வெள்ளி, ஏப்ரல் 03, 2015

மதுரை, மண்டு மருதமுத்து


Fast Line Airways Flight MH 721 Dubai நோக்கி பறந்து கொண்டு இருந்தது, மருதமுத்து Duty Free Shop பில்' வாங்கிய ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கும்போது, பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்த பெண்.
ஏய்... மிஸ்டர் எந்திருச்சு அங்கிட்டு போங்க. 

எனவிரட்டி விட்டாள், சரி Toilet போய் புகைப்போம் எனபோனான், வரிசையில் எட்டு பேர் சரியென சிகரெட்டை எடுத்தான், Air Hostess வந்து 
Please not Allowed Sir. 

என்றாள், நின்று கொண்டே இருந்தான் பக்கத்தில் ஒருகதவு இருந்தது Store Room எனநினைத்து அழுத்தமாக திருகினான், கதவு திறக்க வெளியே விழுந்து கொண்டிருந்தா.............ன்,,,,,

(காற்று உள்ளே புகுந்ததால் விமானம் தடுமாறியது பிறகு என்ன ஆயிற்றோ ? யார் கண்டா)

(திருவிளையாடல் சினிமாவில் பார்த்தது போலவே... இருந்தது செட்டிங் இருபுறமும் வரிசையாக தேவதூதர்கள் Table லில், உட்கார்ந்து இருந்தார்கள், முன்புறம் Toshiba Computer மருதமுத்து நடுவில் மிரட்சியோடு குற்றவாளி போல நின்று கொண்டிருந்தான்)

நக்கீரரைப் போல ஒருவர், (டைரக்டர் A.P நாகராஜன் மாதிரி இருந்தார்) மருதமுத்து கையில் கொடுத்து கேட்டார்,

இந்த ஓலையில் என்ன எழுதி இருக்கிறது ?
விகடகவி அப்படினு எழுதி இருக்கிறதய்யா.

அந்த வார்த்தையை வலமிருந்து இடமாக 1008 முறைகூறு, சரியாக கூறினால் உனக்கு சொர்க்கம் நிச்சயம்.  
ஐயா, நான் தமிழ்நாட்டான் மதுரைத்தமிழ் படிச்சவன், இடமிருந்து வலமா படிச்சுதான் பழக்கம், அரபிக்காரங்கதான் வலமிருந்து இடமா படிப்பாங்க...

அரேபியர்களைப்பற்றி, நீ பேச வேண்டாம் அவர்களுக்கு அரபு மொழியில் ''பாபா'' 
(அரபு மொழியில் بـابـا) 
ன்றொரு வார்த்தையை யாம் அமைத்தி இருக்கிறோம், அவர்களை இடமிருந்து வலமாக படிக்கச் சொல்லி தண்டனை கொடுப்போம்.
ஐயா, நான் வேண்டுமானால் அந்த அரபுமொழியில் ''பாபா'' வை படிக்கிறேனே....

இல்லை, இங்கு யாரும் மரபு மீறக்கூடாது, உன்னால் முடியாதென்றால் வேறு நான்கு வகை தண்டனைகளை நீ பெறவேண்டும்.
சரி, ஐயா.

முதல் இரண்டு உணவு வகைகள் ஒரு நாளிகை முழுவதும், அடுத்தது முடிவுகள் உனக்கு என்ன ? வேண்டுமென்பதை நீயே தேர்வு செய்து கொள்.
சரி, ஐயா.

உனக்கு, சுட்டஅரிசி வேண்டுமா ? சுடாதஅரிசி வேண்டுமா ?
ஐயா இந்த மாதிரி அரிசியை நான் கேள்விப்பட்டதே இல்லை கொஞ்சம் விளக்கமா...சொன்னால்  புரிஞ்சுக்கிருவேன்.

சுட்டஅரிசி என்றால், பொரிஅரிசி அதை ஓவனில் வைத்து சூடாக்கி கொடுத்துக்கொண்டே... இருப்பார்கள் அதை நீ வேகமாக தின்று முடிக்கவேண்டும், பாஸ்மதி அரிசி அதுவும் 21 படி மட்டும்தான், அதற்கு மேல் கிடைக்காது, சுடாதஅரிசி என்றால் ஊறவைத்த அரிசி தமிழ்நாட்டு ரேஷன்கடை அரிசி இது  27 படிவரை உண்ணலாம்.
ஐய்யய்யோ, தமிழ் நாட்டு ரேஷன்கடை அரிசியா ? அதுக்கு பாஸ்மதி பொரிஅரிசியை திங்கிறேன் ஐயா.

சரி, இதை உண்ட பிறகு தாகம் எடுக்கும் உனக்கு, பாதரசம் வேண்டுமா ? பாழ்ரசம் வேண்டுமா ?
(பாதரசமா ? ஏதோ கேள்விப்பட்டது மாதிரியிருக்கு, நல்லாயிருக்குமா ?) ஐயா, பாதரசம் தெரியும், இந்த பாழ்ரசம் என்னங்கய்யா ?

பாதரசம் உனக்கு தெரியும் என்கிறாய், பாழ்ரசம் என்றால் தேவலோகத்தில் CANTEEN னில், மிச்சமாகி பாழாப் போன ரசத்தை உனக்கு கொடுப்போம்.
இல்லை ஐயா நான் பாதரசத்தையே குடிக்கிறேன் இதுவரை குடிச்சதும் இல்லை, இங்கே வந்தாவது கிடைச்சுச்சே.

சரி அடுத்து உனக்கு, நம்பிக்கை வேண்டுமா, தும்பிக்கை வேண்டுமா ?
ஐயா, இது விளங்கிடுச்சு, ஆனா.... விளங்கலை கொஞ்சம் விளக்கமா சொன்னா... தேவலை.

அதாவது இதற்கு பிறகும் நீ இறக்கவில்லை என்றால் நீ அடித்தே கொல்லப்படுவாய், நம்பிக்கை என்றால் CINEMA ACTOR நம்பியார் கையால் அடித்துக் கொல்வது, தும்பிக்கை என்றால் யானையை வைத்து தும்பிக்கையால் அடித்துக் கொல்வது.
அப்படீனா, நான் இன்னும் சாகலையா ? 
(அதுசரி நம்பியார் இங்கேயுமா ? வந்துட்டாரு, அவரு உள்ளங்கையை தேச்சு... தேச்சு அடிப்பாரே, அதுக்கு யானை கையாலே ஒரேஅடி வாங்கிட்டு சட்டுபுட்டுன்னு சாகலாம்) தும்பிக்கை போதுமய்யா.

நீ முதலில் மரணித்தது பூலோக மரணம், இனி தேவலோக மரணம், சரி உனக்கு சுட்டகாடு வேண்டுமா ? சுடாதகாடு வேண்டுமா ?
அது என்னானு, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஐயா.

சுட்டகாடு என்றால் உன்னை தீயில் போட்டு எரிப்பது, சுடாதகாடு என்றால் குழியில் போட்டு மூடுவது.
(ஹும், நம்மதான் FLIGHT இருந்து கீழே காட்டுல விழுந்ததுல எரிக்கவும் இல்லை, புதைக்கவும் இல்லை, நாயும் நரியும் தின்று தீத்துடுச்சே... எரிக்கச் சொன்னா, சுடும் வெயில் காலம் வேற) 

எதுக்கும் சுடாதகாடே கொடுங்க ஐயா.
நல்லது, தொடங்கட்டும் பரிவாரங்கள்.


சாம்பசிவம்-
அட மூதேவி, விகடகவி னு'' திருப்பி சொன்னாலும் அதுதானே வரும், இதுகூட தெரியாம நீ துபாய்க்கு வேற வேலைக்கு போய்ட்டே.

CHIVAS REGAL சிவசம்போ-
அது தெரிஞ்சா, அவன் ஏன் கதவை திறக்கப்போறான்.

சிவாதாமஸ்அலி-
நாமலும் இப்பவே, பாப்பா, மாமா, தாத்தா, தாதா, காக்கா, இந்த மாதிரி வார்த்தைகளை வலமிருந்து இடமாக படிச்சு பழகனும் நாளைக்கு செத்தாக் கொண்டால் உதவும்.

காணொளி.

58 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஜி
  புகைப்பான் ஏன் கவலைப்படுவான்... நல்ல கேள்விகள் தொடுத்து அசத்தி விட்டீங்கள்... இறுதியில் ஒரு சவக்குழி... அதில் உங்கள் பெயரை எழுதிட்டீங்கள் ஜி...ஆகா... ஆகா.. விமானம் துவசம் கழிச்சி பறக்கிறது விடீயோ அசத்தல் த.ம1 பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் புகைப்பழக்கத்தால் எவ்வளவு பிரட்சினைகள் வருகிறது அதை இந்த உலகுக்கு வலியுருத்தவே இந்தப்பதிவு.

   நீக்கு
 2. ஜி இதை பின்னூட்டமக எடுக்க வேண்டாம்... சவக்குழியில் உள்ள படத்தில் உங்கள் பெயர் உள்ளது மாற்றி விடுங்கள்.... தகவல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்புக்கு பணிந்து நீக்கி விட்டேன் நன்றி.

   நீக்கு
 3. நல்ல கதை. படிச்சு சிரித்தேன். தப்பு சிரிக்கப்பார்த்தேன். முடியல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா அடுத்த முறையாவது தங்களை சிரிக்க வைக்க முயல்வேன். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. ஹா...ஹா...ஹா...

  இது மாதிரிக் காட்சிகள் மனதில் படிய, பழைய ஏ பி என் படங்கள் உதவுது பாருங்க!

  பதிலளிநீக்கு
 5. ஆகா
  நானும் இதுமாதிரி வார்த்தைகளைப் பேசி பழக ஆரம்பித்து விட்டேன் நண்பரே
  என்றோ ஒரு நாள் பயன்படலாம்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் வலமிருந்து இடமாக படித்துப்பார்பது எனது பொழுது போக்கு அதன் விளைவே இந்தப்பதிவு.

   நீக்கு
 6. ஆஹா..! ஔவையார் முருகனிடம் கேட்ட சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? ஸ்டைலில் என்னொரு நகைச்சுவை! கில்லர்ஜிக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் கற்பனை உற்றேடுக்கிறது.
  மிக அருமை நண்பரே!
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே என்ன செய்வது தலையிலே உள்ளதை வலையிலே போடுவோம் அதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது.

   நீக்கு
 7. வரிசையில் இருந்த அந்த 8 பேருக்கும் இதே தண்டனையா ஜி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி 8 பேரா ? அந்த விமானத்துல உள்ள மொத்தப்பேரும் என்ன ஆனாங்களோனு நான் கவலையிலே இருக்கேன் உங்களுக்கு 8 பேர்தான் முக்கியமா ? அவுங்க சொந்தக்காரவுங்களோ ? பறக்கிற விமானம் கதவு திறந்தால் என்ன ஆகும் ? ச்சே நினைத்தாலே பயக்கும்.

   நீக்கு
 8. பக்கி பழரசம் ஓல்ட் ஆனா வைன் ஆயிடும்னு தெரியாம பாதரசத்தை குடிக்கப் போயிருக்கானே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா நண்பரே பாதரசத்தைப்பற்றி தெரியாத ஜடம்.

   நீக்கு
 9. அன்புள்ள ஜி,

  மதுரை மண்டு மருதமுத்து... நல்ல மண்டுதான்...

  காணொளிக் காட்சி.... தரையில் ஊர்ந்து... தண்ணீரில் மிதந்து... வானில் பறந்து.... அருமை.

  நன்றி.
  த.ம. 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே...
   மண்டுல என்ன ? நல்ல மண்டு, அதனாலேதான் மாண்டு போனான்.
   ஆம் இனி வரும் காலங்களில் இடப்பற்றாக்குறையை தவிர்க்க வேண்டும் ஆகவே இப்படி விமானம் கண்டு பிடிக்கச்சொன்னேன்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வாங்க நண்பரே டயருக்கு அடியில் கிடந்த ரூபாய் நோட்டை விடவா ?

   நீக்கு
 11. ஹஹஹஹ் அது சரி....அங்க நம்ம பழைய படங்கள் அதுவும் இந்த மாதிரி தேவலோகம் வர்ர படங்கள் எல்லாம் செம காமெடி கலக்கலாம்...ம்ம்ம் பாவ்ம் ஏபிஎன்!!! நல்ல காலம் நெற்றிக்கண் திறக்கல.....தேவலோக காண்டீன்ல பாழ் ரசம் னா பழைய பழம் எல்லாம் போட்டு ஏதோ ஒண்ணு காச்சுவாங்களே அதுன்னு நினைச்சுப்புட்டோம் ஜி..சே க்டைசில இங்க தர்ர அதே பழய ரசவண்டிதானா......சுட்டதையும், சுடாதைதையும் ரசித்தோம் ஜி!!!

  அந்தக் காணொளி எடிட்டிங்க் சூப்பர்! எமிரேட்ஸ் ல கூட ஃப்ளைட் ரன்வேல மிஸ்ஸாகி தண்ணில நீந்திச்சு,....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏபிஎன் ஏனே பாவம் திரையுலகம் மறந்த அவரை அவரது குடும்பத்தை நானாவது நினைத்தேனே... பாழாப்போனரசம் சுருக்கம் பாழ்ரசம் தானே சரியாத்தான் சொல்லி இருக்கிறார். விமான சம்பவம் தேவகோட்டையில் இனிமேல் இப்படி வருவதற்கான ஒத்திகை.

   நீக்கு
 12. சுட்டது, சுடாதது ஒரிஜினல் மீனிங்க்! லேட்டஸ்ட் அர்த்தம் அல்ல...ஹஹஹ்

  பதிலளிநீக்கு
 13. இன்றும் நம்ம ஆட்கள் விமானத்தில் அப்படித்தான் ! சிகரெட் என்ற தேவையில்லாத பழக்கத்தை வைத்து மிக ஹாஸ்யமாய் விளையாடி விட்டீர்கள்...

  இவ்வளவு கொடுமைக்கும் பதிலாய், உனது பதிவு ஒரு மாதம் தமிழ்மணத்தில் நிலைத்து நிற்கும்படி செய் என்றிருந்தாலே, தானாக நரகத்துக்கு ஓடியிருப்பாரே....

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா நண்பரே இதுவும் நல்ல ஐடியா வாகத்தான் இருக்கு புதிய பதிவுக்கு கரு தந்தமைக்கு நன்றி நண்பா...

   நீக்கு
 14. புகை பிடித்தல் உயிருக்கு உலை என்பதை என்னவெல்லாமோச் சொல்லி காட்டி இருக்கிறீர்கள்ஜி. ஏனோ ரசிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகைப்பிடித்தலைப்பற்றித்தான் எழுதினேன் அது குழப்பி விட்டதோ... உண்மையை எழுதியமைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 15. அன்பின் ஜி!..

  தங்கள்து அறையில் தாங்கள் மட்டுமேவா!?.. தொந்தரவு கொடுக்க ஆளில்லையா?..

  மண்ணுலகம் - விண்ணுலகம் ..ன்னு எல்லாத்தையும் போட்டு கலக்குறீங்களே!.. அதனால கேட்டேன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூட்டத்தோடுதான் இருந்தேன் ஜி ஏனோ தெரியலை ஒவ்வொருத்தனாக கழண்டு போயிடுறான் யாரு கண்ணுபட்டுச்சோ தெரியலை ஜி வர்ற வைகாசிக்குப் பிறகு சரியாகும்னு சோலந்தூர் சோசியர் சோனைமுத்து சொன்னார் பார்ப்போம்.

   நீக்கு
 16. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்தான் துபாய் வேலைக்கு போவாருங்களா..??? எதுவும் தெரியாத ஏமாளி போகமாட்டாருங்களா....தலைவரே........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை விட, என்னைப்போல் ஒண்ணும் தெரியாத ஓம்பிரகாஷூகள் நிறையப்பேர் வாழ்கிறார்கள் அரபு தேசத்தில்.

   நீக்கு
 17. அவ்வ்வ்வ்..... விகடகவிக்கு இத்தன அக்கப்போரா?

  நான் வலதுல இருந்து இடது பக்கமா வேகமா எழுதுவேன். அதனால வாசிக்கவும் செய்வேன். மிர்ரர் இமேஜ் கூட கொஞ்சம் அத்துப்படி. அதுவும் நல்லாவே எழுதுவேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, தங்களின் மிர்ரர் இமேஜ் விடயம் கண்டு மகிழ்ச்சி காரணம் சிறுவயது முதலே எனக்கும் அந்தப்பழக்கம் இருக்கிறது வருகை தந்து கருத்தும் வாக்கும் அளித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 18. ஒன்பது கட்டம் கட்டி ,அதில் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று எழுதியும் வாசிக்கச் சொல்லுங்க கில்லர் ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இதைத்தான் ஜெயதேவ் தாஸூம் சொன்னாரோ இப்பொழுதுதான் எனக்கு (மண்டு) புரிகிறது.

   நீக்கு
 19. மகன் மருமகள் வந்த்திருப்பதால் கொஞ்சம் பிஸி சகோ. அப்புறம் கருத்து சொல்ல வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ முதலில் விருந்தாளிகளை கவனியுங்கள் காலிப்ளவர் ஃப்ரை செய்து கொடுங்கள்.

   நீக்கு
 20. பயபுள்ள நம்மை மாதிரியே அம்புட்டு அறிவாளியா இருக்கான் பாருங்க மருதமுத்து.

  பதிலளிநீக்கு
 21. விருப்பம் மீது விருப்பம் வர
  (புகைத்தல் மேற்கொள்ள)
  விழுகின்ற வழி தெரியாது வீழ
  (புதைகுழியில் விழ)
  நம்மாளுகள்
  சாவின் பின் என்ன சாதிப்பர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 22. நான் ரசித்து வாசிச்சு நல்லா சிரித்தேன் சகோ. எனக்கு நீங்க சீரியஸ் மேட்டரை நகைச்சுவையா சொன்னது பிடித்திருந்தது.அருமையாக எழுதியிருக்கிறீங்க. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். காணொளி சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சரியான விடயத்தை சொன்னமைக்கு மனமார்ந்த நன்றி சீரியஸை, சிரியஸாக கொடுக்க நினைத்தேன் அதுதான் உண்மை.

   நீக்கு
 23. நண்பா!
  தேவக்கோட்டை தேருல தேவன்
  அபுதாபி அரண்மணையில் அக்பர்
  அடுத்த இரண்டு பதிவுக்கான தலைப்பு ரெடி!!!!
  வெடிக்கட்டும் சரவெடி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நண்பரே....

   நீக்கு
 24. இது மா3 எப்போ எழுத ஆரம்பிச்சீங்க... அசத்தீட்டீங்க போங்க
  பதினாறு பெற்றவருக்கு பதினேழும் கிடைத்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தோழரே... இது மற்றது மா3 இல்லாமல் புது மா3 எழுத முயற்சித்தது நீங்களும் மற்றவர்கள் மா3 தொடர்ந்தால் நலமே...
   தாங்கள், என்றும் 16 ஐ, 17 ஆக்கியமைக்கு 18 ஆம்படி கருப்பர் துணை செய்யட்டும்.

   நீக்கு
 25. அது விமானமா?...கப்பலா?? என்று கேட்டால்“ கப்பலுந்தேன் ...விமானமும்ந்தேன்
  என்று சொல்வீர்களோ...!!

  பதிலளிநீக்கு
 26. உங்களது கற்பனா சக்திக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் எல்லையே இல்லை என்று உணர்த்தும் பதிவுகளில் இதுவும் ஒன்று.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோதரரே.!

  நலமா ? வழக்கப்படி தங்கள் நகைச்சுவை பாணியில் எழுதிய இதையும் ரசித்துப் படித்தேன். விண்ணுலகம், தண்டனை என்ற விதத்தில் கலக்கலாக இருந்தது. இப்படி விதவிதமாய் சிந்தித்து எழுதுவதற்கு தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்..

  இதற்கு முந்தின தாங்கள் எழுதிய பதிவுகளையும் படித்து ரசித்து கருத்துரை இடுகிறேன். தாமதமாய் வருகை தந்து கருத்துரை இடுவதற்கு மன்னிக்கவும்.
  வீட்டில் நடைபெற்ற விஷேடங்கள், உறவின் வருகைகள் காரணமாய் இணையம் பக்கம் வர இயலவில்லை. வருந்துகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி நேரமிருக்கும் பொழுது படிக்கவும் தங்களது பதிவுகளை காண ஆவலாய் இருக்கிறேன் வீட்டில் நடந்த விஷேசங்களுக்கு வாழ்த்துகள் நன்றி.

   நீக்கு
 28. கில்லர்ஜி கில்லாடி தான் நீங்க அடேங்கப்பா என்னமா திங் பண்ணுறீங்க wow really great ரொம்பவே ரசித்தேன் மலைத்தேன் ஜி அசத்தல் அசத்தல் ! பிந்தி வந்தமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.
  கற்பனை தொடரட்டும் முற்றில்லாமல். வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 29. நான் போய் பார்த்து வந்து இப்படி ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கேன். அப்புறம் பாருங்கோ,,,,,,,,,,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் நாங்க போய் பார்த்து வந்துதானே எழுதுறோம்.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...