எனக்கு, நெடுநாளாகவே
அரபு மொழியில் அடுக்கு மொழி வசனம் எழுத வேண்டுமென ஒரு மோகம் இருந்தது,
எல்லாத் தமிழருக்கும் புரியாது என்றாலும் அரபு பேசத் தெரிந்த தமிழர்களுக்காக ! இருப்பினும் தமிழாக்கமும், கொடுத்துள்ளேன்.
மேலும் ஒருவேளை அரேபியர்கள் இந்த Website டில் எதேச்சையாக போனால் ?படிக்க கூடுமே என்ற எண்ணத்தாலும் ரொம்ப ஆசைப்பட்டு விட்டேனோ
?இலக்கியப்படி,
அரேபியர்கள் பேசுவது, இதோ.....
صديقي العـــزيز مــدار جاء من قــــــطــر لذلك سوف أذهـــب إلى المـطار. أنا بدي اشـــوف صديقي و أســلم عــليه
بعدين اروح المطــعم علشان أفـطــر اكلت زعــتـــر
و ذهبت الى الخارج و كانت تـمـطــر هو اعـطاني زجاجة عــطـر رائحته رائعة اليــوم الثاني سيبدأ العمل ناطـور
அதே விசயம் தமிழில், இதோ.....
ஸதீக்கி அல்அஜீஸ் மதார், ஜாஆ
மின் கத்தார் லிதாலிக் ஸவ்ப ஹதா இலா அல்மத்தார். அனா, பதிஅஸூப் ஸதீக்கி அவ்
அஸல்லம் அலீத் பாஅதின் அரோஹ் அல்மத்ஆம், அலிஸான் அபுத்தூர். அக்லத் ஜாத்தர் அவ் தஹப் இலா
அல்ஹாரஜ் அவ் கானட் தமத்தர் ஊவா அதானி ஷூஜாஜத் அத்தர்
ராயிஹ்த ராஈஆங் அல்யூம் அல்தானி சைஇப்த அல்அமல் நாத்தூர்.
இதுவும் அதேவிசயம்
பிறநாட்டவர்கள் பேசுவது, உதாரணத்திற்கு என்னைப் போல் பாமரர்கள் தத்தக்கா,
புத்தக்கா என்று அதாவது சென்னைத் தமிழ் போல.....
ஸதீக்மால்அனா, மதார் ஈஜி மின் கத்தார் அலசான்
அனா ரோ மத்தார் அனாஸூப் ஸதீக் குல் ஸலாம் பாஅதின்
அனா ஊவா ஸீர் மத்ஆம், மிஸான் புத்தூர் குல் ஸாத்தர். பர்ரா ஈஜி பீ மத்தர் ஊவா
ஜீப்மிஸான் அனா அத்தர் அதா ராயிஹ்த வாஜித் தமாம், தாணியல்யூம் ஊவா சவி இப்த
ஸுகுல் மால் நாத்தூர்.
இதன் அர்த்தம்....
எனது, நண்பன் மதார் கத்தரிலிருந்து வருகிறான்,
அதனால் நான் விமானநிலையம் சென்றேன் அவன் வந்தவுடன் நலம் விசாரித்த பிறகு
உணவகம் சென்று சிற்றுண்டி களித்தோம் வெளியே மழை பெய்து கொண்டிருந்தது, நண்பன்
எனக்கு வாசனைத் திரவியம் கொடுத்தான் நல்லமணமாக இருந்தது, அடுத்தநாள் அவன்
கட்டட காவலாளி வேலையை தொடர்ந்து கொண்டான்.
கீழ்காணும்
இதுவும், அதே விசயம்தான்
பாக்கிஸ்தானியரின், உருது மாதிரியான பாணியில் எழுதும் அரபி, அதாவது தமிழில்கூட
வீச்செழுத்து என்று சொல்வோம், அதைப்போல...
இந்தப்பதிவை
வலைச்சர ஆசிரியர் தேவகோட்டை சகோதரி திருமதி. ஆர். உமையாள் காயத்ரி அவர்களுக்காக
வெளியிடுகிறேன்.
தம 1
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ
இணைப்பு கொடுத்து வாக்களித்தமைக்கு நன்றி
நீக்குஅன்னிய மொழியை நன்றாக படிக்க எழுத கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள் சகோ.
பதிலளிநீக்குமகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்காக பதிவை சொல்லிய படி இரண்டு நாட்களில் பதிவிட்டமைக்கு நன்றி நன்றி
வேலையில் உள்ள சூழ்நிலையால் படிக்கும் சூழலுக்குள் தள்ளப்பட்டேன் 80தான் உண்மை இல்லையெனில் இந்த சீட்டை வேறொருவன் ,சுட்டிருப்பான்.
நீக்கும்ஹூம் இங்கே தமிழத்தாண்டி யோசிக்கவே விடமாட்டோம்ல மீறினா தார்தான். த . ம 1
பதிலளிநீக்குதாரை நார் நாராய் கிழிக்காததால்தான் இன்றைக்கு இந்தியாவில் தமிழனுக்கு மட்டும் ஹிந்தி தெரியவில்லை.
நீக்குஅலைக்கும் ஸலாம்!..ஸ்லோனக் ஜீ!.. இந்த ஜேன்!?..
பதிலளிநீக்குகுல்லு தமாம்!.. மஸ்பூத்.. மஸ்பூத்!..
அல்லா ஹல்லிக் ஜேன் இந்த!.. முபாரக்!..
நல்லாயிருக்கேன் ஜி எம்மை வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குஹல!.. ஹபீப் இந்த!.. அன மாயரஃப் - சஜ்ஜல் அரபிக்.. மாலீஷ்!..
பதிலளிநீக்குலிஸ்ச அன கலம் பஸ்!..
(என்னய்யா பஸ்ஸூ - புஸ்ஸு..ன்னுக்கிட்டு!..)
இந்த மதராஸி?..
மதராஸ் எல்லாம் போய்த் தொலைஞ்சாச்சி!.. இப்ப சென்னை.. தமிழ்நாடு!..
ஓ.. சென்னாய்!?..
அரே.. பாய்!.. ஆளை விடு!..
எழுதத்தெரியவில்லை என்றால் என்ன ஜி இவ்வளவு பேசுறீங்களே... இது போதும் தற் ''போதை''க்கு.
நீக்குஅண்ணா... அரபி எனக்கெல்லாம் இன்னும் பேசவே வரலை...
பதிலளிநீக்குதாங்கள் எழுதிக் கலக்குறீங்க... அருமை.... வாழ்த்துக்கள்.
ஏதோ தெரிஞ்சது இவ்வளவுதான் நண்பரே.... நன்றி.
நீக்குகலக்குங்க.... தலைப்புக்கூட அரபியிலயா.... ம்...
நீக்குஅரபி மொழியில் அடுக்கு மொழி எழுதிய கில்லரி ஜி புகழ் ஓங்குக!!!!!
பதிலளிநீக்குவருகைக்கு தந்து ஓங்கி குரல் கொடுத்தமைக்கு நன்றி ஜி
நீக்குஇதைப் படிக்கும் போது நான் ஜப்பான் சென்றிருந்தபோது நடந்த நிகழ்வு நினைவில் வருகிறது. அங்கு பெரும்பான்மையானவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஒரு முறை நான் தனியே வெஇயே செல்லநேரிட்டபோது ஆங்கிலம் அறிந்த ஜப்பானியர் நான் கேட்கநினைக்கும் /இருக்கும் கேள்விகளை ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்தார்.உதாரணத்துக்கு இன்ன ரயில் நிலையத்துகுப் போகும் வழி என்ன என்பதை ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதி இருப்பார். நாம் யாரிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைகாட்டினால் அவர்கள் நமக்கு உதவுவார்கள். அரபிக் fonts பதிவிறக்கம் செய்திருக்கிறீர்களா.?
பதிலளிநீக்குவாருங்கள் ஐயா தாங்கள் கொடுத்த யோசனைகள் அருமையானதே... பிறருக்கு உதவக்கூடும் நானும்கூட அடுத்து ''உகாண்டா'' போனால் உபயோகப்படுத்திக்கொள்வேன்.
நீக்குஆம் ஐயா Roomல், எனது கணினியில்,
தமிழ்
ஹிந்தி
தெ(லு)ங்கு
மலையாளம்
அரபிக்
ஆங்கிலம்
ஆகிய 6 மொழிகள் வைத்துள்ளேன்
அலுவலகத்தில் வேலைக்காக அரபியும் சில விசயங்களுக்காக ஆங்கிலமும் மட்டுமே...
அரபு நாட்டில் அடுக்கு மாடி வீடு வாங்கி குடி போக வேண்டும் என்று வேண்டுவோர் மத்தியில்,
பதிலளிநீக்குஅரபு மொழியில் அடுக்கு மொழி வசனம் பேச வேண்டும் என்ற மீசைக் கார அண்ணாச்சியின் ஆசை! ஆஹா! உயர்ந்த கோபுரத்தின் கலசம் நண்பா!
அது போகட்டும்,
அரபு மொழியில்
ஒட்டகத்தை எப்படி அழைப்பது?
மண் - எப்படி அழைப்பது?
இதை கூறுங்கள் நண்பா!
ஒரு வேளை அங்கு வந்தால் வேலைக்கு உதவியாக இருக்கும்!
அரபு மக்களுக்கு நான்கு தமிழ் வார்த்தை பேசக் கற்றுத் தரும் தங்களது முயற்சி என்னாயிற்று?
நன்றியுடன்,
புதுவை வேலு
ஈபிள் டவரின் உரிமையாளரே வருக
நீக்குகருத்துரைகளை வழக்கம் போலவே தருக
அரபு நாட்டில் பிறநாட்டவர் இடம் வாங்க முடியாது துபாய் புர்ஜ் கலிபாவில் (உலகிலேயே மிகப்பெரிய கட்டிடம்) கருணாநிதி, ஜெயலலிதா இவர்களுக்கெல்லாம் ஃப்ளாட் இருக்கிறதே என்று நீங்கள் கேட்பது புரிகிறது அதெல்லாம் 99 வருட இக்ரிமெண்ட் நண்பா.
தூக்கி கொண்டு போக முடியாதே மேலும் அத்தனை வருடத்துக்கு பில்டிங்கும் இருக்காது அப்போதைக்கு இவர்களும் இருக்க மாட்டார்கள் அன்றைய நிலையில் இந்தப் பணமெல்லாம் ஜூஜூபிதானே...
.
அரபு மொழியில்
ஒட்டகம் - ஜம்மல் جمل
மண் - ரம்மல் رمل
நண்பரே 15 வருடத்திற்க்கு முன்பே சூடானிக்கு ஏழிசை வேந்தர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் //சொப்பன வாழ்வில் மகிழ்ந்து// பாடலை பாடவைத்தவன் நான் வரும், வரும் விரைவில் பதிவாக...
அஹ்லன்.. யா.. ஹல!.. ஜேன்!.. ஜேன்!..
நீக்குஃபத்தல் , யா.... அஹ் ஃபத்தல். ஸுக்ரான்... யா.... அஹி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
அசத்தி விட்டீங்கள்.. நல்ல விளக்கம் தாய்மொழியுடன் அன்னிய மொழி அறிந்து வைப்பது நன்று பகிர்வுக்கு நன்றி த.ம5
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஏளனம்: கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் வந்தேன் படித்தேன், தேன், தேன் ,வரிகளை படித்தேன்.
நீக்குஅரபிக்கில் சாதாரணமாக
பதிலளிநீக்குநலமா...நலம்.
எப்படி இருக்கிறீர்கள்
இது போல் சில நாம் அன்றாடம் பொதுவாக பேசுவதை முடியும் போது நீங்கள்.
பதிவிட்டால் இன்னும் உபயோக மாக இருக்கும்
நன்றி
நல்லது தங்களது யோசனை ஏற்று முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.
நீக்குஇந்த பதிவை தொடர்ந்து எழுதினால் , நான் கில்லர்ஜியுடன் சரளமாக அரபியில் ஓரே மாதத்தில் பேசிவிடுவேன் .
பதிலளிநீக்குஉபயோகமான பதிவு அண்ணா .
தம+
வருக நண்பரே தங்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன் இனியாவது எனது பதிவுகள் உபயோகமாக இருக்க முயற்சிக்கின்றேன்.
நீக்குஇந்தியாவில் ஹிந்தி வேணாமுன்னு போராடிட்டு அரபி கத்து குடுக்கிறீங்களா !! பேஷ்.....பேஷ்...... ரொம்ப நன்னாயிருக்கு!!
பதிலளிநீக்குவாங்க நண்பா ஹிந்தி ஒழிக அந்தக்கூட்டத்தில் நான் கண்டிப்பாக இருக்கமாட்டேன்.
நீக்குநரசுஸ் காஃபி குடிங்க...
பன் மொழி வித்தகர் அல்லவா தாங்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
தம +1
வருகைக்கு நன்றி நண்பரே... முடிந்தவரை முயற்சிப்பேன் நண்பரே...
நீக்குஹலோ! கோன் ஐஸா ம்மா! அது கோயிலுக்கு வெளிய கிடைக்கும்(( வடிவேல் குரலில் வாசிக்க)) நம்மக்கு தெரிஞ்சது அம்ம்புட்டுதான்:(((
பதிலளிநீக்குஒரு டீச்சரே இப்படிச்சொல்லலாமா ? சகோ...
நீக்குமுயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார், தாம்பரம், எக்மோர், சைதாப்பேட்டை என்று சும்மாவா சொன்னார்கள்.
பல மொழிகளைப் படித்திருக்கிறீர்கள்; பல தேசத்து மக்களின் மனங்களைப் படித்திருக்கிறீகள்; அவர்களின் பண்பாடு நாகரிகத்தைப் படித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇவ்வளவு படித்த நீங்கள் உங்கள் சுயவிவரக் குறிப்பில்[G+] 'படித்தது நான்காம் வகுப்பு’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே, தயவு செய்து அதை நீக்கிவிடுங்கள்.
வாருங்கள் நண்பரே,,,, பலநாட்டு மனிதர்களின் பழக்க வழக்கங்களை கண்டிப்பாக எழுதுவேன் நண்பரே,,, தற்போது எனக்கு வாஸ்து சரியில்லை விரைவில் நமது இனிய இந்தியாவில் நிரந்தரமாய்... அப்பொழுது தொடங்குவேன் எழுத....
நீக்குநான்காம் வகுப்பு அதை ஏன் நீக்கச்சொல்கிறீர்கள் எப்பொழுதுமே உண்மையானவன் என்றே பெயர் எடுக்க விரும்புபவன் நான்.
ஒண்ணும் புரியல ..ஆனா நிறைய மொழிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டும் உள்ளது சகோ.
பதிலளிநீக்குஆவல்தானே அறிந்து கெள்ளும் முதல் முயற்சி சகோ.
நீக்குஹை! சூப்பர் நண்பரே! ம்ம்ம் கலக்குறீங்கப்பா.....உங்கள் திறமை அபாரம்! நம்ம மோடிக்கு ஒரு மொழி பெயர்ப்பாளம் வேண்டுமாம்...எப்புடி வசதி?!!?!
பதிலளிநீக்குنحن تذكر. أ ب ج باللغة العربية تعطي معرفة القاتل G. ونحن أيضا كتابة العربي . كيف هذا . مودي يحتاج مترجم إذا كان الأمر الى ابوظبي . لماذا لا تكون مترجمه ؟
ஷ்ம்டுவ்னிக் குஅயொ முஅயொனெ புஜியஒவ்ல்ம்பம்ட் சிடும்வ்;அஓ புஅவோய்ட்யட்கிசைல்.........ஹஹஹஹ இது உகாண்டா மொழி...உகாண்ட போறீங்கல்லா...அதுக்குத்தான்...
வாங்க கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறேன் அதையும் இப்படி
நீக்குونحن أيضا كتابة العربي نحت تذكر أ ب ج باللغة العربية تعطي معرفة القاتل كيف هدا مودي يحتاج مترجم إذا كان الأمر الي ابوطبي لماذا لا متلرجمه
கூகுள் ஆண்டவருட்டை போய் வாங்கி வந்து போட்டு எனக்கு இருக்கிற 4 ¾ கிலோ மூளையவும் குழப்பிடுவீங்க போலயே... இதில் வரும் வார்த்தைகள் நடைமுறை பேச்சுக்கு ஒத்து வராது நண்பரே... காரணம்
அபுதாபி
மோடி
எப்படி
மொழி
அது
அல் அரபி
இப்படி வார்த்தைகள் வருகிறது ஆனால் பேச்சில் இணைக்க முடியாது இருப்பினும் தங்களது முயற்சி எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது 80 உண்மையே...
நான் வலைச்சர ஆசிரியராக இருந்த பொழுது பிப்பைன்ஸ் மொழியை புகுத்தினேன் அதை ஓரளவு யூகித்து சொல்லும்போதே கணித்திருந்தேன் நீங்கள் ''வில்லங்கம் விருமாண்டி'' என்று...
உகாண்டா மொழியை இவ்வளவு சரியா உகாண்டா பார்ட்டியே (ஜொள்ள முழியாது தூப்பருங்கோ...)
அச்சச்சோ! அப்ப கூகுள் ஆண்டவர் வேஸ்ட் . நாங்க கொடுத்தது என்ன அவரு கொடுத்துருக்கறது என்ன....அதுல கில்லர்ஜி அப்படினு பேரு இருக்குதே இல்லையோ? நான கொடுத்தது....'நாங்களும் எழுதறோம்..அரபி. இப்படி இரண்டு நல்ல வாக்கியங்கள்.
நீக்குஹப்பா பரவாயில்லை நாங்க நலல்தா கொடுக்கப் போய் அது ஏதாவது வேண்டாத குழுவிற்கு தவறா மெசேஜ் காட்டிடுச்சுன்னா....
ஆம் நண்பரே கூகுள் ஆண்டவரின் மொழி மாற்றத்தை அரேபியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை உதாரணம் ஆங்கிலத்தில் கொடுத்து நமது தமிழில் கேட்டுப்பாருங்கள் எப்படி ? வருகிறது சிரிப்புதானே வருகிறது அதேபோல்தான்.
நீக்குஅலுவலகத்தில் நானும் கூட சில நேரங்களில் தவறுதலாக எழுதி விட்டு கேட்டால் கூகுள் ஆண்டவர் மீது பழியைப்போட்டு விட்டு தப்பித்து விடுவேன், பரவாயில்லை இப்பொழுது தில்லை அகத்தார்தான் காரணம் என சொல்லிக்கொள்ள வாய்ப்பு கிடைத்து விட்டது.
இதில் கில்லர்ஜி என்ற வார்த்தை வரவில்லை கீழே காண்க...
كيللرجي
அரபு மொழியில் நாங்கள்தான் முதன்மையானவர்கள் என்ற பேச்சு வழக்கு முஷ்ரி என்று சொல்லப்படும் எஜிப்தியர்களிடம் (EGYPT) இருக்கிறது, இது ஒரு சர்ச்சையான விடயம் இதனைக்குறித்து நான் பதிவு போட்டால் பெருமாள் முருகன் நிலையாகி விடும் பிறகு இதற்கெல்லாம் மூலகாரணமான தாங்கள்தான் மாட்டுவீர்கள் பாவம் தில்லை அகத்தார் ஆகவே நான் சமாதானமாக போகிறேன்.
அவர்கள் எழுத்துக்கள் வலமிருந்து இடது போகும் இல்லையா? ம்ம் தெரியும் ஜி! தமிழ் டு ஆங்கிலம், ஆங்கிலம் டு தமிழ் கூகுள் ரொம்ப சொதப்பும்......உங்கள் தகவல் பற்றியும் தெரியும். அரபு நாடுகளில் இந்த மொழி, எப்படி தமிழ் நாட்டில் தமிழ் ஒவ்வொரு பாகத்திலும் வேறுபடுகின்றதோ, ஹிந்தி இந்தியாவில் ஒவ்வொரு பாகத்திலும் வேறு படுகின்றதோ, ஏங்க தமிழ் நாட்டுல சென்னைத் தமிழ் மோசம் அப்படினு வேற ஊர்க்காரங்க சொல்லுவாங்க...மதுரைய கோயம்புத்தூர் திட்டும்....அது போலத்தான் என்பதும் ....படித்திருக்கின்றோம்...அது மிஸ்ரியுன் இல்லையோ....முஸ்ரியா? தெரியும் சர்ச்சை என்பதும்....ஹஹஹ நாங்கதான் சிக்கினமா...மாட்டறதுக்கு.....
நீக்குஆம் நீங்கள் சொல்வது உண்மைதான் தமிழ் நாட்டிலேயே தி கிரேட் தேவகோட்டை தமிழ்தான் 100/100 சரி.
நீக்குமிஸ்ரியுன் அல்ல, முஷ்ரி அல்லது மஷ்ரி
مـــصـــري
ஆகா அரபிமொழியாஆ. எகிப்தில் கேட்டது இன்னமும் காதில் ஒலிக்கிறது. ஒழுங்காக பிழையில்லாமல் தமிழ் எழுதுறேனா என சந்தேகமாகவே இருக்கு எனக்கு. இதில் அரபியாஆஆ. இன்னமும் டொச் வேறு இருக்கு. எங்களுக்கு பயண வழிகாட்டியாக வந்தவரும் அரபி ஈஸிதான் எனச்சொன்னார். ஆனா அவர் பேசி டொச்தான் புரியவில்லை பலபேருக்கு. எனக்கு எகிப்திய அனுபவம்தான் ஞாபகம் வருகிறது. உங்களுக்கு டொச்' ம் தெரிந்திருக்கனுமே. அப்படியே பிரெஞ்,ஸ்பானிஷ், டெனிஸ் என படியுங்க. விரைவில "பன்மொழிப்புலவர் கில்லர்ஜி"எனச் சொல்ல ஏதுவாக இருக்கும். நன்றி.
பதிலளிநீக்குவாங்க சகோ எனது சிற்றறிவுக்கு எட்டியது வரை உலகிலேயே சுலபமான மொழி அரபிக்தான் முயன்றால் படித்து விடலாம்
நீக்குபெஞ்சுல உட்கார்ந்து டென்னிஸ் விளையாண்டால் பெனிஸ்மென்ட் போட்ருவாங்களே....
வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி சகோ
பாகிஸ்தானிய உருது மொழியைப் பார்த்தால் எதையோ அடுக்கி வச்ச மாதிரிதான் இருக்கு :)
பதிலளிநீக்குத ம +1
அதுவும் அரபிக்தான் ஜி பாக்கிஸ்தானின் உருது பாணி என்று சொன்னேன்
நீக்குவருகைக்கு நன்றி ஜி
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத.ம.13
அரபியை வாழ்த்திய இனிய தமிழே வருகைக்கு நன்றி.
நீக்குஜி... எப்படிங்க இப்படி...? அசத்துறீங்க...! பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குஏதோ முடிஞ்சது இம்புட்டுதான் ஜி.
நீக்குக்யா கர ஸக்தே ?
சார், இது இதோ அய்த்தலக்கா அரபி மொழி போல தெரியுது!
பதிலளிநீக்குவருக நண்பரே இது அரபி மொழிதான்
நீக்குநண்பரே !
பதிலளிநீக்குஉங்களின் பல்மொழிப் புலமை நான் அடிக்கடி அதிசயிக்கும் உங்கள் திறமைகளில் ஒன்று ! இனி உங்களை அஸ்டாவதானி கில்லர்ஜீ என அழைக்கலாம்...
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வாருங்கள் நண்பா அடிக்கடி இடைவெளி விடுகிறீர்களே... தங்களைப் போன்றவர்களின் கருத்துரைதான் எமக்கு பாக்டம்பாஸ், 20. 30. 40. 50. 60. மா3
நீக்குஉங்களின் மூலமாக முதன்முதலாக ஒரு புதிய, மாறுபட்ட பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன். இருக்கும் நாட்டில், பயன்படுத்தும் மொழியை, முறையாக பிற நண்பர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நன்னோக்கில் பகிர்ந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. பொருள் மட்டும் கூறாமல் போயிருந்தால் நாங்கள் உங்களைத் தேடி வரவேண்டி இருந்திருக்கும். நன்றி.
பதிலளிநீக்குவருக முனைவரே வருகைக்கும், பாராட்டிற்க்கும், வாக்கிற்க்கும் நன்றி
நீக்குபொருள் தராவிடில் இது அர்த்தமற்ற பதிவாகி விடுமே...
//பொருள் மட்டும் கூறாமல் போயிகுந்தால் நாங்கள் உங்களைத் தேடி வரவேண்டி இருந்திருக்கும்//
இந்த வரிகளை ரசித்தேன் நல்லவேளை தப்பித்தோமென.....
பன்மொழி வித்தகரா இருக்கீங்களே! இனிய பாராட்டுகள்.
பதிலளிநீக்குமொழிகளைக் கற்றுக்கொள்வது மனதுக்கு இனிமை! எல்லாம் குச் காம் கோ ஆயேகா:-)
வாங்க, வாங்க நலமோ..... வருகைக்கு நன்றி.
நீக்குவட நாட்டார் தமிழ்நாட்டிக்கு வந்து தமிழை கற்றக் கொண்டத போல. அயல்நாட்டில் இருக்கம் தாங்கள் ..தங்கள் தேவையை கருதி தேவையான மொழியை கற்று இருக்கிறீர்கள். அப்படித்தானே...!!!
பதிலளிநீக்குஆம் நண்பரே //பாம்பு திங்கிற ஊருக்கு போனால் நடுத்துண்டு நமக்கு வேணும்// னு கேட்கணும் அப்பத்தான் வாழமுடியும் இல்லைனா பட்டினியாய் கிடந்து சாக வேண்டியதுதான்.
நீக்குநண்பரே,
பதிலளிநீக்குதமிழில் பன்மொழிப்புலவர் என்று அப்பாத்துரை அவர்களைச் சொல்வார்கள்.
பதிவுலகில் என் சிற்றறிவிற்கெட்டியவரை உங்களை விட அந்தப் பட்டத்திற்குப் பொருத்தமாக வேறு யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை.
நன்றி.
த ம கூடுதல் 1
கவிஞரே திரு. அப்பத்துரை அவர்களைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் அந்த உன்னதமான மனிதரோடு எம்மை இணைப்பது முறையா ? இது தவறாகப்படவில்லையா ?
நீக்குநல்ல பதிவு கில்லர்ஜி!
பதிலளிநீக்குஅரபு மொழியை வலமிளிருந்து இடப்பக்கம் எழுதுவார்கள் என்று மட்டும் தான் தெரியும்.
அரபிய மொழிக்கு அறிமுகம் கொடுத்தமைக்கு நன்றி.
த மா 17
வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி நாரதரே...
நீக்குபன்மொழிப்புலவரே இவ்ளோதானா.............மேலும் கற்று
பதிலளிநீக்குகலக்குக வாழ்த்துக்கள்.
முயற்சிக்கிறேன் சகோ வருகைக்கு நன்றி.
நீக்குஎத்தனை மொழிகள் கற்றாலும் நல்லது தான். அரபி - கொஞ்சம் கடினம் போலத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குத.ம. - பதினெண்கீழ்க்கணக்கு!
வருக நண்பரே மிகவும் சுலபமானது அரபி.
நீக்குபன்மொழித் திறன் கண்டு வியந்து போனேன்! .... கொஞ்சம் தள்ளி நின்னு பார்க்கறேன்... அரபி தொடர்ந்து இன்னும் ஏதாச்சும் உண்டா?
பதிலளிநீக்குநிறைய உண்டு நண்பரே.... தொடர்க....
நீக்கு