தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

பல் மூன்று



ஒரு விசும்பல்...
எனக்கென பிறந்தாய்...
என்னுடன் வளர்ந்தாய்...
எனக்காக மலர்ந்தாய்...
அழகாய் இருந்தாய்...
கண்ணுக்கு விருந்தாய்...
தோட்டக்காரன் வந்தான்,
பறித்து கொண்டு சென்றான்,
பறி கொடுத்து நின்றேன்,
என் மனதையும் கொன்றான்.
வாடாமல்லி நீ வாடிச்சென்றாய்...
வாடாமல் நீ என்மனதில் நின்றாய்...
- ஒரு வாடாமல்லிச்செடி.

ஒரு புலம்பல்...
அவள் என்னைப்பார்த்து...
சிரிக்காமல் போயிருந்தால் ?
நான் ஐ லவ் யூ சொல்லியிருப்பேனா ?
அவளை காணாமல் இருந்திருப்பேனா ?
அவளைப்பற்றியே நினைத்திருப்பேனா ?
ஒரு நாளாவது அவளை மறந்திருப்பேனா ?
அவள் வீட்டை கடக்காமல் போயிருப்பேனா ?
அவளும் நேசித்தால், விட்டுக்கொடுப்பேனா ?
அவளை அவனுக்கு, தாரை வார்த்திருப்பேனா ?
அவளால் நான் குடிகாரன் ஆகியிருப்பேனா ?
அவளது சரித்திரம் எழுதப்போகிறது... என் பேனா.
- எழுத்தாளன் எழில்.

ஒரு அலம்பல்...
யாருடா அங்கே  டாஸ்மாக் எங்கே ?
டேபிள்போடு பிரன்ட்ல வருவான் ஃபிரண்டு
நான்தான் குமாரு... அடிப்பேன் டமாரு..
கெனிக்கன் பீரு... குடிப்பேன் பாரு...
முட்டை ஆம்லெட்டு வர யேண்டா லேட்டு ?
சிக்கன் கொண்டா சொக்கன் வருவான்.
ரம்’’மும் எடுத்து வா ! ரம்பாவும் வருவாள்.
சிவசம்போ வந்துட்டான் Chivas Regal எங்கே ?
ஊறுகாய் கொண்டு வா ! ஊறுதே வாயி.
ஸ்நாக்குக்கு பூந்தி எடுப்பேன் வாந்தி.
வருவோம் முந்தி போவோம் பிந்தி.
- குடிமகன் குமார்.

44 கருத்துகள்:

  1. முதற்பல் பால்பல் ஏனெனில் விழுந்தாலும் வேறொன்று முளைக்கும் இரண்டாம் பல் ஆம்பல் அது சென்று சேரவேண்டிய இடம் சேர்ந்துவிட்டது மூன்றாம் பல் சொதப்பல் ஏனென்றால் ( ஹெயினேகென்) உள்ளேபோனதால் சிவ சம்போவுக்கே வியர்வையில் தொப்பல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகாக விவரித்து கவிதை போன்று எழுதி விட்டீர்கள் நன்றி

      நீக்கு
  2. வாடாமல்லி வாடிச் சென்றாலும் தங்கள் எழுத்தில் பூத்து குலுங்குகிறது வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. பல் என்றால் ஹிந்தியில் அன்பு என்று அர்த்தம் என்று நினைக்கிறேன். ஃபல் என்றால் பழம் என்று நினைக்கிறேன். மூன்று பல்லையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புக்கு "பியார்" என்பதையே அதிகம் உபயோகப்படுத்துவார்கள் பல் என்பது எனக்கு புதிய விடயம் நன்றி ஸ்ரீராம் ஜி

      நீக்கு
  4. வாடாமல்லி வாடவும் வாடாது, நிறகும் மங்காது. பல் போனாலும் சொல் போகவில்லை அல்லவா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போத் தான் கவனிச்சேன். நிற"மு"ம் மங்காது என்பது நிற"கு"ம் மங்காது என்று தவறாக வந்துள்ளது.

      நிறமும் மங்காது என்று படிக்கவும். :) ஆ.அ.ச.

      நீக்கு
    2. லருக சகோ தங்களது கருத்தை சரியாகவே படித்தேன்.

      மீள் வருகைக்கும் நன்றி

      நீக்கு
  5. வாடாமல்லியை வாடா மல்லி என்று யார் சொன்னது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மன்னரைப் பார்த்து வாடா மருதப்பா என்று சொன்னது போலாகி விட்டதோ...

      நீக்கு
  6. 3 பல் பல்லே பல்லே பலே!!!

    அது என்ன ஜி காதல் தோல்வினா குடிக்கறதுனு எல்லாரும் எழுதறாங்க....ஹிஹிஹி

    வாடாமல்லி 'வாடாதமல்லி"

    அலம்பல் குடி போதையில நல்லாவே உளறல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் செய்யாதவனும் குடிகாரனாகி விடுகிறானே...

      நீக்கு
  7. விசும்பல்...புலம்பல்...அலம்பல்...அசத்தல்!

    பதிலளிநீக்கு
  8. சோம்பல் இல்லாமல் உங்களால் எப்படி,இப்படி புதிது புதிதாய் சிந்திக்க முடியுதோ ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தினமும் ஹார்லிக்ஸ் கலந்துதான் குளிப்பேன் ஜி.

      நீக்கு
  9. வித்தியாசமான தலைப்புண்ணே

    பதிலளிநீக்கு
  10. அந்த அந்தத் தலைப்புக்கேத்தமாதிரி, வார்த்தைகளும் வந்திருக்கின்றன (குடிகாரன்னா, அவனுடைய மொழில, செடினா அதனுடைய ரசனையான மொழில, காதல் தோல்வினா, அவன் எப்படி எழுதுவானோ அதுபோல). பாராட்டுக்கள். த ம காலையிலேயே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவாக பாராட்டியமைக்கு நன்றி

      நீக்கு
  11. பல் பல் பல் பலெ பலே பலே .....!

    பதிலளிநீக்கு
  12. பால்பற்கள் என்றால் விழுந்தாலும் முளைக்கும்...வயதான ஆட்டம் கண்ட பற்கள் என்றால் விழும் பின் முளைக்காது..இப்படித்தான் நான் படிக்கும்போது என் டீச்சர் அடிச்சு சொல்லி கொடுத்தாங்க கவிஞரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படித்தான் பாடம் நடத்தினார்கள் நண்பரே...

      நீக்கு
  13. தங்களது மூன்று ‘பல்’லையும் படித்ததும் எனது முப்பத்திரண்டு பல்லும் வெளியே தெரிந்தன. பதிவை இரசித்தேன். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. பின்னூட்டத்தை இரசித்தேன் நண்பரே

      நீக்கு
  14. மூன்றும் அருமை.
    வாடாமல்லி அருமை.

    பதிலளிநீக்கு
  15. பல்வேறு தலைப்புகளை ஒன்றாய் கோர்த்து பல்சுவையோடு தொடுத்தமைக்கு பாராட்டுக்கள் ஜி !

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. இப்போதைக்கு அலம்பல் மட்டும்தான் ஜாலி வாழ்க்கை போல...

      நீக்கு
  17. இரசித்தேன்!த ம 13

    பதிலளிநீக்கு
  18. மூன்று பல்! ரசித்தேன் கில்லர்ஜி!

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  19. நண்பரே பிச்சு ஒதறிட்டீங்க...


    இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post_21.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  20. பல்லை பலவகையில் வெளிப்படுத்திய விதம் கவிநயம்தான் த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே

      நீக்கு