தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 14, 2019

மொக்காசியா To மெல்லேந்தியாஇதன் முந்தைய பகுதியை படிக்க கீழே சொடுக்குக... I like Indian People

ஃபுல்ஸி என்ன இது ?
ரண்ஸிட் இப்போ உன்னோட உடம்பிலிருந்து ரத்தத்தை எனது உடம்புக்கு டிரான்ஸ்பர் பண்ணப்போறாங்க முழுவதும் இல்லை பாதிதான் அதன் பிறகு நீ இங்கேயே ஒரு மாதம் தங்கி ரெஸ்ட் எடுத்து உடம்பைத் தேற்றிக் கொள்ளலாம் எல்லாம் நான் பார்த்துக்கிருவேன் பயப்படாதே..

நான் எதுக்கு ரத்தம் கொடுக்கணும் சம்மதிக்க மாட்டேன் உனக்கு ரத்தம் மாற்றும் அளவுக்கு என்ன பிரச்சனை ?
இதோ பார் எனக்கு இருக்கின்ற பவருக்கு உன்னிடமிருந்து சுலபமாக ரத்தம் எடுக்க முடியும் அதை முதலில் புரிந்துகொள்.

உன்னிடம் ரத்தம் வாங்க பணம் இல்லையா ?
ஹூம் பணம் இல்லையாவா... உனக்கு ஞாபகம் இருக்கின்றதா ? நீ முதல் தடவை ட்ரெயினிங்கில் நடந்த சிறிய விபத்தில் உன்னை இதே Hospitalலதான் சேர்த்தேன் அப்ப Doctorதான் சொன்னாரு என்னைப் போலவே உனக்கும் Z.hp 005 group Blood அப்படின்னு இது அபூர்வமான வகை உலகத்திலேயே ஆயிரம் பேருக்கு மட்டும்தான் இந்தவகை ரத்தம் இருக்காம் இதற்காக நான் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் செலவு செய்யிறேன் உனக்கு வேண்டிய பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கேள் மறுத்தே ரத்தத்தை எடுத்துட்டு உன்னை விபத்துல இறந்தது மாதிரி செய்ய முடியாதுன்னு நினைக்காதே... ஆனால் உன்னைக் கொல்ல எனக்கு மனமில்லை காரணம் எனக்கு நீ வேணும் காலம் முழுவதும் வேணும்.

உனக்கு என்ன வியாதி ?
எனக்கு ஃப்ளீட்டாங் கோஷி அப்படின்னு புதுவகை வியாதி இருக்கு இதை வருடத்துக்கு ஒருமுறை ரத்தம் 60 % மாற்றினால் போதும் உனக்கு ஒன்றும் ஆகாது பயப்படாதே.... நீ விரும்பியது மாதிரியே என்னை கல்யாணம் செய்துக்க... உனக்கு வேண்டியதை நான் தர்றேன்.

இந்த வியாதி உனக்கு எப்படி வந்துச்சு ?
என்னோட நாலாவது கணவரோடமிருந்து இது தெரிந்தவுடன் அவரை உடனே டைவேர்ஸ் செய்துட்டேன்.

அடிப்பாவி நாலாவது கணவரா ? இந்த லட்சணத்துல நான் வேறயா ? ஆஹா இப்ப உயிருக்கே உலையாகிடும் போலிருக்கே ஏண்டி எங்க ஊருக்காரன் எத்தனை பேருக்கு அல்வா கொடுத்துருக்கான் என்னை இப்படி..... கொண்டு வந்து நிறுத்திட்டியடி... நெல்லைத்தமிழருக்கு தெரிந்தால் கேட்டு வாங்கிப்போடும் கதைக்கு எழுதிக் கொடுத்து நாறடிச்சுருவாரே.... இதுக்குத்தான் சிரிச்சியாடி நான்தான் முட்டாள்த்தனமா காதல்னு நினைச்சுட்டேன் பக்குவமாக சமாளிப்போம் வேறவழி இங்கே முடியாதுன்னு சொல்ற நிலைமை இல்லை இந்த தடியன்களை கண்டாலே அலர்ஜியாகுதே... ஒரு தடவை ரத்தம் கொடுத்துட்டு ஓடிடலாம்.

அப்ப எனக்கு ஒண்ணும் ஆகாதுல... ?
ஒண்ணும் ஆகாது பயப்படாதே... உனக்கு நான் இருக்கேன்.

அப்படின்னா.... என்னைக் கல்யாணம் செய்துக்கிருவியா ?
ஷ்யூர்... ப்ராமிஷ்... I like Indian People

அடிப்பாவி இந்த வார்த்தையில்தானடி விழுந்தேன் அரை மனதுடன் வேறு வழியின்றி தலையாட்ட அவனை பெட்டில் படுக்க வைத்து அடுத்த பெட்டில் ஃபுல்ஸி கைட்லி படுக்க மருத்துவ ஐயிடங்களுடன் கருவிகள் பொருத்தப்பட ரஞ்சித் மனதுக்குள் தனது குலதெய்வத்தை வேண்டிக்கொண்டான் என்னை நல்லபடியாக ஊரு கொண்டு போய் சேர்த்திட்டா இந்த வருஷக்களரிக்கு கிடா வெட்டுறேன் மனம் பலவாறு நினைக்க மயக்கம் வருவதுபோல் இருந்தது.
ஹாய் மிஸ்தர். ரண்ஸிட்
கன்னத்தை யாரோ தட்டுவதை உணர்ந்த ரஞ்சித் கண் விழித்தான் டாக்டர்தான் நம்ம உயிரோட இருக்கின்றோமா ? கைகளை தடவிப் பார்த்தான் உண்மைதான் உயிர் இருக்கின்றது பக்கத்தில் டாக்டர் மறுபுறம் ஃபுல்ஸி வழக்கம் போல் தே.தி.மு.க கொடியாய்...

தாங்க்ஸ் ரண்ஸிட் ஐ லவ் யூ.
சட்டென கையால் தனது உதட்டை மூடிக்கொண்டான் அவள் ‘’பச்சக்’’ கொடுத்து விட்டால் ? மெலிதாக சிரித்து வைத்தான் உடம்பு அடித்துப் போட்டதைப் போல் ரணகளமாய் இருந்தது நர்ஸ் ஒருத்தி ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க குடித்தான்.

ரண்ஸிட் நீ ரெஸ்ட் எடு நான் ஈவ்னிங் வந்து அழைத்துப் போகிறேன்.
வாயில் கை வைத்துக் கொண்டு தலையாட்ட டாக்-கிடம் சொல்லி விட்டு போனவள் மீண்டும் மாலை வந்தாள் ரஞ்சித்தை அழைக்க... காருக்கு வந்ததும்...

இப்ப எங்கே போறோம் ?
என்னோட பங்களாவுக்கு...

வேண்டாம் ஹோட்டலுக்கு போறேன்...
நம்ம பங்களா இருக்கும் போது ஹோட்டல் எதுக்கு ?

அது வந்து நான் டயர்டா இருக்கேன் பங்களாவுக்கு வந்தால் உன்னைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது அதனாலதான்....
ஹாஹாஹா நாட்டி பாய்....

வேறொரு ஹோட்டலுக்கு சென்று அவனுக்கு அறை போட்டு கொடுத்து விட்டு நாளை காலை வருவதாக சொல்லி விட்டு போனாள் அறைக்குள் வந்ததும் வெண்ணீரில் வெகுநேரம் குளித்தான் உதட்டுக்கு பத்து முறைக்கும் மேல் சோப்பு போட்டு கழுவினான் பிறகு டின்னர் ஆர்டர் கொடுத்து வந்ததும் சாப்பிட்டு விட்டு நாளை அவள் வந்ததும் எப்படி பேசவேண்டும் என்று மனதுக்குள் திட்டம் போட்டுக் கொண்டே உறங்கினான்.
மறுநாள் காலை...


குத்மார்னிங் மிஸ்தர். ரண்ஸிட் ஐ லவ் யூ.....
ப்ளைன் கிஸ் பறந்து வந்தது... பிடிப்பதுபோல் நடித்து பறக்க விட்டு...
குட்மார்னிங் ஃபுல்ஸி.
இரவு தூக்கம் எப்படி ?
குட். ஃபுல்ஸி நேற்று என்னோட அம்மாவிடம் நம்மோட கல்யாணத்தைப் பற்றி பேசினேன்.
ஓ.... வெரிகுத் நான் ரெடி நாளைக்கே செய்துக்கிறலாம்.

இல்லை எங்க குடும்பத்துல அம்மா இல்லாமல் செய்ய மாட்டோம் உன்னோட ஃபோட்டோவை பார்த்துட்டு அம்மா உடனே உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க...
ஓகே நாளைக்கே விசா அப்ளை செய்து அம்மாவை வரவைப்போம்.
அம்மா ஒரு கிப்ட் கொடுத்து விட்டாங்க. உனக்கு கொடுக்கச் சொல்லி இதோ.
புடவை பேக்கிங்கை கொடுத்தான் வாங்கியவள் பிரித்துப் பார்த்து..

வாவ்... ஃபென்டாஸ்டிக் இதை எனக்கு யூஸ் பண்ணத் தெரியாதே...
அதுக்குத்தான் அம்மா வந்து உனக்கு ட்ரெயினிங் கொடுப்பாங்க...

வாவ் குத் ஐடியா...
நான் இன்றைக்கே மொக்காசியா போயிட்டு அங்கிருந்து உடனே இந்தியா போய் உனக்கு அம்மாவோட பாஸ்போர்ட் காப்பி அனுப்புறேன் விசா அனுப்பு அம்மாவைக் கூட்டிக்கிட்டு வர்றேன்.
ஏன் மெயில்ல அனுப்பி வைக்கச் சொல்லு உடனே விசா அனுப்புவோம் அவங்க மட்டும் வரத்தெரியாதா ?
அவங்க வயசானவங்க தனியாக வரத்தெரியாது அப்புறம் என்னோட பிரதர்ஸிடம் நான் முறையாக சொல்லி கல்யாணத்துக்கு பர்மிசன் வாங்கணும்.
நாம கல்யாணம் செய்துக்கிற அவங்க பெர்மிசன் எதுக்கு ?
இது எங்க நாட்டு பழக்கம் மாற்ற முடியாது ப்ளீஸ்...

இட்ஸ் ஓகே உனக்கு பணம் ஏதும் வேண்டுமா ?
யோசித்தவன் வேண்டாமென தலையாட்டினான்.
சரி எப்ப போகணும் ?
இன்றைக்கே ப்ளைட் இருந்தால்... மாற்றிக்கொடு மொக்காசியா போறேன்.
சரி உன்னோட இண்டியன் பேங்க் அக்கவுண்ட் டீட்டியல்ஸ் கொடு.
எதுக்கு ?
கொடு.
தயக்கத்துடன் எழுதிக் கொடுத்தான் வாங்கியவள் ரஞ்சித்துக்கு ‘’பச்சக்’’ கொடுத்து விட்டு...

தயாராக இரு ஈவ்னிங் ப்ளைட் டிக்கெட்டோடு வர்றேன்.
அவள் வெளியேறியதும் சட்டென்று டாய்லெட்டுக்குள் ஓடி சோப்பை எடுத்து.......
மாலை சொன்னபடியே வந்தவள் ரஞ்சித்திடம் ஒரு கவரை நீட்டினாள் பிரித்துப் பார்த்தவன் மலைத்து நின்றான் வாய் பேச்சு வரத்திணறியது... அவனது இந்தியன் ஓவர்ஸீஸ் பேங்க் அக்கவுண்டிற்கு ரஞ்சித் குலோத்துங்கன் பெயரில் One Million Indian Money Draft இருந்தது...
இவ்வளவு பணம் எ....து...க்...கு.. ?
சாதாரணமாக நான் ரத்தம் கொடுப்பவர்களுக்கு கொடுப்பதுதான் ஆனால் நீ இனிமேல் என்னோட கணவர் இது உனக்கு இல்லை உன்னோட பிரதர்ஸ் கல்யாணத்துக்கு ஏதாவது சொன்னால் ? இந்தப் பணத்தால் அடி எனக்கு உங்க நாட்டுக்காரர்களைப்பற்றி நன்றாகத் தெரியும் I like Indian People

ஒன்றும் பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டவன் திருநெல்வேலி அல்வா பொட்டணத்தை பார்த்தவன் சரி இப்படியாவது இவளுக்கு அல்வா கொடுப்போம் என்று எடுத்து கொடுத்தான்.
இந்தா எங்கள் நாட்டு ஸ்வீட்

வாங்கி கொண்டாள்.
தாங்க்ஸ் சரி புறப்படு நேரமாச்சு உன்னோட கம்பெனிக்கு மெயில் அனுப்பி விட்டேன் இந்த ஒரு மாதமும் எனது விசாவில்தான் நீ இருக்கப் போவதாக அதனால் நீ இந்தியா போய் வருவதில் கம்பெனி பிரச்சனை செய்யாது.
நல்லது.

இருவரும் Mellendia Kelvin International Air port வந்தார்கள் ஏனோ தெரியவில்லை ரஞ்சித்துக்கு மனம் கனமாகியது ஒன்றும் பேசவில்லை லக்கேஜ் போட்டு போர்டிங் பாஸ் வாங்கி மீண்டும் ஃபுல்ஸி கைட்லியிடம் வந்தான்.
ரண்ஸிட் உடனே வந்துடணும்.

அவளுக்கு கண் கலங்கியது ரஞ்சித்துக்கு இதழில் ஒரு முத்தம் பதித்தாள் இந்த முறை முத்தத்தை துடைக்க வேண்டும் என்று தோன்றாமல் டாடா காட்டிக் கொண்டே உள்ளே இமிக்கிரேசனை நோக்கிச் சென்று மறைந்தான். விமானம் பயணிகளின் கனத்துடன், லக்கேஜ் கனத்தையும் தூக்கி கொண்டு மொக்காசியாவை நோக்கி பறக்க... ரஞ்சித்தின் மனம் கனமாகியது.

மொக்காசியா வந்து இறங்கிய மறுநாள் கம்பெனிக்கு போனான் கேன்சல் லட்டர் கொடுத்தால் உடனே விடமாட்டார்கள் இந்தியாவுக்கு அவசரமாக போகவேண்டும் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு கம்பெனி கொடுத்திருந்த அறையில் முக்கியமான பொருட்களை பெட்டியில் கட்டினான் மிகவும் நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் நான் மீண்டும் மொகாச்சியா வரமாட்டேன் என்று சொல்லி விட்டு உடன் புறப்பட்டான்.

Indian Air ways விமானம் ரஞ்சித்துடன் பறந்தது. இந்தியாவுக்கு போய் கம்பெனிக்கு பாஸ்போர்ட்டை அனுப்பி வைத்து வரமுடியாத சூழல் தனது சர்வீஸ் கணக்கு முடித்து பணம் அனுப்புங்கள் என்று கேட்போம். நமக்குத்தான் ஃபுல்ஸி இவ்வளவு பணம் கொடுத்து இருக்கின்றாளே... முதலில் நமது உடம்பை நல்ல டாக்டரிடம் காண்பித்து ஃபுல் செக் செய்ய வேண்டும் இடையே ஃபுல்ஸி கைட்லியின் நினைவு வரவும் அவனை அறியாமல் விழிகளில் நீர்த்துளிர்த்தது.

முற்றும்.

91 கருத்துகள்:

 1. வெச்சுட்டேன் சைனை :)

  பதிலளிநீக்கு
 2. மீதான் 3 ட்டூஊஊஊஊ... இதுக்குள்ள வந்திடுவேன்ன்ன்ன் அஞ்சுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. garrrr :) கில்லர்ஜீ இங்க ஸ்கொட்டிஷ்க்காரம்மாவுக்கும் z .hp 005 பிளட் க்ரூப்புதான்னு அந்த ஃபுள்சிக்கு ஒரு அனானிமஸ் லெட்டர் போட்டு விடுங்க :)

   நீக்கு
  2. அப்படியா சந்தோஷமான விடயம். இதோ ஃபுல்ஸி கைட்லிக்கு மின்னஞ்சலே அனுப்பி விட்டேன். தகவலுக்கு நன்றி.

   நீக்கு
  3. ஹாஹாஹா :) தேம்ஸ் ஊரணியை விக்கிறதை விட இது பெஸ்ட் ஐடியாதானே

   நீக்கு
  4. ஹா ஹா ஹா நான் இப்பவும் பழைய நினைப்பிலேயே இருக்கிறேன், அதாவது எங்கட 7.30 க்குத்தான் இந்தியாவில 12 என... இம்முறையும் அஞ்சுதான் நினைவுபடுத்தினா கில்லர்ஜி போஸ்ட் என.. மீ ஸ்பீட்டா ஓடியாந்துட்டேன்ன் அவவை முந்தி ஹா ஹா ஹா... பின்ன மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனெல்லோ:))

   நீக்கு
  5. ஆஆவ்வ் இப்பூடி ஒரு புள்ளட்டா.. சே..சே.. பிள்ளட்டா:)) குரூப்பா... ரெண்டு பக்ஜக் குடுத்து பாதி ரட்த்ஹத்தை உறிஞ்சிட்டாவே அந்த பிளாக் அக்கா:)).. கர்ர்:)) இனி செக் கும் வேர்க் ஆகாது ரண்...ஜித். இனி ரண் பண்ணித்தான் உழைக்கோணும்.. ஹா ஹா ஹா...

   நீக்கு
  6. grrrrrr :) இதுக்கு ஃபுல் சியே பெட்டர் :)

   நீக்கு
  7. ஸ்பீடாக ஓடிவந்து கருத்துரை இட்ட அதிராவுக்கு நன்றி.

   நீக்கு
  8. ஏஞ்சலின் - 'ஸ்காட்டிஷ்காரம்மா' - ஒரு வார்த்தையில நீங்க சின்னவங்களாகவும் அவங்க 110 வயசு ஆனவங்களாகவும் எழுதிட்டீங்களே.... உங்களுக்கு பொங்கல் அனுப்புவாங்கன்னா நினைக்கறீங்க?

   நீக்கு
  9. அல்லோஓஒ நெ தமிழன் நீங்கதானே ஜொன்னீங்க .. பெண்களை மருவாதியாக் கூப்பிடுவதென:) இப்போ இப்பூடிக் காலை வாரீ விடுறீங்களே:)
   அது ஒண்ணுமில்லை என் போஸ்ட் படிச்சு என் அறிவைப் பார்த்து:).. அஞ்சுக்கு மருவாதை ஓவராகிட்டுது:)...
   இந்தாங்கோ இந்தாங்கோ எல்லோரும் மோர் குடிங்கோ:) கில்லர்ஜிக்கும் கொஞ்சம் குடுங்கோ பிளீஸ்ச்ச்:) ஹா ஹா ஹா

   நீக்கு
  10. புளிச்சமோர் எதற்கு ? எனக்கு வேண்டாம்.

   நீக்கு
  11. அதானே :) நெல்லைத்தமிழன் நீங்கதானே சொன்னிங்க பெங்களூரில் அம்மானு சொல்வாங்கன்னு . நானும் பெங்களூர் கிட்டத்தானே பிறந்தேன் அதான் அந்த பாசம்

   நீக்கு
 3. என்னது ரத்தத்தை மாற்றுவதா ?? இது செத்துச்செத்து விளையாடற விளையாட்டை இருக்கே .ஆனாலும் ரங்ஸித்துக்கு அந்த நிலைமையிலும் கல்யாணம் பத்தி என்னா டவுட்டு :)
  இவ்ளோ நாளும் பழகியும் அந்த நாலு பேர் பத்தி தெரியாமப்போச்சே ரன்சித்துக்கு ..
  ஆனாலும் ஃபுள்சி நேர்மையாளி தான் ஒரு மில்லியனை டெபாசிட் பண்ணியிருக்கே :) காலம்பூரா ரத்தம் கொடுக்க முடியாதுதான் ஆனாலும் ரஞ்சித் பாவம் ..கதை இன்டெரெஸ்டிங்கா போச்சு ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஞ்சித் தான் தப்பிக்கவேண்டும் என்பதற்காக அவளிடம் இன்னும் காதல் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக அப்படிக் கேட்டான்.

   கதையை ரசித்து படித்தமைக்கு நன்றி

   நீக்கு
 4. வித்யாசமான கோணம் புது ப்ளட் க்ரூப் னு அசத்தலா போச்சு கதை .

  உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் தமிழர்திருநாள் நல்வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 5. உந்த புஸ்ஸ்லி அக்கா நேக்கு வாணாம்ம்ம்.. அஞ்சுவுக்கே விட்டுக் குடுக்கிறேன்ன்:).. இல்லாட்டில் ஸ்ரீராமுக்கு அல்லது நெல்லைத்தமிழனுக்குக் குடுத்திடலாம்.. அவர் தனியே ஊர் சுத்தாமல் ஒரு பேச்சுத் துணையாக இருக்குமெல்லோ:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாரை வார்த்த தாரகி பட்டம் உங்களுக்கே பொருந்தும்.

   மிக்க நன்றி அதிரா... ஏஞ்சல், நெ.த. மற்றும் ஸ்ரீராம்ஜி சார்பாக

   நீக்கு
 6. உந்த கொங்கோட் பிளேனைத்தான் இப்போ நிறுத்திட்டாங்களே பார்க்க ஆசையா இருக்கு...
  மொக்கை ஆசியா 2 மெல்லிய இந்தியா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. concord பிளேனை பார்த்தாலே அலறுவேன் ..2000 ஆண்டு தானே கடைசி ஓட்டம் அதுக்கு

   நீக்கு
  2. கற்பனையாக நான் சூட்டிய நாட்டின் பெயர்களை எனது கோணத்திலேயே சரியாக கணித்து பிரித்து எழுதிய அதிராவுக்கு பாராட்டுகள்.

   நீக்கு
  3. வாங்க ஏஞ்சல் இந்தப் பிளைட்டில் நான் மூன்று முறைகூட பயணித்ததில்லை.

   நீக்கு
  4. நான் ஒரே ஒரு முறைதான்ன்ன்ன்....
   ..........
   பயணிக்க நினைச்சிருந்தேன்ன்ன்:)

   நீக்கு
  5. கில்லர்ஜி பாராட்டு மட்டும்தானோ என்வலப் இல்லையோ? உள்ளே பவுண்ட்ஸ் வச்சு?:)

   நீக்கு
  6. என்வலப் வந்துக்கிட்டே இருக்கு.

   நீக்கு
 7. வொய் பிளட்?. சேம் பிளட் கதையல்ல!நிஜமா நடந்தே இருக்கே!

  பதிலளிநீக்கு
 8. ஜீ... கதை நன்றாக இருந்தது. ஒருவேளை கொஞ்சம் உண்மை கலந்த கதையோ என்னவோ... கடைசியில் அவ்வளவு சம்பவங்களுக்குப் பின்னும் அந்தப்பெண் மேல் ரஞ்சித்துக்கு ஒரு இரக்கம் வருவது நெகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி முழுவதும் எனது கற்பனையே...
   எந்த சூழலிலும் தமிழன் உணர்ச்சிவசப்படுபவன் என்பதை நிரூபிக்கவே அந்த "நீர்த்துளிகள்" நன்றி ஜி

   நீக்கு
 9. ஆஹா அருமை.....

  நல்ல கதை கில்லர்ஜி. ரத்தம் தேவை என்றால் எதையும் செய்யலாம் எனச் சொல்லும் கதை.

  பாராட்டுகள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கொலையும் செய்வாள் (நடிகை) பத்மினி என்ற பழமொழியே உண்டுதானே.

   நீக்கு
 10. பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. மனதிலிருந்து தப்பிக்க முடியாது ஜி...

  பதிலளிநீக்கு
 12. எப்படியோ..
  கிட்னி ரெண்டும் தப்பிச்சதே...
  அந்த வரைக்கும் லாபம் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   ரஞ்சித்தின் குலதெய்வ அவனைக் கைவிடவில்லை.

   இவ்வாண்டு கிடா நேர்த்திக்கடன் இருங்கிறது.

   நீக்கு
  2. இந்தக் கிடா தப்பிச்சதுக்கு
   இன்னொரு கிடா பலியாகப் போகுதா!?

   அடப்பாவமே!...

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா.. காலம் முழுவதும் நாம இப்படித்தானே ப'லி வாங்குறோம்.

   நீக்கு
 13. கலக்குங்கள் ஜி
  உங்கள் வழி தனி வழி

  பதிலளிநீக்கு
 14. ஃபுல்ஸி கைட்லி இத்தனை செய்தவள் கொஞ்சம் ஏமாந்துட்டா போல!!! ரன்சிட் நெஜமாவே அம்மாவ கூட்டிவந்து கல்யாணம் பண்ணிப்பதா நினைச்சுட்டாளோ....ரஞ்சித் ஹப்பா தப்பித்தான்....இருந்தாலும் அவளிடம் ஒரு இரக்கம் வரத்தான் செய்கிறது அவனுக்கு...இத்தனை பணம் கொடுத்தவளை ஏமாற்றுகிறோமே என்றோ?....நல்லாருந்துச்சு ஜி...

  உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல்திருநாள் வாழ்த்துகள்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பணம் மட்டுமல்ல இருப்பினும் அவனது வாழ்வில் முதல் காதலும்கூட...

   மேலும் ஃளீட்டாங் கோஷி வியாதி இந்த வயதில் வருவதும் வேதனையாகத்தானே இருக்கும்.

   எப்படியோ இனியாவது வீராணம் அத்தை மகள் வீராயியை கட்டிக்கொண்டு சந்தோஷமாக வாழட்டும்.

   நீக்கு
 15. மொக்காசியா ஓகே. அந்தப் பெண்ணும் ஓகேதான் (ஒயிட் வாஷ் செய்தால் ஆச்சு).

  ஆமாம் ஒரு மில்லியனை என்னவோ எக்கச்சக்க பணம்போல் நினைத்துவிட்டாரே... 10 லட்சம் ரூபாய்தானே. ஒரு தடவை முட்டி மாற்று ஆபரேஷனுக்கே 7 லட்சம் ஆகுதுன்றாங்க.

  நான் எதிர்பார்த்தது, ரத்தம்னு சொல்லி எங்க கிட்னியை உருவிக்கிட்டாளோ என்றுதான். ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஞ்சித் கிடைத்ததுவரை லாபம் இனி மொக்காசியாவில் இருந்தால் கம்பெனி மெல்லேந்தியாவுக்கு அனுப்பும் ஊரில் விவசாயத்தை பார்த்துக்கொண்டு இருப்போம் உயிர் முக்கியம் என்று நினைத்து இருக்கலாம்.

   நானும்கூட கூடுதல் அமௌண்ட் போடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் எனது பணம் இல்லையே... ஃபுல்ஸி கைட்லியின் பணம்.

   மேலும் அவள் கொடுத்ததும் ரண்ஸிட்டுக்கு அல்ல மச்சான்மார்களுக்குதானே...

   நீக்கு
  2. ஏன் திருநெல்வேலிக்காரருக்கு கறுப்புப் பிடிக்காதாமோ?:) வைட் வோஸ் பண்ணப்போறாராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஹாஆஅ ஹாஆஆஆஅ ஹாஆஆஅவ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
  3. அதானே அவளும் ஒரு பெண்தானே!

   நீக்கு
 16. உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள். அடுத்தமுறை பொங்கல் வைக்க உங்களுக்கு ஒரு மருமகள் வீட்டில் இருப்பாள். அதற்கும் சேர்த்து வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாக்கு பலிக்கும் நிலைப்பாடுதான் நண்பரே...

   உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 17. நீங்கள் கதை எழுத்தாளர் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். நல்ல நடை. நீரோடை போன்ற ஒழுக்கு. நிறைய எழுதுபவர் என்பதையும் தெரிந்து கொண்டேன். தொடரட்டும் உங்கள் பணி. சிறக்கட்டும் உங்கள் படைப்புக்கள். செழிக்கட்டும் உங்கள் எழுத்துப் பணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. முரளிதரன் அவர்களின் முதல் வருகைக்கு வந்தனம்.
   தங்களது வாழ்த்துகளுக்கும் நன்றி.
   இனிய பொங்கல் நல்வாழ்த்துகளும்...

   நீக்கு
 18. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். வரப்போகும் மருமகள் அனைத்து சந்தோஷங்களையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளும் நனவாகும். உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
  2. வயதைப் பார்த்தால் மருமகள் வருவது போலத் தெரியலையே? படா ஸ்மார்ட் தேவைகோட்டையாரே? (உங்க பேரே ஒரு அலர்ஜியா இருக்கு? வேற பேரு கிடைக்கலையா நண்பா?)

   நீக்கு
  3. வருக நண்பரே அப்படி சொல்லாதீங்க... எங்கள் ஐயா கொலைதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு வைத்த பெயர்.

   நீக்கு
 19. ஃபுல்சி கைட்லி பாவம், கடைசியில் ரண்சித் இப்படி ஏமாற்றலாமா? போனால் போகுதுனு உண்மையைச் சொல்லி வேறே யாரையானும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி இருக்கலாம்! ரண்சித் இங்கே வந்து அத்தை மகள் ரத்தினத்தைக் கைப்பிடிக்கிறாராக்கும்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை சொல்லி இருந்தால் ரஞ்சித் உயிரோடு இந்தியாவுக்கு வரமுடியுமா ? அல்வா போல வந்து சிக்கியவனை அங்கேயே பக்குவமாக ஒளித்து வைத்து இருப்பாள் ஃபுல்ஸி கைட்லி.

   அவளுடைய பரம்பரையைப்பற்றி உங்களுக்கு தெரியுமா ?
   கதை நீண்டு போகும் என்பதால் சொல்லவில்லை.

   அவளுடைய தாத்தா டான் மிராங்கி கைட்லி ஊரில் நாட்டாமையாக இருந்தவர். பல ஏக்கரில் ஏலக்காய் பண்ணை இருக்கிறது.

   உயிர் பிழைப்பதற்க்காக எப்படியோ தப்பி வந்தவனை பாராட்டாமல் இப்படி சொல்லலாமா ? இவ்வளவு காலமும் திருமணம் செய்யாதவனுக்கு அத்தை மகள் வீராயியைத் தவிர வேறு யார் பெண் கொடுப்பார்கள் ?

   ஆனாலும் நெல்லைக்காரர்களைக் கண்டால் உங்களுக்கு தொக்குதான் போல...

   நீக்கு
  2. ஓஒ மை கடவுளே மீ மயங்கிங்ங்ங்ங்:)

   நீக்கு
  3. யாராவது... ஜேம்ஸ் ஊரணி தண்ணீரை அள்ளித் தெளிங்க!

   நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர் நோ கில்லர்ஜி:) குளிர்தண்ணி ஒத்துக்காது:)... சுட்டாறிய வோட்டர் பிளீஸ்:)..

   நீக்கு
  5. சரி இதோ பாய்லரை மூட்டி விடுவோம்.

   நீக்கு
 20. நீங்கா நினைவுகள் வாழ்க பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 21. அந்த சீக்கும் பிளட் குரூப்பும் வெகு சுவாரஸ்யம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும், வாழ்த்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 22. எனக்கு ஒரே ஒரு பயம், அந்தப் பொண்ணு இந்தியாவுக்கே வந்து விடப் போகிற்தே என்பதுதான். அததனை தத்ரூபமாக எழுதி இருக்கிறீர்க்ள்.

  மகளுக்குத் தலப் பொங்கள். அடுத்தபொங்கலுக்கு மகள் வழிப் பேத்தியும்
  மருமகளும் இரட்டைப் பானையில் பொங்கல் வைக்க நீங்களும் கண்டு மகிழ வேண்டும். அன்பு வாழ்த்துகள் தேவ கோட்டையாரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வேண்டுதல் பலிக்கட்டும் அம்மா. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 23. அந்த ஒன் மில்லியன் டாலர்---இந்திய ரூபாய் மதிப்பு எவ்வளவு தலைவரே..!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன் மில்லியன் டாலர் இல்லை இந்திய ரூபாய்தான் நண்பரே பத்து லட்சம் ரூபாய்தான்.

   நீக்கு
 24. அன்பின் ஜி...

  தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களுக்கும்
   இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 25. மொக்காசியா￰ என்பது மொக்கை ஆசியா என்று (என் அறிவுக்கு ) தெரிய வந்தது நண்பரின் கருத்தை கண்ட பின் தான்.நல்ல நடை.நீங்கள் ஏன் சஞ்சிகைகளில் புதினம் எழுத முயற்சிக்க கூடாது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனது எழுத்தை ஆதரிக்கும் சஞ்சிகைகள் கிடைத்தால் ???
   எழுதலாம்தான்...

   நீக்கு
 26. வித்தியாசமான திருப்பம். ஆனாலும் பாவம் அந்தப் பெண்.

  பதிலளிநீக்கு
 27. பாவம்தான் விதி என்ன செய்வது ?

  பதிலளிநீக்கு
 28. கதையில் சோகம், சிரிப்பு , ஆதங்கம், ஏமாற்றம் எல்லாம் இருக்கிறது.
  கடைசியில் அவளை ஏமாற்ற போவதை நினைத்து நெகிழ்வான கண்ணீர்.
  பகைவனுக்கும் அருளும் நெஞ்சம் ரஞ்சித்துக்கு.
  கற்பனை என்றாலும் அந்த பெண்ணை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 29. மருமகள் வர போகிறார்களா?
  மகிழ்ச்சி.
  தலை பொங்கல் நல்லபடியாக முடிந்து மகள், மருமகன் ஊருக்கு போய் விட்டார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ விரைவில் விபரங்கள் வரும்...

   நான் மகளின் வீட்டில் பொங்கல் கொண்டாடினேன். (தங்கையின் வீடுதானே)

   நீக்கு
 30. கதையின் இறுதிப் பகுதி சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. ரசித்துப் படித்தேன். நன்றி

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் சகோதரரே

  வித்தியாசமான கதை. முடிவும் சுபமாகவே (ரஞ்சிதிற்கு) அமைந்து விட்டது. அந்த ஃபுல்ஸி கைட்லி பாவந்தான்..இருப்பினும் ரத்தம் கொடுத்தவன் உடன் பிறப்புக்கு சமானம் என்று ரஞ்சித் விளக்கினால், ஏற்றுக் கொள்வாளா? ஒரு வேளை அவனைத் தேடி அவள் இந்தியா வந்தாலும், இதைச் சொல்லி சமாளிக்கலாம் என ரஞ்சித்துக்கு தோன்றினால் சரி.. மற்றொரு கதை தொடரவும் வாய்ப்பிருக்கிறது.

  புதிது புதிதாக சிந்தித்து நன்றாக எழுதுகிறீர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.
  தங்கள் வீட்டுக்கு மருமகள் வரப் போவதாய் கருத்துரைகளில் தெரிந்து கொண்டேன். மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ கதையை மீண்டும் தொடுப்பதற்கு வழி வகுப்பது போலிருக்கிறது.

   தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   ஃபுல்ஸி கைட்லி என்ன ஆனாள்.? வில்லி மாதிரி இருந்தவள் விவகாரம் ஏதுமின்றி எப்படி ஒதுங்கிச் சென்றாள்? அவளை நினைத்து சற்று கருணைக் கண்ணீர் விடலாமா என்று யோசித்த ரஞ்சித் என்ன பண்ணினான்? என்பதையெல்லாம் கதையின் வாசகர்களான நாங்கள் அலசி காய வைப்பதற்குள், ஒரு புது மாதிரி உத்தியுடன் (தங்களுக்கு விருப்பம் இருந்தால்) மீண்டும் இதை இரண்டாம் பாகமாக தாங்கள் எழுத ஒரு அடி எடுத்துத் தந்தேன். அவ்வளவுதான். மற்றபடி தங்கள் திறமைக்கு முன் நான் வெறும் சைபர். ஹா.ஹா.ஹா.ஹா ஒரு ஜோக்குகாகத்தான் இதையும் எழுதுகிறேன். கதை மீண்டும் தொடுக்கப்படுமா? ஹா.ஹா. நன்றி சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. ஆஹா தொடங்கி விட்டீர்கள் பார்க்கலாம் வீட்டில் திருமண வேலைகள் சுபமாக நிகழட்டும்.

   மீள் வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு