தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 29, 2016

உயிரின் விலை உயருமா ?


இப்படி தொங்கி கொண்டு போவது யார் படிக்காத பாமரனா ? இல்லையே பட்டம் படிக்கும் கல்லூரி மாணவன்தானே இவனுக்கு உயிரின் மதிப்பு தெரியாதா ? அப்படியென்ன அவசரமாக போகவேண்டும் கணினியில் உலக எவ்வளவு விடயங்கள் படிக்கின்றான் ஓட்டுனர் சிறிய பிரேக் அடித்தால்  இவன் நிலையென்ன என்பது தெரியாதவனா ? இவன் அடிபட்டு இறந்து விட்டால் அதற்கு காரணம் ஓட்டுனரா ஓட்டுனராகவே இருக்கட்டும் இழப்பு யாருக்கு ? பெற்றோருக்குத்தானே இனி கொள்ளி வைக்க மகன் ? இனி பிறக்க வழியில்லை காரணம் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று அன்றே குடும்பக் கட்டுப்பாடு செய்தாகி விட்டது நாம் அரசாங்கத்தை குறை சொல்கிறோம் இந்த பேருந்தில் முதல்வரோ, போக்குவரத்துதுறை அமைச்சரோ பயணம் செய்யப்போவதில்லை தெரிந்தாலும் அவர்களுக்கு இதைப்பற்றி சிந்திக்க நேரமில்லை அவர்கள் பங்குக்கு படியில் பயணம் நொடியில் மரணம் என்று மக்(கு)களுக்கு சித்தாந்த வரிகளை எழுதி வைத்து விடுகின்றார்கள் டாஸ்மாக்கை திறந்து வைத்து குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும், என்றும் சிகரெட் கம்பெனிகளுக்கு தாராளமாக சலுகைகளை வழங்கி விட்டு புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பது போன்ற வசனங்களை எழுதி வைக்கின்றார்கள் மேலும் அவர்களுக்கு தலைக்குமேல் ஆரிரமாயிரம் வேலைகள் இருக்கிறது (சலூனில் அல்ல) மக்களின் (தன்மக்களின்) வாழ்வாதாரத்தை உயர்த்துவது எப்படி என்று.


இந்த பயணிகள் பேருந்தில் கதவுகள் கண்டிப்பாக வைத்துதான் தயாரிக்க வேண்டுமென்ற கட்டாய சட்டத்தை இயற்றினால் என்ன ? அயல் நாடுகளில் கதவுகள் மூடினால்தான் பேருந்து நகரும் அப்படியொரு தொழில் நுற்பம் தாங்கள் கேட்ககலாம் நீ அயல் நாட்டில் பார்த்து விட்டு இப்படி சொல்கிறாய் என்று இல்லை நண்பர்களே... கீழே பாருங்கள்.


இதுவும் நமது நாட்டில் ஓடும் பேருந்துகள்தானே இந்த முரண்பாடுகளால் மனித உயிர்களுக்குதானே நஷ்டம் அந்த உயிர்கள் கண்டிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும், அடித்தட்டு மக்களுக்கும் மட்டுமே ஒழிய பணக்கார வர்க்கங்களுக்கோ அல்லது அதிகார வர்க்கங்களுக்கோ அல்ல !

சரி இந்த அதிகார வர்க்கங்களுக்கு அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது  யார் கொடுத்தது ? நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும்தானே பிச்சை (ஓட்டு) போடும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை இல்லை, ஆனால் பிச்சை பெறுபவர்களுக்கு நல்ல வாழ்க்கை இது எந்தக்கடவுள் இட்ட சாபமோ தெரியவில்லை ஓட்டுரிமையின் தன்மை தெரியாத நமக்கு ஓட்டுரிமை எதற்கு ? மன்னர் ஆட்சியை பிரகடணப்படுத்தி விடலாம் இன்றைய ஆட்சியாளர்களும் வாரிசுகளைத்தானே கொண்டு வருகிறார்கள் மன்னர் ஆட்சி நடந்தாலும் கொள்ளை அடிக்க மாட்டார்கள் காரணம் நாம்தானே ஆள்கிறோம் என்ற எண்ணங்களால் சரித்திரத்தில் இடம் பெறுவோம் என்ற சிந்தனைகள் தோன்றக்கூடும் இவ்வுலகில் பெரும்பாலான மன்னர் ஆட்சி நடைபெறும் நாடுகளில் மக்கள் நல்ல வாழ்க்கையே வாழ்கின்றார்கள் கீழேயுள்ள புகைப்படத்தைப் பாருங்கள்.

இவர் யார் தெரியுமா ?

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் திரு. டேவிட் காமரூன் (தகவல் தந்த சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி) ரயிலில் அலுவலகத்துக்கு (பாராளுமன்றம்) செல்கிறார் உட்கார இருக்கை இல்லை காரணமென்ன ? அங்குள்ளவர்கள் நீயும் நானும் சமம் உனது வேலைதான் பிரதமர் நீ எங்களுக்கு கடவுள் இல்லை அதுவும் நாங்கள் உனக்கு போட்டுக்கொடுத்த வேலை என்ற சிந்தனையாளர்கள் நம் நாட்டில் ? 

ஒருமுறை சென்னை விமான நிலையத்தில் ஒரு அரசியல்வாதியின் சின்னவீடு ஏதோ வெளிநாட்டுக்கு போகின்றாள் நுழைவாயிலில் நின்ற சிலர் அவளின் காலை தொட்டு வணங்கினர் (இவன் பெற்ற தாயை வணங்கி இருப்பானா ?) மற்ற அனைவரும் அவளை வணங்கினர் அனைவர் முகத்திலும் ஒளிவட்டம் கடவுளைக் கண்டதைப்போல் அவள் அதை சட்டையோ, பேண்டோ செய்யாமல் போய்க்கொண்டே இருந்தாள் அந்த இடத்தில் அவளையும் சட்டை செய்யாமல் சிந்தனைக் கண்ணோட்டத்துடன் முகத்தில் சலனமின்றி ஒருவன் பார்த்துக்கொண்டு நின்றான் அவன்தான் கில்லர்ஜி.


நண்பர்களே... நண்பிகளே... மக்களாகிய நாம் ஐந்து  ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சிந்திக்கும் எண்ணமில்லை இனியாவது சிந்திப்போமே... நமக்கு வாக்குரிமை தேவையா... தேவையில்லையா ? வாக்கால் நமது வாய்க்கே வாக்கரிசி விழுகிறது மக்கள் எண்ணங்களில் மாற்றம் வராதவரை மாற்றமில்லை நமது வாழ்வில் ஏற்றமில்லை.

CHIVAS REGAL சிவசம்போ-
இந்த ஆளு விபத்தைக்குறித்து பதிவு போடுறார இல்லை அரசியல்வாதிகளை தாக்கி பதிவு போடுறாரா ?

சாம்பசிவம்-
விபத்து நடக்குறதுக்கு காரணமே அரசியல்வாதிகள்தானே...

சிவாதாமஸ்அலி-
டாஸ்மாக்குலே கிடக்கிற கூமுட்டை எல்லாம் கேள்வி கேட்குது.

காணொளி

33 கருத்துகள்:

 1. விபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பகிர்வோ என்று வாசித்தால் அரசியலுக்குள் அசால்ட்டாய் நுழைந்து இனிமேலாவது சிந்தியுங்கள் மக்களேன்னு முடிச்சிட்டீங்க.... நல்ல பகிர்வு அண்ணா...

  சிந்திப்போமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மக்கள் அனைவரும் இக்கருத்தில் உடன்பட வேண்டும்.

   நீக்கு
 2. கானொளியில் உள்ள பஸ் ,கேரளா பஸ் போல உள்ளது ,கடவுளின் தேசமாச்சே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உங்கள் கடவுள் மோசமாச்சே...

   நீக்கு
  2. பந்தைத் திருப்பி அடிக்கிறதில -
   என்ன ஒரு வில்லத் தனம்!?... (அவ்......வ்வ்)

   நீக்கு
 3. "அவன்தான் (கில்லர்ஜி) மனுஷன்."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி நான் பேச்சில் மட்டும் அல்ல செயலிலும் மாறுபட்டவனாக இருக்க விரும்புபவன்

   நீக்கு
 4. மக்கள் எண்ணங்களில் மாற்றம் வரவேண்டும் நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வரவேண்டும் வந்தால் மனிதகுலம் விளங்கும்

   நீக்கு
 5. சென்னையில் இருக்கும் கூட்டத்துக்கு எவ்வளவு பஸ் விட்டாலும் போதாது! மின்வண்டிகளிலும் கூட்டம். பேருந்துகளிலும் கூட்டம். ஷேர் ஆட்டக்கூக்களிலும் கூட்டம்... அம்மாடி.. ஆளாளுக்கு ரெண்டு மூணு வண்டி வச்சிக்கினு ரோடு பூராக் நெரிசல்.. என்னவோ போங்க.. இது ஆட்டு மந்தை மாட்டுச் சந்தை!

  :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் சமாளிப்பவர்களே நல்ல ஆட்சியாளர்கள் இவர்களுக்கு சேற்றை வாறி பூசிக்கொள்வதிலேயே 5 ஆண்டு காலம் முடிந்து விடுகின்றது பிறகு எப்படி செயல்படுவது.

   நீக்கு
 6. ஆனா என்னதான் சொன்னாலும் தொங்கிட்டு போனாதான் நல்லார்க்கும் போல பசங்களுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே ''விபரமறியா விட்டில் பூச்சிகள்'' படிப்பிற்கும், அறிவிற்க்கும் பந்தம் இல்லைதானோ...

   நீக்கு
 7. அவர் டேவிட் காமரூன். இங்கிலாந்துப் பிரதமர். இந்தியாவில் எல்லாம் இப்படி முடியாது. நல்ல அருமையான பதிவு. தேவையானதும் கூட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தகவலுக்கு நன்றி இதோ பெயரை இணைத்து விட்டேன்.

   நீக்கு
 8. இந்தமாதிரி பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு ஒரு த்ரில் இவர்கள் இளைஞர்களே என்ன எழுதினாலும் கடைசியில் அரசியல் வாதிகளுக்கு ஒரு கொட்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதுகெலும்பு உள்ள ஆள் - இந்த ஆள் தான் என்று -
   ஆனா வானா - வோட சின்னவீடு - அசந்தே போயிருக்கும்..

   எப்படியோ சேதாரமில்லாம வந்து ஆதாரமா பதிவைப் போட்டுட்டீங்க!...

   ஆனாலும் -
   இவிங்க எல்லாம் திருந்துவானுங்களா.. மாட்டானுங்க!..

   ஒரே ஒரு வைத்தியம் கைவசம் உண்டு...

   புளிய விளாறு!..

   நீக்கு
  2. ஹாஹாஹா வாங்க ஐயா உங்களிடமிருந்து இப்படி கருத்துரையை எதிர் பார்த்தேன் எனது கணிப்பு தவறவில்லை வருகைக்கு நன்றி.

   நீக்கு
  3. வாங்க ஜி சின்னவீடு என்னை கவனிக்கவில்லை ஜி
   அதென்ன ஜி புளிய விளாறு ?

   நீக்கு
  4. புளிய விளாறு - தெரியாதா!..
   ஆச்சர்யம்!..

   புளியங் கிளையின் சிம்பு மாதிரியான மெல்லிய நுனி!...

   காய்ந்து போனது கதைக்கு ஆகாது..

   பச்சைக்கிளையில இருந்து ஒன்றரை முழத்துக்கு நுனியை நறுக்கி எடுத்துக்கிட்டு - புளிய இலையை எல்லாம் உருவித் தள்ளிட்டு -

   அப்படியே காற்றில் ஒரு வீசு - வீசினால் - விஷ்க்!.. என்று சத்தம் கேட்கும்.. அது தான் சரியான பதம்..

   கம்பியைப் புடிச்சிக்கிட்டுத் தொங்குறவனுங்களோட Bx- ல
   அந்தப் புளிய விளாறால் நாலு வீசு வீசினால் - டப்பா டான்ஸ் ஆடிடும்!..

   எட்டு நாளைக்கு குந்த முடியாது.. குனிய முடியாது!..
   மத்ததுக்கும் போக முடியாது!..

   தன்னால திருந்துவானுங்க!.. அடங்குவானுங்க!..

   இதெல்லாம் அந்தக் கால கை வைத்தியம்!..

   இதப் போல இன்னும் திருக்கை வால். குதிரைச் சவுக்கு எல்லாம் இருக்கு..

   அதெல்லாம் லஞ்சம் வாங்குறவனுக்கும் ஊர்ப் பணத்தைத் திருடுறவனுக்கும்!..

   நீக்கு
  5. ஜி புளியமர விவகாரம் என்பதை அறிந்தேன் இருப்பினும் விளாறு என்பதுதான் சரியான விளக்கம் தெரியவில்லை திருக்கைவால், குதிரைச்சவுக்கு எல்லாம் ஐயா வீட்டில் மாட்டி வைத்திருந்தார் அறிந்தவை, ‘’உணர்ந்த’’வையே....
   உண்மைதான் இவைகளை வைத்து நாலு விளாசு விளாசினால் எல்லாம் சரியாகி விடும்.

   தகவலுக்கு நன்றி ஜி

   நீக்கு
 9. பஸ் உள்ள ஏறினீங்க சரி வெளியே வரும்போது திருநெல்வேலி அரிவாளோடு வந்துடீங்க போல....ஹாஹாஹாஹா இங்க அந்த ஊர் மாதிரியான நல்லதா எல்லாம் நடக்காது..இங்க தினம் போக்குவரத்து நெரிசல் ..மக்கள் கூட்டம். ம்ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல நீங்க சொல்லியிருப்பது சரியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஊருக்கு வரும்பொழுது பஸ்ஸுக்காக மக்கள் படும்பாட்டைக்கண்டு வேதனைப்பட்டு இருக்கின்றேன் எதற்காக நமது உரிமைகளை நாம் இழக்க வேண்டும் போராடித்தானே பெற்றோம் சுதந்திரம் அதை நம் நாட்டானிடம் இழக்க வேண்டுமா ?

   நீக்கு
 10. நல்ல பகிர்வு கில்லர்ஜி.... கதவு வைத்த பேருந்துகள் இருந்தாலும் சென்னையில் பெரும்பாலும் திறந்தே இருக்கின்றன. தில்லியில் கதவுகள் மூடியபிறகு தான் வண்டியை எடுக்கிறார்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களின் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 11. பெத்தவங்க நம்பிக்கையை வீணாக்குற கூட்டம் திருந்தாதுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. நல்ல மாடே ஒரு சூடு வாங்கியும் கேட்க மாட்டுது... ஓட்டு போடும் மாடா.. கேட்கப்போவுது....????

  பதிலளிநீக்கு


 13. உயிரின் விலை மதிப்பிட முடியாத வேளை
  உயிரின் விலை உயருமா என்பது
  நம்மாளுங்க எப்படி உணருவாங்க...?

  அருமையான வழிகாட்டல்
  தொடரட்டும் தங்கள் பணி

  பதிலளிநீக்கு
 14. சென்னையின் பேருந்துப் பயணம் பற்றி அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். சென்னையில் உள்ள பெரும்பான்மையான பேருந்துகளில் கதவுகள் இல்லைதான். ஆனால் கதவுகள் உள்ள பேருந்துகளில் பல மூடமுடியாத நிலையிலும், மூடக்கூடிய கதவுகளை சில ஓட்டுனர்கள் மூடாமல் இருப்பதும் தான் கொடுமை.
  கடைசியாய் சாம்பசிவம் சொன்னது சரியே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு