புதன், ஏப்ரல் 25, 2018

ஆரணி ஊரணியில் பரணி


ஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார்.
ஏப்பா ஆரு நீ ?
* * * * * 01 * * * * *

என்னய்யா சொல்றீங்க பழத்தை தின்னதாலே ஆஸ்பெட்டல்ல சேர்த்து இருகீங்களா ?
ஆமாய்யா ஏடிஎம் மிஷின்ல எடுத்த வந்த பதிமூவாயிரம் சம்பளத்தையும் தின்னுடான்யா.  
* * * * * 02 * * * * *

கனகா ரெடியா ?
யோவ் யாரை கேக்கிறே பூக்காரின்னா உனக்கு இளக்காரமா போச்சா ?
உன்னை இல்லேமா கனகாம்பரம் ரெடியான்னு கேட்டேன்.
* * * * * 03 * * * * *

மதுரை பஸ் ஸ்டாண்ட்டில்...
ஐயா தர்மம் பண்ணுங்க துரை
என்ன மச்சான்... பிச்சைக்காரனுக்கு கூட உங்க பேரு தர்மதுரைன்னு தெரியுதே ?
* * * * * 04 * * * * *

மேனகா ஆபீஸூக்கு நேரமாச்சு டிபன் ரெடியா ?
அவ யாருங்க மேனகா ? என் பேரு மோகனாங்கிறதை மறக்குற அளவுக்கு செஞ்சது ?
* * * * * 05 * * * * *

ஏலே அண்ணாச்சி மீனாட்சி அத்தாட்சிக்கு என்னாச்சு ?
அட யேண்டா நீ வேற அவ அன்னாசி பழத்தை கடிச்சு வாயெல்லாம் புண்ணாச்சு.
* * * * * 06 * * * * *

என்ன சினிமா பார்த்துட்டு வர்றீங்க ?
செருப்பு பிஞ்சுடும்.
அதுக்கு யேண்டா இப்படிச் சொல்றே ?
அண்ணே படத்தோட பேரே அதுதாண்ணே...
* * * * * 07 * * * * *

செல்லம்மா வந்தாச்சு எல்லாரும் வாங்க, வாங்க...
யோவ் எம் பொண்டாட்டி வரும்போது, என்னய்யா பேசுறே ?
நான் செல்லம்மா ரோடுவேய்ஸ் பஸ் வந்துருச்சுன்னு சொன்னா நீ சம்மந்தமில்லாம சம்மந்தப்படுத்துறே.
* * * * * 08 * * * * *

ஏண்ணே அப்பாவை பெத்தவரை ஏன் தாத்தான்னு சொல்றாங்க ?
இருக்குற சொத்தை சீக்கிரம் எழுதி, தா தா கேட்டு கடைசியில் தாத்தான்னு ஆகிடுச்சு.
* * * * * 09 * * * * *

ஏண்ணே "பெற்ற மகனை விற்ற அன்னை"னு சொல்றாங்களே அப்படி எல்லாம் நடக்குமா ?
ஏண்டா உன் அம்மாகூடத்தான் போன வருஷம் உன்னை வித்துச்சு.
என்ணண்ணே சொல்றே ?
ஆமாடா கல்யாணத்தன்னைக்கு பொண்டாட்டி கையில புடிச்சு கொடுக்கிறாங்கள்ல அதத்தான் சொல்றாங்கே.
* * * * * 10 * * * * *

காணொளி
நான் நீச்சல் கற்ற ஊரணி

63 கருத்துகள்:

 1. முதல் ஜோக் புரியவில்லை. மற்றவற்றை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரணி + ஆரு நீ என்று அமைத்தேன்.

   நீக்கு
  2. ஆரணி எங்க ஊரு பேருண்ணே.

   நீக்கு
  3. தெரியுமே உங்களுக்காகத்தான் தலைப்பு.

   நீக்கு
  4. என்னை நினைவுக்கொண்டமைக்கு நன்றி...

   முன்னலாம் எங்க பகுதியில் காடுகள் அதிகமா இருந்ததாம்..’’

   ஆரண்யம்ன்னா காடு.. அதுதான் காலப்போக்கில் ஆரணி என்றானதுண்ணே

   நீக்கு
  5. தகவலுக்கு நன்றி சகோ

   நீக்கு
  6. @ராஜி, வடாரண்யம் என்பார்கள். முன்னர் ஒரு முறை இதைக் குறித்து எழுதிய நினைவு

   நீக்கு
 2. உங்கள் ஊரும் அழகாயிருக்கிறது. ஊரணியும் அழகாய் இருக்கிறது. சற்றே தண்ணீரும் இருப்பது பிரமிப்பாய் இருக்கிறது!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி சற்றே தண்ணீர் அல்ல 10 அடி ஆழம் மையத்தில் உள்ளது சமீபத்து பங்குனி உத்திர எங்கள் குலதெய்வ கோயிலில் நான் எடுத்தது உத்திரகோசமங்கை அருகில்...

   அடுத்த மூன்று வருடம் மழை இல்லாவிட்டாலும் தாங்கும்.

   நீக்கு
 3. வீடியோ கேமிராவில் எடுக்கப் பட்டதா, அலைபேசியிலா? எனது அலைபேசியில் வீடியோ எடுக்கும்போது 'ஜும்' செய்ய முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசியில் ஜூம் செய்து எடுத்தேன்.

   நீக்கு
  2. ஸ்ரீராம் ..... போன்ல இருக்கும் யூம்:).. அது டச்சூ போன் எனில் அதிலேயே இருக்கும் இல்லை எனில் வீடியோவை ஓன் பன்னிட்டு சவுண்ட் பட்டினைக்கூட்ட யூம் ஆகும்:)... இல்லையெனில் போன் ஐ தேம்ஸ்ல வீசுங்கோ:)...

   நீக்கு
  3. ஜேம்ஸ்ல வீசிய பிறகு நீங்கள் எடுத்துக் கொள்ளவா ?

   நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி:)) ... டங்கு ஸ்லிப்பாகாமல் தேஏஏஏஏஏஏஏம்ஸ் என ஜொள்ளுங்கோ..:) இல்லை எனில் தடுமாறி, ஸ்ரீராம் உங்கட ஜேம்ஸ்பாண்ட்:) ல எறிஞ்சிடப்போறாரே:))

   நீக்கு
 4. இன்றைய நகைச்சுவைத் தென்றல் அருமை....

  பதிலளிநீக்கு
 5. ஹாஹா ரசித்தேன். காணொளி முன்பே பார்த்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பொழுதுதான் முதல்முறையாக வெளியிடுகிறேன் ஜி

   நீக்கு
 6. கனகாம்பரம் காமெடி டைமிங் சூப்பர்..ஆனா மண்டை பாத்திரம் ஓகே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்றி.
   "மண்டை பாத்திரம்" விளங்கவில்ஸையே...

   நீக்கு
 7. நகைச்சுவைத் துணுக்குகள் ரசித்தேன்!

  காணொளியில் வரும் பாடலில் பாலாறு என்று வருகிறது. உங்கள் ஊர் எது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் குலதெய்வக்கோயிலில் எடுத்தது ஊர் இதம்பாடல் வருகைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 8. ஹாஹாஹா, மிக அருமை! கடைசி நன்கு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. ஊரணியிலே இன்னமும் தண்ணீர் இருக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இது பங்குனி உத்திரம் அன்று எடுத்தது எங்கள் கோவில்

   நீக்கு
 10. தாத்தா, விற்ற அன்னை ரசித்தேன்.

  காணொளியில் பக்கத்தில் காட்டியது உங்கள் வீடா?
  கோவில் , ஊரணி காட்சிகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ காணொளியில் காட்டிய கோயில்தான் (பத்து செண்ட்) எங்கள் தாத்தாவின் பூர்வீக பங்களா இருந்தது பாலடைந்து இடிந்ததால் இன்று குலதெய்வக்கோவிலாக்கி விட்டோம்

   சமீபத்தில் பங்குனி உத்திரத்தன்று எடுத்தது காணொளியில் காட்டியவீடு சும்மா அலைபேசியில் ஜூம் செய்து எடுத்தேன்.

   நீக்கு
 11. ஆஹா இதுதான் கில்லர்ஜியின்.. தேம்ஸ் ஆ?:)) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சே.. ஜேம்ஸ் “பொண்ட்” ஆஆஆ?:))... சுத்தமாக்கினால் குளிக்கலாம்.. இது ஒரு காலத்தில் அக்கோயிலின் தீர்த்தக் கிணறாக இருந்திருக்குமோ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ இது இப்போதும் குளிக்கும் ஊரணியேதான்.

   கோவில் நாங்கள் சொந்த இடத்தில் கட்டிய குடும்ப கோவில் 23 வருடங்கள் ஆகிவிட்டது

   நீக்கு
 12. கஸ்டப்பட்டு கிட்னியைக் கசக்கி ஜிந்திச்சிருக்கிறீங்க:)) ரசித்தேன்.

  அதுசரி அது என்ன கோயில்? அந்த பஜனை ஏதுமே புரியவில்லையே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப்பாட்டு திருநெல்வேலி வள்ளியூரிலிருந்து கொண்டு வரப்பட்ட வில்லுப்பாட்டு.

   நீக்கு
 13. ஊரணி புகைப்படம் மிக அழகு!
  உத்திர கோச மங்கை கோவில் மிகவும் புகழ் பெற்றதல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ உ.மங்கையிலிருந்து 9 கி.மீ. தாத்தாவின் கிராமம் 'இதம்பாடல்' ஏர்வாடி 5 கி.மீ.

   நீக்கு
 14. ஜோக்ஸ் 9 மற்றும் 10 ரசித்தேன் உத்தரகோசமங்கை உங்கள் ஊர் என்று முன் எப்போதோ சொன்னதாக நினைவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாத்தாவின் கிராமம் ஐயா உத்திரகோசமங்கை 9 கி.மீ.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  சூப்பர் நகைச்சுவைகள்.அனைத்தையும் ரசித்தேன். 7.9.10 மூன்றும் சிறப்பாக இருந்தது. மிகவும் ரசித்துப் படித்தேன். காணொளியும் அருமையாக இருந்தது. ஊரணி நிறைய தண்ணீர் உள்ளதை பார்க்கும் போது கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 16. மூளைக்கு வேலை கொடுத்து நல்லாவே சிந்திக்கிறீங்க கில்ல்ர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருப்பது யாருக்காவது பயனாகட்டும் நண்பரே

   நீக்கு
 17. நகைச்சுவைகள் ரசித்தேன். ஊரணி என்பதே இந்தக் காலத்துப் பசங்களுக்குத் தெரியுமா என்று யோசிக்கிறேன். அவங்களுக்கு எதைப் பார்த்தாலும் குளம் இல்லைனா pond.

  கோவில் குளங்களைத் தவிர, ஊரணி என்பது ஊரின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டது. எனக்கு பூலாங்குரிச்சியில் நான் 6வது படிக்கும்போது பார்த்த ஊரணி நினைவுக்கு வந்துவிட்டது.

  (குறள்-ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
  பேரறிவாளன் திரு - ஊரணியில் நீர் நிறைந்திருந்தால் எப்படி மக்கள் எல்லோருக்கும் உபயோகமாக இருக்குமோ அப்படி நல்லறிவு படைத்தவரது செல்வம் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே எங்கு பழமை மறக்கப்படுகிறதோ அங்கு வீழ்ச்சி முன்னோக்கி செல்கிறது.

   இப்பொழுது நாமும் அதே வழியை பின்பற்றுகிறோம்.

   ஊரணிகளை மூடி அரசியல்வாதிகள் ப்ளாட் போட்டார்கள் அதை மக்கள் போட்டி போட்டு வாங்கினார்கள் மக்களும் குற்றவாளியே..

   2010-ல் மதுரை விமானநிலையம் அருகில் நண்பர்கள் வாங்க, விளைநிலத்தை அழித்த ப்ளாட் வாங்ககூடாது என்ற கொள்கையில் நான் கடைசிவரை வாங்கவேயில்லை.

   நீக்கு
 18. நகைச்சுவையான பதிவு
  அருமையான தொகுப்பு

  பதிலளிநீக்கு
 19. நன்பரே இதை ஏன் நீங்கள் விகடன் க்கு அனுப்ப கூடாது ..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 30 வருடங்களுக்கு முன்பே அனுப்பியவன்தான் நண்பரே... எதுவுமே வெளி வராததால் நிறுத்தி விட்டு ப்ளாக்கில் எழுத தொடங்கி விட்டேன்

   நீக்கு
 20. படத்திலே உள்ள ஆறுஃஃஇப்பவும் படத்தில் உள்ளது மாதிரியே இருக்காதுன்னு நிணைக்கிறேன்.மற்றவை நகைச்சுவையாக இருந்தாலும் கடைசியில் உள்ளவை என் வாழ்வில் நடக்கவே இல்லை என்பது உண்மையாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 21. நகைச்சுவை துணுக்குகள் ரசிக்க வைத்தன.

  பதிலளிநீக்கு
 22. ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி செமை………..மிகவும் ரசித்தோம்….
  கீதா: செருப்பு பிஞ்சுடும், லாஸ்ட் ஜோக் அதான் பையனை வித்த ஜோக்……ஹையோ இப்ப வாட்சப்ல கூட வந்துச்சுல்ல… மாப்பிள்ளை பையன்கள் ஃபார் சேல்னு….ஹா ஹா ஹா ஹா…

  வந்துவிட்டேன் ஜி! வந்துவிட்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ருசித்து, ரசித்தமைக்கு நன்றி
   இணைய வருகைக்கு வாழ்த்துகள்

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...