தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 13, 2017

கற்பூரவாசனை

இந்தக்கை ஒரு பாலஸ்தீனிய நண்பனுடையது.

கற்பூரவாசனையை பூஜையறையில் காண்பித்து வாசனையை எதிர்பார்ப்பவன் அறிவாளி கழிவறையில் காண்பித்து வாசனையை எதிர்பார்ப்பவன் முட்டாள் அதைப்போல நமது கருத்துக்களை அறிவாளிகளோடு பகிர்ந்து கொள்ளவேண்டும், முட்டாள்களோடு பகிர்ந்து கொள்பவன் கழிவறையில் கற்பூரத்தை காண்பித்தவனுக்கு ஒப்பானவன். நானும் சிலநேரங்களில் கழிவறையில் காண்பித்து மனம் நொந்து இருக்கின்றேன் அந்த நேரங்களில் சகோதரி கஸ்தூரி கணவனின் தத்துவம் ஒன்று என்ஞாபகத்திற்கு வரும்.

முட்டாள்களோடு வாதம் செய்யாதே செய்தால்
யார் முட்டாள் என்பது தெரியாமல் போய்விடும்.
- மஹாத்மா காந்தி

65 கருத்துகள்:

 1. முட்டாள் என்று தெரிந்தும் ஏன் அவரோடு வாதம் செய்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில நேரங்களில் பிறகே புரிகின்றது நண்பரே

   நீக்கு
 2. ஆனாலும் யார் கேட்கிறார்கள்?..

  பதிலளிநீக்கு
 3. உங்களை யாரோ வருத்தியிருக்கிறார்கள்.அவரை இனியும் அலட்சியப்படுத்துங்கள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 4. அதாவது உங்கள் தளத்திற்க்கு வரும் நாங்கள் எல்லாம் அறிவாளிகள்.ஏன் என்றால் நீங்கள் அறிவாளிகளுடன் மாத்திரமே தர்க்கீப்பீர்கள். முட்டாள்கள் உங்கள் தளத்திற்க்கு வரமாட்டார்கள். இல்லையா? ஐஸ்
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா வராதவர்களை அப்படி சொல்ல வேண்டாமே...

   நீக்கு
 5. உங்கள் உள் மனதின் மூலையில் ஏதோ ஒரு நெருடல். விட்டுத் தள்ளுங்கள். - எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. சரி சரி உங்க கருத்தை எங்களோடு பகிர்வதனால் எங்களை அறிவாளிகள் பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி.

  இதை நானும் இங்கே சொல்லி இருக்கின்றேன்.
  http://alpsnisha.blogspot.ch/2016/11/blog-post_24.html  பதிலளிநீக்கு
 7. அதெல்லாம் சரி கில்லர்ஜி சார். ஊருக்கு போன பின் நீங்கள் நிரம்ப பிசியாகி விட்டீர்களோ?உங்களை என் பக்கம் பார்க்கவே முடிவதில்லை. நான் நீங்கள் நெட் வரவில்லையோ என கூட நினைத்திருக்கின்றேன். நம்புங்கள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பிப்ரவரிக்கு பிறகே இணையத்துக்குள் முன்பு மாதிரி வரமுடியும் மன்னிக்கவும்

   நீக்கு
 8. அதென்ன கஸ்தூரி கணவனின் தத்துவம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிஸஸ் கஸ்தூரி பாய் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

   நீக்கு
 9. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. அன்பிற்கினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும்...

   நீக்கு
 11. இதில் பிரச்சனை என்னவென்றால் யார் அறிவாளி யார் முட்டாள் என்பதுதான் பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. இப்படியும் ஒரு தத்துவம் உள்ளதேர்?

  பதிலளிநீக்கு
 13. தங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 14. நன்றி சொல்லும் நன்னாளில்

  நனிமிகு பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 15. கஸ்தூரி கணவரின் தத்துவம் சரியே. என்றாலும் எனக்கு என்னமோ அவரோடு எல்லா விஷயத்திலும் ஒத்துப்போகாது! :)
  இனிய பொங்கல் வாழ்த்துகள். உங்கள் மன வேதனை விரைவில் தீர்ந்து நிம்மதி கிடைக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் உடன்படாதவன்தான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. உண்மைதான் கில்லர்! தாயகம் வந்தாச்சா! பொங்கல் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா சென்னை வரும்பொழுது சந்திக்கிறேன்

   நீக்கு
 17. நான்கு கால் செல்வங்களுக்கு
  நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
  பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
  பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
  தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. வாதம், முட்டாள்களுடன் செய்யக்கூடாது என்பது சரிதான். கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள ஏன் அப்படி நினைக்கவேண்டும். அவருடைய அறிவையும் மேம்பட வைக்குமல்லவா?

  உங்கள் உள்ளூர் பொங்கல் எப்படி இருந்தது? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை நண்பரே இப்படியும் நினைக்கலாமோ...

   பொங்கல் நலமுடன் சென்றது சல்லிகட்டுதான் இல்லாமல் போனது.

   நீக்கு
 19. உண்மைதான் கில்லர்ஜி! என்றாலும் முட்டாள்களோடு வாதம் செய்ய வேண்டாம். ஆனால் அவர்களுக்கும் புரிய வைக்க முடிந்தால் நல்லதுதானே. சகோதரி கஸ்தூரியின் கணவன் ..ஹஹஹஹ் ரசித்தோம்...

  கீதா
  மற்றொன்று இவ்வுலகில் யாருமே முட்டாள் கிடையாது ஜி! நாம் சொல்லும் வார்த்தை அவ்வளவே மூடன் என்ற வார்த்தையை முட்டாள் அறிவிலிகள் என்ற அர்த்தத்தில் சொல்லுகின்றோம். மூடன் என்றால் தன் அறிவை மூடி வைத்துக் கொண்டிருப்பவர்கள்...அறிவிலிகள் அல்ல. அறிவுக் கண்ணை மூடிவைத்துக் கொண்டிருப்பவர்கள். எனவே முடிந்தால் அவர்களது அறிவுக் கண்ணைத் திறந்து விடலாம் இல்லை என்றால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் எட்ட நின்றுவிடலாம். இது ஒவ்வொருவரின் புரிதல் சக்தியில்தான் இருக்கிறது. இவை அனைத்தும் நம் சிபியுவுக்குள் நடக்கும் வேதியியல் நிகழ்வுகளால் விளைபவையே!

  பதிலளிநீக்கு
 20. ஓட்டுபெட்டிக்கு என்னாயிற்று...

  பதிலளிநீக்கு
 21. பெரும்பான்மையானவர்களின் அனுபவம்.

  பதிலளிநீக்கு
 22. கழுதைக்கு தெரியுமா..கற்பூர வாசனை என்ற பழமொழியை நிணைவுக்கு வருகிறது தலைவரே...

  பதிலளிநீக்கு
 23. எல்லாருமே எல்லா நேரத்திலும் அறிவோடு இருக்கறதில்லை .
  எல்லோரும் எல்லா நேரத்திலும் முட்டாளா இருக்கறதில்லை .
  சொல்றவங்க அறிவோடு இருக்கிற நேரம் கேக்கறவங்க அறிவோடு இருக்கிற நேரம் sync ஆச்சுன்னாக்க புரியும் .

  ரெண்டு பார்ட்டியும் முட்டாளா இருக்கிற நேரம் sync ஆச்சுன்னாக்க வும் புரியும் .

  சொல்றவங்க அறிவோடு இருக்கிற நேரத்தில கேக்கறவங்க முட்டாளா இருந்தாங்க புரியாது.
  சொல்றவங்க முட்டாளா இருக்கிற நேரத்தில கேக்கறவங்க அறிவோடு இருந்தாலும் புரியாது.

  இ னியும் குழப்ப ஆசை
  வேண்டாம்ன்னு ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா இதுவரை தெளிவாகத்தான் இருந்தேன்...

   நீக்கு
 24. என் கமெண்டை போடறீங்களோ என்னவோன்னு சந்தேகம் இருந்தது
  பாக்க ஜோக் மாதிரி இருந்தாலும் இதுதான் உண்மை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை திட்டி எழுதியதைக்கூட வெளியிட்டவன் நான் இது தாமஸ் ஜூவல்லர்ஸ்தானே...

   நீக்கு
 25. அது என்ன தாமஸ் ஜூவல்லர்ஸ் ?

  பதிலளிநீக்கு
 26. முட்டாள்களுடனான வாதம் பற்றிய கருத்தை கூறியது மகாத்மா காந்தி அல்ல..ஹிட்லர்.!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மாது நான் காந்தி என்று படித்த ஞாபகம் ஆகவே எழுதினேன் விளக்கியமைக்கு நன்றி

   நீக்கு