தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 06, 2018

உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்


வணக்கம் நட்பூக்களே... நலமா ? நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழுதியதோடு இல்லாமல் ஐந்து பதிவர்களுக்கு அழைப்பு விட்டதில் என்னையும் சேர்த்து கில்லர்ஜி உள்ளதை உள்ளபடி ஜொள்ளும் மாயக்கண்ணாடி என்று ஜொள்ளி விட்டார்கள். இது உம்மையா ? என்று இன்னும் எனக்கு குப்பமாகவே இருக்கிறது. இந்த தொடரின் சாராம்சம் தனது அனுபவங்களை, ஜேம்ஸ் ஊரணியோரம் நின்று கொண்டு இலவசமாக அறிவுரை வழங்குவோர்களிடம் பெற்ற அறிவுரைகளை பிறருக்கு சொல்லி விளக்க வேண்டுமாம். மேலும் இந்த நெடுந்தொடரை முதலில் தொடங்கி வைத்த மூலவர் அமெரிக்கவாசி திரு. மதுரைத்தமிழன் அவர்கள் தொடர் பதிவின் தலைப்பு உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள் சரி நான் என்னத்தை எழுதுவது ? எதையாவது எழுதிக் கிழிப்போம் வேறுவழி.


அனுபவ அறிவு
நம்மிடம் ஒரு பழஞ்சொல் உண்டு வயிற்று வலியும், பல் வலியும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும் என்று வடிவேல் சொல்வது போல நமக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்பது போலத்தான். பெண்களின் பிரசவலியை அறிந்திருக்கின்றோம் உணர்ந்திருக்கின்றோமா ? இது இயலுமா ? நிச்சயமாக முடியும் ஒவ்வொரு மனிதனும் அவனது மனைவியின் பிரசவத்தன்று அவர்களுடன் அந்த ஒருநாள் முழுவதும் இருந்து பாருங்கள் தனது தாயின் வேதனை எப்படியானது ? என்பதை உணர்வார்கள் அதன் பிறகு அவனது தாய் மட்டுமல்ல இந்த சமூகத்தில் எந்த தாயும் முதியோர் இல்லத்தில் இருக்க மாட்டார்கள். மேலும் தமிழகமெங்கும் முதியோர் இல்லங்கள் தகர்த்து எறியப்படலாம். இதை உணரவேண்டும் என்பதற்காகத்தான் பிரசவ நேரத்தில் கணவனும் கூடி நிற்கும் சூழலை இறைவன் அமைத்திருந்தானோ ? என்று பலமுறை நான் நினைத்துப் பார்த்ததுண்டு. தாய் நடமாடும் தெய்வம். இவ்வுலகில் நாம் காலில் விழுந்து வணங்குகிறோம் என்றால் அது அவனவனைப் பெற்ற தாயைத் தவிர வேறில்லை. தந்தைகூட இந்த வரிசையில் சேர்க்க இயலாது காரணம் அவன் தவறு செய்யக் கூடியவனே... நானும் ஒரு தந்தையானவனே... இருப்பினும் பொதுநிலைக்கு வரும் பொழுது தந்தையை விட தாய் உயர்வானவள். அதாவது நல்ல இதயம் என்பதில் பெரும்பான்மை தாய்தான் இதில் தந்தையானவன் இரண்டாம் நிலையே.... அப்படிப்பட்ட தாயின் காலில் விழும் கலாச்சாரத்தில் வந்தவர்கள் நாம். ஆனால் பல விளங்காமட்டைகள் நடிகையான ஜெயலலிதா காலில் விழுகின்றீர்களே... வெட்கமாக இல்லை ? நடிகனான ரஜினிகாந்த் காலில் விழுகின்றீர்களே... அடேய் ஐயப்பசாமி ரசிகனே மாலை போட்டு நடிகனை சுற்றி வர்றியடா.... உனக்கு ஐயப்பன் மீது நம்பிக்கை இல்லையாடா ? ஐயய்யே.... இதென்ன பதிவு வேற போக்குல போகுது... ஏஞ்சல் கோபப்படப் போறாங்க ரூட்டை மாத்து.

அனுபவ அறிவு
பொய் சொன்ன வாய்க்கு போண்டா கிடைக்காது என்பார்கள் இது எவ்வளவு உண்மை என்பதை நானும் உணர்ந்தேன் ஏற்கனவே பகிர்ந்த விடயமே 2012-ல் ஜெர்மனியிலிருந்து... ஃப்ரான்ஸுக்கு இரயிலில் பயணிக்கும் பொழுது என்னுடன் பயணித்த இரண்டு ஜெர்மனிய மாணவர்கள் இந்தியாவின் டெல்லி தாஜ்மஹாலைப் பற்றி கேட்க, நான் பந்தா பந்துலு மாதிரி அதுக்கு எதிர்த்தாப்பலதான் எனது வீடு காலையில் எழுந்ததும் அதன் முகத்தில்தான் விழிப்பேன் என்று சொல்லி அவர்களை பிரமிக்க வைத்த என்னை, பிறகு இராமேஸ்வரம் பற்றி கேட்ட பொழுது எனது தேவகோட்டை அருகில்தான் அந்த ஊர் என்று சொல்ல முடியாமல் தவித்த என்னை மேலும் இடிபோல் இறக்கியது அடுத்த கேள்வி உலக அளவில் மொழி ஆராய்ச்சி செய்து வரும் அவர்கள் டெல்லியில் பேசுவது ஹிந்தி இராமேஸ்வரத்தில் பேசுவது எந்த மொழி ? நான் தமிழ் என்று சொன்ன பிறகு கேட்டான் பாருங்க கேள்வி உனக்கு தமிழ் தெரியுமா ? அவ்வ்வ்வ்வ் அதிரா அவர்களுக்கு அதிரடியாக சிரிக்கப்படாது பெரியவுங்க பழமொழி சொன்னால் காரணமில்லாமல் சொல்லி வைக்க மாட்டாங்க... அன்றிலிருந்து விளையாட்டுகூட பொய் சொல்லக்கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வைத்தது அந்த இரயில் பயணம். தேவையில்லாமல் தாஜ்மஹால் முன்னாடிதான் என் வீடு என்று சொன்ன பின்னாடி தேவகோட்டைதான் என் வீடு என்றால் நீ முன்னாடி டெல்லி என்று சொன்னாயே... என்றால் என் முகத்தை பின்னாடி கொண்டு வைக்க முடியுமா ? இல்லை கண்ணாடியில்தான் என் முகத்தை முன்னாடி நின்றுதான் பார்க்க முடியுமா ? பின்னாடி நின்று யாராவது கேலி பேசமாட்டார்கள் ? ஐயய்யே.... இதென்ன பதிவு பஞ்சதந்திரம் மாதிரி போகுது... ஸ்ரீராம்ஜி கோபப்படப் போறாங்க ரூட்டை மாத்து.

அனுபவ அறிவு
நம் இனிய இந்தியாவில் டூவீலரில் போகிறோம் இல்லை பறக்கின்றோம் இதில் சிக்னலில் கார்கள் நிற்கும் பொழுது இடையில் புகுந்து, வளைந்து, நெளிந்து பறக்கின்றோம் நமக்கு ஒன்றுமில்லை நாம வச்சு இருப்பது பழைய பண்டாரம்தான் அந்த நேரங்களில் கார்களை உரசி செல்லும் பொழுது கார்களின் உரிமையாளரின் மனநிலை எப்படி இருக்கும் ? என்பதை நாம் நினைத்துப் பார்க்க மறுக்கின்றோம் அதிலும் புதிய கார் வைத்து இருப்பவர்களின் நிலை ? இறங்கி கேட்கவும் முடியாது சிக்னல் விழுந்து விடும். சரி இது தவறென்று எப்பொழுது உணர்கின்றான் ? அவனும் கஷ்டப்பட்டு, கருமாயப்பட்டு குருவி சேர்ப்பதுபோல் பணம் சேர்த்து ஒரு கார் வாங்கி சாலையில் செல்லும் பொழுது சர்ர்ர்ர்ர்ர்.... புர்ர்ர்ர்ர்ர்னு டூவீலரில் பறப்பாங்களே... அப்பத்தான் தெரியும் புதுக்காரில் உரசும்போது உரிமையாளனின் மனநிலை. அபுதாபியில் ஆறு ட்ராக்குகளில் சரியாக ஆறு கார்கள் செல்கின்றன... இதில் நான் ஒருநாளும் குழம்பியதே இல்லை இந்தியாவில் மூன்று ட்ராக்குகளில் ஏழு கார்கள் செல்கின்றன... இந்தக்குழப்பம் எனக்கு இன்னும் தீரவில்லை. மேலும் காருக்கு ஹாரன் அடிப்பதை இப்பொழுதுதான் பழகிக்கொண்டு வருகிறேன். அங்கு நூறு கார்கள் போனால் இரண்டு டூவீலர்கள் பார்க்கலாம், இந்தியாவில் பத்து கார்களோடு நூறு டூவீலர்கள் செல்கின்றன... திருச்சிக்காரவுகளிடம் கேட்டால் ? இது மோதியின் டிஜிடல் இந்தியா அப்படினு சொல்லுவாங்க... ஆனால் அபுதாபிக்காரன் இந்த வார்த்தையை சொல்லாமல் டிஜிடல் அபுதாபி ஆக்கிட்டான். ஐயய்யே.... இதென்ன பதிவு டெல்லிக்கு போகுது... அதிரா கோபப்படப் போறாங்க ரூட்டை மாத்து.

இதோ 01.01.2018 அன்று இறைவன் எனக்களித்த பரிசு.

நட்பூக்களே... இதற்கு ஐந்து பதிவர்களை இழுத்து விட வேண்டுமென்பது மரபு பதிவுலகம் பதிவர்களுக்கு பஞ்சத்தை கொடுத்திருக்கும் காலகட்டத்தில் பிறருக்கும் வேண்டுமே என்ற உயர்ந்த எண்ணத்தின் காரணமாக நான் மூன்று முத்துக்களை மட்டும் இங்கு பதிவெழுத அன்புடன் அழைக்கிறேன் - கில்லர்ஜி

இதோ அந்த முத்துக்கள்.

123 கருத்துகள்:

  1. அதிராவிற்கு வயசாயிடுத்து அதனால கொஞ்சம் மெதுவாகத்தான் வருவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ...இவ்ளோ ஸ்பீட்டா கில்லர்ஜி போடுவார் என மீ எடிர்பார்க்கல்லே:))..

      இப்போ என் கொமெண்ட்ஸ் ஐ பப்ளிஸ் பண்ணமல் ஸ்லீப் பண்ணினாரெனில்:).. காலையில கொமெண்ட்ஸ் பொக்ஸ் தேம்ஸ்ல மிதக்கும்:))

      நீக்கு
    2. நன்றி தமிழா...
      நனறி அதிரா...

      நீக்கு

  2. இங்கு அமெரிக்காவில் பிரவச நேரத்தில் கணவர்கள் கூடவே இருப்பதுண்டு.. அமெரிக்கர்கள் வீடியோ கேமராவை வைத்து பிரசவத்தை வீடியோ எடுப்பதுண்டு.என் மனைவியின் பிரசவ நேரத்தில் அவருக்கு ஊசி போடுவதை பார்த்து அந்த ருமில மயங்கி விழுந்தவன் அடியேன் ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... அவங்க உங்கள் மனைவியைப் பார்ப்பினமோ உங்களைப் பார்ப்பினமோ?:) எதுக்கு பேசாம வெளியே நிக்காமல் .. உள்ளே போய்க் கஸ்டம் குடுக்கிறீங்க:)) ஹா ஹா ஹா..

      என் கணவர் என் கையைப் பிடிச்சுக்கொண்டே இருந்தார், நான் அவரோடு பேசிக்கொண்டே இருந்தேன்.. எனக்கு சிசேரியன்:)... எல்லாம் முடிஞ்சபின் கேட்டேன் எப்படி எடுக்கிறார்கள் என நீங்க முகத்தை திருப்பிப் பார்க்கவே இல்லையே என:) அதுக்குச் சொன்னார் உங்கள் உடலில் கீறுவதை எப்படி நான் பார்க்க முடியும் என.... இத்தனைக்கும், அவர் எத்தனையோ பேருக்குச் சீசர் செய்திருக்கிறார்:))..

      நீக்கு
    2. நல்ல ஆதர்ச தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  3. நான் பதிவில் கேட்டது நம் வாழ்க்கையில் அல்லது நம் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பிரச்சனைகள் ஏற்ப்பட்டு இருக்கலாம் அந்த பிரச்சனைகளை எப்படி சாமாளித்து வந்தோம் என்பதை சொன்னால் அது மற்றவர்களுக்கும் உதவுமே என்று சொல்லி எழுத வேண்டுகோள் விடுவித்தேன் உதாரணமாக நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தீர்கள் அங்கு உங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கலாம் அதை எப்படி சமாளித்தீர்கள் அல்லது விமானத்தில் செல்லும் போது ஏர்போர்ட்டிலோ அல்லது விமானத்திலோ பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கலாம் அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள் அல்லது அதை மற்றவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்றும் அல்லது நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது இந்தியாவில் உள்ள உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தால் அல்லது உஙகள் நண்பர்கள் உறவினர்கலுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்தால் அதை எப்படி சமாளிதீர்கள் என்பதை சொன்னால் அது போல வேறு யாருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்கள் நாம் செய்ததை பின்பற்றி அந்த பிரச்சனைகளை சமாளிக்கலாமே

    இப்படிப்பட்ட அனுபவ அறிவுகளைத்தான் எழுத வேண்டுகோள் விடுவித்தேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவ்வப்போது இப்படிப்பட்ட அனுபவங்களை எழுதி வருவது தங்களுக்கும் தெரியுமென்று நினைக்கிறேன்.

      மேலும் தில்லை அகத்தாரிடம் பேசி விட்டுத்தான் இப்பதிவை எழுதினேன்.

      இருப்பினும் தாங்கள் கேட்டுக் கொண்டது போல் இனியும் எழுதுவேன் நன்றி நண்பரே...

      நீக்கு
  4. பதிவை இணைத்து வோட்டும் போட்டுவிட்டேன் ஜி......பதிவு எழுது வெளியிட்டமைக்கு மீண்டும் எனது நன்றிகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்றுத் இதை நான் மன்னிக்கவே மாய்ட்டேன்ன்ன்ன்:).. நான் என்னை ஆரும் படு மோசமான ஒருவர் அதிராதான் எனச் சொன்னாலும் பறவயில்லை:) நானும் ஜொள்ள வந்ததை ஜொள்ளுவேன்:))..

      ஊரில ஒரு பயமொயி டொல்லுவினம் தனக்குத் தனக்கெண்டால் சுளகு படக்குப் படக்கெண்ணுமாம்:))... அப்பூடி எல்லோ இருக்குது இது:))).. சர்ரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))... ஸ்ஸ்ஸ் கொப்பி பேஸ்ட் பண்ணிச் சொல்ல முடியுதா ஒரு விசயத்தை இங்கின கர்:))

      நீக்கு
    2. இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி தமிழரே...

      நீக்கு
    3. துளசி சாருக்கு நேரம் கிடைத்தால் மட்டும் எழுதட்டும்.....யாரையும் அவசரப்படுத்த வேண்டாம்ஹலோ யாராவது அதிரா எழுதிய இந்த கருத்தில் இரண்டாவது பாராவில் எழுதி இருப்பதை கொஞ்சம் தமிழில் மொழி பெயர்த்து எழுதுங்களேம் எனக்கு புரியலை அவங்க என்னை திட்டுராங்களா பாராட்டுராங்களா என்று புரியக் கூட இல்லை

      நீக்கு
    4. ஆம் தமிழரே பழமொழி படித்து நானும் குசம்பி போயிட்டேன்.

      நீக்கு
    5. கீதா அவர்களின் பதிவிற்கு போட்ட வரிகளில் இரண்டு வரி இங்கே வந்துவிட்டது மன்ன்னிக்கவும்

      நீக்கு
    6. நினைத்தேன் சரியாக வந்து சொல்லி விட்டீர்கள் நன்றி

      நீக்கு
  5. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு எட்டு வெளில போயிட்டு வருவதற்குள் புயுப்போஸ்ட்:) அதுக்கு ட்றுத் லாண்டட்:).. நோஓஓஓஓ இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன்.. போஸ்ட்டப் பார்த்திட்டு பலதடவை காகா போயிடுவார் ட்றுத் இப்போ மட்டும் எதுக்கு மீஈஈ ட 1ஸ்ட்டா வந்தார்ர்..:) நேக்கு நீதி வேண்டும்....

    மாயக்கண்ணாடி போட்டிருக்கும் யுள்ளதை:) யுள்ளபடி ஜொள்ளும் கில்லர்ஜி அவர்களை மேடைக்கு அழைக்கிறென்ன்ன்ன்ன்ன்:).. என்னுடையதை 1ஸ்ட்டா வெளியிட்டு தீர்ப்பை மாத்துங்கோ இல்லை எனில் உங்களுக்கும் தேம்ஸ்தான் கதி:))..

    ஊசிக்குறிப்பு இப்போ ரொம்பக் குளிர் தேம்ஸ் தண்ணி:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபர்ஸ்டா மாற்றுவது எப்பூடி ?

      நீக்கு
    2. கில்லர்ஜி மிக எளிது முதியோரில் முதலில் வந்ததது அதிராதான் என்று சொல்லிவிடுங்க ......முதியோர் லிஸ்டில் அவங்கதான் பர்ஸ்ட் ஹீஹீ

      நீக்கு
  6. அச்சச்சோ எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈஇ.. இடையில ட்றுத்துக்கு பதில் போட்டனா... விட்ட இடத்தை மறந்திட்டனே:))..

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதாரது இலவச அறிவுரை குடுக்கும் அதிரா என முத்திரை ஒட்டியது:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் கோல்டன் அறிவுரையைக் கேட்டோர் எல்லாம் பவுண்ட்ஸ்ல காசு போட்டு விடோணும் இதையும் ஜொள்ளிட்டேஎன்ன்ன்ன்:))...

    யூ ஏ ஈ ல டெவ்ட் காண்ட் ட்றைவிங்கோ:..?..

    தாயை விடக்கூடாது ஓகே.. அப்போ தந்தையை விடலாமா கில்லர்ஜி:)).. எதுக்குக் கேட்கிறேனெனில்.. முதியோர் இல்லத்தில் ட்றுத் இருந்தா எப்பூடி இருக்கும் என நினைச்சுப் பார்த்தேன் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயை நல்ல இதயத்தில் முதலிடம் வைத்துள்ளேன்.
      தந்தை இரண்டாவது இடமே...

      நீக்கு


    2. //விட்ட இடத்தை மறந்திட்டேனே///

      வயசானால் மறதிகள் வருவது சகஜம்தான் அதிரா....

      நீக்கு
  7. ஹா ஹா ஹா ஒவ்வொரு அனுபவ அறிவும் அழகாத்தான் ஆரம்பிக்கிறீங்க ஆனா முடிவில டங்கு ஸ்லிப் ஆகிடுதே:)).. இருப்பினும் நல்லபடி வெட்டி எடுத்துப் பாதையில ஏத்தி முடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்..:)..

    புதுவருடத்தன்று கிடைத்த பரிசா?... என்ன அந்த கையில வாங்கும் காளாஞ்சியோ?:).. எண்டெல்லாம் கேய்க்க மாட்டேன்ன் அழகிய சுசுக்கிக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வருட தினத்தன்று கார் வாங்குவதால் டோக்குமெண்ட், சாவியோடு பழக்கூடையும் கொடுத்தார்கள்.

      வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  8. கடசி அனுபவ பதிவில எனக்கும் ஒன்று நினைவுக்கு வருது, நம் நாடுகளில்.. ஒரு அம்பியூலன்ஸ் க்கு வழி விட்டால் அதைத்தொடர்ந்து பல ஓட்டோ கார், ஸ்கூட்டர் ஓடித்தப்பிடும் ஹா ஹா ஹா:))..

    அழகாக உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திட்டீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இதைப்பற்றி நான் பலமுறை எழுத நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.

      நீக்கு
  9. நன்றீ :) நன்றீ .ஒரு வார்த்தை சொல்லி அழைப்பு விடுத்தவுடன் உடனே வேண்டுகோளை ஏற்று பதிவை எழுதிட்டீங்க ..ஒரே ஒரு குட்டியூண்டு வருத்தம் பிரபல வலைப்பதிவர் இதுக்கு நடுவில் சமையல் என்ற வார்த்தையை சேர்த்திருக்கலாமோ :))) இந்த பின்னூட்டம் தேம்ஸ் நதிக்கரையோரமிருக்கும் பூஸார் கண்ல படாம மறைச்சிடுங்க .ஏற்கனவே என்னை அடிக்க பெரிய கட்டையோட மூச்சிரைக்க ஓடித்திரியறாங்கன்னு ஸ்னாப்சாட்டில் பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஓவர் ஆசை, உடம்புக்கு ஆகாது ஜொள்ளிட்டேன்ன்ன்:))

      நீக்கு
    2. இதோ மாற்றி விட்டேன் சந்தோஷமா ?

      அதிரா பார்க்காமல் துணியைப்போட்டு மூடி வைக்கணும்.

      நீக்கு
  10. அனுபவ அறிவில் சொன்னது அருமை வெளிநாடுகளில் வாழும் அனைத்து கணவர்களுக்கும் பிரசவநேரம் மனைவியுடன் துணை இருக்க அனுமதி உண்டு .நம் நாட்டிலும் இப்போ இந்த வசதி இருப்பது மிகவும் நல்லதே .அய்யப்பன் மாலைப்போட்டு ரசினி காலில் ரசிகன் விழுந்தாரா :( அதைவிட வேதனை ஒருவர் தன முகத்தை டாட்டூ குத்தி வச்சிருக்கார் ..இவங்க அடையாளத்தையே இழந்த ஜந்துக்கள் அவங்க பெற்ற தாயை விடவா முக்கியமாகிட்டார் :(
    உங்கள் ஆதங்கம் தான் எனதும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயப்ப பக்தன் ரஜியை மூன்று சுற்று சுற்றினான் டி.வியில் பார்க்கவில்லையா ?

      நீக்கு
    2. தமிழ் தொலைக்காட்சி கனெக்க்ஷன் எங்ககிட்ட இல்லை .ஏதாச்சும் ப்ரொக்ராம்ஸ் யூ டியூபில் தான் பார்ப்பேன்

      நீக்கு
    3. ம்..ம்... அவசியம் பாருங்கள்

      நீக்கு
  11. கில்லர்ஜி, சத்தியமாக உங்கள் முதல் பந்தியில் நீங்கள் சொன்ன விதம் எனகுப் புரியவில்லை,

    2,3 தரம் படிச்சும் எனக்கு இப்படித்தான் புரிஞ்சது..
    ஐயப்பன் பக்தர்களைத்திட்டுறீங்க .. எதுக்கு மாலை போட்டு ஐயப்பனை சுத்தி வாறீங்க எனக் கேட்பதைப்போலவே புரிஞ்சு கொண்டேன்...

    அவனை எனச் சொன்ன இடத்தில் பெயரைப் போட்டிருந்தால் இக்குழப்பம் வந்திருக்காது:)) எனக்கு மனம் கேட்கவில்லை, எதுக்கு அப்படிச் சொல்றீங்க என, அதனால திரும்ப வந்து படிச்சுப்பார்ட்த்தேன் இப்போ பிரிஞ்சிடிச்சு:)).. ஏனெனில் எனக்கு, அடுத்தவர்களின் நம்பிக்கையில் குறை சொல்வது விருப்பமில்லை.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கடவுள் மீது நம்பிக்கை, அதனாலேயே குழப்பமாக இருந்தது.:). என்னைப்போல இன்னும் ஆரார் குழம்புகிறார்களோ தெரியாது:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர் :) எனக்கே புரிஞ்சது ..யூ குக்கு கு கு .

      நீக்கு
    2. அதிரா டி.வி.யில் பார்க்க வில்லையா ? அவனது செயல் பல ஐயப்ப பக்தர்களின் மனதை காயப்படுத்தி விட்டது.

      அந்த இடத்தில் உங்கள் அங்கிளின் பெயரைப் போட்டால் உங்களுக்கு கோபம் வருமோ என்ற பயத்தால் எழுதவில்லை.

      நீக்கு
  12. அனுபவ அறிவு 2 ..
    உண்மைதான் பாருங்க கடைசில நம்மூர் பெருமையை சொல்லிக்க முடியாமப்போச்சே .குட்டி பொய்யும் காலை வாரிடும் சமயங்களில் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்கஞ்சு:) ஆராவது சமையல் குறிப்புக் கேட்டிடப்போகினம்:)) ஹா ஹா ஹா குறிப்புக் கேட்டால்கூட ஜமாளிச்சிடலாம்:) ஒரு டிஸ் தரச் சொல்லிக் கேட்டிட்டால் அவ்வ்வ்வ்வ்:)).. அதிராவும் பக்கத்தில இல்லையே அவசரத்துக்கு மானத்தைக் காப்பாத்திவிட:)).. எதுக்கும் கில்லர்ஜியின் அட்வைஸ் ஐ மனதில் கொண்டு ஓசிச்சு ஓசிசே கதையுங்க ஜொள்ளிட்டேன்ன்:))

      நீக்கு
    2. உண்மைதான் அதன் பிறகு நான் விளையாட்டுக்கு சொல்லும் பொய்யை நிறுத்தி விட்டேன்.

      நீக்கு
    3. ஏஞ்சல் மற்றும் அதிரா தாங்கள் இருவரில் யாராவது ஒருவர் தங்களது ஃப்ரொப்பைல் புகைப்படத்தை மாற்றுங்கள் இரண்டுமே ஒன்றுபோல் தெரிவதால் குழப்பம் வருகிறது தவறெனில் சாரி.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா தவறில்லை கில்லர்ஜி.. நானே குழப்பமடைகிறேன் பல சமயம்... நான் ஆரம்பகாலம் தொடங்கி இதே படம்தான், இந்த ஃபிஸ்ஸு தான் இப்போ ஏதோ தானும் புரட்சி செய்கிறேன் பேர்வழி எனப் புறப்பட்டு இதைப் போட்டு வச்சிருக்கிறா.. தேம்ஸ் கரையில வச்சு தள்ளிடுவேன் என வெருட்டினால் பழசுக்கு மாறிடுவா.. கொஞ்சம் நில்லுங்கோ:)).

      நீக்கு
    5. என்னோட ஃப்ரொப்பைல் யாரையும் குழப்பாது...

      நீக்கு
    6. hahaha :)நானே நேற்று குழம்பிட்டேன் :) ஒருவழியா என் ஆரம்பகால குட்டி தங்கமீனை கண்டுபுடிச்சி போட்டேன் ..மாற்றியாச்சு :)
      நேற்று நான் வெள்ளிக்கிழமை போட்டதும் ஸ்ரீராம் அதிரா சனிக்கிழமை னு சொன்னபோதான் புரிஞ்சது

      நீக்கு
    7. நான் மாற்றினதுக்கு இப்போ முக்கிய காரணம் .அதிராவோட தமிழ் புலமை சமையல் புலமைக்கண்டு அடிக்க வறவங்க என்னைய அடிச்சிட்டு போக கூடாதே

      நீக்கு
    8. மாற்றியமைக்கு நன்றி.
      ஆமாமா... அடியை அதிராமீது அதிரடியாய் மாற்றி விடுங்கோ...

      நீக்கு
    9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கில்லர்ஜி இப்போ ஆருக்குச் சப்போர்ட் பண்றார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    10. ஹா.. ஹா.. ஹா.. குழப்பிட்டேனா...

      நீக்கு
  13. இந்தியாவில் வாகனம் டூவீலர் வைச்சிருப்போர் நிலை பாவம்தான் .எங்க தெருவில் ஒருவர் தினமும் காரை யார் பைக்கும் கீறிடக்கூடாதுன்னு சாமிகும்புடுவார் அப்போ சிரிப்பு வந்துச்சி இப்போ பார்க்கிங்கில் எங்க காரை வைக்கும்போதெல்லாம் யாரும் இடிக்கக்கூடாது டென்ட் விழக்கூடாதுன்னு நினைப்போம் .ஹார்ன் அடிக்கிறது ஜெர்மனியில் பார்த்ததேயில்லை ..ஆனா லண்டன்காரங்க நம்மை ஆண்டவங்கதனே :) இங்கே பொறுமையேயில்லை நிறையபேர் சிக்கனலில் யாராவது ஒரு செகண்ட் தாமதிச்சாலும் ஹார்ட் அட்டாக் வரமாதிரி ஹார்ன் அடிப்பாங்க ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதெல்லாம் தெரிந்த விடயமெனினும் இருபது வருடங்கள் அயல் நாட்டில் வாழ்ந்து விட்டு இங்கு பார்க்கும் பொழுது வித்தியாசமாக தோன்றுகிறது.

      நீக்கு
  14. இறைவன் அளித்த புத்தாண்டு பரிசுக்கு வாழ்த்துக்கள் .நீங்கள் பதிவை தொடர அழைத்த மூவரும் முத்துக்கள் அவர்களின் பதிவுகளுக்காக வெயிட்டிங் .மிக்க நன்றி அழைப்பை ஏற்று பதிவை தொடர்ந்ததற்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி அவர்களின் பதிவுகள் விரைவில் வரும்.

      நீக்கு
  15. தாய்மைக்கு இணையேது? அதுதான் தெய்வீகம். அவர்களுடனேயே இருந்தாலும் அவர்கள் அனுபவிக்கும் வலியை நாம் வாங்க முடியாது. பார்க்காத கடவுளின் காலில் பயத்தால் விழுகிறான். பார்க்கும் பிரபலங்களிடம் போதையில் விழுகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்ல ஹைக்கூ கவிதை போன்ற கருத்துரை அருமை ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  16. பொய் சொன்ன வாய்க்கு போண்டா கிடைக்காது என்பார்கள்! ஹா ஹா ஹா.. தாஜ்மஹால் சம்பவம் ஏற்கெனவே உங்கள் பதிவொன்றில் படித்திருக்கிறேன். ஏஞ்சல் அளவுக்கு இல்லா விட்டாலும் அனாவசியமாக நானும் முடிந்தவரை பொய் சொன்னதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதற்கு எதற்கு ஏஞ்சலை இழுக்கின்றீர்கள் ?

      நீக்கு
  17. சாலை விதிகளை தமிழன் என்று மதித்திருக்கிறான்? மதுரையில் என் கல்லூரிக் காலத்தில் என் திருநெல்வேலி நண்பன் ஒருவன் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வருவான். நாங்கள் சேர்ந்து குழுவாக சினிமா செல்லும்போது வாகனங்களுக்கிடையில் அவன் புகுந்து புறப்படும் ஜோர் இருக்கிறதே, அது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது வருடப்பிறப்பு அன்று இரண்டு வாலிபர்கள் சென்னையில் சாலை தடுப்பு இரும்பு ட்ராலியை இழுத்துக்கொண்டு பைக்கில் செல்கின்றார்கள் இதுதான் புத்தாண்டு கொண்டாடும் அழகா ?

      நீக்கு
  18. அடடே... புது கார் வாங்கியிருக்கிறீர்களா? வாழ்த்துகள். கார் சாவியை உங்களிடம் தருபவர் பார்வை முழுக்க உங்கள் மீசை மேலேயே இருக்கிறது போலும்... பயப்பார்வையைப் பணிவுடன் பார்க்கிறார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி சாவியை தருபவர் ஆசி வழங்குவது போல்தான் எனக்கு தெரிகின்றது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  19. பொதுவான சமூகப்பிரச்னைகளைப் பற்றிய பதிவு நன்று. அதுசரி, அப்பா, அம்மா உறவுகளிடமிருந்து பெற்ற அட்வைஸ்கள்கள் பற்றிய அந்தத் தொடர்பதிவு எப்போது எழுதப் போகிறீர்கள்? இன்று தலைப்பு மட்டும்தானா?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி அதையும் எழுதவேண்டுமா ? பரவாயில்லை எழுதுவோமே... எங்கே போய்விடும் காலம் அது என்னையும் எழுத வைக்கும்.

      நீக்கு
  20. அனுபவங்கள் அறிவூட்டும் - அந்த
    அனுபவங்கள் வழிகாட்டும் - அந்த
    அனுபவங்களைப் பகிர்ந்தால்
    உள்ளத்தில் நிறைவு!
    அருமையான தொடர்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  21. கில்லர்ஜி ஆஜர் வைச்சாச்சு ப்ளஸ் வலைத்தள கடமையும் ஆற்றியாச்சு...பதிவை பின்னர் வந்து வாசிக்கிறேன்...ஏன்னா நாங்களும் இந்தத் தொடரில் இருக்கோமே...அதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது பதிவை தொடரை படிக்க ஆவலாய் உள்ளேன்.

      நீக்கு
  22. ஹிஹிஹி, கில்லர்ஜி, சந்தடி சாக்கில் "திருச்சிக்காரவுக"னு நம்மளையும் இழுத்துட்டீங்களே! இங்கே உள்ள போக்குவரத்தைப் பற்றி ஏற்கெனவே நீங்க அறியாததா? இதை எந்த "மோதி" வந்து மோதினாலும் திருத்த முடியாதுங்கோ! டிஜிடல் இந்தியாவுக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை! மக்களாகப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்! :( டூ வீலரை விடுங்க! ஆட்டோக்காரங்க? இடுக்கிலெல்லாம் நுழைஞ்சு போறாங்க. ஆட்டோவில் நாங்க பயணம் செய்தால் அப்படி எல்லாம் போகக் கூடாதுனு கண்டிப்பாச் சொல்லிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கார் ஓட்டும்போது கோபம்தான் வருகிறது யாருமே சாலை விதிகளை மதிப்பதில்லை நான் ஒருவன் கடைப்பிடித்து கரை சேர்வேனா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

      நீக்கு
  23. காலங்கார்த்தாலே நல்லாச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைச்சுட்டீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சிரித்து சிந்தித்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. அது சரி, கில்லர்ஜி, புதுக்காரில் முதலில் எங்கே பயணம் சென்றீர்கள்? அதைப் பத்தியும் எழுதி இருக்கலாமே! :)

      நீக்கு
    3. உண்மையில் அந்த விடயத்தை எழுதினால் இப்பதிவுக்கு பொருத்தமாக இருந்திருக்கலாம் பரவாயில்லை நீங்கள் கேட்டதற்காக விரைவில் எழுதுகிறேன்.

      குடும்பசகிதம் முதலில் சென்ற இடம் பிள்ளையார் கோவிலில் பூஜை பிறகு கோவை யுனைடெட் ஹேண்டிகேப்பிட் ஸ்கூலில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினோம்.

      நீக்கு
  24. இப்போல்லாம் மனைவியின் பிரசவத்தின் போது கணவனுக்கு அனுமதி உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்லதொரு தொடக்கம்தான் வரவேற்போம்.

      நீக்கு
  25. இறைவன் உங்களுக்களித்த பரிசைத் தர வருபவர் உங்களைக் கண்டு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்.
    தங்கள் அழைப்பு என் பாக்கியம். விரைவில் பதிவு எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நான்தான் சாவியை பவ்யமாக பெறுவது போலிருக்கின்றது
      விரைவில் வரட்டும் தங்களது தொடர்...

      நீக்கு
  26. பட்டறிவுதான் நமக்குத் துணையிருக்கும் என்பதை நல்லாச் சொல்லியிருக்கீங்க. உங்கள் அனுபவ அறிவு பிறருக்கும் உபயோகம்தான்.

    போலி பெருமைக்காக யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது. அது விரைவில் பல்லிளித்துவிடும்.

    புதுக் காருக்கு வாழ்த்துகள். என் பையன்ட இது என்ன கார்னு கேட்டேன் அவன் மாருதி எர்டிகா பெரிய வண்டி 7+ லட்சம் என்று சொன்னான். உங்களுக்கு நலமே விளைவதாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அனுபவ அறிவே நம்மை பண்படுத்தும் என்பது எனது நம்பிக்கை.

      போலி பெருமையை நான் விரும்பாதவனே ஆனால் அவர்கள் வேற்று நாட்டவர்தானே என்று பீடா விட்டேன் அவர்கள் விட்டால் எங்கள் பூர்வீகம் தேவகோட்டை என்று சொல்வார்கள் போல...

      ஆம் நண்பரே MARUTI SUZUKI WagonR 2017 (5.7)

      நீக்கு
  27. மனைவி பிரசவ வேதனை அனுபவிக்கும் தருணத்தில் உடனிருக்கும் கணவன் தன் மனைவி படும் வேதனையைப் பார்த்துத் தன் தாய் பட்ட வலிகளையும் வேதனைகளையும் உணரந்து தாய்க்கு மட்டுமே முதலிடம் தந்தைக்கு இரண்டாம்தான் என்று எழுதியுள்ளீர்கள். நல்ல சிந்தனை. தாஜ்மகால் உரையாடல் நல்ல ஜோக் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகான கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கும், ரசித்தமைக்கும் நன்றி

      நீக்கு
  28. இம்புட்டு ஸ்பீட்ல பதிவு போட்டா எப்படி?!

    பதிலளிநீக்கு
  29. பொய் சொன்ன வாய்க்கு போண்டாவா?! இத்தனை நாள் போஜனம்ன்னுல்ல நினைச்சுட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ இப்படித்தான் இதிகாசத்தில் எழுதி இருந்தது

      நீக்கு
  30. போலி வெளுத்துவிடும்....

    இங்குள்ள ட்ராஃபிக் பத்தி சொல்லணுமா என்ன...ஹையோ...

    கருத்துகள் நல்ல கருத்துகள்

    ஹை புது கார் இறைவனின் பரிசாக வந்தமைக்கு வாழ்த்துகள்!!! எங்கள் இருவரின் வாழ்த்துகளும்...

    சரி பதிவு பொதுக் கருத்தா போயிருச்சே...மதுரை சொன்னது நம்ம வாழ்க்கை அனுபவப் பாடம் இல்லையோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலியாக போளிகூட செய்ய முடியாது போலயே....
      வருக வாழ்த்துகளுக்கு நன்றி

      இதுவும் எனது வாழ்க்கையின் இரண்டு அனுபவங்களை தந்து இருக்கிறேன் பரவாயில்லை இனிமேல் எழுதுவோம்.

      நீக்கு
  31. அன்பின் ஜி..

    தங்களது ஜோதிக்குள் என்னையும் இழுத்து விட்டதற்கு நன்றி..மகிழ்ச்சி.. ஆனாலும் -

    தைப் பொங்கல் முடிந்த பிறகுதான்.. சரியா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி வருக தங்களது மார்கழிக் கோலம் 22 தானே நிறைவுற்றுள்ளது 30-ம் நிறைவு பெறட்டும் காத்திருக்கின்றோம் அறிவுரை பெற...

      நீக்கு
  32. இறைவனின் பரிசு கண்டு மிகவும் மகிழ்ந்தேன்..

    பற்பல வண்ணங்களில் பல்கிப் பெருகிட வாழ்த்துகள்..

    அப்புறம் பதிவைப் பற்றி சொல்வதென்றால் -
    அரேபியன் ஹலுபியாத் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி
      கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஜி

      நீக்கு
  33. உங்கள் எழுதும் ஸ்டைலை மாற்றி விட்டது போலத் தெரிகிறது முதல் வரியைப் பிடித்து கடைசி வரி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் எனது பாதையை மாற்றவில்லை பிறர் சொல்லும் விடயத்தை வைத்து எழுதும்போது... சற்று மாற்றம் காணலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    தொடர் பதிவு அருமை! வார்த்தை வடிவமைப்புக்கள் படிக்கும் ஆர்வத்தை சிறிதும் குன்றவைக்காமல் இருக்கச் செய்தன.
    முத்தான மூன்று (அதிலும், அவசியமான) அனுபவ அறிவுகளை அலசி ஆராய்ந்து தந்து விட்டு, அதற்கு முத்தான மூன்று பதிவர்களையும், தொடர் பதிவெழுத அழைத்து அசத்தி விட்டீர்கள்.
    பதிவுக்கும், புது கார் கிடைத்தமைக்கும்,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகைக்கும், மனமார்ர்த வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  35. அன்புள்ள கில்லர்ஜி அவர்களே

    அசத்தலோ அசத்தல்
    உங்கள்வார்த்தைக்காடுகள்
    அருமை.அருமை.

    அன்புடன் ருத்ரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அசத்தலான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  36. மதிப்பெண் போட்டு விட்டேன்!

    பதிலளிநீக்கு
  37. மூன்று அனுபவங்களுமே அருமை. இப்போதெலாம் சென்னையில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் கணவனை பிரசவத்தின் பொழுது மனைவியோடு இருக்க அனுமதிக்கிறார்கள். சில மருத்துவமனைகள் அதை கணவனின் விருப்பத்துக்கு விட்டு விடுகின்றன. சில மருத்துவமனைகள் பிரசவத்தின் பொழுது கண்டிப்பாக மனைவியோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அது மட்டுமல்ல பிறந்த குழந்தையை தூக்கிக் கொள்வது எப்படி என்று கூட பயிற்சி அளிக்கின்றன.

    தாஜ் மஹால் அனுபவம்.. ஹாஹாஹா!

    புது கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்! நம் நாட்டில் வண்டி ஓட்டும் யாராவது கெட்ட வார்த்தை பேசாமல், கோபித்துக் கொள்ளாமல், திட்டாமல் வண்டி ஓட்ட முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி இருப்பினும் வாழ்த்துகளோடு இறுதியில் சொல்லிய விடயங்கள் மனதில் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது.

      காரணம் எனக்கு இதெல்லாம் வராது கை மட்டும் சற்றே நீளும்...

      நீக்கு
  38. என் இரண்டாவது மகனின் பிரசவ நேரத்தில் அவளை லேபர் வார்டில் பார்த்தேன் அவளது வலி கண்ட போது தீர்மானித்தேன் அதுவே அவளதுகடைசிப் பிரசவம் என்று பொதுவாக வண்டி ஓட்டுபவர்கள் மற்றவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்று குறை கூறுவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது தீர்மானத்தை உறுதி செய்து விட்டீர்கள்.

      தவறு எந்த நொடி யார் செய்தார்கள் என்று நினைக்கும் நொடியில் விபத்து நிகழ்ந்து முடிந்து விடும்.

      நீக்கு
  39. புதிய மகிழ்வுந்து வாங்கியமைக்கு வாழ்த்துகள் நண்பரே
    என்னையும் எழுத அழைத்திருக்கிறீர்கள்
    விரைவில் எழுதுகின்றேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      தங்களது பதிவை காண ஆவலுடன்...

      நீக்கு
  40. முதல் படத்தை பார்த்தவுடனே சட்டென்று புரிந்து கொண்டேன் நண்பரே...வளர்ந்த காதும் வளர்ச்சியைடந்த தொழில் நுட்பத்தையும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே இதுதான் "உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்"

      நீக்கு
  41. புது வாகனத்திற்கு வாழ்த்துக்கள்....


    உங்கள் மகிழ்வு மென்மேலும் சிறக்கட்டும்...

    முத்தான மூன்றும் நன்று...

    பதிலளிநீக்கு
  42. புது வண்டிக்கு ஓமெத்தெத்தோ கோசாய்மசு .
    அனுபவங்கள் .. குறிப்பாக தாஜ்மஹால் ....சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு இஸ்தூத்தி

      நீக்கு
  43. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. மதுரைத் தமிழனின் தொடர் பதிவு பலரை மீண்டும் எழுத வைத்தால் நல்லது! யார் யார் எழுதுகிறார்கள் என்று பார்க்கலாம்....

    மதுரைத் தமிழன் - இது வரை எத்தனை பேர் எழுதி இருக்கிறார்கள் என ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறீர்களா? :) என்னையும் இரண்டு பேர் எழுத அழைத்திருக்கிறார்கள். எழுத வேண்டும்! எழுதுவதில் பிரச்சனை இல்லை - யாரை அழைப்பது என்பதில் தான் பிரச்சனை!

    புதிய வாகனம் - வாழ்த்துகள் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி விரைவில் வரட்டும் தங்களது தொடர்பதிவு

      வாழ்த்துகளுக்கு நன்றி ஜி

      நீக்கு
  44. என்னது! பொய் சொன்ன வாய்க்கு போண்டா கிடைக்காதா? இதையெல்லாம் இவ்வளவு லேட்டாவா சொல்றது? போண்டா சாப்பிட்டு ரொம்ப நாளாயிற்றே என்று நான் கவலைப்பட்டுக்கிடக்கிறேன். இதுதான் காரணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதிகாசத்தில் படித்ததையே சொன்னேன்.

      பொன்னமராவதி போண்டா நல்ல சுவையாக இருக்கும்.

      நீக்கு
  45. 2018-ல் ஆண்டவன் அருளிய பரிசிற்காக உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் சகோதரரே!

    வந்ததே சுணக்கம் இதில் வணக்கம் வேறான்னு கோபம் கொள்ளாதீர்கள். 2 நாட்களாக ஊரில் இல்லை. இன்று மாலையில்தான் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். சிறிது நேரத்தில் வீட்டில் திடீர் விருந்தினரும் வருகை. எனது வலையுலா அடியோடு தாமதமாகிவிட்டது. வருந்துகிறேன்...

    ஆனாலும் நல்ல வேளை நீங்கள் வேறு பதிவிடமுன் வந்துவிட்டேன்...:)

    அனுபவம் + அட்வைஸ் பதிவு நன்றாக இருக்கிறது. ஒவ்வொருத்தரின் அனுபவமும் இன்னொருவருக்கு அட்வைஸ் ஆகும்.
    புதுவருட வரவும் சிறப்பு!

    அட்வைஸ் தரும்படி எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது.
    எப்போ எழுதுவேனோ எனக்கே தெரியாது...:)
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தேன்.

      கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வரட்டும் தங்களது தொடர்பதிவு.

      நீக்கு
  47. அருமையான பதிவு. இப்படித்தான் இந்தப் பதிவு தொடர் பதிவானதா.
    கில்லர் ஜி. வாழ்த்துகள். சிறந்த அறிவுரை உங்கள் அனுபவத்தில் கிடைத்தது.
    புதுக்காருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகையும், வாழ்த்துகளும் கண்டு மகிழ்ச்சி

      நீக்கு