தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 24, 2015

வாழ்க்கை எனும் ஓடம்

காலத்தை வென்றவன் நீ
A. L. Muthiah (1927-06-24)24 June 1927 ‘Kaviarasu‘ Kannadasan Today Birthday 24.06.2015

எல்லா மனிதர்களுமே, தன் வாழ்க்கை எனும் ஓடத்தை ஓட்ட ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கிறார்கள், சிலருக்கு அமைகிறது சிலருக்கு அமைக்கப்படுகிறது, இதில் கவிஞர்களுக்கு மட்டும் விதிவிலக்கு எல்லோருமே கவிஞர்களாக முடியாது, ஏனெனில் அதற்கு சராசரி மனிதர்களை விட சிறிதளவாயினும் கூடுதலாக மாறுபட்ட ''அறிவு'' எனச்சொல்வார்களே அது வேண்டும், இந்தக் கவிஞர்கள் வயிற்று பிழைப்புக்காகத்தான் கவிதை எழுதுகிறார்கள், இருப்பினும் தனக்கென ஒரு கௌரவத்தை தனி இடத்தை நிலைப்படுத்திக் கொண்டு வரவேண்டும் 

இந்த வகையில் எனக்குத் தெரிய சினிமாக் கவிஞர்களில் கவியரசர் கண்ணதாசன்  அவர்களை தவிர வேறு யாரும் இந்நிலையை கடைப்பிடித்ததில்லை பாடல்களில் சமூக கருத்துக்களை நமக்கு சொன்னவர் திரைப்படத்தின் கதைக்கு தகுந்தது போல் எழுதியவர் அறிவாளிகள் மட்டும் புரிந்து கொள்ளும் விதமாக, தனது சுயசரிதையையும் சேர்த்திருப்பார் உதாரணத்திற்கு...

தனது, பேரும் புகழும் நிலைத்திருக்க....
நான் காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

தனது, சொந்த வாழ்வில் சறுக்கல் விழுந்தபோது..... 
காலத்தில் அழியாக காவியம் தரவந்த, மாபெரும்
கவிமன்னனே உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்
உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா மகனே சந்தனம் சேறாகுமா

தனக்கு ஆத்திகத்தில் ஐயப்பாடு வரும்போது......
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

தனது குடும்ப வாழ்வில் விரிசல் காலகட்டத்தில்...
இரவுநேரம் பிறரைப்போலே
என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று
போனால் ஊரென்ன சொல்லும்

தன்மகள் பருவ வயதடையும்போது தந்தையென்ற நிலையில்....
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசிவர பூத்த பருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனிபோல நாணம் அதை மூடியதோனோ

(இது சில, காதலர்களுக்கும் பொருந்தும்)

இன்னும் சொல்லிக் கொண்டே... போகலாம் நான் சொல்ல வந்ததை, கீழே VIDEOவில் இணைத்திருக்கிறேன் கேட்டு மகிழவும். 

இன்றைய கவிஞர்கள் தன்னை தமிழன் என பீற்றிக்கொண்டு பிழைப்புத்தேடி வந்த பிற மொழிக்காரர்களை அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக புகழ்ந்து பாட்டெழுதுகிறார்கள், இதனாலும் கூட பலரும் தமிழர்களை ஆண்டு வந்து இருக்கிறார்கள், ஒருவேளை இவர்கள் கவிதைக்கு தயாரிப்பாளரிடம் பெற்றுக்க கொண்டு, தனியாக நடிகர்களிடமும் (பிறருக்கு தெரியாமல்) பெறுவார்களோ ! இது பாமரப்பயல்களுக்கு மட்டும் விளங்குவதில்லை. 

பண்டைய காலத்தில் புலவர்கள் மன்னர்களை வாழ்த்திப் பாடியதற்கும் இவர்கள் நடிகர்களை புகழ்வதற்கும் என்ன வித்தியாசம் ? அவர்களாவது போரில் வெற்றி பெற்ற வீரத் தமிழர்களைத்தான், புகழ்ந்தார்கள் இவர்கள் ? ? ?

தமிழர்களாம் ? இவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லும் இவர்கள் தமிழர்களாம் ? அதிலும் GREEN தமிழர்களாம் ? 
 
காணொளி.
இன்று இரவு இனிய இந்தியா வருகிறேன்.
கில்லர்ஜி.

47 கருத்துகள்:

 1. காலத்தால் அழியாத புகழ் பெற்ற கவியரசரின் பாடல்களை
  "ஹம் "செய்ய சொல்லி விட்டு ,
  ஜம் என்று கிளம்பி விட்டார் கில்லர்ஜி!
  தாயகத்திற்கு!
  இனிய பயணம் இன்புற்று அமைய எனது முதல்
  த ம வாழ்த்து 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே முத்தாய்ப்பான கருத்துரை தந்து எம்மையும் வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 2. அருமையான கவிஞருக்கு ஒரு பாமாலை! அருமையான தொகுப்பு!

  பதிலளிநீக்கு
 3. ஓய்வு இனிமையாக அமையட்டும்!

  பதிலளிநீக்கு
 4. கவிஞர் கண்ணதாசன் நல்ல கவிஞ. அதிகம் அவரது பாடல்கள் கேட்டது கிடையாது சார்.
  வாய்ப்பு கிடைக்கும்போது அவரது வனவாசம் படிக்கனும்னு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மகேஷ் வரவு கண்டு மகிழ்ச்சி கண்டிப்பாக படியுங்கள்.

   நீக்கு
 5. வணக்கம்
  ஜி
  இவர்கள் மறைந்தாலும் இவர்களின் தடயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஒவ்வொரு பாடலும் கருத்து தனிச் சிறப்பு ஜி.வீடியோப்பாடல் மிகஅற்புதம். த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ரூபனின் வருகைக்கும், காணொளியைக் குறித்து எழுதியமைக்கும் நன்றி.

   நீக்கு
 6. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாளுக்கு சிறப்பான பகிர்வு. எத்தனை எத்தனை விஷயங்களை தனது பாடல்கள் மூலம் சொல்லி விட்டார்....

  இந்தியா வருவது அறிந்து மகிழ்ச்சி. நானும் இப்போது தமிழகத்தில் இருக்கிறேன். மூன்றாம் தேதி வரை இங்கிருப்பேன் [திருச்சியில்].

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் ஜியின் வருகைக்கு நன்றி கண்டிப்பாக சந்திப்போம்.

   நீக்கு
 7. கண்ணதாசன் அவர்களுக்கு நிகர் அவர்தான். எளிமையாக, எல்லோருக்கும் புரியும்படியாக மிகப்பெரிய கருத்துக்களை மனிதர்களுக்கு கொண்டு சேர்த்தவர். இந்த காலை நேரத்தில் அவரை நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எமது தளத்திற்க்கு முதன் முறையாக வருகை தரும் நண்பர் திரு. சம்பத் கல்யாண் அவர்களை வரவேற்று கருத்துரைக்கு நன்றி கூறுகிறேன்.

   நீக்கு
 8. அமரத்துவம் பெற்ற கவிதைகளை இயற்றிய அமர கவி
  கவிஞர் கண்ணதாசனின் நினைவினைப் போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கண்டிப்பாக நினைவு கூறவேண்டிய தமிழரல்லவா...

   நீக்கு
 9. அனைத்துத் தரப்பினருக்கும் பாடல்கள் எழுதிய கண்ணதாசனை நினைவுகூர்ந்தமையறிந்து மகிழ்ச்சி. தாய்நாட்டிற்கான உங்களது வருகை சிறப்பாக அமையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் கருத்துரைக்கும், எமது வரவு குறித்து வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 10. காலத்தால் அழிக்க முடியாத (அனுபவ) பாடல்கள் ஜி...

  சந்திக்க ஆவலுடன் உள்ளேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஜி காலத்தால் அழிக்க முடியாது.... நிச்சயமாக சந்திப்போம்.

   நீக்கு
 11. காலத்தால் அழியாத அந்த கவியரசரின் பிறந்தநாளை அருமையாய் பதிவின் மூலம் கொண்டாடியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

  தாய் நாட்டிற்கு வரும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கருத்துரைக்கும், எம்மை வரவேற்பதற்க்கும் நன்றி.

   நீக்கு
 12. கண்ணதாசன் இலக்கிய உலகிலே
  இமயத்துக்கும் மேலே...
  இல்லை...
  யாம் காணும்
  விண்ணுக்கும் மேலே

  அவனைப் புரிந்தவர் சிலரே.

  அவனும்
  "அவனை"ப் புரிந்தபின்னே தானே
  அவனியில்
  அவனுக்கென
  ஓர் இடம் கிடைத்தது !!

  சுப்பு தாத்தா.
  உங்களுடைய இன்னொரு பதிவுக்குப் பின்னோட்டம் இடலாம் என்று இருந்தேன். எனினும் இந்தப் பதிவு என்னைக்
  கட்டிப்போட்டு விட்டது.
  www.subbuthathacomments.blogspot.com
  www.movieraghas.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாத்தாவின் வருகை கண்டு மகிழ்ச்சி தொடர்ந்தால் சந்தோஷமே.....

   நீக்கு
 13. கண்ணதாசன் பதிவைப் படித்தபின் புரிந்தது.
  நீங்கள்
  கில்லர் ஜி அல்ல.
  வின்னர் ஜி

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாத்தா தங்களிடம் ஒரு உதவி ஒரு பாட்டு எழுதி இருக்கிறேன் பாடித்தர வேண்டும் பிறகு தொடர்பு கொள்கிறேன் இனிய இந்தியாவுக்கு வருவதால் கொஞ்சம் பிஸி.
   வருகைக்கு நன்றி தாத்தா.

   நீக்கு
 14. கண்ணதாசனின் பாடல்களுடன் அவரை நினைவு கூர்ந்தது நன்று, பல கவிஞர்களும் செய்வதுதான் அது. உண்மை நிகழ்வுகளைக் கற்பனைச் சேலையுடுத்தி பளிச்சிடச் செய்வது இவருக்குக் கைவந்த கலை. .இந்தியா நிரலில் பெங்களூரு இருக்கிறதா.? என் வீட்டுக் கதவுகள் உங்களுக்காகத் திறந்திருக்கும் . வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோ,
  கவிஞரின் ஒவ்வொரு நிலையின் பாடல்களையும் விளக்கியது அருமை,
  அவரின் எழுத்து நடை எனக்கு பிடிக்கும்.
  அவரின் பாடல் தாங்கள் சொன்ன விதம் சூப்பர்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. கவிஞர் கண்ணதாசனுக்கு உங்களின் இந்த அருமையான பதிவு ஒரு அழகிய சமர்ப்பணம்!

  பதிலளிநீக்கு
 17. தமிழ் சினிமாவின் வரம் இந்த காலத்தை வென்ற கவிஞன்

  பதிலளிநீக்கு
 18. அழகு.. அருமை..

  கவியரசரை நினைவு கூர்ந்த விதம் சிறப்பு..

  அத்தோட - தமிழ்ப் பால் குடிச்சதுக்கு சரியான சவுக்கடி!..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 19. இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள். தமிழ் உள்ளவரை அவன் பாடல்கள் தமிழர்கள் நாவில் ஒலிக்கும். சிறுகூடல்பட்டி கவிஞரின் புகழ் பாடிய தேவகோட்டை கில்லர்ஜிக்கு மனமார்ந்த நன்றி.
  த.ம.13

  பதிலளிநீக்கு
 20. பாவலன் (கவிஞன்) சாவதில்லை
  பாவலன் (கவிஞன்) சாவடைந்ததாக வரலாறுமில்லை.
  பாரதியின் குயிற்பாட்டு
  கண்ணதாசனின் தத்துவப்பாட்டு
  இன்றும் - அவர்கள்
  வாழ்வதற்கு எடுத்துக்காட்டு!
  வாழ்க்கையின் அத்தனை பக்கங்களையும்
  அலசி எழுதிய பாவலன் கண்ணதாசனின் படைப்புகள்
  அவரை
  நேரில் கண்ட சுகத்தைத் தருமே!

  பதிலளிநீக்கு
 21. எனக்குத் தெரிந்து கவிஞரைப் போல மீண்டும் ஒருவர் பிறக்கவில்லை! பிறக்கவும் முடியாது! அவரின் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 22. பெயரில்லா6/24/2015 5:02 பிற்பகல்

  நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி அன்பரே!

  முனைவர் சாந்தமூர்த்தி

  பதிலளிநீக்கு
 23. கவியரச கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் ...நினைவு கூர்ந்த விதம் அழகான சிறப்பு

  தம +1

  இனிமையான விடுமுறைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் கில்லர் ஜி !

  அருமையான பதிவு கவிஞர் கண்ணதாசன்
  கனவிலேனும் வந்துன்னைக் கட்டி அணைத்து வாழ்த்தட்டும் வாழ்க வளமுடன் !

  நீபிறந்த நாளின்று
  நிலமெங்கும் தமிழ்வாசம்
  பூபிறந்த மரம்போலே
  புன்னகையில் தவழ்கிறது !

  நீ தும்மும் நேரத்தில்
  நினைவுகளும் கவியாகும்
  பா விம்மும் உனைக்காணப்
  பசுமரவே மகிழ்வாயோ !

  ஒவ்வோர் வரியுள்ளும்
  உன்மூச்சு தெரியுதையா
  அவ்வோர் மூச்சுள்ளும்
  அருந்தமிழே வீசுதையா !

  ஒன்றல்ல ஆயிரங்கள்
  உன்நாவில் சந்தங்கள்
  எந்நாளும் பொழிந்திடுமே
  எவருக்கும் பொருந்திடுமே !

  அர்த்தமுள்ள இந்துமதம்
  அழியாத இறைசொத்து
  அற்புதமாய் ஆனதற்கும்
  அறிவுன்றன் ஆன்மாதான் !

  கண்ணே கலைமானே
  கவிதையினை எழுதையிலே
  கடைசிப் பாட்டிதென்று
  கண்டிருக்க வாய்ப்பில்லை !

  மண்ணே நீயுண்ட
  மரகதத்தை என்செய்தாய்
  பெண்ணாகப் படைத்துவிட
  பிரம்மனையே கேட்டாயோ !

  இறக்காத மனிதன் நீ
  என்பதனால் எல்லோரும்
  பிறந்திட்ட உன்நாளை
  பிரியமுடன் வாழ்த்துகிறோம் !

  கடைசியாகப் பாடல்களில் அசத்திட்டீங்க பொருத்தமான தொகுப்பு மிக்க நன்றி கில்லர் ஜி


  தமிழ்மணம் +1

  பதிலளிநீக்கு
 25. கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளான இன்று உங்களுடைய பதிவு அழகானது. இந்த பதிவில் நீங்கள் இந்தியாவுக்கு வரும் சந்தோஷமும் உங்கள் முகத்தில் தெரிகிறது சகோ.

  பதிலளிநீக்கு
 26. இன்னும் படித்துக் கொண்டெ இருக்கலாம். .....

  பதிலளிநீக்கு
 27. கண்ணதாசன் பாடல்கள் நமது ஒவ்வொரு சூழலுக்கும் நினைவுக்கு வரும். நம்மை ஆற்றுப்படுத்தும். மகிழ்ச்சி, சோகம் எல்லாவற்றுக்கும் பொருந்தும். இங்கு நீங்களும் நல்ல பாடல்களை உதாரணம் காட்டியிருக்கிறீர்கள் நன்றி நண்பரே!
  த ம 17

  பதிலளிநீக்கு
 28. தாயகம் வரும் கில்லரே! நலைநகர் வந்தால் இந்த கிழவனைக் காண வாருங்கள்! என் தொலை எண்-- 9094766822

  பதிலளிநீக்கு
 29. பார்த்தோம்...படித்தோம், கேட்டோம் ரசித்தோம்,,,

  அவரைப் போன்று இனி ஒரு கிவிஞர் பிறப்பாரோ?!!!

  இந்தியா வந்தாயிற்றா?!!!! எங்கெல்லாம் உங்கள் காலடி பட இருக்கின்றது?!!! பாலக்காடு, சென்னை வரவு உண்டா? என்றால் சொல்லுங்கள்....ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்துவிடலாம் ....என்ன சொல்கின்றீர்கள்?!!!

  பதிலளிநீக்கு
 30. கண்ணதாசனே ,கண்ணதாசனே வந்து விடுன்னு என்று பாடத் தோன்றுகிறது .அவர் வர மாட்டார் ...நீங்களாவது மதுரைக்கு வருவீர்களா :)

  பதிலளிநீக்கு
 31. கண்ண தாசனை நினைவு கொண்டு அவர் பாடல்களை வரிசைப் படுத்தி பெருமைப் படுத்தி இட்ட இப் பதிவுக்கு நன்றி!அவர் பாடல்களை ரொம்ப ரசித்துக் கேட்பேன் சோகப் பாடல்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும் அழுது கொண்டே கேட்பேன். மிக்க நன்றி ! காணோளிக்கும் பதிவுக்கும்.
  ம்.ம்.ம் பயணம் இனிதாக என் வாழ்த்துக்கள் .ஜி ..!

  பதிலளிநீக்கு