தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 13, 2017

ரஞ்சிதா மேடம்


    ட்பூக்களே எனக்கு தொலைக்காட்சியை பார்த்தாலே வேதனையாக இருக்கிறது மேலும் மின்சார செலவு செய்து காணும் நம்மை ஊடகக்காரர்கள் சற்றும் மரியாதையின்றி அவமானப்படுத்தி விடுகின்றார்கள். சமீபத்தில் வீட்டில் ஒருநாள் தொலைக்காட்சியில் சுவாமிஜி நித்தியானந்தா அவர்கள் அருளாசியோடு பதில் வழங்குவதாக அழகிய பெண்மணி ஒருவர் மகிழ்ச்சியாக சொன்னார் மேலும் நல்லதொரு ஆன்மீக விடயங்கள் நண்பர்கள் திரு. ’’பசி’’ பரமசிவம், திரு. பகவான்ஜி, திரு. வலிப்போக்கன் போன்றவர்களைப் போல நமக்கும் பிடித்ததுதானே... என்று பார்த்து கேட்டுக் கொண்டு இருந்தேன். 

அதில் தொலைபேசி எண்ணும் கொடுத்து இருக்க பலரும் அழைத்து தங்களது ஐயங்களை கேட்டு மகிழ்கின்றார்கள். மகிழ்ச்சி மனதுக்கு நல்லதுதானே ஆகவே மகிழ்ச்சியை காண்பது அரிதாகி விட்ட நமது வாழ்வில் இவர்களாவது இலவசமாக மகிழ்ச்சி தருகின்றார்களே என்பதை அறிந்தபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்க நாமும் அழைத்து நமது ஐயங்களை கேட்போமே... என்று மகிழ்ச்சியாக அந்த எண்ணில் பலமுறை முயன்றும் அதிர்ஷ்டவசமாக இணைப்பு கிடைத்து விட்டது நானும் மகிழ்ச்சியுடன் அவர்களுடன் நலகுசலம் கேட்டு அவர்களும் என்னிடம் கேட்டு மகிழ்ச்சி அடைந்தபோது அவர்கள்தான் கேட்டார்கள் ஐயா தங்களது ஐயங்களை கேட்கலாம் என்று. உடனே நானும் எனது ஐயத்தை தீர்ப்பார்கள் என்று மகிழ்ந்து மகிழ்ச்சியாக கேட்டதுதான் தாமதம்...

‘’டமார்’’

என்ற இடியுடன், கூடிய மழை என்று ரமணன் ஐயா சொல்வாரே... அதைப் போன்ற சப்தத்துடன் எதிர்முனையில் தொலைபேசியை அடிக்க மகிழ்ச்சியாக இருந்த எனது மனது நொடியில் மகிழ்ச்சியை இழந்து விட்டது இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டு ஊடகங்களை நடத்துகின்றார்கள் ? பத்திரிக்கை சுதந்திரத்தை வளர்த்து விட்டது தவறா ? இவர்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்க வில்லையா ? மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் என்பது இவர்களுக்கு தெரியாதா ? நான் தவறாக ஒன்றும் கேட்கவில்லையே... கோபமாகவும் கேட்கவில்லையே... மகிழ்ச்சியாகத்தானே கேட்டேன் பிறகு எதற்கு அவர்கள் கோபப்பட வேண்டும் ? அத்துடன் மனம் மகிழ்ச்சியை இழந்தது பிறகு தொலைக்காட்சியை அணைத்து விட்டு பதிவு ஏதாவது எழுதுவோம் என்று யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

அடடே மறந்து விட்டேன் நான் என்ன கேள்வி கேட்டேன் தெரியுமா ? சின்னோண்டு கேள்விதான் இதோ இதுதாங்க...
ரஞ்சிதா மேடம் இப்போ எங்கே இருக்காங்க ?
இதுக்கா கோபப்படுறது ? ச்சே என்ன மனிதர்கள் இவர்கள் நீங்களே சொல்லுங்க... ?

சிவாதாமஸ்அலி-
நாயை அடிப்பானேன்... பீயைச் சுமப்பானேன் ?

69 கருத்துகள்:

 1. முதேல்ல்ல் வோட்டு என்னோடது..

  ஊசிக்குறிப்பு.. வடிவாப் பார்த்துப் பிளஸ் வோட்தான் போட்டேன்ன்.. ஹையோ இப்போ இதை எல்லாம் தெளிவாச் சொல்லிடோணும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓட்டு மட்டும்தானா ?

   நீக்கு
  2. வடையெல்லாம் கிடையாது.

   நீக்கு
  3. கருத்துரைதான் வடையா ?

   நீக்கு
  4. அதிரா .....தெளிவா சொல்வது நல்லதுதான் ,ஜோக்காளிப் பேட்டைக்கு வருவதற்கு வழி மறந்து விட்டீர்கள் போலிருக்கு !மைனஸ் வோட்டு போடும் 'ஜட்டி சேகர்'கூட என் தளத்துக்கு வந்து விடுகிறார் ,நீங்கதான் ஓடி ஒளியுறீங்க:)

   நீக்கு
  5. பகவான் ஜீ.. இதைப் படிக்கல்ல என்று மட்டும் சொல்லிடாதீங்கோ... உங்க வீட்டை என் வீடா நினைச்சு டெய்ய்ய்ய்லி வந்து ரீ குடிக்கிறேனே.. வாரம் ஒரு தடவை அல்லது 10 நாளைக்கு ஒரு தடவை மட்டும் .. வாங்கோ என நான் கூப்பிட்டா.. காக்கா போயிடுறீங்களே.. முதேல்ல்ல் ஆளா நான் தான் வருவேன் எனச் சொன்ன வார்த்தையை மீறிட்டீங்களே....:) அதனால மனமொடிஞ்சு மீ சப்பாத்து சைட்:) பண்ண முடிவெடுத்துத் தேம்ஸ்க்குப் போய்க்கொண்டிருக்கிறேன்ன்ன்:)) என்னை ஆரும் தடுக்காதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).

   நீக்கு
  6. கில்லர்ஜி உங்களுக்கும் இம்முறை வோட் மட்டும்தான்:))

   நீக்கு
  7. என்மீது கோபமோ ?

   நீக்கு
  8. ஹா ஹா ஹா இப்போ போயிந்தி கில்லர்ஜி:)

   நீக்கு
  9. அதிரா ....முதல் ஆளா வருவேன்னு சொன்னேன் ,உங்க பதிவு உங்க தளத்தில் வெளியானால் என்று சொன்னேனே ...நீங்களே விருந்தாளியா போற இடத்திலே ,உங்க கூட என்னையும் அழைப்பது என்ன நியாயம் :)

   நீக்கு
  10. ஹையோஓஓஓ பகவான் ஜீ யைப் பிடிச்சுத் தாங்கோ தேம்ஸ்ல தள்ளப்போறேன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... நான் இப்போ பேசுவது என் பக்கத்தை மட்டும்தான்ன்ன்ன்......:)..
   விடுங்கோ விடுங்கோ ..... மீ தேம்ஸ் கரையில் டீக்குளிக்கிறேன்ன்ன்ன்ன்.... ஹையோ கில்லர்ஜி புதினம் பார்க்காமல் டக்குப் பக்கென பயர் எஞ்சினுக்கு:) அடிச்சூஊஊஊஉ ஒரு "அருமந்த" உசிரைக்:) காப்பாத்திடுங்கோ:).

   நீக்கு
  11. ஸாரி எனது செல்லில் பேலன்ஸ் இல்லை. பதினைந்து பவுண்டு டிராண்ஸ்ஃபர் பண்ணிவிடுங்க...

   நீக்கு
  12. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி.. பெயர் மட்டும்தேன் உகண்டா மாப்பிள்ளை ஆனா செல்லில் பலன்ஸ் இல்லையாம் ஹா ஹா ஹா:))..

   நீக்கு
 2. நீங்கள் கேட்ட கேள்வியை படித்ததும் நினைவுக்கு வந்தது " கரகாட்டக்காரன் " செந்தில் கௌண்டமணி காமெடி தான் நினைவுக்குவந்தது "சொப்பன சசுந்தரியை " இப்போ யாரு வச்சிருக்காங்க ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே இப்படி அபாண்டமாக சொல்லாதீங்க...

   ரஞ்சிதா மேடம் இப்போ எங்கே இருக்காங்க ?

   என்று நாகரீகமாகத்தான் கேட்டேன்.

   நீக்கு
 3. அந்தப்புரத்தை இந்தப் புறம் கொண்டு வரலாமோ!?.. வேறு ஏதாவது கேட்பீராக!..

  பீராக கேட்கலாமா.. பிராந்தியாக கேட்கலாமா??..

  ஆ... என் தியானத்தை கலைத்து விட்டாய்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இந்தக் கேள்விக்கே "டமார்" சத்தம் கேட்டு விட்டதே... வேண்டாம் ஊர் வம்ஸ்..

   நீக்கு
 4. ஹா.... ஹா.... ஹா...

  சமீபகாலமாக இவர்கள் பற்றி ஊடகங்களில் செய்தி எதுவும் வரவில்லை பார்த்தீர்களா! ஆனால் நேற்று நானும் இவர்களை நினைத்தேன். காரணம் மெகா மியூசிக் சேனலில் வந்த பிரபு - ரஞ்சிதா பாடல் காட்சி ஒன்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி எல்லாம் பணம் படுத்தும்பாடு பணம் பாதாளம்வரை பாயுமாமே...

   நீக்கு
 5. என்ன சொல்றதுனு தெரியலை! ஆனாலும் பதிவு ரசிக்கவில்லை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ இவர்கள் "போலி" என்று தெரிந்த பிறகு ரசிக்கவா முடியும்.

   நீக்கு
 6. ஆகா
  இப்படியெல்லாமா கேள்விகேட்பது
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெனரல் நாளேஜை வளர்ப்பதற்காக கேட்டேன் நண்பரே...

   நீக்கு
 7. நித்திக்கு அதிர்ச்சி கொடுத்துச் சிரிக்க வைத்தீர்கள். பதிவில் என் பெயர் குறிப்பிட்டு மகிழ வைத்தீர்கள்.

  நன்றி...நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமேல் இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நமக்கு அதிர்ச்சியாகும் போலயே நண்பரே...

   நீக்கு
 8. நல்ல வேளை இதுமாதிரி அரசியல் தலைவர்களிடம் கேட்டு இருந்தால் போனை டமால் என்று வைக்கமாட்டார்கள் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து உருட்டுக்கட்டையால் டமார் என்று உங்கள் தலையில் அடித்து இருப்பார்கள் TN 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே அப்படீனாக்கா... இனிமேல் மோசடி செய்பவர்களை கேள்வி கேட்க முடியாதோ ?

   நீக்கு
 9. இப்படி கேள்வி கேட்டால்... டமார் சத்தத்துடன் விட்டதே... நீங்கள் நேரில் கேட்டிருந்தால் என்னாவது!

  த.ம. ஏழாம் வாக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அந்த டமார் தலையில் விழுமோ ?

   நீக்கு
 10. பிறருடைய குடும்ப விஷயங்களில் தலையிடும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் நமது குடும்பத்தினர்தான் என்று உரிமையுடன் நினைப்பது தவறா ?

   நீக்கு
 11. இதுக்குத்தான் பொதுவாழ்வுக்கு வந்த எவரும் தொலைக்காட்சியில் நேயர்களை நேரடி ஒலிபரப்பில் கேள்விகேட்க அனுமதிப்பதில்லை. த ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாழ்வுக்கு வந்த பிறகு ஆதர்ச தம்பதிகள் நித்தி-ரஞ்சி பொதுவானவர்கள்தானே.... நண்பரே

   நீக்கு
  2. அய்யோ... காலையில் வீடியோவை ஞாபகப்படுத்தாதீர்கள். அதை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது பயங்கர அதிர்ச்சி அலை.. குழந்தைகளும் பார்க்குமல்லவா?

   நீக்கு
  3. சன் டிவிக்காரன் குடும்ப உறவுகளையா நினைத்தான் ?

   நீக்கு
 12. இப்படி கேள்வி கேட்டால் உங்களுக்கு எப்படி அருளாசி கிடைக்கும் ?வீடு பேறு அடைய வேண்டுமென்ற எண்ணமே இல்லையே உங்களுக்கு ?இன்னும் எத்தனை ஜென்மங்கள் மானிட உருவெடுத்து அலையப் போகிறீர்களோ :)

  திருமதி கல்கி பகவான் போல் ரஞ்சிதாவையும் பில்டப் செய்து ஏமாற்றாமல் இருக்கிறார்களே என்று சந்தோஷப் படுங்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி வீடு பேறு அடைய இவர்கள் ஆசி வேண்டுமா ?

   நீக்கு
  2. அப்படி நினைச்சித்தான் அவர் காலில் போய் விழுகிறார்கள் ,அவர் விழுந்து இருக்கும் இடம் தெரியாமல் :)

   நீக்கு
  3. இன்னும் இவனை நம்புறாங்களே... மானக்கேடு.

   நீக்கு
 13. நானும் இதைத்தான் கேட்டிருப்பேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது சகோ இப்படித்தான் இருக்கோணும்.

   நீக்கு
 14. மா ரஞ்சிதானந்தா...தனியொரு ஆசிரம
  ம் அமைத்து ஆசி வழங்குவதாக காற்று வழிச் செய்தி !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காற்றுவழிச் செய்தியா ? உண்மையாகத்தான் இருக்கும் நண்பரே....

   நீக்கு
 15. ஒங்களையெல்லாம் அப்பவே ஹரியானாவுக்கு அனுப்பி டேரா சச்சா சௌதாவில் சேர்த்து குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசீர்வாதம் வாங்க வச்சிருக்கணும். அப்ப புரிஞ்சிருக்கும் ஆனந்தம்னா...சே, ஆன்மிகம்னா என்னன்னு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் நண்பரே இப்படி சாபம் இடுறீங்க... பெயரிலேயே பயங்கர குழப்பமாக இருக்கின்றதே......

   நீக்கு
 16. விலாசம் சொல்லுங்க சங்கர் ஜி ,ஆலிங்கன ஆசீர்வாதம் உண்டான்னு கேட்டு சொல்லுங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு எதற்கு ஜி விலாசம் ?

   நீக்கு
  2. அதான் சொன்னேனே ,ஹிஹி ..ஆலிங்கன ஆசீர்வாதம் :)

   நீக்கு
  3. சாமியார் ஆசை உங்களையும் விடாது போலயே...

   நீக்கு
 17. அக் குறும்புத ம 11

  பதிலளிநீக்கு
 18. உங்கள் கேள்வி சிரிப்பை வரவழைத்ததுதான் ஆனாலும்..... கில்லர்ஜி விடுங்க ஜி! இந்த மாதிரி ஆளுங்களைக் குறிச்சு எல்லாம் எதுக்கு ஜி பதிவு போட்டு உங்க நேரத்தையும் மூளையையும் வேஸ்ட் செய்யறீங்க. நீங்க சொல்லுவதால் யாருக்கும் எந்த விழிப்புணர்வும் வரப் போவதில்லை. அவர்களாக உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. இப்படி எழுதுவதால் இது போன்றவர்கள்க்கு நாம் அதிகம் முக்கியத்துவம் தருவது போல் ஆகிறது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே நமது சிந்தனைகளை இவர்களுக்காகவா செலவு செய்யணும் வேஷ்ட்தான்.

   நீக்கு
 19. வலைப் பதிவர்கள் யாராவது இந்த நேர் காட்சியைக் கண்டார்களா இல்லை இதுவும்கற்பனையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா இதுவும் ஒரு சேனல்தான் ஆன்மீகத்தை பரப்புவார்கள் மேலே உள்ள புகைப்படம் எனது வீட்டில் உள்ள டி.வி. தான் உடன் படம் எடுத்தேன்.

   நீக்கு
 20. இது மாதிரி எசகு பிசகாக கேள்வி கேட்டால் இப்படித்தான் செய்வார்கள். நீங்கள் கேள்வியை மாற்றிக் கேட்டிருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பக்குவம் போதாமல் கேட்டு விட்டேனோ.... ?
   அடுத்தமுறை நல்ல கேள்வி கேட்பேன்.

   நீக்கு
 21. கில்லர்ஜியை என்னவோ நினைத்தேன், ரொம்பத்தான் குசும்பு😊

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ.. ஐ ஆம் பாவம்.

   நீக்கு
 22. ஹாஹா:) ..மக்கள் இவங்களையெல்லாம் இன்னுமா நம்பறாங்க ஹ்ம்ம் .
  14 வது வோட்டு போட்டாச்

  பதிலளிநீக்கு
 23. அருமையாக் கேட்டீங்க...அதுக்கா இப்படி. நான் ஓட்டு போட்டுட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே ரொம்ப வேதனைப் படுத்திட்டாங்கே...

   நீக்கு
 24. இந்த பதிவிலிருந்து எனக்கு தெரிந்தது... நண்பர்... இன்னும் ரஞ்சிதாவை மறக்கவில்லை என்று.....நித்தி வெளுத்து விடுவார் என்ற பயத்தில் நான் அப்பொழுதே மறந்துவிட்டேன்...நித்திக்கு பயப்படாதவர் நண்பர் கில்லர்ஜி என்பதை கண்டு பெருமையாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இதுக்கு கண்டனம் தெரிவிச்சு போராட்டம் நடத்துவோமா ?

   நீக்கு
 25. கில்லர்ஜி கேட்ட killing question..No answer??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே அதான் டமார்"னு அடிச்சிட்டானுகளே...

   நீக்கு