தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 28, 2015

திருவிழா ! தெருவிலா ?

  "It really hurts me deeply to even post this in my website "

திருவிழாக் காலங்களில், கோயில்களில், நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் என்றுகூட சொல்லமுடியாது பள்ளியறையில் கணவனும், மனைவியும் செய்வதில் முக்கால் பகுதியை செய்து காண்பிக்கிறார்கள்.
(இதனைப்பற்றி மேலும் விவரிக்கவும், ஆதாரத்துடன் நிரூபிக்கவும், என்னால் முடியும் ஆனால், நான் விரும்ப வில்லை ஏனெனில் அவர்களுக்கும், எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்)
அந்த மேடையின் மையப்பகுதியில், ஸ்ரீமுத்து மாரியம்மன் துணை என்ற சுவரொட்டியோடு ஸ்வாமியின் புகைப்படம் வேறு, மறுபுறம் திரைப்பட நடிகரின் புகைப்படம், இதன் முன்னிலையில் ஆபாச நடனம், இல்லை ஆபாச செய்கைகள். இதில் ஒன்றுக்கொன்று பந்தம் இருக்கிறதா ?
(இறை நம்பிக்கை மழிந்து கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணம்)

இந்த மேடையை சுற்றி நாளைய மன்னர்கள் என்று சொல்லப்படும் இளைய சமுதாயத்தினர்கள் இதை VIDEO எடுத்து எங்கள் ஊரிலும் நடந்திருக்கிறது என்று YOUTUBE ப்பில்போட்டு உலகம் முழுக்க பார்க்க வைக்கிறார்கள், இதை வெளியிடும் இளையசமூத்தினர் நடத்தும் அமைப்புகளுக்கு பெயர் இளையநிலா, வெண்ணிலா, பாடும்பறவைகள், வெட்கமாக இல்லை ? இந்தசமூகம் எதை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது ? இதை நடத்துபவர்கள் ஊரின் பெரிய மனிதர்கள். இதை நடத்திமுடிக்கும் வரை POLICE  பாதுகாப்பு, இந்த சமூகம் கேடுகெடும் பாதையை நோக்கிப் போவதற்க்கு காரணம் யார் ?

இதை நடத்தும் ஊர்ப் பெரியவர்களா ?
இதைக்கண்டு ஆரவாரிக்கும் இளைய சமூகத்தினரா ?
இதை நடத்த அனுமதி கொடுக்கும் அரசாங்கமா ?
இது முடியும் வரை, பாதுகாப்பு கொடுக்கும் காவல் துறையினரா ?
இதில் வெட்க உணர்வின்றி ஆடும் நடனக் கலைஞர்களா ?

நடனக் கலைஞர்கள், இவர்களை குறை சொல்லமுடியாது ஏனெனில், அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இதில் தள்ளப்பட்டவர்கள் பணம் கூடுதலாக கிடைக்கும்போது...முழுசும் நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையை கடந்தவர்கள். காவல்துறை, இவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில், மேலிட உத்தரவு கொடுத்த வேலையை செய்கிறார்கள் சம்பளத்திற்காக... அரசாங்கம், இவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில், கொடுக்கா விட்டால் வீணாக ஜாதிக்கலவரம் வரும், பிறகு ஓட்டுக் கிடைக்காது, எதற்கு வம்பு ? இளைய சமூகத்தினர், இவர்களை குறை சொல்லமுடியாது ஏனெனில், இவர்களுக்கு வயசுப் பிரச்சனை நல்லது கெட்டதை பிரித்தறியத் தெரியாத பருவம்.

ஊர்ப் பெரியவர்கள், இவர்கள்தான் முழுக்க, முழுக்க காரணவாதிகள் ஏனெனில் தீர்மானம் எடுப்பது இவர்களே நடனக் கலைஞர்கள் இவர்களிடம் வந்து எங்களை இப்படி ஆட வையுங்கள் எனச் சொல்லவில்லையே ? காவல் துறையினர் இவர்களிடம் எங்களுக்கு வேலை கொடுங்கள் எனச் சொல்லவில்லையே ? அரசாங்கம் இவர்களிடம் இந்த மாதிரியே விழா நடத்துங்கள் எனச் சொல்லவில்லையே ? இளைய சமூகத்தினர் இவர்களிடம் இந்த மாதிரி ஆடினால்தான் பார்ப்போம் எனச் சொல்லவில்லையே ? ஆக, இந்த சமூகம் கெட்டுப் போவதற்கு வழி வகுப்பவர்கள் அறிவில், அனுபவத்தில், முதிர்ந்தவர்கள் எனச்சொல்லப்படும் பெரியவர்களே !

சாம்பசிவம்-
இதையெல்லாம், பார்க்கும்போது காஞ்சிபுரம் தேவநாதனை குறை சொல்ல இந்த சமூகத்துக்கு என்ன, தகுதியிருக்கு ? அப்படின்னு கேட்கலாம்னு தோனுது சரி கேட்டால் என்ன, உறைக்கவா போகுது அதனால, கேட்க வேண்டாம்னு தோனுது, அதற்காக தேவநாதனை தேவதூதர் ன்னுசொல்றதா அர்த்தமல்ல ! துரோகி துரியோதன்தான் அதில் மாற்றமல்ல !


65 கருத்துகள்:

 1. இந்த கண்றாவியை எனக்கு ஒரு வடநண்பன் அனுப்பி இது உண்மையா என்று நையாண்டித்தனம் வேறு செய்தான் .. நெஞ்சு பொறுக்குதில்லையே ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நெஞ்சு பொறுக்காமல்தான் நானும் எழுதினேன் என்ன செய்வது ?

   நீக்கு
 2. சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் வரும் நடனங்கள் இந்தக் கோயில் நடனங்களுக்கு சற்றும் சோடை போனதல்ல, நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை ஐயா மன்னிக்கவும் தாங்கள் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் சினிமாவைவிட கீழ்த்தரமான நிகழ்வுகள் ஆந்திரா கிராமங்களில் நடக்கிறது விரிவாக எழுதினால் சங்கடப்படுவீர்கள்.

   நீக்கு
 3. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சிறியவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்ப்பார்கள். அது போல ஊரில் இருக்கும் பெரியவர்கள்தான் இவற்றை நிறுத்தி ஊரை நல்ல வழியில் வழி நடத்த வேண்டும். அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊர்மேல் பழியைப் போட்டு அவர்கள் அல்ப ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள் போலும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான காரணத்தை சொல்லி விட்டீர்கள் நன்றி

   நீக்கு
 4. வணக்கம்
  ஜி
  சபாஷ் நல்ல சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்... இளம் தலை முறையினர் ஒரு சீரழிந்த பாதையில்செல்ல இப்படியான நிகழ்வுகள் வழி வகுக்கிறது... இயன்றளவு தடுத்தல் நல்லது. அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களின் கருந்தை பதிந்தமைக்கு நன்றி ரூபன்.

   நீக்கு
 5. ஒரு நியாயமான ஆதங்கத்தை வெளியிட்டுள்ளீர்கள். அநாகரீகத்தைவிட்டு வெளிவர மனமின்றி இவ்வாறு செய்பவர்கள் எப்போது திருந்தப் போகின்றார்களோ. பாதிக்கப்படுவது இளைய சமுதாயமே என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தாங்கள் சொல்வது போல இதனால் பாதிக்கப்படுவது இளைய சமூகந்தான் அதாவது நமது சமூகம் என்ற உணர்வு எல்லோருக்கும் வந்தால் மாற்றம் வரும்.

   நீக்கு
 6. நிறைய பேசவைக்கும் பதிவு தோழர் ..
  திடீர் என பார்க்கும் பொழுது அதிர்ச்சியாகத்தான்
  இது ஒரு சமூக நோய்,
  பின்னாலே போனோம் என்றால் இது நமது கலாசாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்திருப்பதை காணலாம்.
  கோவில் சிற்பங்கள், கோவிலில் தாசிகள்..
  என சொல்லிக்கொண்டே போலாம்..
  இப்போதைக்கு டாட்
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தோழரே முதலில் எமது சந்தோஷமான கை குலுக்கல் காரணம் நான் எந்த மையத்தை குறி வைத்தேனோ ? அதையே தாங்களும் சரியாக எய்து விட்டீர்கள் ஆம், இதன் பிண்ணனியின் தொடக்கமே அதுதான் ஆனால் அவைகளைப்பற்றி இப்பொழுது ஆராய்வதற்க்கோ, குற்றம் சொல்வதற்கோ நமக்கு பக்குவம் போதாது மேலும் அது வேறு வகையான சிந்தனைகளை இன்றைய மானி(ட்)டருக்கு கொடுத்து விடும்.

   பறவையை கண்டு மனிதன் விமானம் படைத்ததுபோல்..... இந்த நிழல்களைக்கண்டு மனிதன் மேடைகளில் நிஜமாக்கி கொண்டு இருக்கிறான் 80தே உண்மை எதையும் பொது நலக்கண்ணோடு பார்த்தால் இதன் தவறுகள் தென்படும் ஆனால் இன்றைய சமூகத்தில் சுயநலவாதிகள் நிறைந்து விட்டனரே... மீண்டும் நன்றி தோழரே.

   நீக்கு
 7. நன்றாகவே சொன்னீர்கள். பல A படக் காட்சிகளை, பலர் வீட்டில் குடும்பத்துடன் டீவியில் பார்ப்பது போன்றதுதான், இந்த சமூக அவலம்.
  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே வீட்டில் சங்கடத்துடன் பார்க்கும் காட்சிகள்தான் இங்கும் அரங்கேறுகின்றது.

   நீக்கு
 8. கடவுளின் பெயரால்
  காம நடனம்
  இவர்களா
  பக்திமான்கள்
  ஆன்மீக வாதிகள்
  இல்லை நண்பரே இல்லை
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இப்பொழுதெல்லாம் பக்திமான்கள் இல்லைதான் நண்பரே...

   நீக்கு
 9. பல ஊர்களிலும் நடத்தப்படும் கோயில் திருவிழா கலைநிகழ்ச்சிகள் சொல்லும் தரமன்று. வெட்கக்கேடு..

  இந்த மாதிரி நிகழ்வுகள் - நல்லோருக்குத் தலை குனிவு தான்!..

  களை (கலை) நிகழ்ச்சிகளில்அடிதடி குத்து வெட்டு இரத்தக் களறி வரைக்கும் சென்று - திருவிழா பாதியில் நின்றதும் உண்டு.

  நடன கலாராணிகளின் மேலாடையில் பணம் குத்துகின்றேன் என்று போட்டி போட்டுக் கொண்டு - ஒருத்தனை ஒருத்தன் குத்திக் கொண்டு பொணமாப் போன கதைகளும் உண்டு..

  (சதாசிவம்:- அடேய்.. தம்பி!.. இந்த வருசம் நம்மூர் திருவுலாவுல மஞ்சக் குருவியோட கரகாட்டம் இருக்காமா!?..

  சாம்பசிவம்:- ஏ.. பெரிசு.. நீ இன்னுமா கிளம்பலை!...)

  திருவிழாக்களின் கலைநிகழ்ச்சிகளுக்கு ஒரு பெரிய பாரம்பர்யமே உள்ளது. அதை இன்னொரு நாளைக்கு விரிவா பேசலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மை நல்லோருக்கும் தலைகுனிவுதான், இதைப்போல முதல் மரியாதை தனக்கு கொடுக்கப்படவில்லை என்றும் கோயில்கள் மூடப்பட்டு இருக்கிறது இவர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களாஇந்த இடத்தில்தான் நாத்திகர்களின் வாக்குகள் ஓங்குகின்றன அதற்க்கு ஆத்திகர்களின் பதில் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

   கலைகளைப்பற்றிய பாரம்பரிய விளக்கப்பதிவை தாங்கள் விரைவில் அளிப்பீர்கள் என்று காத்திருக்கிறேன்.
   சாம்பசிவம் ஐயா நல்லாத்தான் சொல்றாரு...

   நீக்கு
 10. பதில்கள்
  1. ஜி இது நம்முடன் நின்று நமது சந்ததிகளை காக்கவேண்டும்.

   நீக்கு
 11. இந்த நடன நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்பு கரகாட்டம் இதையேதான் செய்து வந்தது. லட்சுமி போன்ற நல்ல கலைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை திருவிழாக்களில் கூப்பிடுவதில்லை. ஆபாசமாக நடனம் ஆடினால் தான் அழைக்கிறார்கள். எல்லோருக்கும் கூட்டத்தை சேர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம். இதில் ஒவ்வொரு கோவில்களுக்குள்ளும் போட்டிவேறு. எனக்கு தெரிந்து நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்து இந்த ஆபாசங்கள் திருவிழாக்களில் இருந்தே வந்திருக்கிறது.

  த ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கே தெரியும் கரகாட்டக்கலை எப்படியென்று தலையிலிருந்த கரகத்தை ஆடிக்கொண்டே காலுக்கு கொண்டு வந்து தரையில் இறக்குவது இன்னும் சொல்லப்போனால் தற்போது அழிந்து விட்டது என்றே சொல்வேன்.
   காரணம் புதிய கலைஞர்கள் அதை படிக்க அவசியமற்ற சூழலை நாம் உருவாக்கி கொடுத்து விட்டோம் ஏனெனில் இன்று அந்த ஆட்டத்தை ஆடுவதற்க்கு திறமை தேவையில்லை வெட்கத்தை உதறி விட்டால் நானும் கூட ஆடலாம்.

   இதை வளர விட்டது நமது தந்தையர்கள் ஆம் நண்பரே அவர்கள் காலத்தில் நுழைந்த சினிமாக் கலாச்சாரத்தின் பிடியில் மயங்கியவர்கள் நம்மையும் அதனுள் திணித்து விட்டார்கள் அது இன்று வேரூன்றி விட்டது.

   இன்னொரு விடயம் தற்போது கல்லூரிகளிலும் நுழைந்து விட்டது அறிந்திருப்பீர்கள் இதன் தொடக்கத்திற்க்கு சமீபத்தில் தங்களது பதிவில் சொல்லியிருந்தேனே இயக்குனர் எல்லீஸ். ஆர். டங்கன் அவரும் ஒரு காரணமே (இறந்து விட்டாரே என்பதற்காக அவரை நான் தியாகி என்று சொல்லி விடமாட்டேன்)

   நீக்கு
 12. இது நியாயமான ஆதங்கம்தான். இன்று பெரியவர்கள்..அதுவும் நல்லவர்களின் பேச்சை எவர் மதிக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரியவர்கள் பெரியவர்களாக வாழ்ந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்காது நண்பரே.... கேட்டால் பெரியவாழ்.

   நீக்கு
 13. திரு விழாக்கள் நம் கலாச்சாரங்களின் பிரதி பலிப்பு. அவற்றைத் தவறாகக் காட்டுபவர்களைமன்னிக்கக் கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா நமது கலாச்சாரத்தின் பிரபலிப்பு அருமையாக சொன்னீர்கள் அந்தக் கலாச்சாரத்தை விபச்சாரிகளிடம் கொடுத்ததனால்தான் அனாச்சாரமாகி விட்டது உலகம் மிகப்பெரிய அழிவை நோக்கிப போய்க் கொண்டிருப்பதற்க்கு காரணம் இந்த வகையான நிலைப்பாடுகளே...
   பூகம்பங்களும், சுனாமிகளும் பெருகி வந்து கொண்டே இருக்கிறது ஏன் ? மனிதனிடம் இறைபயம் இல்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள் அது நிரூபணமாகி கொண்டே வருகிறது வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 14. பெயரில்லா4/28/2015 12:15 PM

  ஒராயிரம் இராயிரம் அகவைகள் செழிப்பில் ஊரிய தேன் மாவின் கொம்பில் பருத்த பலா போன்ற சுவையில் கொழுத்த செவ்வாழையின் சுவையில் இருந்த அற்புதக் களிரான அழுத மொழி செம்மொழியின் அழிவைப் பற்றி அச்சரமும் கவலையின்றி துப்பரவாக திரிந்து விட்டு இன்று கலாச்சாரம் அழிகிறது என்று நீலிக் கண்ணீர் வடிப்பதில் என்ன பயன் என்று கேட்க விழையும் அதே நேரத்தில் ஒரு மொழியின் சிதைவு அன்றின் தேய்மானம் அன்றின் மரனம் ஒரு கலாச்சரத்தின் மரனம் அல்லவா என்று கேட்கவிரும்பும் அதே வேளையில் மொழியறிவு செம்மையாக இருந்த்தால் அதிலே இருக்கிறது அத்தனை பாதுகாப்புக் கவசங்களும் என்பதை குண்டலகேசியைத் தொலைத்த தண்டியலங்காரம் எனும் நூல் கிடைத்திருப்பினும் அதை துச்சமாக மிதிக்கும் இந்த கேடு கெட்ட தமிழ் சமுதாயம் இன்னும் கெட்டு தான் போகும் என்று நான் சபிக்கவிடினும் மனம் நொந்து மருகுவதாக நினைக்கத் தூண்டுகிறேன் என்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் பதிவுலக கணவான்கள் தமிழை தரையில் தேய்க்கிறார்கள் “மலிவானது என்பதை மாற்றி மழிவானது என்று பறைசாற்றுகிறார்கள் என்று சொல்லிடவும் விரும்புகிறேன் என்றாலும் கூடவே நண்பர் என்று நல் முறையில் விளிக்க வழியறியாது நன்பா என்று அஞ்ஞானத்தின் மீட்சியாக வரைவிலிப் பகிர்வோர்களா மதியிழக்கிறார்கள் என்றும் பதிவுசெய்யும் அதே நேரத்தில் வன்னக் கதம்பமான வாழ்வியலின் ஒளி பொஎருந்திய மிதவையானதமிழ் இலக்கியம் பக்தியிலக்கியம் எனினும் அத்தனை மதத்திற்கும் பொருந்தி லெளகீக ரசனையுள்ள வையலாகும் வான்மிகு திரவியம் குணம் நிறைந்தது. சிவனை நீக்கி வேறு இறைக் குறியீட்டை இட்டால் அது எங்களுக்கும் பரிதி நிமிர்த்த விசுவாசமாக மாறக்கூடியதுதான் என்று பகருங்கால் நான் தமிழின் மெருகு குறையா மேன்மைச் சாளரம் பொருந்திய கர்வம் கொள்ளவிரும்புகிறேன். வெட்கமே படாமல் தமிழை அரைகுறையாய் பகிர்கிற அலவலாதிகளாக திகழ்கிறார்கள். பரங்கியர் தம் மொழியாம் ஆங்கிரேசி எனும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை எழுத இருநூறு முறை ஸ்பெல் செக்குகிறார்கள் இந்த முடவர்கள். இந்தக் கூத்தும் பாட்டும் கோவிலகளில் பல நூறாயிரம் ஆண்டுகளாக நடக்கிறது அப்பொது ஆபாசமில்லை என்று பாந்தமாக சொல்லிச் செல்கிறோமே எப்பது அத் திவசையில் சிருங்காரம் சிலேடைத்தானும் நீட்சியாக நீல வெளில் நெடுஞ்சாலைப் படுதாவின் மீட்சியானது ? தமிழை மிதிக்க ஆர்ம்பித்தோம் ஆபாசத்தை ஆலயம் வரை வரவிட்டோம் .சுறுக்கமாக உங்கள் தமிழில் சொன்னால் ,தமிழுக்கு காப்பு அது வைக்கும் ஆபாசத்துக்கு ஆப்பு.-”சொன்னது ஒரு டிபிரிட்டோ தமிழண்டா”

  ”டெராபைட்” தாம்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ” டெராபைட்“ தாமஸ் அவர்களின் கருத்துரைக்கு முன் எமது பதிவே சிறிதாகிப் போனது சிறப்பாக அலசி கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 15. சாட்டையடி!
  சாட்டையடி!
  சாட்டையடி!
  ஆனால்?
  சம்மந்தபட்டவர்கள் சட்டை செய்வார்களா?
  (எனது பதிவில் பட்டிமன்ற தர்பார் நிகழ்வில் குறிப்பிட்டேன்
  தமிழர் விழாவில் பிரேசில் நடனம் பற்றிய கலாச்சார சீரழிவை!
  தமிழர் என்று சொல்லி சேவை செய்வோர் 90 சதவீதம் பேர் சட்டைசெய்ததாகவே தெரிய வில்லை! இதுதான் தமிழ் பண்பாடு! தமிழர் கலாச்சாரம். கருத்திடவே அச்சம் அவர்களுக்கு! என்ன செய்வது?)
  த ம + 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பா தாங்கள் சொல்வதுபோல தமிழை வாழ வைப்பவர்களைவிட தமிழை வைத்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம்.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே..

  பதிவை படித்தேன். இந்த மாதிரி திருவிழாக்களை நான் பார்த்ததில்லை. ஆனாலும் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. இந்த மாதிரி கலாச்சார சீர்குலைவுகள் அகன்று என்று திருந்துமோ இந்த சமூகம்.! வேதனையான பதிவு.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இதெல்லாம் குடும்ப பெண்கள் பார்க்க முடியாது சமூகம் மாற்றுச்சிந்தனைக்கு வந்தால்தான் இவைகள் ஒழியும்.

   நீக்கு
 17. பதில்கள்
  1. திரு. குட்டன் அவர்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் வரவேற்புடன் நன்றி.

   நீக்கு
 18. ஜி! நீங்கள் சொல்லியிருப்பது போன்ற நடனங்கள் இத்தனைக்கு ஆபாசமாகக் கண்டதில்லை நண்பரே! கொஞ்சம் சினிமாத்தனமாக இருக்கும் கரகாரக்காட்டனில் வருவது போல....

  இதற்குக் காரணம் அதை ஏற்பாடு செய்யும் பெரிய..."வாள்" கள் தான் அவர்களை அந்த பெரிய "வாளைக்" கொண்டு ஒரு போடு போட்டால் என்ன? கோயில் திருவிழாக்களை விடுங்க வருஷத்துல.....வருது...இந்த பார்க்குக்குக் கூட வாக்கிங்க் போக முடியலைங்க....வீட்டில ரூமே இருக்காதோ..இல்ல கள்ளப்பசங்களா இருக்குமோ என்னவோ.....அனியாயம்.....எப்படிப்பா இதெல்லாம் இப்படி வெளிப்படையா.....பொறுக்கலைங்க....நாங்க டெய்லியே இங்க கண்ணை மூடிட்டுத்தான் வாக்கிங்க் போறோம்..என்னதச் சொல்ல....

  பதிலளிநீக்கு
 19. நம் சமுதாயமும், அரசும் சில சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தால் நல்லது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொல்லியிருப்பதை நீங்கள் காணவே வேண்டாம் இவர்களை கோடரியால் போடுவதே நல்லது ‘’பார்க்’’ அவலங்களுக்கு காரணம் சமூகமே ‘’பார்க்’’கும்போதே மூஞ்சியில் நாலு பேர் காறித்துப்பினால்.... ஆனால் டூ லேட்

   அரசாங்கமா ? அவங்களுக்கு எவ்வளவு வேலையிருக்கும் சிலருக்கு சொத்து சேர்க்கிற வேலை, மற்றவங்களுக்கு சேர்த்ததை எப்படி ? காப்பற்றுவது என்கிற வேலை, சிலருக்கு சொத்து போனாலும் பரவாயில்லை முதல்ல நம்மை எப்படி ? காப்பாற்றிக்கொள்வது ? என்ற வேலை இதுல யார்தான் என்ன ? செய்யமுடியும்.

   நீக்கு
 20. அன்புள்ள ஜி,

  ‘ நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்.. திருக்கோயிலே ஓடிவா.. ’என்ற வரிகளைப் பாடும்போது, திருக்கோயிலை 'தெருக்கோயிலே' என யேசுதாஸ் அவர்கள் திரு என்பதற்குப் பதிலாக தெரு என்று ‘அந்தமான் காதலி’ திரைப்படத்தில்உச்சரித்திருப்பார். அதைத்தான் சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தேன்.

  ‘வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
  ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்ட சோரு.... ’
  நடனக் கலைஞர்களைக் குறைசொல்ல முடியாது என்று சொல்லி விட்டீர்கள்...
  உண்மைதான்.

  கரகாட்டத்தில் குறவன் குறத்தி ஆட்டத்தையும் தாண்டி இப்பொழுது ஆடல் பாடல் என்று கோவில் திருவிழா நிகழ்ச்சியில் அத்துமீறுகின்ற காட்சிகள் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. கடவுள் இருந்தால் இதை எல்லாம் தட்டிக்கேட்பார்...! நீங்கள்தான் கேட்கிறீர்கள்...!

  நன்றி.
  த.ம. 13.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே... நல்லதொரு விடயத்தை சொன்னீர்கள் இதேபோல் உயிருள்ளவரை உஷா படத்தில் வைகை கரை காற்றே நில்லு பாடலில் //திருக்கோவில் வாசலது திறக்க வில்லை
   தெருக்கோடி பூஜையது நடக்க வில்லை//
   இதில் திருக்கோவில் 80தை ’’தெருக்கோவில்’’ என்று பாடியதும் இதே கே.ஜே.யேசுதாஸ்’’தான் இதற்கெல்லாம் காரணம் தமிழனை தமிழனே ஒதுக்கி வைத்ததே ஏமாறுவதற்க்கு மட்டுமே தமிழன் தேவை அதனால்தான் பிறமொழிக்காரர்கள் திரையுலகை ஆள்கிறார்கள் இதெல்லாம் பலருக்கும் புரிவதில்லை இதற்க்கு காரணம் சமூக சிந்தனை குறைந்து விட்டதே.

   கடவுள் இருந்தால் கேட்க மாட்டார் என்று சொல்ல மாட்டேன் கேட்டால் தேவலையே 80தான் எமது கருத்தும். பதிவெழுத விடயம் தந்தமைக்கு நன்றி மணவையாரே...

   நீக்கு
 21. இதற்கு பல காரணங்களை அடுக்கலாம்! ஆனால் இதை ஏற்பாடு செய்யும் பெரியவர்கள் மனது வைத்தால் இந்தவகை நடனங்கள் குறையலாம்! சிறந்த பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பெரியவர்கள் மனது வைத்தால் அருமை அதைத்தான் வலியுறுத்தினேன்.

   நீக்கு
 22. நண்பரே வணக்கம்.

  “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.......“ என்பதுதான்

  எனது பதில் !

  நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே ரத்தினச்சுருக்கமாய் எமக்கு கருத்துரையளித்து, சமுகத்துரோகிகளுக்கு ‘’ஊமைக்குத்து’’ விட்டீர்களே வருகைக்கு நன்றி.

   நீக்கு
 23. மிகுந்த வேதனையான பதிவு ஆண்டவன்.தான் காப்பாத்தணும். பகிர்ந்து கொள்ள வேண்டிய பதிவு மிக்க நன்றி ஜீ வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே வேதனையின் பாதிப்பே இந்த பதிவு.

   நீக்கு
 24. எங்க ஊரில் இப்படி நடன நிகழ்ச்சியை காணவில்லை நான். வேறு ஊர்களில் நடந்திருக்கா எனத் தெரியவில்லை. சினிமாவில் பார்த்திருக்கேன். திருவிழா கடவுளுக்கு நடப்பதை விட இவங்க ஆட்டத்துக்காவே நடத்துறாங்களோன்னு சந்தேகமாக இருக்கு....சிலதை பார்க்கும்போதும்,கேட்கும்போதும்.
  31 தேதி இல்லேன்னா.....????? சம்போஓஓ...சிவசம்போஓஓ தான்... ஹி...ஹி....ஹி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிந்தமைக்கு நன்றி தெருக்குரல் கேட்டு எழுதுவது கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 25. பலரது ஆதங்கத்தை தங்கள் பகிர்வில் கண்டேன். இறுதியாக நண்பர் தளிர் சொல்வது போரு ஊர் பெரியவர்கள் மனது வைத்தால் தடுக்கலாம். தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ, தாமதமாகவா வந்தீக ? ஒரு பதிவே போயிடுச்சே இதுக்குப்பேரு ?

   நீக்கு
 26. இது பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன் ! ஆனால் இவ்வளவு மட்டமா! நாடு எங்கோ போய்விட்டது! இனி திருந்துவது கடினம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா உடல் நலம் பெற்று மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 27. அய்யா, இந்த சமுக அவலத்தை யாரும் மாற்ற முடியாது, காரணம் மாற்ற வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் தான் இதன் அடிகோலிகள்.
  திரைப்படங்களில் பெரியவர்கள் ஜொல்லு விட்டு நடனம் பார்ப்பதை உண்மை என்று ஆக்கினரோ தெரியல,,,,,,,,,,,
  ஆனால் நம் கலைகள் கானாமல் போய்விட்டன.
  தெருக்கூத்து என்ற ஒன்று எங்கே போனதோ தெரியல,
  ஆதிக்ககாரர்கள் தங்கள் ஆதிக்கத்துக்குள் எல்லாவற்றையும் மாற்றி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோ மாற்ற வேண்டியவர்களின் ஆட்சிதானே நடத்துகிறது சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 28. கோயில் திருவிழா நாள்களில்
  வழிபாடு முடிந்தால்
  அன்னதானம் - அந்த
  அன்னதானம் தெருவிலும் இடம்பெறலாம்
  கோயில் திருவிழா நாள்களில்
  தெருவிழாக்களும் இடம்பெறலாம் - அந்த
  தெருவிழாக்களில் நடனம், நாட்டியம்
  எல்லாம் இடம்பெறலாம் - அந்த
  எல்லாம் பண்பாட்டைச் சீரழிக்கிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உணர்வார் யாரோ யார் அறிவாரோ...

   நீக்கு
 29. இந்த கண்றாவி ஆட்டங்களை நீதி மன்றம் தடை செய்து பல ஆண்டுகள் ஆகி விட்டது ,ஆனாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ,திருடனா பார்த்து என்னைக்கு திருந்துறது :)


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தடை செய்தவங்கதான் ஜி முதல் வரிசையிலே உட்கார்ந்து முதல் மரியாதை வாங்கிட்டு போறாங்க....

   நீக்கு
 30. நடனக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினால் அவர்கள் நிச்சயம் இதிலிருந்து வெளிவருவார்கள் என்று தோன்றுகிறது. நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம், காரணம் இன்றைக்கு தொலைக்காட்சியில் மானாட.........ம...ரை புடுங்க என்ற நிகழ்ச்சியில் ஆணும் பெண்ணும் கரகாட்டத்தை விட கேவலமாக கட்டிப் புரள்வது நடக்கிறது. மேலும், திரைப்படங்களில் கேமராவுக்கு முன்னாடி எல்லா அக்கிரமும் நடக்கிறது, அதே கேமராவுக்குப் பின்னால் நடப்பதை இங்கே விவரிக்கவே முடியாது. எனவே, நான் இப்படித்தான் வாழ்வேன் என்று முடிவெடுத்துவிட்டவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாங்கள் சொல்வதிலும் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கின்றது ஆனால் அவர்களை இந்த இழிநிலைக்கு தள்ளி விட்டு அவர்களுக்கு விபச்சாரி பட்டத்தை கொடுத்ததே சமூக சிந்தனை இல்லாத விபச்சாரன்கள்தானே ஆகவே இவர்கள் திரும்புவதற்கான வழிமுறைகள் இல்லை.

   மானாட, மயிலாட வேண்டாமே எனது கோபத்தை கிளறி விடாதீர்கள் நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 31. தங்களின் வலைபூ
  அதில் தெரியும் உங்களின் பொறுப்பும்
  பலரின் விருப்பும் ....அருமை
  வாழ்த்துக்கள் ....

  ஓடுவது சாக்கடையே ஆனாலும்
  அதில் மிதக்கும் வண்ண மலர்களை ரசிக்க
  பழகவேண்டும் ...
  'இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.'

  நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புது தில்லி நண்பர் கோபால் கிருஷ்ணன் அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.தங்களின் கவிமலர் அருமையே இருப்பினும் அந்த வண்ண மலர்கள் நதிகளில் மிதந்தால் மேலும் அழகு தானே வாருங்கள் நண்பரே தொடர்ந்து பேசுவோம் நன்றிய

   நீக்கு

 32. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
 33. தடுக்கப் பட வேண்டிய வேதனை......

  அங்கே மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இது போன்ற ஆபாசங்கள் உண்டு கில்லர்ஜி. வடக்கில் இன்னும் மோசம். வார்த்தைகளில், நடனங்களில் என அனைத்திலும் ஆபாசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு