தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 19, 2016

பக்திமான்


சிலநேரங்களில் சிலமனிதர்கள் புலம்புவதை கேட்டிருப்பீர்கள், கண்டிருப்பீர்கள், நான் தினம் உன்னை கும்பிடுறேனே, என்னையேன் சோதிக்கிறாய் ? உன் வாசலுக்கு வருஷா வருஷம் வர்றேனே, எனக்கு நிம்மதியை தரமாட்டாயா ?எனதெய்வத்திடம் முறையிடுவார்கள், இதில் எனக்குத் தெரிந்தவர்கள் வணங்கும்போது மட்டும் நான் அவர்களை கவனித்து அவர்களின் வாழ்க்கை முறையை கணக்கிடுவேன் இதில் பெரும்பாலும் நடைமுறை வாழ்வில் கெட்ட செயல்களும், அயோக்கியத்தனமும், அநியாயமாக வட்டி வாங்கியவர்களும்  
தாய்-தந்தையை அனாதை விடுதியில் சேர்த்தவர்களும்தான் இருக்கிறார்கள்.
 எனக்கு தெரிந்த ஒருவர் மனஸ்தாபத்தின் காரணமாய் கோயிலின் வாசலில் தெய்வத்திடம் கோரிக்கை வைக்கிறார், இந்த வருஷத்துக்குள்ளே அவனைத் தூக்கிடு இல்லேனே உன் வாசலுக்கு நான் வர்றது இதுதான் கடைசி, என்ன ஆயிற்று ? வருடத்தின் முடிவுக்குள் அங்கு ஒரு இலவு, இங்கு ஒரு இலவு அதாவது குடும்பத்தலைவிகள் இருவரும் மரணம்.
 அந்த தெய்வம்தான் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது என நான் சொல்லவில்லை, அவர்களின் விதி முடிந்து அவர்கள் போய் விட்டார்கள் இருப்பினும், குருவி உட்கார இளநீர் விழுந்த கதைபோல் ஆகி விட்டதே, அவர் சொன்னது போல் அவரும் கோயிலுக்கு வருவது அன்றே கடைசியாகவும் ஆகி விட்டது. 
 எனது நண்பரொருவர், துபாயிலிருந்து ஊருக்கு போனவர் வீடு வாங்குவதற்க்கு தரகரை நாடினார் வீட்டை விற்பவர் பெரும்பாலும் நொடையில்தானே இருக்க வேண்டும் வில்லங்கம் பார்க்க வேண்டுமெனில் வீட்டுவரி கட்டியாக வேண்டும், வில்லங்கம் பார்க்கவும், விட்டுவரி கட்டவும் வீட்டை வாங்குபவரிடமே பணம் கேட்டார், சரி நாமதானே வாங்க போகிறோம் என பணமும் கொடுத்து விட்டார் இந்த வகையில் தரகர் சுமார் 5000/ ரூபாய் வாங்கி விட்டார், பத்திரம் போடும் நேரத்தில் யாரோ கூடுதலாக 5000/ ரூபாய் தருவதாக சொல்ல வீட்டுக்காரர்கள் வாக்கு மாறி விட்டார்கள், காரியங்கள் முடிந்து விட்டது மறுநாள் தரகர் 
 நண்பரின் வீட்டில் வந்து என்ன கேட்டார் தெரியுமா ?

எனது கமிஷன், எங்கே ? 
எப்படியிருக்கும் நண்பருக்கு. வாங்காத வீட்டுக்கு தரகர் கமிஷனா ? 
முதலில் என்னிடம் வாங்கிய 5000/ ரூபாயை கொடு
அது வில்லங்கம் பார்க்க செலவாகி விட்டது,
அப்படினா அவுங்கள்ட்ட வாங்கிட்டு வா
அவங்க பிச்சைக்காரங்கே எப்படி வாங்க முடியும் ? 
அப்படினா, நான் துபாய்லருந்து அள்ளிக்கிட்டு வந்துருக்கேன் நீ தள்ளிக்கிட்டு போகலாம்னு வந்தியா ? 

நண்பரும் 5000/ ரூபாயை பெருந்தன்மையாக வேண்டாமென விட்டு விட்டார், காரணம் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சொந்த பந்தங்கள், அந்த வீடு வாங்காததும் ஒரு வகையில் நண்பருக்கு நல்லதாகிப் போனது, வேறொரு தரகர் மூலம் அதே பணத்துக்குள் வீடும், இடமும் வாங்கி விட்டார், இன்று அதன் மதிப்பு அந்த வீட்டைவிட மூன்று மடங்கு மதிப்பில் இருக்கிறது, அந்த இருவரையும் விட நல்ல நிலையிலும் இருக்கிறார்
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த தரகர் ஒரு பக்திமான் சாலையில் செல்லும் போதுகூட வழியில் உள்ள கோயில்களில் அரை மணிநேரம் வணங்குவார் இவரை எப்படி இறைவன் ஏற்றுக்கொள்வார் ? பெற்ற தாயை விரட்டி விட்டு தெய்வத்திடம் போய் அம்மா தாயே என்றால் என்ன அர்த்தம் தாயைவிட ஒரு தெய்வம் இருக்க முடியுமா ? அல்லது இதை தெய்வம்தான் ஏற்றுக்கொள்ளுமா ?
அந்த வெளிநாட்டு நண்பர் இந்த கில்லர்ஜிதான். 

36 கருத்துகள்:

  1. உண்மைதான்..
    நமக்குத் தெரியாத நியாயங்கள் அனைத்தும்
    தெய்வத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  2. கடவுளையும் இளிச்சவாய் பார்ட்டி என்றே தரகர் நினைக்கிறார் :)

    பதிலளிநீக்கு
  3. கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கும் கடவுள் அதையும் காரணத்தோடேயே செய்கிறார். யாருக்கு எது எப்போது தேவையோ, அப்போது அதைத் தருகிறார்.

    பதிலளிநீக்கு
  4. நண்பரே வருத்தம்தான் ....
    தரகரிடம் அந்த பணத்துக்கு
    இரட்டிப்பு செலவை இறைவன்
    கொடுத்திருக்கலாம்....

    பதிலளிநீக்கு
  5. அனுபவங்கள் தான் எத்தனை வகையாய் இருக்கிறது...?

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கடவுளோடு பேரம் பேசுகிறவர்கள் இப்படித் தான் நினைப்பார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கடவுளிடம் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள் நன்று

      நீக்கு
  8. எதற்கெடுத்தாலும் தெய்வத்தை குற்றம் சொல்வது சரியில்லைதான்! அந்த தரகரை போல நிறைய பேர் இருக்கின்றனர். பக்தியை வியாபாரம் ஆக்குபவர்கள் இது போன்றவர்கள்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  9. எதையும் எதிர்பார்க்காமல் கடவுளிடம் செல்பவர் மிகவும் குறைவு. வேஷம் போடுபவர்கள் எல்லாம் பக்திமான்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா கோரிக்கையோடுதானே பலரும் செல்கின்றார்கள் வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  10. முதலில் பிரார்த்தனை என்பதே சுயநலம் சார்ந்த எந்த எதிர்பார்ப்பும் அற்றது. இல்லை என்றால் பேரம். இறைவன் என்ன வியாபாரியா? இறைவன் என்பதே பல பக்திமான்களாலும் தவறாகப் பார்க்கப்படுகிறது. பக்தி என்பதே வியாபாரமாகிவிட்டது. இது பற்றிப் பேசவேண்டும் என்றால் நிறைய....

    நீங்கள் சொல்லியிருப்பதுதான் நடைமுறையில் பெரும்பான்மையான மக்கள் செய்வது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கத்தாரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. மைன்ட் வாய்ஸ் அட ...........? http://ethilumpudhumai.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்களது தளத்தில் ஃபாலோவர் பாக்ஸை வைக்கவும் - கில்லர்ஜி

      நீக்கு
  12. பக்திமான் என்றாலும்
    பலமானவனாக இருக்கணும்
    விரதம், உபவாசமென
    உடலை வருத்தாமல்

    பதிலளிநீக்கு
  13. அருமை ஐயா.இரசித்தேன்.பக்தி என்ற பெயரில் ஏமாற்றுபவர்களும் உண்டு ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நிறையப்பேர் உண்டு என்று சொல்லலாம்.

      நீக்கு
  14. கோவிலுக்கு கடவுளை தரிசிக்க வருகிறவர்களை விட கடவுளிடம் முறையிடவும், வேண்டுகோளை விடுக்கவும் வருகிறவர்கள் தான் அதிகம். எனவே கோவில்களுக்கு வருவோரெல்லாம் பக்திமான்கள் என எதிர்பார்ப்பது சரியல்ல.
    தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவாக கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  15. அனுபவம் பலவிதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்....

    பதிலளிநீக்கு