தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 21, 2015

My, Long Time Confusion ?

 

எனது நீண்டகால குழப்பம்.


இந்த சமூகத்திலே பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புதுமாப்பிள்ளை ஆகிடுறான் ஆனால் புருஷன் செத்துட்டா பொண்டாட்டி புதுப்பெண்ணா ஆகுறது இல்லையே ஏன் ?


மனைவியை இழந்தவனிடம் கடைசி காலத்தில் உனக்கு ஒரு துணை வேண்டுமென சொல்வது ஏன் ?


கணவனை இழந்தவளிடம் கடைசி காலத்தில் உனக்கு ஒரு துணை வேண்டுமென சொல்லாதது ஏன் ?


தனது மகளின் கணவன் குடிகாரனாய் இருப்பதைப் பார்த்து வேதனைப்படும் மனிதன் தனது மருமகளின் கணவன் குடிகாரனாய் இருப்பதைப்பற்றி கவலைப்படுவதில்லையே ஏன் ?


ஏதோ ஒரு சூழலில் தனது மகள் இறந்து விடுகிறாள் கண்னை மூடிக்கொண்டு அந்தச் சாவுக்கு காரணம் தனது மருமகன் தான்யென சொல்வது ஏன் ?


ஏதோ ஒரு சூழலில் தனது மருமகள் இறந்து விடுகிறாள் கண்னை மூடிக்கொண்டு அந்தச் சாவுக்கு காரணம் தனது மகன் தான்யென சொல்வதில்லையே ஏன் ?


மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்து கொள்கிறான் இதை மனைவியர்கள் ஏற்றுக் கொள்வது ஏன் ?


கணவன் இருக்கும்போது மனைவி தனக்கு இன்னொரு திருமணம் வேண்டுமென்றால் அந்த வார்த்தையைக்கூட கணவன் ஏற்று கொள்வதில்லையே ஏன் ?


தனது மகள் திருமணத்திற்கு வரதட்சினையை குறைத்து பேசுபவர்கள் தனது மகனுக்கு பேசும்போது குறைத்து பேச தயங்குவது ஏன் ?


திருமணத்திற்கு ஜாதி, மதம் பார்க்கும் மானிடன் விலைமாதரிடம் போகும்போது பார்ப்பதில்லையே ஏன் ?


குடும்ப சூழ்நிலைக்காக சிறு வட்டத்திற்குள் தன்னை இழப்பவளை வேசியென சமூகம் கோயிலுக்குள் வரவிடாதது ஏன் ?


அதே சமூகம் உலகறிய தன்னை இழந்த நடிகைகளுக்கு மட்டும் கோயிலே கட்டுவது ஏன் ?


கட்டிய கோயிலுக்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகம் நடத்தினார்களே ஏன் ?


குஷ்பாம்பிகாலே போற்றி... என்று சரணமும் சொன்னார்களே ஏன் ?


பின்நாளில் அதை இடித்தும் விட்டார்களே, இந்த தண்டச்செலவு ஏன் ?


கல்லிலான கடவுளுக்கு பாலாபிஷேகம் எதற்கு என்றார்களே ஏன் ?


அதே மனிதன் பேப்பரிலான கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிறானே ஏன் ?


சினிமாவில் மனைவி மீது பாசத்தை பொழிபவர்கள் நிஜ வாழ்வில் விவாகரத்து செய்கிறார்களே ஏன் ?


சினிமாவில் கர்ணபரம்பரை போல் நடித்து காண்பிப்பவர்கள் நிஜ வாழவில் கஞ்சன் ஜங்காவாக இருப்பது ஏன் ?


சினிமா நடிகர்கள் தனக்கு பின்னால் ஆயிரம் விசிலடிச்சான் குஞ்சுகளை கண்டவுடன் தமிழகத்தை காப்பாற்றப் போகிறேன் என்கிறார்களே ஏன் ?


இந்த நடிகர்களிடம் ஆட்டோகிராப் என்ற பெயரில் கையெழுத்து வாங்க சில விட்டில் பூச்சிகள் துடிக்கிறார்களே ஏன் ?


இதைப் போலவே நம்மாளும் கையெத்துப் போட முடியும் என்பதை மறந்து விடுகிறார்களே ஏன் ?


சினிமா சமூகத்தை சீரழிக்கிறது என்று சொல்பவர்கள் குடும்ப சகிதம் சினிமாவுக்கு போவது ஏன் ?


எதிர்க்கட்சிக்கார்கள் ஊழல் செய்கிறார்கள் என்று சொல்லும் அரசியல்வாதிகள், தான் வந்தவுடன் அதையே செய்கிறார்களே ஏன் ?


அரசியல்வாதிகள் நாட்டை சீரழிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் சீரழித்தவர்களுக்கே மீண்டும் அங்கீகாரம் கொடுப்பது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் ஆண்பாலையும், பெண்பாலையும் சமப்படுத்தாமல் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் மதப் பிரச்சனை என்று வரும்போது தன்மதத்திற்கு சார்பாய் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் ஜாதிப் பிரச்சனை என்று வரும்போது தன் ஜாதிக்கு சார்பாய் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் தன் ஜாதிக்குள்ளேயே சொந்த பந்தத்திற்கு சார்பாய் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் சொந்த பந்தத்திற்குள்ளேயே தன் குடும்பத்திற்கு சார்பாய் பேசுவது ஏன் ?


நியாயம் பேசும் மனிதன் தன் குடும்பத்திற்கு உள்ளேயே தனக்கே சார்பாய் பேசுவது ஏன் ?

 

சாம்பசிவம்-

நீரு மாத்தரம் எப்படிங்றேன் ?

70 கருத்துகள்:

  1. ஏகப்பட்ட 'ஏன்' கள்! விடை கிடைக்காத 'ஏன்'கள்!!

    பதிலளிநீக்கு
  2. மொத்தத்தில் தனக்கு வந்தா அது இரத்தம், அடுத்தவனுக்கு வந்தா அது தக்காளி சட்டினி ............. ஏன்............ஏன்............ஏன்............

    ஒரே பதில்: சுயநலம்............சுயநலம்............சுயநலம்.............

    பதிலளிநீக்கு
  3. இத்தனை ஏன்களுக்கும் விடை மனோபாவம்தான்! மனதிலே மாற்றங்கள் வருகையில் இத்தனை கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் மாற்றங்களும் வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோபாவ மாற்றங்கள் அது நம்மில் தொடங்க வேண்டும்.

      நீக்கு
  4. அடுத்தவனுக்கு வந்தா அது தக்காளிச் சட்னி..
    அப்படின்னு சொல்லக் கேட்டு கேட்டு காதில் இரத்தம் வருவது ஏன்!..

    தக்காளிச் சட்னியும் இரத்த வாடை அடிப்பது ஏன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தக்காளிச் சட்னியில் ரத்தத்தை ஊற்றியது ஏன் ?

      நீக்கு
  5. கஞ்சன் ஜங்கா என்பது மலைச்சிகரம்!..
    இந்தக் கசடுகளை அதனுடன் ஒப்பிடுவது ஏன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க நண்பரே... தாங்கள் சொல்வது உண்மையே.

      நீக்கு
  6. அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப் பாலு..
    என்னை வாழ வைத்தது தமிழ்ப் பாலு!..

    இந்தப் பால் தமிழ் எல்லைக்கு அப்பால் மாறிப் போவது ஏன்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பால் குடித்த களிப்பால் எமக்கு தோன்றியது இந்தக் குழம்பல்.

      நீக்கு
  7. ஏகப்பட்ட கேள்விகளை வைத்திருக்கிறீர்கள்...
    சில கேள்விகளுக்கு ஆணாதிக்க சமூகம் என்று சொல்லலாம்...
    பல கேள்விகளுக்கு...?
    விடை தெரியா கேள்விகள் என்பதை விட இதுதான் நியதி என்று நினைத்து தொடரும் கேள்விகள் இவை...

    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணாதிக்கம் இதுவும் ஒருவகையில் சரியே...

      நீக்கு
  8. சிந்திக்கவேண்டிய வினாக்கள்தான் அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  9. இருந்தாலும் இம்புட்டு சந்தேகம் உங்களுக்கு வந்துருக்க கூடாதுண்ணே ! இதுக்கு பதில் கிடைக்கறது ரொம்ப ரொம்ப கடினம் . சூரியன் மேற்குதிசையிலிருந்து உதிச்சாலும் இதுக்கான விடைகள் கிடைக்காது .

    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சந்தேகம் எமக்கு தவழத்தொடங்கிய 1 ½ வயதிலிருந்து இந்தியமண்ணை தொட்டு நக்கிய தருணம் தொட்டு இருக்கிறது நண்பரே..

      நீக்கு
  10. போன ஜென்மம் ,மறு ஜென்மம் பற்றிய நம்பிக்கை எனக்கில்லை ...இருந்தாலும் இந்த 'ஏன் 'களுக்கு அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் :)
    இப்படி சொல்லத் தோன்றுகிறது .......போன ஜென்மத்தில் ,நீங்கள்தான் தருமியா ?
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லாதபோது நான் எப்படி வந்து கேட்கமுடியும்.

      நீக்கு
  11. Gee, ean eppadi? etharkku enda velakkam tharanum. But mudiyala.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியலைனு முதலிலேயே சொல்லிட வேண்டியதுதானே,,,

      நீக்கு
  12. வணக்கம்
    ஜி
    அனைவரும் அறிய வேண்டிய வினாதொகுப்பு... நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் பதிலைப்பற்றி சொல்லாமல் வினா நன்றாக உள்ளதுனு சொல்லிட்டீங்க...

      நீக்கு
  13. ஆத்தாடி இத்தனை கேள்விக்கும் விடை கிடைத்தால் சமூகம் நல்லாயிடும்ல சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சமூகம் நல்லாயிருக்கும்போது இந்தக்கேள்வியே எனக்கு தோன்றாதே....

      நீக்கு
  14. முற்றும் முழுதாக நிலவுகின்ற இந்த சமூகம்தான் முதற்காரணம்.

    பதிலளிநீக்கு
  15. எதுக்கும் ஒரு நல்ல டாக்டரிடம் காட்டி முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்துரையால் நான் கோபப்படமாட்டேன் காரணம் நான் தங்களது குணாதியசத்தை அறிந்து கொண்டேன் ஜாலியான பேர்வழி என்று, தங்களை மட்டுமல்ல தமிழ் மணத்தால் பதிவுலகில் பலருடைய மனதையும் அறிந்து கொண்டேன் தங்களது தொடர் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
    2. மன்னிக்கவேண்டும். தவறாகச்சொல்லி விட்டேன். நான் சொன்ன கருத்தில் ஒரு மாற்றம். நல்ல டாக்டர் என்பதற்குப் பதிலாக நல்ல மனோதத்துவ டாக்டர் என்று திருத்திப் படிக்கவும்

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  16. ஏன் என்று கேட்கின்றாய் - அதைத் தான்
    ஏன் என்று கேட்கின்றேன்...
    ஓ!
    ஏன் என்பதற்குப் பின்னாலே - எத்தனையோ
    ஏன் இருக்கின்றதே!
    பதில்கள் பகிர முடியாத
    கேள்விகள் - எவர்
    உள்ளத்தை விட்டும் நீங்காதே!

    பதிலளிநீக்கு
  17. அறியாமை... அறியாமை... அறியாமை...

    பதிலளிநீக்கு
  18. கேள்வியின் நாயகனே, கேள்விக்கு பதில் ஏதய்யா? என்பது போல கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளீர்கள். இன்றைய சமுதாயச் சூழலில் இவ்வாறான அவலங்களைப் பார்ப்பது வேதனையே. இந்த கேள்விகளுக்கு விடை காண முடியுமா என்பதே என் கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே கேள்வியை என்மீது திருப்பி விட்டீர்களே....

      நீக்கு
  19. விடைகளைத் தேடி நானும் ஓடுகிறேன் ஜி
    தம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடிக்கிடைத்ததும் மீண்டும் வாருங்கள் கவிஞரே....

      நீக்கு
    2. ஏன்? என்ற எண்ணற்ற வினாக்களைத் தேடி
      வாருங்கள் அய்யா!
      அனைவரும் சேர்ந்து ஒன்றாக ஓடுவோம்?
      மன்னிக்கவும்,
      தேடுவோம்?
      தேவக் கோட்டையாரே 'தேதி' சங்கதி என்னாயிற்று?
      நட்புடன்,
      புதுவை வேலு

      நீக்கு
    3. ஆஹா!
      நண்பா!
      பிப்ரவரி 30ந்தேதியா?
      எந்த காலண்டரில்?
      தேவக்கோட்டையார் பிரிண்ட் செய்து அனுப்பவும்! நன்றி!
      வந்து விடுகிறேன் ஊமைக் கனவுகள் அய்யாவோடு
      முச்சந்தி முனுசாமி கடைக்கு???????.
      நட்புடன்,
      புதுவை வேலு

      நீக்கு
    4. நம்ம ஓபேராவுல இருக்குல அங்கேதான் வரும்பொழுது கருத்து கருப்புசாமியை அழைத்து வரவும்.

      நீக்கு
  20. ஏன் என்ற கேள்விதான் உலகின் வளர்ச்சிக்குக் காரணமே! நீங்கள் கேட்டதும் சரியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயாவின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  21. ஏன் ஏன் ஏன்
    இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் காரணம்,
    தன்னலம், சுய நலம்
    மனித மனம்
    அருமையான பதிவு நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், விளக்கவுரைக்கும் நன்றி நண்பரே....

      நீக்கு
  22. “ஏன்? என்று கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை”...யாரோ சொன்னது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறமொழிக்காரன் உயர வாளி, வாளியாக நல்ல தத்துவங்களை அள்ளி தந்து விட்டு, நம்மை விட்டுப்போன தமிழன் வாலியே, வலிப்போக்கரே...

      நீக்கு
  23. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்பதை அறியாமல்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே!

    தங்களுக்குள் எழுந்தவை அனைத்தும் சிறந்த கேள்விகளே.! பதில் சொல்வதுதான் மிகக் கடினம்.! காரணம், நம்முடைய நலன்கள் என்ற "சுய சிந்தனை வேர்கள்", மனிதரின் மனதில் விருட்ஷமாகி, வளர்ந்து வியாபித்திருக்கிறது..வேருடன் வெட்டிச் சாய்பது எளிதில்லாமல், வெட்ட வெட்ட வளரும் விருட்ஷமது.! ஆனாலும், தங்கள் உள்ளத்தில் எழுந்த கேள்விகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.! கேள்விகளுக்கான, பதில்கள் என்றாவது ஓர்நாள் உதயமாகும். அந்நாட்கள் விரைவாக எழவும், வாழ்த்துகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோதரி, விரிவான விளக்கவுரைக்கு நன்றி.

      நீக்கு
  25. அன்புள்ள ஜி,

    ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை..!
    ‘.கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக் கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர் வடிகின்ற வட்ட நிலா...பாடாத தேனீ... பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ? ’என்று கேட்டார் புரட்சிக்கவி பாரதிதாசன்.

    ஆணாதிக்கம் தவிர வேறொன்றும் இல்லை!

    ஜாதிகள் இல்லையடிப் பாப்பா... குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றார் மகாகவி பாரதி.
    பாவம் புண்ணியம் யாரும் பார்ப்பதாகத் தெரியவில்லை!
    பாவம் புண்ணியம்!

    எல்லாம் நீர் பூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கிறது...ஏன் கேட்கிறீர்கள்... ? போங்க...ஜி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி மணவையாரே....

      நீக்கு
  26. "சமூகப் பசி "அதிகம் எடுக்கிறதா நண்பா?
    ஏன் என்னும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடைத் தேடும்
    ஓட்டப் பந்தயத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.
    தேதி அறிவியுங்கள்! தேவக் கோட்டையாரே?

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இம்மாதம் 30 ஆம் தேதி நல்லநாளாக இருக்கிறது அன்றே வைத்துக்கொள்வோம் தேடுதல் வேட்டையை.... ஆகவே முச்சந்தி முனுசாமி கடைக்கு வந்து விடுங்கள்.

      நீக்கு
  27. தங்களுடைய சந்தேகம் குறைந்ததா? தீர்ந்ததா?...நண்பரே!!

    பதிலளிநீக்கு
  28. நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் எல்லா ஏன் களும் இங்கு ஒரே பதிவில்.....ம்ம்ம்ம் ஆனால் விடை?! நாம் மனிதர் மாறாத வரை இதற்கு விடை கிடைப்பது அரிது.....கூடியவரையிலும் நம்மால் மாற முடிந்த வரையிலும் மாறுவோமே விடை கிடைக்குமே! நண்பரே!

    அருமையான பதிவு~

    பதிலளிநீக்கு
  29. உங்கல் கன்ஃப்யூஷனில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்......"கன்ஃப்யூஷன் தீர்க்கணுமே எண்டெ கன்ஃப்யூஷன் தீர்கணுமே ....(மலயாள பாடல்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் 80 நமக்குள்ளேதான் உள்ளது முதலில் நாம் முன்வருவோம் ... இந்த மலையாள பாடல் நானும் கேட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  30. அத்தனை கேள்விகளும் நச்..... பூனைக்கு யார் மணி கட்டுவது என்று சொல்வார்கள் ஒரு விளையாட்டுக்காக... ஆனால் தைரியமாக நீங்க இப்படி ஒரு கூடை நிறைய கேள்விப்பூக்களை எடுத்து தொடுத்து விட்டீர்கள்... பதில்கள்?/????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, இந்தப்பூக்கள் கோடரி கொண்டு பறித்தது.

      நீக்கு
  31. ஏன்?ஏன்?ஏன்/ பொதுத்தேர்வின்வரவால் தங்களுக்கும் கேள்விகள்
    தோண்றுகிறது.ஏனென்றால் நாமெல்லாம் மனிதர்களாயிற்றே!!!!!!!!!!!!!!!
    சகோ.............ஆமா ஏன் என்வலைத்தளத்தில் தங்களின் பறைஒலிக்கவில்லைசகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி...
      தாங்கள் எனது பதிவில் இணைப்பில் இல்லையே பிறகு எப்படி வரும் ?

      நீக்கு
  32. இத்தனை ஏன்" களில் எனக்கே confusion? இவ்வளவுதானா இன்னுமிருக்கா "ஏன்"கள்?
    நீங்க profil ல சொன்ன மாதிரி 300 முன் பிறந்திருக்கனும். சாம்பசிவம் ஆருங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ராஜேஸ்குமார் அவர்கள் தனது கதையில் கொண்டு வந்த விவேக்-ரூபலா மா3 நானும் ஆரம்பம் தொடங்கியே.... சாம்பசிவம், சிவாதாமஸ்அலி, CHIVAS REGAL சிவசம்போ இவர்களை கொண்டு வருகிறேன் காலப்போக்கில் இவர்களுக்கு உயிரோட்டம் வரலாம்.

      நீக்கு