புதன், பிப்ரவரி 24, 2016

வீராணம், வீச்சருவாள் வீராயி


எனக்கு யாரையாவது காதலிக்க வேண்டுமென ஆசை வந்து விட்டது இதனால் டிப்-டாப்பாக ட்ரெஸ் செய்து கொண்டு காலேஜ் வாசலில் போய் நின்று கொண்டேன் ஒருத்தியை மட்டும் இரண்டு வாரமாக தொடர்ந்து கொண்டே இருந்தேன் சட்டென நின்றவள்...
என்ன ?
இல்லை.... அது... வந்து உங்களை எனக்கு பிடிச்சுருக்கு நாம கல்யாணம் செய்துக்கிறலாமா ? 
சட்டென கேட்டு விட்டேன் ஒரு கணம் என்னை தீர்க்கமாக பார்த்தவள்.
பரவாயில்லையே நேரடியா கல்யாணத்துக்கே போயிட்டே ஆமா... பேரென்ன ?
அ............
ச்சூ சரியா வராது.
ஏன் ?
நாம ரெண்டு பேருமே வேற மதம் எங்க வீட்ல ஒத்துக்கிற மாட்டாங்க அதனால இனிமே என் பின்னால வரவேண்டாம்.
ஏங்க அது வந்து..
இதோ பார் முடிஞ்சுருச்சு இனிமே என் பின்னாலே வந்தே செருப்படி விழும்.
அவள் போய்க் கொண்டே... இருந்தாள் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ச்சே என்ன இது... சட்டுனு இப்படிச் சொல்லி விட்டாளே.... சரி போகட்டும் வேற எவளையாவது பார்க்கலாம் இனிமே நேரடியாக பேசவேண்டாம் லட்டர் கொடுத்துருவோம் சரியென அடுத்த ஒரு வாரத்துக்குள் ஒருத்தியை தேர்வு செய்தேன் லட்டரில் எனது பெயர் விபரங்களை எழுதி அவளிடம் கொடுத்து விட்டு சட்டென போய் விட்டேன் மறுநாள் அவளுக்காக மரத்தடியோரம் நின்றிருந்தேன் அவளும் நேராக என்னிடம் வந்தாள் அவள் கையில் லட்டர் இருந்தது என்னிடம் கொடுத்தாள் நானும் சந்தோஷமாக வாங்கி பிரித்தால் ? நான் கொடுத்த அதே லட்டர்
என்னங்க இது நான் கொடுத்ததையே திருப்பித் தர்றீங்க ?
என்ன இது ?
ல... லவ் லட்டரு
யாருக்கு ?
உங்களுக்குதாங்க...
இங்கே பார் இந்த விசயமெல்லாம் எங்க வீட்டுக்கு பிடிக்காது.
இல்லேங்க நான் உண்மையிலேயே காதலிக்கிறேன்.
நீங்க என்ன ஆளுக ?
என்னது ?
என்ன ஜாதினு கேட்டேன் ?
கௌதாங்கி.
அதுசரி இது வேறயா.... நாங்க சங்குனி ஜாதி எங்க குடும்பத்துல எதுக்கெடுத்தாலும் ஆச்சாரம் பார்ப்பாங்க சரியா வராது.
இல்லே நான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன்.
இதோட நிறுத்திக்க ஏதோ சங்குனி ஜாதிக்காரிதானே மங்குனி மாதிரி இருப்பான்னு கணக்கு போடாதே சங்கே அறுத்துப்புடுவேன் ஓடிரு.
சொல்லி விட்டு நடையை கட்டி விட்டாள்... ச்சே என்ன இது இவ்வளவு மோசமா பேசிட்டுப்போறா.. என்ன செய்யலாம் ? மதமும் பிரச்சனை ஜாதினு வந்தாலும் பிரச்சனை பொறுமையாத்தான் கையாளனும் பெயரை மாற்றியாகணும் அப்பத்தான் சரியா வரும். வேற காலேஜ் பக்கமா போயிடுவோம் புதுசாபோன காலேஜ்ல முதல் நாளிலிருந்து ஒருத்தி என்னையே பார்த்துக்கிட்டு இருந்தாள் சரி இவளும் நல்லாத்தான் இருக்காள் நேராக அவளிடம் போய்...
ஐ லவ் யூ 
என்றேன் அவள் சிரித்து விட்டு போய் விட்டாள் மறுநாள்
ரெஸ்டாரண்ட் போகலாமா ? 
எனக்கேட்டேன் தலையாட்டி விட்டு கூடவே வந்தாள்.
என்ன சாப்பிடலாம் ஐஸ்க்ரீம் ?
ம் தலையாட்டினாள்.
பேரர் இரண்டு வெண்ணிலா கொண்டு வாங்க 
ஆர்டர் கொடுத்து விட்டு
உன் பேரென்ன ?
வெண்ணிலா.
நான் பேரைக் கேட்டேன் ?
அதான்...
பேரே வெண்ணிலாவா எனக்கு பிடிச்சுருக்கு.
ம்... உங்க பேரென்ன ? 
என்றாள் நான் சுதாரித்துக் கொண்டு
சிவாதாமஸ்அலி 
என்றேன் அவள் என்னைப் பார்த்து மிரண்டாள்.
என்ன ஒரு மாதிரியா... பார்க்கிறே ?
ஒண்ணுமில்லே... ஒரு நிமிஷம் கை கழுவிட்டு வர்றேன்.
ரெஸ்ட்ரூம் போனவள் கால்மணி நேரமாச்சு வரவில்லை போய் பார்த்தால் ? யாரும் இல்லை ஆர்டர் கொடுத்ததை நானே தின்று விட்டு வெளியே வந்தேன் மறுநாள் அவளுக்காக காத்திருந்தேன் என்னைக் கண்டதும் ஒதுங்கினாள் நான் நேரே போய் கேட்டேன்
என்ன நீ திடீருனு காணாம போயிட்டே ?
இங்கே பாருங்க இனிமே எம்பின்னாலே வராதீங்க.
ஏன் ?
உங்ககிட்ட நிறைய குழப்பம் இருக்கு, பேரே சரியில்லே.
அது வந்து... நான் ஏன்.. அப்படிச்சொ....
வேண்டாம் அடுத்து எங்கிட்டே பேசினே எங்க அப்பா தெரியுமா ? உலியாசாரி அவர்ட்ட சொன்னா குத்த மாட்டாரு கொத்திடுவாரு ஜாக்கிரதை.
போய் விட்டாள் பேரைக் கேட்டதும் கிலியாகி விட்டது இவள் உலியாசாரி மகளா ? பேரை மாற்றியும் பிரச்சனையா ? நமக்கு இந்த காதலே வேண்டாம். நம்ம வீராணம் அத்தை மகள் வீராயியை கட்டிக்கிட்டா கருதறுத்தாவது கஞ்சி ஊத்துவா போதுமடா சாமி. 

CHIVAS REGAL சிவசம்போ-
காதல்ல இவ்வளவு சமாச்சாரம் இருக்கா... நம்ம அந்த ரூட்ல போகாததுனால ஒண்ணும் தெரியாமே போச்சே....

61 கருத்துகள்:

 1. இதெல்லாம் பார்த்து வந்தா காதல் இல்லை ,சுயநலம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மையான காதலுக்கு கண் கிடையாதாமே...

   நீக்கு
 2. நீங்கள் எல்லா மதத்திற்கும் பொதுவான பேரை சொல்லியிருக்கவேண்டும். ம். ம். என்ன செய்ய. உங்கள் தலைவிதி அத்தை மகள் வீராணம் வீச்சருவாள் வீராயியை திருமணம் செய்துகொள்ளவேண்டியுள்ளது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பொதுவான பெயர் ''ராஜா'' என்று சொல்லி இருக்கலாமோ ?

   நீக்கு
 3. சின்னதா ஒரு காதல் கதை கேட்ட உணர்வு. எது வாய்க்குமோ அது தான் வாய்க்கும்னு சொல்றது கல்யாணத்துக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொருந்தும் ஜி. விராயியை கட்டிக்கவாது கொடுத்து வச்சிருக்குன்னு நினைச்சு தேத்திக்கங்க....மனசை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நீங்க சொன்னபடிதான் காலம் ஓட்டணும்.

   நீக்கு
 4. காலங்கள் மாறினாலும், ஜாதியும் மதமும் தலைவிரித்தாடி வருவதை மறுக்க இயலாது! யதார்த்தமாய் உள்ளது பதிவு! அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜாதியை ஒழித்தாலும், மதத்தை ஒழிப்பது கடினம்தான் நண்பரே....

   நீக்கு
 5. நகைச்சுவை பதிவு அருமையாக இருக்கு சகோ.

  பதிலளிநீக்கு
 6. இனி வரும் காலங்களில் சாதிக்கொடுமை அதிகமாத்தான் ஆகும் போல சகோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோ மீண்டும் தலை தூக்குகின்றதே...

   நீக்கு
 7. லவ் லெட்டரா? எந்தக் காலத்துல இருக்கீங்க? வாட்சப் காதல், ஸ்கைப் கல்யாணம் எல்லாம் வந்தாச்சு...இப்பல்லாம் முகமூடி போட்டுத்தான் காதல் சொல்லணும்..பார்க்காமல் காதல், சொல்லாமல் காதல், சமூகவலைத்தளக் காதல், ஹைடெக் காதல் இப்படி எதையாவது ஹைடெக்காக முயற்சி செய்திருந்தால் அமைந்திருக்கும். ஓல்ட் எல்லாம் கோல்ட் இல்லை இதற்கு எல்லாம்...தனவந்தனா இருந்தா சாதியாவது, மதமாவது...ஹும் இந்தக் கேரக்டருக்குச் சாமர்த்தியம் பத்தாது..தேறாத கேஸ்...ஹஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க அம்பூட்டு வெவரம் இருந்தால் நான் ஏன் பல்பு வாங்குறேன்.

   நீக்கு
 8. "கணக்குப் பார்த்துக் காதல் வந்தது.." என்று ஒரு பாடல் உண்டு!
  :)))

  பதிலளிநீக்கு
 9. கண்டதும் காதலா.? இல்லையே . பொறி வைக்கிறீர்கள் எதுவும் சிக்கமாட்டேன் என்கிறதா கிடைத்தது கொண்டு திருப்தி அடைவது சிறந்தது என்று தெரிந்து கொள்ள உங்களை மூன்று பேர் ரிஜெக்ட் செய்ய வேண்டிவந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மைதான் பட்டால்தானே தெரியுது.

   நீக்கு
 10. காதல் குழம்பி ஓடிப்போய்விடும் :-)
  சாதி, மதம், இடம், செல்வம் இப்படி நிறைய ...

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு ஐயா.அனைவரும் கூறியபடி தான் நாளைய தினங்களில் சாதிக் கொடுமை அழியும் வாய்ப்பு குறைவு தான் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ என்று பள்ளியில் சேர்க்கும் பொழுது சாதியின் பெயரைக் கேட்பதை அரசு ஒழிக்கின்றதோ... அதுவரை இப்படித்தான்.

   நீக்கு
 12. கீதா அவர்கள் கூறியதை நானும் வழிமொழிகிறேன். 1950-களில் சாதி பெயரை பெயருக்குப் பின் போட்டுக்கொள்ளும் பழக்கம் இருந்தது. 1970-களில் அது முற்றிலும் ஒழிந்தது. ஆனால், இப்போது மீண்டும் 20 -25 வயது பசங்க தங்களின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்கிறார்கள். திருமண பத்திரிகையிலும் பிளக்ஸ் போர்டிலும் ஜாதியைப் போட்டு அரிவாளையும் பக்கத்தில் போட்டுக்கொள்கிறார்கள். நாம் வளர்கிரோமா..? அல்லது வீல்ச்சியடைகிரோமா..? என்று தெரியவில்லை.
  நல்லதொரு நகைச்சுவை பதிவு நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் கட்டவுட்டிலும்கூட சாதியும், அருவாளும், மிருகங்களும் சமூகம் எங்கே செல்கிறதோ புரியவில்லை.

   நீக்கு
 13. வணக்கம்
  ஜி
  ஜாதி என்ற சொல்ல ஒழிய மாட்டாதா..நல்ல விடயம் படத்தை பார்த்தவுடன் பயம் வந்து விட்டது... ஜி. அருமையாக சொல்லியுள்ளீர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் பயப்படக்கூடாது நாமெல்லாம் யாரு......

   நீக்கு
 14. நல்லாத்தான் இருக்கு...ஆனா..ஒன்னு மட்டும் உதைக்குது அது என்னான்னு சட்டுபுட்டுன்னு நிணவுக்கு வரமாட்டுது....

  பதிலளிநீக்கு
 15. அதெல்லாம் சரிதான்..

  அந்த அருவாள பார்த்தா கருதறுக்குறது மாதிரி தெரியலையே!...
  எதுக்கும் உஷாரா இருந்துக்குங்கோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இப்ப லீவு லட்டர் கொடுக்கவே பயமாக இருக்குது.

   நீக்கு
 16. கற்பனை கவிதைகள் எழுதி
  கற்பனையின் விழியோரம்
  விழித்திருந்து விழுந்து கிடந்தேன்...
  அந்த வழியோரம் வந்த வாசகி ஒருத்தி...
  கற்பனைகளை ரசித்து சென்று...
  என்னுள் வசிக்க வேண்டுமென்று...
  என்னிடம் யாசித்து சென்றாள் காதலை...
  என்னிதயம்தான் கற்பனைகளால்
  சூழப்பட்ட தீவு போலாயிற்றே...
  அவளை நிஜமென எப்படி 
  நம்பினேனோ தெரியவில்லை...
  என் கற்பனைகளை கலைத்து விட்டு
  எப்படி என்னுள் குடியேறினாள் 
  என்பதும் புரியவில்லை....

  Ajai Sunilkar Joseph

  ajaisunilkarjoseph.blogspot.com
  இதுதான் அன்பரே
  என் காதல் தொடக்கம். ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகிய காதல் தொடக்கம் அற்புதமான வரிகள் வாழ்த்துகள் நண்பா.

   நீக்கு
  2. நன்றி நண்பரே
   உங்கள் பதிவு அருமை நட்பரே

   நீக்கு
 17. படமே அருமை .. காமெடியாக அதே நேரம் கருத்தான ஒரு கதை சார்.. super

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 18. முதல் போஸ்ட் நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்கன்னு எழுத மறந்து எழுதிவிட்டு வர,, இங்காலுமா... சிரிச்சு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது அண்ணா ஜி. நீங்க கன நாளைக்கு பின் இப்படியொரு நகைச்சுவை (கருத்தான)பதிவு. சூப்பர். ஏன் இப்படி எழுதாமல் இடையில் செண்டிமெண்ட் ஆக போட்டுறீங்க.இப்படி எழுதும் திறமை எல்லோருக்கும் வராது. இதில் நீங்க தனி(த்து நிற்கும்)ஓருவர்.(நான் சொல்லவந்தது உங்க வழி தனி வழி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ என்னால் நகைச்சுவையை மட்டும் எழுத முடியும் பிறர் எனக்கு செண்டிமெண்ட் கதை எழுத தெரியாது என்று நினைத்து விடக்கூடாதே என்பதற்காக அனைத்தையும் கலந்து எழுதுகிறேன் தங்களை சிரிக்க வைப்பதற்காக விரைவில் வருகிறார் ‘’பெரியகுளம், பெரியவர் பெரியசாமி’’

   நீக்கு
 19. அண்ணே... இன்னைக்கு உலகம் எவ்வளவோ முன்னேறிடுச்சு... பால்பாயிண்ட் பேனாவுல லவ் லெட்டர் எழுதின காலமெல்லாம் மலை ஏறிடுச்சு.... நீங்க அங்கயே நிக்காம இந்தக் காலத்துக்கு வாங்க... இப்ப முகநூல்ல பிரண்டாகி, வாட்ஸ் அப்ல லவ்வி.... டுவிட்டர்ல டூர் போறாங்க...

  பாத்து வீராயிக்கிட்ட போன் இருக்கா...? அது பாட்டு முகநூல் பக்கம் போயிராம....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கருதறுக்கிறவள் செல்போண் வச்சு இருக்க மாட்டாள்னு நினைச்சேன் நீங்க சொல்றதைப் பார்த்தாள் நாளைக்கே வீராணத்துக்கு போண் போடணும் போலயே.....

   நீக்கு
 20. காதலிக்கத் தொடங்கும்போதே சாதிப் பிரச்சினையா
  இனிமேல்,காதல் கடிதத்துடன் சாதிச் சான்றிதழினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டுவிடுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல யோசனைதான் நண்பரே இதனால் ஜெராக்ஸ் மிஷின் வச்சு இருக்கிறவனுக்கு நல்லா வியாபாரம் ஆகும் பிடிக்காதவளுக லட்டரை கிழிச்சு மூஞ்சியில் வீசும் பொழுது சாதிச் சான்றிதழையும் கிழிச்சு வீசுவாள்.

   நீக்கு
 21. காதல்னா கட்டக் கடைசியில்தான் ஜாதி, மதம் தெரிய வரும் என்பார்கள். நீங்கள் தடாலடி ஆளாக இருக்கிறீர்கள். அதெல்லாம் சரி. படத்தில், கம்பீரமாக நிற்கும் அந்த அம்மாளை, கொஞ்சம் இந்த பக்கம் திரும்பச் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இப்படி தொடக்கத்துலயே கேட்டுக்கிறதும் நல்லதுதானே மனசை பறிகொடுத்துட்டு நாளைக்கு ஊருல ஜாதிப்பிரச்சினை வரும்போது தண்டவாளத்துல தலையை வைக்க வேண்டியதில்லையே....
   அந்த போட்டோவை திருப்ப முடியவில்லை நண்பரே....

   நீக்கு
 22. என்ன ஒரு சோகம்...வீராயிகிட்ட ஒன்னும் பிரச்சனையில்ல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...
   காதலே இது பொய்யடா
   இதை காதில் ஓதி வையடா
   அப்படினு....

   நீக்கு
 23. காதல் நிலவரம் கலவரம் தான்

  பதிலளிநீக்கு
 24. அன்புள்ள ஜி,

  காதல் கசக்குதையா... வர வர காதல் கசக்குதையா

  மனம் தான் லவ்வு லவ்வுனு அடிக்கும்... லபோன்னுதான் துடிக்கும்

  பைத்தியம் புடிக்கும்...

  முயற்சி திருவினையாக்கும்.

  த.ம.14

  பதிலளிநீக்கு
 25. வீராயி வீராணம் - உங்க
  அத்தை மகளா - அவ
  வெட்டிக் கொத்தினாலும்
  சோறு, கஞ்சி ஆக்கித் தருவா என்றால்
  நம்பலாம் நண்பா!

  பதிலளிநீக்கு
 26. உண்மையைச் சொல்லும் பதிவு சகோ, நாம் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம், ஜாதி மதம் இவைகள் இந்த தலைமுறையினரிடம் அதிகம்,,, நான் எங்கள் ஊர் திருவிழா கூட்டத்தில் அங்குள்ள ப்ளக்ஸ் பேனர் இவைகளில் பார்த்த விசயம் மனம் வலிக்கும் செயல்,,, சின்னப் பையன்கள்,, 7 8 படிக்கும் பிள்ளைகள் தன் பெயர் பின்னால் சாதிப்பெயருடன்,,,, அதில் அவர்கள் எழுதிய வசனம் இருக்கு பாருங்க,,,

  நான் வரலப்பா என் வீட்டில் படித்து என்னை ஜாதிதுஷ்பிரயோகக்காரி ன்னு,,,

  பகிர்வு அருமை சகோ,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையே சகோ கட்டவுட்டுகளிலும் இப்பொழுது ஜாதி தலை தூக்குகின்றது.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...