தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 29, 2017

சந்தோஷம் – சந் = தோஷம்


தோஷம் என்னை சந்திப்பதால் சந்தோஷம் என்னை சந்திக்க மறுக்கிறது சந்தோஷம் என்பது இந்த ஜென்மத்தில் எனக்கு இல்லை என்றாகி விட்டது அடுத்த ஜென்மத்தில் நிறைவாக கிடைக்குமோ ஒருவேளை அடுத்த ஜென்மமே இல்லை என்றால் எந்த ஜென்மத்து பாவம் எனக்கு இந்த வாழ்க்கை இதற்கு காரணகர்த்தா யார் நிச்சயமாக நானில்லை
வேறு யார் ?
எனது மூதாதையர்களோ ?
Anyway

நான் பாவம் செய்யாமல் வாழவிரும்புகிறேன்.
எனது சந்ததிகளுக்காக...

நான் அறியாமல் செய்த பாவங்களின் பிரதி பலனை எனக்கும் புண்ணியங்களின் பலனை எனது சந்ததிகளுக்கும் அளிப்பாயாக.
பாவத்தை உலையில வச்சவன்,
சாபத்தை தலையில ஏற்றியே தீரணும்.

Chivas Regal சிவசம்போ-
அப்படின்னா Mutton Chicken Don’t Eating னு சொல்றீங்களா Brother ?


இனி யாரோ எவரோ எழுதியதிலிருந்து....

What we are today is result of our own past Actions;
நம்முடைய கடந்தகால செயல்பாடுகளின் முடிவுகள்தான் இன்று நாம் என்னவாக இருக்கிறோம் என்பது

Whatever we wish to be in future depends on our present Actions;
எதிர் காலத்தில் நாம் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பது நம்முடைய நிகழ்கால செயல்பாடுகளைச் சார்ந்திருக்கிறது.

Decide how you have to act now.
நீ இப்போது எப்படி செயல்பட வேண்டுமென்பதை முடிவு செய்து கொள்.

We are responsible for what we are, whatever we wish ourselves to be.
நாம் என்னவாக இருக்கிறோமோ, நாம் என்னவாக இருக்க விரும்பினோமோ அதற்கு நாமே பொருப்பாளி.

We have the power to make ourselves.
நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு நம்மிடமே சக்தி இருக்கிறது.

(பிக்பாஸ் ட்ரிக்கர் சக்தி அல்ல)

Photo places in Oman

73 கருத்துகள்:

  1. இங்கிலீஷ்ல பதிவா ? இந்தா வாங்கிக்க...
    தமிழ்மணம் – மைனஸ் ஒன்று

    பாளையங்கோட்டை
    கூழையன்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு ஆளு போடுவாரே...மைனஸ் ஓட்டு...அவரை தோற்கடிக்க....தாங்கள் முந்திக்கொண்டு.... என்று நான் நிணைத்துக் கொள்ளலாமா...நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான்தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே... இனி எனது மைனஸ் ஓட்டு தொடரும்.... என்று

      குறிப்பு – எனக்கு மட்டுமே... பிறருக்கு இந்த ஜென்மத்தில் போடமாட்டேன் அப்படி என்றால் அடுத்த ஜென்மத்தில் போடுவீர்களா ? என்று கேட்கப்படாது

      நீக்கு
    2. We are responsible for what we are!

      True!

      தொடர்ந்து சந்திப்போம்...

      நீக்கு
    3. வாங்க ஜி சந்திக்கலாம் நன்றி

      நீக்கு

  3. தங்களின் பதிவு கணியன் பூங்குன்றனாரின் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற பாடலை நினைவூட்டுகிறது. எனவே நல்லதை நினைப்போம் நல்லதையே செய்வோம் என்கிற கருத்தை சொல்லாமல் சொல்லியிருப்பதற்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அறிபுதமான கருத்துப்பகிர்வுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி

      நீக்கு
  4. ஆஹா...இன்னும் அந்த ஓட்டை விட்டு வெளில வரலையா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரே அதைப்பற்றி யாரும் நினைக்கவில்லை சொந்தக் கவலையில் இருக்கும் பொழுது யாரோவொரு அறிஞரின் பொன்மொழி கண்டேன் பதிவிட்டேன் அவ்வளவுதான்.

      நீக்கு
  5. கில்லர்ஜி ஸாரி மொபைலில் வோட்டு ட்ரை செய்ததால் பை மிஸ்டேக் மைனஸ் விழுந்துருச்சுனு நினைக்கிறோம்..வெரி ஸாரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற அந்த அது விழுந்தால் என்ன விழாவிட்டால் என்ன.... விட்டுத்தள்ளுங்க....

      பை மிஸ்டேக்னு சொல்றீங்க... எனக்கென்னவோ கை மிஸ்டேக்னுதான் தோன்றுகிறது.

      திருட்டுப்பயல்க அரசியல்வாதிகளுக்கு மட்டும் கவனமாக போடுறீங்க....

      இருந்தாலும் சின்ன டவுட்டு
      வோட்டு போடுறேன்னு.... வேட்டு வச்சுட்டீங்களோ..... ஹி... ஹி... ஹி...

      சரி பதிவைப்பற்றி சொல்லவேயில்லை....

      நீக்கு
    2. வில்லங்கத்தாருக்கு வருத்தம் வேண்டாம் உங்களது ஓட்டு மைனஸ் இல்லை ப்ளஸ்தான் இப்பொழுதுதான் திரு. கரந்தையார் அவர்கள் ஏழாவது ஓட்டு போட்டதும் தெரிந்து கொண்டேன்.

      கை மிஸ்டேக்கும் இல்லை, பை மிஸ்டேக்கும் இல்லை ஆகவே எனது மறுமொழியை பின்வழிக்கிறேன்.

      ஸாரி... ஹி.. ஹி.. ஹி..

      நீக்கு
  6. ஓட்டு எப்படி வேணாப் போகட்டும் விடுங்க! பதிவைப் படிச்சால் சமீபத்தில் ஏதோ மன வருத்தம் நேர்ந்திருக்கும்போல! அதிலிருந்து வெளியேற எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ குடும்பத்தில் சிறிய மனவேதனை. தியாகம் உதாசீனப்படுத்தும் பொழுது மனம் கவலை கொள்ளத்தானே செய்யும்.

      சகோ. ராஜி அவர்கள் சொல்வது போல...

      அந்தக் கவலைகளை இறக்கி வைக்கும் சுமைதாங்கிதான் இந்த வலைத்தளம் இதற்காக கூகுளாண்டவருக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்

      நீக்கு
  7. கில்லர்ஜி நான் தான் மொபைலில் முதல் முறையாக முயற்சி செய்ததால் நெகட்டிவ் ஓட்டு விழுந்துவிட்டது ஸாரி..கீதா உங்களுக்குச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்...

    சந்தோஷம் என்பது நமது மனதில். அது வெளியில் இல்லை நமது மனதில்தான்...நாம் செய்வது நமக்குத்தான்...உண்மைதான்..எனவே நல்லதை நினைப்போம்..நல்லது செய்வோம்...நல்லதே நடக்கட்டும்...லெட்ஸ் பி பாசிட்டிவ்!
    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க... இது பாலக்காட்டு வேட்டா ?

      ///முதல் முறையாக மொபைலில் முயற்சி செய்ததால் நெகட்டிவ் ஓட்டு விழுந்து விட்டது///

      அப்படீனாக்கா... நீங்க மைக் டெஸ்டிங் செய்ய தேவகோட்டை அப்பாவி நான்தான் கிடைச்சேனா ?
      இதைத்தான் நைஜீரியாவுல இதுக்குப் பழமொழி சொல்வாங்க...
      ஊரான் விட்டு புள்ளையை கிணற்றுல இறக்கி விட்டுட்டு ஆழம் பார்க்கிறதுன்னு...

      தங்களது ஆறுதலான கருத்துரைக்கு மிக்க நன்றி

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இது வேற நடக்குதோ?:)...
      கில்லர்ஜி பிளீஸ் பிளீஸ் நானும் ஒண்டு போடட்டோ?:)... ஹையோ என் வாய்தான் நேக்கு எதிரி:) அஞ்சு இதைப்பார்த்தால் என்னை தேம்ஸ்ல தள்ளி விடப்போறாவே... பேசாம இருக்கவே மாட்டீங்களா அதிரா என:).. படிச்சதும் கிழிச்சிடுங்கோ கில்லர்ஜி பிளீஸ்:)

      நீக்கு
    3. வாங்கோ, வாங்கோ நீங்க ஒண்டு போடுங்கோ இல்லை ரெண்டு போடுங்கோ நான் கண்டுக்கவே மாட்டேனே... ?

      நீக்கு
  8. லயித்து வாழக்கற்றுக்கொண்டால் இனிக்கிறதுதான் வாழ்க்கை!

    பதிலளிநீக்கு
  9. சந்தோசம் பொயிங்குதே சந்தோசம் பொயி க்குதே...:) கில்லர்ஜி... அஞ்சுவுக்கு இங்கிலீசு புரியாதெண்டுதானே தமிழ் விளக்கவும் குடுத்திருக்கிறீங்க?:)... ஹா ஹா ஹா இப்போதான் என்னால நல்லாச் சிரிக்க முடியும் ஏனெனில் "அப்பாவி அதிராவுக்கும் " பிரே பண்ண அவ சேர்ஜ்ஜுக்குப் போயிருக்கிறா:) அந்த தெகிறியம்தேன்.. வந்தாவோ மீ யை பீஸ் பீஸ் ஆக்கிடுவா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ இதன் ஆங்கிலமும், தமிழாக்கமும் கிடைத்ததே யாரோ எவரோ...

      நீக்கு
  10. "என்னை ஒருவர் ஏமாத்தினார் என்பதற்காக, நான் இன்னொருவரை ஏமாத்த விரும்பவில்லை".... உங்கள் போஸ்ட் படிச்சதும் நினைவுக்கு வந்த வசனம்.

    யார் என்ன பண்ணினாலும் நீங்க நீங்களாகவே இருங்கோ கில்லர்ஜி,
    ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனான மறுதாக்கம் அவர்களுக்குக் கிடைக்கும்... நியூட்டனின் விதிபோல... யார் என்ன செய்கிறார்களோ அது அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும்...

    மாம் விதை போட்டால் மாங்காய்தானே பிடுங்க முடியும்.. தேங்காய் பிடுங்க முடியுமோ? அப்படித்தான் அவர்கள் எதை விதைக்கிறார்களோ அதை அறுவடை செய்வார்கள்.. அதனால நீங்கள் கவலைப்படக்கூடாது... நான் செய்த தியாகம் எல்லாம் வீணாகிட்டுதே என...

    ஒன்றை மட்டும் நினைவில் வச்சிருங்கோ... நாம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ செய்தால்... திரும்பி அவர்தான் நமக்குச் செய்வார் என்பது சத்தியமான பொய்... அது வேறு யாரோ முகம் முகவரி தெரியாதோரால்கூட நமக்கு நிட்சயம் திரும்பக் கிடைக்கும்... இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தெல்லாம் சரிதான் ஆனால் நான் எனது சங்கடத்தை பகிர்ந்தேன் மற்றபடி எதனையும் நினைக்கவில்லை மறந்தாச்சு

      இந்த எண்ணங்களை மாற்ற அடுத்து நகைச்சுவை பதிவு போட்டால்தான் சரியாகும் விரைவில்...

      நீக்கு
  11. ஹா ஹா ஹா சி றீ சிவசம்போ அங்கிள் பொயிண்ட்டா அட்டாக் பண்றாரே... அவருக்கு எம்புட்டுத் தெகிறியம் .. மீ வியக்கேன்:)

    சந்தோசத்தில இருந்து எதுக்கு சந்தனா:) அக்காவைக் கழிக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:).. அதெல்லாம் தப்பூ.. "சந்"தனாக்காவை க்கூடவே வச்சிருங்கோ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அங்கிள் தண்ணி வண்டியானாலும் பாய்ண்ட் பாலுச்சாமியாக இருக்கின்றாரே....

      ‘’சந்’’ சந்தனாவா....? உங்கள் அறிவு கண்டு நான் வியக்கேன்.

      நீக்கு
  12. Mr. சிவசம்போ.. புதுசா ஏதாவது மடம் ஆரம்பிக்க உத்தேசமா!..

    இன்னும் காவி கமண்டலம் கழுத்து மாலை ஏதும் வாங்கலையே!..

    அப்படி..ன்னா உடனே ஜிகினானந்தா சுவாமிகளை தொடர்பு கொள்ளவும்..

    (மாலை 6 மணிக்கு மேல் நோ அப்பாயின்மெண்ட்!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவசம்போ ரூட்டு நீங்கள் சொல்வது போல இல்லையே ஜி... இதுக்கு வேண்டியது... Chivas Regal Only

      நீக்கு
  13. நேற்றைய அனுபவங்களே நாளைய வாழ்வுக்கான பயிற்சியை இன்று நமக்கு அளிக்கின்றன. சந்தோஷம் என்பது மனதைப் பொறுத்தது. பதிவை ரசித்தேன். வாக்கு பின்னர் கணினிக்கு வரும்பொழுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அழகிய தத்துவம் சொன்னீர்கள் நன்றி

      நீக்கு

  14. என்ன வர வர கில்லர்ஜி ரொம்ப சோகனந்தாவா மாறிகிட்டே வருகிறார். ஜீ நாம் இருக்கும் சுற்றுபுறம் நமக்கு மகிழ்ச்சியை தரவில்லையென்றால் அந்த சூழலைவிட்டு வெளியே வாருங்கள்.. இப்படி சொல்வது எளிதுதான் ஆனால் அதை செய்வது கடினம் இருந்தாலும் அதை செய்துதான் ஆக வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே சில விசயங்களை விட்டு விலக நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை என்பது மட்டுமல்ல! அப்படி போகவும் கூடாது காரணம் அதற்கு பொருப்பாளனே நான்தான்.

      2018-ல் சரியாகி விடுமென்று நம்புகிறேன்.

      நீக்கு
  15. 2018 இல் அனைத்தும் சரியாகிவிட வேண்டும் நண்பரே
    புதுப்மை பொலிவோடு, புத்துணர்வோடு,
    புத்தம் புதிய மீசைக்கார நண்பரை
    2018 இல் காண விரும்புகிறேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க நன்றி நம்புவோம் நம்பிக்கையே வாழ்க்கை.

      நீக்கு
  16. இன்னொரு சொல் தமிழிலேயே “ நீ என்னவாக ஆக விரும்புகிறாயொ அதுவாகவே ஆவாய் “

    பதிலளிநீக்கு
  17. கில்லர்ஜி.... பதிவை ரசித்தேன். என்னைக் கேட்டா, நீங்க நல்லதுதான் பண்ணறீங்கன்னா, அதையே தொடர்ந்துக்கிட்டு வாங்க. மத்தவங்க ஒபினியன்களுக்கு நீங்க பொறுப்பாளி ஆக முடியாது. அதையும் மீறி கெடுதல் வந்தா, பழைய பாவம் கரையுதுன்னு நினைச்சுக்கோங்க. உங்களுக்கு நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒரு உறவினர் அவருடைய முன்னேற்றத்துக்காக முழு மனதுடன் உதவி இருக்கிறேன். இதற்காக நான் துளியும் பலன் கேட்டுக் கொண்டதில்லை எனக்கு அவசியமும் இல்லை முழுநம்பிக்கை வைத்து இருந்தேன்.

      ஆனால் அவனோ... எனது மகனிடம் அவசியமின்றி என்னைப்பற்றி தவறாக சொல்லி வைத்து இருக்கிறான் என்பதை சமீபத்தில்தான் அறிந்தேன்.

      வாழ்வில் மிகப்பெரும் பலமாக எனது செல்வங்களைத்தான் நம்பி வாழ்கிறேன். இதனால் மனம் பாரமாகி விட்டது.

      வேறொன்றுமில்லை நண்பரே...

      நீக்கு
    2. உங்களோட வேதனை புரியுது கில்லர்ஜி! எனக்கும் அனுபவம்/அனுபவங்கள் உண்டு! மனதை திடப்படுத்திக்கொண்டு அதைப் பற்றி நினைக்காமல் இருக்கப் பழகுங்க!

      நீக்கு
    3. ஆறுதலுக்கும், மீள் வருகைக்கும் நன்றிகள் பல...

      நீக்கு
    4. கில்லர்ஜி.... நம்ம பசங்க நம்முடன் ஒட்டி வாழறவங்க. அவங்களுக்குத் தெரியாதா நம்மைப்பற்றி..... விடுங்க கவலையை. பசுக்கு புல்லைப் போட்டால் பால் கொடுக்கும். எல்லா விலங்குகளும் அப்படி இல்லையே.

      நீக்கு
    5. வருக நண்பரே உண்மை மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. ஜீ ஏன் இப்படி ?? தோஷத்தையெல்லாம் தோசையா சுட்டு தள்ளலாம் பின்னால் வரும் 5 வரிகளும் மிக அருமை படமும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இனி இப்படித்தான் மிச்ச காலத்தையும் கடத்தணும்.

      அந்த ஐந்தும் யாரோவொரு அறிஞரால் சொல்லப்பட்டது.

      நீக்கு
  19. அப்ப நம்ம நிலைக்கு கடவுளும், கர்மாவும் காரணமில்லையா?! வாட் யூ சே பிரதர்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அவங்க தொடங்கி விட்டு முடிவை தெரியவிடாமல் நம்மை போக்கு காட்டுவாங்க...

      இடைப்பட்ட குழப்பம்தான் நமது வாழ்க்கை.

      நீக்கு
  20. நல்ல பதிவு...
    தமிழ்மணம் கையை அழுத்த 9ல் இருந்தது. 10க்கு வந்தது.
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  21. நம் வாழ்க்கையில் நடப்பது சிலசமயம் யாரோ விளையாடுறவர் கையில் கிடைச்ச ரிமோட் கார் மாதிரிதான் .எனக்கு கடவுள் மேலே கொஞ்சம் டவுட் வ்ரும் அப்பப்போ அவர்தான் டயர்டான இருக்குன்னு ரிமோட்டை அப்பப்போ யாரை கைலயாவது கொடுத்துடறாரோன்னு ..நல்லா போயிட்டிருக்கும் திடீர்னு தொம்முனு வீழ்வோம் ..ஆனா இதுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது நடப்பது நடக்கட்டும்னு போயிகிட்டே இருக்கணும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கருத்து விளக்கிய விதம் அருமை வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  22. யாருமே நாலுகால் கோழியைப் பார்க்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. நீங்களாவது பார்த்தீர்களே...

      நீக்கு
    2. அட ஆமாம் அவருடைய துவக்க கதையில் ஓட்டத்தில் விடுபட்டுவிட்டது நெ .தமிழன் சொல்லிவிட்டார் சூப்பர் என்ன குறிக்கோள் இதற்க்கு கதையெதுவும் சொல்லவில்லையே

      நீக்கு
    3. பாவத்தை உலையில் வச்சவன்
      சாபத்தை தலையில் ஏற்றியே தீரணும்

      என்று சொல்கின்றார்களே... இதனால்தானா ?

      நீக்கு
  23. உங்கள் மனதில் உள்ள வருத்தம் நீங்கி, சந்தோஷம் பெருகட்டும்!

    பதிலளிநீக்கு
  24. நான் எப்பவும் பாசிடிவ் தான் ,இரத்தம் கூட B+ :)

    பதிலளிநீக்கு
  25. யாரோ எவரோ எழுதியது மிக அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  26. //what we are today is the result of our past actions // - நல்ல கருவோடு கூடிய தொகுப்பு ஜி !

    பதிலளிநீக்கு
  27. வருத்தப்பட வேண்டாம் நம் செல்வங்கள் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்.(மகன்)
    குடும்பத்திற்கு செய்த உதவிகளை நினைத்து மகிழுங்கள், அவர்கள்
    அவர்களுக்கு தெரியும் நீங்கள் செய்த உதவி.

    என் கணவர் அடிக்கடி சொல்வது எது நமக்கு உண்டோ அது உண்டு. எது நமக்கு இல்லையோ அது இல்லை என்று சொல்வார்கள்.

    குழந்தைகளிடம் அதிக நேரம் செல்வு செய்யுங்கள். அவர்களை பிரிந்து பலகாலம் வெளிநாட்டில் இருந்து விட்டீர்கள்.
    அன்பை அதிகமாய் காட்டுங்கள். புரிந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உங்கள் கணவர் சொன்னது மிகவும் சரி.

      நான் எவ்வளவு பணம் சம்பாரித்து என்ன செய்ய... அது யாருக்கு போகவேண்டும் என்பதை இறைவன் தீர்மானித்து வைக்கிறான் இதுதான் மனிதனுக்கு அப்பாற்பட்டு நடக்கும் சக்தி.

      தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  28. ஆமாம் நண்பரே எதற்கு கோழிக்கு நாலு கால்

    பதிலளிநீக்கு