சனி, ஏப்ரல் 28, 2018

திருமலை நாயக்கர் மஹால்


2014
இடம் - மதுரை திருமலை நாயக்கர் மஹால்

பலமுறை அவ்வழியே போயிருந்தாலும் வாழ்வில் முதல் முறையாக உள்ளே நுழைகின்றேன் கழுத்தில் எனது கைக்குழந்தை நுழைவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்த பலகையை கண்டவுடன் எனக்கு கோபம்தான் வந்தது இது எப்படி சரியானதாகும் ? அதாவது நுழைவுச்சீட்டின் கட்டணம் உள் நாட்டுக்காரர்களுக்கு பத்து ரூபாய், வெளி நாட்டுக்காரர்களுக்கு ஐம்பது ரூபாய் இருவருமே இரு கண்கள் கொண்டுதான் பார்க்கின்றார்கள் இதிலென்ன ? ஏற்றத்தாழ்வு உண்மையில் அவர்களுக்குதான் குறைவாக இருக்க வேண்டும் இதைவிடப் பெருமை என்னவென்றால் ? அவர்களுக்கு இலவசம் என்பதே சரி புகைப்பட கருவிக்கு மட்டும் கட்டணம் இருவருக்குமே முப்பது ரூபாய் இது மட்டும் சாத்தியமா ? புகைப்படக்கருவியே இல்லாமல்கூட இன்றைய கைப்பேசிகளில் பிரமாண்டமாக எடுக்க முடிகிறதே அதற்கு கட்டணம் வேண்டாமா ? நம்ம நாட்டான் இதைத்தானே செய்வான்
.
நமது நாட்டு வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட வருபவர்களை வரவேற்பது நமது கடமையில்லையா ? அவர்கள் நம்மைப்போல் பார்த்து விட்டு சாதாரணமாக மறந்து போய் விடுவதில்லை புகைப்படங்கள் எடுத்து அதனைக்குறித்து அவர்கள் நாட்டு பத்திரிக்கைகளில் எழுதுவார்கள் இது நமக்கு பெருமைக்குறிய விடயமில்லையா ? இந்த ரூபாய் அவர்களுக்கு இதொரு செலவே இல்லை என்று சுற்றுலா வாரியம் நினைக்கிறதா ? இதையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள் அவர்கள் இதென்ன ? நாட்டுக்கு ஒரு நீதி என நினைக்க மாட்டார்களா ? சரி, சிலர் வெளிநாட்டான் போலவே இருப்பான் அவன் நுழைவுச்சீட்டு கேட்டால் ? அவனுக்கும் இதே கட்டணமா ? ஆனால் இதனைக்குறித்து ஆராய்வதற்கு அன்று நேரமில்லை எனக்கு, சில உள்ளூர்க்காரர்களே ஸ்ரீலங்கா மாதிரி இருப்பார்கள் அவர்களிடம் ஐம்பது ரூபாய் கட்டணம் கேட்டால் நியாயமா ?


உள்ளே நுழைந்தேன் எவ்வளவு சரித்திரப்புகழ் பெற்றது இப்படி தரித்திணியம் பிடித்தது போலிருக்கிறதே மனம் வருந்தினேன் ஆம் நண்பர்களே எங்கு நோக்கினும் கிறுக்கர்களின், கரிக்கிறுக்கல்கள் தவறான செய்கை காட்சிகள் கரிகளால், சாக்பீஸ்களால் கோடுகள், காதலியின் பெயர்கள் ஏண்டா ? பேதியில ஓயிருவியலா.... சொந்தச் செலவில் தாஜ்மஹால் கட்டி எழுதுங்களேண்டா... இதில் மலையாளப் பெயர்களும் இருந்தது மூலை முடுக்குகளில் டெம்ப்ரவரி காதலர்கள் இவர்கள் சரித்திரம் படிக்கவா ? வருகிறார்கள் இவர்களுக்குத்தான் பத்து ரூபாயா ? ஐம்பது ரூபாய் கொடுத்தானே... அவன் நிச்சயமாக இப்படிச் செய்யமாட்டான் காரணம் அவன் கலையை ரசிக்கத் தெரிந்த கலைஞன். இதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகள் இருக்கிறது என்கிறீர்களா ? அந்தப் பாராமரிப்பு லெட்சணத்தைத்தான் இப்பொழுது காணப் போகிறோம் ஆம் நண்பர்களே எங்கு பார்த்தாலும் குப்பைகளும், பறவைகளின் அசுத்தங்களும், ஆறறிவுகளின் பான்பராக் எச்சில்களும், ஒரு இடத்தில் மக்கள் நடந்து போகும் நடைபாதைதான் எவ்வளவு சாதாரணமாக மின்சார வயர்களை கீழே போட்டு வைத்திருந்தார்கள் தெரியுமா ? குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் ட்ரான்ஸ் பார்மர்கள் இதையெல்லாம் யார் கேட்பது ? கேட்டால் மக்களாட்சி என்கிறார்கள் இதில் குப்பை போடுவதற்கு தொட்டிகள் வேறு நான் குறிப்புகள் எழுதியபோது தவறுதலாக எழுதிய பேப்பரைக் கிழித்து அதில் போட்டு விட்டு பார்த்துக்கொண்டே நின்றேன் காரணம் யாராவது இதில் குப்பையை போடுகிறார்களா ? ¼ மணி நேரமாக 28 + 3 நபர்கள் போட்டார்கள்குப்பைத் தொட்டியில் அல்ல குப்பைத் தொட்டி மீது... ஆம் தொட்டியை திறந்து போட்டவர்கள் மூன்று வெளிநாட்டினர் இதில் என்னைச் சேர்க்கவில்லை தொட்டிமீது எறிந்தவர்கள் இந்தியர்கள் இருபத்து எட்டு பேர். நான்தான் திறந்து போட்ட பிறகுதானே கணக்குப்பிள்ளையானேன் இதில் பத்து ரூபாய் கட்டணம் யாருக்கு ? யாருக்குமே சமூக அக்கரை இல்லை ஆகவேதான் நாம் பின்தங்கிப் போய்க் கொண்டே இருக்கிறோம் இதன் எல்லை எதுவரையோ....


இதில் சுவாரஸ்யமான விடயமும் உண்டு சுமார் நான்கு மணி நேரம் உள்ளேயே உலாவி இருப்பேன் ஆம் ஐந்து கல்லூரிப் பெண்கள் இவர்கள் நான் வளைத்து, வலைந்து புகைப்படம் எடுப்பதை கவனித்துக் கொண்டே வந்தார்கள் அவர்களும் தங்களது கைப்பேசியையும், புகைப்படக் கருவியையும் கொண்டு எடுத்தார்கள் எனது தோற்றம் அவர்களுக்கு வினோதமாகப் பட்டதோ என்னவோ என்னைப்பற்றி பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் எனக்கென்ன, பயமா ? முகம் தெரியாத அரபிப் பெண்களிடமே பேசி விடுவேன் இவர்கள் எனக்கு ஜூஜூபிதான் இருப்பினும் நான் போகும் இடமெல்லாம் அவர்களும் வந்தார்கள் குறிப்பாக என்னை அவர்கள் வேறு எதையோ படம் எடுப்பதுபோல் என்னையும் எடுத்தார்கள் (நான் அபுதாபியில் எடுக்க கூடாத போலீஸ் அலுவலகத்திலேயே கைப்பேசியில் ஒலியை அணைத்து விட்டு பேசுவதுபோல் நடித்து சுற்றுப்புறத்தை புகைப்படம் எடுத்தவன் இவர்கள் நம்மிடம் விளையாடுகிறார்கள் போகும்வரை போகட்டும்)

எல்லாப் பெண்களுமே இதைச் செய்தார்கள் எனக்கு நன்றாக புரிந்து விட்டது நானும் விதவிதமாக படமெடுப்பதுபோல் பல கோணங்களில் நடித்தேன் குறைந்த பட்சம் என்னை இருபது புகைப்படமாவது எடுத்திருக்க வேண்டும் இதுவரை நான் கைப்பேசிகூட பேசவில்லை முடிவுக்கு வந்து புறப்படும் தருணம் வரும்போது அந்தப் பெண்களை பொதுவாகப் பார்த்து சாதாரணமாக கேட்டேன் இந்தப் படங்களை எல்லாம் முகநூலில் போடுவீங்களா ? அனைவரும் திடுக்கிட்டு திருத்திருவென முழித்தார்கள் அதாங்க புரியலை ஃபேஷ்புக் அதில் போடுவீங்களானு கேட்டேன்.
ஏன்... அது எங்க இஷ்டம் ?  
என்றாள் ஒருபெண் உங்கள் இஷ்டம்தான் அது எனக்கும் தெரியும் என்னை வளைச்சு வளைச்சு எடுத்தீங்களே அதுனாலேதான் கேட்டேன் இப்போ நீங்க என்னை எடுத்தீங்க, அதேநேரம் உங்களை நான் எடுத்தால் விட்டுக் கொடுப்பீங்களா ? என்னோட ஃபோட்டோவை போடுறதுல எனக்கு ஆட்சேபனை கிடையாது காரணம் இண்டர்நெட்டில எங்கு பார்த்தாலும், எந்த சைட்டுக்குப் போனாலும் என்னோட ஃபோட்டோ விதவிதமாய் இருக்கும் சரி இவ்வளவு ஃபோட்டோ எடுத்தீங்க எதுலயுமே நான் நேருக்கு நேரா போஸ் கொடுக்கலையே...
உடனே பட்டென இரண்டு பேர் சிரித்து விட ஒருத்தி சொன்னாள்
Sorry Sir
சாரி எதுக்கு ? இவ்வளவு தைரியமா ஃபோட்டோ எடுத்தீங்க நாம ஐந்து பேர் இருக்கோம் இவன் ஒருஆளுதான் அப்படினா ? நீங்க நூறு பேர் வந்திருந்தாலும் நான் இப்படித்தான் கேட்டிருப்பேன், நானே பேசிக்கிட்டு இருக்கேன் யாராவது பதில் சொல்லுங்க...
இல்லை சார் நீங்க வித்தியாசமா இருந்தீங்க யாருமே எடுக்காத இடங்களை வித்தியாசமாக உங்களை நீங்களே ஃபோட்டோ எடுத்தீங்க அதனாலதான் உங்களை எடுத்தோம் சாரி ஸார்
சரி பரவாயில்லை உங்க டைம்பாஸூக்கு இன்றைக்கு நான் கிடைச்சுருக்கேன்
ஸார் உங்க சொந்த ஊர் ?
தி கிரேட் தேவகோட்டை
அதென்ன... தி கிரேட் ?  
ஏன்... தி கிரேட் ப்ரிட்டன் அப்படினா... நம்புவீங்களோ.... ?  
சிரித்துக்கொண்டே தாங்க்யூ சார் என்றாள்
ஓகே பை என கை காண்பிக்கும்போது ஒருத்தி தைரியமாக கிளிக்’’கினாள் முகத்துக்கு நேராக நான் சிரித்துக்கொண்டே வந்து விட்டேன்.


நான் எடுத்த புகைப்படங்கள் ஏதோவொரு ஃபைலில் சிக்கி விட்டது தேடிக்கொண்டு இருக்கிறேன் மேலேயுள்ள படங்கள் என் செல்லில் எடுத்தது

51 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  அருமையான பயணமாய் திருமலை நாயக்கர் மஹால்.நிம்மதியாக ரசிக்க இயலாமல், அங்கும் அநியாயத்தை கண்டு கொதித்துப் போய் விட்டீர்கள். ஹா ஹா ஹா.. என்ன செய்வது? எல்லாவிதத்திலும் மக்கள் இப்படித்தான் உள்ளனர். நீங்கள் எழுதியிருப்பதை பார்த்து எனக்கே வருத்தம் வந்தது. அனைவருக்கும் ஒரே மாதிரியாக கட்டணம் இருக்க கூடாதா? ஏன் இந்த ஓர வஞ்சனை...இப்போதெல்லாம் சுத்தம் எந்த இடத்திலும் சுத்தமாக இல்லை..

  முக நூல்களில் தங்கள் புகழ் கொடி கட்டி பறக்க போகிறது போலும். அவர்களிடம் நீங்கள் கேட்டது சரிதான். இந்தக்காலம் கல்லூரி மாணவிகளை நிறையவே மாற்றி விட்டது. வேறு என்ன சொல்ல...

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவுக்கு முதல் நபராக வந்து அழகிய கருத்துரையை தந்தமைக்கு நன்றி.

   இன்றைய பெண்களுக்கு பயம் இல்லை என்றே தோன்றுகிறது.

   நீக்கு
 2. உங்களை போட்டோ எடுத்தவர்களின் பேஸ்புக் முகவரியை கேட்டு இருக்கலாமே ஒருவேளை அவர்கள் உங்கள் போட்டோவை போட்டால் நாம் எல்லோரும் சேர்ந்து அதிக அளவில் லைக் பொட்டு இருக்கலாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூப்பர் ஜி சூப்பர்.. :)

   நீக்கு
  2. அது கேட்டால் தவறான நோக்கமாகி விடுகிறதே... பிறகு நான் தைரியமாக கேள்வி கேட்க முடியாது தமிழரே...

   நீக்கு
 3. மஹால் வந்தால் எங்களுக்கு உள்ளுர்காரர்களுக்கான டிக்கெட்டுதான்....ஹீஹீ

  பதிலளிநீக்கு
 4. மஹாலில் மன்னருக்கு ஒரு திருடன் சவால் வீட்டு அரண்மனையில் புகுந்த இடத்தை போட்டோ எடுத்தீர்களா?

  பதிலளிநீக்கு
 5. இப்போ இங்கே நீங்கள் நிற்கும் புகைப்படங்களை எடுத்தது யாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேற யாரு அந்தப் பிள்ளைகள்தான்... :p

   நீக்கு
  2. அதான் பேசிப்பழகி விட்டேனே ஆகவே எனது செல்லில் மூன்று படங்கள் எடுக்கச் சொன்னேன் ஜி

   நீக்கு
  3. நண்பர் திரு. கிசோக்குமார் சரியாக ‘’ஜொள்’’ளி விட்டார்.

   நீக்கு
 6. கம்பீரமாக நிற்கிறீர்கள் இரண்டு புகைப்படங்களிலும். உள்ளே எடுத்த மற்ற புகைப்படங்களை ஏன் வெளியிடவில்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கம்பீரமாக நிற்பதற்கு காரணம் படம் எடுத்தது அந்தப் பெண்களில் ஒருவரே.. தான் மேலே சொல்லி இருக்கிறேனே... படங்களை தேடி வெளியிடுவேன் என்னிடம் 15 யூ.எஸ். பி.களும், (பென் ட்ரைவ்) ஒரு டி. பியும் (ஹார்ட் டிஸ்க்) இருக்கிறது அம்பூட்டு விசயங்கள் தேடணும்.

   நீக்கு
 7. அது போகட்டும் ஜி.. இது போன்ற பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டிய இடங்களை நம்மவர்கள் அசிங்கப் படுத்துவதில் எனக்கும் வருத்தம் உண்டு. பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய இடங்கள்தானா? எல்லா இடத்திலும் சுத்தம் பேணினால் என்ன? இதே மக்களே வெளிநாடு போனால் அங்கே விழுந்து விழுந்து சுத்தம் பேணுவார்கள். சட்டத்துக்கு பயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் - வட இந்தியர்கள், லண்டனில் குடியேறி, கண்ட கண்ட இடங்களில் வெற்றிலை துப்பும் பழக்கத்தைத் தொடர்கிறார்கள். எங்க சட்டம் தன் கடமையைச் செய்கிறதோ அங்கு நம்மவர்கள் சட்டத்தை மதிக்கின்றனர். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

   நீக்கு
  2. சட்டத்தின் பயமே காரணம் ஜி வேறென்ன சொல்வது ?

   நீக்கு
  3. திரு. நெ.த. உண்மைதான் நண்பரே தொட்டில் பழக்கம் விடாது கருப்பு

   நீக்கு
 8. ஆதங்கம் தான் எனக்கும் - பாரம்பரிய, புராதனச் சின்னங்கள், சுற்றுலாத தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என எதுவுமே இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சரியான பராமரிப்பு இல்லை. கட்டணங்கள் வித்தியாசம் - இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் - எல்லா இடத்திலும் இப்படித்தான். கேமரா கட்டணம் - பல இடங்களில் இப்போது அலைபேசிகளுக்கும் கட்டணம் வாங்கிவிடுகிறார்கள்.

  கிறுக்கல்கள் - என்ன சொல்ல - எந்த இடத்தினையும் விட்டு வைப்பதில்லை! வழிபாட்டுத் தலங்கள் உட்பட!

  படம் எடுத்த பெண்கள் - ஹாஹா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நீங்களும் பல இடங்களுக்கு சென்றவர் உங்களுக்கு தெரியாததல்ல வருகைக்கு நன்றி.

   நீக்கு
 9. திருமலைநாயக்கர் மகால் சிறிவயதில் பார்த்த நினைவு...இப்போது பார்க்க வேண்டும் என்று நினைப்பதுண்டு...

  உங்கள் கருத்து எனக்கும் உண்டு. நம் நாட்டினரில் பெரும்பான்மையோர் இது போன்ற தலங்களின் அருமை பெருமை தெரியாமல் அதன் முக்கியத்துவம் அழகியலை ரசிக்காமல் குப்பைக்காடாக்ககி அசுத்தம் செய்வதால் கண்டிப்பாக டிக்கெட்டின் விலை கூடுதலாக இருக்க வேண்டும். பராமரிப்பும் இல்லை போல...வெளிநாட்டினர் என்ன எழுதுவார்கள். அவர்கள் ரசித்து ரசித்துப் பார்க்கக் கூடியவர்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல் எழுதக் கூடியவர்களும் அப்படி இருக்க இப்படி அசுத்தமாக வைத்திருந்தால் அவர்கள் என்ன எழுதுவார்கள். அவர்களுக்கு டிக்கெட் ரேட் ஹும்..என்ன சொல்ல வருத்தம்

  அந்தத் தூண்கள் உள்ள படம் அழகாக இருக்கு. செம

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவைகளெல்லாம் பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும் காரணம் இது புது யுகங்களின் காலம்.

   பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் என்பது போல.... கில்லர்ஜியோடு இணைந்த தூணும் அழகு பெறும் போல....

   நீக்கு
 10. இடத்தை பராமரிப்பதற்கக வெளிநாட்டினரிடம் அதிகத் தொகை வாங்கறாங்க. இலங்கையிலும் உள்நாட்டினருக்கு 50 ரூ என்றால் வெளிநாட்டுனருக்கு 750 ரூ. ஆனால் இலங்கையினர் சுற்றுலாத் தளங்களைப் பராமரிப்பதில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட நாம் செய்வதில்லை. (நமக்கு உள்ள அறிவு அவ்வளவுதான். சந்தேகம்னா நியூயார்க் பரதேசியிடம் கேட்கலாம்)

  உங்கள் ஆதங்கம் அர்த்தமுள்ளது. புகழ் பெற்ற கோவில்களில் சுவற்றில் கருயால் காதலன் காதலி (நிச்சயமில்லை) பெயரைப் பொறிக்கும் இழிசெயல் நம்மிடம்தான் உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலங்கை தகவலுக்கு நன்றி நண்பரே...

   ஆம் இந்தப்பழக்கம் நமக்கே சொந்தம் காப்பிரைட் வாங்கி கொள்ளலாமோ...

   நீக்கு
 11. சரியான சவுக்கடி..
  ஆனாலும் யாருக்கும் உறைக்காது...
  முற்றிலும் மரத்துப் போய்விட்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இப்பொழுது எல்லாம் வாழ்வை நகற்றிச் செல்வது மதுவின் கோலம் மீள்வது கடினம்தான்..... வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 12. இந்தப் பெயர் எழுதும் பழக்கம் நம்ம மக்களிடம் ச்சே எல்லா இடத்திலும் பொதுவெளி பாத்ரூமிலும் அதுவும் அசினமாகவும் படம் எல்லாம் வரைந்து, பாறைகள் சுவர்கள் என்று எல்லா பொதுவெளியிலும் ரொம்ப மோசம் ஜி....

  புகைபப்டத்தில் அழகாவே இருக்கீங்க அதான் அந்தப் பொண்ணுங்க உங்களைச் சுத்தி சுத்தி ஃபோட்டோ எடுத்து தள்ளிருக்காங்கோ...ஹா ஹா ஹா ஹா
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப்பழக்கம் நமது மூதாதையினர் கல் வெட்டுகளில் பொறித்து வைத்து போனார்களே..... அதிலிருந்து தொற்றி இருக்குமோ...

   படம் எடுத்ததற்கு பணம் கேட்டு இருக்கலாமோ....

   நீக்கு
  2. கில்லர்ஜி... தேராவில் (துபாய்) ஒரு ரஷ்யன்/உக்ரைனியன் ரொம்பப் பெரிய மீசை (ரொம்ப ரொம்பப் பெரிது), எண்ணெய் தடவி ஜம்முனு இரண்டு பக்கமும் ரெண்டு அடிக்கு இருந்தது (கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் சொல்றேன்). அவருடன் படமெடுக்க 10 திர்ஹாம் வாங்கினார். நாம்தான் தமிழன் ஆச்சே. தூரத்தில் இருந்து க்ளோஸ் அப்பில் காணொளியும் படமும் எடுத்தேன். அது நினைவுக்கு வந்துவிட்டது, நீங்கள் உங்களைப் படமெடுக்க பணம் கேட்டிருக்கலாமோ என்று எழுதியது.

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா.. முன்பு இதனைக் குறித்து கருத்துரையில் சொல்லி இருந்தீர்கள் நண்பரே மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. திருமலை நாயக்கர் மஹால் மதுரையில் இருந்த போது பார்த்திருக்கிறேன். அப்போது விட இப்போது இன்னும் அழுக்காகிவிட்டதோ கில்லர்ஜி? என் குழந்தைகளை அழைத்துச் சென்று காட்ட ஆசை உண்டு. ஆனால் நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் போகாமல் இருப்பது மேல்...

  ஏனென்றால் ஏற்கனவே தமிழ்நாடு என்றாலே அழுக்கு சுத்தம் இல்லை என்பார்கள் என் வீட்டினர். எனவே நான் கப்சிப்பென்று இருப்பது நல்லது. ஏனென்றால் எனக்குத் தமிழ்நாடு பிடிக்கும்.

  பரவாயில்லை இந்த வயதிலும் உங்களை பெண்கள் வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுக்கறாங்களே!! கொஞ்சம் கலாய்த்தல்... சரி சரி...இது வேறு அர்த்தம் வேண்டாம் அவங்க எல்லாம் நம் மகள்களைப் போலத்தானே!! எடுத்துக் கொள்ளட்டுமே!! என்ன சொல்றீங்க?!!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழமைகளை பாதுகாப்பதில், பார்வையிடுவதில் இந்தியர் என்ற பார்வை மட்டும் போதுமே.... அழைத்து வாருங்கள் காணலாம்.

   ///பரவாயில்லை இந்த வயதிலும்///
   இது ட்டூமச், த்திரீமச்சாக இருக்கிறதே...

   நீக்கு
 14. இந்த முறை போன போது மிகவும் மனம் நொந்து விட்டது.
  ஒரு வருடத்துக்குள் எவ்வளவு மாற்றம் நிறைய சுவர், தூண்களில் எழுத்துக்கள் அதிகம் சுவரை உடைத்தே தங்கள் பெயரை பொறித்து இருக்கிறார்கள்.
  பாதுகாக்க எல்லா இடங்களிலும் காமிரா பொருத்தி இருந்தால்
  கவனித்து தண்டனை கடுமையாக கொடுத்தால் பயம் இருக்கும். தண்டிக்கபடுவீர்கள் என்று எழுதி மட்டும் வைத்தால் போதாது.
  சுற்றுலாதுறைக்கு பாதுகாப்பு பணிக்கு பணம் கொடுத்து ஆட்களை நியமிக்க வேண்டும்.

  படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தொல்லியல்துறையினருக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருக்கலாம் இதை காப்பது அரசின் கடமை.

   அவர்களுக்கு தனது பதவியை தக்க வைப்பதே பெரும் சவாலாக இருக்கின்றதே இதில் யார் இதை நினைக்கப் போகின்றார்கள்.

   நீக்கு
 15. உங்கள் படங்கள் அருமை. புராதனச் சின்னங்கள் அழிந்து போக நாமே காரணம். இன்னும் சித்திரசபை போய்ப் பார்த்தீர்களானால் அழுது விடுவீர்கள். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அடுத்தமுறை சாவாகாசமாக பார்க்க வேண்டும் அன்று விமானநிலையம் செல்லும்போது கொஞ்சம் நேரமிருந்ததால் போனேன்.

   நீக்கு
 16. திருமலை நாயக்கரே கேமராவோடு வந்துவிட்டார்னு நினைத்திருப்பார்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி நினைத்தாலும் "ஆவி" என்ற பயம் வரவேண்டுமே நண்பரே

   நீக்கு
 17. ஒரு முறை என் இந்திய / அமெரிக்க குடியுரிமை பெற்ற நண்பர்களுடன் தாஜ் மகால் காணச் சென்றோம் அவர்களைப் பார்த்தால் இந்தியர்கள் ஆனால் வாய் திறந்துபேசினால் அமெரிக்கர்கள் அவர்களதுபேச்சைக்கேட்ட அங்கிருந்த காவலர் அவர்கள் தாஜ்மகால் பார்க்க ரூ 250 . கட்டண டிக்கெட் வாங்க வேண்டும் என்றார் அவர்கள் இந்தியர்களே படிப்புக்காக அமெரிக்கா சென்றவர்கள் என்று கூறி அவர்களை தெலுங்கில் பேச வைத்துஒரு வழியாக இந்தியக் கட்டணமே செலுத்தினர் நான் டுபாய் சென்றுவரும்போது என் அடுத்தசீட்டில் ஒரு இந்தியர் பயணம்செய்தார் ஏசி மெகானிக் என்றார் சென்னை விமானநிலையம் வந்துவெளியே வந்தவுடன் அவர் செய்த காரியம் புளிச் சென்று காறி துப்பினதுதான் இதையே அவர் துபாயில் செய்திருப்பாரா நான் மதுரைக்கு சென்றபோது நாயக்கர் மகாலின் சிறப்புகளே என் கண்ணில் பட்டது ஒரு வேள கில்லர்ஜி தவறுகளைத் தேடிச்சென்றாரோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது விரிவான அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

   துபாயில் சரியாக நடந்து கொண்டவர் இந்தியா வந்ததும் தனது பிறவிப்புத்தி தலையெடுக்கிறது காரணம் சட்டத்தின் வலிமைதான் ஐயா.

   நீங்கள் போனபோது சுத்தமாக இருந்திருக்கலாம் ஐயா

   உங்களுக்காக அந்தப் புகைப்படங்களை தேடி வெளியிடுவேன் ஐயா.

   நீக்கு
 18. பலநூறு முறை மதுரை சென்றிருப்பேன் ஆனால் இதுவரை திருமுலை நாயக்கர் மகால் சென்றதில்லை
  அவசியம் சென்று பார்க்க வேண்டும்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 19. கோயிலை அசுத்தம் செய்ய வேண்டாம் என்று எழுதியும் வைக்கிறார்கள். நம்மவர்கள் கண்டுகொள்வதில்லை. தண்டனையால் மட்டுமே திருத்த முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தண்டனை கடுமையாக்கப்பட்ட நாடுகளே சுகாதாரத்தில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் முன்னிலை வகிக்கிறது.

   நீக்கு
 20. தமிழ் நாட்டில் 14 அருங்காட்சியகங்கள் உள்ளன. பல அருங்காட்சியகங்களில் பராமரிப்பு மிக மோசம். தொல்லியல் துறை பராமரித்து வரும் கோவில்கள், சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஈமச்சின்னனங்கள் போன்றவற்றில் பெயர் பொறித்தல், அசுத்தப் படுத்துதல் போன்ற தீங்கினைச் செய்வது கண்கூடு. மிக முக்கியமான விசயத்தைத் தொட்டுள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரிவான கருத்துரையை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 21. 60களில் இந்த திருமலைநாயக்கர் மகாலில் நீதிமன்றங்கள் இயங்கிவந்தபோது இன்னும் மோசமாக இருந்தது. அப்போது பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இது எனக்கு புதிய தகவல் நன்றி

   நீக்கு
 22. நல்ல பதிவு. இங்கு இலங்கையிலும் சுற்றுலாத் தளங்களிலும் காட்சி சாலைகளிலும் வெளிநாட்டவர்க்கு கட்டணம் அதிகம். நம்மவர் வெளிநாடு சென்றாலும் இதே நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டுமல்லவா?

  பயணங்கள் பலவிதம் - 03
  https://newsigaram.blogspot.com/2018/05/PAYANANGAL-PALAVIDHAM-03.html
  #சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகாக விவரித்தமைக்கும், இணைப்புகள் தந்தமைக்கும் நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...