்றி குடிக்கவும்...

கில்லர்ஜி முதல்ல கொக்ககோலாவை மட்டும் குடிங்க...
ஐயா இளநீர்ல... இயற்கையாகவே குளிர்ச்சி இருக்கு, அதேபோல கொக்ககோலாவுல Azecitye Fratings அப்படிங்கிற எஸன்ஸ் மிக்ஸ் பண்ணுறாங்க இது உடல் குளிச்சியை 85 % செண்டி மீட்டர் அளவுக்கு மேலே போக விடாமல் தடுக்கும் அப்ப கொக்ககோலா குடிக்கும்போது இளநீரையும் சமநிலைக்கு மிக்ஸாக்கி குடிச்சா அதுக்கு எதிர்புறமாக வேலை செய்து குடல்வாயுவை திறந்து விடும் இதனால் குடல்புண் வர்றதை தடுத்து விடும் இதுக்காகத்தான் நான் மிக்ஸ் பண்ணிக்கிட்டே குடிக்கிறேன்.

இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் ?
ஐயா நான் ஸைக்காலஜி படிக்கும் போது இதையும் கத்துக்கிட்டேன்.

ஸைக்காலஜியில இதெல்லாம் சொல்லித் தர்றாங்களா ?
கந்தசாமி சார் கில்லர்ஜி விபரமான ஆளுதான் எவ்வளவு விபரம் தெரிஞ்சு வச்சு இருக்காரு...

சரிதான் இந்த மேல்ட்மெல்ட் நல்லாத்தான் இருக்கு இதோட அளவுதான் அதிகமாக இருக்கு பசியடங்கி விடும் போலயே...
சரி கில்லர்ஜி கிளம்புங்க இப்படியே... வாக்கிங்கா.. லாட்ஜுக்கு போவோம் ஒரு மாதிரியா இருக்கு.
ஆமா ஜியெம்பி சார் எனக்கும் அப்படித்தான் இருக்கு நடங்க...

மூவரும் குடித்துக் கொண்டே பக்கத்தில் இருக்கும் Le Meridian Hotel-லை நோக்கி நடந்தார்கள்.

தொடரும்...

43 கருத்துகள்:

 1. நடந்தார்கள் என்பதை நம்ப மாட்டேன் ,நீங்கள் டாய்லெட்டை நோக்கி ஓடியிருக்கணுமே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடந்ததையும், நடக்கப் போவதையும் பகவான்ஜி அறிவார்

   நீக்கு
 2. அருமையான தங்களின் இலண்டன் பயணத்தில் நானும் பயணிக்கிறேன் ஐயா.நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஆரம்பமே கலக்கலா இருக்கு. தொடருங்க. நாங்க கூடவே வர்ரோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்ட நாயகன் முனைவர் ஐயாவுக்கு நடந்தவை ஏற்கனவே அறியுமே...

   நீக்கு
 4. "கலக்கல்" தான்! ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. இதுல ஏதோ வில்லங்கம் இருக்கிறதே! இப்படியா? ஏற்கனவே வயதானவர்கள் தள்ளாடுவார்கள் இதில் உங்கள் பானம் வேறு ஹும் ஒழுங்கா நடந்து போனாங்க்ளா இல்லையா? ஹஹஹ் நீங்கள் மீண்டும் வேறு ஏதேனும் தேடிச் சென்றிருப்பீர்களே ஹஹஹஹ்ஹ்

  நல்லா இருந்தவங்க இப்போ உங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க...கோக்குமாக்கு அலப்பறை..ஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வில்லங்கமானவர்களுக்கு வில்லங்கமாகத்தானே தெரியும் நாங்க நல்லவங்க அதனால்தானே எங்களுக்கு பரிசு விழுந்தது உங்களுக்கு விழலையே.... ?

   ஹையா... ஐயாவோட நாங்க லண்டன் சுற்றிப் பார்த்தோமே...

   நீக்கு
  2. ஓ கதை இப்படிப் போகுதா...எங்களுக்கும் பரிசு எல்லாம் விழும்....பாவம் ரெண்டு பேரும் பார்த்துக் கூட்டிட்டுப் போங்க...பத்திரமா இங்க அனுப்பி வைக்கணும் இல்லைனா உங்களுக்கு இருக்கு வேட்டு ஹஹஹாஹ்ஹ

   நீக்கு
 6. பட்டதெல்லாம் போதுமடா பரமசிவனே!..

  அப்படின்னு -
  ரெண்டு பெரியவங்க பாடுற கோரஸ் பாட்டு கேக்குது எனக்கு!..

  உங்களுக்கு?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி என்ன புரளியைக் கிளப்பி விட்டுட்டீங்க ?

   நீக்கு
 7. ரொம்ப நாளைக்கு அப்புறம் காலைல சிரிச்சேன் ஜி...நன்றியும் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே எமது பதிவுக்கு தினம் வந்தாலும் சிரிக்க முடியா விட்டாலும் முயலலாமே...

   நீக்கு
 8. தலைப்பை பார்த்ததும் திகைத்தேன். படத்தை பார்த்தது புரிந்தேன். பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பயணத்தில் சங்கமிப்போம்.

   நீக்கு

 9. மிகவும் இரசித்து நானும்
  உங்களுடன் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகை கண்டு மகிழ்ச்சி தொடர்வதற்கும்.

   நீக்கு
 10. ஒழுங்காக ரூம் போய்ச் சேர்ந்தார்களா கலக்கத்துடன் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஆட்ட நாயகருக்கு தெரியாததையா எழுதி விடப்போகிறேன் ?

   நீக்கு
 11. பெரியவர்கள் இருவரையும் (உங்களிடமிருந்து) ஆண்டவன் காப்பாற்றிவிடுவான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா என்ன முனைவரே ஐயாக்களிடமிருந்து என்னை யார் காப்பாற்றுவது ?

   நீக்கு
 12. எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க! அடுத்து லீ மெரிடியன் ஹோட்டலில் நடக்கப் போகும் அமர்க்களத்திற்குக் காத்திருக்கேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நடந்ததைத்தானே எழுதுறோம் காத்திருங்கள்...

   நீக்கு
 13. பயணக்குறிப்பு நன்று!

  பதிலளிநீக்கு
 14. ‘கலக்கலான” பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. குடித்த இளநீர் வயிற்றில் ஏதாவது மாற்றம் தந்து ஓட்டம் எதை நோக்கி என்று காத்து இருக்கின்றேன் அறிய ஜீ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பொருத்திருந்து பாருங்கள்

   நீக்கு
 16. த ம பதிவாகி உள்ளது எனது கம்மெண்டை காணோமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று ஓட்டு போட்டதோடு மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் தங்களது கருத்துரை வரவில்லை நண்பரே

   நீக்கு
 17. மலைகள் உயரமாக இருந்தாலும் மடு ‘ஆழமானது’ என்பதை நிரூபித்துவிட்டீர்கள்! பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பதிவு முடிந்த பிறகு சொல்லுங்கள்.

   நீக்கு
 18. நகைச்சுவையை ரசித்தேன்.ஏதோ கமெண்டு போட்டர்கள் என்பதற்காக ரெண்டு பேரையும் இப்படியா பழி வாங்குவது? G.M.B சும்மா இருந்தாலும் பழனி.கந்தசாமி அய்யா அவர்கள் ஒரு பதிவைப் போட்டு உங்களை வாங்கு வாங்கு என்று வாங்குவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா நீங்களே எடுத்துக் கொடுத்திட்டீங்களே நண்பரே... வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. வெளியூர் போனால் வயிற்றைக் காயப்போடணும், வெளிநாடு போனா, வயிறே இல்லாம போகணும், அதானே உங்க எண்ணம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சரியாகத்தான் சொன்னீர்கள் இது எனக்கு மட்டும் விதிவிலக்கு

   நீக்கு
 20. பார்க்குல இருந்தவங்கள இப்படி வேற இடத்துக்கு அனுப்பிட்டீங்களே ஜி...ஹிஹிஹ்ஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நானா மேல்ட்மெல்ட் குடிக்கச் சொன்னேன் ?

   நீக்கு
 21. தொடர் பதிவா...?
  ம்ம்ம் கெளப்புங்கள்...

  பதிலளிநீக்கு