தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 18, 2015

சுடு(ம்)காடு

  CEMETERY


உடலை தீயில் ‘’சுடும்’’ காடு என்பதற்காகத்தான் சுடுகாடு என்றும்,
உடலை குழியில் ‘’இடும்’’ காடு என்பதற்காகத்தான் இடுகாடு என்றும் சொல்கிறார்களோ ?

எமக்கு, இடும்காடா ? சுடும்காடா ?



தீயின் ஜூவாலைகள் எமது சரீரத்தை சுவைப்பதை யாம் விரும்பியதில்லை ஆகவே யாம் சுடும்காடை ஒரு போதும் நேசித்ததில்லை யாதெனில் தீ எமக்கு, பூமி கொடுத்த, கொடுக்கும் பயனுக்கு என்றுமே இணையாகாது. தீ உணவு சமைப்பதற்கு ஒரு காலகட்டத்தில் உதவியது இன்று மின்சாரம் மூலம் கண்ணுக்கே தெரியாத தீ வந்து விட்டது.

பூமித்தாய் யாம் நடக்கும்போதும், நிற்கும் போதும், அமரும் போதும், ஏன் மனிதன் படைத்த Nissan Sunny வாகனத்தில் யாம் யாத்திரை செல்லும் போதுகூட எம்மைச் சுமக்கிறாள். 38 வது நிலையில் யாம் நித்திரை கொள்ளும் போதுகூட எமக்காக 38 நிலைகளையும் சேர்த்து சுமக்கிறாள்.

ஆகவே பூமித்தாய் எமது சரீரத்தை சுவைப்பதில் யாம் பெருமிதம் கொள்கிறோம்.


Anyway
வாழும் போது எமக்கும், வீழும் போது இந்திய மண்ணுக்கே எமது சரீரம்.

(உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு எனும் பாமரன் அல்ல நான்)

சாம்பசிவம்-
விமானத்துல போகும்போது, யாரு சொமக்குறா ? பறந்து கிட்டு இருக்கும்போதே விமானம் வெடிச்சு ஒடலு கருகி, செதறிப் போயிட்டா,  திக்குக்கும் தெசைக்கும் போயிருமே அப்ப என்ன செய்யிறதுன்னு ? கேட்டா மண்டக்கனம் புடிச்சவன்னு சொல்வாங்கே. யோசனை மஞ்சிவாடு, வண்டி சகடை சப்பையாம்.

காணொளி.

65 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஜி
    உணமையில் பூமித்தாய் எல்லோரையும் சுமக்கிறாள்...விரகுவைத்து எரிக்கும் காலம் மாறிப்போய் இப்போ மின்சார சுடுகாடு என்ற பெயரும் வந்து விட்டது... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    வர வர பதிவு வித்தியாசமாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் மின்சாரத்தில் சுடுகாடும் வந்து விட்டது அப்புறம் தீ எதற்க்கு ஆனால் பூமியை நிராகரிக்க முடியுமோ ?

      நீக்கு
  2. கில்லர்ஜி...
    இனிய இருக்க ....

    பதிலளிநீக்கு
  3. ஜெயின் மதத்தில் செய்வதைப் போல செத்த உடலை பறவைகளுக்கு இரைஆக்குவதே என் விருப்பம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி அதற்க்கு நாம் உயிரோடு இருக்கும்போதே 4 பொட்டணம் தலைப்பாகட்டு பிரியாணி வாங்கிப்போட்டு பார்த்து சந்தோஷப்படலாமே...

      நீக்கு
    2. இது தான்.. ஜி யின் முத்திரை!..
      இங்க தான் ஜி.. நீங்க நிற்கிறீங்க!..

      நீக்கு
    3. எந்த ஜிக்கு சொல்றீங்கனு தெரியலையே ? துரை ஜி

      நீக்கு
    4. தலைப்பா கட்டு பிரியாணி வாங்கிப் போடச் சொன்ன ஜி..க்குத் தான் சொன்னேன்!..

      நீக்கு
  4. ஒரு திருத்தம் ,அப்படி செய்வது பார்சிகள் என்று நினைக்கிறேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகத் தெரியவில்லை ஜி

      நீக்கு
    2. ஜி!.. பார்ஸிகள் தான் அவ்வாறு செய்கின்றனர். மும்பையின் மலைப்பகுதியில் Tower of Silence.. - எனும் பகுதியில் சவங்கள் போடப்படுகின்றன. ஆனால் அங்கேயும் மனிதன் கழுகளுக்கு சமாதி கட்டியதால் - சவங்களும் சங்கடத்துக்கு உள்ளாகின்றன.

      நீக்கு
    3. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  5. இப்பொழுதே முடிவைப் பற்றி நினைப்பானேன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ விரக்கி நினைத்தேன் நண்பரே எழுதி விட்டேன்.

      நீக்கு
  6. திடீரென்று ஏனிந்த சிந்தனை ஜி...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சித்தன் போக்கு சிந்தனை வழியே...

      நீக்கு
  7. யதார்த்தத்தைக் கூறியுள்ளீர்கள். வழக்கமான நடையிலிருந்து சற்றே மாறுபட்டு மனதை அதிகம் நெருடிவிட்டது இப்பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் முனைவரே என் மனதை வருடியது தங்களுக்கும் கொடுத்து விட்டேன் நன்றி.

      நீக்கு
  8. சுடும் காடு,இடும் காடு ,,,நல்ல விளக்கம்,

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள ஜி,

    சுடுகாடு...இடுகாடு...நம்மைச் சுமந்த பூமிக்கு... போகும் போது நன்றி சொல்லி பூமிக்குள் புதைய வேண்டும் மென நல்ல சிந்தனையை விதைத்தீர்கள்.

    இறுதியில் விமானத்தைக் காட்டி....பாலைவனம் தாண்டவரமுடியாமல் வீழ்த்திவிட்டீர்களே...! காணொளி வியக்க வைக்கிறது.

    -நன்றி.
    த.ம. 7.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே.... புதைத்ததை விதைத்தேன் என்று வித்தியாசப்படுத்தி விட்டீர்கள் அந்த விமானத்தில் நான் இல்லையே...
      அது ஒரு ஆளிள்லாத ஒத்திகை விமானம்தானே...

      நீக்கு
  10. வித்தியாசமான பதிவு நண்பரே தொடருங்கள்.
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமாக இருந்தால்தானே நண்பரே அது கில்லர்ஜி.

      நீக்கு
  11. ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு வழக்கம் உண்டு. எரித்தலும், புதைத்தலும் அதையொற்றியே... இப்போ என்ன அவசரம். கொஞ்ச காலம் கழித்துக் கவலைப்படலாம்!

    :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே நண்பரே சரி கொஞ்ச காலம் போகட்டும்.

      நீக்கு
  12. எரிப்பதிலும்,புதைப்பதிலும் கூட மதச்சாயம் பூசி இருக்கிறார்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சுனாமி வந்த பொழுது மனிதனை கூட்டம் கூட்டமாக சதைப்பின்டங்களைப் போட்டு மூடிவது போல் மூடினார்கள் அப்பொழுது எங்கு போனது ? மதச்சடங்குகள் அதன் புகைப்படங்களைக் கண்டபோது என்னுள் தோன்றியது இந்த எண்ணம் ஆனால் நான் நினைத்து தொடங்கியது மதச்சங்குகளை அது கடைசியில் வேண்டாமென எனக்கு ஏற்படும் நிலையை நதைச்சுவையாக கொண்டுபோய் முடித்து விட்டேன்.

      நீக்கு
  13. ஒரு வேதாந்தியாய் உங்கள் பதிவின் கருத்தினை உள் வாங்கிக் கொண்டேன். ஆறு மனமே ஆறு.
    த.ம.13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆறு மனமே ஆறு என்று 13 தந்து விட்டீர்களே...

      நீக்கு
  14. சுடும் காடு, இடும் காடு...அதே அதே...விளக்கம்...

    பிறப்பதும், இறப்பதும் நம் கையில் இல்லை ஜி! விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும், இவ்விரண்டும் இன்னும் எவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதாவது ஒரு உயிர் உருவாகும் சமயம். (பிறக்கும் சமயம் அல்ல)...எனவே இன்றைய நொடியை மகிழ்வுடன் வாழ்வோம்.....அடுத்த நொடியைப் பற்றியோ, இறப்பைப் பற்றியோ வேண்டாமே.....என்ன சொல்றீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நான் எதற்காக இதை எழுதினேன் 80தை மேலே நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களுக்கு எழுதியதைப் படிக்கவும் நன்றி.

      நீக்கு
  15. 38 ஆம் நிலை..............

    புரியவில்லையே ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 38 வது மாடியைக் குறிப்பிட்டேன் கவிஞரே... ஏன் வேறு மாடிகள் இல்லையா ? எனக்கேட்டு விடாதீர்கள் ஏதாவது ஒரு மாடியை சொல்லித்தானே ஆக வேண்டும்.

      நீக்கு
  16. \\விமானத்துல போகும்போது, யாரு சொமக்குறா ? பறந்துகிட்டு இருக்கும்போதே விமானம் வெடிச்சு ஒடலு கருகி, செதறிப்போயிட்டா, திக்குக்கும் தெசைக்கும் போயிருமே அப்ப என்ன ?\\
    இதன் அர்த்தம் வீடியோ பார்த்ததும் புரிந்தது...........!!
    [Quote செய்ய வேண்டுமளவுக்கு பதிவை காபி செய்ய முடிகிறதல்லவா!! ஹி ............ஹி ............ஹி ............]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி கண்டதும் புரிந்து விட்டதா ? வயித்துல புளியைக்கரைக்கிறீங்களே நண்பா...

      நீக்கு
  17. ஆனாலும், மனுசனுக்கு ஆசை அதிகம் தானே.. ஜி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது ?இந்திய மண் மீது ஆசைப்பட்டதுதானே...

      நீக்கு
    2. அந்த காலத்துல..

      எங்க வூட்டுக்காரர வச்ச இடத்திலய வச்சிடுங்கடா... ந்னு கிழவிகள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்..

      கிழவன் வெந்த இடமே தனக்கும் வேணும் ..ன்னு அப்படி ஒரு ஆசை..

      ஆனா.. இப்போ - நீங்க சொல்ற இந்திய மண்ணுல - புதுசா வந்திருக்கிற புத்தனுங்க எல்லாம் -

      எது மேலேயும் ஆச வெக்காதே.. உங் கோவணத்துணி உள்பட.. ஏன்னா.. அத்தனையும் எங்களுக்கே சொந்தம்.. எப்ப வேணாலும் உருவிடுவோம்..ன்னு கொக்கரிக்கிறானுங்க!..

      உள்ளவன் சொத்தே உனக்கில்லே.. ங்கிறப்ப
      ஊரான் சொத்துக்கு ஆசப்படுறானுங்க.. அருவா மூக்கனுங்க!..

      நீக்கு
    3. வாங்ஜ ஜி பழைய விடயத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். ஊர்ப்பிடாறி ஒண்ட வந்த பிடாறிக்கு இடம் கொடுத்ததால்தானே இந்த நிலை.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே.!

    சுடுகாடு, இடுகாடு விமர்சனம் அருமை, பூமித்தாயின் மேல் நீங்கள் வைத்திருக்கும் பற்று புரிகிறது. பிறக்கும் ஒவ்வொருவரும் இப்படித்தான் பூமி மாதாவை நேசி்க்க வேண்டும்.

    மரணத்தின் அடுத்த நொடி நம் ஆசைகளும் ப(ம)றந்து விடுமே. அதற்கு முன்பே இப்படி ஆசைபட்டால்தான் உண்டு என நானும் நினைக்கிறேன்.

    காணொளி அடுத்த நொடி எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை உறுதிபடுத்துகிறது.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி ஒவ்வொருவனும் தன்நாட்டு மண் மீது மட்டுமே ஆசையை வைத்துக்கொண்டால் நாட்டின் எல்லையில் பிரட்சினை ஏது ?

      நீக்கு
  19. இறந்தபிறகு புதைத்தால் என்ன எரித்தால் என்ன தெரியவா போகிறது

    பதிலளிநீக்கு
  20. கருத்தொன்றும் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  21. மண்ணிலே தோன்றி மண்ணிலே மறைகிறோம்! தீயானாலும்,புதைத்தாலும் பறவைக்கு போட்டாலும் தண்ணீர் அடித்துச் சென்றாலும் முடிவில் மண் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுரேஸின் கருத்தும் அருமையே.... முடிவு மண்தானே.

      நீக்கு
  22. எனக்கு இந்த சுடு காடு எப்படி தெரியும் என்றால் 8 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் வினைத்தொகை நடத்திய பிறகு ஆசிரியர் எடுத்துக்காட்டு கேட்டார், நான் சுடுகாடு என்றேன். விளக்கம் கேட்டார், சுடுகாடு சுடும்காடு சுடுகின்றகாடு என்றேன் எப்படி?
    அது சரி பதிவு எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது?
    நல்லா இல்லை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே நல்ல பதில்தான் அருமை நீங்க அப்பவே இப்படித்தானா ? பதிவு சரியில்லையா ? உள்ளதைத்தானே சொல்றோம். பதிவுகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்.

      நீக்கு
  23. இடு காடு - சுடுகாடு - எதுவாக இருந்தாலும் இறந்த பிறகு நமக்குத் தெரியப் போவதில்லை.

    சுனாமி, நிலநடுக்கம் போன்ற சமயங்களில் இயற்கை தானாகாவே பலரை பூமிக்குள் அழுத்தி விடுகிறதே......

    காணொளி - அப்பாடி..... சோதனை விமானம் என்பதால் பரவாயில்லை. உண்மையாக இருந்திருந்தால்..... யோசிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி நண்பரே சுனாமியின் புகைப்படங்களில் மனிதனை கூட்டம் கூட்டமாக புதைப்பதைப்பார்த்து மத சம்பிரதாயங்களைக் குறித்து தொடங்கினேன் உண்மையில் கடைசியில் மண்தான்.

      நீக்கு
  24. நடந்தால் இரண்டு கால்
    இருந்தால் நான்கு கால்
    காட்டுக்குப் போகையில் எட்டுக்கால்
    என்றும்
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ
    என்றும்
    தங்கள் காடு பற்றிய பதிவைப் படித்ததும் மீட்டுப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பொருத்தமான பாடலை சொன்னீர்கள். நன்றி.

      நீக்கு
  25. சுடுகாடுகள் கூட ஆக்கிரமிப்பில் இருந்து தப்புவதில்லை. அந்கெயெஉம் பிளாட் போடு விற்று விடுகிறார்கள்.புதைப்பதற்கு இடம் இல்லாத நிலை.
    வித்தியாசமான பதிவு கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை சொன்னீர்கள் நண்பரே இனி வரும் காலங்கள் அப்படித்தான்.

      நீக்கு
  26. சுனாமி வந்தபோது செத்தவர்களில் ஒரு பகுதியினர் கீழ்சாதி மக்களாக இருந்ததினால் வந்த இராணுவம் அவர்களை துாக்க மறுத்ததாக ஒரு தகவல் இருக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
  27. இது என்ன ஜி நீங்க இப்ப எதுக்கு இதை எல்லாம் ஞாபகப் படுத்திக்கிட்டு இருக்கும் வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போவோமே இப்பவே தொட்டு ப் பயப்படனுமா என்ன. சாவை நினைத்து தான். என்ன இல்லையா அப்ப அட மனுஷன் தலை கால் புரியாமல் நின்று ஆடுகிறானே ஏன்று சொல்ல வந்தீர்களோ. எப்படி சொன்னாலும் மயான வைராக்கியம் போலத் தானே இல்லையா எல்லாம் சொற்ப நேரத்திற்கு மட்டுமே.திரும்பவும் முருங்க மரத்தில ஏறிடுவாங்க ஜீ, நன்றி நன்றி ! எதற்கா ஞாபகப் படுத்தியமைக்கு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க அதென்ன ? வாக்கு போட்டு 48 மணி நேரத்திற்க்குப் பிறகு கருத்துரை ஏதும் காரணம் உண்டா ?

      நீக்கு
  28. இடுகாடு, சுடுகாடு சொல்லாய்வு அருமை! ஆனால், தமிழர்த் தொல்வழக்கமான இடுகாட்டு வழக்கம், சுடுகாட்டு வழக்கமாய் மாறியதன் பின்னும் ஓர் அரசியல் இருக்குமோ என்பது சிறியேன் ஐயம். ஐயம் தீரும் வரை இது பற்றி எழுத முடியாது. ஆனால், உங்களைப் போலத்தான் நானும். செத்தால் நான் எரிக்கப்பட விரும்பவில்லை. காரணம் பிறகு எப்பொழுதாவது சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து தங்களின் உணர்வுகளை பதிந்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  29. வருமுன்னே எல்லாம் யோசிக்கிறீங்க. அது வரும்போது பார்க்கலாம்.இப்ப விருமாண்டி, அபூபக்கர்,மருதமுத்து இவங்களை யோசியுங்க.இங்கும் சில ஜனங்கள்(ஜேர்மனி) இப்படி இசகுபிசகா சில செயல்களை எழுதியே வைத்திருக்குங்க. சிலதுகள் பெட்டியை ரிசர்வ் செய்தும் கூட....என்னத்தைச்சொல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கிற்க்கும் நன்றி முடிந்தவரை நகைச்சுவையை தர முயல்கிறேன்.

      நீக்கு