கோவளம் கடற்கரையில் நீ
இதன்
பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...
உனது மறைவு நாளில் எனது மரணகாலம்வரை என்னால் இயன்ற நல்ல
காரியத்தை உனக்காக செய்வேன் என்று உறுதியேற்று தேவகோட்டை நோக்கி பயணித்தேன்.
வனிதா உனக்கு பேச்சு தெளிவாக வரவேண்டும் என்று 1989-ல் சபரிமலைக்கு அழைத்துப் போனேன் அதேநேரம் இன்று
நினைத்துப் பார்க்கிறேன் கடைசி காலத்தில் நீ சராசரிப் பெண்ணைப் போலவே மாறி
விட்டாய் எல்லா வார்த்தைகளையுமே பேசினாய். ஆம் உனக்கு எல்லாமே தெரியும். அணையப்
போற விளக்கு பிரகாசிக்கும் என்று சொல்வார்களே... இதற்குத்தானா ? பதிவர்களில் பலரும் என்னிடம் கேட்டு
இருக்கின்றார்கள் நான் ரசிக்கும் படியான எடக்கு மடக்கான வார்த்தைகளை
உபயோகப்படுத்துகின்றேன் என்று இது எனக்கு எங்கிருந்து கிடைத்தது ? எனக்கு பதினைந்து வயது குறைந்த உன்னிடமிருந்தே
கற்றுக்கொண்டேன் என்பதை இங்கு உள்ளன்புடன் பதிவு செய்கிறேன் ஆம் எல்லா
வார்த்தைகளுமே உனக்கு பேச வரும் ஆனால் வார்த்தைகளையும், பெயர்களையும் குழப்பி
பேசுவாய் உதாரணத்திற்கு சாந்தி மகன் ராம்கியை பக்கி என்று கூப்பிடுவாய். அவன்
பெயர் பக்கி இல்லை ராம்கி என்று சொன்னால் ராம்கி இல்லை பக்கி என்று சொல்வாய். ஆக உன்னால்
ராம்கி என்று சொல்ல முடியும். சென்னையில் இருக்கும் ஸபரி மகன் ரித்தீஷை சுப்ரமணி என்று அழைப்பாய்
எல்லோருக்கும் ரித்தீஷானவன் உனக்கு மட்டுமே சுப்ரமணி. கோபியை கோலிப்பீ என்றழைப்பாய். இப்படித்தான்
நீ அனைவருக்கும் ஒரு பெயர் வைத்திருப்பாய் இன்று அந்த வார்த்தைகளை சொல்லி அழைக்க
யாருமில்லை.
மேலும் உன்னிடமிருந்து நிறைய விடயங்கள் படித்து
இருக்கிறேன் இவைகளை வாழ்க்கைப்பாடம் என்றும்கூட சொல்லலாம் யாரையும் சாதாரணமாக
நினைத்து மதிப்பிடக்கூடாது என்பதை சத்தியமாக உன்னிடமே கற்றுக்கொண்டேன் வீட்டு
வேலைகள் அனைத்தையுமே நீதான் செய்வாய் சமைப்பதைத் தவிர ஒருமுறை உனது தாவணியில்
தீப்பிடித்து விட்டதால் உன்னை அம்மா சமையல் பக்கம் விடுவதில்லை எவ்வளவு வேலைகள்
பார்த்தாலும் சரியான நேரத்துக்கு வந்து தொலைக்காட்சியை போட்டு நாடகம் பார்க்க
வந்து விடுவாய் இத்தனைக்கும் உனக்கு கடிகாரம் பார்க்கத் தெரியாது. முதன் முதலில்
அவ்வளவு பெரிய டிவியை கண்டு உனது முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்து நான்
சந்தோஷப்பட்டேன். அந்த தெருவிலேயே நமது வீட்டில்தான் முதன் முதலில் இவ்வளவு பெரிய
டி.வி. வந்தது இதை தெரு மக்களே அடிக்கடி ///வனிதா உங்க அண்ணன் உனக்காக பெரிய
டி.வி. வாங்கி இருக்கே/// என்று கிண்டல் செய்வார்கள். ரிமோட் உனது கைக்கு போனால்
பிறகு வேறு யாரும் எதையும் பார்க்க முடியாது. அந்த நாடகங்களின் பெயர்கள் ஒன்று
அதற்கு நீ வைத்திருக்கும் பெயர்கள் ஒன்று நீ நாடகம் பார்த்துக்கொண்டு இருக்கும்
பொழுது விளம்பரம் வந்தால் உடன் MUTE வைத்து விடுவாய் யாரும் ஏன்
என்று கேட்டால் ? கொய்யாப்பலம் எதுக்கு... கரண்டு எவ்வளவு தெரியுமா ? நாப்பது ரூவா என்பாய் விளம்பரத்துக்கு நீ
வைத்திருக்கும் பெயர் கொய்யாப்பலம். விளம்பரம் முடிந்ததும் மீண்டும் சப்தம்
வைப்பாய். விளம்பரங்களில் வரும் பிஸ்கட், சோக்லெட் வேறு ஏதாவது திண்பண்டங்கள்
வரும் பொழுது.. அண்ணே....
இது வாங்கித்தாண்ணே.... என்பாய் சரி நாளைக்கு வாங்கித்தாறேன் என்பேன் உடன் ஐ..... எங்க அண்ணம்பூ... என்று என்னை அணைத்துக்
கொள்வாய் அதன்படியே மறுநாளோ... அல்லது மற்ற சில நாட்களிலோ வாங்கி கொடுத்து
விடுவேன். வனிதா நீ உனது வாழ்நாளில் என்னிடம் நேரிலும் சரி தொலைபேசியிலும் சரி
அதிகம் பேசிய வார்த்தை ஐ.... எங்க அண்ணம்பூ... இதுவாகத்தான் இருக்கும்
எத்தனை ஆயிரம் முறைகள் சொல்லி இருப்பாய்... இன்னும் எனது காதில் ஒலிக்கின்றதடா...
இதோ இந்நொடி இதை எழுதும் பொழுதுகூட எனது விழிகள் நனைகின்றன.
விளம்பரத்தில் ஒருநாள் தாமஸ் ஜூவல்லர்ஸின் வைர
நகைகள் காண்பித்துக் கொண்டு இருக்க, அண்ணே இது வாங்குண்ணே.... என்றாய் நான் சற்றே
இளக்காரமாக, ஏன் அகம்பாவமாக என்பதையும் இந்நொடி உன் ஆன்மாவிடம் மன்னிப்பு
கோரியும்கூட சொல்கிறேன். யாருக்கு ? என்று
கேட்டேன் அதற்கு நீ சொன்ன வார்த்தை எனக்கு தலையில் செருப்பால் அடித்து எனது
அகம்பாவத்தை இறக்கியது போலிருந்தது. எதையும் அவசரப்பட்டு தீர்மானிக்க கூடாது
என்பதை அனுபவத்தில் வாயிலாக அன்று உணர்ந்து படித்தேன் நீ சொன்னாய். பூபலாக்குட்டிக்கு....
கல்யாணத்துக்கு ஸூப்பரா இருக்கும். (எனது அன்பு மகள் ரூபலா) ச்சே நான் உனக்குத்தான்
கேட்கிறாய் என்று நினைத்து விட்டேனே.... மேலும் இதெல்லாம் விலையுயர்ந்தவை அண்ணன்
நமக்கு வாங்கித்தராது என்று நீ தீர்மானித்து இருக்கின்றாய். ஆகவேதான் தின்பண்டங்களை
மட்டும் உனக்கு கேட்டுக்கொண்ட நீ வைர நகைகளை எனது மகளுக்கு வாங்கச் சொல்கின்றாய்
அதுவும் கல்யாணத்துக்கு என்று உனக்கா உலகம் புரியவில்லை ? குடும்பத்தில் எவ்வளவோ பேருக்கு நகைகள் வாங்கி கொடுத்து
இருக்கிறேன் அவர்களில் இன்று யாருக்கு நன்றியுணர்வு உண்டென திரும்பிப்
பார்க்கிறேன் ஒரேயொரு நபரைத்தவிர அந்த நபர் பெரிய தங்கை மட்டுமே... உனக்கு நகை
வாங்கி கொடுக்கவே இல்லை அந்த எண்ணம் வராமல் போனதற்கு காரணம் உன்னை மூளையற்றவள்
என்று சொன்ன, அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள் அதேநேரம் நான் கடைசியில் கேன்சலில்
வரும் பொழுது உனக்கு செயின் வாங்கி வந்தேன் காரணம் நீ என்னுடன்தானே இருக்கப்
போகின்றாய் என்னை மீறி யாரும் உன்னிடமிருந்து வாங்கிட முடியாது என்பதால் சிறிது
காலம் போட்டிருந்தாய் கடைசியாக நீ கலந்து கொண்டது புவனா மகள் சடங்கில் வனிதா
எவ்வளவு விசேஷங்களில் நீ இருந்தாய்.... ராஜாத்தி, ஸபரி, பிருந்தா, செல்வம், ராஜா, வித்யா எல்லோர்
திருமணத்திலும் இருந்து வாழ்த்தினாயே.... என் மகள் திருமணத்துக்கு இல்லாமல்,
வாழ்த்தாமல் போய் விட்டாயடா...... நான் எதிலுமே ராசி இல்லாதவன் என்பது இதிலும்
நிரூபணமாகி விட்டதே.... நீ போட்டிருந்த செயினை யாருக்கும் கொடுக்காமல் வைத்து
இருக்கின்றேன். அபுதாபியில் இருக்கும் பொழுது நண்பர்களுக்கு நகை எடுக்க நான்தான்
தேர்வு செய்ய வேண்டும். கடந்த இருபத்தி ஆறு வருடங்களாக என் மனதை பாதித்த ஒரு
காரணத்திற்காக யாருக்கு தங்க நகைகள் வாங்க கடைக்குப் போனாலும் கழுத்தில் போட்டுக்கூட
பார்ப்பதை கவனமாக தவிர்த்து வந்த நான் உனது செயினை உனது நினைவாக எனது மரணகாலம்வரை
போட்டுக் கொள்வோமா ? என்று ஆலோசிக்கின்றேன்.
நமது வீட்டுப் பிள்ளைகள் ஏதாவது தவறு செய்து
விட்டால் ? உடன் உன்னிடமிருந்து வரும் வார்த்தை. இந்தப் பழக்கம்தானே நாளைக்கு
வரும்...
எல்லோரும் சிரிப்பார்கள் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன் மூளை வளர்ச்சி
இல்லாதவள் என்று இந்த சமூகம் சொல்லி விட்ட உன்னிடமிருந்து இந்த வார்த்தைகள்
வருகிறதே... எப்படி ? இது அனுபவித்து வாழ்ந்து
முடிந்த எண்பது வயது கிழவிகளின் வாயிலிருந்து வரவேண்டிய கண்டிப்பு மிக்க
வார்த்தைகள் ஆயிற்றே... நம் வீட்டு குழந்தைகள் இந்த வார்த்தைகளை அடிக்கடி
விளையாட்டாக சொல்லி வந்தவை இப்பொழுது யாரும் சொல்வதில்லை...
கூண்டுகள் சுழலும்...
மிகவும் கஸ்டமாக இருக்கிறது. அந்த செயினை நீங்களே போட்டிருங்கோ, ...
பதிலளிநீக்குவெளியேசொல்வதனால் நிட்சயம் உங்கள் மனப் பாரம் கொஞ்சமாவது குறையும்... இன்னர் எஞ்சினியறிங் எனும் ஹீலிங் முறை இப்படித்தான் சொல்கிறது... ஒரு தடவை அல்ல பல தடவைகள் நம் கவலைகளை வெளியே சொல்லச் சொல்ல மனத்தின் பாரம் குறையும்.
ஹையோ வைரவா... இதுக்கும் மைனஸ் வோட்டா? கைமாறிப் போட்டிருப்பினமோ??:)... இனி அதிராவுக்குத்தான்போல ஹையோ அதனாலதானே மீ பெயரை மாத்திட்டேன்:).
நீக்குகில்லர்ஜி எங்கள் கொம்பியூட்டரில் ஏதோ எரர்... உங்களுக்கு வோட் போட முடியவில்லை.. வெப்வேஷனிலும் போட முடியுதில்லை, வசதி எனில் இங்கு லிங் தாங்கோ...
ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பாசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது கில்லர்ஜி :(
பதிலளிநீக்குபகவான் ஜீ நலம்தானே... பொறுத்தது போதும் பொயிங்கி எழும்புங்கோ ஐ மீன் போஸ்ட் போடுங்கோ... காய்த்த மரம்தானே கல்லெறிபடும்... தொடருங்கோ விரைவில்...
நீக்குநகை சம்பவம் மனதை நெகிழ்த்துகிறது.
பதிலளிநீக்குமனம் கணத்துப் போகிறது நண்பரே
பதிலளிநீக்குமனம் அமைதியுறட்டும்..
பதிலளிநீக்குஒவ்வொரு நிகழ்வும் ...அவரின் நினைவுகள் மட்டும் அல்ல...பாடம் பலருக்கும்..புரிந்து கொண்டால்...
பதிலளிநீக்குஉங்களை போல் ..உடன் வாழ்பவர்களை அறிந்து கொண்டிருக்கிறேனா.. என்னும் சுய அலசல் என்னுள்...
முதல்முறையாக இந்தப் பதிவுகளைக் காண்கிறேன். மனம் கனத்துப் போகிறது. பாசத்தைப் பொழிந்து வளர்த்தவர் பிரியும் சோகம் அளவிலடங்கா... அதுவும் கடவுளின் குழந்தையென்றால்...
பதிலளிநீக்குநெகிழவைத்தீர் மனதை த ம 4
பதிலளிநீக்குஅந்த செயினை திருமதி அதிரா அவர்கள் சொன்னதுபோல் நீங்களே அணிந்து கொள்ளுங்கள். காலம் தங்களின் தங்களின் துயரத்தை போக்கும்.
பதிலளிநீக்குமனம் வேதனையில் ஆழ்கிறது சகோதரரே! உங்கள் தங்கையின் அறிவும், அவர் உங்களிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பாசமும், தங்கையை உங்கள் மகளாகவே நினைத்திருக்கும் உங்கள் அன்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் மூத்த மகளாகவே நினைத்து வளர்த்து வந்திருக்கிறீர்கள். இழப்பு ஏற்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும்! :( என்ன செய்ய முடியும்!
பதிலளிநீக்குஉங்கள் நட்சத்திர தங்கையின் பல சம்பவங்கள், பேச்சுகள் மனதைத் தொட்டுச் செல்கிறது. நகை பற்றியது மனதை நெகிழ வைத்தது கில்லர்ஜி. நீங்களே போட்டுக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. இல்லையேல் நினைவுப் பெட்டகமாக வைத்துக் கொள்ளலாம். மற்றுமொரு ஐடியா ..இது உங்கள் தங்கைக்கென்று வாங்கியதுதான் இல்லையா...உங்கள் மகளை அவர் வாழ்த்துவது போல இருக்கும் இல்லையா உங்கள் மகள் அணிந்து கொண்டால்....நீங்களும் அதைத்தானே விரும்பினீர்கள் அதாவது தங்கை உங்கள் மகள் கல்யாணத்திற்கு இல்லாமல் போய்விட்டாரே என்று! அப்படியும் செய்யலாம் என்பது எங்களுக்குத் தோன்றியது...ஜி
பதிலளிநீக்குகீதா உங்கள் மற்றைய ஐடியாவில் எனக்கு உடன்பாடில்லை, தன் காலத்துக்குப் பின்பு வேண்டுமானால் மகளிடம் கொடுக்கலாம் கில்லர்ஜி.
நீக்குஇப்போ அவரிடம் இருப்பதே மன நிம்மதியும் பாதுகாப்பும்..
அது எப்படி..நகைச்சுவையாகட்டும், சோகமாகட்டும்...ஒரே நிலையில் உங்களால் நகர முடிகிறது?
பதிலளிநீக்குஅன்புக்கு வித்தியாசம் தெரியாது யார் என்ன சொன்னால் என்ன
பதிலளிநீக்குமனம் கனத்தது .தங்கை உங்கள் மேல் வைத்த அன்பு மனதை நெகிழ வைத்தது
பதிலளிநீக்குஎன்ன இப்படி அழவச்சிட்டீங்க திரும்ப, திரும்ப படிக்கிறேன் (இந்த தமிழ்மணத்திற்கு என்ன ஆச்சு)
பதிலளிநீக்கு// யாரையும் சாதாரணமாக நினைத்து மதிப்பிடக்கூடாது //
பதிலளிநீக்குஎன்றும் + எந்நேரமும் மனதில் தோன்ற வேண்டிய எண்ணம்... அருமை ஜி...
நெகிழ்ச்சியாக இருக்கு பகிர்வு ஜீ!
பதிலளிநீக்குtha.ma.13
பதிலளிநீக்குநெகிழவைக்கும் நினைவுகள். கடைசிக் காலத்தில் கூட இருக்கும் வாய்ப்பு கிடைத்ததே....
பதிலளிநீக்குதங்கையின் நினைவுகள் சுகமான சுமைதான்.
பதிலளிநீக்குஅவர்களின் அன்பு முழுமையானது.
தங்கையின் செயினை போட்டுக் கொள்ளுங்கள் நெஞ்சோடு தங்கையின் அன்பு கைகள் அரவணைத்தது போல் இருக்கும்.
பதிவு என்னைவிட்டு பிரிந்த அண்ணன், அக்காவை என்னால் எப்படி மறக்கமுடியவில்லையோ அப்படி நீங்கள் இருப்பதை உணர்த்துகிறது.