தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 16, 2017

நிற்கட்டுமா ? போகட்டுமா ?


நான் நாத்திகத்திலும், ஆத்திகத்திலும் சேர்க்கப்படாத விசித்திகத்தை தேடிக்கொண்டிருப்பவன், விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் குழைத்து என்ஞானம் பேசமுயல்பவன். நான் மதவாதி அல்ல ! மிதவாதி.

புராணக்கதைகளில் சொல்லப்படும் தசரதனுக்கு 60000 மனைவிகள் என்று சொல்கிறார்களே இது உண்மையா ? பொய்யாகத்தான் இருக்க முடியும் என்பதே எமது கருத்து காரணம் சொல்லும்போதே... புராணக் ’’கதை’’ என்று சொல்கிறார்களே... மேலும் இத்தனை மனைவிகளோடும் இவர் நியாயமான கணவனாக வாழ்ந்திருக்க முடியுமா ? என்பதும் எமக்கு ஐயமாகத்தான் இருக்கிறது காரணம் எப்பூடி ? நேரமில்லையே... சரி விசயத்துக்கு வருவோம்... அப்படீனா, மற்றவைகளும் புராணக் கதைகள்தானே நம்ம அண்ணன் ராமர் இருக்காரே... அவரு அயோத்தியில் பிறந்ததாக சொல்லப்படுவதும் கதைதானே, அவர் பிறந்த இடம் அயோத்தி என்றே வைத்துக் கொள்ல்வோம். 
அப்படியானால் தம்பி லட்சுமணன் பிறந்த இடம் எது ? 
அது ஏன் ? பிரச்சனைக்கு வரவில்லை 
(உள்ள பிரச்சனை போதாதுனு  இவன் வேறயா ?) 
அப்புறம் கர்ணன் யாரு ? 
எங்கே பிறந்தார் ? 
இப்படி போய்க் கொண்டே இருக்கும் சரி ராமண்ணா அங்கே பிறந்ததாகவே இருக்கட்டும் ராமர் கோயிலை கட்டுவதாலேயோ, பாபர் மசூதியை இடித்ததாலேயோ, மக்கள் பிரச்சனைகள் தீர்ந்து விட்டதா ? 
பிரச்சனைகள் புதிதாக முளைத்ததே மிச்சம் எத்தனை உயிர்கள் இருபுறமும் இழக்கடிக்கப்பட்டன ? 
யாராவது நினைத்து பார்க்கின்றார்களா ? நினைத்து பார்த்தாலும் திரும்பாது என்பது நாம் அறிந்ததே.. எல்லாம் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு. 
இதனால் லாபம் யாருக்கு ? 
நஷ்டம் யாருக்கு ? 
ஒருக்காலமும் கோயில் கட்டப்போவதும் இல்லை பிரச்சனை ஓயப்போவதும் இல்லை தமிழ் நாடு முழுவதும் ட்ரக்களில் செங்கல்கள் வாங்கி கொண்டு போனார்களே.... 
அவை எல்லாம் எங்கே ? 
யாராவது நினைத்து பார்த்திருக்கின்றோமா ? எல்லாம் மாட மாளிகைகள் கட்டி விட்டனர் பகுதி விற்றனர் மீதி பார்வைக்காக பார்வையற்ற மக்களுக்கு...

இப்ப விசயம் என்னவென்றால் ? அதாவது சமீபகாலமாக எமக்கும் சாமியார்களின் வாழ்க்கைமீது ஒரு விதமான மோகம் உண்டாகி விட்டது இதன் காரணமாக நாமலும் மக்களின் குறிக்கோள் அறிந்து குறி சொல்லி வாழ்ந்தாலென்ன ? எனத்தோன்றுகிறது காரணம் நானும் சொல்வதெல்லாம் நடக்கிறதே.... ஆம் அடுத்த வீட்டு அழகர்சாமியின் மகன் இன்னும் 6 மாதத்தில் நடப்பான் என்றேன் அதேபோல் அவன் மகனும் நான்கு வயதானதும் நடந்து விட்டான், அதேபோல் கல்யாண சுந்தரத்திற்க்கு எப்படியும் கல்யாணம் நடக்கும் என்றேன் சரியாக 42 வது வயதில் கல்யாணம் நடந்து விட்டதே.... அதேபோல் நடிகை நளினாவுக்கு இன்னும் மூன்று மாதத்தில் விவாகரத்து நடக்கும் என்றேன் இரண்டே மாதத்தில் நடந்து விட்டதே... ஆகவே நாமலும் சாமியார் ஆனாலென்ன ? ஒருவேளை அப்படியே நித்தியானந்தா சுவாமிகள் அல்லது பிரேமானந்தா சுவாமிகள் மாதிரி மக்களுக்கு சேவை செய்து சமாதி ஆகிவிட்டேன் என்று வைத்துக் கொல்வோம்.

அடுத்த 500 ஆண்டுகளுக்கு பிறகு எமது பாடசாலை சான்றிதழ்களையும், எமது கடவட்டையையும் வைத்து சுவாமிஜி கில்ஜியானந்தா இங்குதான் பிறந்தார் என்று கீழக்கரை அரசாங்க மருத்துவமனையை இடிக்கப் போவார்களே.. இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் என்னால் படப்போகும் அவஸ்தையை நினைத்துப் பார்க்கிறேன் அந்த வேதனையின் விளைவே இந்தப்பதிவு ஆகவே இது தேவையா ?

இனிய நண்பர்களே... 
நான் இப்படியே இருக்கட்டுமா ? 
அல்லது அப்படியே போகட்டுமா ? என்பதை தாங்களே சொல்லுங்கள்.
நிற்கட்டுமா ?  போகட்டுமா ?

50 கருத்துகள்:

  1. கில்லர்ஜி இதுக்குத்தான் அப்பவே சொன்னோம் நீங்களும் சாமியாராகிடுங்க அப்படினு! டூ லேட் இப்ப....அந்த இடம் காலி இல்லை...நிறைய பேர் வெயிட்டிங்க்ல...ஸோ கொஞ்ச நாளைக்கு இப்படியே தொடருங்க...ஆனா ஒன்னு சாமியார் வேஷத்தை மட்டும் கலைச்சுராதீங்க..அப்புறம் மக்கள் மறந்தே போயிடுவாங்க..ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  2. புராணத்தை விடுங்கள். சமீபத்தில், முகலாய மன்னர்களின் அந்தப்புரத்தில் இருந்த மனைவிமார்கள், மற்ற பெண்களைப் பற்றியும் அவர்களின் கஷ்டத்தைப் பற்றியும் படித்தேன். 2-3 நூற்றாண்டுக்கு முந்தியே இவ்வளவு கஷ்டம் என்றால்......

    சாமியார்களின் வாழ்க்கைதான் ரொம்பச் சுலபம் என்று தீர்மானித்துவிட்டீர்கள். இனி என்ன சொல்லியும் கேட்கவா போகிறீர்கள்.. ஆனால் பிற்காலத்தில் பசங்களுக்கு, கில்ஜியானந்தாவுக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் என்ன சம்பந்தம் என்று தலையைப் பிய்த்துக்கொள்ளப்போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. அதுக்கெல்லாம் மச்சம் வேணும் ,உங்களுக்கு இருக்கிறதா ?பார்த்து விட்டு முடிவெடுங்க :)

    பதிலளிநீக்கு
  4. இங்கே வந்ததும் உங்களுக்கு அதிகமாக யோசனைகள் வந்துவிட்டன போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே யோசிக்க வைக்கிறாங்களே...

      நீக்கு
  5. நிற்கட்டுமா? போகட்டுமா?
    என்றால்
    நிற்காமல் போ அல்லது போகாமல் நில்லு
    என்றுரைத்தால்
    நானொரு முட்டாளுங்க...
    அப்படியென்றால்
    நல்லதை எண்ணு - அதை இன்றே
    நல்லதாகப் பண்ணு - அதுவே
    நல்வழி காட்டும் என்பேன்!

    பதிலளிநீக்கு
  6. நிற்கவும் வேண்டாம். போகவும் வேண்டாம். வலைப்பதிவர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்துவிடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நல்ல யோசனையே... நன்றி நண்பரே

      நீக்கு
  7. அருமை ஐயா..உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் வித்தியாசமான யோசனை செய்ய முடியும் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. ஆகா
    முடிவே செய்துவிட்டீர்களா

    பதிலளிநீக்கு
  9. நல்லதா போச்சு..எனக்கொரு

    வேலை கொடுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது கவிஞரே அக்கௌண்ட் தெரியும்தானே ?

      நீக்கு
  10. ஹிஹிஹி, சாமியார் ஆவதும் நல்ல முடிவு தான்! :)))) செய்ங்க. அருள்வாக்குக் கேட்க வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கல்லாப்பெட்டி செய்யச்சொல்லியாச்சு

      நீக்கு
  11. MK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

    மேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

    நீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..

    நிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் .

    வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

    நமது MK சினிமா பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.

    https://www.facebook.com/Mkcinema-298392973889075/app/212104595551052/

    பதிலளிநீக்கு
  12. இன்றைக்கு நாட்டில் சந்தோசமா இருக்கிற ஒரே ஆளு நித்தியானந்தா சுவாமிகள் மட்டுமே. அவர் சந்தோசத்தை கெடுத்துடாதீங்க தோழர். சரி நீங்க தீட்சை பெற்றதும் என்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென சொல்லி அமர்கிறேன்... சந்தோசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சீடர்கள் வைப்பதில் கொஞ்சம் கவனம் அவசியப்படுகின்றது ஆகவே பிறகு சொல்கிறேன்

      நீக்கு
  13. 500 வருடங்களுக்குப் பிறகு மக்களுக்கு ஏற்படப் போகும் கஷ்டத்தை புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதுதான் உத்தமம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது உயர்ந்த எண்ணங்களுக்கு ஒரு சல்யூட்

      நீக்கு
  14. இங்கு செத்த நின்று குறி சொல்லி விட்டு அடுத்த இடத்துக்கு போகலாம் என்றே அடியேனுக்கு தோன்றுகிறது சூ... வாமி.... ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூ... "ஜக்கம்மா" நல்லகாலம் பொறக்குது கணேஷருக்கூ....கூ...கூ...

      நீக்கு
  15. மார்க்கெட்டிங் திறமை இருந்தால் சக்ஸஸ் . All the best !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு ஆட்களை இண்டர்வியூ எடுத்துக்கொண்டு இருக்கிறேன்

      நீக்கு
  16. நிக்கட்டும்மா....... போகட்டும்மா.... நீலக்கருங்குயிலே என்று எஃப் எம்ல..தங்கள் தலைப்பில் ஒரு பாட்டுக் கேட்டேன்..நண்பரே..அதுக்கும் இதுக்கும் ஏதாவது தொப்புள் கொடி உறவு எதுவும் இருக்குமா...? என்று ஒரு சந்தேகம்........

    பதிலளிநீக்கு
  17. ஆஹா..! ஆத்தாடி சொன்னதெல்லாம் அப்படியே பலிக்குதே..! எங்க ஊர்ப்பக்கம் எப்ப வருவாக கில்லரானந்தா ஜி..! நான் கோடீஸ்வரன் ஆவேன்னானுன்னு கேட்கணும்..!

    பதிலளிநீக்கு
  18. நில்லுங்க நில்லுங்க! போகாதிங்க சார் நில்லுங்க. எனக்கொரு பதில் சொல்லிட்டு போகலாம் நில்லுங்க ......... காசு எண்ணும் காரியதரிசிப்பணித்தலைவியா என்னை சேர்த்துப்பதா அன்னிக்கொரு பதிவில் வாக்குக்கொடுத்திங்கல்ல. நா இன்னும் ரெடி ஆவல்லயாக்கும்,

    ஆமாம் சர்க்கஸ் செய்ய அந்த கம்பிக்கதிரைக்கு ஆர்டர் செய்ய சொன்னிங்களே வந்து இறங்கிருச்சோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தயாராகி கொண்டு இருக்கிறது

      நீக்கு
  19. ஐயா அது என்ன விசித்திகம். நாத்திகம் கடவுள் மறுப்பு. ஆத்திகம் கடவுள் நம்பிக்கை. உண்டு அல்லது இல்லை என்று நாணயத்தின் இரு பக்கங்களே உள்ளன.

    ஒரு வேளை விசித்திகம் என்பது சைத்தான் வழிபாடா? அப்படியும் இருக்கலாம். நீங்கள் தான் எல்லாவற்றிலும் முரண்பட்டவர் ஆயிற்றே.

    நிக்கட்டுமா போகட்டுமா என்பதற்கு எனது பதில். ரொம்ப நேரம் நின்னா கால் வலிக்கும். கொஞ்சம் உக்காந்து படுத்து இருங்கள்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      இறைவன்மீதே நம்பிக்கை வைக்க இயலாதபோது சைத்தானை நம்புவது சரியாகுமா ?

      எல்லாம் விதிப்பயன் என்று சோசியரை நாடி காலத்தை இழக்கின்றான் கடவுளை நம்புகிறவன் ஆனால் இதுவும் அவன் செயலே என்று வருமானத்தை பெறுகிறான் சோசியன் இதில் யார் புத்திசாலி ?

      இவ்வுலகை படைத்தவன் ஒருவனே அவன் பெயர்தான் குழப்பம்

      இன்னும் சொல்ல நினைக்கிறேன் இயலவில்லை காரணம் இது செல்பேசி வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  20. நாந்தான் அப்பவே சொன்னேனே!..
    இப்ப இருந்த திண்ணைக்கும் ஆளு வந்தாச்சு..

    உண்டியல் பெட்டி மட்டும் பளபளப்பா வெச்சிக்கிட்டா போதும்!..
    ஜனங்க அடிச்சி புடிச்சிக்கிட்டு வந்துடுவாங்க!..

    ஆன் லைன் அருள் வாக்கு!.. அதுக்கும் மவுசு இருக்கு!..

    பதிலளிநீக்கு
  21. சாமியார்களின் வாழ்க்கையும் கஷ்டம்தான் கில்லர்ஜி. எதை செய்தாலும் மோப்பம் பிடித்து யூ ட்யூபில் ஏற்றிவிடுகிறார்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் கருத்து பின்வாங்க வைக்கிறதே...

      நீக்கு
  22. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டியவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் சில சாமியார்களின் சொகுசு வாழ்க்கை அதன் மீது நமக்கும் ஒரு ஆசையைப் பிறப்பிப்பதில் தவறில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. வாங்க ஐயா ஆசை சின்னதாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ஐயா

      நீக்கு
  23. கில்ஜியானந்தாவுக்கு ஜே! உங்களுக்குத் துணையாக வர நிறைய போட்டி இருக்கிறதே..... :)

    பதிலளிநீக்கு