தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 10, 2017

தலைப்புச் சிரிப்புகள்


லைவர் இன்றைய அறிக்கையில் விட்ட தகவல் பிரச்சினையாகி விட்டதா ?
ஆமா, கொன்றே செய் அதே நன்றே செய் என்று சொல்லி விட்டார்.
*------------------------------ 01
லைவர் கூடவே எல்லா இடத்துக்கும் போறாங்களே புதுசா ஒரு பெண் அவங்க யாரு ?
தலைவருக்கு அரசியல் வாரிசு இல்லாததால இனிமே இவங்கதான் அடுத்த தலைவியாம்.
*------------------------------ 02
லைவர் திருவள்ளுவர் பிரியரா இருக்கலாம் அதுக்காக இதெல்லாம் ரொம்ப ஓவருனு... சொல்லிட்டுப் போறாரே... செக்ரட்டரி ஏன் ?
அரசு கோப்புகளில் எழுத்தாணியாலதான் கையெழுத்து இடுவேன்னு கையெழுத்துப் போட்டே கிழிச்சுட்டாராம்.
*------------------------------ 03
லைவர் நான் ஆட்சிக்கு வந்தால் பிச்சைக்காரர்களை ஒழிப்பேன்னு சொல்றாரே... எப்படி ?
எல்லோரையும் கூண்டோட ஏற்றி பாக்கிஸ்தான் பார்டரில் கொண்டுபோய் விட்ருவாராம்.
*------------------------------ 04
லைவர் கோஷம் போட்ட தொண்டர்கள் எல்லோரையும் திட்டினாரே ஏன் ?
அவங்க எல்லோருமே தலைவர் வால்க ! அப்படினு கத்தினாங்களாம்.
*------------------------------ 05
லைவர் திடீர்னு... எதுக்கு ? காக்காவை எல்லாம் பிடிப்பதற்கு குறவர்களின் உதவி தேவைனு அறிக்கை விடுகிறார் ?
நேற்று அவரு கட்சிக்கொடி ஏற்றும் பொழுது அவரு வாயில காக்கா கக்கா போயிடுச்சாம் அதனாலதான் இந்த அவரசகால உதவி.
*------------------------------ 06
லைவர் எதுக்கு ? எப்பொழுதுமே தனியாக இருக்கும் பொழுது தலையிலேயே அடிச்சுக்கிறாரு... ?
அப்பத்தான் அவருக்கு அக்கப்போரான சிந்தனைகளை ஒழிந்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வருமாம்.
*------------------------------ 07
லைவர் ஸ்விட்சர்லாந்து போய் பேங்க் அக்கவுண்ட் தொடங்க முடியாமல் திரும்பி வந்துட்டாரா ?
ஆமா கையெழுத்து போட தெரியாமல் ஃபாமில் கைநாட்டு வச்சுருக்கார் திருப்பி அனுப்பிட்டாங்க...
*------------------------------ 08
லைவர் எதுக்கு ? இப்பவும் கட்சியின் முதல் போஸ்டரை அவரே ஒட்டி துவங்கி வைக்கிறாரு ?
அவரு எப்பவுமே பழசை மறக்க கூடாது, கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கனும்’’னு சொல்லுறவராச்சே....
*------------------------------ 09
லைவர் உகாண்டா நாட்டுக்கு புறப்பட்டவர் விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்துட்டாரே... ஏன் ?
சன்னலோர ஷீட்டுல யாரு ? உட்காருறதுனு... தலைவரோட முதல் தாரத்துக்கும், ரெண்டாம் தாரத்துக்கும் குடுமிபிடி சண்டை வந்துருச்சாம்.
*------------------------------ 10

46 கருத்துகள்:

 1. பார்டரில் பிச்சைக்காரர்கள் :)

  பதிலளிநீக்கு
 2. 10ஆவது சிரிப்பை வெகுவாக ரசித்தேன். அதுவே நம்பர் 1 சிரிப்பு!

  பதிலளிநீக்கு
 3. அக்கப்போர்- ஆக்கபூர்வ சிறப்பு

  பதிலளிநீக்கு
 4. தலைவரு.. ஏன் புல்லர்..ஜி.. புல்லர்..ஜி.. ன்னு கத்துறாரு!?..

  யாரோ.. கில்லர்ஜி..யாம்!.
  செய்தியில எழுதி ஊரு முழுக்க சிரிக்க அடிச்சிட்டாராம்!..

  பதிலளிநீக்கு
 5. தமிழ்மணம் ஓட்டுப் பெட்டியைக் காணவில்லையே! இப்படி எல்லாம் தலைவரைக் கலாய்ச்சு நீங்க ஓட்டு வாங்கிடுவீங்கனு நினைச்சு "என் ஓட்டுகளை எல்லாம் தன் பக்கம் திருப்பிக் கொள்ளூம் இந்தக் கில்லர்ஜி யின் ஓட்டுப்பெட்டியை மாயமாய் மறைத்துவிடுங்கள்" அப்படினு சொல்லிட்டாரு போல....ஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 6. எல்லோர் சிந்தனைக்கும் ஒரு நகைச்சுவை விருந்து.......?

  பதிலளிநீக்கு
 7. நல்லா சிரிக்க வக்கறீங்க ஐயா! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கடந்த பதிவு 'குற்றம் குற்றமே...' அதை சொல்லியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.

   நீக்கு
 8. வழக்கம்போல அதிகம் ரசித்தோம், சிரித்தோம்.

  பதிலளிநீக்கு
 9. 03, 09 இரண்டையும் மிகவும் ரசித்தேன் அருமை சகோ :)

  பதிலளிநீக்கு
 10. இந்த மாதிரியான கூமுட்டைகள்தான் பெரு வாரியான கூமுட்டைகளை ஆளுதுங்க நண்பரே........

  பதிலளிநீக்கு
 11. இவை
  தலைப்புச் செய்திகளல்ல
  தலைகளின் செய்திகளாக இருக்கே
  அதனால்
  தலைப்புச் சிரிப்புகள்
  ஆனதோ?

  பதிலளிநீக்கு
 12. ஹாஹாஹா! தலைவர் கலக்கிட்டார்.

  பதிலளிநீக்கு
 13. தலைவரே ! ”தலைவர்” மூலமாக கலக்கீட்டிங்க

  பதிலளிநீக்கு