சனி, ஜூன் 06, 2015

தேவகோட்டை, தேவதை தேவகி.

 
என், நனவு தேவதை தேவகியும், நானும் தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் மாலை வேளையில், ஒருநாள்....
 
ஏங்க நாளைக்கு, நானும் உங்ககூட துணைக்கு சென்னைக்கு வர்றேங்க,
எதுக்கு ? துணைக்கு துணையா தொண்டை வலிக்கு வெணையான்னு போறதுக்கா ?
யேன் நான் வந்தா ? உங்களுக்கு அப்படியா இருக்கும் ?  
நானே, வேலை தேடிப் போறேன் எனக்கு அங்கே ஆளு இருக்கு, தேவையா ? நீ
எனக்குத் தெரியாம எவ ? அந்தச்சிறுக்கி ?
சிறுக்கியா ? யாரு ?  
நீங்கதானே, இப்பச் சொன்னீங்க யாரு ? அந்த தேவயானி.
அடி ஆக்கங்கெட்டகூவை, தேவயானின்னு சொல்லலே, தேவையா ? நீ ன்னு கேட்டேன்.
அப்படியா ? எனக்கென்னமோ சந்தேகமா ? இருக்கு.
உனக்கு, சந்தேகமென்ன இன்னைக்கு நேத்தா, என்னைக்கு உன்னை LOVE பண்ண ஆரம்பிச்சேனோ ? அன்னையிலேயிருந்து இருக்கே.
பின்னே, என்ன BANKல பணம் கெடக்குன்னு சொன்னீங்க, கல்யாணம் முடிஞ்சவுடனே ACCOUNTடே இல்லைன்னு, சொல்றீங்க.
பணம், கெடக்குன்னுதானே, சொன்னேன் என் பேரிலே கெடக்குன்னு சொன்னேனாடி ?  
சரி, சரி கோப்படாம சீக்கிரமா வேலைதேடி ஒரு நல்லவீடா, பார்த்துட்டு என்னைக் கூட்டிட்டு போங்க ! உங்க அம்மா புடுங்கு தாங்கலை.
உடனே எங்க அம்மாவை இழு, முதல்ல வேலை அப்புறமா சின்ன வீடு பார்த்து செட்டப் பண்ணிட்டு, உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.
என்னங்க ? சின்னவீடா ?  
அடியேண்டி... எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படுறே ?  
சரி, பார்த்து கவனமா போயிட்டு வாங்க ! பஸ்ஸூல தனி ஸீட்டாப் பார்த்து உட்காருங்க.
தனி ஸீட்டுன்னா, டிரைவர் ஸீட்லதான் உட்காரனும் எனக்கு டிரைவிங் தெரிஞ்சாத்தான், யாரையாவது வச்சு செல்வியப் புடிச்சுருவேனே.
அவ, யாருங்க செல்வி ?   
அடி, நாசமாப் போனவளே நம்ம ரூட்ல ஓடுற SELVI ROAD WAYS சை சொன்னேன்.
சென்னையில எங்கே ? தங்குவீங்க ?  
ஒரு தடவை, கல்யாணத்துக்கு போகும்போது தங்குனது போல நர்மதாவுலதான் தங்கனும்.
அவ, யாருங்க ? நர்மதா ?   
அடி, விளங்காமுடுமை நர்மதான்னுங்குறது லாட்ஜோட பேரு.
அப்படியா ? எனக்கு தெரியாதுல,
பார்க் வந்ததுக்கு பேசாம அருணாவுக்கு, போயிருந்தாலும் ரெண்டுமணி நேரம் நிம்மதியா இருந்துருப்பேன்.
அவ, யாருங்க ?   
அடி, முடுதாரு, முடுதாரு அருணா தியேட்டரே சொன்னேன்டி.
யேன், எதுக்கெடுத்தாலும் கோபப்படுறீங்க ?   
சரி, இதுக்குமேல இருந்தா ? ஏழரையாக்கிடுவே, கிளம்பு.  
ஏங்க, மணி ஏழுதானே ஆகுது.
நான், சொன்னது வேற முதல்ல சுந்தரி, சீச்சீ எந்திரி.
அது... யா...
அடியே, வாய் தவறி எந்திரின்னு சொல்றதுக்கு பதிலா, சுந்தரின்னு வந்துருச்சுடி.
சரி, நாளைக்கு ஊருக்கு போறீங்க, பாயசம் வைக்கனும் நம்ம பாலு ஸ்டோர்ல முந்திரி வாங்கி கொடுங்க.
சரி, சரி வா ! அப்படியே கோல்டன் காபி பார்ல ஒரு காஃபி சாப்பிட்டு போகலாம். 
 
சாம்பசிவம்-
சே... நனவு தேவதையைவிட, கனவு தேவதையே தேவலையோ ?


65 கருத்துகள்:

 1. "தே( ளாய்) வதை!

  தேவக்கோட்டையில் தேளின் வதை தாங்க முடியல சாமி!
  இப்ப புரியுது அவர் ஏன் சென்னைக்கு ஓடுறாருன்னு!!!!
  பார்த்து நண்பரே!
  தேள் கடிக்கு வைத்தியம் பார்க்க தான் சென்னைக்கு செல்கிறார் போலும்!
  காமெடி கலாட்டா!!!
  த ம 2
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகை தரும் புதுவை முதல்வருக்கு வணக்கமும், நன்றியும்.

   நீக்கு
 2. லொல்லு பார்ட்டி போலும் நீங்கள் ஹீ!!!!!!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 3. சென்னைக்கு ஓடுவதன் மர்மம் புரிந்தது
  அருமை நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பேரு இப்படித்தான் நண்பரே... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. நடக்குதோ..... வருகைக்கு நன்றி தோழரே...

   நீக்கு
  2. ஆகா கோர்த்து விட்டுதான் மறுவேலை போல

   நீக்கு
 5. மறுபடியும் வார்த்தை ஜாலத்தில் ஒரு மகிழ்வான எச்சரிக்கையான பதிவு. தங்கள் பதிவைப் படித்தபின்னர் பேசும் முன்பாக கவனித்துப் பேச வேண்டும் என்ற உணர்வு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே நிறைய நண்பர்கள் இப்படித்தானே உளறி விட்டு மாட்டிக் கொள்கின்றார்கள்.

   நீக்கு
 6. இவ்ளோ பிரியமா...கனவு தேவதைக்கு உங்க மேல....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்குப் பேரும் பிரியமா ? வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 7. சென்னை உங்களை வம்புடன் வரவேற்கிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி வீட்டுல வம்புடன் போறவனை அன்புடன் வரவேற்பதற்க்கு சென்னைதானே அடைக்கலம்.

   நீக்கு
 8. எனக்கு புரிந்துவிட்டது. ஏன்? சென்னைக்கு ஓடுறீங்கன்னு.........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிஞ்சதுனாலேதானே நண்பரே... தப்பிச்சுக்கிட்டீங்க...

   நீக்கு
 9. கெளம்புறதுக்கு முன்னே -
  ஸ்டோர்ல யாருடி.. பாலு..ன்னு பட்டையைக் கெளப்பாம -
  டபுள் ஸ்ட்ராங் காஃபி குடிச்ச வரைக்கும் சரி!..

  அது ஏன் - ஊருக்கு கெளம்புறதுன்னா... பாயாசம் வைக்கிறாங்க!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அதாவது ஊருக்குப்போகும்போது பாயசம் வச்சுக்கொடுத்தால் அந்த இனிப்பான நினைவுகளோடு மாப்ளே வூட்டுக்கு வந்துடுவான் ஏன்னா வெளியிலே எவளும் பாயசம் கொடுத்திடக்கூடாதே... அப்படினு நினைக்கிறேன்.

   நீக்கு
  2. இருக்கலாம்... இருந்தாலும் -

   இன்னும் கொஞ்ச நாளைக்குத் தொந்தரவு இருக்காது...(!?)...
   - என்ற மகிழ்ச்சிக்காகவும் இருக்கலாம்!...

   நீக்கு
  3. இதுவும் உண்மைதான் ஜி.

   நீக்கு
 10. இவ்வளவு பேர் தான் தெரியுமா? இன்னும் இருக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ய்யேன் அவசரம் வரும், வரும், எல்லாருடைய பேரும் வரும், அவசரப்படுவதாலே என்ன ஆகுது சொல்லுங்க தமிழ் மணம் ஓட்டுப்போடுறது மறந்து போறதுதான் மிச்சம் வேறென்ன ? வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 11. நீங்கள் கில்லர்ஜி இல்ல! கில்லாடிஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நிறையப்பேரு எனக்கு ஒண்ணும் தெரியலைனு சொல்றாங்க... நீங்க இப்படிச் சொல்றீங்க...

   நீக்கு


 12. தேவையா நீ? தேவயானி...........பிரமாதம்!!

  கடைசியில கோல்டன் காபி பாருக்கு சரியான பெயர் கிடைக்கவில்லையா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே..
   அருணா தியேட்டர்
   செல்வி ரோடுவேய்ஸ்
   தியாகிகள் பூங்கா
   பாலு ஸ்டோர்
   கோல்டன் காபி பார்
   இவைகள் தேவகோட்டையில் பிரபலமானவை அவர்கள் படித்தால் சந்தோஷப்படுவார்கள் என்பதற்காக புகுத்தினேன்.

   நீக்கு
 13. இப்படி ஒரு தேவதை இருந்தா தான் கில்லர்ஜி-யை சமாளிக்கமுடியும் போல....ஹஹ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க இதுதான் ஊமைக்குத்து என்று சொல்வார்கள்.

   நீக்கு
 14. அடி ஆத்தி ........ சரி சரி அசத்துங்க அசத்துங்க வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 15. மனதில் இருப்பதுதான் வார்த்தைகளில் வந்து விழுகிறதோ. ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கு நன்றி. உளவியல்ரீதியான உண்மையும் அதுதானே ஐயா சிரிப்பை மறந்த நான் பிறரை சிரிக்க வைக்க முயல்கிறேன் அவ்வளவுதான்.

   நீக்கு
 16. தங்களுடைய பதிவைப் படித்ததும் திருக்குறளில் காமத்துப்பாலில் புலவி நுணுக்கம் அதிகாரம் (குறள் வரிசை 1311 முதல் 1320 வரை) படித்ததுபோல் இருந்தது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே குறளின் கடைசி அத்தியாயங்களைக் குறிப்பிட்டமைக்கு நன்றி நான் இதுவரை படித்ததில்லை இனியெனும் காண முயல்கிறேன்.

   நீக்கு
 17. நிசமாகவே இப்படி இருந்தா வாழ்க்கை என்னவாகும்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பேருடைய வாழ்க்கை இப்படியும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் ஐயா.

   நீக்கு
 18. கில்லர்ஜிக்கு ஏற்ற தேவகி....இருவரும் சளைத்தவர்கள்...இல்லை...போல....என தியாகிகள் பூக்காவில் இருந்த ரேடியோவில்...ஒலி பரப்பு செய்தார்கள் என இங்கு வரைக்கும் செய்தி வந்து விட்டது.

  பாலு ஸ்டோரில் முந்திரி பருப்புகள்...காலியாம்......

  இனிமே தான் கோல்டன் காப்பிக் கடை நிலவரத்தை கேட்கனும்.....

  வார்த்தைகள் கொட்டுகிறது...சும்மா....உங்களுக்கு ......)))))......

  தியாகிகள் பூங்காவில் தமிழ்மணக் கணக்கில் 13 என அறிவிக்கச் சொல்லி விட்டேன் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியாகிகள் பூங்கா ரேடியிவிலும் சொல்லி விட்டார்களா ? பாலு ஸ்டோருக்கு போண் செத்து கேட்டமைக்கு நன்றி. கோல்டன் காபி பார் மூடிவிட்டதாக கீழே நண்பர் சே. குமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் பூங்கா ரேடியோ இப்ப தமிழ் மணத்துக்கும் உதவுதா ?

   நீக்கு
 19. ஆஹா கில்லர்ஜியின் சமாளிப்பே சமாளிப்பு!
  த ம 14

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே கீழே விழுந்தாச்சு மண்ணைத் துடைச்சுக்கிற வேண்டியதுதான் வேறவழி.

   நீக்கு
 20. Haa.... Ha... rasikka vaiththathu... ippo golden coffee shop eduththuttanga... anga oru sweet stall irukku.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஊரில் பிஸியாக இருந்தாலும் கடையடைத்த விபரம் தந்தமைக்கு நன்றி எப்பொழுது வருகிறீர்கள் ?

   நீக்கு
 21. தேவையா நீ ? தேவயானி இப்படி எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் எழுத முடியும் சகோ. சென்னைக்கு வரும் சகோவுக்கு வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 22. பதில்கள்
  1. வாங்க ஜி வேலூர் திருவிழா வெற்றியுடன் நடத்தி வந்தமை அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 23. தேவையா நீ....தேவயானி ..ஹஹஹஹ்

  அது சரி நீங்களும் ஏட்டிக்குப் போட்டினு நினைச்சா கடைசில பாலுனு சொல்லும் போது எவன் அவன் அப்படினு கேக்காம விட்டுட்டீங்களே! நியாயமில்லையே..நான் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு தப்பிக்கிறீங்க?!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க எப்பவுமே நல்லவங்கதான்... வில்லங்கம் கிடையாது.

   நீக்கு
 24. 'சந்தேகம் ஒரு கில்லர்' என்பதை நகைச்சுவையுடன்... சந்தேகமில்லாமல் சொன்ன 'ஜி'-க்கு ஜே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் பிரசாத் அவர்களின் முதல் வருகைக்கு வணக்கமும், நன்றியும்.

   நீக்கு
 25. ரை ரைட்
  அடுத்த பதிவு எப்போ ?
  ஆமா தமிழ்மணத்தில் முதல்ல வர இதெல்லாம் பத்தாதுஜீ
  நம்ம வசம் நல்ல யோசனை கைவசம் இருக்கு வேணுமெண்போர் அணுகலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே சொல்லித்தாங்களேன் நண்பரே என்னால் தினம் பதிவு போடமுடியும் ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் 80தே எனது முதல் விருப்பம்.

   நீக்கு
 26. வணக்கம்
  ஜி
  கருத்து பகிர்வுக்கு நன்றி.. படித்து அறிந்து கொண்டேன்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 27. மிகவும் அருமை. ரசித்தேன். வார்த்தைகள் எப்படி கையாளுகிறீர்கள் என நினைத்து ஆச்சரியம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகைக்கு நன்றி தங்களைப் போன்றவர்களின் கருத்துரைகளே இதற்க்கு காரணம்.

   நீக்கு
 28. வணக்கம் சகோதரரே.

  நல்ல நகைச்சுவைப் பதிவு. பொருத்தமான பெயர்கள் பொருத்தமான இடத்தில் சற்றும் மிகை படாமல் பொருந்தி வந்திருக்கிறது.கற்பனைக்கு பாராட்டுக்கள். தங்கள் பதிவுகளை உடனுக்குடன் தொடர முடியாத சூழ் நிலைகளுக்கு வருந்துகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமானாலும் தவறவிடாமல் படித்து கருத்துரை தருவதற்க்கு நன்றி சகோ.

   நீக்கு
 29. பெயரில்லா6/11/2015 11:10 முற்பகல்

  எனக்குத் தெரியாம எவ அந்தச் சிறுக்கி.......
  தேவையானீ....
  பணம்கெடக்குன்னு தானே சொன்னேன்......
  என்று பல ரசிக்க வைத்தது.
  இனிமை சகோதரா.

  பதிலளிநீக்கு
 30. கொஞ்சம் ஓவர்தான்! ஆனாலும் திருமதிகள் இதில் கொஞ்ச அளவுக்காவது இருக்கின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி நண்பரே...

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...