தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 28, 2015

காத்திருக்கிறாள்...

 
ன்னைச்சுமப்பவள், எனக்காக காத்திருக்கிறாள்...
ன்னை நேசிப்பவள், என் வருகைக்காக காத்திருக்கிறாள்...
ன்னை அள்ளி, அரவணைத்து கொள்ள காத்திருக்கிறாள்...
ன்னை உண்டு, களித்து ஆனந்தம் கொள்ள காத்திருக்கிறாள்...

யிர் உள்ளவரை, உள்ளன்போடு காத்திருக்கிறாள்...
ரிமையோடு என்னை, ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறாள்...
ச்சந் தலைமுதல், உள்ளங்கால் வரை முத்தமிட காத்திருக்கிறாள்...
லகம் சுற்றித் திரிந்தாலும், வருவேன் எனகாத்திருக்கிறாள்...

காசு பணம் இல்லையெனும், கடமையென காத்திருக்கிறாள்...
காவியணிந்து வாழ்ந்தாலும், கனிவோடு காத்திருக்கிறாள்...
காவியம் படைத்தாலும், கருணையோடு காத்திருக்கிறாள்...
காலம் கடந்தாலும், கடமைக்காக காத்திருக்கிறாள்...

அவள்தான், என்னை இன்றுவரை சுமந்து வரும், பூமித்தாய்.
 -ன் யிர்க்காலம்.

 
CHIVAS REGAL சிவசம்போ-
கிலத்தை ளும் வதான், ஸ்வரன் மகள் லகநாயகின்னு, ருக்கே தெரியுமே ன்னோட மரமண்டையிலே றியிருக்காதுன்னு நினைச்சிட்டீரோ... யமே வேண்டாம் ந்தலையில ங்கியடிச்சு வையார் மேலசத்தியம், தெரியும் நண்பா....

இனிய நண்பர், நண்பிகளுக்கு நான் தற்போது இனிய இந்தியாவில் அபுதாபி திரும்பும் வரை எமது பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் ? மறுமொழி இடமுடியாமல் போகலாம் அதேநேரம் தங்களது பதிவுகளை தொடர்ந்து எமது செல் மூலம் படிப்பேன் தமிழ் மணம் ஓட்டும் பதிப்பேன் பின்னூட்டம் இடமுடியாமல் போகலாம் 80தை அறியத் தருகிறேன்.
அன்புடன்
தி கிரேட் தேவகோட்டையிலிருந்து.... கில்லர்ஜி.

27 கருத்துகள்:

 1. த ம வில் இணைத்து விட்டேன் ! நானும் காத்திருக்கிறேன் :)
  மதுரைக்கு விஜயம் எப்போது சொல்லுங்க ஜி !

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை! வாசித்து வரும் போது இறுதி வரிகள் புரியத் தொடங்கியது.....ஜி இப்படித்தான் எழுதுவார் என்றும் யூகிக்க முடிந்ததால்....

  பரவாயில்லை ஜி! நீங்கள் இங்கிருப்பது தெரியும்....உங்கல் பின்னூட்டம் இல்லை என்றால் என்ன.....பரவாயில்லை ஜி....நன்றாக எஞ்சாய்! நாங்கள்லாம்,யாரு எங்கள் தளத்திற்கு வராங்கனு பார்க்கற்து இல்லை...நாங்க எல்லா தளத்திற்கும் போறபடி போவோம்.ல....

  பதிலளிநீக்கு
 3. நினைவில் நிறுத்தி
  புனைந்தாயோ?
  பூமிக் கவிதை!
  பூவுலகம் பூவுடலை
  சுமக்கும்
  புண்ணியத் தாய்!
  வாழிய வாழியவே!
  த ம 3
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 4. காத்திருப்பவரை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது
  தம +
  வார்த்தை விளையாட்டு சூப்பர்

  பதிலளிநீக்கு
 5. ரசித்தேன்.

  இந்தியா வந்திருக்கிறீர்களா? மொபைலில் பின்னூட்டம் இடலாம். அ முதல் ஔ வரை சூப்பர்! ஃ காணோமே!

  :)))))))))))

  பதிலளிநீக்கு
 6. இந்தியா வந்திருக்கிறீர்களா
  மிக்க மகிழ்ச்சி நண்பரே
  தேவ கோட்டையில் ஒவ்வொரு நொடியும் மகிழ்வாய் செல்லட்டும்
  பதிவுகள் வரட்டும், பார்க்கக் கருத்திட காத்திருக்கிறோம் நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 7. வருக....வருக....காத்திருப்போர் உள்ளம் கனியட்டும்

  பதிலளிநீக்கு
 8. சொல்ல நினைப்பவை வார்த்தைகளில் அடங்குவதில்லை. இருந்தாலும் சொல்லாமல் விடவும் முடியவில்லை. ரசித்தேன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. கவிதை அருமை அண்ணா...
  என்சாய் பண்ணிட்டு வாங்கண்ணா... அப்புறம் பாத்துக்கலாம்...

  பதிலளிநீக்கு
 10. பெற்ற தாயும் பூமித்தாயும் தன் பிள்ளைகளிடமிருந்து எதையும் எதிர்ப்பார்த்து காத்திருப்பதில்லை. காத்திருக்கும் தாயைக் காண தாய் நாடு வந்திருக்கும் தங்களது வரவு நல் வரவாகுக.

  பதிலளிநீக்கு
 11. தாய்மண் மிதித்தீர் தவிப்புடன் தீருமட்டும்
  சாய்ந்து இருந்துநீர் சல்லாபித்து செந்தமிழை
  சேயினது வாய்மொழியை காதாரக் கேள்துயர்
  தேய்ந்தழியும் விண்நிலவு போல்!

  ஜி நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க எங்களையோ பதிவுகளையோ பற்றி கவலைப் படாதீர்கள். அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம் ok வா ஹா ஹா வாழ்த்துக்கள். என்ன வந்தவுடன் நிறைய ஹோம் வோர்க் இருக்கும். ok வா ஜி

  (ஐய இது உனக்கு தேவையா கண்ணாடி வீட்டில இருந்து கொண்டு கல்லேறியக் கூடாது ஏன்று தெரியாதா) அப்புறம் நீயும் ஹோம் வொர்க் பண்ண வேண்டி இருக்குமே பரவாய் இல்லையா அம்மாடியோ அதானே) எஸ்கேப் ....
  நன்றி ஜி பதிவுக்கு.

  பதிலளிநீக்கு
 12. முத்தாய்ப்பாக பூமித்தாய்க்கு நன்றிபா..பாடி விட்டீர்கள்.. நல்லது வருக! வருக!! தங்களின் வருகையில் இந்திய பூமி தாய் மனம் குளிரட்டும்.

  பதிலளிநீக்கு
 13. சிறப்பான கவிதை. அ முதல் ஔ வரை - அதுவும் சிறப்பு.

  பதிவுலகம் எங்கே போய்விடப்போகிறது நண்பரே. தேவகோட்டையில் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். பின்னர் வரலாம் பதிவுலகிற்கு!

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோ, தாய் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சியே, நல்லா ஊர் சுற்றுங்கள் கவலையில்லாமல்,
  வாழ்த்துகிறது உம்மை,
  வரவேற்கிறது உம் தாய் மண்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. தாய்மண்ணுக்கு திரும்பும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன் நண்பரே! தாய்மண்ணுக்கு அருமையான கவிதை தந்து விட்டீர்கள். நன்றி!
  த ம 22

  பதிலளிநீக்கு
 16. வழக்கம் போல சிறப்பான பதிவு! இந்தியா வந்திருக்கிறீர்களா? வாழ்த்துக்கள்! சென்னை விஜயம் உண்டா?

  பதிலளிநீக்கு
 17. பாமலர்களைக் கொண்டு பூமகளுக்கு அர்ச்சனை செய்து விட்டீர்கள்!..
  தாயகம் தங்களால் பெருமை கொள்ளட்டும்!..

  நாளும் பொழுதும் நல்ல பொழுதாக அமைய வேண்டுகின்றேன்..
  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 18. மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள். ஊரில் நன்றாக சந்தோசமாக இருக்கவும்.

  பதிலளிநீக்கு
 19. அருமையான கவிதை. அ முதல் ^ஒள வரை மிக அருமை. ஊரில் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருங்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 20. காத்திருப்புகள் என்றும் அர்த்தமும்,அடர்த்தியும் நிறைந்தவை/

  பதிலளிநீக்கு
 21. பூமித்தாய்க்கு உங்களது பாராட்டு, உங்களது பாணியில் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 22. ஃ போன் நம்பர் இருந்தால் தங்களுடன் பேசலாம்!!

  பதிலளிநீக்கு
 23. அருமையான கவிதை...
  அ முதல் ஒள வரை ரசித்தேன்.

  ஆஹா...மண்ணின் மணம் வீசுகிறது...காரணம் புரிந்துவிட்டது....மகிழ்வாய் இருந்து வாருங்கள் சகோ...

  தம 16

  பதிலளிநீக்கு
 24. பெயரில்லா6/29/2015 3:08 பிற்பகல்

  எனக்கு குட்பை சொல்லியிருக்க சொல்ல எழுதறதுக்கே என்னோ மாதிரி இருக்குதுங்க சார்.(அபிராமி அபிராமி அசிங்கம் அசிங்கம்) பாரதியைப் பற்றி எவனோ எங்கோயோ எழுதினதைப் படித்தேன் அவன் உங்க நண்பன் என்று கூட தெரியாது வலிகளை பற்றிய பதிவில் என் வலியை எழுதுனேன். அதுக்கு என்னா இப்ப ? வலி சார்ந்த பதிவில் வலியை எழுதினால் நான் ஏற்கனவே குட்பை சொல்லிட்டேன்னு குழந்தைப் பையன் மாதிரி என்னா சார் இது சகிக்கலை. உங்க நண்பன் தான் இந்த மாதிரி எழுதுறதுன்னு தெரிந்திருந்தா அந்தக் கருமத்தை இங்க எழுதியிருக்கவே மாட்டேன். நல்ல ஆளுங்க நண்பர்களா இல்லாட்டி இப்படி தான் ஆகும். 16 வயதினேலே மயிலு மாதிரி பதிவைப் பத்தி எழுது எழுதுன்னு புலம்பாதிங்க சார்./.. நீங்க என்னா எழுதினீங்கன்னே மறந்துட்டு திரிகிறீங்க.

  லீவுக்கு போனா பேசமா என்சாய் பன்னுங்க. .சும்மா பதிவுக்குள்ள தலையவிட்டுக்கிட்டு இருக்காமல், நாராயணவிலாசல உருளைகிழங்கு தோசை சாப்பிடுங்க. தியாகிகள் தெரு போஸ்கடை காரசேவு கருதாஊரனி பெரியய்யா கடை (நம்ம சொந்தந்தான்) தேனீர் குடிங்க. வண்டி எடுத்துட்டு டீபிரிட்டோ பக்கம் போய்ட்டு வாங்க அந்த கட்டத்தின் காற்று பட்டாலே நல்லது.

  கடைசியா பாரதி பத்தி பேசறதுக்கு கத்துக்குட்டிகளுக்கு எந்த தகுதியும் இல்லை.

  இப்போதைக்கு குட்பை சார்

  பதிலளிநீக்கு
 25. கவிதை அழகு இறுதி முடிப்பு ரசித்தேன்! இனிய ஓய்வாக நாட்டில் ரசியுங்கள்! வலையில் வருவோர் போவோர் பற்றி ஏன் கவலை[[[[[[[[[[[[[[[[[

  பதிலளிநீக்கு