வெள்ளி, பிப்ரவரி 13, 2015

விபச்சாரன்.

சமூகத்தில் ஒருநல்ல சிந்தனையுள்ள மனிதன், ஒருநல்ல குணமுள்ள பெண்ணை மணக்க நினைக்கிறான், அவளிள் தாயார் ஒருகாலத்தில் இந்தசமூகத்தின் பார்வையில், தவறானவள் அவளின் சூழ்நிலை கணவனால் மூன்று பெண்குழந்தைகளோடு, கைவிடப்பட்டவள், மரணிக்கவும் முடியாமல் தன்குழந்தைகளுக்காக வாழநினைத்தவள் எத்தனை போராடியும் இந்தசமூகம் அவளை விடவில்லை வேறுவழியின்றி குழந்தைகளின் உணவுக்காக தன்னையே உணவாக்கினாள் சில விபச்சாரன்களுக்கு இன்று, அதே விபச்சாரன்கள்கூட அவளின் மகளை மணக்க நினைக்கும், ஆடவனை முட்டாள் எனசொல்வது ஏன் ? மகள் நல்லவள்தானே ! உன்னுடைய கருத்து அவள் வீட்டில் பெண் எடுப்பது தவறாக இருக்கலாம், இருக்கட்டும் அதற்காக, மற்றவன் மனதை காயப்படுத்துவது ஏன் ? அப்படியானால் அவளைப்போலவே அவள் மக்களும் உன்னிடம் தன்னை இழக்கவேண்டும் அப்படித்தானே ! சரி, இவர்களெல்லாம் சிறிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள், வெளியுலகம் அறியப்படாதவர்கள், அதேநேரம் உலகமே அறியப்படும் நடிகைகளை மணக்கிறார்களே ! அவர்களை நீ ஒன்றுமே சொல்வதில்லையே ஏன் மானிடா ? அவர்களின் பணபலம் உன்னை பாடாய்படுத்திவிடும் என்ற பயமா ? அறிவற்ற மனிதா, இங்காவது தாய்தான் கடந்தகாலத்தில் வறுமைக்காக விபச்சாரி, அங்கு மகளே நிகழ்காலத்தில் வளமைக்காக விபச்சாரி, விபச்சாரியை மணப்பவனை விட, விபச்சாரி மகளை மணப்பவன் உயந்தவன் இல்லையா ? மனிதன் கஷ்டமான வாழ்வில், தவிர்க்க வேண்டியது வளமையா ? வறுமையா ? போதாக்குறைக்கு வளமைக்கு விபச்சாரம் செய்தவளை, செய்பவளை வாழ்க ! வாழ்க ! வெனகோஷம்வேறு போடுகிறாய் வருங்கால முதல்வரே ! எனவும் கோஷம்போடுகிறாய், இதெல்லாம் போககோயில்கூட கட்டுகிறாய் உன்னைப்படைத்தவன் இதை எந்தவகையில் ஏற்றுக்கொள்வான் ? அதற்க்கு, தன்னை படைத்தவனைப்பார்த்து ''கடவுளே இல்லை'' எனசொல்லுபவன் உன்னைவிட மேலானவன் மட்டுமல்ல, மரணபயமில்லா தைரியசாலியும்கூட...
 
பின்குறிப்பு - நான் தி.க.காரன், அல்ல !67 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஜி
  உண்மைதான் நல்ல சமுக அக்கறையுள்ள பதிவு.. சிறப்பான கருத்தாடலுடன் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ரூபன்.

   நீக்கு
 2. வணக்கம்
  தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்.. த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. ’ஏழை ’அதை’த் தின்றால் பசிக்காக. அதையே பணக்காரன் தின்றால் நோய்க்கு மருந்தாக...’ என்பது போன்ற ஒரு மக்கள் வழக்குதான் உங்களின் இந்தப் பதிவைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது.

  ஒன்றா இரண்டா, எத்தனை மூடத்தனங்களில் ஊறி நாறிக் கிடக்கிறது இந்தச் சமுதாயம். அவ்வளவு எளிதாகத் திருந்திவிடுமா என்ன?!

  நன்றாக உறைக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே... தந்தை பெரியார் அவர்களை விடவா, சொல்லிவிடப்போகிறோம் அதற்க்கே அசராதவர்கள் நமக்கெல்லாம்.....

   நீக்கு
 4. கில்லர்ஜி உண்மையிலேயே கில்லர்தான். விபச்சாரன் புதிய வார்தை. அருமையான பதிவு
  - இசக்கி, தேவகோட்டை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தேவகோட்டையாரே.... யாரென்று தெரியவில்லையெனினும் வருகை தந்தது மகிழ்ச்சி தொடர்ந்தால்... அதனினும் மகிழ்ச்சி.

   நீக்கு
 5. அய்யா நல்ல அருமையான சவுக்கடி. பணம் தான் அனைத்திற்கும். பணம் உள்ளவன் செய்வதெல்லாம் சரி. அவ்வளவே. வேறு சொல்ல முடியல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 6. அவலத்தை தோலுரித்து காட்டி இருக்கிறீர்கள்...தம. 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ ரத்தினச்சுருக்கமான கருத்துரைக்கும், வாக்கிற்க்கும்.

   நீக்கு
 7. விபச்சாரன் - மறுபடியும் புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா கடந்த பதிவில் நமது இருவரது கருத்துகளால் உதித்த அவசரமான பதிவே...

   நீக்கு
 8. என்ன இது அதிரடி சரவெடி...
  தோழர்?

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள ஜி,

  ‘விபச்சாரன்’ தங்களின் கருத்து நியாமனது என்று வரவேற்கிறேன். நான் முதன்முதலில் போட்ட நாடகம் ’அனிச்சமலர்’ 1984-85 களில் திருச்சி கலைக்காவிரி நடத்திய நாடகப் போட்டியில் மணப்பாறை பங்கில் நடைபெற்ற போட்டி நாடகத்தில் பங்கேற்று கதை வசனத்திற்கு முதற்பரிசைப் பெற்றது.
  அதில் விபச்சாரி இறந்து விடுகிறாள்... அவளின் உடலைத் தூக்க யாரும் முன்வரவில்லை. மகள் தாயை அடக்க செய்ய போராடும் துன்பம்... சேற்றில்தான் செந்தாமரை பிறக்கிறது... தாமரை செய்த குற்றமென்ன? தேவலாயத்திலேயே விபச்சாரியின் மகளைக் கன்னியஸ்திரியாக ஆக்கினேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணவையாரின் வருகைக்கு நன்றி முடிவை சிறப்பாக அமைத்து இருக்கிறீர்கள் அருமை

   நீக்கு
 10. சமூகச் சிந்தனையுடன் கூடிய பதிவு நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 11. #தன்னைப் படைத்தவனைப் பார்த்து கடவுளே இல்லை என்பவன் #
  இதில் லாஜிக் உதைக்கிறதே கில்லர் ஜி :)
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாத்திகவாதியை குற்றம் சொல்பவன் ஆத்திகனாகத்தானே இருக்கமுடியும் பகவான்ஜி.

   நீக்கு
 12. பாவங்க, எல்லா நடிகைகளையும் சொல்ல முடியாது......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் 99 சதவீதம் இன்று சொல்ல முடிகிறதே... நண்பா.. அதாவது மெஜாரிட்டி.

   நீக்கு
 13. தி.க.காரர்தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை... நல்லவர்கள் நேர்மையானவர்களும் நடக்கும் அநீதிகளை சொல்லலாம்..

  பதிலளிநீக்கு
 14. என்னைப்பொறுத்தவரை வறுமைக்காக விபச்சாரம் செய்தவளையே தப்பானவள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது . தங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கடிகள் அண்ணா !

  தம+

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பா எனது கருத்தும் அதுவே, அது தவறென்றால் தவறை செய்யத்தூண்டுதலாக இருந்தவனும் தவறானவனே... அதாவது சமூக அங்கத்தினராகிய நாமும்.

   நீக்கு
  2. சரியாகச்சொன்னீர்கள் அண்ணா !. தன் மனைவி பத்தினியாக இருக்கவேண்டும் , ஊரான்வீட்டு மனைவி ஊர்மேய வேண்டும் என்ற வக்கிரமான எண்ணத்துடன் அலைபவர்கள் தான் இங்கு அதிகம் . அம்மாதிரியான இழிபிறப்புகளுக்கு இடையில் வாழும் இம்மாதிரியான பாவப்பட்டவர்களை ஈனர்கள் என்று அவர்களே தூற்றுவதுதான் கொடுமை ,
   :-(

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 15. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 16. சமூகக் கேவலமொன்றை மிகுந்த கோபத்துடன் எழுதியிருக்கிறீர்கள் என்னும் வகையில் என் பாராட்டுகள் நண்பரே. விபச்சாரன் என்னும் சொல் இன்று வழக்கில் இல்லாவிட்டாலும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. (திருவள்ளுவர் “பரத்தன்“ என்று இதைச் சொல்வார் -குறள்-1311) உங்களை அறியாமலே திரைக்கலைஞராக இருக்கும் பெண்களையெல்லாம் அப்படித்தான் என்பது போல எழுதியிருப்பது நியாயமாகப் படவில்லை. இது ஆணாதிக்க உலகம் அப்படியான தோற்றம் கூட அதன் தேவைதான். அத்தோடு, “தன்னைப் படைத்தவனைப் பார்த்து, கடவுளே இல்லை என்பவன் தேவலாம்” என்று சொல்வதன் மூலம் நாத்திகர்களை எல்லாம் “விபச்சாரன்“களோடு ஒப்பிடுகிறீர்கள் எனில், வருந்துகிறேன் நண்பரே. என்போலும் எந்த நாத்திகனும் எந்தக் கோவிலையும் இடித்ததில்லை. சாமி கும்பிடுகிறவர்கள்தான் மதத்தின் பெயரால் சண்டையிட்டு அடுத்தவர் கோவிலை இடிக்கிறீர்கள்..கோவப்படாமல் நான் சொல்வதை யோசித்தால் உங்களுக்கு உண்மை புரியக்கூடும். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது என்ன? சற்றே விளக்குவீர்களா நண்பரே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கு முதற்க்கண் நன்றி,
   திரைப்பட நடிகைகள்.....
   தங்களுக்கே தெரியும் பழைய காலங்களில் காதல் காட்சிகளில் கட்டிப்பிடித்து நடிப்பதற்க்கு பெண்கள் சம்மதிப்பதில்லை, இதற்காக ஆணை பெண் வேஷமிட்டு கட்டிப்பிடிப்பதுபோல் அதுவும் தூரமாக, முதுகுப்புறத்தை மட்டுமே காண்பிப்பார்கள், இதற்க்கே மக்கள் எங்களை கீழ்தரமாக நினைப்பார்கள் என எதிர்த்தவர்களும் உண்டு.
   இத்தனைக்கு இவர்களுக்கு மக்கள் வைத்திருந்த பெயர் //கூத்தாடிகள்//
   இன்று பணத்தைக்கொடுத்தால் எந்த நிலையையும் கடந்து நடிக்கும் நிலையில் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 80 தாங்கள் அறிந்த விசயமே... இவர்கள் வாழ்ந்து காண்பிக்கின்றார்கள் அவன் மனைவியை விவாகரத்து செய்தவன் இவள் கணவனை கை விட்டவள் இப்படி ஏராளமான நடிகைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.
   இப்படிப்பட்டவர்களுக்கு இவண் கோயில் கட்டுதின்றான் //தெய்வம்// என்கிறான்.
   இது ஆணாதிக்க உலகமே இதற்க்குள் நான் உடன் படாதவன்.
   நான் பெண்களை மதிப்பவன் காரணம், எனக்கு,
   அம்மா, சகோதரி, மகள் என்ற பெண்கள் இருக்கின்றார்கள்.
   அப்பத்தா, அம்மாயி, மாமியார், மனைவி என்ற பெண்களும் இருந்தார்கள்.
   தவறு செய்தவள் யாராயினும் குற்றவாளி 80தே எமது கருத்து.

   //விபச்சாரன்//
   இதில் ஆத்திகர்களும் உண்டு நாத்திகர்களும் உண்டு நான் இரண்டையும் இணைக்கவில்லை.

   தாங்கள் சொல்வதுபோல் மதப்பிரட்சினையில் வரிந்து கட்டிக்கொண்டு முன் வருபவர்கள் ஆத்திகவாதிகளே.... நாத்திகர்கள் எப்படி வருவார்கள் அவர்கள்தான் இல்லை என்று செல்கின்றார்களே பிறகெப்படி இல்லாத விடயத்திற்க்கு சண்டை போடுவார்கள்.

   தங்களது கருத்துக்களால் நான் கோபப்படவில்லை, எம்மை செம்மைபடுத்துவதற்காகத்தான் சொல்வீர்கள் 80 நான் அறிந்ததே...

   (தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்
   இறைவனால் முடியாத செயலைக் கூட, விடா முயற்சியினால் அடைந்துவிடலாம்)

   எனக்கு ஆத்திகத்தில் சொன்ன...
   என்ன நடந்ததோ நன்றாகவே நடந்தது
   என்ன நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
   மனிதமனம் தளர்ந்து விடக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்டதிலும். நாத்திகத்தில் சொன்ன...
   சக்தி உள்ள கோயிலுக்கு
   சாவி பூட்டு எதற்க்கு ?
   மனிதமனம் சிந்திக்க முயற்சி எடுக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதிலும்.

   நம்பிக்கை உண்டு ஐயா தங்களின் நீண்ட கருத்துரைக்கு மீண்டும் நன்றி.

   நீக்கு
 17. அன்பின் ஜி!..
  எப்போதும் தெளிந்த நீரோட்டம் போல தங்கள் பதிவுகள்!..
  ஏன் இப்படி என்று சிந்திக்கின்றேன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தங்களது தாமதமான கருத்துரையிலிருந்தே... இந்தப்பதிவு தங்தளை குழப்பி இருக்கின்றது 80தை அறிகின்றேன் இனியெனும் முயற்சிக்கின்றேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 18. கோபம் சிலசமயம் பல தேவையில்லாத வரிகளை சேர்த்து விடும் ஜி... சில நாட்கள் கழித்து நாமே நம் பதிவை வாசித்தால் புரிபடும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வார்த்தை உண்மையே... புரிய முயற்சிக்கின்றேன்.

   நீக்கு
 19. கருத்து நன்று கில்லர் ஜி! ஆனாலும் நடிகைகளை உதாரணமாக சொன்னது கொஞ்சம் உறுத்துகிறது அவர்களும் பெண்கள்தானே.அவர்களை மணப்பவர்களும் பணத்திற்காகத் தானே மணந்து கொள்கிறார்கள்.பணம் இருந்தாலும் அவர்கள் சந்தோஷமா வாழ்கிறார்களா என்பது கேள்விக் குறியே. எத்தனை நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதற்கும் விபசாரன்கள்தானே காரணம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனது குற்றச்சாட்டு நடிகைகளின் வாழ்க்கைத்தரம் குறைந்து கொண்டேபோவதைக்குறித்து மட்டுமல்ல.... அவர்களை துதிக்கும் அறியாமைவாதிகளைத்தான் தற்கொலை செய்வதின் காரணமென்ன புரிந்து கொள்ளாமல் செய்து விட்டு பிறகு புரிந்து கொ(ல்)வது, ஏற்கனவே கல்யாணமானவர்களை விவாகரத்து வாங்க வைத்து இவணும், இவளும் கல்யாணம் செய்யும்போதே தெரிந்து விடுகிறது இவர்கள் இருவருமே குற்றத்திற்கான அடிப்படை தவறுக்கான தண்டனை அவ்வளவுதான் வேறென்ன சொல்லமுடியும்.

   நீக்கு
 20. சமுதாயத்தைத் தட்டிக் கேட்கும் அருமையான கேள்வி! நன்றி! நண்பரே!

  பதிலளிநீக்கு
 21. தாங்கள் சுறியது விபச்சாரன், திரு. முத்துநிலவன் அவர்கள் கூறியது பரத்தன். இதில் எது சரி????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே நான் கூறிய //விபச்சாரன் //எனது சிந்தனையில் உதித்தது,
   ஐயா திரு. முத்து நிலவன் அவர்கள் கூறிய //பரத்தன்// வள்ளுவனின் குறளில் உள்ளது.

   நீக்கு
 22. சேற்றில் முளைத்த செந்தாமரை இறைவனை பூஜிக்கவும் பயன்படும்.

  பதிலளிநீக்கு
 23. விபச்சாரன் - நெத்தியடியான பகிர்வு...
  இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே இதை வெளியிட்ட பிறகே நானும் நினைத்தேன்.

   நீக்கு
 24. பதில்கள்
  1. துபாய் ராஜா அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து நன்றியோடு வரவேற்கிறேன்.

   நீக்கு
 25. பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள பின்குறிப்பு அருமை. பதிவின் முக்கியத்துவத்தை அந்தக் குறிப்பு மேம்படுத்திவிட்டது. தங்களின் சமூகப்பிரக்ஞை அனைவருக்கும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களது தாமதமான வருகை இந்தப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லையோ... என வருந்தினேன் சந்தோஷம்.

   நீக்கு
 26. கொடிது கொடிது வறுமை கொடிது . உழைக்க வழி காட்டுபவர்களை விட தவறாய் வழி நடத்துபவர்கள் ஏராளம்! உதவி செய்பவர்களை விட உபத்திரவம் செய்பவர்கள் அதிகம். இவர்கள் திருந்தாதவரை, சமூகத்தில் அவலங்களின் எண்ணிக்கை குறையப் போவதில்லை. .... சமூக அவலங்களின் முகங்களை நன்கு போட்டுத் தாக்கியுள்ளீர்கள்! தொடருங்கள்....

  பதிலளிநீக்கு
 27. வள்ளுவர் சொன்னதும்..தாங்கள் சொல்வதும் சமூகத்தில் அவர்களுக்கு சரியாக பெயரிடப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விபச்சாரம் - விபச்சாரி - என்று வார்த்தைகளை உருவாக்கிய மனிதன் விபச்சாரன் என்ற வார்த்தையை ஏன் சொல்லி வைக்கவில்லை 80தே எமது கேள்வி நண்பரே.... ஆகவே நான் அதை கொண்டு வந்தேன் இனியெனும் இந்த வார்த்தை புலங்கட்டும் புவியிலே....

   நீக்கு
 28. சோரம் போவது உடலால்மட்டுமல்ல.மனதாலும் கூடநடக்கிறது. அந்த வழியில் சோரம் போகாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. நண்பர் தன பாலன் சொல்வது போல் நாம் எழுதியதின் பொருள் நாம் பின்னர் அதை வாசிக்கும் போது புரியும். நாத்திகம் ஆத்திகம் இங்கே எங்கே வருகிறது.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கு நன்றி மனதால் சோரம் போவது மிகப்பெரிய விபச்சாரம் அதைப்பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.
   நடிகைகளுக்கு கோயில் கட்டியவர்களை நான் எதிர்த்து எழுதியதால் என்னை தி.க.காரன் அல்ல என்பதை குறிப்பிடும் சூழல் ஏற்பட்டு விட்டது.
   பின்வரும் கருத்துரைகளுக்கு விளக்கம் கொடுக்கும் பொழுது அதில் நாத்திகமும், ஆத்திகமும் பேசப்பட்டு விட்டது ஐயா.

   நீக்கு
 29. வணக்கம் தி க சிந்தனை உள்ள தே ந அவர்களே!
  (தேவக்கோட்டை நண்பா)
  தவறு செய்யும் ஆண்களுக்கு ஆடையில்லாமல் தரப்படும் சவுக்கடி!
  மும்பை பகுதியில் இனி விபச்சாரன் பகுதியை இனி காணலாமா நண்பா!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 30. சிந்திக்க வைத்த பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எழுதிக்கொண்டே...............தான் இருக்கிறேன் நண்பரே.

   நீக்கு
 31. சிறப்பான சிந்தனை நண்பரே. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 32. பெயரில்லா2/26/2015 3:57 பிற்பகல்

  நடிகைக்காக இப்போ வரிந்து கட்டி வராவங்கோ அன்று குஷ்பூ.. விவேக் ரஜினிசார் அல்லாம் தின்மலிரை கழுவி கழுவி ஊற்றிய போது எங்கின இருந்திட்டாங்கோன்னு கேட்க முள்படும் அஃதே நேரித்தில் மத விவாத பொருள்களான சமயத்தில் ஆத்திகவாதிகள் தாமே முண்டியடித்து முகத்தில் குத்திக் கொள்வார்கள் நாத்திகர்களுக்கு ஆங்கே ப்ளேஸ் நஹி என்ற தங்களின் சமயோசித தத்துவ சில்மிஷத்தை ரசித்தேன் என்று சொல்லுங்கால் உத்தரவில்லாமல் என் கருத்தினைப் பின்னிப் பகிர்ந்திட உங்கள் அனுமதி வேண்டி சொல்ல வரும் வாதம் என்னவெனில் மூங்கில் காற்று முரளிசார் அண்ட் திண்டுக்கல் தனபால் சார் போன்ற சமூகப் பதிவர்களை சற்று மற்றமான கருத்தை வைத்திருப்பதை நினைத்துபார்த்து சத்திய வார்த்தைகளை சாந்தப்படுத்த வேண்டிய கட்டாய தருனத்தில் இருப்பதை உனர வேண்டிச் செல்கிறோம்.
  வனக்கம்.
  சிராஜ்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...