தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 08, 2015

காவல்துறை உங்கள் நண்பன். (India)குறிப்பு- இதை முதன்முதலாக படிப்பவர்கள் இதைக் கிளிக்கி
Police Your Friend படித்து விட்டு இதைப்படித்தால் விசயங்கள் சுலபமாக விளங்கும். Thanks by, Killergee


தேவகோட்டை, ஷேக் முஹம்மது ராஸித் அல்மஹ்தூம் ரோட்டில் காரில் போய்க்கொண்டிருந்தேன்... கோட்டையம்மன் கோவில் முக்கில் வளைந்தபோது ஒரு கான்ஸ்டபிள் காரை நிறுத்தச் சொல்லி கை காண்பித்தார், நிறுத்தவும் அருகில் வந்து....
வண்டியை ஓரமா நிறுத்திட்டு R.C புக்கையும், லைசென்ஸையும் எடுத்துட்டு வாங்க ஐயா கூப்புடுறாரு,
நான், காரை ரோட்டை விட்டு இறங்கி செடிகொடியோரமாய் நிறுத்தி ஆஃப் செய்து அவர் கேட்ட, சமாச்சாரங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போனேன்...

வணக்கம் ஸார்...
ம்...ம்..
கான்ஸ்டபிள் எனது கையில் உள்ளதை பிடுங்காத குறையாக எடுத்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார், அவர் ஒரு நோட்டம் விட்டு கேட்டார்.

பேரு கில்லர்ஜியா ? 
ஆமா ஸார்.
நீங்க என்ன ஆளுக ? 
......
கேட்டது காதில விழலே ? 
ஆச்சாரி ஸார்.
ம்ம்..... எங்கே வேலை செய்றீங்க ?
கடை வச்சுருக்கேன் ஸார்.
என்னகடை ?  
முட்டைக்கடை. 
முட்டைக்கடையா ? எங்கேயிருக்கு கடை.
மாந்தோப்பு வீதியில, அருணா தியேட்டர் பக்கம் ஸார்.
ஏய்யா, வண்டி ஓட்டிக்கிட்டே செல்போன் பேசுறியே ரூல்ஸ் தெரியாதா உனக்கு ?
நான் செல்போன் பேசல ஸார்.
யோவ், ஐயா சொல்லிக்கிட்டு இருக்காங்க... எதிர்த்தா பேசுறே.

ஐயோ, சத்தியமா நான் போன், பேசல ஸார்.
யோவ் கான்ஸ்டபிள், சரிவர மாட்டான் இவன் கார்ல செல்போனை எடுத்து வாய்யா...  
கான்ஸ்டபிள் வேகமாய் ஓடினார் திரும்பி வந்து சொன்னார்,
காருல, செல்போன் இல்லை ஸார். எங்கேடா வச்சுருக்கே எட்றா பாக்கெட்லருந்து...
ஸார் எங்கிட்டே செல்போன் இல்லே... ஸார்.
வரும்போது பேசினே, அதுக்குள்ளே எங்கேடா மறைச்சே ?    
எங்கிட்டே செல்போனே இல்லேஸார் பின்னே எப்படி ஸார் நான் பேச முடியும் ?
என்னது... செல்போன் கிடையாதா உங்கிட்டே ?  
ஆமா ஸார், நான் வீட்லயும் கடையிலயும் போன் இருகிறதால, செல்போன் வாங்கலை ஸார்.
யோவ் கான்ஸ்டபிள், இவணை கூட்டிட்டு போய்யா அங்கிட்டு.

(எனது சமாச்சாரங்களை எல்லாம் தூக்கி கான்ஸ்டபிளிடம் வீசினார்) கான்ஸ்டபிள், என்னைத் தள்ளிக் கொண்டு வந்தார் மெதுவாக சொன்னார்
யோவ் மீசை மட்டும் பெரிசா வச்சுருக்கே விபரம் இல்லையேயா, ஐயா உன்மேல பயங்கர கோபமா இருக்கார், எதையாவது கவனிச்சுட்டுப்போ, நான் சமாளிச்சுக்கிறேன்.
ஸார்... இப்பத்தான் 3 ½ லிட்டர் பெட்ரோல் போட்டேன் மிச்சம் 12 ரூபாதான் இருக்கு.
யோவ், சரியான சாவுகிராக்கி பிச்சைக்காரத்தனமா இருக்கியேயா, வண்டிய எடுத்துட்டு ஓடுயா...
(கையிலுள்ளதை பிடுங்கி விட்டு, கையிலுள்ளதை காருக்குள் வீசினார்) உடனே வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன் செல்போனை வீட்ல, மறந்துட்டு வந்தது எவ்வளவு நல்லதாப் போச்சு.. வீட்டருகில் இருக்கும் மரத்தடி பிள்ளையாருக்கு மனதுக்குள் நன்றி சொன்னேன். 

CHIVAS REGAL சிவசம்போ-
ஹூம், ஏமாத்துறவனை ஏமாத்துனாத்தான், இந்தியாவுல வாழமுடியும்.  

காணொளி

68 கருத்துகள்:

 1. ஒளிஒலி (Video) யில
  இது ஒரு பொன்மாலைப் பொழுது என்கிறியள்
  பதிவில
  ஏமாற்றுவோரை ஏமாற்றினால் தான்
  இந்தியாவில பிழைக்க இயலும் என்கிறியள்
  அது
  இந்தியாவில மட்டுமல்ல உலகெங்கிலுமே...
  https://translate.google.com/ என்ற இணைப்பு
  தங்கள் மொழிபெயர்ப்புக்கு உதவுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே ஆம் உலகம் முழுவதும் அப்படித்தான் ஏமாற்றுக்காரர்களின் உலகம் ஆகிவிட்டது. தங்களது ஆலோசனைக்கு நன்றி முயற்சிக்கின்றேன்.

   நீக்கு
 2. பரவாயில்லீங்களே, நல்லா பொளைக்கக் கத்திட்டீங்களே, சீக்கிரம் மேலுக்கு வந்திருவீங்க. அப்புறம் இந்த நாறப் பயல்க உங்க வீட்டு வாசல்ல நிப்பானுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஐயா செய்யிறது நானும் குட்டி புள்ளக்காரன்தானே.... நீங்களே போய் போட்டு விட்டுருவீங்க போலயே....

   நீக்கு
 3. கற்பனையோ, நிஜமோ... ஆனால் உண்மையில் இப்படித்தான் நடக்கும்.. ஏனோ இந்தியாவில் மட்டும் காவல்துறையை மக்கள் தங்கள் நண்பனாகப் பார்ப்பதே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியாவில் போலீஸ் துறையை ராணுவத்தோடு இணைத்து மத்திய அரசாங்கமாக்கினால் ஏதோ மாற்றம் வரலாம் நண்பரே...

   நீக்கு
 4. இப்போது எல்லாம் இப்படி இல்லை... இதை விட............(!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ளதுதான் நினம் பார்க்கத்தானே செய்கிறோம் மீடியாவில்.

   நீக்கு
 5. நண்பர்தான் இவ்வளவு அன்னியோன்னியமாக உரையாட முடியும் என்பதை புரிந்துகொண்டீர்கள் அல்லவா? என்ன செய்வது, வேதனைப்படவேண்டிய நிகழ்வுதான். ஆனால் இது அன்றாட நிகழ்வாகிவிட்டதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாமா, நண்பன்தானே உரிமையோடு திட்டமுடியும் நீங்கள் சொல்வதும் உண்மையே...

   நீக்கு
 6. அன்புள்ள ஜி,

  காவல் துறை உங்கள் நண்பன்... இந்திய காவல் துரைகளைப் பற்றி நன்றாக எழுதியிருந்தீர்கள். காவல் துறை பிச்சைக்கரர்களையும் விட கேவலமாக கையேந்திகளாக வாழ்கிறார்கள். சட்டம் ஒழுங்கை இவர்கள் பாதுகாக்கின்ற இலட்சம் நன்றாகத் தெரிகிறது.
  காணொளியில் ஹம்மிங்....
  இது ஒரு பெண்மணியை நினைத்து அல்ல... வைரமுத்துவின் பொன்மணியை நினைத்து‘ நிழல்கள்’ திரைப்படத்திற்கு முதல் வாய்ப்பு கிடைத்த பொழுது...அவரின் மனைவிக்கு முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்த பொழுது மனைவியின் பெயரையும் சேர்த்த... வைரமுத்துக்கு முதல் பாடல் பிரசவம் ...ஏக்....தோ...தீன்... லல்லல்லா... பிறந்தது.
  நன்றி.
  த.ம. 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே வைரமுத்துவைப்பற்றி நிறைய விடயங்கள் இருக்கின்றதே... உங்களிடம் எப்படி ?

   நீக்கு
  2. லஞ்சம் வாங்குவது
   ஊழலான புரிவது
   ஓட்டுக்கு பணம் கொடுப்பது
   ஓட்டுக்கு பணம் வாங்குவது
   தாயையும் தாரத்யையும் பணத்துக்கு
   விற்பதற்க்கு சமம் .

   நீக்கு
  3. நண்பர் புருசோத்தம் அவர்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி இதைவிட ஒரு சவுக்கடி கேள்வி வேண்டுமா ?

   நீக்கு
 7. சரி.. சரி.. அப்பறமா வந்து முட்டைக் கடையில.. வாங்கிக்கிறேன்.. எங்கேயும் போயிடாம அங்கனயே ஒக்காந்திரு!.. மீச மட்டும் பெரிசா இருந்து பைசாவுக்கு பிரயோசனம் இல்ல.. என்ன புரியாதா!..

  பிரியுதுங்க ஐயா!...

  என்னய்யா.. பிரியுது!?...

  ......... ........ .......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா முட்டைக்கடையை சொன்னது தப்போ ?
   இப்பத்தான் எனக்கும் பிரியுது....

   நீக்கு
 8. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....வீட்டருகில் இருக்கும் மரத்தடி பிள்ளையாரு.. எப்படி? போலீஸகிட்டே சிபாரிசு செய்தார். அவருக்கு நன்றி! சொல்ல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் நாட்டுல பெரும்பாலும் இப்படித்தானே நண்பா...

   நீக்கு
 9. இரண்டு பதிவுகளையும் படித்தேன். இரண்டுக்கும் எத்தனை முரண்பாடு. நம்மூரில் 'காவல்துறை உங்கள் நண்பன்' என்று காவல் நிலையத்தில் எழுதி வைத்திருப்பதை, எப்போது நடைமுறையில் கொண்டு வருவார்களோ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவவும் நமது கையில்தான் இருக்கின்றது நணஅபரே ஆனால் மக் ''கல் ''கண் (அறிவுக்கண்) களுக்கு தென்படுவதில்லை.

   நீக்கு
 10. இந்த மாதிரி நடக்கலைனாத்தான் நமக்கு வியப்பாக இருக்கும். நீங்க விபரமான ஆளுதான் அவர்களை நல்லா சமாளித்து விட்டீர்கள். பயபுள்ளைக திருந்தவே மாட்டேன்னுகிறாக...உரிமையா கேட்குறாங்க இல்லை...காவல் துறை நம்ம நண்பர்கள் தான்.

  தம 7

  ரூம் போட்டு யோசிக்காம இருக்கிற ரூமுலயே....நல்லா யோசிக்குறீங்க சகோ...

  வித்தியாசமானதற்கு...

  வாழ்த்துக்கள்.

  என்ன என்பக்கம் வடை சாப்பிட வரலையே...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது எனக்கு சாமர்த்தியம் இருந்தால்தான் அவங்கள்ட்ட டீ குடிக்க 5 ரூபாய் வாங்கிட்டு வந்திருப்பேனே..?
   ரூம் போட்டா ஏன் வாங்கின சம்பளத்தை ரூமுக்கு மட்டும் கொடுக்கவா.?
   வடையைப்பார்த்து விட்டு வயித்தெறிச்சலாப்போச்சு. பெருமூச்சு விட்டு வந்தேன்.

   நீக்கு
 11. பாரத் மாதா கி ஜே
  இந்திய வாழட்டும் நண்பரே
  வேதனைதான் மிஞ்சுகிறது
  தம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடுத்தர மக்கள் கௌரவமாக வாழ முடியவில்லையே நண்பரே...

   நீக்கு
 12. இந்தியாவின் பல இடங்களில் இப்படித்தான்.

  காசு கொடுத்தால் தான் ஆச்சு - அதுவும் மரியாதையின்றி இவர்கள் பேசும் பேச்சு! அப்பா அம்மா கூட இப்படி டா போட்டு பேசியிருக்க மாட்டார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் தாய்-தந்தையிடம்கூட திட்டு வாங்காதவன் சிலநேரங்களில் இவர்களிடம் அவமானப்பட வேண்டியதிருக்கின்றது ஆனால் இது எழுதப்படாத சட்டமே.

   நீக்கு
 13. அதெப்படி ஒரே மாதிரி ஃபோனில் பேசியதாக இங்கும் அங்கும் போலிஸ் உங்களைக் கேள்வி கேட்கிறது. ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா அபுதாபியில் நடந்தது உண்மைச்சம்பவம், இது இந்தியாவில் நடந்தால் ? என்ற எனது கற்பனை கரு ஒன்றே....

   நீக்கு
 14. கற்பனை ஆனாலும் இதுதான் உண்மைநிலை!

  பதிலளிநீக்கு
 15. ஹீ ஹீ ! பரவால்ல 12 ரூபாயாச்சும் மிஞ்சுச்சே . நா சென்னைல என் நண்பன்கூட பைக்ல போரப்போ ஒரு ஏட்டு வழிமறிச்சாரு . என் நண்பன் rc , insurance , DL னு எதுவுமே எடுத்துட்டு வரல . அவரு பணம் கேட்க , வண்டிய நீங்களே வச்சிக்கங்க சார்னு சொல்லிட்டு கிளம்பினான் . அப்புறம் வச்சிருந்த 5 ரூபாய டீ செலவுக்குனு குடுத்துட்டு வண்டிய எடுத்துட்டு வந்தோம் .

  தம+

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 5 ரூபாயை புடுங்கிட்டாங்களா ? ஒரு மிஸ்ட் கால் கொடுத்திருக்ககூடாது...

   நீக்கு
 16. விழுந்து பொரண்டு சிரிச்சிகிட்டு இருக்கேன்................. ஹா.......... ஹா.......... ஹா..........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்து நண்பா அப்புறம் என்னைக்குறை சொல்லக்கூடாது.

   நீக்கு
 17. மர்ம கதை எழுதும் மாயாண்டித் தேவர் ஆகி விட்டாய் நண்பா!
  (மீசையை வைதிருப்பதால் மட்டுமே சொன்னேன்)
  "காவல் துறை நமது நண்பன் என்பதன் அர்த்தம் புரிந்து விட்டது!
  புண்பட்ட புது வேந்தனுக்கு!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 18. பிரிட்டாசாரின் காவல்துறை அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்குமாம். அவ்வழி வந்த இந்திய காவல்துறையும் அப்படியே! காவல்துறை அரசாங்கத்திற்கு ( ஆட்சியாளர்களுக்கு ) நண்பன்! மக்கள் ....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே மிகச்சரியாக சொன்னீர்கள்.

   நீக்கு
 19. எல்லா ஊரிலும் தேசத்திலும் எல்லோருக்கும் தொழில் புத்தி என்ற ஒன்று உண்டு என்பார்கள். அந்த வகையில் வாத்தியார் புத்தி என்பது போல, போலீஸ் புத்தி என்று போலீஸ்காரர்களுக்கு உண்டு. அது என்ன என்று சொல்ல வேண்டியதில்லை.
  த.ம.14

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெத்தியடி பதில் வேறொன்றும் நான் சொல்வதற்க்கில்லை நண்பரே....

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே.!

  ஏமாத்துறவனை. ஏமாத்தினால்தான் இந்தியாவில் மட்டுமில்லை, எங்குமே வாழ முடியும் என்பதை நாசூக்காய் சுட்டிக் காட்டிய பதிவு. ஆனால் பதிலுக்கு ஏமாற்றவும் தெரிய வேண்டுமே.! எப்படியோ அதிகமாய் ஏமாறாமல் தப்பித்தீர்கள். ( கற்பனையில்தான்..) வாழ்த்துக்கள்.

  ஆனால் உங்கள் குருந்தன் வாத்தியார் படிக்கும் காலத்தில் அறிமுகப் படுத்திய "பெரியப்பா" சமயத்தில் உங்களை "நண்பர்களிடமிருந்து" எப்படி காப்பாற்றி விட்டார் பார்த்தீர்களா.?
  மாதா, பிதா, குரு, தெய்வத்தை மறக்கக் ௬டாது என்று உங்கள் "அப்பத்தா" சொல்லித் தந்தது எவ்வளவு நல்ல செயல்..இல்லையா.?

  வாழ்த்துக்களுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மைதான் ஏமாற்றுவது எப்படினு இனி டியூசன் எடுத்தால்தான் வாழமுடியும் மறுபடியும் பெரியப்பாவா ? இன்னும் ''சட்டீர் ''ஒலி கேட்குது.
   எனக்கு ஒருவகையில் சந்தோஷம் எனது குருந்தன் வாத்தியாரை எல்லோருமே ஞாபகம் வைத்து பதிவுகளில் எழுதுவது நன்றி.

   நீக்கு
 21. முந்தையப் பதிவையும் படித்தேன் சகோ..
  உங்கள் மொழியறிவிற்கு வாழ்த்துகள்! எப்படி சகோ, இத்தனை மொழிகள்!!!
  நீங்க செல்போன் மறந்துபோனது நல்லதாப் போச்சுதான்..
  த,ம.15

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ இத்தனை மொழிகள் நான் படித்ததற்க்கு காரணம் என்னைக்கேட்டால் நான் படிக்காததுதான் 80 எமது கருத்து.

   நீக்கு
 22. ஆரம்பத்தில் ஷேக் முகம்மது ராஸித் சாலை என்று வரவும் அப்படி ஒரு சாலையான்னு யோசிச்சா... கோட்டையம்மன் கோவில் முக்கில் வளைந்தேன் என்றதும் சரி நம்ம ஊர்ல நமக்குத் தெரியாம கோட்டையம்மன் கோவில்கிட்ட இப்படி ஒரு சாலை இருக்கோன்னு நினைச்சேன்.

  நல்லவேளை வீட்டுக்குப் போய் பணம் எடுத்தாந்து குடுத்துட்டுப் போன்னு சொல்லலையே...

  முடிஞ்சவரைக்கும் கறக்குறதுக்குத்தானே பாப்பாங்க நம்ம மக்களின் நண்பன் போலீஸ்....

  எப்படியோ தப்பிச்சிட்டீங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பா, அபுதாபில் அல்காமராஜர் ரோடு இருக்கும்போது... தேவகோட்டையில் ஷேக் முஹம்மது ராஸித் அல் மஹ்தூம் ரோடு இருக்கப்படாதா ?

   நீக்கு
 23. வண்டி பெரிதாய் இருந்ததால் வண்டி சாவியை பிடிங்கி வைத்துக் கொண்டு பணத்தை கொடுத்து விட்டு வண்டியை எடுத்துச் செல் என்று சொல்லவில்லை என்று நிணைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. ஏய், சாவுகிராக்கி, பிச்சக்காரத்தனமா இருக்கியே, செம ஜோக் இல்ல? பிச்ச எடுக்கிறவன் சொல்றது?. கற்பனையில் தப்பித்தீர், நிஜம்?????????????????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நிஜமானால் லைசென்ஸ் அவுங்க கையிலிருக்கும்.

   நீக்கு
 25. பெயரில்லா3/09/2015 2:31 PM

  முட்டைக் கடையா!....
  பதிவை ரசித்தேன்.
  பொலீஸ் என்றதும்
  இலங்கையின் புயல் போல நினைவுகள்
  அருவருப் பு. மனசைக் குளப்பிட்டிஙக!
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 26. ஹஹஹஹாஹ்ஹ் இதுதான் நம் ஈஸ்ட் ஆர் வெஸ்ட் இந்தியா இஸ் த பெஸ்ட்.!!!? இப்படித்தான்பா எங்கூரு.....பொழக்க முடிஞ்சா இருங்க இல்லாட்டிப் பறங்க......வேற என்னத்த சொல்ல...உண்மைதானுங்க.....

  அப்படியே எழுதிருக்கீங்க....ஆனால் ஒரே ஒரு டயலாக் மிஸ்ஸிங்க்/......"அயாவுக்கு உங்க முட்டை கடைலருந்து ஒரு 100 முட்டை அனுப்பிருங்கனு" அந்த ஏட்டு சொன்னத, சொல்லாம விட்டுப்புட்டீங்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப என்ன இரண்டாம் பாகம் எழுதினால் சரியாப்போச்சு கடைசியிலே என்னாகும் முட்டைக்கடையை பூட்டி விட்டு திருப்பதி போக வேண்டியதுதான் மொட்டை போட.

   நீக்கு
 27. ஒரு தடவை கருத்து சொன்னா போடமாட்டீங்களா? நானே ஒரு மாதிரி போய்கிட்டு இருக்கேன், அப்புறம் மறந்துடும் இல்ல, நான் இரண்டாவது தடவை கருத்து போடறதால முட்டைக் கடையில் இருந்து ஒரு அட்டை முட்டைக் கொடுத்துறனும். சின்ன வயசுல படித்த லீவ் லெட்டர் மறந்து விட்டதா? சொன்னா சலீட் அடித்து அனுப்பி இருப்பாங்கல்ல, நம் நாட்டில் தமிழ் தவிர பிற மொழிகளில் பேசினால் மறியாதை,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க எனக்கு கருத்துரை வந்தால் பார்த்த உடன் வெளியிட்டு விடுவேன்.
   உங்களுக்கு முட்டைக்கடையில இருந்து அட்டைதானே வேணும் கண்டிப்பாக வரும்.

   நீக்கு
 28. அப்பறமா முட்டை கடைக்கு வந்து வசூல் பண்றேன்னு சொல்லாம விட்டாங்களே////

  நன்றி...
  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ சரிதா அவர்களின் முதல் வருகையை முட்டையை மூட்டை, மூட்டையாக கொட்டி வரவேற்கிறேன், வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 29. எதுவும் இல்லை என்றதும் கார் சாவியை பிடுங்காமல் விட்டது தான் வியப்புக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுகூட சரியாத்தான் இருக்கு ஒருவேளை மறந்துட்டாங்களோ ? நன்றி சகோ.

   நீக்கு
 30. எப்படியும் இங்கே வந்துதானே ஆகணும் ,அப்ப கில்லர்ஜியை வச்சுக்கிறோம் னு 'உங்கள் நண்பர்கள் ' இங்கே வெயிட்டிங்:)
  வோட்டு ,காலையிலேயே போட்டாச்சு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஜி நீங்களே கோர்த்து விட்டுருவீங்களோ ? தமிழ் மணம் போட்டது காலையிலேயே பார்த்து விட்டேன் ஜி நன்றி.

   நீக்கு
 31. உங்க மீசையையும், பேரையும் பார்த்துட்டு, யாரை போட்டுத் தள்ளிட்டு வந்திருக்கன்னு அந்த இன்சு கேட்டிருப்பாருன்னு நினைச்சேன்..................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்டிருந்தால் கோடரிக்கு வேலை வந்திருக்கும்.

   நீக்கு
 32. பதிவின் இரண்டு பாகங்களையுமே படித்தேன். அருமை! குறிப்பாக, தமிழ்நாட்டுச் சாலைக்கு அரபு மொழியிலும், அரபு நாட்டுச் சாலைக்கு அல்காமராஜர் என்று தமிழ் கலந்த அரபியிலும் நீங்களாகக் கற்பனையில் சூட்டிய பெயர்கள் சுவை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே எனது மாறுபட்ட சிந்தனைக்கு தாங்கள் உரம் போட்டு இருக்கின்றீர்கள் நன்றி.

   நீக்கு
 33. கல்ஃபில் (அமீரகம், ஓமான், கத்தார், பஹ்ரைன் போன்ற எல்லா நாடுகளிலும்), பிரச்சனை என்றால் கவலைப்படாமல் காவல் துறையை அணுகலாம். சாதாரண விஷயத்துக்கும் அவர்கள் அக்கறை எடுத்துக் கேட்பார்கள். எனக்குத் தெரிந்து நம் ஊரில் போலீஸ் ஸ்டேஷன் போனாலே, நம்மைக் கிரிமினலாக நினைத்துத்தான் கேள்வி கேட்பார்கள். சமயத்தில், கேசுக்காக, நம்மையும் புக் பண்ணிவிடுவார்களோ என்று பயம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே இதுதானே இந்தியாவில் நடக்கின்றது.

   நீக்கு