தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

சந்தி சிரிச்சுடும் சாந்தி

கடந்த தவளை பதிவின் தொடர்புள்ள குறும்படத்திற்க்காக நான் சொன்ன நகைச்சுவை கதை.

ஹலோ அம்மா நல்லா இருக்கீங்களா ?
நல்லா இருக்கேன்ப்பா... தமிழ் நீ நல்லாயிருக்கியா ?

இருக்கேன்மா அப்பா நல்லா இருக்காங்களா ?
ஆங் அவருக்கென்ன... கெளுறு மாதிரி மீசையை முறுக்கி கிட்டு நல்லாத்தான் இருக்காரு...

சரிம்மா, பணம் அனுப்பிட்டேன் இன்னும் ரெண்டு நாள்ல வந்துடும் அந்த இடத்தை கிரையம் பண்ணிடுங்க, உங்க ரெண்டுபேரு பேருலயும் பத்திரம் எழுதிடுங்கம்மா...
சரிப்பா அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன், நீ உடம்பை நல்லபடியா பார்த்துக்க, நேரத்துக்கு சாப்பிடு துபாய்ல இப்ப குளிராமே... ராத்திரி நேரத்துல வெளியில போகாதப்பா, சளிப்பிடிச்சுக்கிரும்.

சரிம்மா நான் நாளைக்கு போன் செய்யிறேன்.
சரிப்பா.

(அந்த நேரம் தள்ளாட்டத்துடன் உள்ளே நுழைகிறார் வில்லங்கம் விருமாண்டி)
என்ன சாந்தி யாருக்கிட்டேருந்து போனு... ?
யேன் மயங்கிட்டேருந்துதான்....

நல்லாயிருக்கானாமா என்னவாம் ?
பணம் இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுமாம், இடத்தை என் பேருல பத்திரம் போடச்சொன்னான்.

உன் பேருலயா ?
ஏன்... வாயைப் பொளக்குறீங்க ? மூடுங்க பாம்பு நுழைஞ்சிடப்போகுது.

இந்த எகத்தாளத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லே, உன் பேருல பத்திரம் போடச் சொன்னானா அதெப்படி எம்மயன் எம் பேருலயிலே போடச் சொல்லியிருப்பான்.
உங்களுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன், நான் பெத்தபுள்ள தலையெடுத்து இப்பத்தான் முதன் முதலா அம்மா பேருல இடம் வாங்குறான் அது பொறுக்கலையா உங்களுக்கு ?

யேண்டி, சந்தி சிரிச்சவளே.... வாக்கப்பட்டு என்னத்தையும் காணாமலயா எம்புள்ளை தமிழ் வாணனை பெத்தே ?
இந்த மாதிரி கோக்கு மாக்கு பேசாம போயி அந்த இடத்துக்காரவுங்கள்ட்ட சொல்லிட்டு வாங்க வர்ற புதன்கிழமை நல்லநாளா இருக்கு அன்னைக்கே பத்திரம் போடலாம்னு.

இருடீ முதல்ல யாரு பேருல பத்திரம்னு முடிவு பண்ணிக்கிறலாம், எம் மயன் சம்பாரிச்சதுல எனக்கு உரிமை இல்லையா ?
யேன் நான்தானே பத்து மாசம் சுமந்து பெத்தேன் எம் பேருல பத்திரம் போட்டா, என்ன ?

பத்து மாசம் சுமந்தியா ?
பின்னே நீங்களா சுமந்தீங்க ?

பத்து மாசம்தானடி நீ சுமந்தே அதுக்கு முன்னாலே நாந்தானடி சுமந்தேன்.
நீங்க சுமந்தியளா என்ன ... புத்தி கூறு மழுங்கிப்போச்சா ?

இல்லடி புத்திக்கூர்மையோட சொல்றேன்.
இது, கூர்மை இல்லே கொடுமை.

பத்து மாசம் சுமந்ததுக்கே.. இப்படி அலட்டிக்கிறியே யேம்மயன் பிறக்கும்போது... எனக்கு 24 வயசு அப்படினா... 23 வருஷமா சுமந்த எனக்கு என்னடி மரியாதை ?
அய்யோ. அய்யோ இப்படி உலகத்துல இல்லாததெல்லாம் பேசிக்கிட்டு திரியிறதனாலதான் ஊருல உள்ளவன் பூராம் பேருக்கு முன்னாலே வில்லங்கம்னு சொல்றாங்கே...

சொல்றவன் சொல்லட்டும் நான் நியாயத்தத்தைதான்டி பேசுவேன்.
புருஷன் சுமந்ததா... யாராவது இதுவரை சொல்லியிருக்காங்களா ?

இதுவரை இல்லாட்டினா இனிமேல் சரித்திரம் சொல்லட்டும்டி.
சரித்திரம் சொல்லாது தரித்திரம் புடிச்சதுனுதான் சொல்லுவாங்கே...

அடியே... சாந்தி கேட்டுக்கோ இனிமே பத்து மாசம், பதினொரு மாசம்னு சொன்னே சந்தி சிரிச்சுப்போகும் ஞாபகம் வச்சுக்க ?
இப்ப  மட்டும் என்ன... வாழுதாம் சரி இல்லைனா, நம்ம ரெண்டு பேரு பேருலயும் பத்திரம் போடவானு எம்புள்ளைக்கிட்டே கேட்டு வைக்கிறேன் நீங்க போயி அவுங்கள்ட்ட சொல்லிட்டு வாங்க மொதத்தடவையா எடம் வாங்கிறப்போ நீங்களே, வில்லங்கம் பண்ணாம.....

நீ என்ன கேக்குறது போனைக் கொடுடீ நான் கேட்கிறேன்.
வேண்டாம் புள்ள நைட் டூட்டி பார்க்கிறவன் களைச்சுப்போயி இப்பத்தான் வந்து தூங்கியிருப்பான் சாயங்காலம் பக்குவமா, நானே கேட்டுக்கிறேன் ஒங்களுக்குப் பேசத்தெரியாது.

அப்படி வாடி வழிக்கு  நான் போயிட்டு வாறேன் மத்தியானத்துக்கு கம்மாமீனு அயிரைக்குழம்பு வெய்யி.
ஹும், இது ஒண்ணுதான் குறைச்சல் நல்லாத்திண்ணுட்டு நம்மளைத்தானா எகிறுது இனிமேல் உப்பைக் குறைச்சாத்தான் சரியா வரும்.

என்னடி மொனங்கிறே..... ?
ஒண்ணுமில்லே, நீங்க போயிட்டு வாங்க அயிரை மீனு வாங்குறேன்.
ம்ம் அது.

(வில்லங்கம் விருமாண்டி வீட்டை விட்டு விரைந்தார் விற்பவன் வீட்டுக்கு)  

இனிய நெஞ்சங்களே.... இந்தப்பதிவு நான் எழுதக்காரணம் ஒரு முறை நம் இனிய இந்தியாவுக்கு நான் வந்திருந்த பொழுது எனது மகனின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது பெயர் பார்த்தேன்...

Appa

இப்படி வந்தது உடன் மகனிடம் கொடுத்தேன் அவன் பேசும் பொழுது தெரிந்து கொண்டேன் எனது அண்ணனிடம் என்று... பரவாயில்லையே வளர்ப்பவரை அப்பா என்று சொல்கிறானே.... சரி பெரியம்மா நம்பரை எப்படி வைத்திருக்கிறான் ? அவனுக்கு தெரியாமல் பரிசோதனை செய்தேன்...

Amma

இப்படி இருந்தது பரவாயில்லையே வளர்ப்பவர்களை அம்மா - அப்பா நினைப்பது சரிதானே தவறில்லையே நாம்தான் காலம் முழுவதும் பிரிந்து விட்டோமே... சரி தி கிரேட் நம்ம நம்பரை எப்படி வைத்திருக்கிறான் ? எனது U.A.E நம்பரிலிருந்து கால் செய்து பார்த்தேன் கீழே கீழே பாருங்களேன்... இப்படி வந்தது...

Killergee Abu Dhabi

அடப்பாவி 23 வருஷமாக சுமந்தவனுக்கு (என் மகன் பிறக்கும் பொழுது எனக்கு 24 வயது கணக்கு சரிதானே, ஹி..ஹி..ஹி) இதுதான் மரியாதையா ? இதைப்பார்த்து நான் சிரிப்பதா. அழுவதா... (அவ்வ்வ்வ்வ்)  

பதிவுக்காக சாராயக்கடை நிகழ்வுகளை நீக்கி விட்டேன் அவை குறும்படத்திற்க்கு சிறப்பாக இருக்கும் என்பது எமது கணிப்பு. நண்பர்களே மலையாள நண்பர் சஸ்பென்ஸ் கதை கேட்டதால் மூன்று தினங்களில் மீண்டும் சொன்னேன் அதற்க்கும் இதே மாதிரி தான் பிறகு முடிவெடுத்தேன் இனி சொல்லக்கூடாது இரண்டு  கதைகளையும் குறும்படம் எடுக்கும் திட்டம் உள்ளது விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

காணொளி
இந்த வகையான தமிழ்வாணன்கள் துபாயில் இப்படித்தான் கயிற்றின்மீது வாழ்ந்து சம்பாரித்து ஊருக்கு அனுப்புகிறார்கள் இது ஊரில் வாழும் பல டாஸ்மார்க் தந்தையர்களுக்கு தெரிவதில்லை நேற்று முன்தினம் யதார்த்தமாக எனது செல்போனில் நான் எடுத்த காட்சி..

52 கருத்துகள்:

  1. வயித்துப் பொழப்புக்காக மனுஷன் அங்கே கயித்திலாடுறான் பாரு!

    பணம் பண்ணும் மெஷினாக நினைக்கும், கஷ்டம் தெரியாத உறவுகள் உள்ளூரில். வேதனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பலரும் அயல் நாடுகளிலிருந்து கேன்சல் செய்து வருவதற்க்கு உறவுகளும் ஒரு காரணமே...

      நீக்கு
  2. சிரித்துக் கொண்டே மனதில் அழுவது... புரிகிறது ஜி...

    பதிலளிநீக்கு
  3. இந்த பதிவை தமிழ்வாணன் படித்தால் ,செல்லில் உங்கள் பெயரை 'killergee 23 years'என்று மாற்றிக் கொள்வார் என்று நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் ? ஜி உங்க யோசனைக்கு என் மகனே பரவாயில்லை போலயே இந்தப்பதிவைப்படிச்சாலும் பரவாயில்லை உங்களது கருத்துரையை படிக்காமல் இருக்கணும்.

      நீக்கு
  4. அன்புள்ள ஜி,

    இப்படி ஒரு பொறுப்பான வேலைய கொடுத்த நா என்ன செய்யவா மட்டேங்கிறேன்... அப்பவே நெனச்சேன்... என்னடா... அண்டாவ வச்சு தண்ணி அடிச்சிட்டு வரச்சொல்றாளேன்னு... !அண்டாவ வச்சேன் .... தண்ணிய அடிச்சேன்... !சந்தி சிரிக்கட்டுமே... ! நாம சிரிக்கிறப்ப... சந்தி சிரிக்கப்படாதா? சாரி சாந்தி சிரிக்கப்படாத...? நல்லா சிரிக்கட்டும்...! ஆமாமா.... 2 .............3 வருஷம் சுமந்தது கணக்கு சரிதான்... 2.........4 ல்ல....2.....3... கழிச்சா... எல்லாம் ஒன்னுதான்...!

    புலமைபித்தனின் அருமையான வரிகள்!
    -நன்றி.
    த.ம. 6.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மணவையாரே நான் பாடும் பாடலை அழகாக கோர்த்து விட்டீர்களே... ஆமா நான் கணக்குல புலிதானே...

      நீக்கு
  5. உண்மைதான் நண்பரே! வெளிநாட்டில் மகன் கள் எல்லாம் தத்தளிக்கும் போது. தத்தளித்து ஊரில் இருக்கும் தன் குடும்பத்தைக் கவனிக்கும் ப்போது அதன் அருமை தெரியாமல் நம் உறவுகள் இப்படி நடந்து கொள்வது மிகவும் பரிதாபமான நிலைமை.
    பல குடும்பங்களில் இப்படித்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே பல குடும்பங்களில் இந்த வேதனைக் காட்சிகளை நான் பார்த்து இருக்கிறேன் அதன் விளைவே இந்தப்பதிவு.

      நீக்கு
  6. கண்டிப்பா சரித்திரம் சொல்லாட்டி..? கண்டிப்பா கொல்லும்மான்னு தோணுது..நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே சொல்லாட்டி சொல்லி கொல்லு’’வோம்.

      நீக்கு
  7. நீங்கள் இந்த பதிவை நகைச்சுவையாக கொடுத்தாலும் மனதில் உள்ள வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது சகோ. இந்த பதிவை தமிழ்வாணன் படிக்கும் போது கண்டிப்பாக மாறி விடுவார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களின் கருத்துரை 6தல் அளிக்கிறது நன்றி.

      நீக்கு
  8. ஆகா.. அற்புதம்!..

    வயத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில்
    ஆடுறான் பாரு - ஆடி முடிச்சி
    இறங்கி வந்தா அப்புறந்தாண்டா சோறு..

    (இல்லேன்னா - பாலு தான்!..)

    இதை அடுத்தவன் சொன்னா கசக்கும் - கொஞ்சம்
    அனுபவம் இருந்தா இனிக்கும்!..

    பலமான கரகோஷம்!.. ( நான் தான்!..)

    அபுதாபிக்குக் கேட்கும் என நினைக்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டுக்கொண்டே இருக்கிறது ஜி.பதிவைப்பற்றி சொல்லவேயில்லையே...

      நீக்கு
    2. அன்பின் ஜி..

      படிப்பவர்கள் ஒருகணமேனும் சிந்திப்பர்..
      வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றி..

      அருமையான படைப்பு..

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  9. உ(ள்)ங்களுக்குள் இருக்கும் படைப்பாளி
    ரொம்ப நல்லவர் ஆனால்
    ரொம்ப ரொம்ப
    குறும்புக்காரர். அவரை பத்திரமா பாத்துக்கங்க
    அப்புறம் அன்பு தமிழ்(வானானை) விசாரிச்சாதா சொல்லுங்க.
    தம (மொய்) எல்லாம் முதல் போனியே நம்மதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பு மனதுக்கு நன்றி நண்பரே... காலையிலேயே பார்த்து விட்டேன் தங்களின் தமிழ் ம(ன)ணதை.

      நீக்கு
  10. சிரிக்க மட்டுமல்ல .... சிந்திக்கவும்...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் மட்டும் நன்றி கவிஞரே...

      நீக்கு
  11. அழகான உரையாடல்
    அருமையான எண்ணங்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. சிரிக்கவும்...
    சிந்திக்கவும்...
    வைத்த
    பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  13. நான் ஏறத்தாழ ஒரு மாதம் என் மகனுடன் துபாயிலிருந்தேன். எனக்கு என்னவோ அங்கு மேல் தட்டில் இருக்கும் மனிதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து உழைப்பவர்கள் அங்கு பாடுபடும் தொழிலாளிகளைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.கொட்டகைகளில் தங்க வைத்து வண்டிகளில் வேலைக்கு அழைத்துச் சென்று மாலை மீண்டும் கொட்டகையே வாசம் என இருக்கும் பலரைப் பார்த்தேன். ஆனால் இங்கிருப்பவர்களுக்கு அவர்கள் பணம் காய்ச்சி மரங்கள்..அம்மாதிரியான மனிதர்களைப்பற்றி எழுதுங்களேன் உண்மையான விவரங்கள் கிடைத்தால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா சரியாக சொன்னீர்கள் அவர்களின் கஷ்டங்களைப்பற்றி நான் தெரியாமல் என்ன ? குறைவான சம்பளத்திற்க்கு அவர்கள் படும் கஷ்டத்தைத்தைப்பற்றி கண்டிப்பாக எழுதுகிறேன் நான் அன்றாடம் பார்ப்பதபதானே... ஊரில் உள்ளவர்களுக்கு இதைப்ப்ற்றி தெரியாது. உண்மையை எழுதினால் கண்ணீர் வரும் படிப்போர்க்கு.

      நீக்கு
  14. வலிமை உள்ளவர் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி!
    சிலர் வாழ உழைப்பவர் சொல்லுவது எல்லாம் சட்டம் ஆகனும் தம்பி!
    நம்பிக்கு பிடித்த வரிகள்!
    படம் நல்ல :நேரம்
    பதிவு : killarjee in நல்ல பதிவு
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்பாளிகள் அனைவருக்குமே பிடிக்கும் நண்பரே...

      நீக்கு
  15. வயிற்றுக்காக அந்தரத்தில் தொங்கும் மக்கள்...... எத்தனை கடினம் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  16. சிரிக்க வைத்த பதிவு, அதேநேரம் உங்க மனத்தின் தாக்கமும் தெரிகிறது. இதை அவருக்கு வெளிப்படுத்தியிருக்கிற மா3 தெரிகிறது கண்டிப்பா புரிந்துகொள்வார்.
    Don't worry Be happy.
    எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து அனுப்புகிறார்கள் என்பதை யாருமே உணர தலைப்பட்டதே இல்லை.அனுப்பும் பணத்தை தேவையில்லாத செலவுகளாக செய்கிறார்கள் ஊரில். கண்கூடாக நானே பார்த்திருக்கேன். காணொளி பார்க்க கஷ்டமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரை 6தலை தருகிறது உண்மைதான் இதைப்பார்த்து 2 பேர் மாறினாலும் சந்தோஷமே.

      நீக்கு
  17. டாஸ்மாக் தந்தையர்களுக்கு மகன் தேவையில்லை
    மகன் அனுப்பும் பணம் மட்டுமே போதுமானது
    தம +1

    பதிலளிநீக்கு
  18. என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கில்லர்ஜி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் உரித்தாகட்டும்.

      நீக்கு
  19. எவளோ கஷ்டப்படறாங்க???
    இது தெரியாம, உறவினர்கள் அவனுக்கென்ன வெளிநாட்ல ஹாயா இருக்கான்னு சொல்வாங்க..
    சிந்திக்க வைத்த பதிவு...நன்றி...

    வாழ்க வளமுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதா அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், தளத்தில் இணைந்து கொண்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  20. ஏன் நல்லா தானே போய்கிட்டு இருக்கு,,,,,,,,,,,
    மனம் வலித்தாலும்,,,
    உண்மைகள் இவை,
    உறவுகள்
    எல்லாம் மாறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே.!

    ஒருவன் உழைப்பின் நிழலில்தான் ஒரு குடும்பம். ஆனால், உழைப்பின் அருமை புரிந்து அவனுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மாறாக, இதுதான் உன் தலைவிதி என்று பாராமுகமாக இருந்தால் உழைப்பாளிக்கு தினமும் வேதனைதான். காணொளி மனதை கனக்கச் செய்தது.

    கடவுளருளால் தங்களின் மன வேதனைக்கும் விடிவு உண்டு. அவனை மிஞ்சிய சக்தியில்லை. அனைத்தும் அவன்செயலே! இறைவனை நம்புவோம்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் அருமையான கரு்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றியோடு.

      நீக்கு
  22. கில்லர்ஜீ !!


    உங்க வலைப்பக்கத்தில் காபி செய்ய முடியாத மாதிரி பண்ணி வச்சிருக்கீங்க. பின்னூட்டம் போட quote பண்ணக் கூட கஷ்டம். ஆனாலும் ஹி ..........ஹி ..........ஹி .......... காபி செய்யும் வழியை கண்டு புடுச்சுட்டேன். வேணுமின்னா முழு பதிவையும்காபி முடியும்!! ஹா..........ஹா..........ஹா..........!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எப்படி நண்பரே புதுசா இருக்கு... அய்யய்யோ....

      நீக்கு
  23. உங்க பையன் வயது 23 -ஆ??!! அவன் வயதை வைத்து தானே நீங்கள் அவனைச் சுமந்த கணக்கு போடணும், அவன் பொறந்தப்போ உங்க வயசை எதுக்கு சொல்றீங்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நண்பரே எப்படி? புரிந்து கொண்டீர்கள் தங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ?

      நீக்கு
  24. நீங்க வேற ஜீ வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு நான் தான் ஒட்டும் போட்டு பின்னூட்டமும் இட்டேனே. ஓ வரலையா அப்ப நான் நினைச்சது சரி தான்.அது வேற ஒண்னும் இல்லை ஒரு நீண்ட பின்னோட்டம் இட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தேன் காணலை அது தான் வெளியிட்டேனா அழிந்து விட்டதா என்று புரியலை செம கடுப்பாயிற்றேனா அப்புறம் போய் விட்டேன் sorry ஜீ

    இது ரொம்பக் காலம் மனதை உறுத்திய விடயம் ஜீ இது பற்றித் தான் நானும் நிறைய எழுதியிருந்தேன் அழிந்துவிட்டது. வெளி நாட்டில் படும் கஷ்டம் புரியாமல் ஊரில் மற்றவர்கள் போடும் ஆட்டம் மனதை வலிக்கச் செய்தது அது பற்றி தாங்கள் எழுதியதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஜீ அவசியமான பதிவு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிள் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ.

      நீக்கு