திங்கள், ஜூன் 22, 2015

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு

நம் மூதாதையர்களின் சொல்வாக்குகளில் எத்தனை உண்மைகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் நடைமுறையில், இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 127 கோடியென கணக்கு வாத்தியார்கள் சொல்கிறார்கள், சரி இதில் படிக்காதவர்களை விட்டுத்தள்ளுங்கள், எத்தனை கோடி படித்த மக்கள் இந்தியாவில் வாழ்ந்து இந்தியாவுக்காக உழைக்கிறார்கள்  இப்படியே எல்லோருமே நாட்டை விட்டு போய்க்கொண்டிருந்தால்

(அதிலும் இப்போது குடும்ப சகிதமாக போகத் தொடங்கி விட்டார்கள் இதனால் குழந்தைகள் தமிழ் மட்டுமல்ல, இதர இந்திய மொழிகள் படிப்பதற்கு சந்தர்ப்பங்கள் குறைந்து வருகிறது.... தாய்-தந்தையர்களும் குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள், இந்திய மொழிகள் அழிந்து கொண்டிருப்பது... முகக்கண்களுக்கு தெரிகிறது அகக்கண்களுக்கு ஏனோ தெரியவில்லை) 

படித்த மக்கள் அனைவருமே இந்தியாவை விட்டு போய்க் கொண்டிருந்தால் இனி இந்தியாவில் அராஜகர்களின் ஆட்சிதான் நடக்கும், பாமரர்கள் கொத்தடிமைகளாக வாழ வேண்டியநிலை உருவாகும்.

முடிவு..... நினைத்துப்பார் இந்த தருணத்தில் பாலஸ்தீனை... எட்டு மில்லியன் பெரும்பான்மை மக்கள் உள்ள பாலஸ்தீனை, ஆறு மில்லியன் சிறுபான்மை மக்கள் உள்ள இஸ்ரேலியர்கள் கடந்த 1948 June 22 இதேநாள் முதல் கடந்த 67 வருடங்களாக ஆட்டிப் படைக்கிறார்களே ! காரணம் என்ன தெரியுமா

பகுதி மக்கள் அதாவது நான்கு மில்லியன் பாலஸ்தீனியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி அரபு நாடுகளில் வாழ்கிறார்கள், இவர்களைப் போலவே நாமும் அயல் தேசங்களில் வாழத் தொடங்கினால் நாளை நமக்கும் இந்நிலை வராது என்பது என்ன நிச்சயம் ?

நமக்கு பாலஸ்தீனியர்களோ, இஸ்ரேலியர்களோ முக்கியமல்ல நமக்கு முதலில் வேண்டியது இந்தியா ஆகவே, படித்தவர், படிக்காதவர் அனைவருக்குமே இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்கி வேலை கொடுத்து இந்தியாவை காப்பாற்ற நமது மேதகு வாய்ந்த ஆட்சியாளர்கள் மோடியற்ற ஆட்சி செய்ய முயற்சிக்க வேண்டும், இனியெனும் உணர்வுடன் வாழ்வோம், இந்திய மண்ணுடன் வாழ ! நமக்கில்லை எனினும் நாளைய நமது சந்ததிகளுக்காக...

வந்தேமாதரம் (Tamil)  
वनदे मातरम् (Hindi)  
వందేమాతరం (Telugu) 
വന്ദേമാതരം (Malayalam) 
ವಂದೇ ಮಾತರಂ (Kannada)

61 கருத்துகள்:

 1. அருமையான பகிர்வு அண்ணா...
  உண்மைதான்... யோசித்தால் நல்லது.
  அப்படி நடந்தால் நாமும் ஊர்ப்பக்கம் ஓடிடலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனக்குகூட இதையே காரணமாக வைத்து நாட்டுக்கு ஓடிவிடலாம் என்ற நம்பாசைதான்....

   நீக்கு
 2. சிங்கிளாய் வந்த சிங்கத்தை சீண்டிப் பார்த்து விட்டாரே கில்லர்ஜி அவர்கள்!
  எருமைகள் ஒருமையாய் வராமல் யார் பார்த்துக் கொள்வது?
  சிறந்த பதிவின் பாதையில் பாதையில் பயணிக்க தொடஙி விட்டாரே கில்லர்ஜி!
  வந்தே மாதரம்! நண்பா!
  த ம 2
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா எருமைகளை பொறுமையாக அணைத்துக்கொண்டு வரவேண்டும் நாளை நமக்குப் பெருமையே....

   நீக்கு
 3. நல்லது நடந்தால் நல்லது தான் ...வாழ்க நலம் .
  தம 3

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஜி
  தங்களின் நட்டு பற்று கண்டு மனம் மகிழ்ந்தது. இப்படியான சிந்தனை யாருக்கும் வராது.. தங்களின் எழுத்துக்கு எனது உணர்பூரணமான வாழ்த்துக்கள் த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி நண்பரே தங்களின் கருத்துரை கண்டு.

   நீக்கு
 5. வணக்கம்
  ஜி
  எனது புத்த கவேலை காரணமாக பலரது பதிவை படிக்க முடியாமல்போய் விட்டது... தாமதத்துக்கு மன்னித்து கொள்ளுங்கள்... இனி வருகை தொடரும்... ஜி.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நூல் வெளியீடு சிறக்க எமது மனம் நிறைந்த வாழ்த்துகள் இப்பொழுதே.... எப்பொழுது வெளியீடு ?

   நீக்கு
 6. பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 7. எல்லாவற்றிலும் ஒற்றுமை எண்ணம் வேண்டும் ஜி...

  பதிலளிநீக்கு
 8. ஆங்கிலத்தில் என்ன எந்த மொழியில் சொன்னாலும் சரிதான் ”நான்சொல்வதைச் செய்.நான் செய்வதைச்செய்யாதே” இந்தப் பதிவைப் படித்தபோது ஏனோ நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா பொதுநலம் கருதியே இந்த விடயங்களை வெளிப்படுத்தினேன் ஐயா மேலும் எனது மகன் கண்டிப்பாக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லமாட்டான்
   காரணம் அவனை சிறு வயது முதலே அப்படிச் சொல்லிச் சொல்லியே வளர்த்து வந்து இருக்கிறேன்.
   நான் படிக்காதவன் ஏதோ... வந்து விட்டேன். வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 9. தொலை நோக்கு பார்வையோடு எழுதிய பதிவு சார்..

  எல்லோருமே நாட்டை விட்டு போய்க்கொண்டிருந்தால் ?//// அந்த நிலைமை நம்ம நாட்டுக்கு வராது சார்.
  இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 127கோடி. மொதல்ல இத கட்டுப்படுத்தனும். அப்போதுதான் எந்த வசதியையும் நாட்டு மக்கலுக்கு எலிதாக சேர்க்க முடியும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மகேஷ் தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தங்களது கருத்தை ஏற்று திருத்தம் செய்து விட்டேன்.
   இந்த பதிவு எழுதி வெகுநாட்களாகி விட்டது இந்த தேதிக்காக காந்திருந்ததின் விளைவாக சிறிய தவறு நிகழ்ந்து விட்டது மன்னிக்கவும்
   தங்களது யோசனையும் சரியானதுதான். தொடர்ந்து வருக நண்பரே...

   நீக்கு
 10. நல்ல கருத்து.இதை எல்லோரும் பின்பற்றினால் நம் நாட்டை பிடிக்க எவராலும் முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான கருத்தை சொன்னீர்கள் நண்பரே... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 11. மண்ணை நேசிக்கும் மைந்தரே, தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. தங்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே நிறைவேறினால் நாமும், நமது நாடும் நலமே.... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 12. படங்களும் சிந்திக்க வைக்கின்றன. கருத்துள்ள பகிர்வுக்கு நன்றிங்க சகோ.

  பதிலளிநீக்கு
 13. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்று எருமைகளுக்கே புரிந்துவிட்டது..ஆனால் மனிதர்களுக்கோ புரிய மறுக்கிறது நண்பரே....

  பதிலளிநீக்கு
 14. என்ன சகோ, நான் வெயியில் கிளம்பலாம் எனும் போதா இப்படி தாங்கள் பதிவிடனும், சதி பன்னீட்டீங்களேப்பா,,,,,,,,,
  தொலைநோக்கு சிந்தனை, பதிவுக்கு வாழ்த்துக்கள், நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இது எனக்கும் சேர்த்துதான் பொதுநலம் தாங்கள் சொல்வதுபோல தொலைநோக்கு பார்வையே...

   நீக்கு
 15. சிறப்பான கருத்து! செயல்படுத்தினால் பாரதம் செழிக்கும்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. நீங்கள் கூறுவது உண்மை தான் சகோ.உங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும்.

  பதிலளிநீக்கு
 17. பதில்கள்
  1. விரைவில் நிரந்தரமாக எனது மகனுக்கு கண்டிப்பாக வெளிநாடு கிடையாது நண்பரே....

   நீக்கு
 18. ஒவ்வொரு நாட்டு அரசும் - அந்த
  நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி
  மோசடியற்ற ஆட்சி செய்தால்
  உலக அமைதி தோன்றுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 19. அன்பின் ஜி!..

  மெய்சிலிர்க்கின்றது - தங்கள் பதிவினைக் கண்டு... நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 20. அதெல்லாம் இருக்கட்டும்!...

  பிரிந்து கிடந்தாலும் சரி..
  ஒன்றாகச் சேர்ந்தாலும் சரி..

  - எருமை மாடுகள் தானா!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி 1947 முதல் இன்று வரை எது மீதோ மழை பெய்தது போலத்தானே நாம் வாழ்கிறோம்.

   நீக்கு
 21. பன்மொழிப் புலவராக ரவுண்டு கட்டி அடிக்கிற - நீங்களா படிக்காதவர்!?..

  ஆத்தி.. ஆச்சர்யந்தேங்!..

  பதிலளிநீக்கு
 22. உன்மைதான்!இந்த மூளை வடிகால்(!) ஒரு பிரச்சினைதான்

  பதிலளிநீக்கு
 23. எனக்கு பிடித்த உங்கள் பதிவுகளில் முதல் பதில் இதுவும்..
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துப்பதிவிற்க்கும் நன்றி தோழர்.

   நீக்கு
 24. இன்னும் நூறாண்டு ஆனாலும் நாம் வல்லரசு ஆகப் போவதில்லை ,வேலை வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கப் போவதில்லை ,வாய்ப்பு கிடைப்பவர்கள் வாழ்க்கையே அனுபவிக்கட்டுமே !இங்கேயே தரித்திரத்தில் உழல வேண்டும் ?
  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நம் முப்பாட்டனாரின் வழிகாட்டுதலின் படி வாழ்வதில் தவறொன்றும் இல்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லரசுக்கு சான்ஸ் இல்லை 80 அனைவரும் அறிந்த விடயமே...

   யாதும் ஊரே யாவரும் கேளீர், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு இப்படினு சொல்லித்தான் ஒவ்வொரு மனிதனும் இடம் பெயர்ந்தவன் தாய்வீடு மறந்து விட்டான் தாங்கள் சொல்வதுபோல் பலரும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள் ஜி.

   நீக்கு
 25. சிந்தித்து செயல்பட வேண்டிய அழகான பதிவு, நண்பரே!
  த ம 18

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் கில்லர் ஜி !

  உலக அரசியலையும் உள்நாட்டு அரசியலையும் ஓரிரு வரிகளுக்குள் உள்ளடக்கி எதிர்கால இந்தியாவின் உறுதித் தன்மைக்கு அவசிமான பதிவை தந்து இருக்கிறீர்கள் அதிலும் ஒரே ஒரு ''ச'' நடைமுறை ஆட்சியாளன் மீதான
  வெறுப்பை சூசகமாய்ச் சொல்லி அசத்திவிட்டீர்கள் ,,,,வாழ்க பாரதம் வளர்க தமிழ் ....!

  தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சும்மா என்நை போட்டுக்குடுத்துறாதீங்க எனக்கு அரசியலே தெரியாது.
   வருகைக்கு நன்றி தமிழ் மணம் மறந்துட்டீங்களே... பரவாயில்லை அடுத்த பதிவுக்கு ரெண்டு போட்டுருங்க...

   நீக்கு
 27. அதுக்கென்ன போட்டிட்டாப் போச்சு இதோ போட்டு விட்டேன்
  கருத்திடும் போதே போட்டிடுவேனே எப்படி மறந்தேன் ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 28. ஜி! பதிவு நல்ல பதிவே! ஆனால் இது ஒரு ஐடியலிஸ்டிக் தாட் வகையிலானது. யதார்த்தத்திற்கு முரணானது. என்பது எனது தாழ்மையான கருத்து. இங்கு நல்ல தரமான கல்வி, வேலை வாய்ப்பு இல்லாமையால் தான் பலரும் வெளிநாடு சென்றிருக்கின்றார்கள். வேண்டும் என்று இல்லை பெரும்பான்மையோர். பொருள் ஈட்ட என்பது சிலர் இருக்கலாம். ஆனால், அவர்களும் அங்கிருந்து கொண்டு இந்தியாவிற்கு திரை மறைவில் பல நல்ல விஷய்ங்கள் செய்து வருகின்றனர். அவர்கள் அங்கு பொருளீட்டி இங்கு பல குடும்பங்களை வாழ வைக்கின்றார்கள் என்பதும் உண்மையே!

  நம் நாட்டிலிருந்து கொண்டு அறிவியலில் நோபல் பரிசு வாங்கியவர் என்று யாருமே இல்லையே ஜி....சர் சிவி ராமனைத் தவிர. அதுவும் அதற்குப் பிறகு அவரது ஆய்வுகள் எதுவுமே முன்னோக்கி நகரவில்லையே ஜி! 6 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த வெங்கட் ராமன் வேதியியலில் நோபல் பரிசு பெற்றவர் இங்கிருந்து அல்ல.....இங்கிலாந்திலிருந்து ஏன் தெரியுமா? இதோ அவரது வார்த்தைகள்....

  In a lecture in January 2010 at the Indian Institute of Science, he revealed that he failed to get admitted to any of the Indian Institutes of Technology or the Christian Medical College, Vellore, Tamil Nadu.

  Immediately after graduation he moved to the U.S.A., where he obtained his PhD degree in Physics from Ohio University in 1976 on the Ferroelectric phase transition of Potassium Dihydrogen Phosphate (KDP) He then spent two years studying biology as a graduate student at the University of California, San Diego while making a transition from theoretical physics to biology.

  இது நடந்தது இப்போது அல்ல...அப்போதே...இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர் அவர்கள் கூட இங்கிருந்து பெற இயலவில்லை....அமெரிக்காவிலிருந்துதான் பெற முடிந்தது.....இது போன்ற ஆராய்ச்சி மேற்கொள்ளும் எண்ணங்களும், தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள விழைபவர்களும் அவர்கள் வேண்டும் அறிவு விரியக் கிடைக்கும் சூழல்கள் எங்கு பாரபட்சமின்றிக் கிடைக்கின்றதோ அங்கு சென்று கற்று அதைத் தாய்நாட்டிற்கு கொண்டுவந்து இங்கு உதவுவதில் தவறில்லையே. அறிவு எங்கு கிடைத்தால் என்ன? அதற்கு தடை இருந்தால் அப்புறம் எப்படி நாம் முன்னேற முடியும்? ஒரு வேளைச் சோற்றிற்கே வழி இல்லை என்றால் அதைத் தரும் ஒரு சூழலுக்குச் செல்வதில் தவறில்லையே....அங்கு கற்றதை இங்கு செயல்படுத்தக் கூட இந்த சுயநலவாதிக் கூட்டம் அனுமதிக்காமல் அதிலும் வர்த்தகம் செய்யும் கூட்டம் இருக்கும் வரை நம் நாடு முன்னேறப் போவதில்லை ஜி......யாதும் ஊரே யாவரும் கேளிர் அறிவைப் பெறுவதற்கு......

  உங்களுக்குத் தெரியுமா? இங்கு கல்லூரிகளில் நடக்கும் ஊழல்கள்? கல்வியில் நடக்கும் ஊழல்கள்? டிகிரி அளிப்பதில் உள்ள ஊழல்கள்? பிஎச்டி வழங்குவதில் உள்ள ஊழல்கள்? உங்கள் கண் முன் நடக்கும் தவறை நீங்கள் தட்டிக் கேட்பீர்களா இல்லையா? ஜி? கேட்பீர்கள் தானே? அப்படி ஒரு பேராசிரியர் கேட்டதால் பல கல்லூரிகளிலில் இருந்தும் வெளியேற்றப்பட்டு இன்று வறுமைக் கோட்டைத் தொட்டுவிடும் அபாயத்தில் இருப்பதும் நடக்கின்றதே ஜி? வளைந்து கொடுத்தால் வாழ்வு. ஊழலுக்குத் துணை போனால் வாழ்வு...இல்லை என்றால் வீடு....இல்லை என்றால் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்து மனசாட்சி இல்லாமல் வாழ்ந்தால் வாழ்வு உண்டு. மாணவர்கள் அனைவரும் விரும்பும் பேராசிரியரை, மாணவர்கள் அனைவரும் ஓட்டுப் போட்டு சிறந்த ஆசிரியர் என்று சொல்லப்பட்ட பேராசிரியர் ஒருவர், தனிப்பட்ட முறையில் மாணவர்கள் கேடயம் தந்து கௌரவிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர், கல்லூரி நிர்வாகத்தால் தொலைக்கப்பட்டால் உங்கள் பதில் என்ன ஜி?

  இதைப் பற்றி எழுத முடியும் இடுகை அளவிற்கு. ஆனால் நான் அதை எழுதினால் நிச்சயமாக இங்கு விவாதங்கள் வருவதை விட சர்ச்சைகள் கிளம்பும் அதனால் எழுத விருமப்வில்லை...இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்....

  ---கீதா

  பதிலளிநீக்கு
 29. 1947 க்கு முன் பின் கார்டூன் இரண்டுமே பெரிதும் ரசித்தேன்.

  இந்த கார்டூனுக்கு நான் கண்ட விளக்கம்.
  வந்தே மாதரம் ------ 1947 க்கு முன்.

  வந்து ஏமாத்தரம் ---- 1947 க்குப் பின்.

  யார் வந்தாலும் நிலைமை இதுவே தான்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 30. உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...