தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 20, 2017

கடமை கண்ணியம் கட்டுப்பாடு


அண்ணே அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு சொன்னாரே இதுக்கு என்னண்ணே அர்த்தம்
அடேய் அண்டாச்சட்டி தலையா... நமக்கு அம்மா அப்பா கல்யாணம் செய்து வைக்கிறாங்கள்ல... அது அவங்களோட கடமை.
சரிண்ணே கண்ணியம்
அதாவது கல்யாணம் செய்து வச்ச மனைவிக்கிட்டே கண்ணியத்தோட நடந்துக்கிறணும்.
அது எப்படிண்ணே... அண்ணிகிட்டே நீங்க கண்ணியத்தோட நடந்துக்கிட்டா குழந்தை பிறக்காதேண்ணே
அடேய் விளங்கா மடையா.... கண்ணியம்னா.... நீ சொல்றது இல்லைடா... அப்படி இப்படி நடந்து மனைவிக்கு துரோகம் செய்யாம நடந்துக்கிறணும் முதல்ல நீ அண்ணிக்கிட்டே கண்ணியம் தவறக்கூடாது
சரிங்கண்ணே.... அப்படினா.... கட்டுப்பாடு
கல்யாணம் முடிஞ்சு மனைவிகூட சந்தோஷமா வாழ்ந்து ரெண்டு குழந்தை பெத்துக்கிட்டதும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறணும் இதத்தான் அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு சொன்னாரு
இப்ப புரிஞ்சுக்கிட்டேண்ணே
சரி இதை புரிஞ்சு கல்யாணம் செய்துக்கிட்டு இரண்டு குழந்தை பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கிட்டு கண்ணியம் தவறவிடாமல் வாழ்ந்து கடமையை நிறைவேற்று
இப்ப விற்கிற விலைவாசியில கல்யாணம் செய்து மனைவியை வாழ வைக்கிறதே கஷ்டமாக இருக்கு இதுல குழந்தை எதுக்குணே
அப்படீனாக்கா நம்ம மோடி மாதிரி கல்யாணம் செய்யாமல் இரு பிரமச்சாரியாக சந்தோஷமாக வாழலாம்
அப்படினா... சம்பாரிச்ச காசு மிஞ்சிப்போகுமேண்ணே
அந்தப்பணத்தை வச்சு வெளிநாடு சுற்றிப்பாருடா
நல்லதுண்ணே நீங்க சொன்னதுபடியே செய்யிறேன்

-சிவாதாமஸ்அலி
அவரு சொல்லிட்டு போனது தலைகீழா வந்துடுச்சே

-Chivas Regal சிவசம்போ

அந்தப் பணத்துலதான் மோடி ஊர் சுத்துறாரா... நான்கூட மோசடி பணத்துல சுத்துறாரோன்னு நினைச்சிட்டேன்

குறிப்பு கேள்விக்குறி இடமுடியவில்லை மன்னிக்கவும்

53 கருத்துகள்:

  1. இன்றைய நிலைமை... அப்படியே பதிவில்!...

    முந்தாநாள் சொன்னான் - நிலவேம்பு கசாயம் நல்லது.. டெங்கு ஜூரத்தை ஒரே விரட்டா விரட்டிடும்..ந்னான்..

    நேத்து சொன்னான் - நிலவேம்பு கசாயம் குடிச்சா மலட்டுத் தன்மை வந்துடும்..ந்னு...

    இப்போ சொல்றான் - நிலவேம்பைப் பற்றி ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கோம்.. செஞ்சிக்கிட்டே இருக்கோம்...ந்னு...

    மனுசனே கேள்விக் குறியாயிட்டான்..தனியா கேள்விக்குறி எதுக்கு!????...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இவங்கேதான் தினம் கூப்பாடுதானே போடுறாங்கே...
      முதுகு எழும்பை ஒடிக்காமல் விடமாட்டாங்கே ஜி

      நீக்கு
    2. இதே இதே தான் திரை அண்ணன்... ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே... துரை அண்ணன்...

      நான் ஒரு அவிச்ச முட்டைப் பைத்தியம்... வீட்டில் எனக்கு எதிரிகள்:) இல்லை இதுக்கு:)... ஆனா என் அம்மாதான் எனக்கு எதிரி இதில்:)...

      ஆஆஆ நெட்ல போட்டிருக்கு அவித்த முட்டை சாப்பிடாதே... அப்பூடிச் சாப்பிட விரும்பினால் மஞ்சள் கருவை எறிஞ்சிட்டுச் சாப்பிடு , இல்லை எனில் பொரிச்சுச் சாப்பிடு என்பா:).... எனக்கு அதில் பிடிச்சதே அந்த மஞ்சள் கருத்தேன்:)... அவிச்ச முட்டை இல்லை எனில் எனக்கு முட்டையே வேண்டாம்...
      பின்பு என் கண்ணில பட்டுது எங்கோ நெட் நியூஸ்... முட்டையில் இருக்கும் கொலஸ்ரோல் குட் கொலஸ்ரோல் அதனால அது உடம்புக்கு நல்லது... அதுவும் அவிச்சு சாப்பிடுவதே நல்லது...

      உடனே அம்மாவுக்குச் சொன்னேன் லிங் அனுப்பி படிச்சுப் பாருங்கோ என... படிச்சிட்டுக் கொஞ்சம் பேசாம இருந்தா.. திரும்ப பார்த்தால் இன்னொரு சைட்டில் ... முட்டை சாப்பிடாதே என இருக்கு.... அப்போ மீ என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ....
      இப்போ என் முடிவு... எனக்கு நானே நீதிபதி:)...

      நீக்கு
    3. உங்க அங்கிள் கமலஹாசனிடம் கேளுங்களேன்.

      நீக்கு
  2. இன்று முதலாவது வாக்கு போடும் வாய்ப்பு! க க க ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி நன்றி.

      நீக்கு
    2. என்ன மாயமோ என்ன மந்திரமோ ...:) (ஹையோ நெ தமிழன் இதைப் பார்த்திடக்கூடா) கில்லர்ஜி பக்கம் மட்டும் மொபைல் வோட் போட முடியுது... என்பக்கத்துக்குகூட என்னால் போட முடியவில்லை:)...

      நீக்கு
  3. நல்லாத்தான் இருக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு. நாடு போற நிலைமையில ஒண்ணே அதிகம் போலிருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அன்று பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொன்னார்கள்.

      பிறகு அளவோடு பெற்று வளமோடு வாழ்க என்று சொன்னார்கள்.

      பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்று சொன்னார்கள்.

      பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று சொன்னார்கள்.

      பிறகு நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்று சொன்னார்கள்.

      இனி நமக்கு நாமே துணை நமக்கு எதற்கு வினை என்று திருமணம் செய்யாமல் பிரதமர் மாதிரி வாழச் சொல்வார்களோ...

      நீக்கு
  4. 3 க வையும் ரசித்தோம்! அப்பா அம்மா கட்டி வைப்பது மட்டும் தான் கடமையா ஜி!? கட்டினவன் தன் மனைவியை குடும்பத்தைப் பாதுக்காப்பதும் கடமையாச்செ!! கில்லர்ஜியைக் கேளுங்கனு... உங்க சிவாஸ் சொல்லுறாரு!

    கீதா: இப்போதெல்லாம் ஒரு குழந்தையை வைத்து படிக்கவைத்து என்பதே கடினமாகிவிட்டதுதான். இளைய தலைமுறை குழந்தையே வேண்டாம் என்றும் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது...என்னத்த சொல்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இனி இதுதான் நடக்கும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. chivas regal sivasambo சொல்லுவதை ரசிக்க முடியலை. மோதியின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விமரிசனமும் ரசிக்க முடியலை. வெளிநாட்டுப் பயணங்களில் எப்போவானும் மோதி குடும்பத்தாரை அழைத்துச் சென்று ஊர் சுற்றினார் என்று சொல்ல முடியுமா? :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அது குடிகாரமட்டை எதையாவது உளறும் அதை கணக்குல விடுங்க காலையில் கேளுங்க திருச்சி மலைக்கோட்டை மேலூரில் இருக்குனு சொல்லும்.

      நீக்கு
  6. நல்லாத்தான் சொன்னீங்க நாலு வார்த்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மூணு வார்த்தைதானே சொன்னேன்.

      நீக்கு
  7. கில்லர்ஜி உங்க பதிவில் குற்றம் கண்டு பிடிச்சிட்டேன்... மோடி எல்லாம் ஊர் ஊரா சுத்துற ஆள் இல்லை நாடு நாடாக சுத்துகிற ஆள் இப்படி எல்லாம் நீங்க தப்பு தப்பா பதிவு எழுதினா உங்களை Anti Indian லிஸ்ட்ல சேர்த்து போடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயய்யோ... நான் இப்பொழுது இந்தியாவில் நிரந்தரமாகி விட்டேன் தமிழரே...

      நீக்கு
  8. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தங்கள் பாணியில் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  9. சிவசம்போக்கு குசும்பு ஜாஸ்தி

    பதிலளிநீக்கு
  10. அப்போ கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம் கலியாணம் முடிச்ச ஆட்களுக்குத்தானோ?:) இது தெரியாம இங்கின பலர் அவதிப்பட்டுக் கல்யாணம் முடிச்சிட்டினமே:).. ஹா ஹா ஹா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரு பிரதமர் மோடியை ஜொள்ளுறீங்களோ....?

      நீக்கு
  11. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றிக்கு புதிய விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. நாட்டைத் திட்டிப் போஸ்ட் போட்டாலும் கொமெண்ட்டில திட்டுறாங்க... நீ எப்பூடி நாட்டைத் திட்டலாம் என... நம் நாடு நல்ல நாடு எனப் போட்டாலும்... ஹையோ நீ எந்தக் காலத்தில் இருக்கிறாய் எனத் திட்டுறாங்க.... சமீபகாலமாக புளொக்ஸ் படிச்சு வரும் எபெக்ட்:)...

    இதுக்கு சரியான பதில் சொல்லக்கூடியவர் சிவாஸ் றீகல் சிவசம்போ மட்டும்தேன்:) அதனால அவரைக் கேட்டு என் டவுட்டைக் கிளியர் பண்ணி வையுங்கோ கில்லர்ஜி:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டை திட்டினாலும் பாராட்டினாலும் உங்களை தீட்டுபவர்கள் போல கதையும் கவிதையும் எழுதினால் என்னை போல உள்ளவர்கள் திட்டுவார்களே அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க....


      அதிரா யார் என்ன சொல்லுறாங்க என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் உங்களுக்கு என்ன தோணுதோ அதை எழுதுங்கள் முடிந்த வரையிலும் தனிப்பட்டவர்களை காயப்படுத்தாமல் எழுதுங்கள் ஆனால் நாட்டை சமுகத்தை தலைவர்களை நடிகர்களை நன்றாக விமர்சனம் செய்யுங்கள் யார் என்ன சொல்லுறாங்க என்பதற்காக கவலைப்பாடாதீர்கள் அப்படி யார் என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் இக்னோர் பண்ணி விட்டு போங்கள்

      நீக்கு
    2. மதுரைத்தமிழனின் கருத்து மிகச்சரி நான் ஆ''மோதி''க்கிறேன்

      நீக்கு
    3. அப்பாவி அதிராவுக்கு... சிவசம்போவுக்கு சிவாஸ் ரீகல் வாங்கி கொடுத்தால்தான் பதில் வருமாம்.

      நீக்கு
    4. அதைத்தான் நானும் ரெண்டு நாளா சொல்லிட்டே இருக்கேன் அதிரா நீங்க உயர்வதை நான் பாக்கணும் ப்ளீஸ் உடனே ஒரு போஸ்ட் போடுங்க எல்லா இடத்திலையும் பார்த்தாச்சு உங்க பதிவில் மட்டும் பார்க்கலை ஹாஆஹா :)

      நீக்கு
    5. பாவம் அப்பாவியை இப்படி மாட்டி விடலாமா ?

      நீக்கு
    6. @ட்றுத்///
      நான் எப்பவும் என் மனதில் எழுவதை டக்குப் பக்கெனச் சொல்லிடுவேன்,, யாரின் மனமும் நோகாதபடி... மற்றும்படி எனக்குத்தான் அரசியலிலோ சினிமாவிலோ பெரிதாக ஆர்வமில்லை... :).. அதனால அப்பாடா தப்பிச்சேன் ஜாமீஈஈஈஈ ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    7. ////பாவம் அப்பாவியை இப்படி மாட்டி விடலாமா ?///
      அதே அதே நல்லாக் கிளவியைக் கேழுங்கோ... ஹையோ கேள்வியைக் கேழுங்கோ கில்லர்ஜி:)... மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆவி:)..

      எனக்கு மைனஸ் வோட் விழுதா எனப் பார்க்கத் துடிக்கிறா இவ கர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா:)

      நீக்கு
    8. ///அப்பாவி அதிராவுக்கு... சிவசம்போவுக்கு சிவாஸ் ரீகல் வாங்கி கொடுத்தால்தான் பதில் வருமாம்.///

      எங்கள் சிட்டியில் பெரீய சிவாஸ் ரீகல் கொம்பனி இருக்கு... சிவ சம்போ அங்கிளை இக்கரைச் சூடாம் எனச் சொல்லிடுங்கோ:) கில்லர்ஜி...

      நீக்கு
    9. சிவசம்போவுக்கு கடவுச்சீட்டு இல்லையாமே...

      நீக்கு
    10. அ.ஆ ஹை 5 நல்ல கேட்டு இருக்கீங்க எனக்கும் இந்த டவ்ட் இருக்குயில்ல

      நீக்கு
  13. வயதுக்கு வந்த பின்பும்... திருமணமாகாமல் தனியே வாழ்வோர் தம் சொத்துக்களை எல்லாம்... திருமணம் முடிச்சுக் குழந்தை பெற்றோருக்கு எழுதி வைக்கோணும் எனும் சட்டத்தைக் கொண்டு வரச்சொல்லி மோடி அங்கிளுக்கு மனுக் கொடுக்கப் போறேன்:)...

    ஊசிக்குறிப்பு:)- இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், கில்லர்ஜி யின் சொத்துக்களும் பறிமுதலாகும்... :) அதனால ..... சரி வேணாம் எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ச்ஸ்ஸ் மீ ஒரு அப்பாவீஈஈஈஈ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி மோடியும் அங்கிளா ? அடப்பாவமே..... பெரிய இடமாகத்தான் இருப்பீங்க போலயே......

      நீக்கு
    2. அ.ஆ ......ஏ இது ரொம்ப நல்ல திட்டமா இருக்கே நீங்க நிறையோசிக்கிறிங்க ;-) :-)பூனையார் உங்களுக்குள் நிறைய ஐடியா கொடுக்கிறார் போல

      நீக்கு
  14. ஆகா நல்ல நையாண்டி!

    பதிலளிநீக்கு
  15. ஷிவாஸ் ரீகல் சிவசம்போவும் சிவதாமஸ் அலியும் அண்ணந்தம்பிங்களா :)
    கடமை கண்ணியம் கட்டுப்பாடு விளக்கம் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கு தெரியும் ? ரெண்டு பேரும் இடையில் புகுந்து கமெண்ட் போடுறாங்க...

      வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
    2. யாருக்கு அண்ணன் தம்பிகள்? கில்லர்ஜிக்கா?:) என் டவுட்டைக் கிளியர் பண்ணவும் பீஸ்ஸ்:)

      நீக்கு
  16. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு-க்கு 'கவுண்டரை' வைத்து கவுண்டர் கொடுத்திட்டீங்க ஜி ! ஜே !

    பதிலளிநீக்கு

  17. கடமை...
    கன்ணியம்...
    கட்டுப்பாடு....
    அருமை...

    பதிலளிநீக்கு