திரைப்படம் கண்டு பிடித்து 100 ஆண்டுகள்
கடந்து விட்டது.
திரைப்படங்களில் நம்பத்தகாத காட்சிகள்
வரும்போது நாம் ஏதாவது குறை சொன்னால் ? சினிமாதானே சும்மா பொழுது போகத்தானே கதைக்கு கால் உண்டா
? என்று மேதாவியைப் போல் கேள்விகள் வேறு. திரைப்படஙகளை பொழுது
போக்காக பார்க்கிறவன் படங்களைப் பார்த்து...
01. அன்பு செலுத்துவது ஏன்
?
02. கண்ணீர் சிந்துவது ஏன்
?
03. காதல் செய்வது ஏன்
?
04. கொலை செய்வது ஏன்
?
05. கடத்திச் செல்வது ஏன்
?
06. வெடிகுண்டு வைப்பது ஏன்
?
07. திருடுவது ஏன் ?
08. திருந்துவது ஏன்
?
09. மது அருந்துவது ஏன்
?
10. புகை பிடிப்பது ஏன்
?
11. பகை வளர்ப்பது ஏன்
?
12. விலைமாதரிடம் போவது ஏன்
?
உணர்ச்சிகள்தானே
? அப்படியானால் அந்த உணர்ச்சிகளை, கொடுப்பதில் உண்மை வேண்டாமா
?
நாம் கடந்த 86
ஆண்டு காலமாக, திரைப்படங்களை பொழுது போக்காக மட்டும் பார்த்திருந்தால்
? திரைத்துறையினரில் பலருக்கும் சம்பள நிலை இன்றைக்கு கோடிகளை
தொட்டு இருக்குமா ? இந்நிலைக்கு யார் காரணம் ? அறியா மடந்தைகளாய், ஆட்டு மந்தைகளாய், சிந்திக்க மறுத்த
நாம்தானே காரணம். ஒரு கைவண்டித் தொழிலாளி நமது சிறந்த அரசாங்கத்தின் விலைவாசி
உயர்வால் சிறிய அளவுதான் இரண்டு ரூபாய், உயர்த்தி கேட்பார் உடனே இந்த மேதாவிகள்
சட்டம் தெரிந்தவர்கள் போல், பேசுவார்கள். திரைப்பட நடிகர்களுக்கு மட்டும் சம்பளம்
கூடுகிறதே அது எப்படி ? யாருடைய பணத்தில் ? அவர்கள் கேட்டதும் கூடுகிறதே இதன் பின்னணி என்ன
? என்றாவது நீ சிந்தித்ததுண்டா ?
கேட்டால் இறைவன் அவர்களுக்கு விதித்த விதி
என்கிறாய், இறைவன் இருக்கிறான் என்பது உண்மையானால் ? விதி என்பது உண்மையானால் ? அந்த இறைவன் படைப்பில் எல்லோரும் மனிதர்தானே ஏனிந்த
ஏற்றத்தாழ்வு ? இந்த ஏற்றத்தாழ்வை நிர்ணயித்தது இறைவனென்றால்
? திரைப்பட
நடிகர்களுக்கும், கைவண்டித் தொழிலாளிகளுக்கும் சம்பளம் நிர்ணயித்தது யார்
? எல்லாம் அறிந்த இறைவனா ? ஏதும் அறியாத மனிதனா ? மனிதன்தானே பிறகு ஏன் இறைவன் விதித்த விதி என்கிறாய்
? இவர்களெல்லாம் உழைப்பால் உயந்தவர்கள் அல்ல காரணம் இதே போல்தானே நாடக நடிகர்களும் உழைக்கிறார்கள்
அவர்கள் ஏன் உயரவில்லை ? இவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற்றிருந்தால் இந்நிலைக்கு
வருவது சாத்தியமும் அல்ல ! ஆகவே இவர்கள் நமது அறியாமையால் உயந்தவர்கள்.
நமது அறியாமையால்
இன்று வளமாய் வாழ்வது இவர்கள்.
நாளை வறுமையில்
வீழ்வது நமது சந்ததிகள்.
சாம்பசிவம்-
நாளை உமது சந்ததிகளில் யாராவது திரைப்பட
நடிகர்களாக வந்தால் ?
கில்லர்ஜி-
நான் சுவாசிக்கும் காணக் கிடைக்காத காற்றின் மீது சத்தியம் அவர்களும் இதில்
உட்பட்டவர்களே.
CHIVAS REGAL சிவசம்போ-
ஹூம் உருவமா இருக்கிற தலையில அடிச்சு
சத்தியம் செய்யிறதுலயே நம்பிக்கையில்லை இதுல காத்துல சத்தியமாம், காத்துல நல்லா
ஊத்துறாங்கய்யா காதுல...
காணொளி
ஹாய் கில்லர் ஜீ, வணக்கம் வணக்கம்..!!
பதிலளிநீக்குவணக்கம் றஜீவன் நன்றி
நீக்குஆஆஅவ்வ்வ்வ் இங்கின மீ 1ஸ்ட்டாக இருக்கலாம் எண்டு சந்தேகப்படுறேன்:) தமிழ்மணத்தில் இணைச்சேன்ன்ன்ன் சுத்திக்கொண்டே இருக்குதே:)
பதிலளிநீக்குசுத்தி விட்டு நிற்கும்
நீக்குஅவசரப்பட்டு..என்னைக் கீழே தள்ளி விழுத்திப்போட்டார் கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா ... இருப்பினும் பதினாறும் பெற்று “16” .. பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்:)..
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஆவ்வ்வ்வ் இணைஞ்சிட்டுது.. முதல் வோட்டும் போட்டிட்டேன்ன்:) சரி சரி படிச்சதும் கிழிச்சிடுங்கோ... இப்போ பகவான் ஜீ ஏன் ஜாமத்தில ஓவரா நித்திரை கொள்றார்?:) முன்பெனில் பேசிட்டுத்தானே நித்திரை கொள்ளுவார் .. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..
பதிலளிநீக்குமுடியலே ,அதிரா :)
நீக்குசரி சரி 18 மே உடன் நீங்க ஃபிறீ ஆகிடுவீங்கதானே பகவான் ஜீ.. அதுவரை ஏதோ இழுத்துப் பிடிச்சு நகர்த்துங்கோ:).
நீக்கு12 கிளவிகள் கேட்டு.. ஹையோ இண்டு முழுக்க எனக்கு டங்கு ஸ்லிப் ஆகுதே..கேய்வி கேட்டுச் சிந்திக்க வச்சிட்டீங்க:)..
பதிலளிநீக்குகில்லர்ஜி இன் சத்தியத்தைவிட, நான் தேம்ஸ் மேல பண்ணுவது எவ்ளோ பெட்டர் போல இருக்கே:)
நான் எப்போ கிழவிகள் கேட்டேன் ?
நீக்குதேம்ஸ் நதி கண்ணில் தெரியுமே...
நல்ல பயனுள்ள பதிவு. இப்போதைய இளைஞர்கள் திருந்த வேண்டும்.
பதிலளிநீக்குவருக சகோ திருந்தினால் நாடு நலம் பெறும்.
நீக்குநல்ல சிந்தனைகள் ஜி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஸ்ரீராம் ஜி
நீக்குமனுசன், செய்கிற தப்புத்தண்டாவுக்கெல்லாம் நியாயம் கற்பிக்க முடியாதபோது கடவுளைக் காரணம் ஆக்குகிறான்.
பதிலளிநீக்குகாற்றின் மீதல்ல, களிமண் மண்டைகளின் மீதே அடித்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள் கில்லர்ஜி.
அடியை இனி சம்மட்டி கொண்டே அடிக்க வேண்டும் நண்பரே
நீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குஇவர்கள் நம் அறியாமையால் உயர்ந்தவர்கள்தான்
தம +1
வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குஉண்மை ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குகில்லர் ஜீ, இரவு வணக்கத்தோடு ஓடிவிட்டேன். ஓட்டு கூட போடல - வெரி சாரி...
பதிலளிநீக்கு- அருமையான கேள்விகள் ஜீ. சினிமா என்பது வெறும் பொழுது போக்குக்கு என்பது பொய் ஜீ. அது நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை தருது.
அதுனால சினிமா எடுக்கிறவங்க... அதைப் புரிஞ்சு எடுக்கணும். - உங்க ஆதங்கம் 100 வீதம் சரி.
வருக நன்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்குஎனது பெயரை "கில்லர்ஜி" என்று எழுதவும் தவறாக எழுதினால் தெய்வகுற்றமாகி விடும்.
என்ன கில்லர்ஜி கோபத்தை திரைத்துறைமேல் காண்பிக்கிறீங்க. அது ஒரு சூதாட்டம் அல்லவா? 200 படம் வெளில வந்தா 15 படம்தான் வெற்றி பெறுது. மத்த படங்களைத் தயாரித்தவர்கள் தலைல துண்டு போட்டுக்கறாங்க. இதுல பிழைக்கத் தெரிந்தவர்கள் முன்னணி நடிகர்கள்தான். அதுனால அவங்க எக்காரணம் கொண்டும் படம் தயாரிக்கறதில்லை. இதுல வடிவேலு, கஞ்சா கருப்பு, சந்தானம் போன்றவர்கள்தான், தாங்களே படத்தைத் தயாரித்து தேவையில்லாமல் தலைல மண்ண அள்ளிப்போட்டுக்கறாங்க.
பதிலளிநீக்குஆமாம் தொலைக்காட்சி தொடரை விட்டுவிட்டீங்க.
த ம +1
வருக நண்பரே "சூதாட்டம்" சரியான சொல்லாடல்
நீக்குதங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி
தொலைக்காட்சி அவலங்களை விளக்கி தனியாக பதிவு போடுவேன் நண்பரே
உண்மைதான்
பதிலளிநீக்குநன்றி ஐயா வருகைக்கு
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி தோழரே
நீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குசகோவின் வருகைக்கு நன்றி
நீக்குதிரைப்படங்களில் சில
பதிலளிநீக்குஉரைத்தீர் கேள்விகளாக
பதில் பல இருந்தாலும்
நம்பகத்தன்மை இல்லாத எதுவும்
வலுவற்றதே! - அதுபோல
திரைப்படங்களிலும்
நம்பகத்தன்மை வேண்டும்!
வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅடுத்து கிரிக்கெட்டை ஒரு பிடிக்கலாமே :)
பதிலளிநீக்குவாங்க ஜி பார்ப்போம் அடுத்து...
நீக்குநல்ல கேள்விகள் ஆனா இந்த கேள்விகளை நின்னு காதில் வாங்கும் அளவுக்கு கூட ரசிக(சீக்கு )களுக்கு பொறுமை இல்லையே ..அவ்ளோ சினிமா மோகம் ..
பதிலளிநீக்குஇவங்க அடிபட்டு உதைபட்டு அவங்களாவே திருந்தினாதான் உண்டு :(
நினைச்சா சாமானியர்ஒருத்தரை சாமியாக்கவும் அவரை பிரதமராகவும் தலைவராக்கவும் முடியும்னா அது நம்ம தமிழ் நாட்டில் மட்டுமே சாத்தியம்
வருக முடிவில் சொன்னீர்களே...
நீக்குசவுக்கடி நாடு முன்னேற சாத்தியம் இலலை.
நல்ல சிந்தனை அய்யா
பதிலளிநீக்குநன்றி தோழர்
நீக்குசரியாகத்தான் கேட்டுருக்கீங்க ஜி.... பெரிய திரையை விட மோசம் செய்வது சின்னத்திரை தான் ஜி...விரிவாக எழுதலாம். எங்களில் டைப்பும் கீதா பயணத்தில்...
பதிலளிநீக்குசின்னத்திரைதான் இன்றைய பெண்களை வீட்டுக்குள் சிறை வைத்து விட்டதே...
நீக்குவெளியில் ஜாமீன் கடல்லயே கிடைக்காதாமே...
அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்லா கேளுங்க சகோ 😍😍
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குஉங்களுக்கென்று இருக்கும் கேள்விகளே அலாதி கில்லர் ஜீக்கே அது சாத்தியம்
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குஇறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என சொல்லி சமாளித்தாலும், தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் முடியவில்லை.
பதிலளிநீக்குவருக நண்பரே இதெல்லாம் இறைவன் செயலுக்கு அப்பாற்பட்டதே வருகைக்கு நன்றி.
நீக்குயோசிக்க வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குவாங்க சகோ வருகைக்கு நன்றி
நீக்குசம்பளம் கூடகூட சினிமாக்காரன் கட்டும் வருமான வரி கூடி இருக்கா. முறையாக வருமானவரி கட்டும் சினிமாக்காரர் யார்?
நீக்குவருக சகோ சரியான கேள்வி
நீக்கு