தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 26, 2019

மகனுக்கு திருமணம்...வணக்கம் வலைப்பூ நட்பூக்களே...
எனது மகனுக்கு திருமணம் வைத்து இருக்கிறேன் தைமாதம் 25 ஆம்தேதி வெள்ளிக்கிழமை (08.02.2019) அன்று பரமக்குடி, மதுரை-இராமேஸ்வரம் சாலையில் உள்ள ராஜா மஹாலில் திருமணவிழா நிகழ்வுகள் ஏற்பாடாகி இருக்கின்றது. மணமக்கள் தமிழ்வாணன்-பிரியங்கா இருவருக்கும் தங்களது ஆசிகளையும், வாழ்த்துகளையும் வேண்டி நிற்கிறேன்


கடந்த வருடம் பரமக்குடியில் மகளின் திருமண வேலைகளை செய்து கொண்டு இருந்த பொழுது யதார்த்தமாக போன இடத்தில் பெண்ணைப் பார்த்ததும் கேட்டு வைத்தேன். காரணம் இன்று எல்லா சமூகத்திலும் பெண் கிடைப்பது சிங்கக்கொம்பாக இருக்கிறதே.... மகனுக்கு முதன்முறையாக பார்த்ததும் இதுவே முதலில் ஜாதகம் பொருந்த... பிறகு....

மணாளனுக்கு, மணவாட்டியையும். மணவாட்டிக்கு, மணாளனையும் பிடித்துப் போனது. நான் எதிர்பார்த்த கௌரவமான குடும்பம் பேசுவதற்கு வேறென்ன இருக்கிறது ? இதோ... இறையருளாலும், தங்களது வாழ்த்துகளாலும் நலமுடன் நிகழப்போகிறது. இந்த திருமணம் நிகழப்போவதற்கு அடிப்படை காரணம் இந்நொடிவரை நானும் சரி, எனது மகனும் சரி வரதட்சினையைப்பற்றி பேசவில்லை, பேசப்போவதுமில்லை. இது புதிய உறவுகளுக்குள் அழுத்தமான பந்தத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே.

தங்களது வருகையையும், ஆசிகளையும் வேண்டி.... தேவகோட்டை கில்லர்ஜி.


குடியரசு தின வாழ்த்துகள்

93 கருத்துகள்:

 1. Congratulations and Best wishes for a happy married life.!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா மணமக்களுக்கு... தங்களது வாழ்த்து முதலில் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

   நீக்கு
 2. இனிய நல்வாழ்த்துகள்
  மணமக்கள் நீடுழி சகல இன்பங்களையும் பெற்று வாழ்க!வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா ஈபிள் டவரிலிருந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல...

   நீக்கு
 3. வாழ்க மணமக்கள்! எல்லா நலனும் வளமும் பெற்று , சீரும் சிறப்புமாக வாழ, உளமார்ந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வாழ்த்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 4. ஆகா....
  மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி...

  எல்லா நலன்களையும் பெற்று பல்லாண்டு இனிதே வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களது மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியே...

   நீக்கு
 5. திருமண பந்தத்தில் இணையப்போகும் மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஏஞ்சல் தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 6. வாழ்க வளமுடன்.
  காலையில் நல்ல செய்தி.
  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
  இறைவன் அருளால் நல்லபடியாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.

  பயணத்தில் எடுத்த படங்கள் எல்லாம் அழகு.
  குடியரசு தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 7. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் கில்லர்ஜி உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும். பல்லாண்டு இணைந்து மகிழ்வுடன் வாழ்ந்திட எங்கள் வாழ்த்துகளுடன் பிரார்த்தனைகளும்.

  நீங்களும் பெயர்த்திகள் பெயரன்கள் பல கண்டு அவர்களுடன் விளையாடி நல்ல குழந்தைகளாக அவர்கள் வந்திடவும் எங்கள் வாழ்த்துகளுடன் பிரார்த்தனைகள்!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக எதிர்வரும் பெயரன்-பெயர்த்திகள் வரை வாழ்த்திய வில்லங்கத்தார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல...

   நீக்கு
 8. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. மகிழ்ச்சியான செய்தி அழைப்புக்கும் நன்றி மணமக்களுக்கு மனமார்ந்த நல்ஆசிகள்.திருமண நாளில் சந்திப்போம்.வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வாழ்த்துகளுக்கும், திருமண வருகைக்கும் நன்றிகள் கோடி.

   நீக்கு
 10. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி எல்லா நலனும்பெற்று நீடுழிவாழ்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வாழ்த்துகள் மணமக்களுக்கு என்றும் வேண்டும்...

   நீக்கு
 11. மிகவும் மகிழ்ச்சி ஜி...

  மணமக்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 12. இனிய இல்லறத்தில் ஈடுபட இருக்கும் மகனுக்கும், வரப்போகும் அவர் மனைவிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 13. வலையுலகில் போடஏன்றே ஒரு பத்திரிகை அச்சடிப்பீர்களோ!!!! அதிலும் கில்லர்ஜி என்றே இருக்கிறது!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லையே ஜி உள்ளதை உள்ளபடி காட்டி இருக்கிறது அழைப்பிதழ்.

   நீக்கு
 14. மணமக்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
  Jayakumar
  பி.கு. .: ​PDF கோப்புகளை எப்படி edit செய்வது என்பது பற்றி எங்களுக்கும் கற்றுத் தாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
   கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அடியேன் அறியேன்.. ஐயா,. இருப்பினும் இதில் எடிட் இல்லை என்பது எமது கருத்து.

   நீக்கு
  2. PDF Editor இருந்தாலும் நிறைய டாகுமென்ட்ஸை எடிட் பண்ண இயலாது. பிக்சர் வடிவத்தில் சில பக்கங்களை பிடிஎஃப் சேமிப்பதால்

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  திருமண அழைப்பிதழ் கண்டேன். தங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று சீரோடும், சிறப்போடும் நூறாண்டு காலம் வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

  அழைப்பிதழும், அதை கொடுக்கச் சென்ற போது எடுத்த இடங்களின் போட்டோக்களும் அழகாக இருக்கிறது.

  அழைப்புக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், மணமக்களை வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 16. சொல்லொன்று செயலொன்று என இல்லாமல் வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்வதற்கு பாராட்டுகள்.

  மணமக்கள் எல்லா வளமும் பெற்று நோய் நொடியின்றி மனமொத்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கு மனமார்ந்த நன்றி.

   நீக்கு
 17. பையனை பெத்த மெதப்புல பழமொழிகூட சிங்கக்கொம்புன்னு சொல்ல வருதோ!?

  பதிலளிநீக்கு
 18. மணமக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. ரொம்ப சந்தோஷமான சமாச்சாரம். மணமக்களுக்கு வாழ்த்துகள். மனமொத்து வாழ்க்கைல நல்லா இருக்கட்டும்.

  திருமணம், நான் சிறிய வயதில் நடந்த ஒட்டப்பாலம் பகுதி, பரமக்குடி (ரவி தியேட்டர் பக்கம்தானே).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே வாழ்த்துகளுக்கு நன்றி.

   ஆம் நண்பரே... ரவி தியேட்டர் ஆற்றுப்பாலம் அதைக் கடந்து திரௌபதை அம்மன் கோவில் பிறகு ஓட்டப்பாலம் பின்புறம் உங்கள் நண்பர் கமல்ஹாசன் வீடு, மறுபுறம் ராஜா மஹால்.

   நீக்கு
  2. கில்லர்ஜி... கமலஹாசன் அந்த வீட்டை ஒருத்தருக்கு வித்து சில வருஷம் ஆயிடுச்சே....

   கமலஹாசன் என் நண்பரா இருந்தா, நான் எதை எழுதினாலும் யாருக்கும் புரியாதே... அவ்வளவு தெளிவானவர்னா கமல்தாசன்

   நீக்கு
  3. கமலின் தாய்மாமன்தான் இருக்கிறாராம்.
   கமல் பேசுவது புரியவில்லையா ?

   நீக்கு
 20. கடமைகளை முடித்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. மணமக்களுக்கு இனிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... தம்பதிகள் இனிதே பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ கடவுள் அருள் புரிவார்.

  பதிலளிநீக்கு
 22. அழைப்பிதழில் வலையுலகம் எனத்தான் இருக்கு ... அதிரா குடும்பம் அஞ்சு குடும்பம் என்று போடவில்லை...
  புரட்சியை கிளப்பிவிடுவோம்:).

  போன போஸ்டில் , கில்லர்ஜிக்கு நல்ல மருமகள் கிடைக்க வாழ்த்துக்கள் என கூறியதைப் பார்த்து, ஏதோ நடக்கிறது.. சொல்லுவார்தானே கில்லர்ஜி என நினைச்சேன்ன்... வாழ்த்துக்கள்.

  2ம் தடவையாக, மாமா ஆகப்போகும் கில்லர்ஜிக்கும் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் வலையுலகத்தில்தானே இருக்கின்றீர்கள்.

   வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி.

   நீக்கு
 23. இனிய தமிழில் இன்னோரு தடவை வாழ்த்துகள் சொல்கிறேன். ராமேஸ்வரம் வரை போனீர்களா.
  அப்படியே இங்கயும் வந்திருக்கலாம் அப்பா.
  மணமக்கள்,மகள் ,மாப்பிள்ளை எல்லோரும் உங்கள் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் இருக்கும்படி இல்லறம் நடத்தி என்றேன்றும் பல்கிப் பெருகி வாழ என் ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி அம்மா.

   நீக்கு
 24. மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.
  உங்க படத்தை பார்த்து சின்ன பையனின் அப்பாவாக இருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   எனக்கு 'எல்லாமே' சீக்கிரமாக நிகழ்ந்து விட்டது நண்பரே.

   நீக்கு
 25. மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக குழந்தைகளுக்கு தங்கள் ஆசீர்வாதங்கள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 26. "செம்புலப் பெயல் நீர் போல
  அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
  மணமக்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. எல்லா வளங்களும், நன்மைகளையும் பெற்று மணமக்கள் நீடூழி வாழ்கவென்று மனமுவந்து வாழ்த்தி ஆசீர்வாதங்களைச் சொல்கிறேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது ஆசீர்வாதங்கள் குழந்தைகளுக்கு கிடைப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 28. மணமக்களுக்கு எனது இனிய நல்வழ்த்துக்கள்!! நண்பரே....

  பதிலளிநீக்கு
 29. கில்லர்ஜி... இப்போதான் கவனித்தேன்

  தங்கள் வரவுகளையும் ஆசிகளையும் வேண்டி .... கில்லர்ஜி

  ன்னு இருக்கே.... தங்கள் வருகையையும் என்றல்லவா போட்டிருக்கணும். 'வரவுகளையும்'னா, 'மொய்'யை எதிர்பார்க்கிற மாதிரி இருக்கே.... ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே...
   நேற்று நள்ளிரவே நினைத்தேன் நீங்களே சரியாக சொல்லி விட்டீர்கள்.

   இதோ இப்பொழுதுதான் சற்று ஃப்ரீ மாற்றி விட்டேன்.

   நீக்கு
 30. மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இறையருளால் திருமணம் சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 31. Hearty Congratulations and praying for a peaceful and happy, healthy married life for the couple. Our blessings to your family.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 32. மிக்க மகிழ்ச்சி. மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே ஆஸி வரையிலும் அழைப்பிதழ் கிடைத்ததா ? வாழ்த்துகளுக்கு நன்றியும், மகிழ்ச்சியும்.

   நீக்கு
 33. அழைப்பை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நண்பரே. நன்றி.
  மணமக்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 34. மணமக்களுக்கு எனது வாழ்த்துக்களும் அண்ணா...

  பதிலளிநீக்கு
 35. மிக்க மகிழ்ச்சி கில்லர்ஜி. மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மணமக்களை வாழ்த்தியதிவ் மகிழ்ச்சி.

   நீக்கு
 36. மணமக்களுக்கு நல் வாழ்த்துகள்! மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வேண்டுதலுக்கு நன்றி.

   நீக்கு
 37. வரும் தை 25 (08-02- 2019) அன்று நடக்கவிருக்கும் தமிழ்வாணன் பிரியங்கா திருமணம் இனிதே நடைபெறவும் இல்லறம் ஏற்கவிருக்கும் மணமக்கள் வளம்பல பெற்று நீடுழி வாழவும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகையும், வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 38. அண்ணா...

  மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ரொம்ப மகிழ்வாய் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 39. மண வாழ்க்கையில் இணைந்து புது வாழ்க்கையை துவங்கப் போகும் தமிழ்வாணனுக்கும், பிரியங்காவிற்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 40. இனிய செய்தி! மகிழ்ச்சி சகோ. மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 41. பதினாறு செல்வங்களும் பெற்று
  மணமக்கள் பல்லாண்டு காலம்
  சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 42. இனிதே திருமணம் நடைபெற்றிருக்கும்.. உங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் இனிய வாழ்த்துக்கள் கில்லர்ஜி, தம்பதிகள் நலமோடும் மகிழ்வோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்ன்ன்... இன்றுதான் எங்கள் அக்காக்களின் திருமண நாளும் பெப்ரவரி 8, அதனாலதான் நினைவு வந்து இங்கும் வந்தேன் வாழ்த்த.

  பதிலளிநீக்கு
 43. திருமணம் சிறப்பாக நடைபெற்றிருக்கும். மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகள். இனிய திருமண வாழ்வுக்கான பிரார்த்தனைகள். இப்போத் தான் நினைவில் வந்தது. கவி அமுதம் வாழ்த்தைப் பார்த்ததும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி சகோ.

   நீக்கு
 44. தேவியர் இல்லத்தின் இனிய திருமண நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 45. இனிய வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு.வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு