தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜனவரி 04, 2017

மனை---விநமது மனதிலும், மனையிலும் வீற்றிருப்பவள் என்பதால், மனைவி என்றும்...

நமது வாழ்வில் கடைசிவரை துணையாய் வருபவள் என்பதால், துணைவி என்றும்...

நமக்கு பொன் நகையை தாலாட்டி வருகிறாள் என்பதால், பொண்டாட்டி என்றும்...

நம்மை கொஞ்சி மகிழ்ந்து மடியில் சாய்ந்திடுவாள் என்பதால், பொஞ்சாதி என்றும்...

காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், ஆத்துக்காரி என்றும்...

வீட்டில் இரவு வந்ததும் காரிருளை நீக்கி விடுகிறாள் என்பதால், வீட்டுக்காரி என்றும்...

கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், பீபி ஹிந்தி என்றும்...

உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், பெல்லாம் தெலுகு என்றும்...

நம்மை மதி மயக்கி அவள் சிரித்துக் கொண்டே இருப்பதால், ஸ்ரீமதி நேபாளி என்றும்...

நம் மனதில் கார்த்திகை தீபம் போல் ஜொளிப்பவள் என்பதால், மனகார்த்தி கன்னடம் என்றும்...

கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், என்டித்தி கன்னடம் என்றும்...

இந்த உலக சந்தோஷங்களை என்னிடம் பாரய்யா என்பதால், பாரியா மலையாளம் என்றும்...

வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் இணைந்து இருக்கிறாள் என்பதால் Wife ஆங்கிலம் என்றும்... 

கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் ஜவ்ஜத் அரபிக் என்றும்...

வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், அஷாவா பபாய் பிலிப்பைன்ஸ் என்றும்... 

காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவ்ளர் என்பதால், பவுள சிங்களம் என்றும்...

சொல்கிறார்கள் என்பது எமது கருத்து உமது கருத்து எதுவோ...... ? ? ?

52 கருத்துகள்:

 1. ஹிஹிஹிஹி, நல்ல ஆராய்ச்சி!

  பதிலளிநீக்கு
 2. மாட்டுப்பெண் என்றும் கூறுவர். அதைவிட்டுவிட்டீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்ல நினைத்தேன் ஆனால் மேலேயுள்ள புகைப்படம்
   பயமுறுத்தியது

   நீக்கு
 3. நல்ல அலசல்தான் போங்க.. ஆமாம், ஹிந்தியில் அது பீவி இல்லையோ?

  தம சுற்றிக்கொண்டே....ற்றிக்கொண்டே....றிக்கொண்டே...க்கொண்டே.....கொண்டே...ண்டே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கீழே வெங்கட் ஜி அவர்களின் கருத்தை பார்க்கவும்

   நீக்கு
 4. தங்களால் மட்டுமே இவ்வாறு எழுத இயலும் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. புதுமையாக யோசித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!
  Worries Invited For Ever என்றும், Wonders Invited For Ever என்றும் கூறுவார்கள்.

  பதிலளிநீக்கு
 6. அருமையாக யோசித்து எழுதி இருக்கீங்க சகோ. பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 7. பீவி... பீபீ [பீ.பி அல்ல!] என்றும் சொல்வதுண்டு ஸ்ரீராம்.

  நல்ல பகிர்வு கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
 8. கன்னடத்தில் சொல்லி இருப்பதே சரி :)

  பதிலளிநீக்கு
 9. கில்லர்ஜி - இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலும் மனைவியை 'மனுஷி' என்றுதான் குறிப்பிடுவார்கள். வெங்கட் சொன்னதுபோல், பீவி. நீங்கள் சொன்ன பீபீ, அவர்கள் தங்கள் கணவர்களுக்கு ரொம்ப பிரஷர் கொடுப்பதன் விளைவாக இருக்கும்.

  புத்தாண்டு உங்களுக்கு நல்லதாக அமையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தகவலுக்கு நன்றி

   தங்களது வருகை குறைந்து விட்டதே....

   நீக்கு
  2. பயணம்தான் காரணம். படித்துவிடுவேன்.

   நீக்கு
  3. சந்தோஷம் மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. பதில்கள்
  1. ஆய்வு என்றால் லொள்ளு என்று சொல்லலாமா ?

   நீக்கு
 11. எல்லாவற்றையும் விட....

  ஜவ்வு மிட்டாய்!.. தான் மிகவும் பொருத்தம்..

  இருந்தாலும், இந்தப் பிறவியிலேயே -
  அவனுங்களுக்கு கடைசி வரைக்கும் என்பதெல்லாம் சும்மா!..

  நமக்குத் தான் ஏழேழு பிறவி!..

  இத்தனை பிறவிகளுக்கும் கூடவே வருவது என்றால் -
  ஜவ்வு மிட்டாய் தான் சரி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நல்ல உண்மையான விளக்கம் அருமை

   நீக்கு
 12. நல்ல தொகுப்பு. பிற மொழியறிய சிறந்த உக்தி. மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 13. கன்னடத்தில் மனைவியை ஹெண்டத்தி என்பார்கள் என நினைக்கிறேன். A rose by any other name would smell as sweet என்பதுபோல் மனைவியை எந்த பெயரில் அழைத்தாலும் அவள் இல்லத்தரசி தான். பதிவை இரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்றி இல்லத்தரசி அருமை நான் மறந்து விட்டேன்

   நீக்கு

 14. அருமையான ஆய்வுக் கட்டுரை

  பதிலளிநீக்கு
 15. ஹஹஹஹஹ் நல்ல ஆராய்ச்சிதான் போங்க....ஹிந்தியில் பீவி இல்லையோ...சரி விடுங்க பீபி நு சொல்லலாம்...பின்ன கணவரின் பீபி எகிறுமே பல சமயங்களில் அதனால்...பல சமயங்களில் இல் ஆளாகிப் போவதால் இல்லாள். அல்லது அவள் இல்லை என்றால்வீட்டில் ஒன்றும் நடக்காது என்பதால் இல்லாள்! இல்லத்தை ஆள்பவள். பெண்டாட்டி - பெண்மையை ஆள்பவள்

  மனை-வி - மனையை விளங்கச் செய்பவள்!!!!

  எமது பங்குக்கு இது ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வெங்கட் ஜி சொன்னதே சரி (பீபீ) என்னால் திருத்தம் செய்ய முடியாத நிலை

   நீக்கு
 16. ஐயா சாமி, அருமையான ஆராய்ச்சியும், கண்டுபிடிப்பும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. உங்களின் பன்மொழி அறிவு பிரமிக்க வைக்கிறது கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் மொழிகளை குறித்து நிறைய எழுதி விட்டேன் இன்னும் எழுதுவேன்

   நீக்கு
 18. என்னபெயர் வைக்கலாம் எப்படி அழைக்கலாம் எனக்கு என் மனைவி தாய்மாதிரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸூப்பர் ஐயா யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது

   நீக்கு
 19. இத்தனை அவதாரங்கள் எடுப்பதால்தான் எல்லோரும்?! பயப்படுகிறார்களோ?

  பதிலளிநீக்கு
 20. மனை___வி இருப்பவர்களுக்கு தானே.... குடிருக்கும மனைக்கே என் தாவு தீரல... இதுல மனை-வீ... வேறையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி

   நீக்கு
 21. கலியாணம் ஆகி இருப்பவுகளுக்குத்தானே....தாங்கள் மேற்ச் சொன்ன பொன்மொழிகள் எல்லாம் உரித்து ஆகும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே உங்களுக்கு அவசியமில்லாத விடயம்தான்.

   நீக்கு