தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 07, 2016

பதிவர்களை அறிமுகப்படுத்துவீரே...


பதிவர்களை அறிமுப்படுத்தும் தொடர் பதிவு ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்த புதுக்கோட்டை கவிஞர். திருமிகு. நா. முத்து நிலவன் அவர்களால் கவிஞர். திருமிகு. மீரா செல்வக்குமார் அவர்கள் அவரது பதிவில் என்னையும் கூட அறிமுகம் செய்து விட்டார் இதை நானும் தொடர வேண்டுமாம் நான் எனது வலைப்பக்கத்தில் பிறருடைய தளங்களை இணைக்கவில்லை ஆனால் ? அவர்களின் பதிவு வெளியான மறுநொடி படித்து விடுவேன் சில நேரங்களில் கருத்துரை இடுவது தாமதமாகலாம் காரணம் இங்கு காலையில் வேலைக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து செய்து நாட்டுக்கு அனுப்பி விடுவார்களாம் இருப்பினும் அவர்களுக்கு முதல் கருத்துரை கொடுப்பது நாமாக இருக்க வேண்டும் என்பது எமது கொள்கை மட்டுமல்ல, ஆசையும்கூட ‘’இந்த தளத்தில் இணைக’’ என்று இருக்கும் தளங்களில் நான் இணைந்திருந்தால் அவர்களின் தளத்தில் நிச்சயமாக எமது கருத்துகள் இருக்கும் எனது பதிவுகளை தொட்டவர்களையே தொடர்பவன் நான் தொடர்பவர்களை விடுவேனா ? முகத்தாட்சினியம் என்று சொல்வார்களே அதற்காக நான் அவர்களது தளம் செல்வதில்லை எழுத்தாட்சினியம் நடத்தும் ஏகாந்த சொல்லாற்றல் உள்ளவர்களின் தளத்துக்கு செல்பவன் இதன் காரணமாகத்தான் இன்றைக்கும் தமிழ் மணத்தில் 500 வது இடங்களுக்குப் பிறகு இருக்கும் ஒரு சில முகம் அறியாதவர்களின் தளங்களுக்கும் செல்கிறேன் காரணம் அந்த எழுத்தில் அவர்களின் அகம் தெரிகின்றது நான் சரியை சரியென்றும், தவறை தவறென்று எழுதி விட்டு வருபவன் இதன் காரணமாக கூட சிலர் எமது தளம் வருவதில்லை எமது கருத்துக்கும், அவர்களது கருத்துக்கும்தான் வாதம் இருக்கின்றதே தவிற எனக்கும், அவர்களுக்கும் அல்ல ! வழக்கம் போல அவர்கள் எமது நண்பர்கள் என்பதே எமது திண்ணமான எண்ணம் எமது பதிவுகளில் எத்தனையோ முறைகள் ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் பாராட்டி எழுதி இருக்கின்றார் பலமுறை தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார் இந்தக் கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும் இதற்காக நான் அவரை எதிரியாக கருதினால் ? அது எனது அறியாமை இதற்காகவா மனவருத்தம் கொள்வது ? கருத்துரைகளில் சர்ச்சை வருவது அறியாத அரிய பல நல்ல விடயங்களை, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வெளியே கொண்டு வரும் இதோ எனது சிற்றறிவுக்கு எட்டிய பத்தரை மாற்றுத் தங்கங்கள் பத்து ந(ண்)பர்கள் (அப்படியானால் மற்றவர்கள் தங்கம் இல்லையா ? எனக் கேட்டு விடாதீர்கள் மற்றவர்கள் வைரங்கள்10 நபர்களை மட்டும் அறிமுகப்படுத்துவதே மரபு)

01. பொதுவாக அம்மா மீது அன்பு வைப்பவர்கள் அதிகம்பேர் உண்டு அப்பாவின் மீது பாசம் வைத்து இருக்கும் மனிதர்களை காண்பது அபூர்வமே இதோ ஐயா திரு. ஜியெம்பி என்ற 76 வயது இளைஞரின் அப்பாவைப்பற்றி அறிய வாருங்கள்.

02. திருக்குறள் அனைவரும் அறிந்த விடயமே இருப்பினும் திரைப்படப் பாடல்களையும் திருக்குறளையும் பந்தப்படுத்தி பதிவுகளைத் தருபவர் திரு. திண்டுக்கல் தனபாலன் இவர் குட்டிக்கதைகளையும் இணைத்து வழங்குவதில் வல்லவர்.

03. தமிழ் அகத்தில் ஹிந்தி நுழைப்பைபற்றி எல்லோருக்கும் ஓரளவு தெரியும் அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரை அறியத்தரும் திரு. வே. நடனசபாபதி அவர்களின் நீண்ட சரித்திர தகவல்கள் காண வாருங்கள்.


04. குட்டிக் கவிதைகளில் பெரிய விடயங்களைச் சொல்லும் இவர் புதுக்கோட்டை மாவட்ட நிகழ்வுகளை தினத்தந்தி போல் உடனுக்குடன் சுடச்சுடத்தரும் செய்தியாளரும் கூட கவிஞர். திருமதி. Geetha M அவர்களின் இந்தக் கவிதையை படியுங்களேன்.

05. பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை படித்து போற்றப்படக் கூடிய விடயங்களை அலசி அவைகளின் இணைப்புகளைத் தரும் திரு. ஸ்ரீ ராம் அவர்களின் பக்கம் வாருங்களேன்.


06. எல்லோருமே மேலோட்டமாக டமில் படித்திருக்கின்றார்கள் ஆனால் ? தமிழ் படித்திருப்பவர்கள் குறைவானவர்களே.... இனியெனினும் இனிய தமிழ் படிக்க வேண்டுமா ? படிப்போரே கற்போரே... வாருங்கள் இதோ பேராசிரியர் முனைவர். திருமதி. மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களின் தளத்துக்கு.


07. மருத்துவ விடயங்களை அறிந்து வைக்க வேண்டிய சூழலில் நாம் வாழ்கின்றோம் இருப்பினும் சொல்லித் தருபவர்களை நாம் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விட்டோம் இதோ சொல்லித் தருகின்றார் திரு. கிருஷ்ணா ரவி இவரின் மருத்துவ குறிப்புகளை பாருங்களேன்.

08. சமூகத்தில் தவறு செய்பவர்கள் காந்திஜியாக இருந்தாலும் சரி, கில்லர்ஜியாக இருந்தாலும் சரி அதை அம்பலப்படுத்தி காட்டும் பதிவர் நேதாஜியின் சீடர் போன்றவர் திரு. வலிப்போக்கன் இந்தப் பாடலைக் கேளுங்கள் கண்ணீர் வரும்.


09. வெளிநாடுகளில் வாழும் என்னைப் போன்றவர்களை ருசியான உணவுக்கு ஏங்க வைக்கும் திருமதி. Saratha J அவர்களின் சமையல் குறிப்புகளை அள்ளி வீசும் இவருடைய பதிவுகளை பாருங்கள் இந்த குறிப்புகளை படித்துதான் நான் தினமும் செய்து சாப்பிடுகின்றேன் கனவில்.


10. இளம் கன்னியர்களுக்கு காதல் ரசம் வடிக்கும் கவிதைகளை தரும் புதியவர் கன்னியாகுமரி காதல்க்குமரன் திரு. Ajai Sunilkar Joseph இவரின் இந்தக் கவிதையை படித்துப் பாருங்களேன்.

இவ்வகை பதிவுகள் பதிவர்களை இணைக்கும் பாலம்
’’தொட்டார் மனதுக்குள் இடாதோர் பிணக்கு
கனி மனதுள் வருமோ இழுக்கு’’
என்ற கில்லர்ஜி குரல் போல் உண்மையானதே...

இதில் கலந்து கொண்டு தொடர வலையுலக நண்பர்-நண்பிகள் அனைவரையும் அழைக்கின்றேன் – தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

75 கருத்துகள்:

  1. முத்துக்கு முத்தாக - பத்து அறிமுகங்கள்..

    நல்லதொரு முயற்சி.. தொடர வேண்டும்!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. தொட்டார் மனத்துக்குள் இடாதோர் பிணக்கு
    கனி மனதுள் வருமோ இழுக்கு---- கில்லர்ஜீயின் குரல் என்னென்றும் உண்மையானதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை ஒத்துக்கொண்ட உண்மையானவருக்கு நன்றி

      நீக்கு
  4. அசத்தல் அறிமுகங்கள் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. ஆஹா,, நன்றி சகோ, உங்கள் குரல் நல்லா இருக்கு, நானும் தொடர்கிறேன் சகோ, ஆனால், கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்.எப்பவும் போல், தங்கள் வழி தனி வழி தான்,, அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி சகோ,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எப்போதுமே எனது பாதை வேறு மாதிரியாகத்தான் இருக்கும்.

      நீக்கு
  6. எ(ங்கள்)ன் பெயரையும் கண்டு மகிழ்ந்தேன். நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா பத்து பதிவர்களில் என்னையும் அறிமுகப்படுத்தி இருப்பது சந்தோஷமாக இருக்கு சகோ. நீங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் எல்லா பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  8. அய்யா சாமீ நீங்க நல்லா இருப்பீங்க அய்யா!
    என்பெயருக்கு முன்னால் உள்ள “மன்னர்”பட்டத்தை அன்புகூர்ந்து எடுத்து என்னைப் பழிச்சொல்லிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்.
    உங்கள் பிரச்சினை ஓரளவு புரிந்ததால்தான் உங்களை என் பட்டியலில் சேர்க்காதிருந்தேன். அதோடு, மா3, 8பது போலும் உங்கள் தமிழ்நடை எனக்கு உடன்பாடில்லை. (இதைத் தங்களிடமே பல முறை சொல்லியிருக்கிறேன், ஏனோ அதில் தாங்கள் கவனம் செலுத்துவதில்லை. மாற்றம் வேண்டியதுதான், ஆனால் அது முன்னேற்றமாக இருக்க வேண்டும் (அன்புமணிமாதிரி இருக்கக் கூடாது) தவறெனில் மன்னியுங்கள். நட்பு எப்போதும் போலத் தொடரும். நானும் உங்கள் நல்ல பதிவுகளைத் தொடர்வேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே நான் தற்போது அந்த மாதிரி எழுதுவதில்லையே நிறுத்தி விட்டேனே இதில் பெரிய வார்த்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

      என்னை திட்டுவதாக இருந்தால் நேரடியாகவே திட்டி இருக்கலாம் அன்புமணியுடன் சேர்த்து விட்டீர்களே....

      வழக்கமாக நான் ’’கலக்கல் மன்னன்’’ என்றுதான் எழுதுவேன் தங்களின் விருப்பப்படி இதோ மாற்றி விடுகிறேன் வருகைக்கு நன்றி கவிஞரே...

      நீக்கு
    2. தங்களின் அன்புக்கும், எனது கருத்தை ஏற்று மாற்றம் செய்தமைக்கும் எனது நன்றி கலந்த வணக்கம். (அ்யயா இந்தக் கலக்கல் மன்னனும் வேணாம்யா! இங்க அதுக்கு அர்த்தமே வேற! தெரியாதா?)

      நீக்கு
    3. போக்கிரியாக திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு நடிகனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து அந்தப் பட்டத்தின் விலா எலும்பையே ஒடித்து விட்டது இந்த கேடுகெட்ட சமூகம் பேச்சாற்றலால் தமிழ் நாட்டையே கலக்கும் தங்களை கலக்கல் மன்னன் என்பதில் தவறில்லை என்று கணித்தேன் மீள் வருகைக்கு நன்றி கவிஞரே...

      நீக்கு
  9. அருமையான அறிமுகங்கள்....அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அறிமுகங்கள் தந்தமைக்கு நன்றி. உங்கள் அறிமுக வலைப்பதிவர்களில் சிலரை மட்டுமே வாசிக்கிறேன். மற்றவர்களையும் இனி தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. Internal Server Error

    The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request.

    Please contact the server administrator, and inform them of the time the error occurred, and anything you might have done that may have caused the error.

    More information about this error may be available in the server error log.

    Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

    பதிலளிநீக்கு
  12. அனைவரும் தெரிந்தவர்கள் தான் என்றாலும் பதிவுலக சகோதரர்கள், சகோதரிகள் சிலரை இங்கே மிக அழகாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள்! அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

      நீக்கு

  13. நல்ல அறிமுகம் நண்பரே. எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.....

      நீக்கு
  14. அன்பு கில்லர்ஜிக்கு வணக்கம் என் பின்னூட்டங்களே எனது பலமும் பலவீனமும் முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தேன் அதில் தவறுதலாகத் பெரும்பாலும் அதிகம் திறக்கபடுவது வாயே என்னும் அர்த்தத்தில் எழுதி இருந்தேன் அதையே நானும் செய்கிறேனோ என்று எண்ணுவதும் உண்டு. பதிவர்களின் எழுத்தே அவர்களை முன்னிலைப் படுத்தும் ஒரு வேளை சிறிது கால தாமதமாகலாம் யாரையும் நான் அறிமுகப்படுத்தப் போவதில்லை/ வருத்தமோ கோபமோ வேண்டாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதில் கோபப்பட ஒன்றுமில்லை தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு ?அதனால் என்னை விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  16. அனைத்து வலையுலக தோழமைகளுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. மீண்டும் தொடர் பதிவு விளையாட்டா? மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தொடங்கியவர் கவிஞர். நா. முத்து நிலவன் அவர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. ஆஹா அருமை ஐயா.இதில் நான் ஏற்கனவே பாதி பேரை தொடர்கிறேன் மீதி உள்ளவரையும் தொடர போகிறேன் ஐயா.நன்றி ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. ஆஹா அருமையான விஷயம்,மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  21. நல்ல முயற்சி. சிலர் எனக்குப் புதியவர்கள்.

    பதிலளிநீக்கு
  22. பதிவர்களை பின்தொடர்கிறேன்,,,

    பதிலளிநீக்கு
  23. வலைச்சரம் இல்லாத குறையை போக்கி விட்டது இந்தப் பதிவு

    பதிலளிநீக்கு
  24. நல்ல பகிர்வு ! எல்லோருக்கும் வாழ்த்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. அறிமுகங்கள் அறிமுகமானவர்களே. பகிர்வுக்கு நன்றி. அது எப்படி உங்களால் கோபப்படாமல் இருக்கமுடிகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே கோபத்தால் இழப்புகளே மிச்சம் இவை நான் பிறர் சொல்லக் கேட்டது இல்லை அனுபவப்பட்டு உணர்ந்து கொண்ட உண்மை.
      வாழும் காலம் கொஞ்சமே.... போகும் தூரம் ? ? ?

      நீக்கு
  26. பத்து முத்துக்களில் 
    ஒரு முத்தாய் என்னையும் 
    அறிமுகம் செய்த 
    நண்பரே.....
    உமக்கு நன்றி ஐயா....
    இப்பதிவுக்கு முதல் கருத்துரை
    இட முடியவில்லை என்பதில் ...
    வருத்தம் தெரிவிக்கிறேன் அன்பரே....
    நன்றி நன்றி நட்பரே....
    இணையம் தந்த இதய நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2 ஐடி இருக்கின்றதா ?

      நீக்கு
    2. நண்பரே அது என் நண்பரின் ஐடி
      அவரது ஐடி ஆக்டிவ்ல இருப்பது
      மறத்து கருத்திட்டேன் நண்பரே...

      நீக்கு
  27. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் எல்லோரையும் தொடர்கின்றோம். ஓரிருவரைத் தவிர. அவர்களைப் பல தளங்களில் கண்டாலும் நேரம் போதவில்லை என்பதால் தொடர முடியவில்லை. இனியேனும் முயற்சி செய்ய வேண்டும். நல்ல அறிமுகண்கள் கில்லர்ஜி. எல்லோருக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. எப்பவும் கில்லர் ஜி ..தனி தான் எழுத்திலும்,சிந்தனையிலும்...வாழ்த்துகளும் நன்றியும் ஜி...

    பதிலளிநீக்கு
  29. நல்ல முயற்சி. வாழ்த்து.

    இன்னும் அறியப்படாத, பிரபலமாகாத, விருப்பமுள்ள நல்ல பதிவுகளை/பதிவர்களை அடையாளம் காட்டுங்கள். கூடினால் அதையே கூட வேறொரு தனிப் பதிவாக இடுங்கள்.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/03/blog-post_8.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி தங்களது கருத்தை ஏற்கிறேன் தங்களின் தளம் வந்தேன் திறக்க முடியவில்லையே...

      நீக்கு
    2. ம்ம்ம்ம்...தெரியவில்லையே.
      முடிந்தால் "Concurrent Musings" என கூகிளிட்டுப் பாருங்கள். நாமும் ஓரளவிற்கு ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு ரெண்டு மூணு "சூடான" இடுகைகள்*** போட்டுள்ளேன். *** இடும்போது அது சாதா இடுகையாகவே இட்டேன், சூடானதாக ஆனது வந்து பார்த்து படித்தவர்களின் பொறுமை.!!

      நீக்கு
  30. நண்பரே ! பல்வேறு பணிகளின் காரணமாக ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன் ...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள். புதிய சிந்தனைகளுடன் செயல்படுகின்றீர்! லகான் கட்டிய குதிரை போல எம் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது! ௫௦ வயது தாண்டினாலே ஞாபக மறதி வந்து விடும் போல... இனி மறவாமல் தொடர்கிறேன் நீங்கள் அறிமுகப்படுத்திய தளங்களுக்கும் வாசிக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பர் தொடர்வது சந்தோஷமான விடயமே...

      நீக்கு

  31. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி திரு KILLERGEE அவர்களே! அறிமுகப்படுத்தும்போது பத்தரை மாற்றுத் தங்கம் என சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் அந்த அளவுக்கு உயரவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பொழுதுதோ நடந்த விடயங்களை விரல் நுனியில் வைத்து இருக்கும் தங்களை அப்படிச் சொல்வதில் தவறில்லை நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  32. தாமத வருகைக்கு மன்னிக்கவும்...என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி....அஜய் சகோ எப்படி எனது வலைப்பூவை பார்த்தார் என்ற மாபெரும் சந்தேகத்தை தீர்த்து வைத்த சகோவே நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்களை அறிமுகப்படுத்துவதே உங்களை வைத்து நாமலும் 4 பேர் அறியப்படுவோமே என்ற நப்பாசைதான்.

      நீக்கு