கலிகாலமாகிப் போச்சு, உலகம் அழியத்தான் இந்த
மாதிரியான அக்கிரமங்கள் நடக்குது என பெரியவர்கள் சொல்வதற்கு தகுந்தாற்போல இன்றைய
விஞ்ஞான வளர்ச்சியும் அதைதானே நமக்கு காட்டுகிறது, எங்கு நோக்கிணும் அழிவு சுனாமி,
பூகம்பம், நிலநடுக்கம், பனிக்கட்டி மழை, சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு, எரிமலை
வெடிப்பு, புயல், எங்கும் மனித உயிர்கள் பலி புதிது புதிதாக ஏதேதோ வருகிறது. இந்த
அழிவிற்கு நாங்கள்தான் பெயர் சூட்டுவோம் என ஒவ்வொரு நாடுகளும் போட்டி
போடுகின்றன... இதை என்னவென்று சொல்வது ?
அழவேண்டிய தருணத்தில் சிரிப்பவனைகூட இவன்
மனநோயாளி அல்ல ! மனதைரியசாலி என மாற்றி
எண்ணிக்கொள்ளலாம், ஆனால் நான்தான் சிரிப்பேன் என சண்டையிட்டு கொண்டால் கோமாளித்தனம்
அல்லவா ? இந்த நிலைகெட்ட மனிதனின்
செயலைப் பார்த்து இறைவன் சிரிக்க மாட்டானா ? இறைவனும் ரசிப்பதற்கு இந்த
பூமியில் ஏதாவது வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இப்படி ஒரு சூழலை
உருவாக்குகிறானோ ? ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு
ஒரு பழமொழி சொல்வாங்க... அது மனிதர்களுக்கு மட்டுமல்ல ! எல்லோருக்கும் எல்லா நிலையிலும்
பொருத்தமாகத்தான் இருக்கிறது.. சரி விஞ்ஞான வளர்ச்சியால் மனித உயிர்களுக்கு அழிவு
என்பது கண் கூடாகத் தெரிகிறது, நாம் அனைவரும் (உலகநாட்டு தலைவர்களும்,
உலகலாவிய விஞ்ஞானிகளும்) ஒருமித்த கருத்துக்கு வந்து நாம் பொற்காலமான அந்த
கற்காலத்திற்கே மீண்டும் போய் ஒவ்வொரு மனிதனும் நூறு ஆண்டு காலம் வாழ்ந்து
பிறவிப்பயனை அடைவோமென தீர்மானத்திற்கு வந்து இருக்கின்ற விஞ்ஞானத்தை அஒழிக்கா
விட்டாலும் பரவாயில்லை அடுத்த கட்ட நிலைக்கு செல்லாமல் நிறுத்தினால் என்ன ?
நெஞ்சு
பொறுக்குதில்லையே...
நெஞ்சு
பொறுக்குதில்லையே...
இந்த...
நிலைகெட்ட மனிதரை
நினைந்து
விட்டால்
நெஞ்சு
பொறுக்குதில்லையே...
சாம்பசிவம்-
பாஸ் ஒரு வார்டு கவுன்சிலரை தேர்ந்தெடுக்கிறதிலயே ஆயிரத்தெட்டு கருத்து
வேறுபாடு இருக்கு இதெல்லாம் நடக்குமா ?
Chivas Regal சிவசம்போ-
இவரு
அரைமணி நேரத்துக்கு மொபைல் இல்லாம இருக்கட்டும் பார்ப்போம் இவரே இண்டர்நெட்ல வெப்சைட் உருவாக்கி இதை வெளியிடுறாரு ஏன் ஓலையில எழுதி ரோட்டுல
போறவன் கிட்டே கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம் அவனவன் நெட்ல குவாட்டரை புக் பண்ணி
ஆஃப் அவர்ல வரவச்சு ஃபுல்லப் பண்ணிக்கிட்டு போய்க் கிட்டே இருக்கான்....
பொற்காலமாம், கற்காலமாம்.. நாமகேட்டா குடிகாரப்பயல்னு சொல்வாங்கே...
சிவாஸ் ரீகல் சிவசம்போவின் கருத்தையே நானும் படு பயங்கரமா வழி மொழிகிறேன்... முதல்ல ஆதிகாலத்தில், தான் வாழ்ந்து காட்டோணும் பின்புதான் நாட்டைத் திருத்த வெளிக்கிடோணும்...
பதிலளிநீக்குஅதனால முதல் கட்டமா சாம்பசிவம் அங்கிளை மர உரி தரிக்கச்சொல்லுங்கோ கில்லர்ஜி:)
சாம்பசிவம் நல்லாத்தான் இருக்காரு... சிவசம்போதான் மாலை ஆறு மணி ஆகிட்டா... மரஉரி கூட இல்லாமல் திரியிறதாக ஊருல நாலுபேரு பேசிக்கிட்டாக...
நீக்குஅதிரா ஹைஃபைவ்!!! கை கொடுங்க!!! ஹலோ கில்லர்ஜி சாம்பசிவம் ரொம்ப ஐடியலிஸ்டிக்....ஒத்துவராது...
நீக்குசிவசம்போ வெற்றுடம்பில் திரிந்தாலும் பட்டை அடிச்சா லும் என்னா அழகான ப்ராக்டிகலா தத்துவம் பேசுறாரு...அதனால் அவருக்குத்தான் ஓட்டு...
கீதா
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.
நீக்குகாலையில் கேட்டால் தேம்ஸ் சென்னையில இருக்குனு சொல்லும்.
இவர் எதுக்கு சாம்பசிவம் அங்கிளுக்கே ஓடி ஓடி சப்போர்ட் பண்றார் கீதா??:)
நீக்குஅவர் குடிக்க மாட்டார்.
நீக்குகுடிக்காதோர் எல்லாம் நல்லவர்கள் என யார் சொன்னது?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
நீக்குகுடிக்காதோர்கள் நலச்சங்கத்துக்கு வந்த அவர்களின் மனைவியர்களின் ரிப்போர்ட்.
நீக்குஇப்படி தனியா புலம்புற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டானுங்களே!...
பதிலளிநீக்குவாங்க ஜி உண்மைதான் நிலைமை இப்படித்தான் வரும் போல...
நீக்குஎங்கோ கேட்ட/ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வந்து தொலைக்கிறதே....:)
பதிலளிநீக்குசின்ன வயதில் சகோதரங்களை திருத்த நினைத்தேன் முடியவில்லை....
கொஞ்சம் வளர்ந்து நண்பர்களைத் திருத்த நினைத்தேன் முடியவில்லை...
பெரியாளாகி மனைவியைத் திருத்த நினைத்தேன் முடியவில்லை..
குழந்தைகள் பிறந்ததும் அவர்களைத் திருத்த நினைத்தேன் முடியவில்லை....
நாட்டாமை ஆகி ஊரைத் திருத்த நினைத்தேன் முடியவில்லை....
இப்போ கை கால் முடியாமல் படுக்கையில் கிடந்து நினைக்கிறேன்.... இவர்களை எல்லாம் திருத்த நினைத்ததை விட, நான் கொஞ்சம் திருந்தியிருக்கலாமோ??....:(
அருமையான கவிதை நல்ல கருத்துக்கோர்வை எழுதியவருக்கு வாழ்த்துகள்.
நீக்குமுடிவில் ஊமைக்குத்து போல இருக்கிறதே...
@ அப்பாவி அதிரா - கவிதை அருமை!
நீக்குஅதிரா செம கவிதைப்பா....
நீக்குகீதா
நன்றி... நன்றி.....
நீக்குஎச்சூச்ச்மீஈஈ கில்லர்ஜி... இது ஊமைக்குத்தெல்லாம் இல்லை:)... அதெல்லாம் பண்ணத் தெரியாதெனக்கு... :)... இது வெளிக்குத்தேதான் ஹா ஹா ஹா :)...
உண்மையான பதிலுக்கு நன்றி.
நீக்கு(எனக்கு வேணும்... எனக்கு வேணும்)
விஞ்ஞான பயன்பாடு இல்லாமல் மனிதன் வாழமுடியாது என்ற நிலைக்கு மனிதன் தள்ளபட்டு விட்டான்.
பதிலளிநீக்குபொற்காலம் வேண்டாம், கற்காலம் தான் வேண்டும் என்றால்
நம்மை பைத்தியகாரன் என்று சொல்வார்கள்.
பாட்டியும் பேரனை பார்க்க அந்த பொட்டியின்
பட்டனை தட்டி கூப்பிடு என்று சொல்லும் காலமாச்சு.
விஞ்ஞான முன்னேற்றம் அழிவு பாதைக்கு கூட்டி செல்லாமல், வளர்ச்சி பாதைக்கு கூட்டி சென்றால் நலம்.
வருக சகோ விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு கேடுதான். வாட்ஸ்-அப் வந்து இன்றைய கல்லூரி பெண்களின் வாழ்வுக்கு மிகப்பெரிய ஆபத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
நீக்குபெற்றோர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க இயலுமா ?
விஞ்ஞானங்களால் உலகம் அழிவதும் விதியே! புலம்பத்தான் முடியும்.அதிகபட்சம் மரங்களை வெட்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம் ஜி மரத்தை வெட்டப் போனதை தடுத்தவனை வெட்டிட்டாங்கே இப்ப அவன் மனைவி விதவைக்கோலம் இப்படி ஆகிப்போச்சு எல்லாம் கலிகாலம்.
நீக்குசிவ சம்போவின் கருத்துகள் மனதை ஈர்க்கின்றன. வரிகள் மட்டும் கடைசியில் கொஞ்சம் இடம் மாறி வருகின்றன. வழக்கம்போல் அலைபேசி--கணினி தகராறுனு நினைக்கிறேன். கடைசி நான்கு வரியைச் சீர் செய்யுங்கள். நன்றி.
பதிலளிநீக்குவருக சகோ சிவசம்போ குடிகாரனாக இருந்தாலும் நல்லாத்தான் பேசுகிறார்.
நீக்குநீங்கள் சொல்லும் முன்பே செல்லில் கண்டு மாற்றி விட்டேன் தகவலுக்கு நன்றி.
அறிவியல் வளர்ச்சியை நிறுத்த முடியாது. ஆனால் அந்த அறிவியல் வளர்ச்சியை அழிக்கும் செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று எல்லோரும் கூடி முடிவெடுத்தாலொழிய இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
பதிலளிநீக்குவருக நண்பரே நல்லதொரு கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.
நீக்குநான் எழுத நினைத்ததை வேறு வார்த்தைகளில் சிவசம்போ எழுதிவிட்டார். யாரும் கூடி முடிவெடுக்க முடியாது. நம் அளவில் குறைத்தால் (ஏசி போன்றவற்றை, எப்போதும் டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பதில்லை போன்று) அதுவே எல்லோருக்கும் செய்யும் நன்மை.
பதிலளிநீக்குவருக நண்பரே நல்ல உபயோகமான விடயம் ஊரைத் திருத்த இயலாது நம்மை நாமே சிறிது மாற்றிக்கொள்ளலாம்.
நீக்குகலிகாலம் முற்றிய பின் மறுபடி புது யுகம் பிறக்கும் அல்லவா? என்று ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டியது தான்! நம்மால் முடிந்த வரை நல்லதே செய்வோம்! பகிர்வுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருக சகோ இதுவும் சரிதான் வருகைக்கு நன்றி.
நீக்குவளரும் விஞ்ஞானம் வாழ்வை அழிக்கப் போவது உண்மை!
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநல்ல பதிவு விஞ்ஞானத்தை விதியாக்கினால் இப்படித்தான்
பதிலளிநீக்குசாம்பசிவம் நச்சுனு கேட்டா இந்த சிவசம்போ பொட்டுன்னு ஒன்னு வச்சிட்டு போயிட்டாரே இப்ப எங்கேன்னு போயி முறையிட
சிவசம்போவை நீங்களாவது கொஞ்சம் கண்டிச்சு வையுங்களேன்...
நீக்குஅறிவியல் ஆக்கத்திற்கும் பயன்படுகிறது
பதிலளிநீக்குஅழிவிற்கும் அதிகமாய் பயன்படுகிறது
தம +1
ஆம் நண்பரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள்
நீக்குஎல்லாமே மாறுதலுக்கு உட்பட்டவைதான். கலிகாலத்தில் அதிகம் போலும்.
பதிலளிநீக்குஆக இன்னும் நாம் அதிகமான துன்பங்களை சந்திச்சே தீரணும் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குநாமெல்லாரும் நம்ம கிட்ட இருந்து சில விஷயங்களை துவங்கினா போதும் .நான் வீட்டுத்தோட்டத்துக்கு கூட பூச்சி மருந்துகள் போடறதில்லை .ரோட்டில் குப்பை சாக்லேட் /சிக்லெட் காதிதம் கூட வீச மாட்டேன் கூடுமானவரை மீள் சுழற்சி செய்வேன் .
பதிலளிநீக்கு//நான்தான் சிரிப்பேன் என்று // ஹாஹா யாரு ரெண்டே பேர்தான் ட்ரம்ப் அங்கிளும் கிம் ஜோங் ..இந்த ரெண்டு ஜோக்கர்ஸும் தான் ..
ஒவ்வொருபொருளையும் பார்த்து பார்த்தே வாங்குவேன் நான் வாங்கும் பொருளால் சுற்று சூழலுக்கு பாதிப்பு வரக்கூடாதுன்னு ஒவ்வொருவரும் நினைச்சாலே கலி கிலி பிடிச்சி ஓடிடும்
வருக விரிவான கருத்துரை.
நீக்குஒவ்வொருவரும் தமது சுற்றுபுறத்தை தாமே சரியாக்கி கொள்வது நல்ல பழக்கம்.
அமெரிக்க அதிபராக வருபவர்களுக்கு இரும்பு இதயம் இருக்கவேண்டும் என்பது சாபக்கேடு.
இன்னிக்கு இங்க மைனஸ் ஓட்டா?!
பதிலளிநீக்குஅப்படீனாக்கா..... பதிவை படிக்கவில்லையா ?
நீக்குகில்லர்ஜி நான் சிவாஸ் ரீகலின் (ஆளு குடிச்சாலும் வெவரமாத்தான் பேசுறாரு) கருத்தையே பல பெர்சென்டேஜ் டிட்டோ செய்கிறேன். ஜி விஞ்ஞானம் வளர்ந்திருச்சு அழிவு அழிவுனு சொல்லுறீங்க.....இப்ப நாம பதிவு எழுதி இப்படிப் பேசுவது, நீங்க வெளிநாட்டுல இருக்கும் போது உங்க அம்மா, பிள்ளைங்களோட தங்கச்சியோட பேச முடிந்தது...என்று பல சொல்லலாம்...ஒரு வளர்ச்சி இருந்தால் ஒர் அழிவு இருக்கத்தான் செய்யும்....ப்ளஸ் அண்ட் மைனஸ் எப்போதுமே இருக்கத்தான் செய்யும்...ஜி...சிவாஸ் ரீகல் வாழ்கப்பு!!
பதிலளிநீக்குகீதா
நல்லா அலசி இருக்கீங்க... அதனால்தான் சொல்றேன் இதுவரை உள்ளதை காப்பாற்றி விட்டு இனியும் உள்ளே போகாமலிருப்பது நன்று.
நீக்குநம்மால் முடிந்த அளவு இந்த சமூகத்திற்கும், பிற மனிதர்களுக்கும், பூமிக்கும் கேடு செய்யாமல் வாழலாம் அவ்வளவே...ஜி
பதிலளிநீக்குகீதா
நன்று இதை அனைவரும் கடைப்பித்தால் நல்லதே...
நீக்குதப்பு செய்த ஒரு வார்டு கவுன்சிலரைக்கூட சட்டையைப்பிடித்து கேள்விக் முடியல...இதுல விஞ்ஞானம் வளரந்து சாதரண மக்கள்தான் சாகுராங்க....
பதிலளிநீக்குஇது நடைமுறை உண்மை...
நீக்குஇதுல நம்ம விஞ்ஞானியை கேள்வி கேட்க முடியுமா ?
நம்மால் முடிந்தளவுக்கு நல்லது செய்யலாம்....
பதிலளிநீக்குநல்ல பதிவு.
இப்படி பொழம்ப வச்சிட்டாங்களே.
வருக நண்பரே இந்த புலம்பல்தான் பதிவாகுதோ...
நீக்குஜீ இங்கே கேட்கலாமா என்று தெரியவில்லை நீங்கள் குறிப்பிட்டதால் கேட்கிறேன் உங்கள் பிளாக்கில் பதிவுக்கு மேல தமிழ்மணம் ஓட்டுபட்டை இருக்கே அதாவது தம்சப் சிம்புளில் தமிழ்மணம் திரைமணம்னு அது எப்படி வைக்கணும் ஜீ என்னுடைய பிளாக்கில் சப்மிட் 2 தமிழ்மணம் போன்ற பட்டைத்தான் வருகிறது நீங்கள் பார்த்திருக்கறீர்களா?
பதிலளிநீக்குவருக எனக்கு மட்டுமல்ல வலையுலகுக்கே இவைகளை பெண்டு எடுத்து கொடுப்பது நண்பர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்கள்தான்.
நீக்குஆகவே உங்களிடம் நம்பர் இருக்கிறதே தில்லைஅகத்து சென்னை கீதா அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் மற்ற விபரம் அவர்கள் சொல்வார்கள்.
இதையும் சொல்லுங்கள் அவர்களுக்கு புரியும்.
அறிவியலும் அறிவு இல்லும்...அழிவுக்கு அழைப்புதான் !
பதிலளிநீக்குவருக நண்பரே ஸூப்பராக சொன்னீர்கள்.
நீக்குகடவுளுக்குக் கொடுக்கும் attributes எல்லாம் நாம் கொடுப்பதுதானே
பதிலளிநீக்குவாங்க ஐயா உண்மைதான்...
நீக்கு