ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

பாண்டியூர், பாண்டித்துரை Weds பாண்டியம்மாள்Place: Pollachi Police Station.
 
இன்ஸ்பெக்டர்-
யோவ் ஏட்டு யாருய்யா இவங்கே ? என்ன பிரட்சனை ?
ஏட்டு, -
ஸார், அழகாபுரி நடுத்தெருவுல ரெண்டுபேர் கலாட்டா செய்றதா தகவல் வந்துச்சு போய்ப்பார்த்தா, இவங்கே சண்டை போட்டு கிட்டு இருந்தாங்கே, அள்ளிகிட்டு, வந்துட்டோம்.
இன்ஸ்பெக்டர்-
இங்கே, வாடா உன்பேரென்ன ?
துரைப்பாண்டி, ஸார்
உன் அப்பா, பேரென்ன ?
பாண்டிதுரை, ஸார்
நீ வாடா, உன் பேரென்ன ?
துரைச்சாமி, ஸார்
உன் அப்பா, பேரென்ன ?
சாமித்துரை, ஸார்
? ? ? எல்லா பேருமே உண்மைதானோ..... எதுக்குடா, சண்டை போட்டீங்க ?
ஸார், இவன்தான் என்னை அடிச்சான் ஏய்யா அடிக்கிறேன்னு கேட்குறதுக்குள்ளே ஏட்டய்யா வந்துட்டாருங்க...
இவனை எதுக்குடா, அடிச்சே ?
ஸார், இவன் வாங்கின பணத்தை தரமாட்றான், ஸார் அதத்தான் கேட்டுக்கிட்டு இருந்தேன், அதுக்குள்ளே ஏட்டய்யா வந்துட்டாருங்க,
ஏன்டா, நீ பணம் கொடுக்கணுமா ?
இல்லேஸார், பொய் சொல்றான்.
என்னடா இவன் இப்படிச் சொல்றான் ?
எம்பணம் இல்லே ஸார் என்ப்ரண்டோடது ஸார்.
என்னடா  விளையாடுறியா  யாருடா  உன் ப்ரண்டு ?
கண்ணுச்சாமி ஸார்
யாருடா  அவன் யோவ் ஏட்டு போய்த்தூக்கிட்டு வாய்யா அவனை.
 
சிறிது, நேரத்தில்.....
வணக்கம், ஸார்
யாருடா நீ ?
எம்பேரு கண்ணுச்சாமி, ஸார்
உன் அப்பன் பேரென்ன சாமிக்கண்ணா ?
ஆமா ஸார், உங்களுக்கு தெரியுமா ?
காலையிலருந்து, ஒரே மாதிரிதானடா பேர்சொல்றீங்க ? ஏதாவது பொய் சொன்னீங்க தோலை உறிச்சுப்புடுவேன்.
அப்பா, பேரெல்லாம் மாத்தி சொல்லமுடியுமா ஸார் ?
சரி,துரைப்பாண்டி உனக்கு பணம் தரனுமா ?
ஆமா ஸார் ஆனா எம்பணம் இல்லேஸார்.
யேன்டா டேய் என்ன  எல்லாரும் சேர்ந்துகிட்டு விளையாடுறியலா ?
ஸார், பாண்டித்துரைதான் எப்படியாவது, பணத்தை வாங்கிகொடுன்னு கேட்டாரு அவருக்காகத்தான், துரைச்சாமிட்ட சொல்லி, கேட்கசொன்னேன் ஸார்.
யாருடா  அவன் பாண்டித்துரை ?
பஸ் ஸ்டாண்ட் எதிர்த்தாப்ல பழமுதிர்ச்சோலைனு பழக்கடை வச்சுயிருக்காரே, அவருதாங்க,
ஸார், அவரு எங்கஅப்பா ஸார்.
என்னது  உன் அப்பனா ? ஏட்டு போய்த்தூக்கிட்டு வாய்யா பாண்டித்துரைய,
 
சிறிது நேரத்தில்.....
ஐயா வணக்கமுங்க,
வாய்யா, நீதான் பாண்டித்துரையா ? இவண்யாரு, உன்மகனா ?  
ஆமா, ஸார்
இவண், உனக்கு பணம் தரணுமா ?  
எம்பணம், இல்லேஸார் பாண்டியம்மாவுட்டு, அவதான் எப்படியாவது பணத்தை வாங்கிகொடு, இல்லைன்னா உனக்கு சோறு கிடையாதுன்னுட்டா, சாமிக்கண்ணு எனக்கு தெரிஞ்சவன் அதனாலதான் ஸார், அவன்மகன், கண்ணுச்சாமி கிட்ட சொன்னேன்.
யாருய்யா, அது பாண்டிம்மா ?
எம்பொஞ்சாதி, ஸார்.
பொண்டாட்டியா  ய்யா, குடும்பத்தோட சேர்ந்துகிட்டு என்ன நாடகமா ? ஆடுறிய போய்த்தூக்கிட்டு வாங்கய்யா பாண்டியம்மாளை...
 
சிறிது, நேரத்தில்.....
கும்புடுறேன், சாமி.
நீதான், பாண்டியம்மாளா ?
ஆமாங்கய்யா.
இதுக்கு, முன்னாலே நான் பார்த்ததில்லையே ஆமா, சொந்தஊரு எது ?
பாண்டியூருங்க.
போதும், யோவ் 304 இனி, விசாரணையே கிடையாது இவங்கே, ரெண்டுரையும் விரட்டிட்டு, இந்தக்குடும்பத்தை மட்டும் தூக்கி லாக்கப்ல வச்சு கும்முங்கய்யா, நான் நாவன்னா மெடிக்கல்ஷாப் போயி அனாஸின், வாங்கிட்டு வர்றேன்.
 
இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் ஆத்திரமாய் சொல்லிவிட்டு, ஸ்டேஷனை விட்டு வெளியேறவும், ஏட்டு ராஜபாண்டி, உள்பட 304 துரைச்சிங்கம், 401 சிங்கத்துரை, Ladies Constable பாண்டிமதி & கோவினர் கச்சேரியை துவங்கினார்கள். 
நண்பர்களே.... நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள்தானே.....

74 கருத்துகள்:

 1. ஹா... ஹா... பாண்டி ஆடுவதில் கில்லாடியா ஜி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சின்ன வயசுல பொன்னம்மாள் கூட விளையாண்ட ஞாபகம் இருக்கு ஜி.

   நீக்கு
 2. எனக்கு தல சுத்தல...நண்பரே...... எல்லாம் கரிக்கிட்டுதான். உடனேவுடனே இட்டியாந்து விசாரிப்பாயிங்களா....ன்னுதான் ஒரே சந்தேகமா...பூச்சு.... என் அனுபவம் அப்படி.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொந்த அனுபவத்தை இப்படியா போட்டு உடைக்கிறது.

   நீக்கு
 3. இதைச்சொன்னது
  1 சிங்கதுரை
  2 துரைசிங்கம்
  3 புலிப்பாண்டி
  இதுல 1 த்தராத்தான் இருப்பாங்க . +1

  பதிலளிநீக்கு
 4. ஆகா,
  இன்ஸ்பெக்டருக்கு ஒரு அணாஸின் மாத்திரை பத்தாது
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெண்டு நாளைக்கு லீவு போட்டால் சரியாயிடுமோ....

   நீக்கு
 5. அட்டகாசமானதொரு சரவெடிப்பதிவு அண்ணே !
  தம+

  பதிலளிநீக்கு
 6. பிப்ரவரி அதிசயம்-ஒவ்வொரு ஆறு வருடத்துக்கும் இது நிகழும்னு விவரம் தெரிந்தவர்கள் சொன்னார்களே??!!

  பதிலளிநீக்கு
 7. இன்னும் நிறைய 'பாண்டி'ங்க பாக்கி இருக்காங்களே ...சின்னபாண்டி ,பெரியபாண்டி ,பூப்பாண்டி..அவங்களையும் தூக்கிற வேண்டியதுதானே :)
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்து தெருவுல சண்டை போடாமலா ? போயிருவாங்கே....

   நீக்கு
 8. அனாஸின் வாங்கப் போன இன்ஸ்பெக்டர் - திரும்பி வருவாருங்கிறீங்க!?...


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பிக்கைதான் வாழ்க்கை வருவாருனு நம்புவோம் ஜி.

   நீக்கு
 9. ஹஹஹா........அவருக்கு,,,அனாஸின்....சரி

  சிரிச்சு சிரிச்சு....வயிறு புண்ணா போச்சு....நாவன்னா மெடிக்கல்ஸ் இங்கே இல்லையே...என்ன செய்றது....?

  தம 9 நவரசம்........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லைனா, காவன்னா மெடிக்கல்ஸ் போகலாமே டாக்டர் ராமச்சந்திரன் கிளினிக் பக்கத்திலே...

   நீக்கு
 10. உன் பேரு என்ன?
  "மாரி"
  உங்க அப்பா பேரு என்ன"
  " மாரியப்பன்"
  உன்பேரு என்ன?
  "பழனி"
  உங்க அப்பா பேரு என்ன ?
  பழனியப்பன் சார்

  மாரியோட அப்பன் மாரியப்பன், பழனியோட அப்பன் பழனியப்பன்
  ........என்னய்யா இது யோவ் இவங்களையும் கொஞ்சம் விசாரிக்கனும்.
  ஹ ஹா ஹா சூப்பர்ஜி.
  தம+1

  பதிலளிநீக்கு
 11. சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணீர் அருவியா கொட்டுது. சூப்ப்ப்பர்.

  பதிலளிநீக்கு
 12. ஹஹஹஹஹ் சூப்பர் ஜி! நல்ல காலம் இன்ஸ்பெக்டர் ஊளம்பாறை, கீழ்பாக்கம் மாதிரி ஒரு ஆஸ்பத்திரிக்கு போற நிலைமை ஏற்படாம போச்சேனு சந்தொஷம்ப்படணும்.....

  செம சிர்ப்பு..சிரிச்சு சிரிச்சு.......இப்ப னாங்க மெடிக்கல் ஷாப்புக்கு போய் புண்ணாத்தர மாத்திரை வாங்கலாம்னு பாத்தா மெடிக்கல் ஷாப்பு இந்தனேரத்துல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போண் செய்து கேட்டா டோர் டெலிவரியில கிடைக்குமே...

   நீக்கு
 13. பொள்ளாச்சி போயி புளியம்பட்டியா?

  பொள்ளாச்சியில போயி அழகாபுரி நடுத்தெருவா?

  ம்.. நாவன்னா மெடிக்கல் வேற... பக்கத்துலதானே காவன்னா மெடிக்கலும் இருக்கு...

  நல்லா பாண்டி ஆடியிருக்கீங்க...
  அருமை..

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா2/09/2015 12:00 முற்பகல்

  நல்ல நகைச்சுவை சகோதரா.
  என்ன றூம் போட்டு யோசிப்பீங்களா?
  அனாசின் வாங்கப் போக கடை கட்டினாங்க ஜோரு தான்!
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கிறதே... ரூம்தானே இதுக்கு மேலே ரூம் எதற்க்கு ? அதற்க்கும் வாடகை கொடுக்கணுமா ?

   நீக்கு
 15. இன்ஸ்பெக்டருக்கு அனாசின் சரி, எங்களுக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்ஸ்பெக்டருக்கு பஞ்சாயத்து செஞ்சதுல தலைவலி அதனாலே அனாஸின், பதிவைப்படிச்ச உங்களுக்கு எதற்க்கு ? ஒருவேளை அப்படியாயிருந்தால் ‘’சாரி’’டோன் தர்றேன்..

   நீக்கு
 16. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

   நீக்கு
 17. விச்சு வோட படம் பார்த்த திருப்தி! ஆஹா.... இப்படிப்பட்ட மனுஷங்க நாட்டிலே இருந்து கொண்டுதான் இருக்காங்க...பாண்டி...ஆட்டம் தொடரட்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே... தொடருங்கள் இனி நகைச்சுவைகள் நிறைய இடம் பெறும்.

   நீக்கு
 18. கில்லர்ஜி,

  இன்னிக்கிப் பதிவு எழுத ரொம்ப நேரம் மூளையைக் கசக்கினதில் பயங்கரத் தலைவலி வந்திடிச்சி. அனாசின் சாப்பிட்டும் சரியாகல. உங்க இந்தப் பதிவைப் படிச்சி மனம் விட்டுச் சிரிச்சதில் தலைவலி போன இடம் தெரியல.

  நகைச்சுவை ரொம்ப நல்லா வருது. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே உங்க பதிவு எழுதும்போதுதானே தலைவலி நீங்க சொல்றதைப்பார்த்தால் எனது பதிவைப்படிச்சதால் வந்தது என்று சொல்வதுபோல் இருக்கிறதே...

   நீக்கு

 19. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 20. நகைச்சுவை கேட்டிருக்கேன்.. அந்தாதி படிச்சிருக்கேன்.. இது என்னங்கய்யா நகைச்சுவை அந்தாதியால்ல இருக்கு? சரி அப்பறம் அந்த ஏட்டய்யா போன மெடிக்கல்ல இவுருக்குத் தெரிஞ்ச ஓனர் இல்ல அவரு மகன்தான் இருந்தான் அவன் பேரு பாண்டிமுத்து அவனோட அப்பாப் பேரு முத்துப்பாண்டி
  இத விட்டுட்டீகளெ? அருமைய்யா.. ரொம்ப ரசிச்கேன்.. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த ரவுண்ட்ல வூடு கட்டி அடிப்போம் ரசித்தமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 21. ஒரே ஒரு சின்ன சந்தேகம் கில்லர்ஜி.
  எல்லாம் சரி.. பாண்டி பாண்டி னு வந்தா அது மதுரை ஏரியாப் பேருல்ல?
  நீங்க பொள்ளாச்சி னு போட்டிருக்கிங்க.. ஒருவேளை சொந்த ஊர்க் கதைய எழுதிப் பொல்லாப்புக்கு ஆளான பெருமாள்முருகனை நினைச்சி ஏரியாவ மாத்திட்டீங்களோ னு ஒரு சின்ன சந்தேகம். கில்லர்ஜி கில்லாடியில்ல..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க நினைச்சதுதான் சரி ஏரியா தேவகோட்டைதான் ஊரை மட்டும் பொல்லாப்பு வேண்டாமென்று பொள்ளாச்சி ஆக்கி விட்டேன்.

   நீக்கு
 22. ரசித்தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இம்பூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு தூரமா ?

   நீக்கு
 23. அடப்போங்க கில்லர்ஜி. இப்படியா வயித்துவலியும் (பெயர்க்குழப்பத்) தலைவலியும் தர்றது? இப்ப அனாஸினும் வயித்துவலி மாத்திரையும் வாங்கக் கிளம்பறேன்.:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயிற்றுவலி வந்தது உண்மையானால் ?ரசித்ததாக அர்த்தம் பிறகு தலைவலி வருவது சாத்தியமில்லையே,,,, மேடம்.

   நீக்கு
  2. பெயர் குழப்பத்தால் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜுக்கு மட்டும்தான் தலைவலி வருமோ? எனக்கும்தான்:-)))))

   நீக்கு
  3. அப்படீனாக்கா. ''சாரி ''டோன் தர்றேன் ஹி ஹி ஹி

   நீக்கு
 24. பிப்ரவரி அதிசியம் என்னான்னு தெரியலையே... தலைவரே......

  பதிலளிநீக்கு
 25. எல்லா கிழமையும் சரியாக 4 தினங்கள் வருவதே அதிசயம்.
  குறிப்பு - இப்பொழுது இது 'புரூடா' என்று சொல்லக்கேள்வி.

  பதிலளிநீக்கு
 26. பாண்டி ங்ற பேர வச்சி, பாண்டி விளாடிட்டிய. ....

  பதிலளிநீக்கு
 27. பிப்ரவரி அதிசியமும் புருடாவா....????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரூடா என்று ஒரு பதிவு படிச்சேன். நண்பா...

   நீக்கு
 28. நண்பா!
  பி- 12 போலீஸ் ஸ்டேஷ்ன், பொள்ளாச்சி
  நாடக அரங்கேற்றத்திற்கு கதை வசனம் யார்?
  விசுவா?

  ஹாஸ்யம் நிறைந்த காரைக்கால் அல்வா!
  திருநெல்வேலியைவிட சுவை அதிகம் அண்ணாச்சி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
  2. நண்பா!
   மீசைக்காரர் எழுத்தைக் காட்டி அடித்து இழுத்து வரப் பட்டேன்.

   நீக்கு
 29. உங்க ரகளைக்கு அளவே இல்லையா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் என்ன தோழா செய்வேன் ? போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை விவரித்தேன்

   நீக்கு
 30. எப்படி இப்படி Room போட்டு யோசிப்ங்களோ? Roommate அடிக்கமாட்டாங்களா, ரொம்ப பாவம் போங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலே என் குரல் என்ன சொல்கிறது 80தை படிக்கவும்.

   நீக்கு
  2. என் குரல் படித்து நாளாகிவிட்டது. அது உங்களுக்கா? தெரியல.

   நீக்கு
  3. பொதுவாக நான் ரூமில் எழுதி வைத்தது.

   நீக்கு
 31. வணக்கம் சகோதரரே.!

  நல்ல நகைச்சுவை பதிவு.! திரும்பி வந்ததிலிருந்து தங்கள் பதிவுகளையும், அதற்கு வந்த கருத்துரைகளையும், படித்து ரசித்து சிரித்தே, என் பயணக் களைப்பெல்லாம் நீங்கி விட்டது.! எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? அதற்கே முதலில் என் வாழ்த்துக்கள். ! இனியும் தொடர வாழ்த்துக்கள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊரிலிருந்து வந்த பிறகு விடுபட்ட பதிவுகளை படித்து கருத்துரை இடுவது சந்தோஷம் சகோதரி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...